Friday, June 24, 2011

பிரபல பதிவரால் ப்ராப்ளம் ஆன பெண்- உண்மைச் சம்பவம்!

ச்சரிக்கை:  இப் பதிவில் வரும் உரையாடல்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல. நிஜமே. உலகின் எங்கோ ஓர் மூலையில் ஒரு பதிவர் வீட்டில் இச் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால், இது தமது வீட்டுக் கதை என யாராவது 
உரிமைகோரினால், அதற்கு கம்பனி பொறுப்பல்ல.

டிங்குசா: ’என்னங்க நீங்க , எப்ப பார்த்தாலும் கம்பியூட்டர் முன்னாடியே இருக்கிறீங்க, வீட்டில குழந்தை அழுவுற சத்தம் கூட உங்க காதிலை கேட்க மாட்டேங்குது.
பதிவெழுதுறாராம், பதிவு! பெரிய உலக மகா பதிவர் என்ற நினைப்பில, வூட்டுல என்ன நடக்குதென்ற நிலமை தெரியாம 24 மணி நேரமும் லப்பு டாப்பைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டே இருக்கிறீங்க.  

நான் ஒருத்தி, இஞ்ச சமைக்கனும், புள்ளையைப் பார்க்கனும். வேலையக் கவனிக்கனும் என்று இருக்கேன். அது தெரியாம நீங்க. 
இல்லத் தெரியாமற் தான் கேட்கிறேன். உங்க மனசில நீங்க என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறீங்க?

டிங்குசன்: உம்மடை வாயைக் கொஞ்சம் மூடி வைச்சுக் கொண்டு, அழுற பிள்ளையப் பார்த்துக் கொண்டு சமையும் பார்ப்பம். நான் எப்படா ஒருத்தன் வந்து ஏழாவது ஓட்டுப் போட்டு என் பதிவினைத் தமிழ் மணம் மூலமா ஹிட் ஆக்குவான் என்று Page Refresh பணிப் பண்ணிக் காத்திட்டிருக்கேன்.

நீ வேறை...குழந்தை அழுதா, புட்டிப் பாலைக் கொடுத்துத் தூங்க பண்ண வேண்டியது தானே? அதை வுட்டிட்டு சும்மா வந்து தொண தொணத்துக் கொண்டு...
வாயை மூடிக் கிட்டு வேலையைப் பார்க்கலாமமில்லே...
இன்னைக்கு யார் முதல் கமெண்ட் போட்டாங்களோ தெரியலை. என்னோடை ராசி! கூட்டம் கம்மியாவே இருக்கு. 

டிங்குசா: இஞ்சாருங்கோ,  கறி வைக்க மிளகாய்ப் பொடி தீர்ந்து போச்சு, கோவிச்சுக் கொள்ளாமல் அந்த மூனாவது சந்திக் கடையிலை வாங்கியாறீங்களா? நான் குழந்தையினையும் பார்த்துக் கிட்டு, மறு பக்கத்திலை சமையலையும் கவனிச்சுக் கொண்டு எப்படியுங்க வெளியே போக முடியும்?

டிங்குசன்: உமக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிப் போட்டேன். என் பதிவு ஹிட் ஆகலலை என்ற கோபம் ஒரு புறம், அடுத்த பதிவிற்கான சிந்தனை மறு புறம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னையைச் சீண்டி இந்த வூட்டிலை ஒரு ரண களத்தை ஏற்படுத்திடாதேம். பேசமா நீர் போய் வாங்கிக் கொண்டு வரலாமில்லே!

டிங்குசா: நானும் பார்த்துக் கிட்டுத் தான் இருகேன், நீங்க ஆம்பிளையா? கலியாணம் கட்டி இன்னைக்கு எத்தினை நாளாவுது? 
கட்டின ஒரு வருசமும் 
’புதுப் பொண்டாட்டியைக் கண்ட ஆர்வத்திலை ‘கண்ணே, கரும்பே, கனியே, செல்லமே, சுவிற்றியே, டார்லிங்கே என ஓடோடி வந்தீங்க. 

எப்போ இந்த நாசமாப் போன ப்ளாக் எழுத தொடங்கினீங்களோ அன்றைக்கே என் வாழ்க்கைக்கு ஆப்பு வைச்சிட்டீங்க. 
நீங்க ப்ளாக் எழுதிக் கும்மியடிப்பதை நான் டிஷ்ரப்(Disturbance) பண்ணக் கூடாது என்பதற்காய், கட்டின மூனு மாசத்துக்கை ஒரு புள்ளையையும் தந்து, என் வாழ்க்கையை நாலு சுவத்துக்கை முடிச்சுப் போட்டு,
நீங்க பாட்டுக்கு ஆப்பிசு, ரோட்டு என போற வாற இடம் எல்லாம் ப்ளாக் ப்ளாக் என்று நாயா அலையுறீங்களே! இது நியாயமா? சொல்லுங்க. 


டிங்குசன்: என்னோட செல்லமெல்லே, நான் சொன்னா கேட்பீங்க தானே, 
என் செல்லக் குட்டி டிங்கி! 
உங்களுக்குத் தானே பொழுது போக, ஒரு புள்ளையைத் தந்திருக்கிறேன். அது கூட விளையாடி நேரத்தை செலவழிக்கலாமில்லே. அத்தான் பாவமில்லே, அத்தானை இடைஞ்சல் பண்ணாம ப்ளாக் எழுத விடுறீங்களா.

டிங்குசா: என்ன ப்ளாக் எழுதல் வேண்டிக் கிடக்கு? இன்னைக்கு இரண்டிலை ஒன்னு பார்த்திட வேண்டியது தான்.  நீயெல்லாம் மனுசனாய்யா? 

முன்பெல்லாம் ஆப்பிசுக்குப் போனா, 
கலியாணம் கட்டின புதுசில; 
ஒரு நாளைக்கு மூனு, நாலு போன் கோல் போட்டு நலம் விசாரிப்பீங்க, தேன் ஒழுகிற மாதிரி ‘ஐ லவ்யூடா செல்லம், ஐ லவ்யூடா டிங்கி! என்று பேசிப் பேசிப் சொக்க வைப்பீங்க. 

இப்ப அது கூட இல்லை, ஆப்பிஸ் போனதிலை இருந்து வாற வரைக்கும், ஏன் ஆப்பிசாலை வந்தா கூட நான் ஒருத்தி ஹன்சிகா மாதிரி அழகுச் சிலையா வீட்டில இருக்கிறேன் என்ற நினைப்புக் கூட இல்லாம கம்பியூட்டர் முன்னாடியே உட்கார்ந்திருக்கிறீங்க.  என்ன குறுக்க பேசுறது, அதான் நான் பேசிக்கிட்டிருக்கேனில்ல. 
பேசி முடிச்சதுக்கு அப்புறமா பேசுங்க. 

ரோட்ல என் கூட ஷாப்பிங் வந்தா கூட மொபைல் போனில் ப்ளாக்கை நோண்டிக் கிட்டிருக்கிறது. யார் யார் கமெண்ட் போடுறாங்க என்று கணக்குப் பார்க்கிறது. நீயெல்லாம் மனுசனாய்யா? பேசாம ஒரு ப்ளாக்கை கலியாணம் பண்ணியிருக்க வேண்டியது தானே? பிறகேன் என்னையைக் கட்டி உசிரை வாங்கிறாய்?

டிங்குசன்: பேசி முடிச்சிட்டியா. என் ராசாத்தி!! 

ப்ளாக் எழுதுவதால் நண்பர்கள் அதிகமாகுவாங்க. நான் பிரபலம் ஆகினால் எனகென்று ரசிகர்கள் தோன்றுவாங்க. இதையெல்லாம் வுட்டிட்டு, கட்டின மனுசி உன் கூட இருந்து மாரடிக்கச் சொல்லுறியா? 
என்ன பேச்சுப் பேசுறாய் நீயி? உனக்கு வர வர வாய்க் கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சு..

டிங்குசா: பின்ன என்னங்க! நீங்க ஆப்பிசுக்குப் போனாப்புறம், நம்ம பையனைத் தூங்கப் பண்ணிட்டுப் பொம்பிளை பதிவர்கள் சிலரோடை குடுமிப் பிடிச் சண்டைப் பதிவுகளைப் படிச்சால், வாய்க் கொழுப்புக் கூடாம பின்ன என்ன கூடும்?
அறிவா வளரப் போகுது???

டிங்குசன்: ஆகா, இப்ப நீ கூட அலேர்ட்டாகிட்டியா?  

ப்ளாக் படிக்க ஆரம்பிச்ச்சிருக்கிறியே, எப்போ ப்ளாக் எழுதப் போறாய்? அதெல்லாம் ஏன் நான் உங்க கிட்ட சொல்ல வேண்டியிருக்கு? காலங்காத்தால எந்திரிச்சதில இருந்து, நைட் தூங்கப் போகும் வரைக்குக்கும் கம்பியூட்டரையே கட்டிப் பிடிச்சுக் கிட்டிருக்க வேண்டியது, 

தூக்கம் வந்து தூங்கப் போனாக் கூட, நிம்மதியா தூங்க விடுறீங்களா? இல்லையே.  

மிட் நைட்டிலை எந்திரிச்சு, மொபைல் போனிலை ப்ளாக்கிற்கு எத்தினை ஓட்டு வந்திருச்சு? எத்தினை கமெண்டு வந்திருச்சு என்று செக் பண்ண வேண்டியது. உங்களோடை பெரிய தொல்லையாப் போச்சுங்க..

நீயெல்லாம் மனுசனாய்யா.. நீயும் உன்னோடை கம்பியூட்டரும். பேசாம கம்பியூட்டரைக் கலியாணம் பண்னியிருக்க வேண்டியது தானே? பிறகேன் என்னையக் கட்டி, என் உசிரை வாங்கிக் கொண்டிருக்கிறாய். ப்ளாக் எழுதுறியா? ப்ளாக்கு. நாதாரிப் பயலே, இன்னையோட உன் ப்ளாக் வாழ்க்கைக்கு வைக்க்றேன் பாரு ஆப்பு....

டிஸ்கி: டிங்குசா......கண்களில் கோபம் கொப்பளிக்க, கம்பியூட்டர் மேசையினை நோக்கி ஓடுகிறா. கையில் அகப்பையுடனும், பூரிக் கட்டையுடனும் தன்னை நோக்கி வரும் டிங்குசாவைப் பார்த்து வியப்பிற்குள்ளாகி நிற்கிறார் பிரபல பதிவர். இதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது உங்களின் கற்பனைக்காக............................

139 Comments:

Mahan.Thamesh said...
Best Blogger Tips

வடை எனக்கு

சுதா SJ said...
Best Blogger Tips

தேங்க்ஸ் தேங்க்ஸ் நிரூபன் பாஸ்
முதல் முதல் மழை என்னை நனைத்ததே

Mahan.Thamesh said...
Best Blogger Tips

வணக்கம் சகோ வாசித்துவிட்டு கருத்து போடுறேன்

சுதா SJ said...
Best Blogger Tips

தமிழ்மணம் தமிழ் 10 இட்ணி
3ளையும் ஓட்டும் போட்டாச்சு

சுதா SJ said...
Best Blogger Tips

அட தமேஸ் பாஸ் முந்திட்டார்

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///எச்சரிக்கை: இப் பதிவில் வரும் உரையாடல்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல. நிஜமே. உலகின் எங்கோ ஓர் மூலையில் ஒரு பதிவர் வீட்டில் இச் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால், இது தமது வீட்டுக் கதை என யாராவது
உரிமைகோரினால், அதற்கு கம்பனி பொறுப்பல்ல./// சாரி, எனக்கு இன்னமும் கண்ணாணம் ஆகல...

சுதா SJ said...
Best Blogger Tips

வெயிட் பதிவ படிச்சுட்டு வாறன்

Mahan.Thamesh said...
Best Blogger Tips

டிங்குசா: ’என்னங்க நீங்க , எப்ப பார்த்தாலும் கம்பியூட்டர் முன்னாடியே இருக்கிறீங்க, வீட்டில குழந்தை அழுவுற சத்தம் கூட உங்க காதிலை கேட்க மாட்டேங்குது.
பதிவெழுதுறாராம், பதிவு! பெரிய உலக மகா பதிவர் என்ற நினைப்பில, வூட்டுல என்ன நடக்குதென்ற நிலமை தெரியாம 24 மணி நேரமும் லப்பு டாப்பைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டே இருக்கிறீங்க.

நான் ஒருத்தி, இஞ்ச சமைக்கனும், புள்ளையைப் பார்க்கனும். வேலையக் கவனிக்கனும் என்று இருக்கேன். அது தெரியாம நீங்க.
இல்லத் தெரியாமற் தான் கேட்கிறேன். உங்க மனசில நீங்க என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறீங்க?
வழக்கமா ஒவ்வொரு வீட்டிலையும் மனைவி கேட்குற கேள்வி அப்படியே வலைப்பதிவர இருந்த இப்படிதான் விழும் போல யதார்த்தமான வரிகள் .
சரி பேரை எங்க பிடிச்சிங்க டிங்குசா

சுதா SJ said...
Best Blogger Tips

ஹிஹி
எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல்ல

Mahan.Thamesh said...
Best Blogger Tips

நான் எப்படா ஒருத்தன் வந்து ஏழாவது ஓட்டுப் போட்டு என் பதிவினைத் தமிழ் மணம் மூலமா ஹிட் ஆக்குவான் என்று Page Refresh பணிப் பண்ணிக் காத்திட்டிருக்கேன்.
அனுபவமா சகோ

Anonymous said...
Best Blogger Tips

///நீ வேறை...குழந்தை அழுதா, புட்டிப் பாலைக் கொடுத்துத் தூங்க பண்ண வேண்டியது தானே? /// இப்பத்த புருசன்மாரெல்லாம் மனைவி அழகு கெட்டுடிடக்கூடாதெண்டு அலேட்டாயே இருக்கிறாங்கையா..)))

Mahan.Thamesh said...
Best Blogger Tips

துஷ்யந்தன் said...
ஹிஹி
எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல்ல

ஆகும்ல அப்ப இருக்கடி உனக்கு சங்கு

சுதா SJ said...
Best Blogger Tips

//மிட் நைட்டிலை எந்திரிச்சு, மொபைல் போனிலை ப்ளாக்கிற்கு எத்தினை ஓட்டு வந்திருச்சு? எத்தினை கமெண்டு வந்திருச்சு என்று செக் பண்ண வேண்டியது. உங்களோடை பெரிய தொல்லையாப் போச்சுங்க..//

இது எல்லா பதிவர்களினதும் பலவீனம்

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

நண்பரே!
பதிவர்களது வாழ்க்கையை இப்படியெல்லாம் நேரடி ஒளிபரப்பு பண்ணக்கூடாது.இது கண்டிக்கத்தக்கது.

Anonymous said...
Best Blogger Tips

///’புதுப் பொண்டாட்டியைக் கண்ட ஆர்வத்திலை ‘கண்ணே, கரும்பே, கனியே, செல்லமே, சுவிற்றியே, டார்லிங்கே என ஓடோடி வந்தீங்க. /// அது தான் முப்பது நாள் கடந்து அறுபது நாளுமாச்சே பிறகென்ன கண்ணே கண்டுக்குட்டியே எண்டுக்கிட்டு...))

Mahan.Thamesh said...
Best Blogger Tips

பதிவுக்கு பொருத்தமான படங்கள்

சுதா SJ said...
Best Blogger Tips

//Mahan.Thamesh said...
துஷ்யந்தன் said...
ஹிஹி
எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல்ல

ஆகும்ல அப்ப இருக்கடி உனக்கு சங்கு//


நாங்க எல்லாம் உசாருப்பா..
கல்யாணம் ஆனதும் ப்ளோக்ல இருக்குறத நிப்பாட்டிருவோம் இல்ல,
பக்கத்தில் ஒரு பொண்ண வைச்சுட்டு யாரு பாஸ் கொம்பியுடற தொடுவான்
எப்புடி

Mahan.Thamesh said...
Best Blogger Tips

மிட் நைட்டிலை எந்திரிச்சு, மொபைல் போனிலை ப்ளாக்கிற்கு எத்தினை ஓட்டு வந்திருச்சு? எத்தினை கமெண்டு வந்திருச்சு என்று செக் பண்ண வேண்டியது. உங்களோடை பெரிய தொல்லையாப் போச்சுங்க.

ஹி ஹி நான் மட்டும் தான் இப்படி ஏன்னு பார்த்த நீங்களுமா

Anonymous said...
Best Blogger Tips

////நீங்க ப்ளாக் எழுதிக் கும்மியடிப்பதை நான் டிஷ்ரப்(Disturbance) பண்ணக் கூடாது என்பதற்காய், கட்டின மூனு மாசத்துக்கை ஒரு புள்ளையையும் தந்து, என் வாழ்க்கையை நாலு சுவத்துக்கை முடிச்சுப் போட்டு,/// அல்லேர்ட்டு ஆறுமுகம் போல ...))

சுதா SJ said...
Best Blogger Tips

நிரூபன் பாஸ்
சூப்பர் பதிவு
சூப்பர் படங்கள்
ரியலி சூப்பர் பாஸ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

வடை எனக்கு//

சந்தேகமே இல்லை, வடை உங்களுக்குத் தான், ஆனால் பூசைக்குரிய தட்சணையை கொடுத்தால் தான் வடை தர முடியும்..

ஹி...ஹி...!

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

தேங்க்ஸ் தேங்க்ஸ் நிரூபன் பாஸ்
முதல் முதல் மழை என்னை நனைத்ததே//

உங்களுக்கு முன்னாடியே, நம்ம மகேன் தமேஷ் வடையினக் கவ்விட்டாரே;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh


வணக்கம் சகோ வாசித்துவிட்டு கருத்து போடுறேன்//

வாசித்து விட்டு வாங்கோ...

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

தமிழ்மணம் தமிழ் 10 இட்ணி
3ளையும் ஓட்டும் போட்டாச்ச//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்


அட தமேஸ் பாஸ் முந்திட்டார்//

நிஜமாவா...
ஹி....ஹி....

Anonymous said...
Best Blogger Tips

////டிங்குசா......கண்களில் கோபம் கொப்பளிக்க, கம்பியூட்டர் மேசையினை நோக்கி ஓடுகிறா. கையில் அகப்பையுடனும், பூரிக் கட்டையுடனும் தன்னை நோக்கி வரும் டிங்குசாவைப் பார்த்து வியப்பிற்குள்ளாகி நிற்கிறார் பிரபல பதிவர். இதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது உங்களின் கற்பனைக்காக..//// அப்புறமென்ன கம்பியூட்டர கவிட்டு வச்சா குப்பை தொட்டியா பாவிக்கலாம், இல்ல பக்கத்து வீட்டு பசங்களிட்ட பிரிச்சு மேஞ்சு விளாட கொடுக்கலாம்.... முடிவு டிங்குசன்ர கையில தான் ...) ஆமா, அந்த டிங்குசன் நீங்க இல்ல தானே ..))

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்

/// சாரி, எனக்கு இன்னமும் கண்ணாணம் ஆகல...//

இப்படி ஓப்பினாச் சொல்லுற பசங்களைத் தான் நம்பக் கூடாதாம்;-))
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்


வெயிட் பதிவ படிச்சுட்டு வாறன்//

தூக்கம் வருது பாஸ், வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது,
ஏதோ செல்போனில லவ்வர் கிட்ட சொல்லுற மாதிரிப் பேசுறீங்க;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

வழக்கமா ஒவ்வொரு வீட்டிலையும் மனைவி கேட்குற கேள்வி அப்படியே வலைப்பதிவர இருந்த இப்படிதான் விழும் போல யதார்த்தமான வரிகள் .
சரி பேரை எங்க பிடிச்சிங்க டிங்குசா//

அதனை அந்தப் பதிவர் கிட்டத் தான் கேடகனும்.
பெயரா...சும்மா யோசிக்கும் போது வந்திச்சு மாப்ளே.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

ஹிஹி
எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல்ல//

இப்படி பப்ளிக்கில ஓப்பினாப் பேசுற பசங்களைத் தான் நம்பக் கூடாது...
ஹி...ஹி....

Anonymous said...
Best Blogger Tips

ஹும், பல பதிவர்களின் கண்ணீர் கதையை காவி வந்து வலைத்தளத்தில் ஏற்றியுள்ளீர்கள்... ))
நகைச்சுவை கலந்த பதிவு... எழுத்துநடை சூப்பர் பாஸ் ..

எனக்கு கண்ணை கட்டுது இரவு வணக்கம்....

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

அனுபவமா சகோ//

அடிங்...என்னா பேச்சுப் பேசுறீங்க...
நமக்கும் இன்னமும் கலியாணம் ஆகலை பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

/// இப்பத்த புருசன்மாரெல்லாம் மனைவி அழகு கெட்டுடிடக்கூடாதெண்டு அலேட்டாயே இருக்கிறாங்கையா..)))//

அட்ரா....அட்ரா....அட்ரா...
அப்பிடிப் போடுங்க பாஸ் அருவாளை!

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh

துஷ்யந்தன் said...
ஹிஹி
எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல்ல

ஆகும்ல அப்ப இருக்கடி உனக்கு சங்கு//

அஃதே....அஃதே....அஃதே.....

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்


இது எல்லா பதிவர்களினதும் பலவீனம்//

மகா ஜனங்களே, பார்த்தீங்களா? அண்ணன் பப்பிளிக்கிலை வெட்கப்படாம உண்மையை ஒத்துக்கிட்டிருக்காரு.

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்


நண்பரே!
பதிவர்களது வாழ்க்கையை இப்படியெல்லாம் நேரடி ஒளிபரப்பு பண்ணக்கூடாது.இது கண்டிக்கத்தக்கது.//

அவ்....அப்போ உங்க வீட்டிலையும் இப்படி ஏதாச்சும் நடந்திருக்கா....

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

/// அது தான் முப்பது நாள் கடந்து அறுபது நாளுமாச்சே பிறகென்ன கண்ணே கண்டுக்குட்டியே எண்டுக்கிட்டு...))//

நான் எப்பவுமே யூத்து பாஸ்....
பிச்சுப் புடுவே பிச்சு...

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh


பதிவுக்கு பொருத்தமான படங்கள்//

நன்றி மாப்ளே....

Mahan.Thamesh said...
Best Blogger Tips

@நிரூபன்

தட்சனை தானே நீங்க கேட்ட 3 தட்டிலையும் போட்டுவிட்டேன் இதுக்கு மேல முடியாது

நிரூபன் said...
Best Blogger Tips

@Mahan.Thamesh


ஹி ஹி நான் மட்டும் தான் இப்படி ஏன்னு பார்த்த நீங்களுமா//

ஏன் பாஸ், இப்படி ஓர் கேள்வியை நீங்க என்னைப் பார்த்துக் கேட்கிறீங்க, இது நம்ம துஸ்யந்தனிடம் நீங்க கேட்க வேண்டிய கேள்வி பாஸ்...
ஹி....ஹி....

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

அல்லேர்ட்டு ஆறுமுகம் போல ...)//

அவ்.......

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

நிரூபன் பாஸ்
சூப்பர் பதிவு
சூப்பர் படங்கள்
ரியலி சூப்பர் பாஸ்//

படங்களுக்குரிய பாராட்டினை நீங்கள் நம்ம கந்தசாமி அண்ணருக்குத் தான் சொல்லனும்,
அவரோடை உபயம் தான் இந்தப் படங்கள்.

நன்றி மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

அப்புறமென்ன கம்பியூட்டர கவிட்டு வச்சா குப்பை தொட்டியா பாவிக்கலாம், இல்ல பக்கத்து வீட்டு பசங்களிட்ட பிரிச்சு மேஞ்சு விளாட கொடுக்கலாம்.... முடிவு டிங்குசன்ர கையில தான் ...) ஆமா, அந்த டிங்குசன் நீங்க இல்ல தானே ..))//

நிஜமாவே அது நான் நில்லை பாஸ்...
ஹி....ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

ஹும், பல பதிவர்களின் கண்ணீர் கதையை காவி வந்து வலைத்தளத்தில் ஏற்றியுள்ளீர்கள்... ))
நகைச்சுவை கலந்த பதிவு... எழுத்துநடை சூப்பர் பாஸ் ..

எனக்கு கண்ணை கட்டுது இரவு வணக்கம்....//

சகோ, பதிவிற்கு உயிர்ப்பூட்டும் வகையில் படங்களைத் தெரிவு செய்து தந்திருக்கிறீங்க.
உங்களுக்கு நான் தான் இவ் இடத்தில் நன்றி சொல்லனும்,

இனிய இரவு வணக்கங்கள் பாஸ்.

சுதா SJ said...
Best Blogger Tips

//நிரூபன் said...
@Mahan.Thamesh


ஹி ஹி நான் மட்டும் தான் இப்படி ஏன்னு பார்த்த நீங்களுமா//

ஏன் பாஸ், இப்படி ஓர் கேள்வியை நீங்க என்னைப் பார்த்துக் கேட்கிறீங்க, இது நம்ம துஸ்யந்தனிடம் நீங்க கேட்க வேண்டிய கேள்வி பாஸ்...
ஹி....ஹி.... //

என்ன இது சின்னப்புள்ள தனமா
இப்புடியா பப்புளிக்க அண்ணன அசிங்கப்படுத்துறது
அவ்வவ்

சுதா SJ said...
Best Blogger Tips

//நிரூபன் said...
@துஷ்யந்தன்

ஹிஹி
எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல்ல//

இப்படி பப்ளிக்கில ஓப்பினாப் பேசுற பசங்களைத் தான் நம்பக் கூடாது...
ஹி...ஹி....
//

இப்போ எல்லாம் ஒப்பன பேசுற பசங்களைத்தான் பொண்ணுங்களுக்கு புடிக்குது தெரியும் இல்ல lol

Unknown said...
Best Blogger Tips

nalla velai enakku innum kalyanam aaga vilai .aanaal umaiyai ippadiyellam pottu udaikkakoodathu

Prabashkaran Welcomes said...
Best Blogger Tips

செம காமெடி

எல் கே said...
Best Blogger Tips

ஹிட்ஸ் /ரேங்கிங் இதற்காக நெறைய பேர் இப்படிதான் இருக்கிறார்கள் . வருத்தம் தரக்கூடிய உண்மை :(

சிவ.சி.மா. ஜானகிராமன் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் சார்..

சத்தியமான உண்மை..

நான்கூட இப்ப கொஞ்ச நாளா இப்படித்தான் இருக்கேன்.

எங்க வீட்டுலேயும் இதே கருத்துக்கள்..
நானும் இப்பத்தான் இந்த உண்மைகளை உணர ஆரம்பிச்சிருக்கேன்..

பிளாக் எழுதறது ஒரு அடிமைத்தனமாவே ஆயிடுச்சி..

மத்தவங்க என்ன நினைப்பாங்க ? என்று நினைக்கும் பதிவர்கள் ..

நம் வீட்டில் என்ன நினைப்பார்கள் என்பதை யோசிப்பதில்லை என்பது உண்மையாகவே தோன்றுகிறது..

உங்கள் பதிவு சத்தியமான ஒரு விழிப்புணர்வாகும..

இதைப் படித்து திருத்திக் கொள்ளும் பதிவர்கள் இல்லம் மகிழ்ச்சியால் பொங்கும்..

அத்துணைப் பெண்களின் வாழ்த்தும் உங்களைச் சேரும்...

மிக்க நன்றி..

அன்பன் சிவ. சி.மா.ஜா

http://sivaayasivaa.blogspot.com

Unknown said...
Best Blogger Tips

மாப்ள யார் வீட்ல கேமரா வச்ச....சொல்லுய்யா உண்மைய!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

haa ஹா ஹா செம காமெடி நிரூபா.. சீரியஸ் கட்டுரை 1 , நகைச்சுவை 1 இந்த டீலிங்க் ஓக்கே

கூடல் பாலா said...
Best Blogger Tips

பெண்கள் கூடத்தான் தொலைக்காட்சியில் தொடர் நாடகம் வந்தால் எல்லாவற்றையும் மறந்து விடுகிறார்கள் ....(மனைவிகளால் பாதிக்கப்பட்ட பதிவர்களின் மன ஆறுதலுக்காக !)

vidivelli said...
Best Blogger Tips

சுப்பர்.......... பதிவு நண்பா
வாழ்த்துக்கள்.......


நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
ஓடிவாங்கோ..........

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

ஏம்பா நிரு.... நிறைய பதிவர்கள் இந்த டாபிக்குக்கு காப்பிரைட் வாங்கி வச்சிருப்பாங்களே! நீங்க பெர்மிஷன் வாங்குனிங்களா?

Ram said...
Best Blogger Tips

காலங்காத்தால ஏன் யா கடுப்பேத்துற.!!? ம்ம்.. உனக்கு கல்யாணம் ஆனத யார்கிட்டயும் சொல்லமாட்டேன் விடு..

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

அற்புதம் சகோ
என்னை மாதிரி மனைவிக்கு பயந்து பொண்டாட்டி தாசர்களாக வாழும் வாயில்லா பூச்சிகளைப் பற்றி எழுதி நாங்கள் படும் பாடுகளை சொல்லியவிதம் அருமை
வாழ்த்துக்கள் சகோ நீங்களும் வெகு சீக்கிரமே எங்கள் அணியில் இணைய வாழ்த்துக்கள்

maruthamooran said...
Best Blogger Tips

யாரோ ஒரு பதிவருக்கு நடந்த சம்பவம் தானே! நம்ம நிரூபனுக்கு நடந்ததில்லையே?! ஹிஹிஹி

பொஸ்…..! நம்மட மொழி நடை ரொம்ப அழகுதான். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ரசித்தேன்!

test said...
Best Blogger Tips

நம்மள மாதிரி திருட்டுப்பதிவர்களின் (வீட்டில் உள்ளோருக்குத் தெரியாமல் எழுதும்) நிலைமை என்னாகுமோ? :-)

Unknown said...
Best Blogger Tips

அட இந்த பயத்தில் தான் கல்யாணம் வேண்டாம் என்று சொல்றிங்களா சகோ ...

Unknown said...
Best Blogger Tips

நல்ல பதிவு,காமெடி கலாட்டா பண்ணிடீங்க சகோ , எல்லா ஓட்டும் போட்டாச்சு .

Unknown said...
Best Blogger Tips

நான் மிகவும் கோபமாய் இருக்கிறேன்
அதுக்காக சிரிக்காம இருக்க
முடியுமா ஆனாலும் கோவமாகத்தான்
இருக்கிறேன்

புலவர் சா இராமாநுசம்

Prabu Krishna said...
Best Blogger Tips

Ha Ha Ha

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

பதிவெழுதுவதே ஒரு போதையாகிப் போனால்,இப்படித்தான் நடக்கும்.அருமை,நிரூபன்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

சாரி, எனக்கு இன்னமும் கண்ணாணம் ஆகல...........!ஹி!ஹி!!!ஹி!!!
எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல்ல!

Yoga.s.FR said...
Best Blogger Tips

///நான் ஒருத்தி "ஹன்சிகா" மாதிரி அழகுச் சிலையா வீட்டில இருக்கிறன்!///உள் குத்து?வன்மையாக?!க் கண்டிக்கிறேன்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

"ஹன்சிகா"வுடன் ஒப்பிட என்ன துணிச்சல்?ஓட்ட வடைக்கு தெரிஞ்சா என்னாகும் என்று "ஒரு" கணம் சிந்தித்துப் பார்த்தீர்களா?டங்குவார் அறுந்துடும்,ஆமா சொல்லிப்புட்டேன்!

Unknown said...
Best Blogger Tips

பலே நிரூபன் பலே எல்லா பதிவர் வீட்டுலயும் இது பொது தான் போலருக்கே

சசிகுமார் said...
Best Blogger Tips

உங்களுக்கு ஆச்சா இது போல.... யாருக்கு நடந்திருக்கும்????

தேவியில்லாததை துருவித்துருவி யோசிப்போர் சங்கம்.........

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மாப்ள நான் ரொம்ப லேட் ன்னு நினைக்கிறேன் ..

தனிமரம் said...
Best Blogger Tips

இப்படி உள்குத்துக் குத்தினால் ஹான்சிக்ஹா வரமாட்டா! நல்ல பதிவு நண்பா உண்மையில் பதிவு போடுவதும் ஒரு போதைதான் என்றாளும் பலகருத்துக்களை பரிமாறும் இடம். நீங்கள் தப்பிவிடுவீர்கள் நமக்குத்தான்  உலக்கை வரும் பாஸ் அம்மாவிடம் இருந்து நாங்கெல்லாம் நம்ம மனோ சார் மாதிரி தனிச் சிங்கம்கள்!

Harini Resh said...
Best Blogger Tips

HA HA supper Niruban :)

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

என்ன ஒரு கற்பனை வளம்...

தற்போது இது போன்ற உரையாடல் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நகைச்சுவையுடன் ஒன்றை அறங்கேற்றி சபாஷ் வாங்கி விட்டீர்...

இது உள் குத்து ஏதும் இல்லைதானே...

Admin said...
Best Blogger Tips

எனக்கு இன்னும் கல்யாணம் அகவில்லை..

செங்கோவி said...
Best Blogger Tips

//டிஸ்கி 2: இப் பதிவிற்கான படங்களைத் தனது கை வண்ணத்தின் மூலமும், கணினியின் உதவியோடும் அருளியவர், நண்பர் நிகழ்வுகள் கந்தசாமி.// படம் மட்டுமா, இல்லே பதிவுல வர்றவரும் அவர் தானா?

செங்கோவி said...
Best Blogger Tips

ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்களேஏ..கல்யாணம் ஆனவங்க பாவம் உம்மைச் சும்மா விடாதுய்யா.

கவி அழகன் said...
Best Blogger Tips

எழுத வந்த புதுசில எலாரும் இப்படித்தான்
புது விளக்குமாறு நல்லா கூட்டும்
தேய தேய ...........

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அந்த மூணாவது போட்டாதான் டாப்பே, ஆமா அந்த ஆளு லேப்டாப்பை காறி துப்புறானோ...?

Mathuran said...
Best Blogger Tips

பாஸ் உங்களுக்கு கல்யாணம் ஆகேல்ல எண்ட கடுப்பில இப்பிடியா போடுறது

Mathuran said...
Best Blogger Tips

இப்பிடியெல்லாம் உண்மைய பதிவா போட்டா அப்புறம் எப்பிடி கல்யாணம் ஆகும்..

Mathuran said...
Best Blogger Tips

சரி சரி விடுங்க... அதெல்லாம் நம்ம புறோக்கர்மார் பார்த்துகொள்ளுவாங்க..
நீங்க பீல் பண்ணாதிங்க பாஸ்.. உங்களுக்கு கல்யாணம் ஆயிரும்.. ஆயிரும்...ஆயிரும்

Mathuran said...
Best Blogger Tips

//டிங்குசா......கண்களில் கோபம் கொப்பளிக்க, கம்பியூட்டர் மேசையினை நோக்கி ஓடுகிறா. கையில் அகப்பையுடனும், பூரிக் கட்டையுடனும் தன்னை நோக்கி வரும் டிங்குசாவைப் பார்த்து வியப்பிற்குள்ளாகி நிற்கிறார் பிரபல பதிவர். இதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது உங்களின் கற்பனைக்காக.///

பாஸ் நான் முழுவதையும் கற்பனை பண்ணி பார்த்தன்... பட் அந்த டிங்குசன் இடத்தில உங்கள வச்சுத்தான் கற்பனை பண்ணினன்... சூப்பர் காமடியா இருந்திச்சு

Mathuran said...
Best Blogger Tips

படங்கள் சூப்பர்.. கந்தசாமி கலக்கிட்டார்

Mathuran said...
Best Blogger Tips

//துஷ்யந்தன் said...
ஹிஹி
எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல்ல//

புரியல்லயா நிரூபன்.... நம்ம துஷ்யந்தன் பாஸ் தனக்கு பொன்னு பார்க்கச்சொல்லி மறைமுகமா கேட்குறாரு

Mathuran said...
Best Blogger Tips

//துஷ்யந்தன் said...
//Mahan.Thamesh said...
துஷ்யந்தன் said...
ஹிஹி
எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகல்ல

ஆகும்ல அப்ப இருக்கடி உனக்கு சங்கு//


நாங்க எல்லாம் உசாருப்பா..
கல்யாணம் ஆனதும் ப்ளோக்ல இருக்குறத நிப்பாட்டிருவோம் இல்ல,
பக்கத்தில் ஒரு பொண்ண வைச்சுட்டு யாரு பாஸ் கொம்பியுடற தொடுவான்
எப்புடி//

ஆஹா ஆஹா இப்பவே பிளானிங் போட்டாச்சா?

Yoga.s.FR said...
Best Blogger Tips

மதுரன் said... நீங்க பீல் பண்ணாதிங்க பாஸ்.. உங்களுக்கு கல்யாணம் ஆயிரும்........... ஆயிரும்.........ஆயிரும்........////கலியாணம் ஒரு(1)தரம்!கலியாணம் இரண்டு(2)தரம்!!கலியாணம் மூன்று(3)தரம்!!!

Mathuran said...
Best Blogger Tips

//Yoga.s.FR said...
மதுரன் said... நீங்க பீல் பண்ணாதிங்க பாஸ்.. உங்களுக்கு கல்யாணம் ஆயிரும்........... ஆயிரும்.........ஆயிரும்........////கலியாணம் ஒரு(1)தரம்!கலியாணம் இரண்டு(2)தரம்!!கலியாணம் மூன்று(3)தரம்!!!//

ஏன் இப்புடி அவசரப்படுறீங்க... நிரூபனுக்கு முதல் ஒரு கல்யாணம் நடக்கட்டும்... மிகுதிய அப்புறமா பார்த்துக்கலாம்

Yoga.s.FR said...
Best Blogger Tips

புலவர் சா இராமாநுசம் said...
நான் மிகவும் கோபமாய் இருக்கிறேன்
அதுக்காக சிரிக்காம இருக்க
முடியுமா?ஆனாலும் கோவமாகத்தான்
இருக்கிறேன்!////ஐயா!ஏனுங்கோ?உங்களுக்கே இந்த நிலையென்றால்?இருந்தாலும் சிறியவனால் முடிந்தது,மனசார துக்கப்படுவது தவிர வேறென்ன செய்ய முடியும்?வல்லவனை வேண்டுகிறேன்,பொறுமை காக்க!

Yoga.s.FR said...
Best Blogger Tips

மதுரன் said.......ஏன் இப்புடி அவசரப்படுறீங்க... நிரூபனுக்கு முதல் ஒரு கல்யாணம் நடக்கட்டும்... மிகுதிய அப்புறமா பார்த்துக்கலாம்./////ஐயய்ய!தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க!மக்களுக்கு கேக்கட்டுமேன்னு மூணு தடவ ஒரக்கக் கூவினேன்,அம்புட்டுத்தேன்!பையன் தங்கக் கம்பீல்ல?ஒண்ணு போதும்!

Mathuran said...
Best Blogger Tips

//Yoga.s.FR said...
பையன் தங்கக் கம்பீல்ல?ஒண்ணு போதும்!//

இதில டபுள் மீனிங் ஏதும் இல்லயே???
ஹி ஹி

Jana said...
Best Blogger Tips

ஆஹா... புரியுது புரியுது :)

shanmugavel said...
Best Blogger Tips

யாரந்த பதிவர் சகோ,கலக்கல்.இதப்பார்த்து கல்யாணம் பண்ணாம விட்டுட போறீங்க!

Anonymous said...
Best Blogger Tips

அவங்க சொன்ன மாதிரி ஒரு ப்ளாக்கியை கல்யாணம் பண்ணியிருக்கலாம்..இவ்வளவு நீளமான பதிவா

Unknown said...
Best Blogger Tips

அசல் அசல்....அத்தனையும் நிஜம் பாஸ்..நல்ல காலம் நான் கல்யாணம் கட்டவில்லை...
கட்டி இருந்தால் அதே சம்பவம் என் வீட்டிலும் நடந்திருக்கும் ஹிஹி

Unknown said...
Best Blogger Tips

அத்தனை பதிவர் ஒருவரின் நடவடிக்கைகளை தொடுத்து விட்டிருக்கீங்க...கலக்கல் சகோ

Unknown said...
Best Blogger Tips

ஹிஹி அந்த ஏழாவது ஓட்டுக்கு காத்திருப்பது ஹிஹிஹிஹி

Unknown said...
Best Blogger Tips

ஹிஹி அந்த ஏழாவது ஓட்டுக்கு காத்திருப்பது ஹிஹிஹிஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பிரபல பதிவரால் ப்ராப்ளம் ஆன பெண்- உண்மைச் சம்பவம்!//////

ஹி ஹி ஹி சிச்சுவேஷன் தலைப்பு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

எச்சரிக்கை: இப் பதிவில் வரும் உரையாடல்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல. நிஜமே. ////

ஒளிச்சிருந்து ரெக்கோர்ட் பண்ணி எழுதினாயா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

உலகின் எங்கோ ஓர் மூலையில் ஒரு பதிவர் வீட்டில் இச் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால், இது தமது வீட்டுக் கதை என யாராவது
உரிமைகோரினால், அதற்கு கம்பனி பொறுப்பல்ல.////

எந்தக் கம்பனி?
அதன் தலைமையகம் எங்க இருக்கு?
பதிவு எண் என்ன?
வருட வருமானம் என்ன?
முதலீட்டு கம்பனியா?
பல்தேசிய கம்பனியா?
தனியார் கம்பனியா?
செமி கவர்ன்மெண்டா?
கிளைகள் எங்கெங்க இருக்கு?
எம் டி யார்?
எத்தனைபேர் ஓர்க் பண்றாங்க?
அதுல பெண்கள் எத்தனை பேர்?
அதுல கல்யாணமானவங்க எத்தனை பேர்?
ஆகாதவங்க எத்தனை பேர்?
எம் டி யோட செக்கர்ரெட்டி அழகா இருப்பாங்களா?
அவங்களுக்கு லவ்வு கிவ்வு ஏதாவது இருக்கா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

டிங்குசா: ////

நல்ல விறுத்தமான பேர்/

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

’என்னங்க நீங்க , எப்ப பார்த்தாலும் கம்பியூட்டர் முன்னாடியே இருக்கிறீங்க, வீட்டில குழந்தை அழுவுற சத்தம் கூட உங்க காதிலை கேட்க மாட்டேங்குது.////

அவரின்ர காதில கேக்காதது , அவாவுக்கு எப்படித் தெரியும்? ஹி ஹி ஹி!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பதிவெழுதுறாராம், பதிவு! பெரிய உலக மகா பதிவர் என்ற நினைப்பில, வூட்டுல என்ன நடக்குதென்ற நிலமை தெரியாம 24 மணி நேரமும் லப்பு டாப்பைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டே இருக்கிறீங்க. ///

24 மணி நேரமும் லப் டப்பைக் கட்டிப்பிடிச்சா நித்திரை கொள்ள மாட்டாரா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நான் ஒருத்தி, இஞ்ச சமைக்கனும், புள்ளையைப் பார்க்கனும். வேலையக் கவனிக்கனும் என்று இருக்கேன். அது தெரியாம நீங்க. /////

அவரின் மனைவிதானே எப்படித் தெரியாமல் போகும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இல்லத் தெரியாமற் தான் கேட்கிறேன். உங்க மனசில நீங்க என்ன நினைச்சுக் கொண்டிருக்கிறீங்க?////

தெரிஞ்சா எதுக்கு கேக்கப் போறாங்க? எல்லோரும் தெரியாமல்தான் கேட்பார்கள்!ஹி ஹி ஹி !

மோகன்ஜி said...
Best Blogger Tips

நகைச்சுவையாக இதை நீங்கள் சொல்லியிருந்தாலும்,யோசிக்க நிரம்ப இருக்கிறது நிரூபன்! வாழ்த்துக்கள்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

டிங்குசன்: /////

பொதுவா சகோதரர்களுக்குத்தான் இப்படிப் பேர் வைப்பார்கள்! ஒரே பேராக இருக்கும்!

ஆண்பால் பெண்பாலுக்கு ஏற்ப , விகுதி மாறியிருக்கும்!

இதென்ன கணவன் - மனைவிக்கு இப்படி ஒரு பேர்!

உலகத்தில் எந்தத் தம்பதிகளுக்கும் இப்படிப் பேர் இல்லையே!

உதாரணமா

கிளிண்டன் - ஹிலாரி
அஜித் - ஷாலினி
விஜய் - சங்கீதா
சரத்குமார் - ராதிகா
பிரபுதேவா - நயன் தாரா
சுந்தர் சி - குஷ்பு
சி பி செந்தில்குமார் - பரங்கி மலை ஜோதி
ஓ.வ.நாராயணன் - ஹன்சிகா
மைந்தன் சிவா - கோவை சரளா

இப்படி எந்த பிரபலமான ஜோடியை எடுத்துப் பார்த்தாலும் பேரில ஒற்றுமை இல்லையே!

இதென்ன டிங்குசன் - டிங்குசா?

ஒருவேளை முறை மாறி அண்ணனும் தங்கையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?

அபத்தம்... அபத்தம்!!!

இக்பால் செல்வனோட பதிவு படிச்சும் திருந்தலையா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

உம்மடை வாயைக் கொஞ்சம் மூடி வைச்சுக் கொண்டு, அழுற பிள்ளையப் பார்த்துக் கொண்டு சமையும் பார்ப்பம். //////

பிள்ளையையே பார்த்துக்கொண்டு சமைச்சா, எல்லாம் கருகிப்போடும்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நான் எப்படா ஒருத்தன் வந்து ஏழாவது ஓட்டுப் போட்டு என் பதிவினைத் தமிழ் மணம் மூலமா ஹிட் ஆக்குவான் என்று Page Refresh பணிப் பண்ணிக் காத்திட்டிருக்கேன்./////

ஹி ஹி ஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நீ வேறை...குழந்தை அழுதா, புட்டிப் பாலைக் கொடுத்துத் தூங்க பண்ண வேண்டியது தானே? அதை வுட்டிட்டு சும்மா வந்து தொண தொணத்துக் கொண்டு...
வாயை மூடிக் கிட்டு வேலையைப் பார்க்கலாமமில்லே.../////

ஹி ஹி ஹி எல்லா வேலையையும் வாயை மூடிக்கொண்டு பார்க்க முடியாது! சில வேலைகள் செய்யும் போது களைக்கும்! அப்போது அதிக சுவாசம் தேவைப்படும்! அப்போது மூக்கால் மட்டும் சுவாசித்து, எமக்குத் தேவையான ஒட்சிசனை பெற்றுக்கொள்ள முடியாது!

அந்தச் சந்தர்ப்பத்தில் வாயைத் திறந்தே ஆகணும்! வாயாலும் சுவாசிக்க வேணும்!

சில சமயங்களில் வாயால் சுவாசிப்பதே அவசியமாகிறது! ( அதுவே விரும்பப்படுகிறது )

ஹி ஹி ஹி ஹி !!!!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இன்னைக்கு யார் முதல் கமெண்ட் போட்டாங்களோ தெரியலை. என்னோடை ராசி! கூட்டம் கம்மியாவே இருக்கு. /////

கம்பியூட்டரிலும் மூட நம்பிக்கைகளைப் புகுத்தும் நிரூபனுக்கு கண்டனங்கள்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பின்ன என்னங்க! நீங்க ஆப்பிசுக்குப் போனாப்புறம், நம்ம பையனைத் தூங்கப் பண்ணிட்டுப் பொம்பிளை பதிவர்கள் சிலரோடை குடுமிப் பிடிச் சண்டைப் பதிவுகளைப் படிச்சால், வாய்க் கொழுப்புக் கூடாம பின்ன என்ன கூடும்?
அறிவா வளரப் போகுது???/////

“ அவாவுக்கு “ கடிச்சிருக்கிறமாதிரி தெரியுது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ப்ளாக் எழுதுவதால் நண்பர்கள் அதிகமாகுவாங்க. நான் பிரபலம் ஆகினால் எனகென்று ரசிகர்கள் தோன்றுவாங்க. இதையெல்லாம் வுட்டிட்டு, கட்டின மனுசி உன் கூட இருந்து மாரடிக்கச் சொல்லுறியா? ////

அப்டீன்ன ப்ளாக் நண்பர்களுடன் மாரடிக்கப் போறீங்களா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஹி ஹி ஹி சூப்பர் பதிவு மச்சி!

Yoga.s.FR said...
Best Blogger Tips

///அந்தச் சந்தர்ப்பத்தில் வாயைத் திறந்தே ஆகணும்! வாயாலும் சுவாசிக்க வேணும்!
சில சமயங்களில் வாயால் சுவாசிப்பதே அவசியமாகிறது! ( அதுவே விரும்பப்படுகிறது )
ஹி ஹி ஹி ஹி !!!!!!//////பிரான்சில இப்புடித் தான்.அதான்,சொல்லுறீங்களோ?எல்லாருக்கும் இந்தக் குடுப்பனவு(பிரான்சில வாழுற)இல்லத் தானே?

Yoga.s.FR said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said....(1)எந்தக் கம்பனி?மு.க.அன் கம்பனி..
(2)அதன் தலைமையகம் எங்க இருக்கு?.சென்னைல.
(3)பதிவு எண் என்ன?)த.நா.1028736970
(4)வருட வருமானம் என்ன?1500 லட்சம் கோடி
(5)முதலீட்டு கம்பனியா?மு.கம்பனி தான்.
(6)பல்தேசிய கம்பனியா?ஆம்
(8)தனியார் கம்பனியா?கூட்டுக் கம்பனி.
(9)செமி கவர்ன்மெண்டா?செமி கவர்மெண்டே தான்!
(8)கிளைகள் எங்கெங்க இருக்கு?சென்னை,டெல்லி,திகார்.
(10)எம் டி யார்?மு.க.தான்
(11)எத்தனைபேர் ஓர்க் பண்றாங்க?பல்லாயிரம் பேர்
(12)அதுல பெண்கள் எத்தனை பேர்?பலர்
(13)அதுல கல்யாணமானவங்க எத்தனை பேர்?மூன்று பேர்.
(14)ஆகாதவங்க எத்தனை பேர்?கணக்கில்லை.
(15)எம் டி யோட செக்கர்ரெட்டி அழகா இருப்பாங்களா?)செம பிகரு!
(16)அவங்களுக்கு லவ்வு கிவ்வு ஏதாவது இருக்கா?இருக்கு ஆனா இல்ல!

Yoga.s.FR said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said....“அவாவுக்கு“கடிச்சிருக்கிறமாதிரி தெரியுது!////சீச்சி,இருக்காது!கடி வாங்கியிருந்தா கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு போயிருப்பாரே?///

Yoga.s.FR said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
பிரபல பதிவரால் ப்ராப்ளம் ஆன பெண்- உண்மைச் சம்பவம்!//////
ஹி ஹி ஹி சிச்சுவேஷன் தலைப்பு!§§§§§தன்னையும் கவனிக்கச் சொல்லுகிறாரோ?§§§§§§

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

உள்குத்து மாதிரியான தலைப்பு:)

Yoga.s.FR said...
Best Blogger Tips

மைந்தன் சிவா said...
ஹிஹி அந்த ஏழாவது ஓட்டுக்கு காத்திருப்பது ஹிஹிஹிஹி/////இவரும் தானோ?("நுணலும் தன் வாயால் கெடும்!"நல்ல வேளை என்னிடம் "பிளாக்"இல்லை!)

Yoga.s.FR said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நான் எப்படா ஒருத்தன் வந்து ஏழாவது ஓட்டுப் போட்டு என் பதிவினைத் தமிழ் மணம் மூலமா ஹிட் ஆக்குவான் என்று Page Refresh பண்ணிப் பண்ணிக் காத்திட்டிருக்கேன்.ஹி!ஹி!!ஹி!!!/////இவருமா???????

Yoga.s.FR said...
Best Blogger Tips

நிரூபன் said....... ஐயா வாங்க! அம்மா வாங்க! உறவுகளே வாங்க! மற்றும் அனைவரும் வாங்க!
இவ்ளோ தூரம் வந்திட்டீங்க இல்லே, அப்புறம் என்ன பார்க்கிறீங்க?/////அந்த "ஏழா"வது ஓட்ட போட்டுட்டுப் போங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

நிரூபன் said...
@துஷ்யந்தன்
தமிழ்மணம் தமிழ் 10 இட்ணி
3ளையும் ஓட்டும் போட்டாச்ச//
"நன்றி சகோ"////////////சரியாப் பாருங்க,ஏழு வந்திட்டுதா?????????????

Yoga.s.FR said...
Best Blogger Tips

நிரூபன் said...
@Mahan.Thamesh
வடை எனக்கு//
சந்தேகமே இல்லை, வடை உங்களுக்குத் தான், ஆனால் பூசைக்குரிய "தட்சணை"யை கொடுத்தால் தான் வடை தர முடியும்..
ஹி...ஹி...!////அந்த "ஏழா"வது ஓட்டைத் தானே தட்சணை என்ற பேரில கேக்கிறீங்க?

Yoga.s.FR said...
Best Blogger Tips

மாத்தியோசி said...
டிங்குசன்: /////
பொதுவா சகோதரர்களுக்குத்தான் இப்படிப் பேர் வைப்பார்கள்! ஒரே பேராக இருக்கும்!
ஆண்பால் பெண்பாலுக்கு ஏற்ப , விகுதி மாறியிருக்கும்!
இதென்ன கணவன் - மனைவிக்கு இப்படி ஒரு பேர்!உலகத்தில் எந்தத் தம்பதிகளுக்கும் இப்படிப் பேர் இல்லையே!
உதாரணமா
கிளிண்டன் - ஹிலாரி
அஜித் - ஷாலினி
விஜய் - சங்கீதா
சரத்குமார் - ராதிகா
பிரபுதேவா - நயன் தாரா
சுந்தர் சி - குஷ்பு
சி பி செந்தில்குமார் - பரங்கி மலை ஜோதி
/ஓ.வ.நாராயணன் - ஹன்சிகா/
/மைந்தன் சிவா - கோவை சரளா/
இப்படி எந்த பிரபலமான ஜோடியை எடுத்துப் பார்த்தாலும் பேரில ஒற்றுமை இல்லையே!
இதென்ன டிங்குசன் - டிங்குசா?
ஒருவேளை முறை மாறி அண்ணனும் தங்கையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?
அபத்தம்... அபத்தம்!!!
இக்பால் செல்வனோட பதிவு படிச்சும் திருந்தலையா?////கடேசியா இருக்கிற ஜோடிங்க தான் சரியில்லையோன்னு தோணுது!எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விடுவது என்று நம் பேச்சு வழக்கில் உண்டே?அது மட்டுமல்ல,வரப்போகிற வத்தலோ,தொத்தலோ,/குட்டையோ நெட்டையோ,/செவிடோ,குருடோ/தப்பித் தவறி(f)பொலோவராக இருந்து விட்டால்???

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

//இன்னைக்கு யார் முதல் கமெண்ட் போட்டாங்களோ தெரியலை. என்னோடை ராசி! கூட்டம் கம்மியாவே இருக்கு.//

இது வேற இருக்கா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

கடேசி கொமெண்ட் போடுறவைக்கு ஒண்டுமில்லையோ? இதுக்காகவே கஸ்டப்பட்டு வெயிட் பண்ணிக்கொண்டிருந்தேன்:)))))))))).

sarujan said...
Best Blogger Tips

ஒரு பதிபவரின் உணர்சிகள்

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
மாலதி said...
Best Blogger Tips

///எச்சரிக்கை: இப் பதிவில் வரும் உரையாடல்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல. நிஜமே. உலகின் எங்கோ ஓர் மூலையில் ஒரு பதிவர் வீட்டில் இச் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால், இது தமது வீட்டுக் கதை என யாராவது
உரிமைகோரினால், அதற்கு கம்பனி பொறுப்பல்ல./// சாரி, எனக்கு இன்னமும் கண்ணாணம் ஆகல...

அன்புடன் மலிக்கா said...
Best Blogger Tips

உண்மைதான் சகோ.இதபோல் எங்கெங்கோ நடக்கிறது கடைசியில் உங்க வீட்டாண்டையும் நடந்துடபோவுது. ஹா ஹா.

அப்பாடா நமக்கு அந்தகவலையே இல்லை.மச்சான்தான் பிளாக்கே எழுதலையே.. ஹி ஹி..

சுவாரஸ்யம் எழுத்திலும் அதற்கேற்றபடத்தில் அருமை..

Yoga.s.FR said...
Best Blogger Tips

மாலதி said... Best Blogger Tips [Reply To This Comment]
///எச்சரிக்கை: இப் பதிவில் வரும் உரையாடல்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல. நிஜமே. உலகின் எங்கோ ஓர் மூலையில் ஒரு பதிவர் வீட்டில் இச் சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால், இது தமது வீட்டுக் கதை என யாராவது
உரிமைகோரினால், அதற்கு கம்பனி பொறுப்பல்ல./// சாரி, எனக்கு இன்னமும் கண்ணாணம் ஆகல...
June 27, 2011 3:36 PM §§§§§§§§§ஓ.கே!பதிவுலகம் கவனத்தில் கொள்ளும்!§§§§§§§

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

நான் இல்லை :-( . ஹீ ஹீ

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

நான் இல்லை :-( . ஹீ ஹீ

MoonramKonam Magazine Group said...
Best Blogger Tips

சிரிப்பு வரவழைத்த பதிவு... பெரும்பாலான பதிவர்களின் மன் ஓட்டத்தை அழகாக பிரதிபலித்திருக்கிறீர்கள்!

Riyas said...
Best Blogger Tips

மிக அழகா நகைச்சுவையா சொல்லியிருக்கிங்க சகோ.. இது எல்லா பதிவர்களுக்கும் பொருந்தும்

காட்டான் said...
Best Blogger Tips

நானும் பிரபல பதிவராகனும்னு அவரை போல் ஒரு சோம பாண குவளையை திறந்து சாட் பண்ண போனால் குடும்பமமே  கொம்பீட்டர் முன்னால நிக்குதையா இதுக்கு மாற்று வழி தரமுடியுமா..?

Angel said...
Best Blogger Tips

//பூரிக் கட்டையுடனும் தன்னை நோக்கி வரும் டிங்குசாவைப் பார்த்து வியப்பிற்குள்ளாகி நிற்கிறார் பிரபல பதிவர். இதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்பது உங்களின் கற்பனைக்காக....//இவ்ளோ தூரம் வந்த நீங்க .அவர் அடி வாங்கிய படத்தையும் போட்டிருக்கலாம்.(எங்க வீட்ல CHAPAATHI MAKER தான் இருக்கு !!!)

Vijayan Durai said...
Best Blogger Tips

பாஸ் இது உங்களோட உண்மை கதையா?...நீங்க தானே அந்த டிங்குசன்,

kobiraj said...
Best Blogger Tips

super anna

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails