மரணங்கள் மலிந்த பூமி எது என்று கேட்டால், ஈழத்தில் உள்ள இறைவனுக்குப் பேசும் சக்தியிருந்தால் அவன் தன் சுட்டு விரலா தொட்டுக் காட்டுவான் அது ஈழம் தான் என்று. வெளித்தெரியாத பல ஜீரணிக்க முடியாத ரணங்கள் உள்ளே அமிழ்ந்து, புதைந்து கிடக்கும் ஒரேயொரு பூமியாக உள்ளது எது என காலத்திடம் கேட்டால், அதற்குப் பேசுகின்ற வல்லமையிருப்பின் அதுவும் கூறும் ஈழம் தான் என்று. உள்ளே கனன்று எரிந்த பெரு நெருப்பின் பின்னர், புதைந்து போன அகழ்வுகளை இலகுவில் கண்டறிந்து விட முடியாதவாறு வெள்ளரசுகள் மீது சட்டித் தொப்பிகள் கவிழ்க்கப்பட்டு அசையும் உயிரினங்களாக நடப்படிருக்கிறது.
ஈழத் தாயவள் ஒரு காலத்தில் குளிர்ச்சியுற்றிருந்தாள். தன் மேனியில் வரி கொண்ட தேகங்கள் நடந்து, கொற்றவைக்கு வீரம் எனும் குளிர்த்தி நிறை அர்ச்சனைகள் செய்யப்பட்டு நாளும் வெற்றி எனும் நாமம் வாசலில் பொறிக்கப்பட்டிருந்ததால் ஈழத் தாய் இன்புற்றிருந்தாள். சாவு வரும் வழி எதிர்பார்த்து சரித்திரம் படைப்பதற்காய் காவல் இருந்தவர்கள் பல பேர் கொற்றவை எனும் வீரத்தின் தெய்வத்திற்கு தம் இன மானத்தால் திருமுழுக்காட்டினார்கள்.
இன்றோ, நாளையோ இறப்போமென நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒருவருக்கோ, உடலெல்லாம் இயக்கமற்று இருக்கும். ஒவ்வோர் நொடிகளையும் அச்சத்துடன் கழிக்க வேண்டும் எனும் ஏக்கம் நிறைந்திருக்கும். ஆனால் இதோ சாகப் போகிறோம் எனச் சந்தோசமாக வழியினப்பும் சூரியனுக்கு கையசைத்து விட்டுச் சென்று சாவார்களே, அவர்களின் இறுதி நிமிடம் வரை மனதில் பயமேதுமிருக்காதாம்.
தங்களால் நாளை ஒரு இனத்தின் இளம் பிஞ்சுகள் சிரித்து மகிழ்வார்கள் எனும் நம்பிக்கையில் சென்றார்களா? இல்லை தொலை நோக்குப் பார்வையுடன் வேள்வி செய்த ஒருவனின் மானத்தை நிலை நாட்டச் செத்தார்களா? எதுவும் இலகுவில் அவர்களிடமிருந்து அறியமுடியாது- காரணம் அவர்கள் ஒவ்வோர் அசைவும் ஒரு காலத்தில் பிறர் அறிய முடியாதிருந்தது. காட்சிப் பிறழ்வுகள் போல திடு திப்பென மாற்றங்களை உருவாக்கக் கூடிய காவற் தெய்வங்களாக அவர்களிருந்தார்கள்.
வேகம் எடுக்கும் விழிகளுக்குப் பின்னாலே இடம் பெறும் நிகழ்வுகளை அவர்களைக் கடந்து செல்லும் காற்றாலும் அறிய முடியாது. தாகம் எடுக்கையிலும் தமிழே வேண்டுமென தமிழ்ப் பால் குடித்த தருக்கர்கள் வாழ்ந்த நிலம் ஈழம். நாம் கூனிக் குறுகி கும்பிட்டு வாழ்கையில்;
தாம் இருக்கிறோம் என உணர்த்தி அடிமைத் தளையுடைத்த அற்புத மனிதர்கள் அவர்கள்.
இன்றோ நாளையோ எமைச் சாவு சூழ்ந்து கொள்ளும் எனும் அச்சத்துடன் வாழ்வது எவ்வளவு கொடுமையானது, ஆனால் இந்தா இதோ போய்ச் சாகிறோம் எனச் சிரித்தபடி- உதட்டோரம் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டுப் போய்ச் சாவதென்பது இவர்களால் எப்படிச் சாத்தியமானது? வரலாறே இவர்களைக் கண்டு அச்சப்பட்டிருக்கும். வானம்- முகில்- ஈழத்தின் காற்று இவையெல்லாம் இவர்களின் நகர்வுகளை உய்த்தறிய முடியாது ஏக்கம் கொண்டிருக்கும்.
வாழ்வில் ஒரு தடவையாவது அடிமைப்பட்ட இனம் நிமிருந்திருக்கிறதென்றால் அது இவர்களால் தானே சாத்தியம். முன்னொரு காலத்தில் ஈழம் சாவிற்குச் சவால் விட்டுக் காத்திருந்தது என்றால் அதுவும் இவர்களின் பிறர்கென வாழும் பண்பால் தானே நிரூபணம்!
இன்று இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லையென பலர் பேசுகிறார்கள். ஆனால் ஈழ வானில் தோன்றும் விடிவெள்ளிகளாகவும், நட்சத்திரங்களாவும் மேலிருந்து அவர்கள் ஏக்க விழிகளுடன் பார்த்திருப்பதை அறியாமலல்லவா அவர்கள் பேசுகிறார்கள்.
நாளை பிறக்கும் தமிழ் குழந்தையின் மூச்சுக் காற்றில் கலந்துமிருப்பார்கள். யாரால் இவர்களின் பிறப்பினை அறிய முடியும். சூட்சுமம் அறிய முடியாத நவீன மனிதர்கள் அவர்கள். அடிமைப்பட்டு அடங்கியிருந்த ஓர் இனம் பற்றி உலகம் தம்மால் தான் அறிந்து கொண்டது எனும் நிம்மதிப் பெரு மூச்சில் காணாமற் போய்விட்டார்களோ தெரியவில்லை. ஆனாலும் நாளை ஓர் சந்ததி நன்றாய் வாழ வேண்டுமென்பதற்காய் தம் வாழ்வைத் துறந்த நவீன முனிவர்கள் அவர்கள்.
இலகுவில் ஒப்புவமை கொண்டு வர்ணிக்க முடியாத வேற்றுக் கிரக வாசிகள் அவர்கள். ஓ யார் அவர்கள்! அவர்கள் தான் இன்று வேற்றுக் கிரகத்தில் நிம்மதியாக வாழும் வேற்றுக் கிரக வாசிகள்!
பிற் சேர்க்கை: இப் பதிவானது கடந்த வாரம் இதே நாளன்று வர வேண்டிய பதிவு. சந்தர்ப்ப சூழ் நிலைகளால் கால தாமதத்துடன் இப் பதிவானது இன்று பிரசுரமாகிறது.
பின்னூட்டமிடும் அன்பு உள்ளங்கள், தயவு செய்து இலங்கையின் ஜனநாயக அரசியல் நிலமைகளைப் புரிந்து கொண்டு பின்னூட்டமிடவும்.
|
58 Comments:
இலங்கையின் "ஜனநாயகத்தை" புரிந்துகொண்டு பின்னூட்டமிடுவதா?
அப்பிடீன்னா என்னாங்க?
@எஸ்.பி.ஜெ.கேதரன்
இலங்கையின் "ஜனநாயகத்தை" புரிந்துகொண்டு பின்னூட்டமிடுவதா?
அப்பிடீன்னா என்னாங்க?//
வணக்கம் சகோ, யாராவது பதிவினைப் படித்த பின்னர், உணர்ச்சிவசப்ப்ட்டுப் பின்னூட்டமிட்டால், நான் தானே மாட்டிக்க வேண்டி வரும். நம்மளை கவனிக்க தானே ஆட்டோ அனுப்புவாங்க. அதான் இப்படி எழுதினேன்.
தாமதமானாலும் பரவாயில்லை.சொல்லவந்தது முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது.ஓரிரு வரிகள் வாசித்த உடனேயே என்ன சொல்லப்படப்போகிறது,எப்பொழுது சொல்லப்படவேண்டியது என்பதனைத்தும் புரிந்துகொண்டேன்.
இறுதியாக இணைக்கப்பட்டுள்ள கார்ட்டூன் போன்ற சித்திரத்தை என்ன எண்ணத்தோடு நீங்கள் இணைத்தீர்களோ எனக்கு தெரியவில்லை.ஆனால் நான் அதைப்பார்த்து, இந்தப்பதிவோடு சேர்த்து சிந்தித்துப்பார்க்கிறேன்- இரண்டு சிங்கங்கள் ஒரு சிறுவனைப்பார்த்து பயத்தோடு பணிந்து இருக்க,அதை வானில் "நட்சத்திரங்கள்" கண்சிமிட்டி ரசிக்கின்றன.
இரு சிங்கங்களின் நடுவே எந்த அச்சமுமின்றி சிறுவன் தீபமேந்தி நிற்கிறான்.
மிகவும் நல்ல எழுத்து,பொருத்தமான சித்திரங்கள்.வாழ்த்துக்கள்.
சரி,... உங்க வாசல்ல ஏதோ வெள்ளை வான் வந்து நிக்கிறமாரி சத்தம் கேக்குது????? எட்டிப்பாருங்கோ ஒருக்கா.
என்ன பாஸ் வெத்தில பாக்கு வச்சு வெள்ளைவானை கூப்பிடுற போல இருக்கு...! இருந்தாலும் யாரும் எழுத துணியாததை எழுதியமைக்கு ஒரு சலூட்...
///ஆனால் இதோ சாகப் போகிறோம் எனச் சந்தோசமாக வழியினப்பும் சூரியனுக்கு கையசைத்து விட்டுச் சென்று சாவார்களே,/// சூரியன் = ? ))
///காரணம் அவர்கள் ஒவ்வோர் அசைவும் ஒரு காலத்தில் பிறர் அறிய முடியாதிருந்தது. //உண்மை தான் , ஆருடம் கூறி தோற்றுப்போனவர்கள் பலர், அமெரிக்காதொடக்கம் ...))
//இன்று இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லையென பலர் பேசுகிறார்கள். ஆனால் ஈழ வானில் தோன்றும் விடிவெள்ளிகளாகவும், நட்சத்திரங்களாவும் மேலிருந்து அவர்கள் ஏக்க விழிகளுடன் பார்த்திருப்பதை அறியாமலல்லவா அவர்கள் பேசுகிறார்கள். // நச்சுன்னு சொன்னீங்க..நமது வாழ்வுக்காக முகமறியா பலரும் செய்துள்ள தியாகம் எத்தனை..எத்தனை! அவற்றிற்கு பலன் இருக்குமா?
///இன்று இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லையென பலர் பேசுகிறார்கள். ஆனால் ஈழ வானில் தோன்றும் விடிவெள்ளிகளாகவும், நட்சத்திரங்களாவும் மேலிருந்து அவர்கள் ஏக்க விழிகளுடன் பார்த்திருப்பதை அறியாமலல்லவா அவர்கள் பேசுகிறார்கள். ///திலீபன் அண்ணாவின் இறுதி உரை தான் நினைவுக்கு வருகுது ..((
///அவர்கள் தான் இன்று வேற்றுக் கிரகத்தில் நிம்மதியாக வாழும் வேற்றுக் கிரக வாசிகள்! /// ம்ம்ம் நிச்சயமாக அவர்கள் நிம்மதியாய் வாழ வேண்டும்..
///தயவு செய்து இலங்கையின் ஜனநாயக அரசியல் நிலமைகளைப் புரிந்து கொண்டு பின்னூட்டமிடவும்.
/// ம்ம் சரி சரி போய் வீட்டு கதவை பாருங்கோ ஒழுங்காய் பூட்டி தான் கிடக்குதா எண்டு...))
தங்களால் நாளை ஒரு இனத்தின் இளம் பிஞ்சுகள் சிரித்து மகிழ்வார்கள் எனும் நம்பிக்கையில் சென்றார்களா? இல்லை தொலை நோக்குப் பார்வையுடன் வேள்வி செய்த ஒருவனின் மானத்தை நிலை நாட்டச் செத்தார்களா? எதுவும் இலகுவில் அவர்களிடமிருந்து அறியமுடியாது>>>>
உண்மைதான் சகோ... முடிவு என்ன கிடைக்கும் என தெரியாமலையே....செத்தவர்களுக்கு பயன் என்ன?
//அடிமைப்பட்டு அடங்கியிருந்த ஓர் இனம் பற்றி உலகம் தம்மால் தான் அறிந்து கொண்டது // அத்தனையும் வீண் தானா-எனும் விரக்தியை விலக்குகிறது இந்த வரிகள். நன்றி நிரூ.
அடடா... இண்டைக்காவது பந்திக்கு முந்திடோணும் என ஓடிவந்தால் ஏற்கனவே ”கியூவரிசையில்” ஆட்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).
என்னத்தைச் சொல்வது அவர்கள் விடிவெள்ளிகள் என்று மட்டும் சொல்ல மனசு வருகுது இல்லை அதிகம் சொல்லி உங்கள் இருப்பை கேள்விக்குறியாக்க விருப்பம் இல்லை மனசில் பல உணர்வுகள் சிலகேள்விக்கு பதில் இல்லாத மொனங்கள் சங்கடங்கள் ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கையில் பொழுது போகின்றது.
ஆக வெள்ளை வான்
இன்னும் தொடர்கிறதா ? நண்பேரே,,,
எப்படி பார்த்தாலும்.
மரணத்தை எதிர்பார்த்து வாழும்
வீர பூமி இது என்பதிலும் ஐயமில்லை.
>>இன்றோ, நாளையோ இறப்போமென நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒருவருக்கோ, உடலெல்லாம் இயக்கமற்று இருக்கும். ஒவ்வோர் நொடிகளையும் அச்சத்துடன் கழிக்க வேண்டும் எனும் ஏக்கம் நிறைந்திருக்கும்.
மரண பயம்!!!!!!!!!
>>. ஆனாலும் நாளை ஓர் சந்ததி நன்றாய் வாழ வேண்டுமென்பதற்காய் தம் வாழ்வைத் துறந்த நவீன முனிவர்கள் அவர்கள்.
நிஜம்
உலகில் வீரபூமி என்றால் அது ஈழம்தான்
அதில் எவருக்கும் துளியும் சந்தேகம் இல்லை
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஒரு மேடையில் ஆக்ரோசமாக பேசுவது போல ஒரு கட்டுரை வரையப்பட்டு இருக்கிறது!!வாழ்த்துக்கள் சகோ!
//ஆனால் இதோ சாகப் போகிறோம் எனச் சந்தோசமாக வழியினப்பும் சூரியனுக்கு கையசைத்து விட்டுச் சென்று சாவார்களே, அவர்களின் இறுதி நிமிடம் வரை மனதில் பயமேதுமிருக்காதாம்.
//
ஆமாம்!!அது நம் மண் நமக்கு கொடுத்த வீரம்!!
ஒன்றையும் வெளிப்படையாக தொடாமல்,ஆனால் எதையும் விடாமல்,அத்தனையையும் கொண்டு வந்திருக்கிறீர்கள்!!!ம்ம்
என்னத்தை சொல்வது நிரூபன்...
இதைப் படிக்கும்போது எல்லாவற்றையும் இழந்துவிட்டோமோ என்ற உணர்வுதான் அடிமனதின் ஓரத்தில் எழுகிறது.
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்தான் பாஸ்
நல்ல கணிப்பு
"....உயிர் மூச்சிற்கு ஆயுத அழுத்தம் கொடுக்கப்பட்டு, வெளியே ஏதும் பேச வாய் திறக்கமாட்டாதவர்களாக நாக்கு கிழித்துத் தொங்கும் தோரணங்கள் போல காற்றில் அசைய விடப்பட்டிருக்கிறார்கள்...."
மௌனம் மௌனம் மௌனம்
சொல்லவும் வேண்டும்
சொல்லாமலும் இருக்கேலா
எல்லாத்தையும் சொல்லவும் வேண்டும்
எல்லாத்தையும் அப்படியே சொல்லாமலும் இருக்கேலா
சொல்லாமல் சொல்லவேண்டும்
இப்படி அப்படி எண்டு மண்டைய போட்டு உடச்சு அப்படியே எல்லாத்தையும் சொல்லிபுட்டுடின்களே நிருபா
தன் அடுத்ததலைமுறையாவது பிரகாசமான ஒளியில் வாழட்டும் என்று தன்னை உருக்கி ஒளிகொடுத்த மெழுகுவர்த்திகளுக்கு சமர்ப்பணம் தங்கள் கட்டுரை.
தங்கள் நாட்டு ஜனநாயகத்தை நினைத்து வேறு எதுவும் கமெண்ட்எழுதமுடியல. சாரி.
sorry maapla .. mobilil irunthu comment.. virivaa karuththu solla mudiyala..
Thanks 4 sharing..
மாப்ள நெஞ்சில் ஈரத்தை ஊற்றெடுக்க வைக்கும் பதிவு!
நண்பா/நீங்கள் அந்த நாளை நினைவு கூர்ந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்.எல்லா தியாகங்களும் செத்துப்போய் விடுமோ என்று ஏக்கமாய் இருக்கு.எங்கள் வரலாறு அழிக்கப்பட்டு வருகிறது.அடையாளச்சின்னங்கள் தரைமட்டமாகிவிட்டது.அதை அழியாமை பாதுகாக்கவேண்டுமென்றால் வரலாற்றை புத்தகமாக வெளியிட வேண்டும்.அடுத்த சந்ததிக்கு இப்படி நடந்தது என்று சொல்ல ஆதாரங்கள் எதுவும் இல்லையே?அங்கங்கள் இழந்தவர்தான் அடையாளங்களாக இருக்கிறது.என்ன செய்ய எல்லாம் ஏக்கங்களாகிவிட்டது...
நம்ம பக்கம் எனது ஆதங்கம் !!
எவர்களுக்காக நாம் கனக்க செய்யவேண்டி இருக்குது......
காலம் வரும் போது பார்போம்....
இல்லது காலத்தை நாம் வசம் ஆக்குவோம்.
//இன்றோ, நாளையோ இறப்போமென நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒருவருக்கோ, உடலெல்லாம் இயக்கமற்று இருக்கும். ஒவ்வோர் நொடிகளையும் அச்சத்துடன் கழிக்க வேண்டும் எனும் ஏக்கம் நிறைந்திருக்கும். ஆனால் இதோ சாகப் போகிறோம் எனச் சந்தோசமாக வழியினப்பும் சூரியனுக்கு கையசைத்து விட்டுச் சென்று சாவார்களே, அவர்களின் இறுதி நிமிடம் வரை மனதில் பயமேதுமிருக்காதாம். //
நெஞ்சை பாதித்த இரத்தின வரிகள் சகோ , ஈழத்தின் வலியை, வல்லமையை , வீரத்தை வலிமையாய் சொல்லிஉள்ளீர்கள் சகோ அருமை
///இலகுவில் ஒப்புவமை கொண்டு வர்ணிக்க முடியாத வேற்றுக் கிரக வாசிகள் அவர்கள். ஓ யார் அவர்கள்! அவர்கள் தான் இன்று வேற்றுக் கிரகத்தில் நிம்மதியாக வாழும் வேற்றுக் கிரக வாசிகள்!////
புலம் பெயர்ந்த தமிழர்களை சொல்லுகிறீர்களா அல்லது வேற்று நாட்டினரையா இல்லை இந்தியாவைய என புரியவில்லை சகோ
அருமையான படைப்பு மனதை நெகிழ்த்தியது
ஈழம் பற்றிய பதிவுகளில் உங்களிடம் வார்த்தைகள் இயல்பாக வந்து விழுகிறது .அந்த வார்த்தைகள் உலுக்குகிறது என்பதே நிஜம்.
நிரூபன்....!
“அவர்கள்“ சாவுக்கு சவால் விட்ட சரித்திர நாயகர்கள். அவர்களின் அர்ப்பணிப்புக்கள் எல்லாம் பலரின் முறையற்ற போக்குகளினால் விணாகிப்போனதுதான் மிகப்பெரிய கொடுமை. “அவர்கள்“ என்றும் போற்றுதலுக்குரியவர்கள்.
தியாகங்கள் தூவப்படும் விதைகள் ......அவை மரமாவதை தடுக்க இயலாது .
இந்திய விடுதலை போராட்டத்தில் பலர் விடுதலை கிடைப்பதை உணராமலேயே உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள் .அது விடுதலை மரத்திற்கு விதையாய் அமைந்தது .அது போல கண்டிப்பாக இங்கும் நிகழும் ...
வலி மிகுந்த வரிகள்
அருமை நண்பா...
இன்று கோடையாய் இருக்கலாம்
குளிர் வரும் ஒரு நாள்
இலங்கையில் ஏது ஜனநாயகம் ?
Painful post
unmaiyana unnarvukal......nenjai thoondiya unarvukal.....kaalam pathilalikum nam kalivkalukum ekangalukum
//ஈழ வானில் தோன்றும் விடிவெள்ளிகளாகவும், நட்சத்திரங்களாவும் மேலிருந்து அவர்கள் ஏக்க விழிகளுடன் பார்த்திருப்பதை அறியாமலல்லவா அவர்கள் பேசுகிறார்கள்.//
அவர்கள் மறைந்து விடவில்லை அவர்களின் உடல் அழிந்தாலும் அவர்களின் ஆத்மா இன்னும் அனைவருடனும் வாழ்ந்து கொண்டு தான் உள்ளது. தனி ஈழம் கிடைக்கும் வரை அவர்களின் ஆத்மா சாந்தி அடையாது.
///இன்று இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லையென பலர் பேசுகிறார்கள். ஆனால் ஈழ வானில் தோன்றும் விடிவெள்ளிகளாகவும், நட்சத்திரங்களாவும் மேலிருந்து அவர்கள் ஏக்க விழிகளுடன் பார்த்திருப்பதை அறியாமலல்லவா அவர்கள் பேசுகிறார்கள்.////"சத்தியம்"!
/////////
இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லையென பலர் பேசுகிறார்கள். ஆனால் ஈழ வானில் தோன்றும் விடிவெள்ளிகளாகவும், நட்சத்திரங்களாவும் மேலிருந்து அவர்கள் ஏக்க விழிகளுடன் பார்த்திருப்பதை அறியாமலல்லவா அவர்கள் பேசுகிறார்கள்.
////////
உண்மைதான்..
தம்முடைய கனவுகள் உன்மையில் ஒரு நாள் விடியும்....
ஏக்க விழிகள் கன்டிப்பாக விடியலைக்காணும்..
//ஆனாலும் நாளை ஓர் சந்ததி நன்றாய் வாழ வேண்டுமென்பதற்காய் தம் வாழ்வைத் துறந்த நவீன முனிவர்கள் அவர்கள்.//
ஆம்! அவர்கள் தியாகம் வீண்போகக் கூடாது!
எம் காவல் தெய்வங்களை வணங்கி வாழ்வோம் !
ம்ம்ம் .. கடந்த ஐந்தாம் திகதி?
உங்களுடன் உணர்வுகளுடன் ஒன்றிக்கிறேன்
ம்ம்ம் .. கடந்த ஐந்தாம் திகதி?
உங்களுடன் உணர்வுகளுடன் ஒன்றிக்கிறேன்
வக்கட்ற்ற தமிழனாய் நிற்கிறேன் கருத்து எதுவும் கூற முடியாமல்
அவசியமான நியாயமான பதிவு பாஸ்
"அவர்களை" மீண்டுமொருமுறை நினைத்து வெம்ப வைத்துவிட்டீர்கள் பாஸ்
//மரணங்கள் மலிந்த பூமி எது என்று கேட்டால், ஈழத்தில் உள்ள இறைவனுக்குப் பேசும் சக்தியிருந்தால் அவன் தன் சுட்டு விரலா தொட்டுக் காட்டுவான் அது ஈழம் தான் என்று//
இறைவனுக்கு சக்தியே இல்லை பாஸ்
அப்புறம் எப்படி பேசும் சக்தி ????
இறைவன் என்று ஒருவன் உண்மையில் இருந்து இருந்தால் நமக்கு ஏன் இந்த நிலை :(
//இன்றோ, நாளையோ இறப்போமென நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒருவருக்கோ, உடலெல்லாம் இயக்கமற்று இருக்கும். ஒவ்வோர் நொடிகளையும் அச்சத்துடன் கழிக்க வேண்டும் எனும் ஏக்கம் நிறைந்திருக்கும். ஆனால் இதோ சாகப் போகிறோம் எனச் சந்தோசமாக வழியினப்பும் சூரியனுக்கு கையசைத்து விட்டுச் சென்று சாவார்களே, அவர்களின் இறுதி நிமிடம் வரை மனதில் பயமேதுமிருக்காதாம்.//
படிக்கும் போதே மெய் சிலுக்குது பாஸ்
மேற்கொண்டு எழுத உயர்ந்த வார்த்தைகளே இல்லை பாஸ்
//இன்று இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இல்லையென பலர் பேசுகிறார்கள்.//
அவர்கள் பேசினால் அது உண்மை என்று ஆகிவிடுமா ???
தமிழன் இருக்கும் வரை மறையாது அவர்கள் புகழ்
உங்கள் பதிவுகளில்
எனக்கு புடிச்ச பத்து பதிவுகளை வரிசை படுத்தினால்
இப்பதிவு முதலாவது முத்து பாஸ்
நாசுக்கான அருமையான வருணனை (இலங்கையின் ஜனநாயக அரசியல்) வெள்ளை வான்
No Comments
பதிவுக்கு மரியாதை மட்டும் செலுத்தி செல்கிறேன்.
painful post brother.
Post a Comment