ஒரு பெண் தாய்மை நிலையினை அடையும் போது, சத்தான உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும். அப் பெண்ணைக் கண் கலங்காது பராமரிக்க வேண்டும் என்று எம் தமிழ் மரபு வழி பெரியோர்கள் சொல்லுவார்கள். இதுவே யதார்த்தமும் கூட.
சில ஆண்கள் பெண் கர்ப்பமாகிய பின்னர், அவளை தாய் வீட்டிற்கு(மாமியார்) வீட்டிற்கு அனுப்பிடுவார்கள். இன்றைய இயந்திர வேகமான உலகில் மாமியார் வீட்டிற்கு மனைவியை அனுப்ப முடியாத கணவன்களின் கையில் உள்ள மிகப் பெரிய பொறுப்புத் தான் ‘கர்ப்பிணிப் பெண்ணைக் கண் கலங்காது பாராமரிக்க வேண்டிய பொறுப்பு.
கர்ப்பிணிப் பெண்ணைக் கண் கலங்காது பராமரிக்க நிறைய வழிகள் இருப்பதாக அனுபவம் மிக்க பெரியோர்கள் சொல்கிறார்கள். ஆனால் தன் ஆசை நாயகி விரும்பிக் கேட்கும் உணவு வகைகளைச் சமைத்தும், வயிற்றுப் பிள்ளத் தாச்சியைக் கொண்டு அதிகளவான வேலைகளைச் செய்விக்காதும் இருப்பதற்கு ஆண்கள் சமையலில் பங்கெடுத்தல் அவசியமான ஒரு செயல் தானே.
ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கும் போது, பிள்ளை பெற்ற பின்னரும் நீங்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டிய ஓர் உணவினை எப்படிச் சமைப்பது என்று தான் இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.
சரக்கு அரைச்சுக் காய்ச்சுவது எப்படி!
ஈழத்தில் குடற் புண், வயிறு எரிவு, வயிற்று நோவு, மற்றும் உள் காயங்கள் உள்ளோருக்கும், பிள்ளை பெற்றிருக்கும் பெண்களுக்கும் உட் காயங்களை ஆற்றிடவும்,
வயிற்றில் எரிவினை உண்டாக்காது மிளகாய்க்குப் பதிலாக- வயிற்றினைக் குளிரிவிக்கும் நோக்கில் சமைத்துப் பரிமாறும் ஓர் கூட்டுக் கலவை தான் இந்த அரைச்சு காய்ச்சும் கறி.
தேவையான பொருட்கள்:
*மூன்று ஸ்பூன் மல்லி (3 Small Spoon)
*சின்னச் சீரகம்/ சிறிய சோம்பு- அரை ஸ்பூன்(அதிகமாக போட்டால் கசப்புச் சுவை உருவாகும்)
*பெரிய சீரகம்/ பெரிய சோம்பு- அரை கரண்டி அளவு
* நான்கு, அல்லது ஐந்து மிளகு
*ஒரு செத்தல் மிளகாய்- One Dry Red Chill
*சிறிய துண்டு பூண்டு/ உள்ளி
*சிறிய துண்டு இஞ்சி
*மஞ்சள் கட்டை தேவையான அளவு- சிறிதளவு போதும்.
இனிச் செய் முறை:
*மேலே தரப்பட்ட பொருட்களினை மிக்ஸியில் அல்லது அம்மியில் கொட்டி, அரைக்கத் தொடங்கவும்.
*உள்ளியினையும், இஞ்சியினையும் இறுதியாகச் சேர்த்து அரைக்கவும்.
*உள்ளி, இஞ்சியினைச் சேர்த்து அரைக்கும் போது சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
*இப்போது களித் தன்மையுடைய கூட்டு மிக்ஸியில்/அம்மியில் தயாராகியவுடன், அதனை எடுத்துப் ஒரு குவளையில் போட்டு வைக்கவும்.
*பழப் புளியினை பிறிதோர் குவளையில் சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். வயிற்றில் புண் உள்ளோர், உட் காயங்கள் உள்ளோர் பழப் புளியினைத் தவிர்ப்பது நல்லது.
*இனி ஏற்கனவே அரைத்த களித் தன்மையுடை கூட்டுக் கலவையினை, பழப் புளிக் கலவையோடு மிக்ஸ் பண்ணவும். (ஓரளவு தண்ணிப் பருவமாக)
*சிறிய வெங்காயம், கறி சமைப்பதற்காக சிறிய, சிறிய துண்டுகளாக வெட்டிய மீன், உப்பு முதலியவற்றோடு, இந்தக் கலவையினையும் சேர்த்து, பத்து நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
*கொதித்துக் கறிப் பருவம் வந்தவுடன் இறக்கி லேசான சூட்டோடு பரிமாறவும்.
முக்கிய விடயம்: அரைக்கப்பட்ட கூட்டுக் கலவையோடு, நீங்கள் மீனுக்குப் பதிலாக முருங்கைக் காயினை அவித்துச் சேர்க்கலாம்.
அல்லது இந்தக் கலவையானது கொதித்து வருகையில் முட்டையினை உடைத்துச் சேர்க்கலாம்.
அல்லது- அவித்த உருளைக் கிழங்கினையும் சேர்த்துச் சமைக்கலாம்.
இப்போது அரைத்துக் காய்ச்சும் கூட்டுக் கலவைக் கறி தயார். உங்கள் மனைவிக்கோ அல்லது காதலிக்கோ நீங்கள் சமைத்துப் பரிமாறி மகிழலாம்.
*உங்கள் கவனத்திற்கு: வயிற்றில் புண் உள்ளோர், பிள்ளை பெற்ற தாய்மார், பழப் புளியினைத் தவிர்ப்பது நல்லது.
*உங்கள் கவனத்திற்கு: வயிற்றில் புண் உள்ளோர், பிள்ளை பெற்ற தாய்மார், பழப் புளியினைத் தவிர்ப்பது நல்லது.
இந்தச் சமையற் குறிப்பில் சந்தேகம் ஏதாவது இருந்தால், கேளுங்கள் நண்பர்களே.
|
73 Comments:
அரைச்சு காய்ச்சும் கறி எனக்கே.
மாமியார் வீட்ல என்னன்னமோ அரைச்சு ஊத்துனாங்க..அது இதானான்னு தெரியலையே..
நிரூவுக்கு எப்படி இது தெரியும்...டவுட்டு!
நிரூவுக்கு எப்படி இது தெரியும்...டவுட்டு!
எனக்கும் அதே டவுட்டுதான்......
நிரூவுக்கு எப்படி இது தெரியும்... டவுட்டு!>>>>>
ஹி..ஹி.. எனக்கும் அதே டவுட்டு
நல்ல பகிர்வு நிரு...
நல்ல விடயம் சொல்லுறீங்க பாஸ் .இப்போது எல்லாம் அரைக்கிறகாலம் இல்லை எல்லாம் ரெடிமட்டாக பல்பொருள் அங்காடியில் வருகிறது. நேரம் போதவர்களுக்கு சரி உண்மையில் ஈழத்தில் இது சாத்தியமாக இருந்தகாலம் ஒரு காலம் இப்போது அம்மிக்கல் ஏது என்றே தெரியாத ஒரு சந்ததி வளருவதாக ஒரு தளத்தில் படித்தேன் பாஸ் நாம் போகும் பாதை இது தானா என்ற கவலை.!
ஹீ ஹீ எனக்கும் டவுட்டுவ் மாப்பூ!
வெளிநாடுகளில் மாமியார் வீட்டை அனுப்ப முடியாது!
வெளிநாடுகளில் வசிக்கும் எம்மை போன்ற பலருக்கு மாமியார் வீடும் இல்லை தாய் வீடும் இல்லை
எனவே எங்கள் ஆசை மனைவியை நாங்களே பார்த்துக்கொள்ள அருமையான தகவலை தந்துள்ளீர்கள் சகோ
வாழ்க வளர்க தங்கள் சேவை /
அண்ணன் நல்ல அனுபவசாலிப்ப
////akulan said...
நிரூவுக்கு எப்படி இது தெரியும்...டவுட்டு!
எனக்கும் அதே டவுட்டுதான்......
/// இதில என்ன டவுட்டு எல்லாம் அனுபவம் தான் ஹிஹிஹி
///அப் பெண்ணைக் கண் கலங்காது பராமரிக்க வேண்டும் என்று எம் தமிழ் மரபு வழி பெரியோர்கள் சொல்லுவார்கள்.// அப்போ முக்கியமா வெங்காயம் நறுக்க விடக்கூடாது ))
சில ஆண்கள் பெண் கர்ப்பமாகிய பின்னர், அவளை தாய் வீட்டிற்கு(மாமியார்) வீட்டிற்கு அனுப்பிடுவார்கள். // நீங்க வேற பாஸ் , இப்ப வெளிநாட்டில தன் மனைவி கர்ப்பமானால் உடனே கணவன் மாமியாரை வரவைக்கிறார்.... ஹும் கட்டி குடுத்தா எப்புடி எல்லாம் கஸ்ரப்படனும் எண்டு பாருங்கோவன்.. சீதனமும் வேண்டிப்போட்டு மனைவியை பார்த்துக்க மாமியாரையும் வேலைக்கு அழைக்கிறான் கணவன் ...தலையில இடி விழ ..........
///சரக்கு அரைச்சுக் காய்ச்சுவது எப்படி! // சரக்குன்னா என்ன ..))
///இந்தச் சமையற் குறிப்பில் சந்தேகம் ஏதாவது இருந்தால், கேளுங்கள் நண்பர்களே. // ஆமா, இதை கணவனும் சாப்பிடலாமா ..?? ஹிஹிஹி
நல்லதொரு பகிர்வு.நன்றி சகோதரரே. ஒரு சின்ன சந்தேகம் பழப்புளி சேர்த்தல் என்பது நாவுக்கு சுவையானதாக இருந்தாலும் இந்த
நேரத்தில் சேர்த்துக்கொள்ளல் உடம்புக்கு கெடுதி என்கின்றார்களே இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?.........
நன்றி சகோ பகிர்வுக்கு.
vaav.. வாட் எ டச்சிங்க் போஸ்ட்.
அண்ணன் 'டச்சிங்'கா பதிவு போடுறான்!
:-)
லேடிஸ் சென்டிமென்ட் தூக்குது.. உங்க பொண்டாடி குடுத்துவச்சவா மாப்பு..
//செங்கோவி said...
நிரூவுக்கு எப்படி இது தெரியும்...டவுட்டு!//
என்ன இப்புடிக் கேட்டுப் புட்டீக..
அண்ணன் நல்லவரு... வல்லவரு....நாலும் தெரிஞ்சவரு.! :-)
@செங்கோவி
அரைச்சு காய்ச்சும் கறி எனக்கே//
ஆமா, சந்தேகம இல்லை, ஆனால் உப்பு அதிகமாக இருக்கா என்று நீங்க தான் செக் பண்ணிக்கனும்,
@செங்கோவி
மாமியார் வீட்ல என்னன்னமோ அரைச்சு ஊத்துனாங்க..அது இதானான்னு தெரியலையே..//
சில வேளை அது இதுவாகவும் இருக்கலாமில்லே.
எதுக்கும் ஒருவாட்டி நோட் பண்ணி நீங்கள் செய்து பாருங்க.
@செங்கோவி
நிரூவுக்கு எப்படி இது தெரியும்...டவுட்டு!//
இதிலை என்ன டவுட், ப்ளாக்கிலை இப்படி ஓர் சமையற் குறிப்பு வேண்டும் என ஓட்ட வடை நாராயணன் தான் விண்ணப் வைத்தார். உடனே என் அம்மாவிடம் கேட்டு எழுதிய குறிப்புத் தான் இது.
இது இப்போது ஓட்ட வடை நாராயணண் அவர்களுக்கு சிட்டிவேசனுகேற்றாற் போல அவசியமான குறிப்பு.
@akulan
நிரூவுக்கு எப்படி இது தெரியும்...டவுட்டு!
எனக்கும் அதே டவுட்டுதான்......//
நெசமாவா பாஸ், இது என் அம்மா சொல்லிக் கொடுத்த குறிப்பு. அதனைத் தான் பதிவேற்றியுள்ளேன்.
@தமிழ்வாசி - Prakash
நல்ல பகிர்வு நிரு...//
நன்றி பாஸ்,
@Nesan
நல்ல விடயம் சொல்லுறீங்க பாஸ் .இப்போது எல்லாம் அரைக்கிறகாலம் இல்லை எல்லாம் ரெடிமட்டாக பல்பொருள் அங்காடியில் வருகிறது. நேரம் போதவர்களுக்கு சரி உண்மையில் ஈழத்தில் இது சாத்தியமாக இருந்தகாலம் ஒரு காலம் இப்போது அம்மிக்கல் ஏது என்றே தெரியாத ஒரு சந்ததி வளருவதாக ஒரு தளத்தில் படித்தேன் பாஸ் நாம் போகும் பாதை இது தானா என்ற கவலை.!//
சகோ நேசன், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி, நீங்கள் என் பதிவினைத் தவறாகப் புரிந்து விட்டீங்க. நான் சொல்வது இந்த அரைச்சுக் காய்ச்சும் முறையினை அம்மியில் அல்லது மிக்ஸியிலும் அரைத்துச் சமைக்கலாம் என்று.
பதிவில் அதனைத் தான் குறிப்பிட்டிருக்கிறேன். இப்போது அம்மிக்குப் பதிலாகப் பல இடங்களில் மிக்ஸியைத் தான் உபயோகிக்கிறார்கள். எனக்கு நெருங்கிய உறவினர் ஒருவரும் வெளி நாட்டில் இந்தக் குறிப்பினை என் அம்மம்மாவிடம் கேட்டு, சமைத்து உண்டதாக என் அம்மம்மா சொல்லியிருக்கிறா.
@Nesan
வெளிநாடுகளில் மாமியார் வீட்டை அனுப்ப முடியாது!//
நானும், வெளி நாட்டில் மாமியார் வீட்டிற்கு அனுப்ப முடியாதோருக்காகத் தான் இந்தச் சமையற் குறிப்பினைப் பகிர்ந்திருக்கிறேன்.
@Mahan.Thamesh
வெளிநாடுகளில் வசிக்கும் எம்மை போன்ற பலருக்கு மாமியார் வீடும் இல்லை தாய் வீடும் இல்லை
எனவே எங்கள் ஆசை மனைவியை நாங்களே பார்த்துக்கொள்ள அருமையான தகவலை தந்துள்ளீர்கள் சகோ
வாழ்க வளர்க தங்கள் சேவை ///
நன்றி சகோ.
@Mahan.Thamesh
அண்ணன் நல்ல அனுபவசாலிப்ப//
அடிங் கொய்யாலா....எனக்கு அனுபவம் ஒன்றும் இல்லை. எல்லாம் உங்களின் நன்மை கருதித் தான் அம்மாவிடம் கேட்டு எழுதிய குறிப்பு(((((:
@கந்தசாமி.
//அப் பெண்ணைக் கண் கலங்காது பராமரிக்க வேண்டும் என்று எம் தமிழ் மரபு வழி பெரியோர்கள் சொல்லுவார்கள்.// அப்போ முக்கியமா வெங்காயம் நறுக்க விடக்கூடாது ))//
ஆளைப் பாரு, ஐடியா கொடுக்கிறாரு..
ஹி....
ஹி....
@கந்தசாமி.
நீங்க வேற பாஸ் , இப்ப வெளிநாட்டில தன் மனைவி கர்ப்பமானால் உடனே கணவன் மாமியாரை வரவைக்கிறார்.... ஹும் கட்டி குடுத்தா எப்புடி எல்லாம் கஸ்ரப்படனும் எண்டு பாருங்கோவன்.. சீதனமும் வேண்டிப்போட்டு மனைவியை பார்த்துக்க மாமியாரையும் வேலைக்கு அழைக்கிறான் கணவன் ...தலையில இடி விழ .........//
ஆஹா....அண்ணன் அனுபவசாலி போல இருக்கே.
@கந்தசாமி.
///இந்தச் சமையற் குறிப்பில் சந்தேகம் ஏதாவது இருந்தால், கேளுங்கள் நண்பர்களே. // ஆமா, இதை கணவனும் சாப்பிடலாமா ..?? ஹிஹிஹி//
ஆமா பாஸ், பதிவில் சொல்லியிருக்கேன் தானே,
வயிற்றில் புண் உள்ள அனைவரும் சாப்பிடலாம்,
ஆப்பிரேசன் பண்ணி இருப்போருக்கு உட் காயத்திற்குச் சிறந்த மருந்து.
@கந்தசாமி.
///சரக்கு அரைச்சுக் காய்ச்சுவது எப்படி! // சரக்குன்னா என்ன ..))//
இது வேறை சரக்கு, சரக்கு என்பது வணிகக் கல்வியில் சின்ன வயசிலை படிக்கலை. ஒரு தொகுதி தானியங்களை/ பொருட்களைக் குறிக்கும் சொல்..
எப்ப பார்த்தாலும் அதே நினைப்பிலை இருக்காங்களே;-)))
@அம்பாளடியாள்
நல்லதொரு பகிர்வு.நன்றி சகோதரரே. ஒரு சின்ன சந்தேகம் பழப்புளி சேர்த்தல் என்பது நாவுக்கு சுவையானதாக இருந்தாலும் இந்த
நேரத்தில் சேர்த்துக்கொள்ளல் உடம்புக்கு கெடுதி என்கின்றார்களே இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?.........
நன்றி சகோ பகிர்வுக்கு.//
ஆமாம், சகோ, வயிற்றில் புண் உள்ளோர் பழப் புளியினைத் தவிர்ப்பது நல்லது என்று அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன், பழப் புளி காயத்தினை அரிக்கும் தன்மை கொண்டதாம்.
ஆகவே குறிப்பில் ஒரு சிறிய திருத்தத்தினை மேற் கொள்கிறேன்,
தவறினைச் சுட்டிக் காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி.
@சி.பி.செந்தில்குமார்
vaav.. வாட் எ டச்சிங்க் போஸ்ட்.//
நன்றி பாஸ்.
@ஜீ...
அண்ணன் 'டச்சிங்'கா பதிவு போடுறான்!
:-)//
ஏன் ஐயா, இது தங்களுக்கும் யூஸ் புல்லாக இருக்கா;-))
நேற்று தான் நேமிசாக்கு லாவடிச்சிங்க இன்னிக்கு கற்பமாயிட்டாங்களா
நிக்காத மட்டும் தான் தொட்டதா சொன்னிங்களே
சரி சரி சாவே பண்ணி வைப்பம் பினால எங்களுக்கும் உதவும்
@Ashwin-WIN
லேடிஸ் சென்டிமென்ட் தூக்குது.. உங்க பொண்டாடி குடுத்துவச்சவா மாப்பு..//
அவ்....இன்னும் கலியாணமே ஆகலை மச்சி..
அதுக்குள் இப்படிச் சொல்லுறீங்களே.
நன்றி! நன்றி!
@கவி அழகன்
நேற்று தான் நேமிசாக்கு லாவடிச்சிங்க இன்னிக்கு கற்பமாயிட்டாங்களா
நிக்காத மட்டும் தான் தொட்டதா சொன்னிங்களே
சரி சரி சாவே பண்ணி வைப்பம் பினால எங்களுக்கும் உதவும்//
அடப் பாவி, நீங்க இப்புடியெல்லாம் யோசிக்கிறீங்களே, இது நேமிசாவிற்குரிய குறிப்பு அல்ல.
எல்லோருக்கும் பொதுவான குறிப்பு.
ஹி...ஹி..
//இந்தச் சமையற் குறிப்பில் சந்தேகம் ஏதாவது இருந்தால், கேளுங்கள் நண்பர்களே.//
எங்களை பார்த்தால் உனக்கு சமையல் செயற மாதிரி தெரியுதா பிச்சி புடுவேன் ராஸ்கல் #ஹி ஹி எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு
என்னமோ போங்க பாஸ்......! நல்ல நல்ல பதிவா போடுறீங்க. நாங்க எல்லாம் எண்ண பண்ணுறது!!
@சசிகுமார்
//இந்தச் சமையற் குறிப்பில் சந்தேகம் ஏதாவது இருந்தால், கேளுங்கள் நண்பர்களே.//
எங்களை பார்த்தால் உனக்கு சமையல் செயற மாதிரி தெரியுதா பிச்சி புடுவேன் ராஸ்கல் #ஹி ஹி எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு//
அவ்...சும்மா ஒருவாட்டி பண்ணிக் கொடுங்களேன் பாஸ்,
உங்க சமையற் திறமையினை வியந்து உங்க வீட்டுக்காரி பாராட்ட வேணாமா என்ன;-))
@மருதமூரான்.
என்னமோ போங்க பாஸ்......! நல்ல நல்ல பதிவா போடுறீங்க. நாங்க எல்லாம் எண்ண பண்ணுறது!!//
இப்போ அவசரம் இல்லை, நோட் பண்ணி வைச்சு, அப்புறமா சமைச்சு கொடுங்க.
பாருங்கப்பா மாப்ளைக்கு கல்யாண நெனப்பு வந்துருச்சி ஹிஹி!
அடக் கடவுளே.. இப்போ சமையல் குறிப்பு, லேடீஸ் ஸ்பெஷல் எனத் தொடங்கிட்டினமே சகோஸ்ஸ்ஸ்ஸ்:))). ஏன் எழுத வேறெதுவும் கிடைக்கேல்லையோ?:))))... சரி சரி முறைக்காதீங்க கர்ர்ர்ர்:)).
இனிமேல் காலத்தில, மனைவியை மாமி வீட்டுக்கு அனுப்பிப்போட்டு, சொகுசா இருந்து புளொக் எழுதலாம், நேமிசாவுக்கு கவிதை சொல்லலாம் என்றெல்லாம் கனவு காணாதீங்க:))... அதெல்லாம் சரிப்பட்டு வராது...
ஒழுங்கா மனைவிக்குச் சமைத்துக் கொடுப்பது எப்பூடி என, சமைக்கப் பழகுங்க இப்பவே... மீ வழமைபோல் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).
சமையல் செய்யலாம். பொண்டாட்டிக்கு எங்க போறது? # பேச்சுலர் டவுட்டு.
மகளிர் ஸபெஷல்....
வந்தேன்...
நல்ல விஷயம்!காலையில் தான் பார்க்க முடிந்தது.இருந்தாலும் விவகாரமாக இருக்கும் போலிருக்கிறதே?ஆசை நாயகி........?!///ஆனால் தன் "ஆசை நாயகி" விரும்பிக் கேட்கும்...///
பையனுக்கு "அந்த" ஆசை வந்து விட்டது போலிருக்கிறது!ரஜீவனுக்கும்,மைந்தனுக்கும் அறிவிக்க வேண்டும்!
கந்தசாமி. said...
////akulan said...
நிரூவுக்கு எப்படி இது தெரியும்...டவுட்டு!
எனக்கும் அதே டவுட்டுதான்..... /// இதில என்ன டவுட்டு எல்லாம் அனுபவம் தான் ஹிஹிஹி§§§§§§அடப்பாவி! சொல்லவேயில்ல???????????????
ஜீ... said...
//செங்கோவி said... நிரூவுக்கு எப்படி இது தெரியும்...டவுட்டு!//
என்ன இப்புடிக் கேட்டுப் புட்டீக..
அண்ணன் நல்லவரு... வல்லவரு....நாலும் தெரிஞ்சவரு.! :-)///நல்லவரு,வல்லவரு,நாலும் தெரிஞ்சவரா?ரைட்டு!!!!!!!!!!!!!!!!
//இந்தச் சமையற் குறிப்பில் சந்தேகம் ஏதாவது இருந்தால், கேளுங்கள் நண்பர்களே.//
எங்களை பார்த்தால் உனக்கு சமையல் செயற மாதிரி தெரியுதா பிச்சி புடுவேன் ராஸ்கல் #ஹி ஹி எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு ///
அட இப்படிகூட சமாளிக்க முடியுமா?
மாப்பிள முழுகாம இருக்கியா ?
அரைப்பதற்கான நாள் கூலி 350 ல் இருந்து 500 ரூபா வரை போகுதுப்பா...
நம்மளுக்கும் தேவைப்படும் தானே அப்ப கூப்பிடுறன் ஒரு எட்டு எட்டி வந்து அரைச்சுத் தந்திட்டு போ....
எங்கப்பா தமிழ் மணம்...
ஆஹா! என்ன ஒரு பாசத்தோட கூட சமையல் குறிப்பு.
ஆஹா! என்ன ஒரு பாசத்தோட கூட சமையல் குறிப்பு.
அநேகருக்கு ஒரே டவுட்டு வந்திருக்குது!அவ்ர்களுக்கெல்லாம் தெரியாதா,நிரூ சகல கலா வல்லவர் என்பது!
நல்ல அறிவுரை கூடிய பதிவு!
நிரூ, நீங்க எந்த நூற்றாண்டி இருக்கிறீங்க?? நான் கர்ப்பமாக இருந்த போது என் கணவரையும் பார்த்து, என்னையும் கவனித்துக் கொண்டேன். என் கணவருக்கு இந்த வேலைகள் எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. கடைசி ஒரு வாரம் முன்பு அம்மா வந்தார்கள். ஆனால், அவர்களுக்கு வேலை வைக்க கூடாது என்று நானே என் கணவரின் வேலைகளை கவனித்துக் கொண்டேன். இதைப் பார்த்து ஒரு ஆணாவது மனைவிக்கு உதவியாக இருந்தால் நல்லதே.
( Now your blog is as fast as before )
மகளிர் மட்டும்
மாப்பிள்ளை தயாராகிட்டிங்க போல இருக்கே
வரப்போற சகோதரி ரொம்ப கொடுத்துவச்சவங்க
ரசனையான பதிவு..........
மனமும் வயிறும் குளிர்ந்தது சகோ
எனக்கு இனி தேவையில்லை இந்தக் குறிப்பு. உங்கள் அம்மாவின் மருமகளுக்கு உபயோகமாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்.
சென்னை பித்தன் said...
அநேகருக்கு ஒரே டவுட்டு வந்திருக்குது!அவர்களுக்கெல்லாம் தெரியாதா,நிரூ "சகல" "கலா" "வல்லவர்" என்பது!
நல்ல அறிவுரை கூடிய பதிவு!//// "சகல" "கலா" "வல்லவர்" என்பது சத்தியமா எனக்குத் தெரியாது!தகவலுக்கு நன்றி! தேவைப்படும் போது?! உபயோகித்துக் கொள்ளலாம் தானே??????????
சிவகுமாரன் said...
எனக்கு இனி தேவையில்லை இந்தக் குறிப்பு. உங்கள் அம்மாவின் மருமகளுக்கு உபயோகமாக இருக்கட்டும். வாழ்த்துக்கள்.////அண்ணன் பேரப்புள்ளயே பாத்திட்டார் போல!
ஹி ஹி நல்ல பதிவு
இந்த பதிவு என்ன சொல்லுதுன்னா
நிருபன் அண்ணா மனைவியை பூப்போல தாங்குவாருன்னு சொல்லுது
//ஆண்கள் சமையலில் பங்கெடுத்தல் அவசியமான ஒரு செயல் தானே.//
கல்யாணம் ஆகட்டும் அப்புறம் செய்துட்டா போச்சு
/இனிச் செய் முறை:/
இதை படிக்கும் பதிவர்களின் மனைவிமார் உங்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்த போவதாக அறிவித்தாலும் ஆச்சரியம் இல்லை
//இந்தச் சமையற் குறிப்பில் சந்தேகம் ஏதாவது இருந்தால், கேளுங்கள் நண்பர்களே.//
ஹி ஹி
அப்புறம் எனக்கு தேவை படும் போது கேக்குறேன் பாஸ்
பழப் புளியின்னா என்னங்க???
இரவு வானம் said...
பழப் புளியின்னா என்னங்க???/////அது வந்துங்க....................................................சின்ன வயசில "நரியும் திராட்சப்பழமும்" அப்புடீன்னு ஸ்கூல்ல கதை படிச்சிருப்பீங்களே?!,அதுல நரி சீ..ச்சீ... இந்தப் பழம் "புளி"க்கும் அப்பிடீன்னு சொல்லீட்டு வேற வேல பாக்கப் போயிடுமே?அதாங்க இது!!!!!!
அருமையான பதிவு சகோ !
Post a Comment