ஈழத்துத் தமிழ்ச் சினிமா என்ற ஒன்று காலவோட்ட மாற்றத்தில் காணாமற் போய் விட்ட பிற்பாடு, அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன.
முழு நீளத் திரைப்படங்கள்(நீலப் படம் அல்ல) எனும் வரிசையில் இருந்து ஈழச் சினிமாவானது விலகி, இன்று அதற்கென்றோர் தள வடிவம் ஏதுமற்றிருப்பதற்கான பிரதான காரணம் ஈழத்துப் போர்ச் சூழலாகும்.
ஈழப் போராட்டம் இடம் பெற்ற காலங்களில் வெளியான குறும்படங்கள், விவரணச் சித்திரங்கள், முழு நீளத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஈழப் போராட்டத்தின் பிரச்சார வடிவமாக மாறிக் கொள்ள, குறும்படங்களானது ஈழச் சினிமாவிற்கான ஓர் அடையாளமாக தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள், மற்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் முயற்சியினால் மாற்றம் பெறுகிறது.
ஈழத்துக் குறும்படங்கள் வரிசையில் பெயர் சொல்லுமளவிற்கு சிறப்பான ஒரு கதையம்சத்தோடு புலம் பெயர் தமிழர்களால் 2009ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும் ஒரு படம் தான் ‘நன்றி அம்மா’!
மின் படிமங்களின் உருவாக்கத்தில், அனிஸ்ரன் திருநாவுக்கரசின் பின்னணி இசையில், தீபன் துரைஸ், மிஷா ரொட்னி, சுமித்திரா திருவழகன், திருவழகன் முருகுப்பிள்ளை ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் இப் படத்தினை,
அனுஜனா வதனன் அவர்கள் இயக்கியிருக்கிறார்.
இளம் வயதுக் காதலர்களாக இருக்கும் தீபன்- மிஷா ஜோடியினர் பெற்றோரிடம் அனுமதி வாங்கி மிஷாவின் பிறந்த நாளன்று சந்திக்கிறார்கள். மிஷா, ’’தம் காதலைப் பெற்றோருக்குத் தெரியப்படுத்தி திருமணத்திற்கான சம்மதத்தினை வாங்கியிருப்பதாகவும், இன்னும் ஒரு வருடத்தில் கலியாணம் என்றும் தீபனிற்கு ஒரு Surprise- பிறந்த நாளன்று இன்ப அதிர்ச்சியளிக்கிறார்.
இதற்கும் மேலாக மிஷா தன்னைத் தீபனிற்குப் பரிசளிக்க விரும்பி, தான் ஏற்கனவே புக் பண்ணி வைத்த ஹோட்டல் ரூமின் ரசீதினைக்(Entry Ticket) குடுத்து, தீபனுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியளிக்கிறார்.
இவ் இடத்தில் ’’எப்படா எம் கையில் ஒரு பொண்ணு சிக்குவாள், எப்போது மேட்டரை முடிக்கலாம்’’ எனப் பல மன்மதக் குஞ்சுகள் அலையும் சமூகத்தில் இயக்குனர் அவர்கள் தீபனை வழமைக்கு மாறாக ஒரு வித்தியாசமான கோணத்தில் காட்ட முயற்சித்திருக்கிறார் என்றே கூற வேண்டும்.
‘இவ்வளவு காலமும் வெயிட் பண்ணிட்டேன்,
இன்னிம் ஒரு வருசம் தானே’ எனக் கூறி, இம் முயற்சியினைத் தள்ளிப் போடும் படி தீபன் கேட்க, மிஷாவோ, தன் காதலுக்கான பரிசு, இதனை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டும் திருமணத்திற்கு முன்பதாக பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.
இவ் உறவின் பயனாக மிஷா கர்ப்பமடைந்து விட, கருவினைக் கலைக்க மனமின்றி பெற்றோரின் சம்மதத்தினை வேண்டுவதற்காய் மிஷா தாயாருடன் போராடி, மனமிரங்கித் தேம்பியழுது சம்மதம் வாங்கும் காட்சிகளில் அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பதாகப் பெற்றோரிடம் இருவரும் பேசித் திருமணத்தினை விரைவாக நடாத்துவதற்குரிய சம்மதத்தினையும் வாங்கி விடுகிறார்கள்.
திருமணத்திற்கு முன்பதாக ஒரு ஆடவன் Bachelor Party கொடுக்க வேண்டும் எனும் நியதிக்கமைவாக தீபன் பச்லர் பார்ட்டிக்கு ஒழுங்கு செய்கிறார். இந்த பச்லர் பார்ட்டியில் அளவுக்கதிகாம குடித்து விட்டுப் போதையில் வாகனம் ஓட்டி விபத்திற்குள்ளாகித் தீபன் இறந்து கொள்ள, மிஷா அவனின் நினைவுகளோடு தனித்திருந்து ஒரு குழந்தையினைப் பெற்று வளர்ப்பதினை உணர்ச்சிகளின் வெளிப்பாட்டோடும், ஈழத்துப் பேச்சு மொழியோடும் காட்சிப்படுத்தும் படம் தான் இந்த நன்றி அம்மா!
’’அன்பே என் காதல் சொல்கின்ற வார்த்தை நீயா
அன்பே ஓர் காதல் பிள்ளையின் தாயும் நீயா
நிஜங்களாய் வந்த கனவுகள்
எந்தன் நினைவினில் நீளுதே என அற்புதமான கவி வரிகள் நிறைந்த பாடலினைத் துண்டு துண்டாக வெட்டிப் படத்தில் சேர்த்திருப்பது சலிப்பினை உருவாக்குகிறது.
அனிஸ்ரன் திருநாவுக்கரசின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக இருந்தாலும், அடிக்கடி சினிமாப் பாடல் மெட்டுக்களைப் படத்தில் சேர்த்து, ஈழத்து இசைக் கலைஞர்களின் இசைக்கு இப்போதும் பஞ்சம் இருக்கிறது என்பதனை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர்
அனுஜனா வதனின் கதையில் உருவான இப் படமானது, பிரான்ஸ் நாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் காரணத்தால், பிரெஞ்ச் வசனங்கள் வந்து போகும் காட்சிகளில் தமிழ் உப தலைப்பு விளக்கங்களோடு காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்தின் நகர்விற்குப் பக்க பலமாக அமைந்து கொள்கிறது.
I.V. ஜனாவின் வசங்கள், அப்படியே ஈழத்துப் பேச்சு வழக்கினைத் திரையில் கொண்டு வருகிறது, மிஷாவின் குரலில் புலம் பெயர்த டமிழ் உச்சரிப்பு இருந்தாலும், அவர் பேசும் வசனங்கள் கதை நிகழ் களத்திற்கேற்றாற் போல பிரதேசச் சாயலுடன் எழுதப்ப்பட்டிருக்கிறது. மாப்பு, மருமோன், மச்சி, பிள்ளை எனும் சொற்கள் இதற்குச் சான்று பகர்கின்றன.
மயூரனின் ஒளிப்பதிவானது; காட்சிகளில் உயிர்ப்பினை ஏற்படுத்தி, கதை நிகழ் களத்தினுள் எம்மையெல்லாம் கூட்டிச் செல்கிறது.
23 நிமிடங்கள் கொண்ட இப் படத்தில் இன்றைய இளைஞர்கள் பலரும், தமது வாழ்க்கையின் நகர்வுகளை அவதானத்துடன் முன்வைக்க வேண்டும் எனும் விடயம் காட்சி விளக்கத்தினூடாக முன் வைக்கப்பட்டிருக்கிறது.
நன்றி அம்மா- திருமணத்திற்கு முன்னரான உடலுறவின் பரிசினை மகிழ்ச்சியோடு ஏற்றுத் தனிமையில் வாழும் பெண்ணின் உள்ளத்து உணர்விற்குச் சான்றாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
டிஸ்கி: 19.12.2010 அன்று பிரான்ஸ் பாரிஸில் இடம் பெற்ற Nallur Stain short film Festival இல் Best screen play & best actress விருதுகள் இப் படத்திற்கு கிடைத்திருக்கிறது.
|
89 Comments:
படித்து விட்டு வருகிறேன் நண்பரே..
விமர்சனம் மிக அழகாக இருக்கிறது.. அப்படி யென்றால் அதற்க்கு ஏற்றார் போல் படமும் யாதார்த்தமும் ரம்மியமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்..
@ கவிதை வீதி # சௌந்தர்
படித்து விட்டு வருகிறேன் நண்பரே..//
வணக்கம் நண்பா,
வருக! வருக என வரவேற்கிறேன்.
முடிவு சோகம்.. ஏற்கனவே ஈழத்தமிழர்கள் மனதளவில் பாதிப்படைந்துள்ளார்கள்.. சினிமாவது சந்தோஷமாக முடியும்படி கதைகள் அமைந்தால் நன்று..
தற்போது அந்த படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
நன்றி..
படத்திற்கும் தலைபிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை , இவளின் புதிய கலாச்சாரத்துக்காக அந்த புது தளிர் தந்தையை இழந்து தன் வாழ்நாள் முழுவதும் பயணிக்க இருப்பது கொடுமை அல்லவா ???
இது எப்படி அம்மாவுக்கு நன்றியாகும் .
நான் இத்தனை தூரம் இந்த படத்தினைப் பற்றி அலசுவதற்கு காரணம்
உங்களின் வார்த்தைகளின் வழியே நான் காட்சிகளை கண்டது தான் சகோ
மிக நல்லப் பதிவு சகோ
@கவிதை வீதி # சௌந்தர் said...
விமர்சனம் மிக அழகாக இருக்கிறது.. அப்படி யென்றால் அதற்க்கு ஏற்றார் போல் படமும் யாதார்த்தமும் ரம்மியமாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்..//
நன்றி மாப்ளே.....
வடை போச்சே
உங்கள் விமர்சனமே படம் பர்ர்க்க ஆவலை தூண்டிவிட்டது நன்றி ..நல்ல கலை எங்கிருந்தாலும் அதரவு அளிக்கணும் ,நன்றி சகோ ,,, இதோ படம் பார்த்துட்டு வரேன் சரியா
மச்சி, கடும் விமர்சனக்களுடன் பின்னர் வருகிறேன்! இப்போது படத்தை முழுமையாகப் பார்க்கப் போகிறேன்!
இன்னிக்கு இருக்கு மவனே கச்சேரி!
ஆஅஹா.. அழகு உங்கள் விமர்சனம்.. இப்போ பார்க்க நேரம் இல்லை.. நைட் பார்த்திட்டு ஒரு விமர்சனம் போட்டுடலாம்.. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் ஏதாவது ஸ்டில்சை அனுப்பவம்.. நைட்
@கவிதை வீதி # சௌந்தர்
முடிவு சோகம்.. ஏற்கனவே ஈழத்தமிழர்கள் மனதளவில் பாதிப்படைந்துள்ளார்கள்.. சினிமாவது சந்தோஷமாக முடியும்படி கதைகள் அமைந்தால் நன்று..
தற்போது அந்த படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
நன்றி..//
நன்றி நண்பரே, எம் வாழ்க்கையோடு சோகமும் இரண்டறக் கலந்ததால் தான் என்னவோ, தெரியவில்லை,
படத்தின் முடிவினையும் சோகத்துடன் அமைத்து விட்டார்கள் சகோ.
பார்த்து விடுகிறோம்.
@A.R.ராஜகோபாலன்
படத்திற்கும் தலைபிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை , இவளின் புதிய கலாச்சாரத்துக்காக அந்த புது தளிர் தந்தையை இழந்து தன் வாழ்நாள் முழுவதும் பயணிக்க இருப்பது கொடுமை அல்லவா ???
இது எப்படி அம்மாவுக்கு நன்றியாகும் //
இப் படத்தின் அடிப்படையில் கருவுற்ற செய்தியினைத் தாயிடம் நாயகி கூறியதும், தாயார் கருவினைக் கலைக்காது திருமணம் செய்து வைப்பதற்கு உடன்படுகிறா,
அதனை மையப்படுத்தித் தான் நன்றி அம்மா என்று படத்திற்கு த்லைப்பு வைத்தார்கள் சகோ.
@ரியாஸ் அஹமது
வடை போச்சே//
பரவாயில்லைங்க,
பாயாசம் இருக்கு தானே, பசியாறுங்க..
ஹி....ஹி...
@ரியாஸ் அஹமது
உங்கள் விமர்சனமே படம் பர்ர்க்க ஆவலை தூண்டிவிட்டது நன்றி ..நல்ல கலை எங்கிருந்தாலும் அதரவு அளிக்கணும் ,நன்றி சகோ ,,, இதோ படம் பார்த்துட்டு வரேன் சரியா//
நன்றி சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மச்சி, கடும் விமர்சனக்களுடன் பின்னர் வருகிறேன்! இப்போது படத்தை முழுமையாகப் பார்க்கப் போகிறேன்!
இன்னிக்கு இருக்கு மவனே கச்சேரி!//
அடடா....நீ ஒரு நோக்கமாத் தான் அலைகிறாய் போல இருக்கே மச்சி...
வருக, வருக...!
@சி.பி.செந்தில்குமார்
ஆஅஹா.. அழகு உங்கள் விமர்சனம்.. இப்போ பார்க்க நேரம் இல்லை.. நைட் பார்த்திட்டு ஒரு விமர்சனம் போட்டுடலாம்.. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் ஏதாவது ஸ்டில்சை அனுப்பவம்.. நைட்//
சிபி கேட்கும் போதே சந்தோசமா இருக்கிறது,
முதலில் உங்களின் இந்த முயற்சிக்கு நன்றிகள்.
இந்தப் படத்திற்கான ஸ்டில்ஸ் எதனையும் இணையத்தளத்தில் பெற முடியவில்ல்சி.
ஆதலால் வீடியோவில் இருந்து கட் பண்ணி எடுத்திருக்கிறேன்...
இது ஒரு மாறு பட்ட விமர்சனம் !
நல்ல விமர்சனம்
மீண்டும் வணக்கம் நிரூ!
படம் பார்த்து உருகிவிட்டேன்! மனசில் அப்படியே பதிந்துவிட்டது! ஒரு வரியில் சொல்லவேண்டுமானால், ( ஃபிரான்ஸ் தமிழில் )
“ படம்பார்த்து எனக்கு மண்டையால போச்சு “
காட்ட்சியமைப்புக்கள், பேச்சு வழக்கு, எல்லாமே பக்கா ஒரிஜினல்! நாம் இங்கு எப்படி வாழ்கிறோமோ, அப்படியே படத்தில் வந்துள்ளது!
மிஷா தன் தாயின் மார்பில் சாய்ந்து “ மெர்சி , மெர்சி “ என்று உருகி உருகி கூறும் போது என் கண்களில் கண்ணீர்! செம டச்சிங் பிளேஸ்!
இந்த இடத்தில் மெர்சி என்ற சொல் பற்றி கொஞ்சம் விளக்கவேண்டும்! தமிழில் நன்றி என்பதற்கு நிகரான சொல்லுத்தான் மெர்சி என்பது!
யாராவது நன்றி என்று சொல்லும் போது, அந்த வார்த்தை ஒரு பெறுமதியான வார்த்தையாக எனக்குத் தோன்றுவதில்லை! பொறுங்க, அவசரப்பட வேண்டாம்! இது அந்நியமோகமும் அல்ல!
ஒரு வார்த்தை, அதன் பெறுமதியை எப்போது வெளிக்காட்டுகிறது? அது நமது மனதில் ஆழமாகப் பதியும் போதுதானே!
உதாரணமாக, ஒருவரைத் திட்டும் போது, அவரது தொழிலை இழுத்துப் பேசினால், அவருக்கு கடும் கோபம் வரும்! காரணம் அவர் அந்தத் தொழிலில் மிகுந்த அக்கறையாக இருப்பார்!அது அவரது மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது!
இன்னொரு உதாரணம் - நடிகர் கல்ஹாசனை ரொம்பவே நேசிக்கும் ஒருவரிடம் சென்று, ‘ உங்களிடம் கமல் சாயல் இருக்கிறது ‘ என்று சொல்லிப் பாருங்கள்! அன்று இரவு அவர் நித்திரையே கொள்ளமாட்டார்!
இப்படி ஒருவரைப் பாராட்டுவதோ அல்லது திட்டுவதோ எதுவானாலும், அவர் எதை நேசிக்கிறாரோ, அதைக் கொண்டு நாம் பேசினால், அவரது மனதில் அது பதிந்து விடுகிறது!
இங்கே மெர்சி என்ற சொல்லும் அப்படித்தான்! நான் தினமும் நூற்றுக்கணக்கான ஃபிரெஞ்சு மொழிப்பேசுபவர்களுடன், பேச வேண்டி இருப்பதால், தினமும் ஆகக் குறைந்தது 500 தடவையாவது மெர்சி என்ற வார்த்தையை சொல்கிறேன்!
அப்படியானால் இலங்கையில் இருக்கும் போது, நன்றி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லையா? அது மனசில் ஒட்டவில்லையா? என்று கேட்டால்,
நாம் எந்தக் காலத்தில், நன்றி என்று சொல்லியிருக்கிறோம்? “ வணக்கம். நன்றி “ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால், மேலும் கீழும் பார்த்துவிட்டு, “ எப்ப வன்னியால வந்தனி? “ என்றுதான் கேட்பார்கள்!
அதனால்தான் நாங்கள், ‘ தாங்க்ஸ், தங்கியூ, தாங்கியூ சோ மச் ‘ போன்ற நல்ல தமிழை பயன்படுத்தி, எமது கலாச்சாரத்தையும், மொழியையும் கட்டிக் காக்கிறோம்! ஹி ஹி ஹி!!
மேலும், நமது வானொலிகளும் ஓயாது நன்ரி, நன்ரி என்று சொல்லுவதால், நன்றி என்ற சொல்லே மனசில் பதியவே இல்லை!
இப்படத்தில் மிஷா, தாயின் மார்பில் சாய்ந்து, மெர்சி , மெர்சி என்று சொல்லும் போது, உண்மையிலேயே நான் உருகிவிட்டேன்!
இதுவே நன்றி , நன்றி என்று சொல்லியிருந்தால், அது சப்பையாக இருந்திருக்கும்!
எங்கே போகிறோம் நாம்?
படத்தை பார்க்கவில்லை (ஆபிசில் பார்க்க முடியாது) ஆனால் உங்களின் விமர்சனம் படம் பார்த்த நிறைவை தந்தது.
ஒரு நிமிடம் யோசிக்காமல் செய்த தவறினால் வாழ்க்கை முழுவதும் கஷ்ட படுகிறாள். இப்பொழுது பெரும்பாலானவர் இந்த நிலையில் தான் உள்ளனர். இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம். நன்றி நிரூபன்
படத்தில் ஒரு சின்ன நெருடல், விபத்து நடக்கும் போது, ‘ டேய் லொறிடா ‘ என்று கத்துகிறார்கள்! இதில் யதார்த்தம் மிஸ்ஸிங்!
‘ டேய் கமியோண்டா ‘ என்றல்லவா வந்திருக்க வேண்டும்?
வணக்கம் பாஸ் ...
புதிய முயற்சியாக நம் ஈழத்து குறும்பட விமர்சனத்தை வலைத்தளத்தில் ஏற்றியதில் மகிழ்ச்சி..
விமர்சனம் படித்த பிறகு குறும்படத்தை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது ...நேரம் கிடைக்கும் போது பார்ப்போம்.. சோ, புக்மார்க் பண்ணி வைக்கிறேன்
ஓட்டவடை அருமையான பல தகவல்களை சொல்லுகிறார்... உண்மையிலே இங்கே சக தமிழர்களுடன் உரையாடும் போது வணக்கம், நன்றி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துபவர்களையும் கண்டுள்ளேன்..ஆனால் மிக குறைவு...
நல்ல விமர்சன பதிவு பாஸ்,
உங்கள் விமர்சனம் படம் பார்த்த திருப்தியை கொடுத்து விட்டது,
நம்மவர்களும் இப்படி எல்லாம் நல்ல நல்ல குறும் படங்கள் எடுக்கிறார்களா??
ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருக்கு, இப்படி நம்மவர்களின் படங்களின் விமர்சனங்களை அடிகடி பதிவிடுங்கள் பாஸ்,
இது அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியாக இருக்கும்
வாழ்த்துக்கள்
நிரூ படம் நல்லா இருக்கு! உனது விமர்சனமும் நன்றாக இருக்கு! ஆனால் உனது பதிவில் காணப்படும் சில நெருடலான விஷயங்களுக்கு இனி வருகிறேன்!
” ஈழப் போராட்டம் இடம் பெற்ற காலங்களில் வெளியான குறும்படங்கள், விவரணச் சித்திரங்கள், முழு நீளத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஈழப் போராட்டத்தின் பிரச்சார வடிவமாக மாறிக் கொள்ள, குறும்படங்களானது ஈழச் சினிமாவிற்கான ஓர் அடையாளமாக தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள், மற்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் முயற்சியினால் மாற்றம் பெறுகிறது.’
இப்படி ஒரு கருத்தை முன்வைக்க உனக்கு எப்படி மனம் வந்தது நிரூ? அப்படியானால், ஈழத்து சினிமாவுக்கான அடையாளமாக, தென்னிலங்கையில் இருந்து வரும் குறும்படங்கள் தான், கருதப்படுகின்றனவா?
மேலும் யுத்தகாலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியை மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்கள், குறும்படங்கள் அனைத்துமே, பிரச்சார நெடியுடன் வெளிவந்தவைதான்! அதில் என்ன தவறு இருக்கிறது? பிரச்சாரம் வைப்பது குற்றமா? உலகில் அனைத்து ஊடகங்களும் ஏதோ ஒன்றைப் பிரச்சாரம் செய்து கொண்டுதான் இருக்கின்றன!
யுத்தத்தை பிரச்சாரம் செய்த படைப்புக்கள் என்று அவற்றைப் புறந்தள்ளுவது எவ்வகையில் நியாயம்?
நிரூ, உனக்கு ஒன்று தெரியுமா? உலகில் 95 வீதமான படைப்புக்கள், யுத்தத்தையே பிரச்சாரம் செய்கின்றன! மஹாபாரதம் எதனைச் சொல்கிறது? குருஷேத்திர யுத்தம் பற்றித்தானே? கம்பராமாயணம் எதனை சொல்கிறது? ராம - ராவண யுத்தம் பற்றித்தானே!
இப்போது வரும் தமிழ்சினிமாவின் ஆக்சன் படங்கள் எதனைக் காட்டுகின்றன? அவை யுத்த பிரச்சாரங்கள் இல்லையா? ஆக்ஷன் படங்கள் பார்க்கும் இளைஞர்கள், படத்தில் வரும் ஹீரோக்கள் போல தம்மைப் பாவித்து அடிதடி வன்முறையில் இறங்குவதில்லையா?
உலகில் பிரச்சாரம் வைக்காத, ஊடகம் என்று ஏதாவது உண்டா? பி பி சி முதற்கொண்டு, இலங்கையில் சட்டவிரோதமாக இயங்கும் குறுந்தூர வீச்செல்லை கொண்ட பிரதேச வானொலிகள் வரை அத்தனையும், ஏதோ ஒன்றைப் பிரச்சாரம் செய்தே வருகின்றன!
மேலும் ஈழத்து சினிமாவுக்கான அடையாளமாக தென்னிலங்கையில் இருந்து வரும் குறும்படங்கள்தான் உள்ளன என்றால், அப்படி ஒரு தனித்துவம் மிக்க, ஈழத்து மக்களின் வாழ்வியலை புலப்படுத்தும் ஒரு படைப்பு தென்னிலங்கையில் இருந்து வந்ததாக சொல்ல முடியுமா?
ஈழத்தமிழர்கள் பற்றி பொதுவாக உலகத் தமிழர்கள் மற்றும் தமிழகத் தமிழர்களிடையே இருக்கும் கருத்து என்ன என்பதை நீ நன்கு அறிவாய்?
அந்த விம்பத்தையா தென்னிலங்கை படைப்புக்கள் புலப்படுத்துகின்றன ? சினிமா என்று இல்லை, வேறு பல கலைப்படைப்புக்களும் அப்படித்தான்!
உனக்கு சில உதாரணங்கள் சொல்வேன்! வவுனியாவில் இருக்கும் சில இலக்கியவாதிகளுக்கு ஒரு வியாதி இருக்கிறது! அடிக்கடி ‘ வன்னி இலக்கியங்கள் - ஒரு பார்வை’ ‘ வன்னி வாழ்வியலும் இலக்கியங்களும், ‘போன்ற தலைப்புக்களில் நூல்கள் எழுதுவார்கள்! அதில் வன்னியில் வெளியான கவிதைகள் பற்றியோ, நாவல்கள் பற்றியோ, சிறுகதைகள் பற்றியோ எந்தக் குறிப்பும் இருக்காது!
வன்னியில் உக்கிரமாக சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும்! மக்கள் சொல்லணா துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள்! ஆனால் அரச கட்டுப்பாட்டு இலக்கியவாதிகளோ, சீதையின் இடை பற்றியும், வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றமை பற்றியும் விவாதித்துக் கொண்டிருப்பார்கள்! இந்தக் கேவலம் வேறெங்கேனும் நடந்ததுண்டா?
மேலும், சுனாமி காலத்தில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கவிதைத் தொகுப்புக்கள் வந்தன! பல கவிஞர்கள் சுனாமியில் செத்த மக்களுக்காக அழுது வடித்தனர்! இன்னும் பல சுனாமியால் கவிஞர்களாகினர்!
ஆனால் முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து எத்தனை கவிதைத் தொகுப்புக்கள் நாட்டில் வெளியாகின? சொல்லுங்கள் பார்க்கலாம்!
அப்படியானால் முள்ளிவாய்க்காலில் செத்தமக்கள் கவிதையின் பாடு பொருளாக விளங்க தகுதி அற்றவர்களா?
உண்மை என்னவென்றால், அரச கட்டுப்பாட்டு இலக்கியவாதிகளுக்கு, தங்களது வாழ்க்கையும் முக்கியம் அதேவேளை இலக்கியமும் படைக்க வேண்டும்!
அதனால் தான் அங்கு வெளியான படைப்புக்கள் சீரான கருப்பொருள் இன்றி, யதார்த்தத்துக்கு முரணாக வெளியாகின!
மேலும் இசைத்துறையில், பாடல் துறையில் என்ன தனித்துவத்தை தென்னிலங்கைக்காரர்கள் வெளிக்காட்டினார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம்!
சிங்களவனுக்காவது பைலா என்ற ஒன்று இருக்கிறது! நம்மவர்களுக்கு?
வன்னியில் வெளியான பாடல்களுக்கு நிகராக, தென்னிலங்கையில் ஏதேனும் பாடல்கள் வந்திருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்! கேட்க ஆசை!
தமிழ்சினிமாவில் இருந்து பாடல்கள் வராவிட்டால், நமது வானொலிகள் ஈ தான் ஓட்டுவார்கள்! தென்னிலங்கையில் இருந்து பல்லாயிரம் பாடல்கள் வந்தனதான்! நாங்களும் சந்தன மேடை, நம்ம ஹிட்ஸ் எல்லாமே கேட்டிருக்கிறோம்தான்!
ஆனால் தனித்துவம் இல்லையே! மக்கள் மத்தியில் பிரபலம் இல்லையே! பிறகென்ன?
நிரூ, நம்ம இசைப்பிரியனுக்கு நிகராக மெட்டுப் போடக்கூடிய, ஒரு தென்னிலங்கை இசையமைப்பாளரை உன்னால் சுட்டிக்காட்ட முடியும் என்றால், நான் ஈஃபில் டவரில் இருந்து கீழே குதிக்கிறேன்!
இன்னமும் வானொலித்துறை, நாடகத்துறை , கிராமியக் கலைகள் என அனைத்திலுமே, போர்க்கால இலக்கியங்களை மிஞ்ச முடியுமா, தென்னிலங்கை இலக்கியங்களால?
இது பற்றி இன்னமும் நிறையவே சொல்லிக்கொண்டு போகலாம்! எனவே
“ குறும்படங்களானது ஈழச் சினிமாவிற்கான ஓர் அடையாளமாக தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள், மற்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் முயற்சியினால் மாற்றம் பெறுகிறது.’”
என்ற உனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது உரிய விளக்கம் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
இதுவரை பார்க்கவில்லை குறும்படங்கள் வார இறுதியில் நேரம் இருந்தால் பார்த்துவிட்டு வருகிறேன் கருத்துடன் சாத்தியம் என்றாள்!
உங்கள் விமர்சனம் நெஞ்சை அள்ளுகிறது சகோ ! வாழ்த்துக்கள்.
” மிஷாவின் குரலில் புலம் பெயர்த டமிழ் உச்சரிப்பு இருந்தாலும், அவர் பேசும் வசனங்கள் கதை நிகழ் களத்திற்கேற்றாற் போல பிரதேசச் சாயலுடன் எழுதப்ப்பட்டிருக்கிறது. மாப்பு, மருமோன், மச்சி, பிள்ளை எனும் சொற்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. ””
நிரூ, எதுக்கு இந்த நக்கல்? ஃப்ரெஞ்சு சூழலில் பிறந்து வளர்ந்த ஒரு பெண், அதே சூழலில் கல்விகற்ற ஒரு பெண் இந்தளவுக்காவது தமிழ்பேசுவது மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயமாகும்!
அதுசரி உலகில் எங்காவது நல்ல தமிழ் பாவிக்கப்படுகிறதா? மக்கள் எங்காவது நல்ல தமிழைப் பேசுகிறார்களா? எனக்கு தயவு செய்து சொல்லுங்கள்!
இலங்கைத் தமிழர்கள் நல்ல தமிழ் பேசுவதகவும், குறிப்பாக யாழ்ப்பாணத்து தமிழ் நல்ல தமிழ் என்றும் ஒரு மாயை அனைவரின் மத்தியிலும் இருக்கிறது! அப்படி ஒரு நல்ல தமிழையா நாம் யாழ்ப்பாணத்தில் பேசினோம்?
உதாரணமாக ‘ வருகிறார்கள்’ என்ற சொல்லை, யாழ்ப்பாணத்தில் ‘ வருகினம் ‘ என்றும் ‘ வாறினம் ‘ வரீனம் ‘ என்றும் சொல்கிறோம்! இதே சொல் தமிழ்நாட்டில் ‘ வர்ராங்க’ என்கிறார்கள்!
இப்ப சொல்லுங்க இவற்றில் நல்ல தமிழ் எது?
இருக்கிறோம் என்பதை இருக்கிறம் என்று நாம் சொல்கிறோம், தமிழகத்தில் ‘ இருக்கிறம்ங்க’ ‘ இருக்கிறோம்ங்க’ என்கிறார்கள்! இவற்றில் எது சரி?
பிறகு என்பதை பேந்து என்று சொல்வது தமிழா? டமிழா?
என்று என்பதை எண்டு எனச் சொல்வது தமிழா? டமிழா?
எதுக்கு நிரூ, எப்ப பார்த்தாலும் இலங்கையில் இருப்பவர்கள், புலம்பெயர்தமிழர்களைக் குறை கூறிக்கொண்டுடே இருக்கிறீர்கள்?
உங்களுக்கு நாம் செய்த பாவம்தான் என்ன?
நல்லதொரு படத்தை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்..ஓய்வுநேரத்தில் பார்க்க முயல்கிறேன்..ஓட்டைவடையின் கருத்துகளும் கவனிக்க வேண்டியவையே..
தமிழ்மணம் எங்கய்யா?
@பலே பிரபு
பார்த்து விடுகிறோம்.//
நன்றி மாப்ஸ்.
@விக்கியுலகம்
ok!//
நன்றி சகோ.
@koodal bala
இது ஒரு மாறு பட்ட விமர்சனம் !//
நன்றி சகோ.
@Jawid Raiz
நல்ல விமர்சனம்//
நன்றி சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மீண்டும் வணக்கம் நிரூ!
படம் பார்த்து உருகிவிட்டேன்! மனசில் அப்படியே பதிந்துவிட்டது! ஒரு வரியில் சொல்லவேண்டுமானால், ( ஃபிரான்ஸ் தமிழில் )
“ படம்பார்த்து எனக்கு மண்டையால போச்சு //
மீண்டும், மீண்டும் வணக்கம் மச்சி,
நிஜமாவா...நன்றி மாப்ளே.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அப்படியானால் இலங்கையில் இருக்கும் போது, நன்றி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லையா? அது மனசில் ஒட்டவில்லையா? என்று கேட்டால்,
நாம் எந்தக் காலத்தில், நன்றி என்று சொல்லியிருக்கிறோம்? “ வணக்கம். நன்றி “ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால், மேலும் கீழும் பார்த்துவிட்டு, “ எப்ப வன்னியால வந்தனி? “ என்றுதான் கேட்பார்கள்!
அதனால்தான் நாங்கள், ‘ தாங்க்ஸ், தங்கியூ, தாங்கியூ சோ மச் ‘ போன்ற நல்ல தமிழை பயன்படுத்தி, எமது கலாச்சாரத்தையும், மொழியையும் கட்டிக் காக்கிறோம்! ஹி ஹி ஹி!!//
சபாஷ் மச்சி, நன்றி, வணக்கம் சகோதரம் எனும் வார்த்தைகளை வலையில் நான் பயன்படுத்திய போதும் ஒரு சிலர் ஏளனம் செய்தார்கள். எம்மவர்களின் குணவியல்புகளை நன்றாகத் தான் கவனிக்கிறாய் என நினைக்கிறேன்.
படம் பார்த்தேன் நிரூபன் ..உங்கள் விமரிசனமே படம் பார்க்கும் ஆவலை தூண்டியது .thats for now .
மாறுதலான கதை;வித்தியாசமான விமரிசனம்!
நன்றாக எழுதியுள்ளீர்கள் அண்ணா பார்க்க துண்டுகிறது . இரவு பார்த்து விட்டு வருகிறேன் அண்ணா
இப்போதைக்கு வோட்டு ஓகே
அருமையான விமர்சனம் பாஸ்.. இன்னும் குறும்படம் பார்க்கேல்ல.. பார்த்திட்டு அப்புறமா வாறன்
ஆஹா ஓட்டவட ஹன்சிகாவ மறந்து இங்கேயே தங்கிட்டாரா? மைந்தனுக்கு அடிச்சுது யோகம்.. மைந்தன் இனி தனிக்காட்டு ராஜாதான்
ஏலே விமர்சனம் சூப்பரு...புதிய முயற்சி பாஸ்
ஏலே விமர்சனம் சூப்பரு...புதிய முயற்சி பாஸ்
மவனுகளே கண்ட கிண்ட விசயங்களை எழுதி அப்புறம் அடிபட்டீங்கன்னா...
ஹன்சிகா வரமாட்டாங்க தீர்த்து வைக்க,,,ஆஅமா
@சசிகுமார்
படத்தை பார்க்கவில்லை (ஆபிசில் பார்க்க முடியாது) ஆனால் உங்களின் விமர்சனம் படம் பார்த்த நிறைவை தந்தது.
ஒரு நிமிடம் யோசிக்காமல் செய்த தவறினால் வாழ்க்கை முழுவதும் கஷ்ட படுகிறாள். இப்பொழுது பெரும்பாலானவர் இந்த நிலையில் தான் உள்ளனர். இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய படம். நன்றி நிரூபன்//
நன்றி சசி...
பிரபலமான குறும் படம் போல????விருதுகளும் கிடைத்திருக்கின்றன??
நான் கேள்விப்படாத குறும்படம் பாஸ்
பகிர்வுக்கு நன்றிக.
தமிழ்மணம் எங்கே?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
படத்தில் ஒரு சின்ன நெருடல், விபத்து நடக்கும் போது, ‘ டேய் லொறிடா ‘ என்று கத்துகிறார்கள்! இதில் யதார்த்தம் மிஸ்ஸிங்!
‘ டேய் கமியோண்டா ‘ என்றல்லவா வந்திருக்க வேண்டும்?//
ஆமாம் மச்சி, வெளிநாடுகளில் லொறி பாவனையில் இருக்கிறதா?
கன்ரர் வகை வாகனங்கள் தானே இருப்பதாக அறிந்தேன்.
@கந்தசாமி.
வணக்கம் பாஸ் ...//
வணக்கம் பெரிய பாஸ்....
@கந்தசாமி.
புதிய முயற்சியாக நம் ஈழத்து குறும்பட விமர்சனத்தை வலைத்தளத்தில் ஏற்றியதில் மகிழ்ச்சி..
விமர்சனம் படித்த பிறகு குறும்படத்தை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது ...நேரம் கிடைக்கும் போது பார்ப்போம்.. சோ, புக்மார்க் பண்ணி வைக்கிறேன்//
நன்றி சகோ.
@FOOD
சிறு சிறு தவறுகள் எப்படியெல்லாம் வாழ்க்கையை பாதிக்கின்றன என்பதனை விளக்க ஒரு படம்.படத்தின் விமரிசனம் படு க்யூட்.//
நன்றி சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
” ஈழப் போராட்டம் இடம் பெற்ற காலங்களில் வெளியான குறும்படங்கள், விவரணச் சித்திரங்கள், முழு நீளத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஈழப் போராட்டத்தின் பிரச்சார வடிவமாக மாறிக் கொள்ள, குறும்படங்களானது ஈழச் சினிமாவிற்கான ஓர் அடையாளமாக தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள், மற்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் முயற்சியினால் மாற்றம் பெறுகிறது.’
இப்படி ஒரு கருத்தை முன்வைக்க உனக்கு எப்படி மனம் வந்தது நிரூ? அப்படியானால், ஈழத்து சினிமாவுக்கான அடையாளமாக, தென்னிலங்கையில் இருந்து வரும் குறும்படங்கள் தான், கருதப்படுகின்றனவா? //
மதிப்பிற்குரிய ஓட்ட வடை நாராயணன் அவர்களே,
என் பதிவில், என் சொற் பிரயோகங்களில் தவறிருந்தால், இவ் விடத்தில் மன்னிப்புக் கேட்கிறேன்.
இனி என் பதிவில் இத்தகைய பதங்களைக் கையாண்டமைக்கான விளக்கங்களை முன் வைக்கிறேன்.
ஈழத்திற்கென்றோர் தனித்துவமான சினிமா இன்றைய கால கட்டத்தில் இல்லாத போது, ஈழத்தில் அத்தி பூத்தாற் போல என்றாவது ஒரு நாள் வரும் குறும்படங்கள் இக் குறையினை நிவர்த்தி செய்து விடுகின்றன.
இங்கே தென்னிலங்கையினையும், புலம் பெயர் தேசத்தினையும் இணைத்தே கூறியுள்ளேன், இதற்குச் சான்றாக நீங்கள் மேற்கோளிட்ட வரிகளையே பார்க்கலாம்.
இதற்கான பிரதான காரணம்- ஈழத்தின் வட கிழக்கில் நிதர்சன நிறுவனம், தர்மேந்திராக் கலையகம், திரைப்பட வெளியீட்டுப் பிரிவு முதலிய நிறுவனங்களின் முயற்சியால் குறும்படங்கள், விவரணச் சித்திரங்கள், முழு நீளத் திரப்படங்கள் வெளிவந்திருக்கின்றன, ஆனால் அவற்றினை இன்றைய கால கட்ட - அரசியல் தள வடிவங்களினை அடிப்படையாகக் கொண்டு ஈழச் சினிமாவினுள் சேர்க்க முடியாத சூழ் நிலையினை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்,
இதனை நாமாக உணர்ந்து, இந்தப் படங்களுக்கு ஒரு நிலையினைக் கொடுத்தாலும்
தேசிய கலை இலக்கியப் பேரவையோ, அல்லது கொழும்பில் உள்ள திரைக் கல்லூரிகளோ இப் படங்களை அங்கீகரிக்கும் நிலையில் இல்லை, இதற்கான காரணம் நீங்கள் அறியாத ஒன்றல்ல.
அப்படி இருக்கையில், பிரச்சார உத்தி சார்ந்து, ஒரு காலத்தின் போராட்டச் சூழலினை மாத்திரம் விபரிக்கும் படங்களாக இப் படங்களைப் பிறர் கருதி நிற்க,
ஈழத்துக் குறும்படங்கள் என்ற வட்டத்தினுள், தமிழ் தேச விரும்பிகளைத் தவிர்த்துப் பிறர் பார்வையில்
தென் பகுதியில் இருந்து வெளியாகிய ஒரு சில படங்களையும், புலம் பெயர் உறவுகளால் வெளியிடப்பட்ட அரசியல் கலப்பற்ற படங்களையும் தான் இன்றைய கால கட்டத்தில் ஈழத்துக் குறும்பட வரிசை என்று தென்னிலங்கையில் இருந்து இயங்குகின்ற இதழியற் கல்லூரி, தேசிய கலை இலக்கியப் பேரவை முதலிய நிறுவனத்தினர் கருதுகின்றார்கள்.
ஆகவே இக் கூற்றிற்கான பொருத்தப்பாட்டினைத் தாங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்..
ஈழப் போர் இடம் பெற்ற பகுதிகளில் இருந்து வெளியாகிய பல படங்கள் பிரச்சார, உத்தியினைத் தவிர்த்து, மக்களின் அவல வாழ்வு, கடல் வலயத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வு, ஈழத்து வளங்களின் சிறப்பியல்புகள் எனப் பல்வேறு விடயங்களையும் பேசி நின்றாலும், அவை யாவும் அரச ஊடகங்கள் பார்வையில் பயங்கரவாதிகள் என்ற நாமத்தில் அழைக்கப்படுவோர் தயாரித்த காரணத்தால்,
இன்றைய கால கட்டத்தில் இலங்கை இதழியல் கல்லூரியோ, தேசிய கலை இலக்கியப் பேரவையோ, அல்லது இலங்கைத் திரைப்படங்களோடு தொடர்புடைய பல அமைப்புக்களோ அவற்றிற்குத் தகுந்த அந்தஸ்தினை வழங்கவில்லை.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மேலும் யுத்தகாலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியை மையமாக கொண்டு வெளிவந்த திரைப்படங்கள், குறும்படங்கள் அனைத்துமே, பிரச்சார நெடியுடன் வெளிவந்தவைதான்! அதில் என்ன தவறு இருக்கிறது? பிரச்சாரம் வைப்பது குற்றமா? உலகில் அனைத்து ஊடகங்களும் ஏதோ ஒன்றைப் பிரச்சாரம் செய்து கொண்டுதான் இருக்கின்றன!
யுத்தத்தை பிரச்சாரம் செய்த படைப்புக்கள் என்று அவற்றைப் புறந்தள்ளுவது எவ்வகையில் நியாயம்?
நிரூ, உனக்கு ஒன்று தெரியுமா? உலகில் 95 வீதமான படைப்புக்கள், யுத்தத்தையே பிரச்சாரம் செய்கின்றன! மஹாபாரதம் எதனைச் சொல்கிறது? குருஷேத்திர யுத்தம் பற்றித்தானே? கம்பராமாயணம் எதனை சொல்கிறது? ராம - ராவண யுத்தம் பற்றித்தானே!//
சகோதரம், நான் இங்கே என்னுடைய தனிப்பட்ட கருத்தினை முன் வைக்கவில்லை, ஈழத்துச் சினிமாவில் வடக்கு கிழக்கில் இருந்து வெளியாகிய படங்களின் இன்றைய நிலையினைத் தான் இங்கே சுட்டியுள்ளேன்.
பிரச்சார உத்தியினைத் தவிர்த்துப் பார்த்தாலும், கலை நயம் நிறைந்த காத்திரமான படைப்புக்களைத் திரைப்பட வெளியிட்டுப் பிரிவும், நிதர்சன நிறுவனமும் தந்திருக்கிறார்கள். ஏன் பல்வேறு பாடல்களைத் தந்திருக்கிறார்கள். இவற்றினை அங்கீகரிக்கும் நிலையில் இன்று யாராவது இருக்கிறார்களா?
இவற்றினை யாராவது அங்கீகரித்திருக்கிறார்களா?
விடுதலை நோக்கம் தவிர்ந்த, பக்தி ரசம் நனி சொட்டும் பாடல்களைக் கூட வெளியிட்டிருக்கிறார்கள். அப் பாடல்களின் இன்றைய நிலை என்ன?
இவை யாவும் ஆளும் வர்க்கத்தின் பார்வையில் குறித்தை ஒரு பெயரால் அழைக்கப்பட்டவர்கள் வெளியிட்ட காரணத்தால் ஈழச் சினிமா எனும் வகையினுள் அங்கீகரிக்கப்படவில்லை.
எமது மனங்களில் இவற்றிற்கான அந்தஸ்தினைக் கொடுத்து மகிழ்வதை விட, நாம் வேறு என்ன செய்ய் முடியும்?
எம்மவரின் திறமைச் சான்றை எனக்கு அடையாளம் காட்டியமைக்கு ரொம்ப நன்றீப்பா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)
ஃஃஃஃஃஃ@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அப்படியானால் இலங்கையில் இருக்கும் போது, நன்றி என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லையா? அது மனசில் ஒட்டவில்லையா? என்று கேட்டால்,
நாம் எந்தக் காலத்தில், நன்றி என்று சொல்லியிருக்கிறோம்? “ வணக்கம். நன்றி “ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினால், மேலும் கீழும் பார்த்துவிட்டு, “ எப்ப வன்னியால வந்தனி? “ என்றுதான் கேட்பார்கள்! ஃஃஃஃஃஃ
உண்மையில் எமது பெரிய அடையாளம் அது தான்... யாருக்காகவும் அதை மாற்றக் கூடாது ரஜீ.. நாம் மற்றவருடன் எதில் குறைந்திருக்கிறோம்.. காட்டில் இருந்தாலும் பட்டணத்தில் இரந்தவரை விட அதிக கல்வியும் அனுபவமும் பெற்றிருக்கிறோம் தானே..
ஃஃஃஃஃநிரூ, உனக்கு ஒன்று தெரியுமா? உலகில் 95 வீதமான படைப்புக்கள், யுத்தத்தையே பிரச்சாரம் செய்கின்றன! மஹாபாரதம் எதனைச் சொல்கிறது? குருஷேத்திர யுத்தம் பற்றித்தானே? கம்பராமாயணம் எதனை சொல்கிறது? ராம - ராவண யுத்தம் பற்றித்தானே!
ஃஃஃஃஃஃ
மச்சி நீ சொல்வது சரிதாம்பா ஆனால் இந்தக் காப்பியங்களில் ஒரு உதைப்பிருக்கிறதை பார்த்தியா ?
யுத்தம் என்பது மனிதனில் ஊறிய வெறி அதை கிளற வைப்பதில் பல லாபம் இருக்கிறது.. பல படங்கள் கூட அதை நம்பித் தான் வெளி வருகுது உதாரணத்திற்கு எந்திரனில் ரஜனி, கலாபவன் மணியிடம் தப்ப ஓடியதையே தாங்க முடியாமல் பதிவு போட்ட ரசிகன் இருக்கிறான்.
அதை விட முக்கியம் ஒன்றிருக்கு 1- ராமாயணத்தை வால்மிகி எழுதியதாக சொல்லப்படகிறது... அவரக்கும் ராமாயண பொர்க்களத்திற்கும் நேரடி சம்பந்தமில்லை
2- குருசேத்திரம் திருதராட்டினனுக்கு சஞ்சயன் கூறியதாகவும் அதை வியாசர் கூற பிள்ளையார் எழுதியதாகவும் சொல்லப்படுகிறது அப்படியானால் என்னைப் பொறுத்தவரை யுத்தத்தில் நின்ற ஒருவருமே எழுதவில்லை
ஏன் எழுதவில்லை ?
போரை ரசிப்பவனால் மட்டுமே இது சாத்தியம்.. அனுபவித்தவனுக்கு நரி சுரியில் மாட்டுப்பட்ட கதை தாம்பா...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மேலும் ஈழத்து சினிமாவுக்கான அடையாளமாக தென்னிலங்கையில் இருந்து வரும் குறும்படங்கள்தான் உள்ளன என்றால், அப்படி ஒரு தனித்துவம் மிக்க, ஈழத்து மக்களின் வாழ்வியலை புலப்படுத்தும் ஒரு படைப்பு தென்னிலங்கையில் இருந்து வந்ததாக சொல்ல முடியுமா? //
மச்சி, என் கருத்தில் தவறிருந்தால் நான் நீக்கிவிடுகிறேன், ஆனால் தென்னிலங்கையினை மட்டும் நான் மையப்படுத்தி என் கருத்தினை எழுதவில்லை,
தென்னிலங்கை, புலம் பெயர் தேசம் ஆகிய இரண்டையும் சேர்த்துள்ளேன், அத்தோடு இவ் வரிசையில் ஈழத்தின் ஏனைய பகுதிகளில் இருந்து வெளிவரும் குறும்படங்களும் உள்ளடங்கும் எனும் ஒரு வசனத்தை சேர்க்க மறந்து விட்டேன், அது என் தவறு தான், அதற்காக மீண்டும் மன்னிப்புக் கேட்கிறேன்.
ஈழத்துப் போர் உத்திகளையோ, பிரச்சார வடிவங்களையோ, தவிர்த்து, இன்று வரை என் நினைவில் நிற்கும் மக்கள் வாழ்வியலைச் சொல்லும் குறும்படங்களின் பெயர்களை நான் இங்கே தருகின்றேன்.
இவற்றில் எத்தனை படங்களை இலங்கையில் இன்றுள ஊடகங்கள் தரமான சினிமா- ஈழத்து சினிமா எனும் வட்டத்தினுள் அங்கீகரித்துள்ளன என்று சொல்ல முடியுமா?
என் அங்கீகரிக்கவில்ல, தமிழர்கள் தமிழர்களுக்காக எடுத்த படம் என்ற காரணத்தால் தானே?
இதோ என் நினைவில் நிற்கும் படங்களை மாத்திரம் இங்கே பகிர்கிறேன், இவற்றில் மக்களின் இயல்பு வாழ்வு மாத்திரம் தான் கூறப்பட்டிருக்கிறது, போர் பற்றியோ, போருக்கான பிரச்சார உத்திகளோ இங்கே குறிப்பிடப்படவில்லை. ஆனால் இப் படங்களின் இன்றைய நிலை என்ன?
*அப்பா வருவார்
*செருப்பு
*செம்பருத்தி
*என்று தணியும்
*எதிர்காலம் கனவல்ல
*எதிர்காலம் உனதல்ல
*இனியொரு விதி
*இன்றிலிருந்து
*இது எங்கள் தேசம்
*பனிச்ச மரம் பழித்திருக்கு
*சொந்தங்கள்
*ஈர மண்
*வேலி
*தேசம் தந்த சொந்தம்
*உதயத்தில் அஸ்தமனம்
*விடி நிலம்
*தாய் மனசு
ஈழப் போர் இடம் பெற்ற பகுதிகளில் இருந்து வெளியாகிய பல படங்கள் பிரச்சார, உத்தியினைத் தவிர்த்து, மக்களின் அவல வாழ்வு, கடல் வலயத் தடைச் சட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்களின் வாழ்வு, ஈழத்து வளங்களின் சிறப்பியல்புகள் எனப் பல்வேறு விடயங்களையும் பேசி நின்றாலும், அவை யாவும் அரச ஊடகங்கள் பார்வையில் பயங்கரவாதிகள் என்ற நாமத்தில் அழைக்கப்படுவோர் தயாரித்த காரணத்தால்,
இன்றைய கால கட்டத்தில் இலங்கை இதழியல் கல்லூரியோ, தேசிய கலை இலக்கியப் பேரவையோ, அல்லது இலங்கைத் திரைப்படங்களோடு தொடர்புடைய பல அமைப்புக்களோ அவற்றிற்குத் தகுந்த அந்தஸ்தினை வழங்கவில்லை.///////
அவர்களால் எப்படி அங்கீகரிக்க முடியும் நிரூ? இவற்றையெல்லாம் அங்கீகரித்தால், அவர்கள் நாலாம் மாடியில் தலைகீழாகத்தான் தொங்க வேண்டும்! நாட்டின் நிலைமை அப்படி இருக்கிறது!
ஆக, அரசாங்கம் எதை விரும்புகிறதோ? எதை ஏற்றுக் கொள்கிறதோ? அதுவே, மேற்சொன்ன இலக்கிய அமைப்புக்களும் செய்யவேண்டிய நிலையில் உள்ளன!
அதிலொன்றும் பிரச்சனை இல்லை! அவர்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டட்டும்! இன்னமும் சங்ககாலத்திலேயே நிற்கட்டும்! அது அவர்களின் விருப்பம்!
ஆனால், அவர்களால் இயற்றப்படும், ஜனவசியத்துக்கு நேரெதிர்திசையில் பயணிக்கும் படைப்புக்கள்தான், ஈழத்துப் படைப்புக்கள், அவைதான் ஈழத்தின் இலக்கியக் குறிகாட்டிகள் என்றும் சுட்டிக்காட்டுவது, மாபெரும் தவறாகும்!
இவர்களது, ” இறந்தகாலத்தை விதந்துரைக்கும் ” படைப்புக்களுக்கும், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான, ஈழத்தமிழினம் தொடர்பாக சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள, கருத்தியலுக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை!
ஆக, அவர்கள் அங்கீகரித்தால்தான் அது நல்ல படைப்பென்றோ, அவர்கள் பொன்னாடை போர்த்தினால்தான், போராட்டம்சார் கலைஞர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என்று இல்லை!
நிரூ, இது தொடர்பாக நிறைப் பேசுவோம்! , எழுதுவோம்!
ஈழத்து இலக்கிய உலகம் தொடர்பாக தமிழக நண்பர்களுக்கும் நாம் நிறையவே சொல்லவேண்டியுள்ளது!
நிரூ, புலம்பெயர்தேசத்தில் இருந்து வரும் படைப்புக்களை, தென்னிலங்கை படைப்புக்களுடன் இணைக்க வேண்டாம்! ஏனென்றால் அவை ‘ புலம்பெயர் தமிழ் இலக்கியங்கள் ‘ என்ற வேறொரு வகையில் தனித்துவம் பெறுகின்றன!
இன்று நாம் பார்த்த குறும்படம்கூட, ஈழத்து வாழ்வியலையா புலப்படுத்துகிறது? இல்லையே?
ஆக, இலங்கையின் அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வந்த இலக்கியங்கள் வேறு, புலம்பெயர் இலக்கியங்கள் வேறு!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரூ, நம்ம இசைப்பிரியனுக்கு நிகராக மெட்டுப் போடக்கூடிய, ஒரு தென்னிலங்கை இசையமைப்பாளரை உன்னால் சுட்டிக்காட்ட முடியும் என்றால், நான் ஈஃபில் டவரில் இருந்து கீழே குதிக்கிறேன்!
இன்னமும் வானொலித்துறை, நாடகத்துறை , கிராமியக் கலைகள் என அனைத்திலுமே, போர்க்கால இலக்கியங்களை மிஞ்ச முடியுமா, தென்னிலங்கை இலக்கியங்களால?
இது பற்றி இன்னமும் நிறையவே சொல்லிக்கொண்டு போகலாம்! எனவே
“ குறும்படங்களானது ஈழச் சினிமாவிற்கான ஓர் அடையாளமாக தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள், மற்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் முயற்சியினால் மாற்றம் பெறுகிறது.’”
என்ற உனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது உரிய விளக்கம் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!//
மச்சி, இசைப்பிரியனுக்கோ அல்லது கண்ணன் மாஸ்டருக்கு ஈடாகவோ யாரும் தென்னிலங்கையில் இல்லை மச்சி,
நான் செவி வழியாக கேட்ட விடயம் ஒன்றினை இவ் இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
கண்ணன் மாஸ்டர் அவர்கள் இசைஞானி இளையராஜா அவர்களிடம் இசை பயிலச் சென்றராம்/ இசை நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்காக சென்ற வேளை அங்கே இசைஞானி கேட்ட விடயம்- ஆர்மோனியப் பெட்டி வாசிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் இன்றைய வகுப்பிற்கு அமரலாம் எனபதாகும்....
கண்ணன் மாஸ்டர் மட்டும் தான் அன்றைய வகுப்பில் கலந்து கொண்டவராம்,
ஏனையவர்கள் ஆர்மோனியப் பெட்டி வாசிக்கத் தெரியாத காரணத்தால் போய் விட்டார்களாம்..
இதே போல இசைப் பிரியனுக்கென்று சில தனித்துவமான இயல்புகள் இருக்கின்றன,
ஈழத்து இசையினை பிறிதோரு தளத்தில்- டிஜிட்டல் தொழில் நுட்பத்தோடு இணைத்துப் பயணிக்க வைத்த பெருமை அவரினையே சாரும்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
“ குறும்படங்களானது ஈழச் சினிமாவிற்கான ஓர் அடையாளமாக தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள், மற்றும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் முயற்சியினால் மாற்றம் பெறுகிறது.’”
என்ற உனது கருத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது உரிய விளக்கம் சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!//
என் கருத்திற்கு விளக்கம் தந்திருக்கிறேன், என் கருத்தில் தவறு இருப்பதால், மன்னிப்பு கேட்கிறேன் மாப்பு.
@Nesan
இதுவரை பார்க்கவில்லை குறும்படங்கள் வார இறுதியில் நேரம் இருந்தால் பார்த்துவிட்டு வருகிறேன் கருத்துடன் சாத்தியம் என்றாள்!//
நன்றி சகோ.
@shanmugavel
உங்கள் விமர்சனம் நெஞ்சை அள்ளுகிறது சகோ ! வாழ்த்துக்கள்.//
நன்றி சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மிஷாவின் குரலில் புலம் பெயர்த டமிழ் உச்சரிப்பு இருந்தாலும், அவர் பேசும் வசனங்கள் கதை நிகழ் களத்திற்கேற்றாற் போல பிரதேசச் சாயலுடன் எழுதப்ப்பட்டிருக்கிறது. மாப்பு, மருமோன், மச்சி, பிள்ளை எனும் சொற்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. ””
நிரூ, எதுக்கு இந்த நக்கல்? ஃப்ரெஞ்சு சூழலில் பிறந்து வளர்ந்த ஒரு பெண், அதே சூழலில் கல்விகற்ற ஒரு பெண் இந்தளவுக்காவது தமிழ்பேசுவது மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயமாகும்!//
சத்தியமா இது நக்கல் இல்லை மச்சி,
புலம் பெயர்ந்த மூன்றாம் தலை முறையின் மென்மையான தமிழ் உச்சரிப்பினை விளிக்கவே இப்படி ஓர் பதத்தினைக் கையாண்டேன் மச்சி. இதிலும் தவறிருந்தால் மன்னிகவும் மாப்பு.
@செங்கோவி
நல்லதொரு படத்தை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்..ஓய்வுநேரத்தில் பார்க்க முயல்கிறேன்..ஓட்டைவடையின் கருத்துகளும் கவனிக்க வேண்டியவையே..//
நன்றி சகோ.
@செங்கோவி
தமிழ்மணம் எங்கய்யா?//
தமிழ் மணம் இன்று ஓய்விலிருக்கிறது என நினைக்கிறேன்.
@angelin
படம் பார்த்தேன் நிரூபன் ..உங்கள் விமரிசனமே படம் பார்க்கும் ஆவலை தூண்டியது .thats for now .//
நன்றி சகோ.
@சென்னை பித்தன்
மாறுதலான கதை;வித்தியாசமான விமரிசனம்!//
நன்றி ஐயா.
@Mahan.Thamesh
நன்றாக எழுதியுள்ளீர்கள் அண்ணா பார்க்க துண்டுகிறது . இரவு பார்த்து விட்டு வருகிறேன் அண்ணா
இப்போதைக்கு வோட்டு ஓகே//
நன்றி மாப்ளே...
@மதுரன்
அருமையான விமர்சனம் பாஸ்.. இன்னும் குறும்படம் பார்க்கேல்ல.. பார்த்திட்டு அப்புறமா வாறன்/
நன்றி பாஸ்.
@மைந்தன் சிவா
ஏலே விமர்சனம் சூப்பரு...புதிய முயற்சி பாஸ்//
நன்றி மச்சி...
@மைந்தன் சிவா
மவனுகளே கண்ட கிண்ட விசயங்களை எழுதி அப்புறம் அடிபட்டீங்கன்னா...
ஹன்சிகா வரமாட்டாங்க தீர்த்து வைக்க,,,ஆஅமா//
விளங்குது மாப்ளே....
ஹி...ஹி...சில விடயங்களைச் விபரிக்காது இருக்க முடியலையே...
@♔ம.தி.சுதா♔
எம்மவரின் திறமைச் சான்றை எனக்கு அடையாளம் காட்டியமைக்கு ரொம்ப நன்றீப்பா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//
நன்றி மச்சி...
குறும் படத்தை தான் பார்க்க முடியவில்லை. உங்கள் எழுத்து அக்குறையை தீர்த்து விட்டது. பகிர்வுக்கு நன்றி சகோ.
நன்றி அம்மா- திருமணத்திற்கு முன்னரான உடலுறவின் பரிசினை மகிழ்ச்சியோடு ஏற்றுத் தனிமையில் வாழும் பெண்ணின் உள்ளத்து உணர்விற்குச் சான்றாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. >>>>
சமூக வழக்கத்துக்கு மாறாக நடந்த செயல்கள் அவள் பெற்றோரால் நேர்மறையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது
தமிழ் மணம் ஓட்டு இப்ப தான் போட்டேன் முன்னர் வேலை செய்யல்ல...
அட நம்ம ஓட்ட வடையா இது ..ரஜீயின் பின்னூட்டங்கள் பிரமிக்க வைக்கிறது...
நிரூபன் பாஸ் உங்க பொறுப்பான பதில்களும் மெச்சத்தக்கது...
அடுத்தடுத்து வரும் நிரூவின் பதிவுகளில் வடையண்ணாவின் பார்வை அற்புதம்.கிட்டத்தட்ட என் மனோநிலையோடு ஒத்திருக்கிறது.நன்றி.
நிரூ நீங்கள் சொல்லித்தன் இந்தப் படம் பார்த்தேன்.அதற்கும் நன்றி !
புலம் பெயர் தேசத்தின் இன்னொரு முகத்தைக் காட்டும் நல்ல குறும் படம் நிச்சயம் பாராட்ட வேண்டியது உங்களின் நடுநிலையான விமர்சனம் சிறப்பானது . நல்ல விசயத்தை உங்களின் பதிவு ஊடாக பார்த்த திருப்தி.
கதையில் வரும் மதுபோதையில் கார் ஓட்டுவது என்பது கொஞ்சம் யாதார்த்தத்தை மீறியதாக இருக்கிறது.
இப்ப தான் பார்த்து முடிச்சேன்..
குறும்படத்தில் இரண்டு விடயம் உதைக்கிறது
ஒன்று "டேய் லோறிடா" என்ற வார்த்தை.. பிரான்சில் லோறியா..??
மற்றையது நேசன் சொன்னது போல மது போதையில் வண்டி ஓட்டுவது சட்டப்படி குற்றம்.. யதார்த்தத்தை மீறியதாக தான் உள்ளது ..இது சம்மந்தமான ஒரு வசனத்தை வேண்டுமென்றால் வைத்திருக்கலாம்... "மச்சான் பொலீஸ் கண்ணில மாட்டினம் எண்டா செத்தம்டா" என்று ...))
வணக்கம் நண்பா,,
படம் பாக்க முன் கதைய சொல்லிபுட்டின்களே
நன்றி நண்பர்களே
உங்கள் விமர்சனங்களுக்கும் ,ஆதரவுக்கும்
i.v.ஜனா
செம விமர்சனம்..
Post a Comment