நிரூபன்: சாரி நேமிசா, இன்னைக்கு கொஞ்சம் லேட்டாகிடுச்சு,
உங்களைப் பார்க்க இனைக்காச்சும் கொஞ்சம் வேளைக்கு வரனும்.
நீ வர்ற முன்னாடியே, நான் வந்து நின்று, நீ வந்ததும் ஓடோடி வந்து உன்னைக் கட்டிப் பிடித்து ஒரு பிரெஞ்ச் கிஸ் அடிக்கனும் என ஆவல் மேலிட வந்தேன். வர்ற வழியிலை வண்டி சொதப்பிடிச்சு. அதான் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. என்னை மன்னிக்க மாட்டியா செல்லம்?
நேமிசா: இது வழமையான ஒன்று தானே. எப்ப பார்த்தாலும் லேட்டா வருவீங்க நீரு.
நான் ஒருத்தி மட்டும் எப்பவுமே நேரத்திற்கு வந்து உங்களுக்காக காத்திருக்கனும்.
சொல்லுங்க நிரூ. என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?
இன்னைக்கும் வழமை போல- என்னையைப் பார்க்க வரணும் என்பது தெரியாது ப்ளாக்கில கமெண்ட் போட்டுக் கொண்டு தானே இருந்தீங்க. நீங்களும் உங்க ப்ளாக்கும்.
நிரூபன்: ஏண்டா செல்லம் கோவிச்சுக்கிறாய்?
அதான் நான் சாரி சொல்லிட்டனே ஹனிக்குட்டி. மன்னிக்க மாட்டாயா டார்லிங்.
நேமிசா: மன்னிக்கிறதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். ப்ளாக்- ப்ளாக் என்று எழுதுறீங்களே, உங்களாலை தமிழ் இலக்கணத்தை வைச்சு, ஒரு கவிதை உருவாக்க முடியுமா? முடிஞ்சா இப்பவே, இந்த இடத்தில சொல்லுங்க. நீங்க சொல்லுவது கரெக்டா இருந்தால் தான், உங்களுக்கு இன்னைக்கு இதழ் பிரியாத முத்தம் கிடைக்கும். எங்கே ஆரம்பியுங்க பார்ப்போம் நிரூ.
நிரூபன்: என்னோட ஹனிக்குட்டியெல்லே (Honey). எனக்கு இலக்கணம் தெரியாதென்பது உனக்குத் தெரியுஞ்ச பின்னாடியுமா நீ இதனைக் கேட்கிறாய். என்னையப் போயி வம்பிலை மாட்டிவுடுற வேலையா எல்லே இது இருக்கு. இருந்தாலும் உன்னோடை ஆர்வத்திற்கு என்னாலை முடிஞ்ச வரை, இலக்கணக் காதல் கவிதை ஒன்றைத் தர முயற்சி செய்கிறேன். நீ தான் சரி என்று சொல்லனும்.
நேமிசா: நான் இதனைக் கேட்டுச் சரி என்று சொல்வது இருக்கட்டும். இதனை நீங்க சொல்லச் சொல்ல நான் நோட் பண்ணித் தாறேன். உங்க ப்ளாக்கில கொண்டு போய் போடுங்க. வாசகர்கள் படித்து விட்டு என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.
இன்பத்தை கூட்டும் இலக்கண காதல்!
இலக்கியப் பாவை போல்
தினமும் என் இதயத்துள்
வலம் வருபவள்; பல
இதமான கனவுகளால்
உள்ளத்தை நிதமும்
கலக்கியே திரிபவள்!
கார் வண்ணக் குழலழகி
காந்தள் மலர்(க்) கண்ணழகி
பார் போற்றும் பேரழகி; என்னில்
பாசம் கொண்ட ஓரழகி!
அந்தியிலே நிதம் வந்து
அழகான பல கனவுகளை, என்
சிந்தையிலே உதிக்க வைக்கும்
சின்ன இடைக் கவியழகி!
விந்தை பல புரிபவளாய் என்னுள்
வியாபித்திருக்கும் மேலழகி!
பந்து போல என் மனதை(த்)
துள்ள வைக்கும்
பார்வை கொண்ட கண்ணழகி!
வேதத் திருமகள்; வேள்விப் பெருமகள்
காதற் கனி மகள்; என்
கவிதை கருமகள்,
நேசக் கொடி மகள் ; என் நெஞ்சக் கவி மகள்!
பாசப் பெரு மகள்; எந்தன் இதய(ப்)
பாரின் தனி மகள்!
அவள்.......
கண்கள் இரண்டிலும் பல வண்ணங்கள்
கன்னங்களிலோ மதுக் கிண்ணங்கள்
தொட்டாலே போதை தரும் பெண்ணழகி; எனை(த்)
தோகை போல் சிலிர்க்க வைக்கும் கண்ணழகி!
வல்லினம் போன்ற முத்துப் பற்கள்; உன்
வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனிய சொற்கள்
மெல்லினம் போன்றது உன் பேச்சு; உன்
மேனியில் தான் உள்ளது என் மூச்சு
இடையினம் போல் நெளியும் இடை; என்
இதமான கேள்விக்கு(த்) தருமா அது விடை?
உயிர் மெய் போல் தொடரும் எம் உறவு
உன்னால் இனிமையாய்க் கழிகிறது இரவு!
முற்றாயுதம் உன் முகம்; நான்
முதலிலே தொட்டது உன் நகம்
அளபெடை போலிருக்கும் மூக்கு; அதன் பின்
ஆய்தக் குறுக்கம் போல் உன் நாக்கு!
குற்றியலுகரம் உன் குறு குறுப் பார்வைகள்-அவை
குறும்பான கதை சொல்லும் நினைவுப் போர்வைகள்
இடைச் சொல்லாய் தொடரும் உன் நினைவுகள்; அவை
இதமான சுகம் தரும் கனவுகள்!
மகரக் குறுக்கம் போன்றது உன் மார்பு; அதில் நான்
விழி மூடித் தூங்கினால் இல்லைச் சோர்வு!
பாவையவள் மேனி ஒரு மோனை, உன்
பஞ்சு போன்ற விரல்கள் நான் மீட்டும் வீணை!
எளிமையான குணங்களால் நீ ஓர் எதுகை; எப்போதும்
எனை விட்டுப் பிரியக் கூடாது உன் இருகை!
என் இதயத்துள் நிறைந்தவள்
என் இனிமைக்குள் உறைந்தவள்!
உன் கன்னமதில் இருப்பது ஓர் மச்சம்; அதைக்
கை தொட்டுக் கிள்ளினால் இல்லை எச்சம்!
அன்பே நீ ஓர் இலக்கியப் பயிர்; உனை
அணைக்காமல் பிரியாது எந்தன் உயிர்!
உணர்வுகளைத் தூண்டுவதால் நீ ஓர் உம்மைத் தொகை
உனைப் பிரிந்திருக்கும் தனிமையே என் வாழ்வின் பகை!
நடையழகால் நீ ஒரு தனி வினை; என் வாழ்வில்
எப்போதும் பிரிவேனா இனி உனை?
நீயோ ஒரு இலக்கியப் பதுமை, உன்
நினைவுகளால் என்னுள் தினமும் பல பல புதுமை!
பஞ்சு போல் இருக்கும் உன் கைப் பகுதி; அதைப்
பற்றினால் என்றும் இல்லை என்னுள் விகுதி!
’நீயே எனக்கு என்றும் சரணம்
நீ இல்லையேல் என் வாழ்வில் நிகழ்வதோ மரணம்!
’நீயே எனக்கு என்றும் சரணம்
நீ இல்லையேல் என் வாழ்வில் நிகழ்வதோ மரணம்!
நிரூபன்: என் நேமிசா குட்டியெல்லே, இப்பவாச்சும் சொல்லேன். என் கவிதை எப்படி என்று?
நேமிசா: அதை உங்க ப்ளாக் வாசகர்கள் தான் தீர்மானிக்கனும். நான் கிளம்பனும் நிரூ....
நிரூபன்: அடிப் பாவி.....!!!
அருஞ் சொற்கள்:
*குழல்- கூந்தல்
*காந்தள் மலர்- கார்த்திகைப் பூ/ கார்த்திகை மலர்
டிஸ்கி: இந்தக் கவிதை 20.04.2006 அன்று நான் எழுதியது.
டிஸ்கி: இந்தக் கவிதை 20.04.2006 அன்று நான் எழுதியது.
|
103 Comments:
VADAI
அற்புதமான இலக்கிய தமிழில் அற்புதமான கவித்தமிழ்
வாழ்க வளர்க சகோ
அடிப் பாவி.....!!!
இப்படி கவுத்துட்டாளே சகோ
பொண்ணுங்க பாராட்டமாட்டாங்களோ
Super kavithai
இலக்கான இலக்கிய எதுகை மோனை எல்லாம் ஆச்சு அசல இருக்குது நேமிசா உடன நிருபண்ட கையாள தாலிய கட்டுங்க
அண்ணியாரே ; ! () , இவ்வாறான குறியீடுகள் கவிதையில் ஆங்காங்கே காணப்படுகிறது எனவே இது எப்படியும் ஒரு இலக்கண கவிதையாய் தான் இருக்கமுடியும் அகவே அண்ணன் நிருபனை கட்டவும் விரைவில்
அண்ணியாரே ; ! () , இவ்வாறான குறியீடுகள் கவிதையில் ஆங்காங்கே காணப்படுகிறது எனவே இது எப்படியும் ஒரு இலக்கண கவிதையாய் தான் இருக்கமுடியும் அகவே அண்ணன் நிருபனை கட்டவும் விரைவில்
முற்றாயுதம் உன் முகம்; நான்
முதலிலே தொட்டது உன் நகம்
நீரு செம டீசென்டான ஆளையா
உண்மையை சொல்லுங்க சகோ கிடைத்த முத்தத்தை சென்சார் பண்ணிட்டீங்க தானே ...பின்ன இவள்ளவு நல்ல கவிதைக்கு முத்தம் கொடுக்கமா
எந்த பொண்ணு சகோ போவா ,,,ஹி ஹி இல்ல நீங்க தான் விடுவீங்களா
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
உயிர் மெய்
முற்றாயுதம்
அளபெடை
ஆய்தக் குறுக்கம்
குற்றியலுகரம்
இடைச் சொல்
மகரக் குறுக்கம்
மோனை,
எதுகை
உம்மைத் தொகை
வினை
பகுதி
விகுதி!
ஆறுமுக நாவலரின் இலக்கண புத்தகத்தில் இருக்கும் எல்லா இலக்கண சொல்லும் கவிதையில் உள்ளடக்க பட்டதால் இந்த கவிதை இலக்கண கவிதையே இலக்கண கவிதையே இலக்கண கவிதையே என அறுதியும் இறுதியும் உறுதியுமாக சொல்லுகின்றேன்
அகவே நேமிசா அண்ணி தோல்வியை ஒத்துக்கொண்டு நிருபன் அண்ணாவ கைபிடிக்கவும்
அம்மா தாயே இதுக்கு மேல இது இலக்கண கவிதை தான் என நிருபிக்க நான் கவிதை படித்தவன் அல்ல வேணுமெண்டா புலவர் சா இராமாநுசம் ஐயா வ கேட்டு பாருங்கோ அவருக்கு இந்த இலக்கண கவிதைகள் அத்துபடி நான் வெறும் கத்துக்குட்டி
மாப்ள கவித கவித!
வாவ் ...என்ன ஒரு கவிதை
கவிதை பெருசாத்தான் இருக்குது.... இருங்கபடிச்சிட்டு வாறன்
கவிதை சூப்பர் பாஸ்.. அசத்திட்டிங்க
இந்த கவிதையில் இலக்கணம் என்ற சொல் எங்கும் இடம்பெறாத காரணத்தால் இது இலக்கண கவிதை அல்ல என்று தீர்ப்பளிக்கிறேன்..அதனால் நேமிசா நிரூபனை கழட்டி விடுமாறும் ஆலோசனை வழங்குகிறேன்...
ஹா ஹா ஹா பிரிச்சிட்டோமில்லா
பாஸ்.........!
காலையில் எழுந்தவுடன் இப்படி இலக்கணம் கற்பித்தமைக்கு நன்றி.
கவிதை அருமை.
அதுசரி, யாருங்க அந்த பொண்ணு! பின்னாலுள்ள கதையை மறைக்காமல் கூறவும்.
யாரு அந்த நேமிசா .............))
///முதலிலே தொட்டது உன் நகம்
/// கடைசி வரை அதை மட்டும் தானோ ............ஹாஹஹா
முற்ப்பிறப்பில் புலவராய் இருந்திங்களோ .... இலக்கணத்தில் பின்னுறிங்க .. சூப்பரா இருக்கு.
அப்புறம் என்ன நேமிசா ... ))
இந்த கவிதையில் இலக்கணம் என்ற சொல் எங்கும் இடம்பெறாத காரணத்தால் இது இலக்கண கவிதை அல்ல என்று தீர்ப்பளிக்கிறேன்..அதனால் நேமிசா நிரூபனை கழட்டி விடுமாறும் ஆலோசனை வழங்குகிறேன்...
ஹா ஹா ஹா பிரிச்சிட்டோமில்லா
பாவம் நம்ம சகோதரம் கஷ்ரப்பட்டு ஒரு பூவ புடிச்சா
நீங்க நம்ம மூதாதயர்மாதிரி பிரிச்சுப்புட்டீகளே!.. இது
நியாயமா?........ ஹி.......ஹி.....ஹி........
நன்றி சகோதரரே பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
//வல்லினம் போன்ற முத்துப் பற்கள்;
மெல்லினம் போன்றது உன் பேச்சு;
இடையினம் போல் நெளியும் இடை; //
புதுமையான,இனிமையான வர்ணனை!
கலக்கிட்டீங்க நிரூ!
கவிதை அருமை
கருப்பொருளும் அருமை
இதெல்லாம் வாழ்க்கையில இருந்தா நல்லாதான் இருக்கும் ஆனா நடக்க மாட்டேங்குதே.
எந்த பெண்ணுக்காகவும் சாவது சாத்தியம் இல்லை (யாராவது கொன்னா மட்டும் சாத்தியம்)
அழகான பதிவு
//நிரூ.//
செல்லமே செல்லமாய்
ஹி ஹி
//ஹனிக்குட்டி. மன்னிக்க மாட்டாயா டார்லிங்.//
இது நம்ம ஓட்டைவடை மச்சானின் ஆள் ஹன்சிகா இல்லைத்தான ??
அப்புறம் வீட்டுக்கு ஆட்டோ வரும்
நீங்க ஒரு தமிழ் தாத்தா பாஸ்
உண்மையில் நிரூ மெய்சிலிக்கிறது உங்கள் இலக்கிய திறமையை நினைத்து வாழ்த்துக்கள் இனிய அமுதம் பருகின காலைப் பொழுது .
இந்த கவிதை இலக்கண கவிதையே இலக்கண கவிதையே இலக்கண கவிதையே என அறுதியும் இறுதியும் உறுதியுமாக சொல்லுகின்றேன்
என்ன சகோ
நீங்க மெயில் வழி வாங்கன்னு கூப்டீங்க உடனே வர கொஞ்சம் வ(அ)சதி சரியா இல்லிங்க
அதுக்காக இப்படியா வால சுருட்டி
கிட்டு (வலையை)போங்கன்னு
எனக்குப் போட்டியா நல்லாவே(என்ன
விட)கவிதை(எதுகை மோனை எக்கச்
சக்கம்)எழுதி விரட்டனுமா
இதிலே கவிஅழகன் வேற
சண்டை மூட்டி விடராரு
உங்களை நான் பங்காளி
யாகத்தான் பாக்கிறேன்
ஒரு பழ மொழி சொல்வாங்க
பங்காளியும் பனங்காயும் பதம்
பார்த்து வெட்டனும் அப்பிடின்னு
சகோ
ரொம்ப ரொம்ப ரொம்ப
அருமை அருமை அருமை
புலவர் சா இராமாநுசம்
கவிஞர் நிருபனுக்கு வணக்கம்
நின் தமிழால் மகிழ்ந்து போனோம்
இதோ பிடியும் வாழ்த்துக்களை ......................
அப்புறம் உங்க ஆசை நிறைவேறிடிச்சு போல இருக்கே கடைசி படத்தைதான் சொல்லுறேன் ...........
////வேதத் திருமகள்; வேள்விப் பெருமகள்
காதற் கனி மகள்; என்
கவிதை கருமகள்,
நேசக் கொடி மகள் ; என் நெஞ்சக் கவி மகள்!
பாசப் பெரு மகள்; எந்தன் இதய(ப்)
பாரின் தனி மகள்!//////
கவிதைகளில் கொஞ்சிவிளையாடும் காதல் வரிகள்
காதலியை வர்ணிக்கும் வர்ணனை அமர்க்களம் சகோ
பிறகு படித்துவிட்டு வருகிறேன் .. இது டெஸ்ட் கமெண்ட் ..
எளிமையான குணங்களில் நீ ஒர் எதுகை
என் இனிமைக்குள் உறைந்தவள் . அந்த அருமையான வரிகள் வரக்காரனமான யார் என்றாலும் அவர்களுக்கும் சேரட்டும் வாழ்த்துக்கள் உங்கள் கற்பனையின் உச்சம் இது .என் பாராட்டுக்கள் பல நண்பனுக்கு.
என்ன கொடுமை நிரூபன் இது? எங்களூக்கெல்லாம் பிளாக் ஓப்பன் ஆகலை.. உங்களூக்கு மட்டும் ஆகுது.. அய்யோ தாங்க முடியலையே? #சுயநல தமிழன் ஹா ஹா
>>கண்கள் இரண்டிலும் பல வண்ணங்கள்
கன்னங்களிலோ மதுக் கிண்ணங்கள்
தொட்டாலே போதை தரும் பெண்ணழகி; எனை(த்)
தோகை போல் சிலிர்க்க வைக்கும் கண்ணழகி!
ஜீவன் மாஸ்டர். அண்னனுக்கு நிரூபன் ரெமோ=எனும் காதல் மன்னனுக்கு ஒரு ஃபிகர் பார்சல் முறுகலா.. ஹா ஹா சூடா.
@Mahan.Thamesh
வடை//
சந்தேகமே இல்லை. இன்றும் உங்களுக்குத் தான்,. ஆமா என்ன வடை வேண்டும்.
@Mahan.Thamesh
அற்புதமான இலக்கிய தமிழில் அற்புதமான கவித்தமிழ்
வாழ்க வளர்க சகோ//
அடப் பாவி, நான் ஏற்கனவே வளர்ந்திட்டேனே, 173 cm வளர்ச்சி போதாதா;-))
@Mahan.Thamesh
அடிப் பாவி.....!!!
இப்படி கவுத்துட்டாளே சகோ
பொண்ணுங்க பாராட்டமாட்டாங்களோ//
அதான் பாஸ் எனக்கும் தெரியலை.
ஹி....ஹி...
@"என் ராஜபாட்டை"- ராஜா
Super kavithai//
நன்றி சகோ.
@இராஜராஜேஸ்வரி
நேமிசாவை கைப்பிடிக்கும் நாள் அருகில் வர வாழ்த்துக்கள்.
அருமையாய் கவிவடித்த தங்கள் திறமைக்குப் பாராட்டுக்கள்.
படங்கள் சூப்பர். //
நேமிசா அப்படீன்னு யாரையுமே எனக்குத் தெரியாது, இது சும்மா கவிதையின் சிறப்பிற்காக வைத்த பெயர்.
வாழ்த்துக்களுக்கு நன்றி அம்மா.
@கவி அழகன்
அண்ணியாரே ; ! () , இவ்வாறான குறியீடுகள் கவிதையில் ஆங்காங்கே காணப்படுகிறது எனவே இது எப்படியும் ஒரு இலக்கண கவிதையாய் தான் இருக்கமுடியும் அகவே அண்ணன் நிருபனை கட்டவும் விரைவில்//
அடப் பாவி, இப்படிக் குறியீடுகள் போட்டிருந்தால் அது இலக்கணமா...
ஐயோ....நேமிசா எழுதும் போது இப்படியான குறியீடுகளைப் போட மறந்து விட்டா என நினைக்கிறேன்.
ஹி....ஹி...
அதான் அவா மாட்டேன் என்று சொல்லியிருக்கிறா, கவிதையின் தரம் பற்றி கருத்துச் சொல்லாமல் விட்டிருக்கிறா.
@கவி அழகன்
முற்றாயுதம் உன் முகம்; நான்
முதலிலே தொட்டது உன் நகம்
நீரு செம டீசென்டான ஆளையா//
ஏன் பாஸ், முதல்ல மென்மையாகத் தான் எப்பவுமே ஆரம்பிக்கனும் என்று தானே பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க.
அதான்...இப்படி டீசெண்டா ஆரம்பிக்க வேண்டியதாகி விட்டது.
@ரியாஸ் அஹமது
உண்மையை சொல்லுங்க சகோ கிடைத்த முத்தத்தை சென்சார் பண்ணிட்டீங்க தானே ...பின்ன இவள்ளவு நல்ல கவிதைக்கு முத்தம் கொடுக்கமா
எந்த பொண்ணு சகோ போவா ,,,ஹி ஹி இல்ல நீங்க தான் விடுவீங்களா//
ஆஹா....அதையெல்லாம் இந்த ப்ளாக்கில எழுதவா முடியும் பாஸ், அதான் சென்சார் பண்ணிட்டேன்.
ஹி....ஹி..
@கவி அழகன்
ஆறுமுக நாவலரின் இலக்கண புத்தகத்தில் இருக்கும் எல்லா இலக்கண சொல்லும் கவிதையில் உள்ளடக்க பட்டதால் இந்த கவிதை இலக்கண கவிதையே இலக்கண கவிதையே இலக்கண கவிதையே என அறுதியும் இறுதியும் உறுதியுமாக சொல்லுகின்றேன்
அகவே நேமிசா அண்ணி தோல்வியை ஒத்துக்கொண்டு நிருபன் அண்ணாவ கைபிடிக்கவும்//
ஆஹா...தோள் கொடுப்பான் தோழன் என்று சொல்லுவது இதனைத் தானோ;-))
மச்சி, நிஜமாவா சொல்லுறீங்க. அவள் தான் இலக்கணம் இல்லை என்று சொல்லுறாளே.
@கவி அழகன்
அம்மா தாயே இதுக்கு மேல இது இலக்கண கவிதை தான் என நிருபிக்க நான் கவிதை படித்தவன் அல்ல வேணுமெண்டா புலவர் சா இராமாநுசம் ஐயா வ கேட்டு பாருங்கோ அவருக்கு இந்த இலக்கண கவிதைகள் அத்துபடி நான் வெறும் கத்துக்குட்டி //
அடப் பாவி, போதக் குறைக்கு புலவர் ஐயாவையும் இதுக்குள் கோர்த்து வுடுறியா...
நல்லாத் தானே போய்க் கிட்டிருந்திச்சு.
@விக்கியுலகம்
மாப்ள கவித கவித!//
நன்றி மாம்ஸ்,
@koodal bala
வாவ் ...என்ன ஒரு கவிதை//
நன்றி சகோ.
@மதுரன்
கவிதை பெருசாத்தான் இருக்குது.... இருங்கபடிச்சிட்டு வாறன்//
நன்றி பாஸ்...வாங்க வாங்க.
@மதுரன்
கவிதை சூப்பர் பாஸ்.. அசத்திட்டிங்க//
நன்றி சகோ.
//கண்கள் இரண்டிலும் பல வண்ணங்கள்
கன்னங்களிலோ மதுக் கிண்ணங்கள்
தொட்டாலே போதை தரும் பெண்ணழகி; எனை(த்)
தோகை போல் சிலிர்க்க வைக்கும் கண்ணழகி!//
அவ்வ்வ்வவ்!
@மருதமூரான்.
பாஸ்.........!
காலையில் எழுந்தவுடன் இப்படி இலக்கணம் கற்பித்தமைக்கு நன்றி.
கவிதை அருமை.
அதுசரி, யாருங்க அந்த பொண்ணு! பின்னாலுள்ள கதையை மறைக்காமல் கூறவும்//
நன்றி பாஸ்,
இன்னொரு பதிவாக போட்டாப் போச்சு.
oh, wov!!! no chance... Cute and awesome kavithai...
@FOOD
தனியா ‘பார்’ ஏதும் வேண்டாமோ!//
ஆமா பாஸ், கன்னங்களில் போதை இருக்கையில் பிறகேன் மதுக் கிண்ணங்கள்;-))
அவ்....
@FOOD
கவிஞனின் கற்பனை, கற்கண்டாய் இனிக்கிறதே. //
நன்றி பாஸ்.
// மிக நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீண்ட கவிதை.//
அவ்..............
@கந்தசாமி.
யாரு அந்த நேமிசா .............))//
உங்க அண்ணி பாஸ்.
@கந்தசாமி.
//முதலிலே தொட்டது உன் நகம்
/// கடைசி வரை அதை மட்டும் தானோ ............ஹாஹஹா //
அடப் பாவி, இப்படியெல்லாம் பொதுச் சபையில் கேட்கிறீங்களே, இது நியாயமா.
@கந்தசாமி.
முற்ப்பிறப்பில் புலவராய் இருந்திங்களோ .... இலக்கணத்தில் பின்னுறிங்க .. சூப்பரா இருக்கு.
அப்புறம் என்ன நேமிசா ... )) //
அப்படியெல்லாம் இல்லை பாஸ்...
@அம்பாளடியாள்
ஹா ஹா ஹா பிரிச்சிட்டோமில்லா
பாவம் நம்ம சகோதரம் கஷ்ரப்பட்டு ஒரு பூவ புடிச்சா
நீங்க நம்ம மூதாதயர்மாதிரி பிரிச்சுப்புட்டீகளே!.. இது
நியாயமா?........ ஹி.......ஹி.....ஹி........
நன்றி சகோதரரே பகிர்வுக்கு வாழ்த்துக்கள். //
அதானே, மதுரன் பிள்ளையார் வரட்டும், அப்புறமா அவரை தனி இடத்திலை வைச்சு டீல் பண்ணிக்கிறேன்.
என்ன சகோ
நீங்க மெயில் வழி வாங்கன்னு கூப்டீங்க உடனே வர கொஞ்சம் வ(அ)சதி சரியா இல்லிங்க
அதுக்காக இப்படியா வால சுருட்டி
கிட்டு (வலையை)போங்கன்னு
எனக்குப் போட்டியா நல்லாவே(என்ன
விட)கவிதை(எதுகை மோனை எக்கச்
சக்கம்)எழுதி விரட்டனுமா
இதிலே கவிஅழகன் வேற
சண்டை மூட்டி விடராரு
உங்களை நான் பங்காளி
யாகத்தான் பாக்கிறேன்
ஒரு பழ மொழி சொல்வாங்க
பங்காளியும் பனங்காயும் பதம்
பார்த்து வெட்டனும் அப்பிடின்னு
சகோ
ரொம்ப ரொம்ப ரொம்ப
அருமை அருமை அருமை
புலவர் சா இராமாநுசம்
aaka enna arumaiyaana kathai
arputha
valththukkal
மாப்ளே! இன்று முதல் நீ கவிரூபன் என அழைக்கப்படுவாய்...!
தலைப்பே கலக்குதே..
//இதமான கனவுகளால்
உள்ளத்தை நிதமும்
கலக்கியே திரிபவள்! // நமக்கு இது சிநேகா!
//கார் வண்ணக் குழலழகி
காந்தள் மலர்(க்) கண்ணழகி // அட..நம்ம மீனா!
//சிந்தையிலே உதிக்க வைக்கும்
சின்ன இடைக் கவியழகி!// நமக்கு இது சிம்ரன்.
//விந்தை பல புரிபவளாய் என்னுள்
வியாபித்திருக்கும் மேலழகி!// அப்போ ஷகீலா தான்.
//பந்து போல என் மனதை(த்)
துள்ள வைக்கும்
பார்வை கொண்ட கண்ணழகி!// பந்துன்னா வேற ஆளு..கண்ணுன்னா மறுபடியும் மீனா தான்.
//வேதத் திருமகள்; வேள்விப் பெருமகள்
காதற் கனி மகள்; என்
கவிதை கருமகள்,
நேசக் கொடி மகள் ; என் நெஞ்சக் கவி மகள்! // இது கமல் பொண்ணு ஸ்ருதி.
//கன்னங்களிலோ மதுக் கிண்ணங்கள்// மதுபாலாவா இருக்குமோ..
//தொட்டாலே போதை தரும் பெண்ணழகி // இது எல்லாரும் தான்.
//’நீயே எனக்கு என்றும் சரணம் // ஸ்ரீதேவி..ஸ்ரீதேவி..
மாப்ள, நல்ல அருமையான கவிதை...பல நினைவுகளை என்னுள் எழுப்பி விட்டது உங்கள் கவிதை.(இது கிண்டல் அல்ல!)
அருமையாக இருந்தது,இருக்கிறது,இருக்கும்!எங்கே ஒழித்து வைத்திருக்கிறீர்கள்,நேமிசாவை?
///ஹனிக்குட்டி.மன்னிக்க மாட்டாயா?////யாரையோ வம்புக்கு இழுக்கிறாப்பில இருக்கே?நெசமா இல்லையா?
Awesome....words...
ஆட்டக்கடிச்சூஊ மாட்டைக்கடிச்சூஊ... இப்போ நேமிசாவையும் கடிக்கிற நிலைமைக்கு வந்தாச்சோ நிரூபன்:)).... வர வர முன்னேறிட்டே வாறீங்க... நேமிசாவோட:))).
அழகாக இருக்கு கவிதை. நிரூபந்தான் எழுதியதென நம்பவே முடியேல்லை....
வாழ்த்துக்கள் சகோ!உங்கள் காதலை இவ்வளவு நாளும் மறைத்துவிட்டீர்களே!
பாடலும் நன்று.வேண்டுகோளை சிறப்பாக நிறைவேற்றி விட்டீர்கள்.
@மதுரன்
இந்த கவிதையில் இலக்கணம் என்ற சொல் எங்கும் இடம்பெறாத காரணத்தால் இது இலக்கண கவிதை அல்ல என்று தீர்ப்பளிக்கிறேன்..அதனால் நேமிசா நிரூபனை கழட்டி விடுமாறும் ஆலோசனை வழங்குகிறேன்...
ஹா ஹா ஹா பிரிச்சிட்டோமில்லா//
மச்சி, தலையங்கத்தில் இலக்கணம் என்ற ஒரு சொல் வந்திருக்கிறதே.
கவனிக்கலை.
என்ன என் காதலுக்கு ஆப்பு வைச்சு நேமிசாவைத் தூக்கிக் கொண்டு போகலாம் என்று கனவு காண்கிறீங்க போல இருக்கே,
இது மட்டும் நடக்காது மவனே;-))
@ஜ.ரா.ரமேஷ் பாபு
கவிதை அருமை
கருப்பொருளும் அருமை
இதெல்லாம் வாழ்க்கையில இருந்தா நல்லாதான் இருக்கும் ஆனா நடக்க மாட்டேங்குதே.
எந்த பெண்ணுக்காகவும் சாவது சாத்தியம் இல்லை (யாராவது கொன்னா மட்டும் சாத்தியம்)//
ஆமா பாஸ், நானும் எந்தப் பெண்ணிற்காகவும் சாகும் நிலையில் இல்லை, சும்மா....டச்சிங்கா இருக்கட்டுமே என்று எழுதிய கவிதை..
உங்களின் கருத்துக்களுக்கு நன்றி சகோ.
@சென்னை பித்தன்
புதுமையான,இனிமையான வர்ணனை!
கலக்கிட்டீங்க நிரூ!//
நன்றி ஐயா,. எல்லாம் உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் ஆதரவின் வெளிப்பாடு தான்.
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
அழகான பதிவு//
நன்றி சகோ.
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
/ஹனிக்குட்டி. மன்னிக்க மாட்டாயா டார்லிங்.//
இது நம்ம ஓட்டைவடை மச்சானின் ஆள் ஹன்சிகா இல்லைத்தான ??
அப்புறம் வீட்டுக்கு ஆட்டோ வரும்//
ஏனய்யா, கோர்த்து விடுறீங்க, நான் நல்லா இருப்பது பிடிக்கலை,
நான் சொல்லும் ஹனி- Honey .. காதலியை தேனுக்கு நிகராக அழைப்பார்களே, இது அந்தக் கனி.
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
நீங்க ஒரு தமிழ் தாத்தா பாஸ்//
யோ, கொய்யால, உங்களுக்கு இப்ப ஓட்ட வடையை அனுப்பி நாலு தட்டுத் தட்டனும்,
ஒரு இளமையான அழகான பையனைப் பார்த்துச் சொல்லுற வார்த்தையா இது..
சே.......என்னைத் துஸி அவமானப்படுத்திட்டான்(((((;
@Nesan
உண்மையில் நிரூ மெய்சிலிக்கிறது உங்கள் இலக்கிய திறமையை நினைத்து வாழ்த்துக்கள் இனிய அமுதம் பருகின காலைப் பொழுது .//
ஏன்யா... இந்தக் கவிதையில் மெய் சிலிர்க்கிற மாதிரி கிளு கிளு வரிகள், கிளு கிளுப் படங்கள் ஏதும் இருக்கா. இல்லைத் தானே;-))
நான் சும்மா சொன்னேன்.
நன்றி சகோ.
@Menaga
இந்த கவிதை இலக்கண கவிதையே இலக்கண கவிதையே இலக்கண கவிதையே என அறுதியும் இறுதியும் உறுதியுமாக சொல்லுகின்றேன்//
என் பக்கம் சப்போர்ட் கூடுகிறது, ஆனால் இதனை நேமிசா தான் புரிஞ்சு கொள்ளனுமே;-))
நன்றி சகோ.
@புலவர் சா இராமாநுசம்
என்ன சகோ
நீங்க மெயில் வழி வாங்கன்னு கூப்டீங்க உடனே வர கொஞ்சம் வ(அ)சதி சரியா இல்லிங்க
அதுக்காக இப்படியா வால சுருட்டி
கிட்டு (வலையை)போங்கன்னு
எனக்குப் போட்டியா நல்லாவே(என்ன
விட)கவிதை(எதுகை மோனை எக்கச்
சக்கம்)எழுதி விரட்டனுமா
இதிலே கவிஅழகன் வேற
சண்டை மூட்டி விடராரு
உங்களை நான் பங்காளி
யாகத்தான் பாக்கிறேன்
ஒரு பழ மொழி சொல்வாங்க
பங்காளியும் பனங்காயும் பதம்
பார்த்து வெட்டனும் அப்பிடின்னு
சகோ
ரொம்ப ரொம்ப ரொம்ப
அருமை அருமை அருமை
புலவர் சா இராமாநுசம்//
ஐயா, ரொம்ப பிசி போல இருக்கே,
என்னது உங்களுக்குப் போட்டியாக நானா...
வேணாம் ஐயா, நான் எப்பவுமே ஓர் நாற்றாகத் தான் இருக்க விரும்புகிறேன்.
தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் ஐயா. இது 2006ம் ஆண்டு நான் எழுதிய கவிதை.
ஆகவே சந்தேகமே இல்லை- நானும் நீங்களும் எப்போதுமே பங்காளி தான்!!
அவசரம் இல்லை, அசதி முடிஞ்சதும் ஆறுதலாக வாங்க ஐயா.
கவி அழகன் சண்டையை மூட்டலை ஐயா, இந்தக் கவிதை பற்றி உங்களின் கருத்தினைத் தான் கேட்டிருக்கார்.
ஹா...ஹா...
நல்ல நகைச்சுவையாகப் பேசுறீங்க.
@A.R.ராஜகோபாலன்
கவிஞர் நிருபனுக்கு வணக்கம்
நின் தமிழால் மகிழ்ந்து போனோம்
இதோ பிடியும் வாழ்த்துக்களை ......................
அப்புறம் உங்க ஆசை நிறைவேறிடிச்சு போல இருக்கே கடைசி படத்தைதான் சொல்லுறேன் ...........//
பாஸ், வாழ்த்துக்களைப் பிடித்தேன், காற்றில் பறந்து வந்தாலும் என் ஹார்ட்டில் நிறைந்து விட்டது.
அடடா....நீங்க கண்டு பிடிச்சிட்டீங்களே;-)))
@A.R.ராஜகோபாலன்
கவிதைகளில் கொஞ்சிவிளையாடும் காதல் வரிகள்
காதலியை வர்ணிக்கும் வர்ணனை அமர்க்களம் சகோ//
நன்றி சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
பிறகு படித்துவிட்டு வருகிறேன் .. இது டெஸ்ட் கமெண்ட் ..//
படித்து விட்டு வாரேன் என்று சொன்னீங்க. இன்னுமே வரலையே பாஸ்..
நன்றி சகோ.
@Nesan
எளிமையான குணங்களில் நீ ஒர் எதுகை
என் இனிமைக்குள் உறைந்தவள் . அந்த அருமையான வரிகள் வரக்காரனமான யார் என்றாலும் அவர்களுக்கும் சேரட்டும் வாழ்த்துக்கள் உங்கள் கற்பனையின் உச்சம் இது .என் பாராட்டுக்கள் பல நண்பனுக்கு.//
ஆஹா.. பாராட்டுக்களுக்க் நன்றி சகோ.
அவா தான் இன்னும் ஓக்கே சொல்லுறா இல்லையே(((:
@சி.பி.செந்தில்குமார்
என்ன கொடுமை நிரூபன் இது? எங்களூக்கெல்லாம் பிளாக் ஓப்பன் ஆகலை.. உங்களூக்கு மட்டும் ஆகுது.. அய்யோ தாங்க முடியலையே? #சுயநல தமிழன் ஹா ஹா//
தமிழனின் குணம் ப்ளாக்கில் மட்டும் வேறுபடுமா இல்லைத் தானே;-))
பாஸ், கூகிள் வேர்க் பண்ணலை என்றதும்,
நண்பர் கந்தசாமி எஃபிக் பிரவுசர் தந்தார். அதனை வைத்துத் தான் யூஸ் பண்ணிக்கிறேன்.
@சி.பி.செந்தில்குமார்
ஜீவன் மாஸ்டர். அண்னனுக்கு நிரூபன் ரெமோ=எனும் காதல் மன்னனுக்கு ஒரு ஃபிகர் பார்சல் முறுகலா.. ஹா ஹா சூடா.//
நன்றி பாஸ், ஜீவன் மாஸ்டரை இப்போ ரெண்டு நாளா காண முடியலை. பிரான்ஸில் எங்கேயாச்சும் டூயட் பாடுறாரோ தெரியலை.
@ஜீ...
அவ்வ்வ்வவ்!//
மாப்ளே, நல்லாத் தானே போய்க் கிட்டிருக்கு, ஏன் ஒரு குலைப்பு.
@Anbarasan k
oh, wov!!! no chance... Cute and awesome kavithai...//
நன்றி சகோ.
@vidivelli
aaka enna arumaiyaana kathai
arputha
valththukkal//
பாஸ், இது கதை இல்லை, கவிதை, நன்றி சகோ.
@தமிழ்வாசி - Prakash
மாப்ளே! இன்று முதல் நீ கவிரூபன் என அழைக்கப்படுவாய்...!//
ஏன் பாஸ், ஒற்ற வரியில் சொல்லிட்டு எஸ் ஆகிறீங்க.
நன்றி சகோ.
@செங்கோவி
தலைப்பே கலக்குதே..//
என்ன மச்சி, தலைப்பைப் பார்த்ததும் கலக்குதோ;-))
பொது இடத்தை அசிங்கம் பண்ணாமல் வாளியினைத் தூக்கிக் கொண்டு ஓட வேண்டியது தானே;-))
ஹி....ஹி...
@செங்கோவி
மாப்ள, நல்ல அருமையான கவிதை...பல நினைவுகளை என்னுள் எழுப்பி விட்டது உங்கள் கவிதை.(இது கிண்டல் அல்ல!)//
நன்றி சகோ. யாரு சொன்னான் கிண்டல் என்று, ஆளைக் கூட்டி வாங்க, ஒரே போடா போட்டுத் தள்ளிடுவோம்.
ஹி...ஹி...
@Yoga.s.FR
அருமையாக இருந்தது,இருக்கிறது,இருக்கும்!எங்கே ஒழித்து வைத்திருக்கிறீர்கள்,நேமிசாவை?//
நன்றி ஐயா, என் இதயத்திற்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன்.
ஹி...ஹி....
@Yoga.s.FR
///ஹனிக்குட்டி.மன்னிக்க மாட்டாயா?////யாரையோ வம்புக்கு இழுக்கிறாப்பில இருக்கே?நெசமா இல்லையா?//
சத்தியமா நான் ஓட்ட வடையை வம்புக்கு இழுக்கலை(((:::
@குணசேகரன்...
Awesome....words...//
நன்றி மாப்ஸ்.
@athira
ஆட்டக்கடிச்சூஊ மாட்டைக்கடிச்சூஊ... இப்போ நேமிசாவையும் கடிக்கிற நிலைமைக்கு வந்தாச்சோ நிரூபன்:)).... வர வர முன்னேறிட்டே வாறீங்க... நேமிசாவோட:))).
அழகாக இருக்கு கவிதை. நிரூபந்தான் எழுதியதென நம்பவே முடியேல்லை....//
இது ஓவர் நக்கலு, நிஜமாவே நான் தான் எழுதியது.
நன்றி அதிரா.
@shanmugavel
வாழ்த்துக்கள் சகோ!உங்கள் காதலை இவ்வளவு நாளும் மறைத்துவிட்டீர்களே!//
மறைக்கலை பாஸ், அதான் இன்று ஓப்பினா சொல்லியிருக்கேன்.
ஹி...ஹி...
@shanmugavel
பாடலும் நன்று.வேண்டுகோளை சிறப்பாக நிறைவேற்றி விட்டீர்கள்.//
நன்றி சகோ.
மா மன்னா
நீ ஒரு மாமா மன்னா..!
ஹி ஹி...
பாடும்,பாடித் தொலையும்.
வடை,ரோள் எல்லாம் விட்டிட்டு இப்ப இப்பிடி ஆரம்பிச்சுட்டீங்க?எல்லாம் ஓ.கே ஆகினா சரிதான்.
மா மன்னா
நீ ஒரு மாமா மன்னா..!
ஹி ஹி...
பாடும்,பாடித் தொலையும்.
வடை,ரோள் எல்லாம் விட்டிட்டு இப்ப இப்பிடி ஆரம்பிச்சுட்டீங்க?எல்லாம் ஓ.கே ஆகினா சரிதான்.
ஆகா.. அருமை.. கவிதை ரசனையா இருக்கு
ஆகா கண்டுபிடிச்சிட்டேன் நிரூ, நீங்க உங்க நேமிசாக்குட்டியோட காதோரம் ஏதேதோ பிசத்த அதற்கெல்லாம் அர்த்தம் கற்பித்து நேமிசா எழுதின கவிதைதானே இது. ஏன்னா அந்தப்பொண்ணு பக்கத்திலை நிற்க நகத்தைமட்டும் தொட்டுகிட்டு கவிதை படிப்பாராம் பச்சப்புள்ள நிரூ அதை நாம நம்பணுமாம். ஹா ஹா.
நிரூ, உண்மையாகவே நீங்க இதுவரை எழுதின கவிதகளிலை இதுதான் Top.
Post a Comment