'திமுகவை நான் திங் பண்ணுறேன்
திஹார் ஜெயிலை நான் அவோய்ட் பண்ணுறேன்
உன் குடும்ப அரசியலை புறக்கணிக்கிறேன்,
இதனாலை வந்த விளைவை நினைச்சு நான் சிரிக்கிறேன்...
ஹா....ஹா...ஹா...என வடிவேலுவின் பாட்டினை மாற்றிப் பாடிக் கொண்டிருந்த நிரூபன், திடீரெனப் பின் வருமாறு பாடத் தொடங்கினான்.
’உன்னை நான் லவ் பண்ணுறேன்
உன் தங்கச்சியை லைக் பண்ணுறேன்
உங்க அக்காவை லுக்கு விடுறேன்
உன் வீட்டு வேலைக்காரியை ரூட்டு விடுறேன்....
உன் தம்பி கூட வருவதைத் தள்ளி வை
உங்க அண்ணன் கிட்ட என்னைப் பற்றி சொல்லி வை................
இந்தப் பாடலைக் காதில் வாங்கியவாறு, மாலை நேர அரட்டைக்காக வந்து கொண்டிருந்த இளையபிள்ளை ஆச்சி அவர்கள்
’‘என்ன நிரூபன், ஒரு வீட்டில் உள்ள எலோருக்கும் ரூட்டு வுடுற மாதிரிப் பாட்டுப் பாடுறீங்க. படவா ராஸ்கல். ஆளோடை அளவுக்கு இதெல்லாம் தேவையா என்று கேட்கவும், அரட்டையில் கலந்து அசத்துவதற்காக மணியண்ணை, குணத்தான், முதலியோர் முருகன் சந்நிதானத்தில் கொடுக்கப்பட்ட பிரசாதத்தைச் சுவைத்துக் கொண்டு வரவும் டைம்மிங் கரெக்டாக இருந்தது.
நிரூபன்: அப்பாடா நான் ஒரு மாதிரித் தப்பிச்சேண்டா சாமி, என முணு முணுப்பதைக் கேட்ட இளைய பிள்ளையாச்சி
இளைய பிள்ளையாச்சி: என்னடா தம்பி நீரு, நீ தப்பிச்சியோ. இரு உன்னை மணியண்ணையிட்டைப் போட்டுக் குடுக்கிறேன். அவர் தான் உனக்குச் சரியான ஆள்.
மணியத்தார்,,இவன் நிரூபன் பாடுற பாட்டைக் கேட்டியளே?
ஒரு மார்க்கமா எல்லேய் பாடுறான் ஆள்.
மணியண்ணை: என்ன இளையபிள்ளை, பையன் ஏதும் பிரச்சினை பண்ணுறானோ? பொடியனுக்கு கலியாண வயசும் வருது. என்னவாம் சொல்லுறான்.
நிரூபன் தானே ஓடி ஓடி தமிழக கேபிள் டீவிகள், பத்திரிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று எல்லாவற்றையும் தேடிப் படித்து சமகால அரசியல் விடயங்களைக் கொண்டு வாறவன். இப்போ அதையெல்லாம் விட்டிட்டு, என்ன பண்ணுறான்.
நிரூபன்: இளைய பிள்ளையா ஆச்சிக்கு கொஞ்சம் லூஸ் ஆக்கிப் போச்சுப் போல. அவாவுக்கு வயசும் போகுது தானே மணியண்ண. அதான். நான் திமுக கட்சியின் இன்றைய நிலமையினை விளக்கி ஒரு சினிமாப் பாட்டை மாற்றிப் பாடிக் கொண்டிருந்தனான். அது கூட வெளங்காம இந்தக் கிழவி என்னைப் போயி வம்பிலை மாட்டி வுடுற மாதிரிப் பொய் வேறு சொல்லுது.
இளைய பிள்ளை: அடக் கடவுளே, நீ வாயைத் துறந்தால் வாறதெல்லாம் பொய்யாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீ என்ன பாட்டுப் பாடினனி என்று மணியத்தாரிடம் சொல்லு பார்க்கலாம்.
நிரூபன்: என்ன பாட்டென்று கண்டிப்பா சொல்லித் தான் ஆகனுமோ?
’’திமுகவை நான் திங் பண்ணுறேன்
திஹார் ஜெயிலை நான் அவோய்ட் பண்றேன்
உன் குடும்ப அரசியலை புறக்கணிக்கிறேன்,
இதனாலை வந்த விளைவை நினைச்சு
நான் சிரிக்கிறேன்...இப்படித் தான் பாடினனான். ஏன் இதிலை ஏதும் தவறிருக்கோ. சொல்லுங்க பார்ப்பம்.
மணியண்ணை: பையன் கரெக்டாத் தான் பாடியிருக்கான். அதுவும் சகோதரர்களுக்கு இடையேயான பினாமி யுத்தம் இப்ப பெரும் பூகம்பமாக வெடிச்சதால் திமுக கட்சிக்கு ஏற்படுற நிலமைகளை விளக்கித் தான் பொடியன் பாடியிருக்கிறான். இதிலை என்ன பிழையிருக்கு.
குணத்தான்: ஆமாம் மணியண்ணை, ராசா ஆரம்பிச்சு வைச்ச திஹார் விளையாட்டிலை, உள்ளே போய், ராசாவோடு உட்கார்ந்து யோசிப்பதற்கென்றே ஒரு கூட்டமும் ஏலேய் தயாராகுது. கலைஞர் என்ன தான் செய்யப் போறாரோ தெரியாது. தன்னோடை ஆட்சி முடிய முன்னாடி தமிழ் நாட்டை நான்கு மாநிலமாகப் பிரிச்சு, அழகிரி, தயாநிதி, ஸ்டாலின், கனிமொழி என்று நான்கு பேருக்கும் கொடுத்திருந்தால், இன்றைக்கு மகள் கனி திஹார் ஜெயிலுக்கு போக வேண்டிய தேவையே வந்திருக்காதில்லே.
இது தான் மண்டைக்கு மேலை மயிர் இல்லையென்றாலும் மதி இருக்க வேண்டும் என்று சொல்லுறது. ஐயா யோசிச்சு முடிவெடுத்திருந்தால், ஸ்பெக்டரம் ஊழலுக்காக கனி மொழி மாத்திரம் தண்டனை பெற வேண்டி வராதில்லே. நான்கு சகோதரர்களும் ஒன்றாய்ச் சேர்ந்தெல்லே திஹாருக்குப் போயிருப்பாங்க.
மணியண்ணை: அதுவும் சரி தான் தம்பி. இப்போ மத்திய அரசோடை இருந்த தயாநிதி கூட, சிபிஐ தன்னைக் கைது செய்வதற்கான கரெக்டான காலம் நெருங்குதென்பதை உணர்ந்து பதவியை உதறித் தள்ளிட்டார்.
இளையபிள்ளை: என்ன மாறனும் மண் கவ்விட்டாரோ, அப்போ இனித் தாத்தாவின் நிலமை எப்பூடி இருக்கப் போகுது?
ஒரு மகள் ஜெயிலுக்குள்.
வீட்டிலை நிம்மதி இல்லாத வாழ்க்கை.
பதவி நாற்காலியை விட்டு மக்கள் நிம்மதியாக இருங்கோ தாத்தா என்று கலைச்சு வுட்டாலும்,
ஒரு படத்துக்கு கூட உட்கார்ந்து யோசிச்சு கதை வசனம் எழுத முடியாத அளவுக்கு யோசித்து யோசித்து இருக்கிற சொச்ச மயிரையுமெல்லெ கொட்டிக் கொண்டிருக்கிறார் ஐயா.
மணியண்ணை: அடடா, உங்களுக்கு விசயமே தெரியாதா. ராசா உள்ளே போகும் போது, யோசித்திருப்பார். என்னை மட்டுமாடா ராஸ்கலுகள் உள்ளே அனுப்புறீங்க. இருங்க என் பின்னாடி யார் யார் செயற்பட்டீங்களோ அவங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு போய், என் பக்கத்திலை இருந்து நான் பெற்ற இன்பம் பெறுக மாறன் சகோதர்கள் என்று பண்ணிக் காட்டுறேன் என்று யோசித்திருப்பாரோ. அதோடை பிரதி பலன் தான் இப்போ மாறனின் ராஜினமா.
அதனைத் தொடர்ந்து இப்போ வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் அழகிரியும் வெகு விரைவில் ராஜினாம செய்வார் பாருங்கோவன்.
நிரூபன்: சரியாத் தான் சொல்லுறீங்க. பின்னே, சாகிற வயசிலை தாத்தாவுக்கு இந்த நிலமை தெரியுமா. குடும்பத்தை அரசியலுக்குள் கொண்டு வரக் கூடாது என்று சொல்லுவது இதற்குத் தான். ஆளாளுக்கு எங்களின் தாய்த் தேச அரசியலில் ஆர்வமாக இருக்கிறீங்களே.
உங்க மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க. யாராச்சும் இந்தளவு வெவரமா நம்ம நாட்டு அரசியலைப் பற்றி என்னைக்காச்சும் பேசியிருக்கீறீங்களா?
இளையபிள்ளை: எங்கட நாட்டு அரசியல் என்ன கதைச்சுப் பேசித் தீர்க்கிற நிலமையிலா இருக்கு. சும்மா வாயைத் திறந்தாலே ஆள் தற்கொலை பணிச் செத்திட்டார், தூக்கு மாட்டிச் செய்த்திட்டான் என்று சாட்சி சொல்லி கொலைக் கேஸ் பைலைக் குளோஸ் பண்ணுறாங்க. இதிலை வேறு நான் எங்கடை நாட்டு அரசியல் பற்றிப் பேசனுமா?
நாம இந்த அரட்டை முடிஞ்சு வீட்டிற்கு நிம்மதியாகப் போறது உனக்குப் புடிக்கலையா நிரூபா?
ஏன் வீட்டு வாசலில் எப்படா வெள்ளை வேன்(ஆட்டோ) வரும் என்று பயந்து பயந்து காற்சட்டையோடு மூத்திரம் போனதை மந்துமா இலங்கை அரசியலைப் பற்றிப் பேசச் சொல்லிக் கேட்கிறாய் நிரூபா?
குணத்தான்: நம்மடை நாட்டு அரசியல் என்ன பேசித் தீர்வு கொடுக்கிற நிலையிலா இருக்கு. இன்னைக்கு ஒரு கட்சியில் இருக்கிறவன் - நாளைக்கு அடுத்த கட்சியில் போய் வேட்பாளராக நிற்பான்.
இந்த மாதம் உள்ளூராட்சி மன்றத்திலை தமிழ் கூட்டமைப்புக்கு ஆதரவளித்தவன், அடுத்த மாதத் தேர்தலிலை சிகப்புச் சால்வை ஐயாவோடை கட்சிக்கு ஆதரவா நிற்பான். இதிலை எவனை நம்பி நாம ஓட்டுப் போடுவது.
எவனை நம்பி நாம, நம்மடை பிரச்சினையளைப் பேசுறது, நாதாரிப் பசங்க. எல்லோருமே தாங்கள் பச்சோந்தி வம்சம் என்பதைக் காட்டுறானுங்கள்.
மணியத்தார்: நல்லாத் தான் நீங்க எல்லோரும் எங்கட நாட்டு அரசியலைப் புரிந்து வைத்திருக்கிறீங்க. இனித் தமிழருக்கென்று ஒரு கட்சியுமே இல்லைப் போல இருக்கு. தமிழருக்கென்று இருந்த கட்சிகளெல்லாம் இப்போ உடைந்து, தனித் தனியாக; சுயேட்சையாகிற நிலையிலை இருக்கு.
இளையபிள்ளை: தமிழனுக்கு இப்போ எதிர்காலமே இல்லாத நிலமை. அதிலை கட்சிகளுக்கு ஒரு கொள்கை, எதிர்காலம் இருக்கும் என்று யார் கண்டது. கூட்டமைப்பில் இருக்கிற ஆளுங்களே பந்தாவா இப்போ தமிழர்களுக்கு ஆதரவான தமிழ்த் தேசியக் கட்சி என்று சொல்லி எலக்சனிலை நிற்கிறாங்க. அப்புறமாப் பார்த்தால் அடுத்த மாசம் வீணைக் கட்சி, சுதந்திரக் கட்சியோடை எல்லே சேர்ந்திடுறாங்க.
நிரூபன்: உங்களுக்கு இன்னொரு விசயம் தெரியுமே. இப்ப புலம் பெயர்ந்திருக்கிற தமிழர்களெல்லோரும் ஸ்ரீலங்காவைப் புறக்கணிப்போம் என்று ஒரு போராட்டம் தொடங்கியிருக்கிறாங்க. இது பற்றி அறிந்தனீங்களே யாராச்சும்?
இளையபிள்ளை: என்னது ஸ்ரீலங்காவைப் புறக்கணிக்கப் போறாங்களோ, ஹி....ஹி...அப்படியென்றால் ஸ்ரீலங்காவிலை உற்பத்தி செய்கிற பொருட்களைத் தானே புறக்கணிக்கப் போறாங்கள். ஆனால் வீட்டிலை மட்டும் ஸ்ரீலங்கா உணவு வகைகளைத் தானே சமைச்சுச் சாப்பிடப் போறாங்கள். அதனையும் நிறுத்தலாமில்லே! அப்பத் தானே போராட்டத்திற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.
நிரூபன்: உவங்கள் ரீல் வுடுறாங்கள் ஆச்சி. ஸ்ரீலங்காவைப் புறக்கணிப்போம் எனப் போராட்டம் நடாத்தும் ஆளுங்க, மேட் இன் ஸ்ரீலங்காவில் தயாரிக்கப்பட்ட ’சாரி’ இலங்கையில் பிறந்த பொண்ணுங்களைத் திருமணம் செய்வதையும் கை விடலாம் தானே. அப்போ தானே போராட்டத்துக்கு அர்த்தம் கிடைக்கும். அதை வுட்டிட்டு, போராட்டம் என்று சொல்லிக் கொண்டு இலங்கையில் இருந்து பொண்ணு எடுப்பது என்னக்கென்னவோ சரியாகப் படலை.
இது தான் சான்ஸ் என்று இலங்கைப் பொண்ணுங்களையும் புறக்கணிக்கத் தொடங்கினாங்க என்றால், நம்மளை மாதிரி உள்ளூர்ப் பொடியங்களுக்கும் தரமான பிகருங்க மாட்டுவாளுங்க தானே!!
குணத்தான்: கன்றாவி, நீருபா உனக்கென்ன கல்யாண வயசே வந்திட்டு. இவ்வளவு அவசரப்படுறாய். இரு செல்வராசரிட்டைச் சொல்லி, உனக்கு வெகு விரைவில் ஒரு கலியாணம் பேசச் சொல்லுறேன்.
இளையபிள்ளை: எல்லோரும் நல்லாத் தான் கதைச்சுக் கொண்டிருக்கிறீங்க. ரோட்டிலை ஏதோ வேன் இரைகிற சத்தம் கேட்கிற மாதிரி இருக்கு. இப்பத் தானே யாழ்ப்பாணக் குடா நாட்டிலை ஆட்களற்ற வீடுகளைத் தேடிப் போய் தற்கொலை செய்கிற ஆளுங்க தூங்கிச் சாகிற ஆளுங்க தொகை கூடுது. அப்படி நாமளும் தேடிப் போய்ச் சாக முன்னம், வீட்டை போகலாமில்லே.
நிரூபன்: ஆச்சி உனக்கு ஓவர் குசும்பு. இது மட்டும் யாருக்காச்சும் விளங்கியிருக்க வேண்டும். ஹி.....ஹி......ஹி..... இப்பவே உனக்கு சங்கு தான்!!
நையப் புடை
மானம் போற்று
மறைவாய் நடி
போராட்டம் நடத்தது
பொய்களைச் சொல்லு!!
குணத்தான்: என்னடா நிரூபா, உன் போனுக்கு ஒரு புதுப் பாட்டுப் போட்டிருக்கிறாய்.
நிரூபன்: ஓ இதுவா. என் போனுக்கு நான் இப்ப வைச்சிருக்கிற புது ரீமேக் ரிங்கிங் டோன்.... அம்மா போன் பண்றா. நாம கிளம்புமோமா.
என்ன பார்க்கிறீங்க. அதான் போன் பேச்சிக்கிட்டிருக்கேனில்லே!
|
55 Comments:
மாப்பிள எப்பிடியா உன்னால் முடியுது..? உனக்கு நான் நித்திரை கொள்வது பிடிக்கவில்லையோ.. நேற்று சாப்பிட்ட சாப்பாடு ஏதோ செய்யுதெண்டு வடலிக்க செம்போட ஒதுங்க போவேக்க இந்த டெலிபோனையும் கொண்டு வந்திட்டன்..! அது சரி அந்த கருமம் போகும் வரை..!உனக்கும் ஒரு குழ வைச்சிருக்கன் காட்டான் வந்திட்டு போட்டான்..!
////'அச்சம் தவிர்
நையப் புடை
மானம் போற்று
மறைவாய் நடி
போராட்டம் நடத்தது
பொய்களைச் சொல்லு!!//
பாரதியின் கவிதையை கருத்தாய் கையாண்ட விதம் கவிதை சகோ
சமகால நடப்புகளை நயம் பட உரைத்த விதம் அருமை சகோ
நல்ல பதிவு.
ஞானி ஒரு பதிவுல சொன்னதா ஞாபகம் வேட்டியில மூத்திரம் போறதுகூட தெரியாதவராக இருக்கும் ஒருவர் எனது அப்பாவாக இருந்தால் அவரை வேலை செய்ய விடமாட்டேன்னு.. எனக்கும் அப்பா இருக்கார்.. கலைஞ்ஞரை விட இருபது வயது குறைவு .. தனது பிள்ளைகள் பேர பிள்ளைகள்ன்னு சந்தோசமாக இருக்கிறார்.. கலைஞ்ஞர் 2006இல் வென்றவுடனேய ஸ்டாலினிடமாவது ஆட்சியை குடுத்திருக்கலாம் இவ்வளவு பிரச்சனைகளும் இவர்களுக்கு வந்திருக்காது.. இவர்கள் குடும்பத்தில் இவர் ஓரளவு நேர்மையானவரே..
அப்புறம் இலங்கை பிரச்சனையைப்பற்றி கூறுகிறேன்.. மாப்பிள காட்டான் என்ன கே....ஆ ..? இப்ப இஞ்ச லீவு மாத்தையாவும் என்ர ஊருக்கு போக எனக்கு விசா தேவையில்லைன்னுட்டார்..! எனக்கும் வெள்ள வான் வராம பார்கோனுமல்லோ ..!
தழிழ் நாட்டு அரசியல பற்றி கதைக்க யார் கூப்பிட்டாலும் வருவான் காட்டான் கும்மியடிக்க ..! எங்கட ஊர் சகோதரர்கள் பற்றி காட்டானுக்கி ஒண்டும் தெரியாது நான் பிரன்சுக்காரன்..? அப்ப தமிழ் நாட்டு அரசியலபற்றி ஏன் கதைக்கிறா என்கிறீர்களா .. இலங்கபிரச்சனைக்கு இங்க ஆட்டோ வரும் தமிழ் நாட்டுகாரங்க ரெம்ப நல்லவங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க...!?
இன்று நடப்பவைகளை இயல்பாக
நறுக்கென்று எடுத்துரைத்திருக்கிறீர்கள்
அருமை.
நல்ல அரசியல் நய்யாண்டி....சில தெரியாத விஷயங்களையும் உணர்த்தி இருக்கீங்க நிரூ நன்றி!
//’உன்னை நான் லவ் பண்ணுறேன்
உன் தங்கச்சியை லைக் பண்ணுறேன்
உங்க அக்காவை லுக்கு விடுறேன்
உன் வீட்டு வேலைக்காரியை ரூட்டு விடுறேன்....//
என்ன புளைப்புடா சாமி!!
// தன்னோடை ஆட்சி முடிய முன்னாடி தமிழ் நாட்டை நான்கு மாநிலமாகப் பிரிச்சு, அழகிரி, தயாநிதி, ஸ்டாலின், கனிமொழி என்று நான்கு பேருக்கும் கொடுத்திருந்தால், இன்றைக்கு மகள் கனி திஹார் ஜெயிலுக்கு போக வேண்டிய தேவையே வந்திருக்காதில்லே. ///
ஹிஹி பலே பலே சூப்பர் ஐடியா மாப்பு!!!
//
//ஒரு படத்துக்கு கூட உட்கார்ந்து யோசிச்சு கதை வசனம் எழுத முடியாத அளவுக்கு யோசித்து யோசித்து இருக்கிற சொச்ச மயிரையுமெல்லெ கொட்டிக் கொண்டிருக்கிறார் ஐயா. //
அப்பிடியா??அப்பாடி தப்பிச்சம்டா!!
//அதனைத் தொடர்ந்து இப்போ வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் அழகிரியும் வெகு விரைவில் ராஜினாம செய்வார் பாருங்கோவன்./
பூகம்பம் வெடிச்சிடாது??
// தமிழர்களுக்கு ஆதரவான தமிழ்த் தேசியக் கட்சி என்று சொல்லி எலக்சனிலை நிற்கிறாங்க. அப்புறமாப் பார்த்தால் அடுத்த மாசம் வீணைக் கட்சி, சுதந்திரக் கட்சியோடை எல்லே சேர்ந்திடுறாங்க.///
ஹிஹி அதுக்கும் கடியா??ம்ம் நடக்கட்டும்!
//இது தான் சான்ஸ் என்று இலங்கைப் பொண்ணுங்களையும் புறக்கணிக்கத் தொடங்கினாங்க என்றால், நம்மளை மாதிரி உள்ளூர்ப் பொடியங்களுக்கும் தரமான பிகருங்க மாட்டுவாளுங்க தானே!!
//
அது அது!!!
நம்மளை வாழவைக்கும் திலகமே!!!!!!
//அச்சம் தவிர்
நையப் புடை
மானம் போற்று
மறைவாய் நடி
போராட்டம் நடத்தது
பொய்களைச் சொல்லு!!
//
இது ஆவன்னா எழுத்து பாடலா??
கலந்துகட்டிய அரசியல் பார்வை!!சூப்பர் பாஸ்!!
அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா...அனல் பறக்குது.
அது எப்படி நிரூ...ஒரே பால்ல ரெண்டு சிக்ஸர் அடிக்கிறீங்க!!!!!!!
எல்லாப் பக்கமும் ரவுண்டி கட்டி அடிக்கிறீங்களே..
பாடல்கள் அனைத்தும் அருமை நிரூ.
கருணாநிதி ஜயாவை கலாய்த விதம் சுப்பர்.அசத்தல் பாஸ்
அரசியல் வாடை தூக்கல் பதிவு!
சமையம் கிடைக்கும் போதெல்லாம் புலம்பெயர் வாலிபர்களின் வாழ்க்கையில் வத்திவைக்கிறீங்கள் பெண்களை இறக்குமதி செய்ய வேண்டாம் என்று அவங்களில் யாராவது ஒருவர் உங்களக்கு சூனியம் வைக்கப்போறார்கள் நிரூ! பார்த்து நடவுங்கோ !
அரசியல் கும்மியில் உள்ளூர் நடப்பையும் நச்சென்று கலந்து சிறப்பான பதிவை தந்திருக்கிறீர்கள் சகோ!
////பையன் ஏதும் பிரச்சினை பண்ணுறானோ? பொடியனுக்கு கலியாண வயசும் வருது. என்னவாம் சொல்லுறான். ////
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை....
ஃஃஃஃஇந்த மாதம் உள்ளூராட்சி மன்றத்திலை தமிழ் கூட்டமைப்புக்கு ஆதரவளித்தவன், அடுத்த மாதத் தேர்தலிலை சிகப்புச் சால்வை ஐயாவோடை கட்சிக்கு ஆதரவா நிற்பான். இதிலை எவனை நம்பி நாம ஓட்டுப் போடுவது.ஃஃஃஃ
யோவ் ஆதரவளிச்சவனில்லப்பா... கூட்டமைப்பில் வேட்பளராக நின்டவன் எண்டு சொல்லு...
அர்த்தமுள்ள அரட்டை நிரூ.
என்ன செய்ய தக்கன தப்பி பிழைக்கும்,,
இந்த மடம் இல்லாட்டி சந்தை மடம் எல்லா இடங்களிலும் உண்டு..
பகிர்விற்கேற்ற பாடல்
//இலங்கையில் பிறந்த பொண்ணுங்களைத் திருமணம் செய்வதையும் கை விடலாம் தானே. அப்போ தானே போராட்டத்துக்கு அர்த்தம் கிடைக்கும். அதை வுட்டிட்டு, போராட்டம் என்று சொல்லிக் கொண்டு இலங்கையில் இருந்து பொண்ணு எடுப்பது என்னக்கென்னவோ சரியாகப் படலை.
இது தான் சான்ஸ் என்று இலங்கைப் பொண்ணுங்களையும் புறக்கணிக்கத் தொடங்கினாங்க என்றால், நம்மளை மாதிரி உள்ளூர்ப் பொடியங்களுக்கும் தரமான பிகருங்க மாட்டுவாளுங்க தானே!!//
அட அட அட! என்ன ஒரு கருத்து! உண்மைதான் பாஸ்! ஒண்ணுமே காணோம்...எல்லாத்தையும் எக்ஸ்போர்ட் பண்ணிடுறாங்க! :-(
உதுதான் எங்கட அரசியல்...
நாட்டு நடப்பை ,’நச்’ என்று சொல்லும் நையாண்டி அரட்டை!
மச்சி பதிவு சூப்பர். அதிலும் கார்டூன் செம உன் அனுமதியோடு அந்த கார்ட்டூனை கூகுள் பிளசில் பகிர்ந்து கொள்கிறேன்....
நல்ல அரசியல் பதிவு ...
adaஅட
வணக்கம் பாஸ் ;-)
///என்ன இளையபிள்ளை, பையன் ஏதும் பிரச்சினை பண்ணுறானோ? பொடியனுக்கு கலியாண வயசும் வருது.//கல்யாண வயசு வந்தாலே பிரச்சனை தானே ;-),
///இது தான் மண்டைக்கு மேலை மயிர் இல்லையென்றாலும் மதி இருக்க வேண்டும் என்று சொல்லுறது. ஐயா யோசிச்சு முடிவெடுத்திருந்தால், ஸ்பெக்டரம் ஊழலுக்காக கனி மொழி மாத்திரம் தண்டனை பெற வேண்டி வராதில்லே. நான்கு சகோதரர்களும் ஒன்றாய்ச் சேர்ந்தெல்லே திஹாருக்குப் போயிருப்பாங்க. /// ஆமா , ஆமா ...
’உன்னை நான் லவ் பண்ணுறேன்
உன் தங்கச்சியை லைக் பண்ணுறேன்
உங்க அக்காவை லுக்கு விடுறேன்
உன் வீட்டு வேலைக்காரியை ரூட்டு விடுறேன்....
உன் தம்பி கூட வருவதைத் தள்ளி வை
உங்க அண்ணன் கிட்ட என்னைப் பற்றி சொல்லி வை................
ஆகா..........அரசியல் நையாண்டிக்காக
புறப்பட்ட கவிதை ஊற்று அருமை சகோ......
பகிர்வுக்கு மிக்க நன்றி. எனது தளத்திலும்
பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான எனது
முதற்ப்பாடல் youtupe மூலமாக என் தளத்தில்
16 ம் திகதி வெளியிட்டுள்ளேன் aathi sakthi
ஆனவளே என்று ஆரம்பிக்கும் இப்பாடலைக்
கேட்டு உங்கள் கருத்துகளையும் பகிருங்கள் சகோ.
(விருப்ப வாக்களிக்கவும் மறந்துவிடாதீர்கள்.)
நான்காவது போட்டோவில நிக்கிறவர் யாரப்பா , 'சமூக பகுப்பாய்வாளன் ,காந்தியம் சிந்தனயாலராமில்ல' இது வரைக்கும் எத்தன போராட்டம் காந்திய வழியில் செய்திட்டாராம் !! சரியான காமெடி பீசா இருப்பார் போல ;-)
///அப்புறமாப் பார்த்தால் அடுத்த மாசம் வீணைக் கட்சி, சுதந்திரக் கட்சியோடை எல்லே சேர்ந்திடுறாங்க.// இத மட்டும் தாடிக்காரர் கேள்விப்பட்டா, பிரீயா வீட்டுக்கு வெள்ளை வான் செர்விஸ் நடத்துவாரு;-)
///ஆனால் வீட்டிலை மட்டும் ஸ்ரீலங்கா உணவு வகைகளைத் தானே சமைச்சுச் சாப்பிடப் போறாங்கள். அதனையும் நிறுத்தலாமில்லே! அப்பத் தானே போராட்டத்திற்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்./// அதுமட்டுமா ,அவங்க உடல் ,உருவம் கூட சிறிலங்காவில தானே உருவானது, அதை கூட புறக்கணிக்க சொல்லி கேட்கிறது..!!
நிரூ....!
தமிழக அரசியல் மாத்திரமின்றி எம்முடைய இன்றைய அரசியலை தெளிவாகவும் நேரடியாகவும் பேசியிருக்கிறிர்கள்.
அதுவும், நம்மட ஊர் மொழி வழக்கு அற்புதம்.
வாழ்த்துக்கள் பாஸ்.
மணி அண்ணை ரைட்ட்ட்ட்...:) போலவே ஒரு அழகான இடுகை(இது வேற இடுதல்....இடுகை:)).
//பையன் ஏதும் பிரச்சினை பண்ணுறானோ? பொடியனுக்கு கலியாண வயசும் வருது. //
உண்மையாகவோ? ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்... இப்பவாவது அவிங்களுக்குப் புரிஞ்சாச் சரி:)... நான் கல்யாண வயசைச் சொன்னேன்:)).....
காலையில் எழுந்து ஒவ்வொரு நாளும்... ”எனக்குக் கல்யாண வயசு வந்திட்டுது...வந்திட்டுது”... என நிரூபனா சொல்ல முடியும் வீட்டில:)))).... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
சகோ.... பாட்டு அருமையா இருக்கே... நீங்க திங்க் பண்ணினதா?
நகைச்சுவை உரையாடலால் மு க குடும்பத்தை பின்னி பெடலேடுத்திருக்கிறீரே...
அச்சம் தவிர் இன்று
மிச்சம் வருவது என்று
புலவர் சா இராமாநுசம்
ஆரம்பப் பாட்டிலேயே களை கட்டிவிடுகிறதே? எப்படி தோன்றுகிறது உங்களுக்கு மட்டும்?
இக்கரையும் அக்கரையும் அக்கறையா சொல்றது விழுறவங்க காதுல விழுமா?
உட்கார்ந்து யோசிக்கிறங்குறது இதுதான்:)
ஆலமரத்தடி கதைகள் சிரிப்புக்கும்,சிந்தனைக்கும்.
நல்ல பதிவு. நீங்க படுக்க, சாப்பிட மாட்டீங்களா நிரூ. இப்படி நொடிக்கொரு பதிவு எப்படித் தான் நேரம் கிடைக்குதோ அவ்வ்வ்வ்வ்வ்...
”எனக்குக் கல்யாண வயசு வந்திட்டுது...வந்திட்டுது”... என நிரூபனா சொல்ல முடியும் வீட்டில:)))).... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.//அது தானே. அதான் இப்படி பதிவு வழியா சொல்றார் போலிருக்கு. போன் நம்பர் தாங்கோ நான் உங்க வீட்டிலை கதைச்சுப் பார்க்கிறேன்.
அரசியல் அலசலில் மிளகாய் நெடி...:)
தொடருங்கள்.
செம அரசியல் நக்கல்......
vanathy said...
போன் நம்பர் தாங்கோ நான் உங்க வீட்டிலை கதைச்சுப் பார்க்கிறேன்.////இத்தப் பாரடா????????????
///இப்பத் தானே யாழ்ப்பாணக் குடா நாட்டிலை ஆட்களற்ற வீடுகளைத் தேடிப் போய் தற்கொலை செய்கிற ஆளுங்க தூங்கிச் சாகிற ஆளுங்க தொகை கூடுது. அப்படி நாமளும் தேடிப் போய்ச் சாக முன்னம், வீட்டை போகலாமில்லே.
நிரூபன்: ஆச்சி உனக்கு ஓவர் குசும்பு. இது மட்டும் யாருக்காச்சும் விளங்கியிருக்க வேண்டும். ஹி.....ஹி......ஹி..... இப்பவே உனக்கு சங்கு தான்!!////யதார்த்தம்!!!
நிரூ....நக்கல் கூடிப்போச்சு.பாவம் கலைஞர் ஐயா.உங்களிட்ட மாட்டிப் படுற பாடு ...!
அதுசரி காட்டன் பிரான்சுக்காராரோ....சரி சரி ஆள்தான் கொஞ்சம் கருப்பு.பயமா வேற கிடக்கு !
வடையண்ணாவுக்குச் சுகம் சொல்லிவிடுங்கோ நிரூ !
ஹேமா said...
நிரூ....நக்கல் கூடிப்போச்சு.பாவம் கலைஞர் ஐயா.உங்களிட்ட மாட்டிப் படுற பாடு ...!
அதுசரி காட்டன் பிரான்சுக்காராரோ....சரி சரி ஆள்தான் கொஞ்சம் கருப்பு.பயமா வேற கிடக்கு !
வடையண்ணாவுக்குச் சுகம் சொல்லிவிடுங்கோ நிரூ.////நாங்களும் தான் பிரான்சில இருந்து கொண்டு தேடுறம்!வடையண்ணாவை தேடித் தான் மைந்தன் ஒரு பதிவு போட்டிருக்கிறார்!அந்தப் பக்கம் போய்ப் பாருங்கோ! காட்டான் இங்கை பிரான்சில தான் காட்டில இருக்கிறார்!அவரும் நாலு நாளைக்கு முதல் ஊர்க் கோழி உரிச்ச கதை போட்டிருக்கிறார்!முடிஞ்சா அதையும் பாருங்கோ!
சகோ பிஸி அதல வரமுடியல்ல ம்ம்ம் அதுதான் வந்துட்டம்ல ..
அண்மைய செய்திகளின் அலசல் அரட்டை சிறப்பு .
நான் வந்தது ரொம்ப லேட்டு..
இருந்தாலும்.. நன்பேண்டா ..
எத்தனை நாள் கழிச்சு பத்த்தாலும் வந்து கமென்ட் போடுவோமில்ல..
Post a Comment