’’அக்கராயன் பள்ளிக் கூடத்தடியில் இறங்கிற ஆட்கள் யாராச்சும் இருக்கிறீங்களா? வேளைக்குச் சொல்லுங்கோ, அக்கராயன் பள்ளிக் கூடத்தடி யாராச்சும் இருக்கீங்களா?
என நிமிடத்திற்கொரு தரம் கூவியவாறு, அடுத்த பஸ் நிறுத்தம் எது என்பதை நினைவுபடுத்திக் கொண்டிருந்தார் பேருந்து நடத்துனர்.
ஓம் நான் இருக்கேன்’ எனத் தன் மெல்லிய குரலால் தலை நிமிர்த்திப் பாண்டியன் போக்குவரவுக் கழக பஸ்ஸின் கடைசிச் சீற்றீலிருந்து குரல் கொடுத்தாள் ஹம்ஷிகா.
கூட்டத்தை இடறியும், இடித்தும் நகர்ந்த வாறு பேருந்தின் மிதி பலகைக்கு அருகாக, தான் பஸ்ஸில் இருந்து இறங்குவதற்கு ஏற்றாற் போல வந்து நின்றாள் ஹம்ஷிகா.
போர்க்கால மேகங்கள் சத்ஜெய எனும் படை நடவடிக்கைப் பெயரோடு கிளி நொச்சியினை சூழ்ந்த வேளையில் பரந்தன் சந்தியில் இருந்து இடம் பெயர்ந்து வன்னியில் வாழ முடியாதவளாகவும், தன் கல்வி எனும் சுமையினைக் கனிவாக கற்க வேண்டும் எனும் நோக்கோடும் குடும்பத்தாருடன் கொழும்பிற்குப் புலம் பெயர்ந்தவள் தான் ஹம்ஷிகா.
பாலப் பழம் போன்று பிறப்பிலே வெள்ளை வெளீரென இருந்தாலும், கொழும்பின் குளோரின் தண்ணீரில் குளிர்த்துப் பழகியதால் செயற்கை வெள்ளையினையும் பெற்றிருந்தாள். அத்தோடு ஹோர்மோன் உணவுகளை உண்ணப் பழகியதால் பெண்மைக்கேயுரிய திமிர்க் கட்டுக் கொஞ்சம் கூடியும், கன்னங்கள் சிரிக்கையில் காந்தங்களாகப் பார்ப்போரை இழுக்கும் வண்ணமும் ஒரு குறுகிய காலத்தினுள் மாற்ற முற்றிருந்தாள் ஹம்ஷிகா.
வந்தாரை வர வேற்று, வாழ வைக்கும் வன்னி மண்ணில் மீண்டும் கால் பதிக்கப் போகும் நோக்கில், ’ஸ்ரைற்றிங்(Straightening) பண்ணிய அவள் கூந்தல் பஸ் காற்றில் நர்த்தன மாட, தலையினை அங்கு மிங்கும் திருப்பி, தன் இருப்பிடம் வருகிறதா என எட்டிப் பார்த்துக் கொண்டு நின்றாள் ஹம்ஷிகா.
அக்கராயன் பள்ளிக் கூடம் வர ஹம்ஷிகா இறக்குகையில்; அவள் பின்னே முன் இருக்கையில் அமர்ந்திருந்த கானகனும் ஞானதோயம் பெற்றவனாய் திடுக்குற்று விழிப்படைந்து, பட படத்தவனாய் இறங்கத் தொடங்குறான்.
ஹம்ஷிகாவைப் பின் தொடர்ந்து இறங்கிய கானகன், ஹலோ உங்களைத் தான், நான் கூப்பிடுறது கேட்கலையே?
ஹாய், ஒரு நிமிசம் நிற்க முடியுமோ?
ஹம்ஷிகா கானகனின் குரலினக் கேட்டும் கேளாதவள் போலப் பயங் கலந்தவளாய் விறு விறென்று வேகமாக நடக்கத் தொடங்குகினாள். கானகன்,
இனியும் பின் தொடர்தல் இழிவென்று நினைத்தவனாய், ஓட்டமும் நடையுமாகக் ஹம்ஷிகாவைப் பின் தொடர்ந்து, தன் இலக்கினை எட்டியவனாய் அவள் முன்னே போய் நின்றான். கானகன் தன் வழியிற்கு குறுக்கே வருவதை இனங் கண்ட ஹம்ஷிகா,
இஞ்ச, உமக்கு என்ன வேணும்? எனக்குத் தான் உங்களை யார் என்று தெரியாதே. பிறகேன் என்னைப் பின் தொடருறீர்?
உமக்கு அக்கா தங்கச்சி இல்லையே?
ஒரு பொம்பிளை கொஞ்சம் ஸ்டைலாக குலுக்கி, மினுக்கிக் கொண்டு வந்தாள்
அவளைத் தப்பான கண்ணோட்டத்தோடை தான் அணுகுவீங்கள்?
அடக் கடவுளே, கொழும்புப் பக்கம் தான் பசங்க இப்படி என்றால், வன்னியிலுமா?
உங்களை மாதிரிக் காவாலிப் பசங்களையெல்லாம் அண்ணையாக்களிட்டைச் சொல்லிப் பச்சை மட்டை அடி வாங்கித் தந்தால் தான் திருந்து வீங்க!!
எனக் கண்களில் கோபம் கொப்பளிக்க அவனைத் திட்டித் தீர்த்தாள்.
ஆத்திரத்தோடு, பொறுமை நிறைந்தவனாக இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கானகன்,
விட்டா.....ஓவராத் தான் பேசுவீங்க போலம் இருக்கே?
உங்களை விட அழகான பொம்பிளையளை நாங்கள் பார்க்கவில்லை என்ற நோக்கில் பேசிக்கிட்டே போறீங்க?
ஏதோ, நீங்க தான் ஊருக்குள்ளேயே பெரிய சினிமா நடிகை என்ற நினைப்புப் போல?
நான் ஒன்றும் உம்மைச் சைற் அடிக்கிற நோக்கத்தில உமக்குப் பின்னால் வரவில்லை.
பஸ்ஸிலை உங்கடை ஹாண்ட் பாக்கில இருந்து பாஸ்போர்ட்டை விழுத்திப் போட்டுப் போயிட்டீங்க.
அதனைக் கொண்டு வந்து தருவம் என்று தான் வந்தனான். மற்றும் படி நீங்க நினைக்கிற மாதிரிச் சீப்பான ஆம்பிளை நான் இல்லை; எனச் சொல்லி முடித்தான் கானகன்.
ஹம்ஷிகா தன் தவறை உணர்ந்தவளாய், மௌனித்துப் போய் நன்றி எனும் ஒற்றை வார்த்தை கூடச் சொல்ல முடியாதவளாய் நின்றாள்.
|
99 Comments:
ஆண்களின் உதவும் உயர்
எண்ணத்தை கூட
காமம் என்றும் காதல் என்றும்
பொழிப்புரை கூறும்
பொல்லாத
பொண்டு பிள்ளைகளை
சரியான வகையில்
சிறப்பான விகிதத்தில்
சொல்லிய பதிவு
அற்புதம் சகோ
அதிலும் அந்த பெயர் ஹம்ஷிகா
இதயத்தில்
இனிப்பாய்
இறங்குகிறது
என்ன மாப்பிள,இவ்ளோதானா?மீதியக் காணம்?அக்கராயனில நிண்டு போற மாதிரிக் கிடக்கு!சூப்பர்!
கதையின் போக்கும் பேச்சு வழக்கும் மிகவும் அருமை.. தொடருங்கள்
வணக்கம் பாஸ் ...)
///போர்க்கால மேகங்கள் சத்ஜெய எனும் படை நடவடிக்கைப் பெயரோடு கிளி நொச்சியினை சூழ்ந்த வேளையில் பரந்தன் சந்தியில்/////// பரந்தன் சந்தி .......மறக்க முடியாத நினைவலைகள் + சோகங்களை தாங்கி நிற்கும் ஒரு இடம் ;-(
இரண்டாவது போட்டோவில நடு ரோட்டில நிக்குதே பொண்ணு , அந்த கோலத்தில முந்தி வன்னிக்க போக முடியுமா என்ன ;-)
///இஞ்ச, உமக்கு என்ன வேணும்? எனக்குத் தான் உங்களை யார் என்று தெரியாதே. பிறகேன் என்னைப் பின் தொடருறீர்?
உமக்கு அக்கா தங்கச்சி இல்லையே?
ஒரு பொம்பிளை கொஞ்சம் ஸ்டைலாக குலுக்கி, மினுக்கிக் கொண்டு வந்தாள்
அவளைத் தப்பான கண்ணோட்டத்தோடை தான் அணுகுவீங்கள்?// ஹிஹிஹி அழகென்றால் கூடவே திமிரும் இருக்க தானே செய்யும்
வசன நடை சூப்பர் பாஸ்...
தான் அழகு என்று நினைக்கும் பெண்ணை விரும்பளாம்.. ஆனால் தான் தான் அழகு என்று நினைக்கும் பெண்ணிடம் சற்றுக் கவனமாக இருங்கள் !!! ஏனெனில் அவள் அழகில்லை என்பதை அவளுடம் பழகியப் பின் அறிவீர்கள் ... அக்கணத்தில் அவளின் அழகினை மெச்சுபவனிடம் ஓடிவிடுவாள் .... ஹிஹி !!! யதார்த்தம் அதுவே !!!?
@ நிரூபன் - இதுக் கதையா சொந்த அனுபவமா தெரியல.. ஆனால் நல்லாருக்கு .. எழுத்து நடை .. சஸ்பெண்ஸ் எல்லாம் அழகாக வந்திருக்கு ...
அழகான வசன நடை அழகான கருத்துப்படங்கள்! காதல் சொல்லுவீர்கள் என்று பார்த்தால் இப்படி பாஸ் போட்டைக்கொடுத்து திருப்பம் உண்டாக்கி விட்டீர்கள்!
யுத்தத்திலும் எத்தனை சம்பவங்கள் கடந்து போய்விட்டது உங்களிடம் அந்த வித்தை ஏழுத்தில் பினைக்கும் வழிகள் தெரிந்தவர். வாழ்த்துக்கல் இப்படி தொடர்ந்து ஏழுதுங்கள்.
மீண்டும் நான் வன்னி மண்ணில் கால் பதித்துவிட்டேன் உங்கள் பதிவின் மூலம் சகோ .
சகோ மிக அருமை அப்படியே ஈழத்து பேச்சு நடை உங்கள் பதிவில் .
மாப்புள நீங்க சொன்ன வர்ணிப்ப பாத்தவுடன ஹம்சிகாவ பாக்கணும் போல இருக்கு.
கதைக்கேற்றால் போல் பட செலேச்சன் சூப்பர். கலக்கிப்புட்டே மாப்பு.
பாஸ்போர்ட் கொடுத்தப்புறமும் கதை தொடர சான்ஸ் இருக்கே..தொடர்ந்ததா?
நல்லது செய்யனும்னா பல கொடுஞ்சொட்களை தாங்க வேணும் எனும் விஷயத்தை நாசுக்காக புரிய வச்ச மாப்ளைக்கு நன்றி!
அதிரடி தலைப்பு ,அல்வா படங்கள் ,நெத்தியடி செய்தி ....
சூப்பர்
அண்ணே டச் பண்ணீட்டீங்க அண்ணே டச் பண்ணீட்டீங்க...
அண்ணே டச் பண்ணீட்டீங்க அண்ணே டச் பண்ணீட்டீங்க...
அண்ணே டச் பண்ணீட்டீங்க அண்ணே டச் பண்ணீட்டீங்க...
பொம்புள பெயரு ஹன்சிகா மேல இருந்த காதலின் தாக்கம் தானே??
பேச்சு பேச்சு எல்லாமே அச்சொட்டு!!!ஹிஹி பச்சை மட்டை...பாண்டியன் போக்குவரத்து கழகம் mmmmmm
நல்ல கதை ரசிக்கும் படி இருந்தது.
உங்கள் கதையின் ஆரம்பம் அக்கராயன் பள்ளிக்கூடம். என்னை மீண்டும் எனது பாடசாலை செல்ல வைத்தது. கதை நல்லாயிருக்கு...
தம்பீ
நிருபன், உங்க நட(எழுத்துநடை)
வடிக்கையும் நல்லாவே இருக்கு. ஆமா உங்க வயசு
என்ன ?சொல்ல முடிஞ்சா சொல்லுங்க வேண்டாம் என்றால்
விடுங்க
கொஞ்சம் விளையாடிப் பார்கத்
தான் இப்படி எழுதினேன்
மற்றபடி முடிவு முத்தான முடிவு
பாராட்டுக்கள் நன்றி
புலவர் சா இராமாநுசம்
meendum Akkarayan poy vanthapola irukku. nalla irukku. but, thalaippu konjam differenta irukku. muthalla irunthu mudivu varaikkum kathalai kaanaliye... enna cheetinga...passporta kuduthu pushvaanam akkidinga...
///மைந்தன் சிவா said...
அண்ணே டச் பண்ணீட்டீங்க அண்ணே டச் பண்ணீட்டீங்க.../// எங்க?எங்க??எங்க???
///மைந்தன் சிவாsaid...
பொம்புள பெயரு ஹன்சிகா மேல இருந்த காதலின் தாக்கம் தானே??///
ஹி!ஹி!.. ஹி!...ஹி!....... பச்சை மட்டை!!!!!!!!!!!
பெண்களைப் பற்றிய பல குழப்பங்கள் இருப்பதாக நினைக்கிறேன். இந்த குழப்பமெல்லாம தீர சீக்கிரம் திருமண ஏற்பாடுகளை செய்யவும். திருமணத்துக்கு பிறகு ஒரு மாதிரியான படங்களை தவிர்த்து பெண்களின் கண்ணியமான படங்களை போடச் சொல்லி இல்லாளிடமிருந்து நெருக்குதலும் வரும்...:-)
///தோழி பிரஷா( Tholi Pirasha) said...
உங்கள் கதையின் ஆரம்பம் அக்கராயன் பள்ளிக்கூடம். என்னை மீண்டும் எனது பாடசாலை செல்ல வைத்தது. கதை நல்லாயிருக்கு...///தோழி ஒத்துக் கொள்ளுறா,பெண்புத்தி பின் புத்தி என்று!!!
சிலர் இப்படி தான் என்ன எதற்கு என்று புரியாமலே பட்டென பேசிவிடுகிறார்கள்... இது யார் குற்றம் ...
///Ashwin-WIN said:ஹம்சிகாவ பாக்கணும் போல இருக்கு!பாத்திட்டிருந்தால் போதும்.இதயத்தில்
இனிப்பாய்
இறங்குகிறது.//:§§§என்ன தேன் குழலா????
உங்களின் தமிழுக்கவே ஐந்து முறை படித்தேன் சகோ..
நன்றி..
உதவி செய்யப்போய் உபத்திரப்பட்ட இப்பிடி சில-பல அனுபவங்கள் எனக்கும் இருக்கு. அதுசரி, தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமிருக்கா? சின்ன டவுட்.
உங்களின் தமிழ் ஒரு வகை அழகுதான்!
பெண் புத்தி பின் புத்தி..
@A.R.ராஜகோபாலன்
ஆண்களின் உதவும் உயர்
எண்ணத்தை கூட
காமம் என்றும் காதல் என்றும்
பொழிப்புரை கூறும்
பொல்லாத
பொண்டு பிள்ளைகளை
சரியான வகையில்
சிறப்பான விகிதத்தில்
சொல்லிய பதிவு
அற்புதம் சகோ
அதிலும் அந்த பெயர் ஹம்ஷிகா
இதயத்தில்
இனிப்பாய்
இறங்குகிறது//
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சகோ, எமது சமுதாயத்தில் பெரும்பாலன பெண்கள் எல்லா ஆண்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் தான் நோக்குகிறார்கள். அதனை விளக்கத் தான் இந்தப் பதிவு சகோ,
உங்களின் புரிதலுக்கும்,
ஹம்ஷிகா மீதான எண்ணங்களுக்கும் ஒரு சல்யூட்;-))
ஹி....ஹி..
@Yoga.s.FR
என்ன மாப்பிள,இவ்ளோதானா?மீதியக் காணம்?அக்கராயனில நிண்டு போற மாதிரிக் கிடக்கு!சூப்பர்!//
மாம்ஸ், தொடர்ந்தும் படிக்கும் ஆர்வலைத் தூண்டி விட்டு கதையை முடித்து விட்டேன் என்று
கவலையா;-))
பெரிய பதிவுகள் எழுதினால் யாருமே கண் திறக்கிறார்கள் இல்லை, ஆகவே தான் இப்போது சிறியளவில் குறுங்கதைகளை எழுதுகிறேன். உங்களின் கருத்துக்களுக்கு நன்றி சகோ.
ஆமா...அக்கராயனில் நின்றது ஓக்கே,
ஆனால் பஸ் காசைக் கொடுக்காமல் இறங்கப் பார்க்கிறீங்களே?
ஹி...ஹி..
@Jawid Raiz
கதையின் போக்கும் பேச்சு வழக்கும் மிகவும் அருமை.. தொடருங்கள்//
முதலாவது பின்னூட்டத்தோடு வந்திருக்கும் உங்களின் கருத்துக்களிற்கு நன்றி சகோ.
@கந்தசாமி.
வணக்கம் பாஸ் ...)//
வணக்கம் பெரிய பாஸ்.
@கந்தசாமி.
பரந்தன் சந்தி .......மறக்க முடியாத நினைவலைகள் + சோகங்களை தாங்கி நிற்கும் ஒரு இடம் ;-//
அட, பரந்தனை நீங்க இன்னும் மறக்கலையா?
ஹி...ஹி..
மரியதாஸ் வாத்தியாரிட்ட ரியூசன் படிக்க, நீங்க பரந்தன் பக்கம் வந்திருக்கீங்களா?
@கந்தசாமி.
இரண்டாவது போட்டோவில நடு ரோட்டில நிக்குதே பொண்ணு , அந்த கோலத்தில முந்தி வன்னிக்க போக முடியுமா என்ன ;-)//
பாஸ்......நல்ல ஆடையணிந்தவாறு,
ஸ்ரைற்றினிங் பண்ணிய கூந்தல் உளள பெண்ணின் போட்டோவை தேடினேன், சிக்கலை.
அதான் இப்படி ஒரு கோலம்.
இந்த மாதிரி உடைகளுடன் வர முடியாது..
@கந்தசாமி.
வசன நடை சூப்பர் பாஸ்...//
எல்லாம் உங்களின் ஆசிர்வாதம் மாப்பு.
@இக்பால் செல்வன்
தான் அழகு என்று நினைக்கும் பெண்ணை விரும்பளாம்.. ஆனால் தான் தான் அழகு என்று நினைக்கும் பெண்ணிடம் சற்றுக் கவனமாக இருங்கள் !!! ஏனெனில் அவள் அழகில்லை என்பதை அவளுடம் பழகியப் பின் அறிவீர்கள் ... அக்கணத்தில் அவளின் அழகினை மெச்சுபவனிடம் ஓடிவிடுவாள் .... ஹிஹி !!! யதார்த்தம் அதுவே !!!//
அவ்...அனுபவசாலி அள்ளி விடுறார், மக்களே கேட்டுக்குங்க;-)))
பாஸ்.இந்தக் கதையில் வரும் கானகன் நான் இல்லை பாஸ்...
@இக்பால் செல்வன்
@ நிரூபன் - இதுக் கதையா சொந்த அனுபவமா தெரியல.. ஆனால் நல்லாருக்கு .. எழுத்து நடை .. சஸ்பெண்ஸ் எல்லாம் அழகாக வந்திருக்கு ..//
சொந்த அனுபவம் இல்லை பாஸ்.. என் நண்பன் ஒருவனின் வெந்த/ நொந்த அனுபவம்;-))
ஹி....ஹி...
நன்றி சகோ.
@Nesan
அழகான வசன நடை அழகான கருத்துப்படங்கள்! காதல் சொல்லுவீர்கள் என்று பார்த்தால் இப்படி பாஸ் போட்டைக்கொடுத்து திருப்பம் உண்டாக்கி விட்டீர்கள்!//
ஆமாம் சகோ, எல்லாக் கதைகளிலும் காதல் சொல்லுவதால் ஏற்படும் சலிப்பினைக் குறைக்கத் தான், கொஞ்சம் வெரைட்டி காட்டினேன்,
@Mahan.Thamesh
மீண்டும் நான் வன்னி மண்ணில் கால் பதித்துவிட்டேன் உங்கள் பதிவின் மூலம் சகோ //
மாப்பிள,
பார்த்தய்யா..பார்த்து,
காலினுள் மிதி வெடி இருக்கப் போகிறது.
@Mahan.Thamesh
சகோ மிக அருமை அப்படியே ஈழத்து பேச்சு நடை உங்கள் பதிவில் //
பாஸ்..நாங்கள் வாழும் இடத்தை மறக்க முடியுமா?
நன்றி பாஸ்.
வலைச்சரம் அறிமுகம் வாழ்த்துக்கள் சகோ ....
தொடர்ந்து கலக்குங்க
@Ashwin-WIN
மாப்புள நீங்க சொன்ன வர்ணிப்ப பாத்தவுடன ஹம்சிகாவ பாக்கணும் போல இருக்கு.
கதைக்கேற்றால் போல் பட செலேச்சன் சூப்பர். கலக்கிப்புட்டே மாப்பு.//
அடிங்...ஹம்ஷிகாவை பார்க்க வேணுமோ?
பிச்சுப் புடுவன் பிச்சு,
படவா.. என்ன வார்த்தை பேசுறீங்க. அவா உங்களுக்கு அண்ணி மாதிரி.
@செங்கோவி
பாஸ்போர்ட் கொடுத்தப்புறமும் கதை தொடர சான்ஸ் இருக்கே..தொடர்ந்ததா?//
கதையைத் தொடரலாம் பாஸ். ஆனால் பதிவு நீண்டு விடும், அப்புறமா ரசனை குறைந்து விடும் என்பதால் தொடரலை பாஸ்.
@விக்கி உலகம்
நல்லது செய்யனும்னா பல கொடுஞ்சொட்களை தாங்க வேணும் எனும் விஷயத்தை நாசுக்காக புரிய வச்ச மாப்ளைக்கு நன்றி//
மாம்ஸ், இந்த ஐடியாவை பாலோ பண்ணி நீங்கள் அடி வாங்கினால் அதற்கு நான் பொறுப்பல்ல.
@ரியாஸ் அஹமது
அதிரடி தலைப்பு ,அல்வா படங்கள் ,நெத்தியடி செய்தி ....
சூப்பர்//
நன்றி சகோ.
@மைந்தன் சிவா
அண்ணே டச் பண்ணீட்டீங்க அண்ணே டச் பண்ணீட்டீங்க...//
ஏன் அதனை மட்டும் பத்துத் தடவை சொல்லுறீங்க. ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டீங்களோ/
@மைந்தன் சிவா
பொம்புள பெயரு ஹன்சிகா மேல இருந்த காதலின் தாக்கம் தானே??//
இல்ல மாம்ஸ்,
அது வேற ஹன்சி,
இது வேற ஹம்ஷி..
@மைந்தன் சிவா
பேச்சு பேச்சு எல்லாமே அச்சொட்டு!!!ஹிஹி பச்சை மட்டை...பாண்டியன் போக்குவரத்து கழகம் mmmmmm//
நீங்களும் இதனை மறக்கவில்லைப் போல.
@சசிகுமார்
நல்ல கதை ரசிக்கும் படி இருந்தது.//
நன்றி சகோ.
@தோழி பிரஷா( Tholi Pirasha)
உங்கள் கதையின் ஆரம்பம் அக்கராயன் பள்ளிக்கூடம். என்னை மீண்டும் எனது பாடசாலை செல்ல வைத்தது. கதை நல்லாயிருக்கு..//
அப்போ நீங்க அக்கராயன் மகாவித்தியாலத்திலா படித்தீங்க...
ஹி...நன்றி தோழி
@புலவர் சா இராமாநுசம்
தம்பீ
நிருபன், உங்க நட(எழுத்துநடை)
வடிக்கையும் நல்லாவே இருக்கு. ஆமா உங்க வயசு
என்ன ?சொல்ல முடிஞ்சா சொல்லுங்க வேண்டாம் என்றால்
விடுங்க
கொஞ்சம் விளையாடிப் பார்கத்
தான் இப்படி எழுதினேன்
மற்றபடி முடிவு முத்தான முடிவு
பாராட்டுக்கள் நன்றி
புலவர் சா இராமாநுசம்//
அவ்....என் நடை பற்றி ஒரு சிலேடைக் கடி...
ஹி... ரசித்தேன் ஐயா.
வயசு நிறைய இருக்காது,
ஒரு 24-30 இடையில் தான் இருக்கும்.
ஆமா என் வயசை அறிந்து வைத்து என்ன பண்ணப் போறீங்க;-))
நானும் ச்,...சும்மா தான் கேட்டேன்.
@பூங்கோதை
meendum Akkarayan poy vanthapola irukku. nalla irukku. but, thalaippu konjam differenta irukku. muthalla irunthu mudivu varaikkum kathalai kaanaliye... enna cheetinga...passporta kuduthu pushvaanam akkidinga...//
அடடா...அக்கராயன் ஆட்கள் எல்லாம் இங்கே ஒன்று கூடி விட்டார்களே. தலைப்பு இலக்கியத்தரத்துடன் வைத்தால், நான் இலையான் கலைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறேன். அதனால் தான் கொஞ்சம் இடக்கு முடக்கா தலைப்பு வைத்தேன். ஆமா சீட்டீங் தான்.
நன்றி சகோ.
@Yoga.s.FR
///மைந்தன் சிவா said...
அண்ணே டச் பண்ணீட்டீங்க அண்ணே டச் பண்ணீட்டீங்க.../// எங்க?எங்க??எங்க???//
அதான் எனக்கும் தெரியலை..
ஹி...
@Yoga.s.FR
///மைந்தன் சிவாsaid...
பொம்புள பெயரு ஹன்சிகா மேல இருந்த காதலின் தாக்கம் தானே??///
ஹி!ஹி!.. ஹி!...ஹி!....... பச்சை மட்டை!!!!!!!!!!//
நல்லாத் தான் இரண்டு பேரும் சேர்ந்து ஆப்படிக்க ப்ளான் போடுறீங்க.
ஹி...
@சுவனப்பிரியன்
பெண்களைப் பற்றிய பல குழப்பங்கள் இருப்பதாக நினைக்கிறேன். இந்த குழப்பமெல்லாம தீர சீக்கிரம் திருமண ஏற்பாடுகளை செய்யவும். திருமணத்துக்கு பிறகு ஒரு மாதிரியான படங்களை தவிர்த்து பெண்களின் கண்ணியமான படங்களை போடச் சொல்லி இல்லாளிடமிருந்து நெருக்குதலும் வரும்...:-)//
அவ்...என்னையப் புலானய்வு செய்யுறீங்களே சகோ
திருமண ஏற்பாடு செய்ய, எனக்கு யார் பொண்ணு கொடுப்பாங்க..
ஹி...ஹி..
@Yoga.s.FR
///தோழி பிரஷா( Tholi Pirasha) said...
உங்கள் கதையின் ஆரம்பம் அக்கராயன் பள்ளிக்கூடம். என்னை மீண்டும் எனது பாடசாலை செல்ல வைத்தது. கதை நல்லாயிருக்கு...///தோழி ஒத்துக் கொள்ளுறா,பெண்புத்தி பின் புத்தி என்று!!!//
அவ்....நான் இந்தக் காட்சிக்கு நித்திரை பாஸ்.
@தினேஷ்குமார்
சிலர் இப்படி தான் என்ன எதற்கு என்று புரியாமலே பட்டென பேசிவிடுகிறார்கள்... இது யார் குற்றம் ...//
அதான் எனக்கும் புரியலை பாஸ்...நானும் தான் கேட்கிறேன் இது யார் குற்றம்.
@Yoga.s.FR
///Ashwin-WIN said:ஹம்சிகாவ பாக்கணும் போல இருக்கு!பாத்திட்டிருந்தால் போதும்.இதயத்தில்
இனிப்பாய்
இறங்குகிறது.//:§§§என்ன தேன் குழலா????//
யோ....ஒரு அண்ணியைப் பார்த்துப் பேசிற பேச்சா இரு...
அப்புறமா உங்களை டீல் பண்ணிக்கிறேன்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
உங்களின் தமிழுக்கவே ஐந்து முறை படித்தேன் சகோ..
நன்றி..//
ஐந்து முறை படித்தது ஓக்கே பாஸ்,
பதிவு தொடர்பாக ஏதும் சொல்லியிருக்கலாமில்ல.
ஹி...ஹி..
@மருதமூரான்.
உதவி செய்யப்போய் உபத்திரப்பட்ட இப்பிடி சில-பல அனுபவங்கள் எனக்கும் இருக்கு. அதுசரி, தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமிருக்கா? சின்ன டவுட்.//
முதலாவது பின்னூட்டத்தில் முத்தான ஒரு கேள்வியைத் தந்திருக்கிறீங்க சகோ..
சேம் சேம்.. கானகனைப் போல உங்களுக்கும் அனுபவமா.
அவ்...
தலைப்புக்கும் பதிவுக்கும்,
ஆண்கள் பற்றிய புரிதல்கள் எப்போதுமே தவறான பார்வையில் தான் பெண்களால் நோக்கபடுகிறது என்பதனை விளக்கவே அப்படி ஒரு தலைப்பை வைத்தேன் சகோ.
ஆனால் காதலைப் பற்றியோ, காமத்தைப் பற்றியோ பதிவில் அலசவில்லை. இதனை வைத்துப் பார்க்கையில் தலைப்பு கொஞ்சம் உதைக்கிறது தான் பதிவோடு பொருந்தவில்லை.
இங்கே ஒரு பெண்ணிற்கு உதவி செய்யப் போகும் ஆணைத் தன்னைப் பின் தொடர்ந்து வரும் ஆடவன் காமுகன் எனும் பார்வையில் நோக்கப்படுவதனைத் தான் விளித்திருக்கிறேன். ஆகவே காமம் பற்றிச் சொல்லிவிட்டு, காதலைச் சொல்லாது விட்டு விட்டேன்,.
இனிவரும் பதிவுகளில் தலைப்புத் தொடர்பாக கவனமெடுக்கிறேன் சகோ.
நன்றி மாப்ஸ்.
@ஷர்புதீன்
உங்களின் தமிழ் ஒரு வகை அழகுதான்!//
நன்றி சகோ. நிஜமாவா சொல்லுறீங்க. கதையினைப் பற்றிச் சொல்ல மாட்டீங்களா.
@குணசேகரன்...
பெண் புத்தி பின் புத்தி..//
பாஸ்....என்ன பாஸ் ஒற்றை வார்த்தையில சொல்லிட்டு எஸ் ஆகிட்டீங்க.
இது மாதிரியான கதைகள் நிறையே படித்திருக்கேன் நிரூ., அதனாலதான் அதில் இருந்த உங்களின் இலங்கை தமிழ் வார்த்தைகளை மட்டும் ரசித்தேன்.. உண்மையாகத்தான் நண்பரே
எழுத்து நடைன்னா இப்படித்தான் இருக்கனும் நிரூபா,, கலக்கல்
@ஷர்புதீன்
இது மாதிரியான கதைகள் நிறையே படித்திருக்கேன் நிரூ., அதனாலதான் அதில் இருந்த உங்களின் இலங்கை தமிழ் வார்த்தைகளை மட்டும் ரசித்தேன்.. உண்மையாகத்தான் நண்பரே//
ஓக்கே பாஸ். சும்மா...தான் நான் கிண்டல் பண்ணினேன்.
@சி.பி.செந்தில்குமார்
எழுத்து நடைன்னா இப்படித்தான் இருக்கனும் நிரூபா,, கலக்கல்//
நன்றி சகோ, உங்களைப் போன்ற உள்ளங்களின் ஆசிர்வாதம் தான் இதற்கெல்லாம் காரணம்.
நல்லாருக்கு சகோ.ரசித்தேன்.
Blogger நிரூபன் said..ஆமா...அக்கராயனில் நின்றது ஓக்கே,
ஆனால் பஸ் காசைக் கொடுக்காமல் இறங்கப் பார்க்கிறீங்களே?
ஹி...ஹி../////ஏறின(பஸ்ஸுக்குள்ள)உடனயே காசு வாங்கிப் போடுவியளே?ரெண்டாம் தரம் தரட்டோ???
///ஏதோ, நீங்க தான் ஊருக்குள்ளேயே பெரிய சினிமா நடிகை என்ற நினைப்புப் போல?
நான் ஒன்றும் உம்மைச் சைற் அடிக்கிற நோக்கத்தில உமக்குப் பின்னால வரல்லை.///அதான,நிரூபனா,கொக்கா????????????????
///அடக் கடவுளே, கொழும்புப் பக்கம் தான் பசங்க இப்படி என்றால், வன்னியிலுமா?///சிவா(மைந்தன்)கவனமப்பு!பொடிச்சியள் அபாண்டமா என்ர தங்கப்பவுண் மேல பழி போட்டு மடக்கிப் போடுவாளவையணை!பத்திரம்!
பாண்டியன் போக்குவரவுக் கழக பஸ்ஸின் கடைசிச் சீற்றீலிருந்து குரல் கொடுத்தாள் ஹம்ஷிகா.>>>>
அட நம்ம மதுரை ஊரு பாண்டியன் பஸ்ஸா...
ஹம்ஷிகா>>>
அட ஹன்சிகா வுக்கு இந்த பெயர் நல்லா இருக்கே...
எழுத்தும் நடையும் அருமை .இரண்டு வரியில் முடியும் கதையை தங்கள் எழுத்து நடையால் பெரிதாக சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
கதை அம்புட்டு தானா... சண்டையில ஆரம்பிச்சு, காதலா கணிஞ்சு கல்யாணத்துல வந்து புள்ள குட்டிகளோட சந்தோசமா இருப்பாங்கன்னு நெனச்சா இப்படி முடிச்சிட்டிங்களே சகோ.... எதிர்பார்ப்பு வீணா போச்சு.
நட்பு உங்களை தொடர்புகொள்ள வழியே இல்லையா??
@Ashwin-WIN
நட்பு உங்களை தொடர்புகொள்ள வழியே இல்லையா??//
மாப்ளே, என்னையை வைச்சு காமெடி பண்றதா முடிவா?
என் ப்ளாக்கில் சைட் பாரில் பேஸ் புக் பட்டன் இருக்கு,
மேலே டுவிட்டர் இருக்கு,
அப்புறமா,
nirupan.blogger@gmail.com
இருக்கு...
ஹி....இதையெல்லாம் பார்த்தாப் பிறகு ஒரு நக்கலுக்கு கேட்கிறீங்க...
நிரூ...இது உங்கட உண்மைச் சம்பவம்தானே.ஏதோ படக்காட்சி மாதிரியும் இருக்கு.இன்னும் தொடருமா சங்கதிகள் !
ஆமா ஆமா ஆமா , இந்த பொம்பளைப் புள்ளைங்களே இப்படித்தான்.
கதையின் போக்கிலே முடிவை ஊகிக்க முடிந்தாலும்,உங்கள் நடை மிகவும் ரசிக்கும் வண்ணம் உள்ளது.
சூப்பர்........
/////உங்களை விட அழகான பொம்பிளையளை நாங்கள் பார்க்கவில்லை என்ற நோக்கில் பேசிக்கிட்டே போறீங்க?////
இதைத் தான் சொல்லவாங்க பொல் கொடுத்து அடிவாங்கிறது எண்டு....
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio
MRS ல் ஒரு கில்மா குயிலாம் கதைய பாரு கதையா கம்பியை பிடிச்சு தொங்குறதா அல்லது கட்டையை பார்க்கிறதா ?
மச்சி கதை நல்லா இருக்கு! எனக்கு அந்த ஹம்சிகாவ வர்ணிச்ச இடம்தான் ரொம்ப பிடிச்சிருக்கு! கூடவே ஹம்சிகாவையும் தான்!!!!
thambi niruban .hope you are keeping fine .ஏன் இன்று பாட்டு போட்டி இல்லை .
take care.
paSSaalaji பஸ்ஸாலஜி
இலங்கைத் தமிழ்... வாசிக்க இதமாய் இருந்தது...
97....
98....
99....
100 வது கமெண்ட் என்னுது...
101...காதல்..முற்றினால் காமம்
Post a Comment