கோபாலபுரம்,
தமிழகம்.
தமிழாய் என் குடும்பத்தில் வந்துதித்த கனியே, என் அருமைத் தமிழ் மகவே!
உன்னை அருகே வைத்து ஆராதித்துப் பேசி மகிழ முடியலையே என கவலை கொண்டாலும், கடிதம் மூலமாக இணைவதில் கோடி இன்பம் மகளே!
தொலைபேசிக்கான அலைக் கற்றைகளையே அந்தமான் வரை அனுப்பி பணமாக்கிய எம் குடும்பத்திற்கு. இன்றோ உன்னோடு அலைபேசி மூலம் பேச முடியாத அளவிற்கு(துன்பப்பட) அந்தரிக்க வைக்கிறது காலம். ஆனாலும் காகிதம் மூலம், உன்னோடு கவலைகளை மறக்கப் பேசுவதில் சந்தோசம் உள்ளது மகளே. எம் வீட்டில், கொளுத்தும் வெய்யிலிலும், குளிர் அறைக்குள் குளு குளு என்று இருக்க வேண்டிய நீ, இன்றோஅனல் கக்கும் பாலைவனச் சிறைக்குள் கொடியவர்களால் விருப்பமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாய்.
எம் குடும்பத்திற்கு இப்போது இறங்கு நிலை என நினைக்கிறேன் குழந்தாய். நான் செய்த முன் வினைப் பயன் தான், சந்தோசமாக சாக வேண்டிய வயதில், ஊழ் வினையாகித் துன்பத்தினைத் தந்து ஆட்டுவிக்கிறதோ என்றும் அடிக்கடி எண்ணிக் கொள்வேன். நடிகைகளின் நடனத்தினைக் கூடப் பாராட்டு விழா எனும் பெயரில் ஒழுங்கமைத்துப் பார்த்து மனசைத் தேற்றி மகிழ்ந்திருக்கலாம், விதி யாரை விட்டது.
ஜெயலலிதா என்னும் விதி என் ஆட்சியின் முன் வந்து சதி செய்து விட்டது குழந்தாய். இல்லையேல், இந்தத் தள்ளாடும் வயதிலும் என் ஆறாம் விரலுக்கு வேலை கொடுப்பானேன் என; இறைவன் தான் யோசித்து, நமீதாவின் குத்தாட்டத்தைப் பார்க்க முடியாத படி பண்ணி விட்டானோ புரியவில்லை மகளே.
உளியின் ஓசையினைக் கூட உற்றுக் கேட்டு, உணர்வு கொடுத்து திரையில் உருவம் கொடுக்க முடிந்த என்னால், மீனவர்கள் பிரச்சினையிலும், ஈழ மக்கள் விடயத்திலும் விட்டுக் கொடுக்கக் கூட முடியாமல் போய் விட்டதே. என்ன செய்வேன் கனியே!
நான் ஒரு பாவியென இப்போது நினைத்து, என் தலையில் அடித்து அழுவதால், உச்சியில் இருந்த ஒரு சொட்டு முடியும் மிச்சமேதுமின்றி பொசுக்கென உதிர்ந்து விட்டது குழந்தாய்.
பொது மக்கள் அவலப்படுகையில் என் புட்டத்தில் ஒட்டியிருந்த பதவிக் கதிரையின் பலமான ஒட்டலை நீக்க வழியின்றி டில்லி வரை சென்று பேச்சுவார்த்தை மேற்கொள்ளாது,
கடிதம் பல போட்டுக் காத்திரமான உண்ணா நோன்பிருந்து- உலகை ஏமாற்றிய நானோ, இன்று உனக்காக திஹார் வரைக்கும் வந்து பார்த்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பெருமைப்படுவதா இல்லைப் பொருமிச் சாவதா என வேதனையடைகிறேன் மகளே. என் மக்கள் மீது பாசம் கொண்டதன் வெளிப்பாடாய் நான் செய்தது தான் என்னை இந் நிலைக்கு ஆளாக்கி விட்டது என நினைக்கிறேன்.
வளர்த்த கடாக்கள் எல்லாம் என் முதுகில் குத்தி விட்டு, வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள் கனி. ஆனால் என் மகள் நீ மட்டும், இன்றும் என்னோடு என்னை விட்டுப் பிரியாத அதே உணர்வோடு இருக்கிறாயே. அதுவே போதுமடி. திரைப்படங்களிற்கு கூட என்னால் இப்போது வசனம் எழுத முடியவில்லை. ஒருவாறாக மனதை ஒரு நிலைப்படுத்திப் படங்களுக்கு வசனம் எழுத உட்கார்ந்தால்;
’’குடும்பத்தில் சகோதர்கள் குத்துப்பட்டுப் பிரிவது போன்ற அழுத்தமான வசனங்கள் தான் வந்து போகின்றன. எனக்கென்று இருந்த என் புகழ் பாடும் சொத்தான டீவிக்கும் வெகு விரைவில் சிபிஐ மூடுவிழா வைப்பார்கள் என எண்ணுகின்றேன். இறுதிக் காலத்தில் என்னைப் புகழ்ந்து- என் காதினைக் குளிர வைக்கும் என நாம் உருவாக்கிய டிவியும் தன் உரிய பணியினை ஆற்றாது என்னைப் போல ஓய்ந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது மகவே.
இப்போது நாம் ஆட்சியில் இருந்தால்; காங்கிரஸைப் பணிய வைத்தாவது உன்னைக் கைது செய்யாமலிருக்கச் செய்திருப்பேனல்லவா. என்ன செய்ய, காலம் எம்மைச் சோதிக்கின்றது. கடிதம் கிடைத்ததும் பதில் போடு கனி. வெகு விரைவில் ராஜாத்தி அம்மாளோடு உன்னைப் பார்ப்பதற்காக மீண்டும் வருவேன் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். அதற்கு முன் மாறன், அழகிரி என எல்லோரும் நீ இருக்குமிடத்திற்கு வந்தால் அனைவரையும் ஒன்றாகச் சந்தித்து ஒற்றுமையினை ஜெயிலில் பாடமாகச் சொல்லிக் கொடுத்துப் புரிய வைக்கலாம் என எண்ணம் கொண்டுள்ளேன்.
என் கடிதம் கிடைத்ததும் பதில் போடு குழந்தாய்.
’தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தினேன்
தமிழால் இன்று தெருவில் நிற்கிறேன்!!
இப்படிக்கு,
மு.க.
யாவும் கற்பனையே.....
|
81 Comments:
வணக்கம் தலீவா ))
காட்டான் குழ போட்டான்!!
பின்னர் அதுதான்யா பேந்து வாரன்...
///தமிழாய் என் குடும்பத்தில் வந்துதித்த கனியே, /// தமிழாய் என் குடும்பத்தில் வந்துதித்த சனியே, )
///கடிதம் மூலமாக இணைவதில் கோடி இன்பம் மகளே!/// கலைஞரையும் கடிதத்தையும் பிரிக்க முடியுமா என்ன ??
//கொடியவர்களால் விருப்பமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாய். /// அதுக்காக திறந்து விடவா முடியும்!
///நடிகைகளின் நடனத்தினைக் கூடப் பாராட்டு விழா எனும் பெயரில் ஒழுங்கமைத்துப் பார்த்து மனசைத் தேற்றி மகிழ்ந்திருக்கலாம்,// பப்ளிக், பப்ளிக்..... ஹிஹிஹி
///கடிதம் பல போட்டுக் காத்திரமான உண்ணா நோன்பிருந்து// ஆமா ரொம்ப காத்திரமான உண்ணாவிரதம்..நான் கூட தான் ஒவ்வொரு நாளும் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில சாப்பிடாம கிடக்கிறன் ..
///அதற்கு முன் மாறன், அழகிரி என எல்லோரும் நீ இருக்குமிடத்திற்கு வந்தால் அனைவரையும் ஒன்றாகச் சந்தித்து ஒற்றுமையினை ஜெயிலில் பாடமாகச் சொல்லிக் கொடுத்துப் புரிய வைக்கலாம் என எண்ணம் கொண்டுள்ளேன். ///நல்ல அப்பன் ஹிஹிஹி ,,களவும் கற்று மற ))
யாராச்சும் கலைஞர் முகவரி தாங்கப்பா, இதை நான் அவருக்கு தந்தி அடிக்கிறேன்.
கலக்கல் பண்ணிட்டிங்க பாஸ்
அதில பாருங்க ஒரு வரி
இறுதி நேர ஈழப் போரின் உக்கிர சண்டையின் போது, வைகாசி மாதத்து கொளுத்தும் கத்தரி வெய்யிலில் பாலைவனப் பகுதியாகிய நந்திக் கடலோரம்(முள்ளிவாய்க்கால்) துடி துடித்து அப்பாவி ஈழ மக்கள் இறக்கையில் ’’உங்களைக் காப்பாற்றுவேன் எனக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றாது காலை வாரி விட்டாயே, அதன் பிரதி பலன் தான் இன்று உன்னை இந்தப் பாலை வன வெப்பத்திற்குள் சிறை வைத்திருக்கிறார்களோ என நினைத்து நான், அழுதிருக்கிறேன் மகவே.
உண்மைதான் .
ரொம்ப சந்தோஷம்.... எம் மனதில் இருக்கும் கோபங்களை எல்லாம் உங்கள் வரிகளில் தந்து விடீர்கள்......
ஒவ்வொரு வரியிலும் உண்மைத்தன்மை வெளிப்பத்கிறது .
@நிகழ்வுகள் அவர் இதை அனுப்பினால் இலக்கண பிழை கண்டு பிடித்தாலும் பிடித்துவிடுவார் ஏன் இந்த வம்பு....
//கனிமொழிக்கு க(கொ)லைஞர் எழுதும் கண்ணீர் மடல்!//
கலைஞர் கருனாநிதி என்று வைத்ததற்கு பதிலாக கடிதர் கருனாநிதின்னே வச்சிருக்கலாம்
//எம் குடும்பத்திற்கு இப்போது இறங்கு நிலை என நினைக்கிறேன் குழந்தாய். நான் செய்த முன் வினைப் பயன் தான், சந்தோசமாக சாக வேண்டிய வயதில், ஊழ் வினையாகித் துன்பத்தினைத் தந்து ஆட்டுவிக்கிறதோ என்றும் அடிக்கடி எண்ணிக் கொள்வேன்//
படுபாவி இப்பவாச்சும் விளங்கிச்சே
''இறுதிக் காலத்தில் என்னைப் புகழ்ந்து- என் காதினைக் குளிர வைக்கும் என நாம் உருவாக்கிய டிவியும் தன் உரிய பணியினை ஆற்றாது என்னைப் போல ஓய்ந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது மகவே.'' அருமையான பதிவு
//நான் ஒரு பாவியென இப்போது நினைத்து, என் தலையில் அடித்து அழுவதால், உச்சியில் இருந்த ஒரு சொட்டு முடியும் மிச்சமேதுமின்றி பொசுக்கென உதிர்ந்து விட்டது குழந்தாய். //
நண்பா இந்த வரிகளை படிக்கும் போது களுக்கென்று ஒரு வெடிச்சிரிப்பு வெடித்தது.
சத்தியமாய் சொல்கிறேன்.கவிதையில் என்னை சிரிக்க வைத்தவன் நீதான்.
தமிழ்த்தாய் உனக்கு சகல சவுபாக்கியங்களும் வழங்கட்டும்.
நண்பா!
//கோபாலபுரத்தில், கொளுத்தும் வெய்யிலிலும், குளிர் அறைக்குள் குளு குளு என்று இருக்க வேண்டிய நீ, இன்றோ கொளுத்தும் பாலைவனச் சிறைக்குள் கொடியவர்களால் விருப்பமின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறாய். //
ஒரு சிறு திருத்தம்.கோபால புரத்தில் இருப்பது தயாளு அம்மாள்.
ஆலிவர் ரோட்டில் இருப்பது ராஜாத்தி அம்மாள்.
மாப்ள தமிழ் தலைவன்னு தன்னைத்தானே சொல்லிக்கொண்டவர இப்படி போட்டு புரட்டி எடுத்திட்டீங்களே....பாவம்யா அவரு இந்த வயசுல தான் பண்ண நல்ல விஷயங்கள(!) அசப்போட்டுட்டு இருக்காரு போல!
>>எம் குடும்பத்திற்கு இப்போது இறங்கு நிலை என நினைக்கிறேன் குழந்தாய். நான் செய்த முன் வினைப் பயன் தான், சந்தோசமாக சாக வேண்டிய வயதில், ஊழ் வினையாகித் துன்பத்தினைத் தந்து ஆட்டுவிக்கிறதோ என்றும் அடிக்கடி எண்ணிக் கொள்வேன்
mika மிக யோசித்து எழுதப்பட்ட நிதர்சன வரிகள்
நிரூபா !பதிவு போடும் டைம் சரிதானா?ஐ திங்க் சம்திங்க் ராங்க்.. செங்கோவி அண்ணன் போல 12 டூ 12 .30 போடவும். அல்லது விக்கி தக்காளி போல காலை 7 டூ 8 போடவும்ம் அன் டைமில் 3 மணிக்கு போடுவதால் இண்ட்லியில் ஹிட் ஆக ரொம்ப அதிக காலம் எடுத்துக்குதுன்னு நினைக்கறேன்..
//அதற்கு முன் மாறன், அழகிரி என எல்லோரும் நீ இருக்குமிடத்திற்கு வந்தால் அனைவரையும் ஒன்றாகச் சந்தித்து ஒற்றுமையினை ஜெயிலில் பாடமாகச் சொல்லிக் கொடுத்துப் புரிய வைக்கலாம் என எண்ணம் கொண்டுள்ளேன்.// அதுவும் நடக்கும்...அப்போதும் ஒற்றுமை வராது.
இது போல ஒரு தந்தை அன்பு மடல் எழுதினால், எந்த துன்பமும் சுக்கு நூறாய் போகும் ! நல்ல கற்பனை ....
செம நக்கல்யா உங்களுக்கு...பாராட்டு விழா இல்லாம ஐயா எப்படித்தான் இருக்காரோ?
///உளியின் ஓசையினைக் கூட உற்றுக் கேட்டு, உணர்வு கொடுத்து திரையில் உருவம் கொடுக்க முடிந்த என்னால், மீனவர்கள் பிரச்சினையிலும், ஈழ மக்கள் விடயத்திலும் விட்டுக் கொடுக்கக் கூட முடியாமல் போய் விட்டதே. என்ன செய்வேன் கனியே! ////
அன்பான சகோ
மிகவும் நியாயமான மடல்
தமிழின் பெயர்ச் சொல்லி
தம்ழனின் பெயரைச் சொல்லியே
அரசியல் செய்த இவருக்கு காலம் இன்னும் நிறைய பாடம் தர காத்திருக்கிறது சகொ
நல்ல பகிர்வு
தலைப்பு அருமை...
அந்த குடும்ப பாரம் படம் சூப்பர்..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
பாவத்தின் சம்பளம் இப்போது ....
கடிதம் நல்லாயிருக்கு நிரூ ஒரு நெருடல் நாத்திகம் பேசும் கலைஞர் கடவுளிடம் கருனை வேண்டுவது போல் இருப்பது முறையா?
தமிழால் தன்னை வளர்த்தவர் இன்று வீதியில் நிற்பதும் நடிகைகளின் நடணம் பார்த்தே ஆட்சி நிலையை மறந்ததும் மக்கள் கொடுத்த ஓய்வு இனி அடுத்த படத்திற்கு வீட்டில் இருந்து மூளையை கசக்கட்டும்!
உலகத்திற்கு கடிதம் வரைந்தே நாடகம் ஆடியவருக்கு நீங்கள் வரைந்த கடிதம் சிறப்பானது!
தீராநதி விமர்சனத்துடன் தனிமரம் வந்திருக்கு!
நல்ல கற்ப்பனைதான்....
ஆனால் இதையே கடிதமாக அனுப்பிவிடலாம்...
நேரு ஜெயில்ல இருக்கும் போது இந்திராகாந்திக்கு லெட்டர் எழுதுனாரே....... அதே மாதிரி மக ஜெயில்ல இருக்கும் போது கலைஞர் எழுதியிருக்காருன்னு சீரியஸா படிக்க வந்தா.............கற்பனை கடிதம்
ரசித்தேன்
வாழ்த்துக்கள்
’தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தினேன்
தமிழால் இன்று தெருவில் நிற்கிறேன்!!///தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தினேன். அலைக்கற்றையால்,இன்று தெருவில் நிற்கிறேன் என்று வரலாமோ?
முன்வினை மட்டும் அல்ல, தன்வினையும் சேர்ந்தே சுடுகின்றது இவர்களை. . . நல்ல சிந்தனை. . .
இது தான் சொல்லுறது தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
யாவும் கற்பனை அல்ல சத்தியமான உண்மைகள்
நல்லா தீட்டிய கத்திய வச்சி வீசுனா, வலிக்காம போய் சேர்ந்திருவாருன்னு,
இப்படி கடிச்சு குதறிட்டீகளே.....
ஆனாலும் இந்த மனுசன் கட்டையில போறவரைக்கும் அனுபவிக்க வேண்டியது இன்னும் இருக்குப்பா...
நம்ப வச்சி கழுத்தறுக்குர நாதாரிகள் எப்பவும் கண்ணீர் விட்டுகிட்டுதா கடைசி காலத்துல சாவானுக...
//’தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தினேன்
தமிழால் இன்று தெருவில் நிற்கிறேன்!!//
தமிழால ??? பண்ணுன ஊழலுக்கு இல்ல இப்போ அனுபவிக்கிறாரு.
நானும் சொல்ல வந்தேன் ஆலிவர் ரொட்டில்தான் அம்மான்னு அந்த உலக சினிமா மாப்பிள முந்திட்டார்..
அதைவிட ஒன்றை கவனித்தீர்களா எப்போதுமே இந்த சின்ன வீடுகள் இப்படித்தான்.. ராசாத்தி அம்மா யோசித்து பார்திருப்பா கொலைஞனருக்கு பின்னால் தானும் மகளும் தயாளு அம்மாள் குடும்பத்தால் ஒதுக்கப்படுவோமென அதுதான் இப்படி காச சேத்து வைக்க முயற்சித்தார்கள்..!
இதில அவர் பாவம் செய்தார் பண்ணாட செய்தார்ன்னு நாங்க சொல்லி எங்க மனச தேத்திரோம் இலங்கை பிரச்சனைக்கும் கனிமொழி களி சாப்பிடுவதற்கும் சம்பந்தமில்ல...
உன்மையிலெயே கனிமொழி இலங்கை பிரச்சனைக்காக களி தின்றால் கொலைஞ்னர் முரசொலுயின் முழு பக்ககத்தையும் மகளுக்கு ஒதுக்கி தமிழினத்தின் வீர மங்கை விளக்கெண்ணை மங்கைன்னு கவித பாடியிருப்பார்..
மாப்பிளங்களா உண்மையில் எனக்கு வகுத்த எரியுதடா இந்த ராசா பயல பார்த்து தாண்டா காசுபணம் பதவியை மட்டுமாடா அனுபவித்தான் ...!!??
நல்ல கற்பனை நிரூ, கருணாநிதி கூட இப்படி எழுதி இருப்பாரான்னு சந்தேகமே..
அருமையான கற்பனை. ஆனால் இப்படி உண்மையை மனசாட்சியுடன் ஒத்துக்க எல்லாம் நேர்மையான தனியான தைரியம் வேண்டும் சகோ. அதெல்லாம் இவங்ககிட்ட இருந்தால் இப்படி அநியாயம் பண்ணியிருப்பார்களா? அண்டர்கிரவுண்ட் வேலையும் அரிதாரம் போட்டு உள்ளொன்று வைத்து புறமொன்றும் பேசித்திரிந்த வீணர்கள்.
ஹா ஹா ஹா செம செம
////குழந்தாய். நான் செய்த முன் வினைப் பயன் தான், சந்தோசமாக சாக வேண்டிய வயதில், ஊழ் வினையாகித் துன்பத்தினைத் தந்து ஆட்டுவிக்கிறதோ என்றும் அடிக்கடி எண்ணிக் கொள்வேன்.////தவறு!இப்போதெல்லாம் தெய்வம் நின்று கொல்வதில்லை!அன்றே கொன்று விடும்.ஏனையவர்களுக்கும் இதுவே சாசுவதம்!ஒருவர் சிறையில்!மற்றவர்கள் இன்னும் ஆடிக் கொண்டேயிருக்கிறார்கள். பார்க்கலாம் எத்தனை நாளுக்கென்று!
நிகழ்வுகள் said...
யாராச்சும் கலைஞர் முகவரி தாங்கப்பா, இதை நான் அவருக்கு தந்தி அடிக்கிறேன்.////இனிவரும் காலத்தில் திருக்குவளை முகவரி தான்!
வளர்த்த கடாக்கள் எல்லாம் என் முதுகில் குத்தி விட்டு, "வாரிச் சுருட்டி"க் கொண்டு ஓடி விட்டார்கள் கனி.////ஆமாமாம்,எங்கிட்ட ஒண்ணுமேயில்ல!
////என்னால், மீனவர்கள் பிரச்சினையிலும், ஈழ மக்கள் விடயத்திலும் விட்டுக் கொடுக்கக் கூட முடியாமல் போய் விட்டதே,என்ன செய்வேன் கனியே?///ஐயகோ,தானைத் தமிழகமே என் செய்ய நினைத்திட்டாய் என்னை?என் உடல்,பொருள்!?ஆவி அத்தனையும் சோற்றாலடித்த பிண்டங்களுக்குத் தானென எத்தனை தடவைகள் கடிதமும்,தந்தியும்,உண்ணா நோன்பும்?மனிதச் சங்கிலிப் போராட்டமும் என நடாத்தினேன்?இப்படி ஒரேயடியாக ஓய்வு கொடுத்து விட்டீர்களே?தாங்குமா தமிழகம்?அடச்சீ.......தாங்குமா என் குடும்பம்????????////
FIFTY!!!!!!!!
:-)
கலக்கிறீங்க பாஸ்.
மனசாட்சி தெளிவா பேசுது - தெளிவாதான் இருக்கு
செய்யும் பாவங்களுக்கு அடுத்த பிறவியில் தண்டனை என்பது பழைய பொய் வேதம்
இப்போது உடனுக்குடன் தண்டனை இதுதான் மெய் வேதம்
இந்த தாத்தா இன்னும் அனுபவிக்க நிறைய இருக்கு
இப்போத்தானே வாரிசு சண்டை புகைய ஆரம்பிச்சு இருக்கு
இருக்குடி தாத்தா உனக்கு அப்பு வெகு விரைவில்
வணக்கம் நண்பரே,,
நலமா..
எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்ல
ஆமா இவங்க ஏன் இன்னும் கடிதம் எழுதிகிட்டே இருக்காங்க
செய்திதாள்ல போட வசதியா இருக்கும்னா இல்ல
அலைபேசிக்கு தேவையான எல்லா அலைவரிசையும் இவங்க ஊழல் பண்ணி விற்று விட்டதாலா?
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் .
தெய்வம் நின்று கொல்லும் என்பது அக்காலம் , அவ்வப்பொழுதே கொல்லும் என்பது இக்காலம்
என்னதான் செய்வார் தலைவர்! ஸ்டாலின் வேறு கோபித்துக் கொண்டு விட்டார்.நீங்கள்சொன்னமாதிரி பாராட்டு விழாவெல்லாம் வேறு இல்லை.கடிதம் எழுதட்டும்!
கலக்கல்!
அருமையான பதிவு...கருணாநிதி கூட இப்படி எழுதி இருப்பாரான்னு சந்தேகமே...
கலைஞர் குடும்பத்தை நாரடிக்கிறேண்டா அல்வா சாபிடுற மாதிரி
யாவும் கற்பனையே.....
ஆனால், ஆட்டோவும், சுமோவும் நிஜமாவே வரும்னு தெரியாதா உங்களுக்கு
வெந்த புண்ணில் இப்படி வேல் பாய்ச்சுகிறீர்களே நிரூபன், இது நியாயமா ?
கலக்கல் பாஸ்.
எப்படி இருந்தநான் இப்படி ஆகிட்டேன் என்ற விவேக்கின் பிரபல காமடி வசனம் கருணாநிதிக்கு இப்ப பொருந்தும்.
எனக்கொரு டவுட் பாஸ்..இது அரசியல் பதிவா இல்லை தரமான இலக்கிய பதிவா???
எனக்கொரு டவுட் பாஸ்..இது அரசியல் பதிவா இல்லை தரமான இலக்கிய பதிவா???
//தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தினேன்
தமிழால் இன்று தெருவில் நிற்கிறேன்!!/
எந்த ரோட்டில நிக்கிரார்னு சொல்லுங்க...வெள்ளை வான் அனுப்பிறன்!
///Yoga.s.FR said.
நிகழ்வுகள் said...
யாராச்சும் கலைஞர் முகவரி தாங்கப்பா, இதை நான் அவருக்கு தந்தி அடிக்கிறேன்.////இனிவரும் காலத்தில் திருக்குவளை முகவரி தான்!// "திருக்குவளையா" இல்ல "தெருக்குவளையா "... வடிவா சொல்லுங்கப்பா ...!!
கடித வரிகள் கொலைஞர் வரிகள்.
அவர் இடுப்புக் கத்தியை எடுத்து
அவரையே குத்தியிருக்கிறீர்கள்
அவருக்கு உணரும் பக்குவம்
இன்னமும் வந்ததாகத் தெரியவில்லை
நாங்கள் ரசித்துப் படித்தோம்
அட்டகாசமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
it is an excellent imagination and timely written. keep it up. sudarsan
கந்தசாமி. said...
///Yoga.s.FR said.
நிகழ்வுகள் said...
யாராச்சும் கலைஞர் முகவரி தாங்கப்பா, இதை நான் அவருக்கு தந்தி அடிக்கிறேன்.////இனிவரும் காலத்தில் திருக்குவளை முகவரி தான்!// "திருக்குவளையா" இல்ல "தெருக்குவளையா "... வடிவா சொல்லுங்கப்பா ...!!§§§§நீங்க சொன்னது தாங்க கரெக்டு!அது ஆங்கிலத்திலயிருந்து தமிழுக்கு மாத்திறப்போ ஒரு எழுத்து மாறிடுச்சு!
சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகை புரிந்து என் மகளை வாழ்த்தியமைக்கு நன்றி சகோ
கொட்டித்தீர்த்துட்டீங்க!.
சகோ!
பதிவு நன்று. நக்கல் நடையும்
நவிலும் முறையும் மிகமிக நன்று
ஆனால் ஒன்று
அடிபட்டவரை மேலும்
அடிப்பது பாவமல்லவா..
கொன்றன்ன இன்னா செய்யினும் என்ற குறளை
தாங்கள் அறிந்தவ்ர் தானே
உங்கள் வேதனை, ஈழ மக்கள்
பட்ட துயரம் உங்கள் இவ்வாறு
எழுதச் செய்கிறது
பிழையெனில் மன்னிக்க
புலவர் சா இராமாநுசம்
வினைவிதைத்தவன் வினையறுக்கிறான்
இன்றைய பதிவை முழுமையாக பொறுமையாக படியுங்கள் நண்பரே..
இது தங்கள் பொருட்டு எழுதப்பட்டது.
http://sivaayasivaa.blogspot.com/2011/07/1.html
நன்றி...
கருணாநிதி உண்மையாகவே இப்படித்தான் இப்போது நினைப்பார் என்று எண்ணுகின்றேன் .
என்னை அறிமுகப்படுத்தி கொள்கிறேன் .
http://oruulaham.blogspot.com/
//உளியின் ஓசையினைக் கூட உற்றுக் கேட்டு, உணர்வு கொடுத்து திரையில் உருவம் கொடுக்க முடிந்த என்னால், மீனவர்கள் பிரச்சினையிலும், ஈழ மக்கள் விடயத்திலும் விட்டுக் கொடுக்கக் கூட முடியாமல் போய் விட்டதே. என்ன செய்வேன் கனியே!//
அடிச்சுத் தூள் கிளப்பியிருக்கீங்க பாஸ்! :-)
நான்தான் ரொம்ப லேட்டா வந்துட்டேன்!
kalakkal thaan,,,
nadaththunka sako..
உங்களை தொடர்பதிவொன்றுக்கு அழைத்துள்ளேன் சகோ..
http://riyasdreams.blogspot.com/2011/07/blog-post_23.html
Kalakkal letter boss
kadavul irukkuraarungo...kalakkungo
ஒவ்வொரு வரியிலும் உண்மைத்தன்மை வெளிப்பத்கிறது .
Post a Comment