ஐம்பதாண்டு கால அரசியல்
முதிர்ச்சியின் சுயாதீன
குடும்ப நலன் எனும்
ஆடையினை(த்) தமிழ்
அன்னைக்கு போர்த்தி
அவள் கண்களை
இலவசம் எனும்
பாசக் கயிற்றினால் கட்டி
அதன் மேல்
பிறர் கண்பாடதவாறு
மக்கள் சொத்தினை
வாரிச் சுருட்டி- தன்
மக்கள் வாழ்வு மேம்பட வைத்து
இறுதியில்- கொடுத்தல்
வாங்குதல் எனும்
தர்க்கமானது இலவசங்கள்
வாயிலாக இவரிடமிருந்து
வெளித்தெரிகின்றது
எனும் ஜீரணிக்க
முடியாத உண்மை
மக்கள் மனங்களிற்குத் தெரியவர
ஆசனப் பகுதியில்
இறுக்கி ஒட்டியிருந்த
இலகுவில் கழற்றி எறிந்திட முடியாத
ஆட்சி எனும் கட்டிலிருந்து
தூக்கியெறியப்பட்டார் கலைஞர்!
ஐயாவின் அசைவுகளை
உற்று நோக்கி
எங்கெல்லாம் சறுக்கல்கள் இருக்கிறதோ
அங்கெல்லாம் தன் இரட்டை இலைதனை
பறக்க விட்டு,
கூடவே தோடம்பழத்தின் வாசனையில்
நவீன பெர்ஃபியூம் செய்து,
ஐயா தொடங்கி வைத்ததை
சிக்கெனப் பிடித்து
பழைய கலர் டீவிக்குப் பதிலாக
மிக்ஸி- கிரைண்டர் எனும்
புதிய கார்ட்டூன் வடிவம் கொடுத்து
தன் நிலையினை விளக்கிட
தக்க தருணம் பார்த்திருந்தார் அம்மா!
மக்களை
மந்தை மேய்க்க வைத்தால்
இன்னும் சிறிது காலம்
தான் கட்டிலில் கனிந்து மகிழலாம்
என்பதை உணர்ந்து
கால் நடைகள் வழங்கி,
கல்லூரி மாணவர்களிற்கு
மீள் வடிவம் செய்த
தோடம் பழ இலையின்
நாமம் பொறித்த
லப்டாப் வழங்கி
மாற்று வழியின்றி
மக்கள் அடுத்த மந்திரியாய்
தன்னைத் தெரிவு செய்வார்
என்பதை உணர்ந்து
இடை வெளியில்
தன் இடாம்பீக இடை நகர்த்தி
ஐயாவை வீழ்த்திய
ஆரவாரத்தோடு
ஆட்சியில் நுழைந்தார் அம்மா!
வாக்களித்த உள்ளங்களில்
ஏக்கம் நிறைந்திருக்க- தான்
தமிழன்னையின்
நறு மணம் வீசும்
சரிகை அணியேன்
எனச் சபதமிட்டு;
சட்ட மன்றமெனும்
கட்டிடத்தில்
ஐயாவின் வியர்வை நாற்றம்
இருப்பதால்- அங்கே
கால் வைத்தல் தன்
பெண்மைக்கு இழுக்கென(ப்)
பெருங் கதை பேசினார் அம்மா!
பாட நூல்கள் யாவும்
புரட்டப்பாடது
குப்பையிலே வீசுதல்
தோடம் பழத்தின்
வேர்களுக்கு உரமாகும்
எனும் நினைப்பில்
சமர்ச்சீர் கல்வியின்
சரீரம் கொய்தார்!
கலைஞர் கொண்டு வந்த
கலர் டீவியில்
கொஞ்சம் மெரு கூட்டி
சத்தமின்றி சமச்சீர் எதிர்ப்பு
படம் ஓட்ட நினைத்த
அம்மாவிற்கு
ஆப்பாய் உச்ச நீதிமன்றம்
உணர்வூட்டியிருக்கிறது!
இப்போது கலர் டீவியில்
கருத்து(ப்) படம் தான் ஓடுகிறது,
மக்களிற்கான செயல்களோ
பழைய கறுப்பு வெள்ளை
படம் எனும் நினைப்பில்
புறக்கணிக்கப்படுகிறது;
அடிக்கடி அரங்கத்தை
மகிழ்விக்கும் நகைச்சுவை
இளவல்கள் சீமானும்- வைகோவும்
புதியதோர் தொடருக்காய்
காத்திருக்கிறார்கள் போலும்-
அனல் பறக்கும் பேச்சில்
அம்மா குளிர் தண்ணீர் ஊற்றியதால்
காதில் சீழ் வடிய வைக்கும்
பஞ்சு வசனங்களை
இந் நாளில் எந்த காற்றலையும்
தாங்கி வருவதில்லை!
கலைஞரின் கலர் டீவி
இப்போ அம்மாவின் காலடியில்,
கலைஞர் கை கட்டி
மௌனமாய் நடப்பவற்றை(ப்)
பார்த்திருந்து தன்
பேரனை(க்) களமிறக்கும்
நாளுக்காய் காத்திருக்கிறாரோ- தெரியவில்லை
எவர் மாறினாலும்,
திரையில் தெரிவதென்னவோ
பழைய
கீறல் விழுந்த சீடி தானே!!
பிற் சேர்க்கை: இக் கவிதைக்கு நடுவே வரும் படங்களை சகோதரன் நிகழ்வுகள் வலைப் பதிவின் சொந்தக்காரர் கந்தசாமி அவர்கள் தன் கை வண்ணத்தால் உருவாக்கியிருந்தார்.
எக்குத் தப்பு: என்ன மேலும் கீழும் பார்க்கிறீங்க. இந்தப் பதிவிற்கு மைனஸ் ஓட்டுப் போடலாம் என்று ஆவலுடன் வந்தோமே- ஓட்டுப் பட்டையை யாரோ தூக்கிட்டாங்க என்று தானே;-)))
|
63 Comments:
வடை வடை!
//ஆசனப் பகுதியில்
இறுக்கி ஒட்டியிருந்த
இலகுவில் கழற்றி எறிந்திட முடியாத
ஆட்சி எனும் கட்டிலிருந்து
தூக்கியெறியப்பட்டார் கலைஞர்!
// உண்மை..உண்மை.
//வாக்களித்த உள்ளங்களில்
ஏக்கம் நிறைந்திருக்க- தான்
தமிழன்னையின்
நறு மணம் வீசும்
சரிகை அணியேன்
எனச் சபதமிட்டு;
சட்ட மன்றமெனும்
கட்டிடத்தில்
ஐயாவின் வியர்வை நாற்றம்
இருப்பதால்- அங்கே
கால் வைத்தல் தன்
பெண்மைக்கு இழுக்கென(ப்)
பெருங் கதை பேசினார் அம்மா! // ஹா..ஹா..ஆட்டோ கன்ஃபார்ம்.
//எவர் மாறினாலும்,
திரையில் தெரிவதென்னவோ
பழைய
கீறல் விழுந்த சீடி தானே!!// அது தான் நம்ம தலையெழுத்து அய்யா.
பதிவர் நிரூபன் ,
தமிழக நிருபர் போல
அத்துணை
அரசியலையும்
அசத்தலாய்
அரைத்து
சுய நல
சுய தம்பட்ட
அரசியல்வாதிகளின்
முகத்திரையை
முழுதாய்
தன்
தனித்துவ வர்ர்த்தைகளினால்
விளையாடி இருப்பது
வியாபம்
//
பிற் சேர்க்கை: இக் கவிதைக்கு நடுவே வரும் படங்களை சகோதரன் நிகழ்வுகள் வலைப் பதிவின் சொந்தக்காரர் கந்தசாமி // அருமையான படங்கள்..கந்துக்கு நன்றி.
இண்ட்லியை எங்கேய்யா?
எவர் மாறினாலும்,
திரையில் தெரிவதென்னவோ
பழைய
கீறல் விழுந்த சீடி தானே!!
சரியாகச் சொன்னிர்கள் சகோ.
வாழ்த்துக்கள் அரசியலை சுருக்கி
கவிதையாய்த் தந்தமைக்கு...........
வணக்கம் பாஸ்! ))
//ஐம்பதாண்டு கால அரசியல்
முதிர்ச்சியின் சுயாதீன
குடும்ப நலன் எனும்
ஆடையினை(த்) தமிழ்
அன்னைக்கு போர்த்தி
அவள் கண்களை
இலவசம் எனும்
பாசக் கயிற்றினால் கட்டி
அதன் மேல்
பிறர் கண்பாடதவாறு
மக்கள் சொத்தினை
வாரிச் சுருட்டி- தன்
மக்கள் வாழ்வு மேம்பட வைத்து/// இதுக்கு தானே இப்ப ஒரு ம(க்)கள் உள்ளே போயிருக்கா..))
///மாற்று வழியின்றி
மக்கள் அடுத்த மந்திரியாய்
தன்னைத் தெரிவு செய்வார்
என்பதை உணர்ந்து// உண்மை தானே
///இடை வெளியில்
தன் இடாம்பீக இடை நகர்த்தி// அதுக்குள்ளையும் ஒரு குசும்பு ..))
///அடிக்கடி அரங்கத்தை
மகிழ்விக்கும் நகைச்சுவை
இளவல்கள் சீமானும்- வைகோவும்
புதியதோர் தொடருக்காய்
காத்திருக்கிறார்கள் போலும்-/// ஹிஹிஹி திருமா மற்றும் ராமதாசை தவறவிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்...)
///கலைஞரின் கலர் டீவி
இப்போ அம்மாவின் காலடியில்,
கலைஞர் கை கட்டி
மௌனமாய் நடப்பவற்றை(ப்)
பார்த்திருந்து தன்
பேரனை(க்) களமிறக்கும்
நாளுக்காய் காத்திருக்கிறாரோ///பேரனையும் திகாருக்கு அனுப்பி வைக்கிற பிளானோ ஐயாவுக்கு
///எவர் மாறினாலும்,
திரையில் தெரிவதென்னவோ
பழைய
கீறல் விழுந்த சீடி தானே!!// இருக்கிற அநேகர் தேஞ்சு போன cd தான் ..)
/// இக் கவிதைக்கு நடுவே வரும் படங்களை சகோதரன் நிகழ்வுகள் வலைப் பதிவின் சொந்தக்காரர் கந்தசாமி அவர்கள் தன் கை வண்ணத்தால் உருவாக்கியிருந்தார்.// இலவச விளம்பரம் ..))) ஆனா எல்லாம் அல்ல ரண்டு போட்டோ தான் ...
தமிழின தலைவர்!
எங்கள்
அண்ணன், கருமை நிற கண்ணன், உதய சூரிய மன்னன்,பாராட்டு விழா பல கண்ட பகலவன், சிந்தனை
சிப்பி, சயனைட்டு குப்பி, செயல் வீர சிங்கம் பிரச்சார
பீரங்கி..................ஒருவாரமானாலும் ஏதிரிகளை நேருக்கு நேராக சந்திக்க கூடிய போர் குணம் கொண்டபோர் வாள்!..... எங்கள் கலைஞர் ஐயா அவர்களை போற்றி புகழ்ந்து கவி எழுதிய தங்களுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க நடிகர் சங்கத்தின் சார்பில் கூட்டம் போட்டு கும்மி அடித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது ...வாரீர் வாரீர்
இப்படிக்கு
"டமிலர்களின்" எதிர்கால தலைவி
குஷ்பூ..
தமிழ்நாட்டு அரசியல் தந்திரோபாயங்கள் , செய்திகள், மக்கள் உணர்வுகள் என்பவற்றை தொகுத்து ஒரு கவி வடிவில் உங்கள் தமிழ்நாற்றில் தவழ விட்டுள்ளீர்கள் சகோ அத்தனை வரிகளும் அருமை இடையிடையே கடி , லோல் போன்றனவும் கலந்தமை சிறப்பு
இத்ல ஒரு கூத்து என்னவெண்டால் ஐந்து வருடமும் அம்மா கொடநாட்டில் ஒய்வெடுக்க தாத்தா அம்மா கட்சிக்கு பிரச்சாரம் செய்தார்...!?பின்ன என்னப்பு ஒழுங்கா கட்டி முடிந்திருக்க வேண்டிய ராமர் பாலத்த வைத்து கூத்தடித்தார் ராமன் கடியதா அந்த பாலத்த அவர் எந்த கல்லூரியில் பொறியியல் படித்தார்?போன்ற அதிமுக்கியமான கேள்வி தனக்கு ஒரு கஸ்டம் என்றால் நான் சூத்திரன்னுவார் இதே வேளை சோ சொந்தக்காரன்பார் முக்கிய அரசியல் நிகழ்வுகள் நடக்கும் போது மூன்று மணித்தியாலம் நக்க்மாவின் டான்ஸ் பாப்பார்(வகுறு எரியுது மாப்பிள இந்த காட்டானும் இருக்கிறானே..'?) நாட்டில தனெக்கெதுரா பிரச்சாரம் சூடு பிடித்தா அத திசை திருப்புவதற்காக இராவணன் தழிழன் ராமன் வடக்கெத்தியான்பார் இல்லாவிடில் இந்துவெண்டால் திருடன்பார் நானே கேள்வி நானே பதில் பாணியில் தானே மண்ணல்லி நானே தலையில போடுறன்பார்...!!?ஆனா ஒன்று மாப்பிள யாருட்ட உதவி வாங்கினாலும் தாத்தாட்ட உதவி வாங்க கூடாது அப்படி வாங்கிட்டமோ நெஞ்சுக்கு நீதியிலவரும் காட்டானுக்கு கக்கூசு கழுவ தண்ணியில்லாம தடுமாறேக்க நாந்தான் கடல் அங்க இருக்கு போய் கழுவெண்டு சொன்னான்பார் ..? அதுசரி தாத்தா முதலமைச்சராக இருந்தப்ப கதை வசனம் எழுதிய படத்தை பார்த்தவர்கள் உண்மையிலேயே உலக மகா பொறுமைசாலிகள்...?இப்ப பாருங்க அம்மா பந்து போட முன்னமே விக்கட்டுகள் தானா விழுகுது...?
ஐம்பதாண்டு கால அரசியல்
முதிர்ச்சியின் சுயாதீன
குடும்ப நலன் எனும்
ஆடையினை(த்) தமிழ்
அன்னைக்கு போர்த்தி
அவள் கண்களை
இலவசம் எனும்
பாசக் கயிற்றினால் கட்டி
அதன் மேல்
பிறர் கண்பாடதவாறு
மக்கள் சொத்தினை
வாரிச் சுருட்டி- ......................
பாஸ் அவ்வளவு அரசியல் கேவல்கங்களையும் அள்ளி தெளித்திருக்கிறீர்கள் வரிகளில்
ஆசனப் பகுதியில்
இறுக்கி ஒட்டியிருந்த
இலகுவில் கழற்றி எறிந்திட முடியாத
ஆட்சி எனும் கட்டிலிருந்து
தூக்கியெறியப்பட்டார் கலைஞர்!
மக்களின் சக்தி ஜனநாயகத்தின் வெற்றி சகோதரம்
ஐயாவின் அசைவுகளை
உற்று நோக்கி
எங்கெல்லாம் சறுக்கல்கள் இருக்கிறதோ
அங்கெல்லாம் தன் இரட்டை இலைதனை
பறக்க விட்டு,
கூடவே தோடம்பழத்தின் வாசனையில்
நவீன பெர்ஃபியூம் செய்து,..............
சுத்தி சுத்தி சுப்பெற்ற கொள்ள
அரச்ச மாவ அரைப்போமா துவச்ச துணிய துவைப்போம
சினிமாவிலும் அரசியலிலும் ஒன்றே திரும்பத்திரும்ப நடக்குது
அடிக்கடி அரங்கத்தை
மகிழ்விக்கும் நகைச்சுவை
இளவல்கள் சீமானும்- வைகோவும்
புதியதோர் தொடருக்காய்
காத்திருக்கிறார்கள் போலும்-
அனல் பறக்கும் பேச்சில்.............
சிலபேர் எதிர்ப்பு அரசியல் நடத்தினால் தான் நிலைக்க முடியும் அரசுடன் சேர்ந்தால் இருக்கிற இடமே தெரியாது இலங்கையில் ஜே வி பி க்கு நடந்தது போல
கலைஞரின் கலர் டீவி
இப்போ அம்மாவின் காலடியில்,
கலைஞர் கை கட்டி
மௌனமாய் நடப்பவற்றை(ப்).............
கள்ளன் நடிக்கிறான் இல்லாட்டி சிறைக்க எல்லோ போடுவா அம்மா
பேரனை(க்) களமிறக்கும்
நாளுக்காய் காத்திருக்கிறாரோ- தெரியவில்லை
சந்தேகம் வேண்டாம் இதுதான் நடக்கும்
ஆசனப் பகுதியில்
இறுக்கி ஒட்டியிருந்த
நிருபன் உண்மையில் இந்ந்த வரிகள் உங்களைப்பற்றி நிறையவே சொல்லுகின்றது
ஒரு அனுபவப்பட்ட ஆழமாக அரசியலை உணர்சிகளுக்கு இடம்கொடுக்காமல் டிசெண்ட்ட விமர்சிக்கின்ற ஒருவரிடம் இருந்து வரக்கூடிய வரி .
தமிழில் கீழ்த்தரமான சொல் மட்டுமன்றி தரமான சொல்லும் நையாண்டி செய்ய பயன்படுத்தலாம் என்பதை சொல்லிநிக்கிறது இந்த வரிகள்
அந்த சீடில இருந்து கத்துக்க வேண்டியது நெறைய விஷயங்கள் இருக்கு மாப்ள....அட்டகாசமான பதிவு!
சகோதரா!உண்மையைச்சொல்...
நீ இருப்பது ஈழத்திலா?தமிழகத்திலா?
எங்கள் இழி நிலையை இதை விட யாரும் உரைத்திட முடியாது.
தமிழ்த்தாய் உனக்கு சகல சவுபாக்கயங்களையும் வழங்கட்டும்.
அரசியல் நிலவரத்தை கவிதையாக சொல்லி அசத்திவிட்டீர்கள்
>>எக்குத் தப்பு: என்ன மேலும் கீழும் பார்க்கிறீங்க. இந்தப் பதிவிற்கு மைனஸ் ஓட்டுப் போடலாம் என்று ஆவலுடன் வந்தோமே- ஓட்டுப் பட்டையை யாரோ தூக்கிட்டாங்க என்று தானே;-))
hi hi எகத்தாளம்?
வரிகள் அருமை.
போங்க பாஸ்..........!
நீங்க என்னமா கலக்கிறீங்க.
சூப்பர்.
// எவர் மாறினாலும்,
திரையில் தெரிவதென்னவோ
பழைய
கீறல் விழுந்த சீடி தானே!!//
சகோ
ஆட்சி மாறினாலும் காட்சி மாறா
பதிய மொந்தை பழைய கள்ளு
எதிர் பார்த்த ஒன்றுதான்
என்வரையிலே ஏமாற்றமில்லை
இனி,கீறல் கீறல் கீறல் மட்டுமே
தெரியும் எப்படியோ
தங்கள் பதிவு ஐந்து ஆண்டுகள்
வாழ்க்கை பாடத்திலே மனப்பாட
பகுதி யாகும்
தொடரட்டும் இத் தொண்டு
புலவர் சா இரமாநுசம்
சரியாகச் சொன்னீர்கள் ஓட்டு வாக்கியாச்சு இனி என்ன பன்னுவாங்க மாத்திமாத்தி அரச பணம் செலவுதான்
கவிதை நல்லாக இருக்கிறது.
நல்ல பதிவு. படங்கள் அருமை.. நையாண்டி கொஞ்சம் இருக்குதுங்க..
என்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க
அனல்பறக்கும் வசனங்களை கேட்கவே முடியவில்லைதான்.ஆமா.. பாராட்டுவிழா நடாத்தினாங்களே..!!! என்னப்பா ஆச்சு??!!!!
அழகான படம் தந்த நண்பர் கந்தசாமிக்கு ஒரு ஓ போடுவம்!
நண்பா சென்னை விமான நிலையத்தில் நிரூபன் ஒரு வலைப்பதிவாளர் என்று தயவு செய்து சொல்லிவிடாதீர்கள் பானும் பருப்பும் நிச்சயம் கண்மணிகள் தந்துவிடுவார்கள்.
கவிதை இவ்வளவு பெரிசா எழுத முடிமா ???????????????
மாப்ளே! தமிழக நிலைமையை புட்டு புட்டு வச்சிருக்கிங்க.... சூப்பர் தல...
//எவர் மாறினாலும்,
திரையில் தெரிவதென்னவோ
பழைய
கீறல் விழுந்த சீடி தானே!!//
அழகாகச் சொன்னீர்கள்!
கந்தசாமியின் படங்கள் அருமை.
தமிழக அரசியலை எளிமையாக கவிதையில் விளாசி விட்டீர்களே !
நண்பா ஒரு இடைவெளி விட்டு விச்வரூபமாய் வந்திருக்கிறீர்கள்..
வித்தியாசமான சிந்தனையில் உருவாகியுள்ள காவிதை அருமை நண்பரே,,
வித்தியாசமான சிந்தனையில் உருவாகியுள்ள காவிதை அருமை நண்பரே,,
//எவர் மாறினாலும்,
திரையில் தெரிவதென்னவோ
பழைய
கீறல் விழுந்த சீடி தானே!!//
Super!! :-)
வார்த்தைகள் விளையாடி இருக்கிறது இந்தக் கவிதையில்..
வாழ்த்துக்கள்..
நல்ல வடிவான கவிதை!நல்லா எழுதுறியள்!கங்கிராசுலேஷன்!!!!!
///என்ன மேலும் கீழும் பார்க்கிறீங்க. இந்தப் பதிவிற்கு மைனஸ் ஓட்டுப் போடலாம் என்று ஆவலுடன் வந்தோமே- ஓட்டுப் பட்டையை யாரோ தூக்கிட்டாங்க என்று தானே;-)))///அதான,நிரூபனா கொக்கா???????
கலைஞர் கை கட்டி
மௌனமாய் நடப்பவற்றை(ப்)
பார்த்திருந்து தன்
பேரனை(க்) களமிறக்கும்
நாளுக்காய் காத்திருக்கிறாரோ- தெரியவில்லை???????/////இன்னுமா இந்த ஒலகம் நம்பள நம்புது?
ஆட்சி எனும் கட்டிலிருந்து
தூக்கியெறியப்பட்டார் கலைஞர்! //
ஓ.. இத சொல்ல தான் இந்த முக்கு முக்குனியா மாப்பு.. ஹி ஹி..
தன் நிலையினை விளக்கிட
தக்க தருணம் பார்த்திருந்தார் அம்மா!//
யாரு உங்க அம்மாவா.!? யோவ்.. எல்லாரும் தான் அவுகள அம்மானு சொன்னா நீயுமா.!?
மக்கள் அடுத்த மந்திரியாய்
தன்னைத் தெரிவு செய்வார்
என்பதை உணர்ந்து//
ஜெ., ஆட்சிக்கு வந்ததும் ஏதோ சாதித்தது போல கூச்சலிட்டவர்களின் நீங்களும் ஒருவர் என்று என் நினைவுகள் சொல்கிறது..
ஐயாவின் வியர்வை நாற்றம்
இருப்பதால்- //
இது புது விடயமா இருக்கே.!! எங்கள் கலைஞர் வியர்வை சிந்த உழைத்தாரா.!?
எவர் மாறினாலும்,
திரையில் தெரிவதென்னவோ
பழைய
கீறல் விழுந்த சீடி தானே!!//
இலங்கைக்கு போடு டா அணுகுண்டை..
எங்கள் தானே தமிழ்தலைவரை கலாய்த்திருப்பது சரியில்ல.. கண்டனங்கள்..ஹி ஹி... கவிதை என்று சில உருத்தலாக இருந்தாலும் கன்டன்ட் இங்கு உள்ள நியூஸ் எல்லாத்தையும் வாயில போட்டு கப்புனு துப்பியிருக்க மக்கா.. ம்ம்.. நல்லா தான் இருக்கு..
//கலைஞரின் கலர் டீவியில் ஜெயலலிதாவின் கருத்துப் படம்! //
தலைப்பே சுப்பரா இருக்கே பாஸ்
//மக்கள் சொத்தினை
வாரிச் சுருட்டி- தன்
மக்கள் வாழ்வு மேம்பட வைத்து//
நிஜ வரிகள் பாஸ்
இந்த தாத்தா அரியானை இழக்க முக்கிய காரணமே இதுதான்
//ஆட்சி எனும் கட்டிலிருந்து
தூக்கியெறியப்பட்டார் கலைஞர்!//
இனி உயிரை பணயம் வைத்தால் கூட வர முடியாதா இடத்துக்கு தூக்கி எறியப்பட்டு உள்ளார்
பாவம் தாத்தா
சூப்பர் கவிதை பாஸ்,
கவிதைக்கு பொய்தான் அழகு என்று சொல்லுவார்கள்,
சில நேரங்களில் கவிதைக்கு மெய்யும் அழகாகத்தான் இருக்கு,
உங்களின் இந்த கவிதை போல்,
வாழ்த்துக்கள் பாஸ்
மக்களை
மந்தை மேய்க்க வைத்தால்
இன்னும் சிறிது காலம்
தான் கட்டிலில் கனிந்து மகிழலாம்.-இதுதான் உன்மை
கவிதை அட்சர சுத்த தமிழக அரசியல்.அங்கே இருந்துகிட்டே இப்படின்னா தமிழகத்துக்குள்ளே இருந்தா:)
Post a Comment