வரலாற்றில் இது வரை எவருமே அபிவிருத்திப் புரட்சியினை முன்னெடுத்திராத வகையில், துரித கதியில் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தமிழக மேம்பாட்டிற்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளார். அவையாவன
*பசுமைப் புரட்சியினையும், நாட்டின் உற்பத்தினையும் பெருக்கும் நோக்கில் விவாசயிகளுக்கு கடனடிப்படையில் பல உதவிகளை வழங்குவதோடு, விவசாயத்தோடு தொடர்புடைய தொழில் நுட்பங்கள் பல வற்றை அறிமுகப்படுத்தி நாட்டில் பசுமைப் புரட்சியினை விரிவாக்குதல்.
*ஏழைகளே நாட்டில் இருக்கக் கூடாது எனும் உயரிய நோக்கில் அனைவருக்கும் இலவசக் கல்வியோடு கட்டாயக் கல்வியினையும் அமுல்படுத்துதல். ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மாதாந்த கொடுப்பனவுகளை வழங்குதல்.
*தொடர்பாடல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளினை அனைத்து மக்களும் சம அளவில் பெற்றுக் கொள்ளும் வண்ணம் தமிழகம் தழுவிய ரீதியில் விஸ்தரிப்பதோடு, கட்டண விகிதத்தினையும் குறைத்தல்.
*போக்குவரத்துத் துறையில் துரித கதியில் வளர்ச்சியினை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மக்களும் ட்ராபிக் இன்றிச் சுமூகமான பயணத்தினை நேர விரயமின்றி மேற் கொள்ளும் நோக்கோடும், மொனோ ரயில் திட்டம், வீதிக்கு குறுக்கான மேம்பாலத் திட்டம், சீரான போக்குவரத்துப் பாதைக் காப்பீட்டுத் திட்டம் எனப் பல திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
*தெருவோரங்களில் சிறு நீர் கழிப்போர், வீதிகளில் அசுத்தம் பண்ணுவோர், எச்சில் உமிழ்வோர், மீது சுற்றாடல் சுகாதாரத்தைப் பேணும் திட்டத்தின் அடிப்படையில் தண்டப் பணம் அறவிடுவதோடு, தமிழகத்தின் வீதிச் சுத்தத்தினைப் பேணும் வகையில் 24 மணி நேர மாநகர, நகர சபைகளின் ஊடாக சுற்றுச் சூழல் சுகாதாரப் பணிகளினை மேம்படுத்துதல்.
(ரோட்டைப் பார்த்தால், நீங்க சோறு போட்டுச் சாப்பிடுற மாதிரிப் பள பளப்பா இருக்குமாம்)
*மக்களின் நலன், சுகாதாரம் முதலியவற்றைக் கருத்திற் கொண்டு தெருவோரங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளையும், அவற்றினை விற்பனை செய்யும் கடைகளையும் சீல் வைத்து மூடுதல். உணவுச் சுகாதாரத்தினைக் கண் காணிக்கும் நோக்கில் சுகாதார அமைச்சின் செயற்பாடுகளை விரிவு படுத்துதல்.
*ஏழை பணக்காரன் என்ற பேதங்களைக் களைய அனைவருக்கும் ஒரு பொதுவான சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டு ஊதியத் திட்டத்தினை தமிழக்த்தின் அனைத்துத் தொழிற் துறை மையங்களும் வழங்கும் வண்ணம் அறிமுகப்படுத்துதல்.
*லஞ்சம், ஊழலற்ற கடமையில் கண்ணியமான் அதிகாரிகளை உருவாக்கும் நோக்கில் அதிகாரிகளின் முதுகில் 24 மணி நேரமும் அவர்களைக் கண்காணிக்கும் கமெராக்களைப் பொருத்திக் கண்காணித்தல்.
டிஸ்கி: நேற்றைக்கு ராத்திரி தூங்கம் வரலைப் பாருங்க. ரேடியோவைப் போட்டுப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது 'பச்சை விளக்குப் படத்தில் இடம் பெற்ற ஒளிமயமான எதிர் காலம் என் உள்ளத்தில் தெரிகிறது எனும் பாடலைக் கேட்டவாறு தூங்கி விட்டேன்.
என் கனவில் நான் கண்டவை தான் மேற்படி திட்டங்கள். திடீரென்று பார்த்தால், என் கனவில்;
‘மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க! எனும் பாடல் வரிகள் கேட்கத் தொடங்குகிறது. புதிய தமிழகம் என்ற அறிவிப்புப் பலகையுடன் மக்கள் பலர் ஜெயலலிதாவை வாழ்த்த, அவா நடை போட்டு வந்தா...
தமிழகம் வரலாறு காணத அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. என 2014ம் ஆண்டளவில் இலத்திரனியல் ஊடகங்களில் செய்தி பரபரப்பாக வந்து கொண்டிருக்கும் வேளையில், இதே சந்தோச நிலமை எங்கள் நாட்டுக்கு எப்ப வருமோ என ஏங்கிய படி இலங்கைத் தமிழர்கள் பலர் மாட்டு வண்டிகளில் மாடுகளைப் பூட்டத் தொடங்குகிறார்கள். நானும் ஓடிப் போய் மாட்டு வண்டிலில் மாடுகளைப் பூட்டுவோம் என்று பார்த்தால்...
ச்...சே..இது கனவென்று அப்போது தான் தெரிந்தது.
|
65 Comments:
முதல் வெட்டா???
பொறுங்க சகோ படிச்சிட்டு வாறம்.
அப்போ நாங்களும் இன்னொரு பக்கத்தால வளந்திடுவம்னு சொல்லுறீங்க? வண்டி மாடு பூட்டி..அது என்னமோ நடக்கும்போலதான் தெரியுது! :-)
கனவு..
இதெல்லாம் நடந்தால் சந்தோஷமே சகோ..
அட்டகாசமான அம்மாவின் திட்டங்கள்! - ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் பாஸ்! கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? :-)
வருங்கால சிங்கப்பூர்..என்டுரியல். இது மாதிரி கனவெல்லாம் நம்ம வன்னி மன்ன பத்தி வராதோ சகோ??
கொஞ்சநாலாவே கனவும் ,டுவிஸ்டுமாவே இருக்கு. என்ன நடக்கபோதோ...:)))
//லஞ்சம், ஊழலற்ற கடமையில் கண்ணியமான் அதிகாரிகளை உருவாக்கும் நோக்கில் அதிகாரிகளின் முதுகில் 24 மணி நேரமும் அவர்களைக் கண்காணிக்கும் கமெராக்களைப் பொருத்திக் கண்காணித்தல்//
அந்தக் காமெரா வாங்குறதில எத்தனை கோடி ஊழல் நடக்குமோ?
//அந்தக் காமெரா வாங்குறதில எத்தனை கோடி ஊழல் நடக்குமோ? //
ஹா ஹா
ஓப்பனிங்க் நல்லாருந்த எந்த்தனியோ படங்கள் ஃபெயிலியர் ஆகி இருக்கு.. பார்ப்போம்
இந்த கனவுகள் எப்போது நினைவாகும் என்ற ஏக்கத்தில் தான் ஒவ்வொறு தமிழனின் பகலும் விடிந்துக் கொண்டிருக்கிறது...
ஒளிமயமான எதிர்காலம்...
என்று வரும்...
//ச்...சே..இது கனவென்று அப்போது தான் தெரிந்தது.//
என்ன பாஸ் இந்தவாரம் ஒரே கனவு வாரமா இருக்கு..............
உங்கள் கனவும் ஒருவேளை நிஜமாகலாம் பாஸ்,
யார் கண்டா
படிக்கும் பொது நானும் நிஜம் எண்டு நன்பிட்டன் பாஸ்
அவ்வவ்
Kanavu nenaivakum. Don t worry
மாற்றங்களை மக்களிடம் தான் தேட வேண்டும்1 தலைவர்களிடத்தில் அல்ல!
தெருவோரத்தில் சிறுநீர் கழிப்பதை சட்டம் போட்டுத் தடுக்கமுடியாது! சோம்பித் திரிவதை அரசு தடுக்க முடியாது!
தலைவர்களை மக்கள் தான் தெரிவெடுக்கின்றனர்!
தலவரின் தகுதி - தேர்ந்தெடுக்கும் மக்களின் தகுதி, எண்ணங்களையே பிரதிபலிக்கிறது!
# கவிதை வீதி # சௌந்தர் said... [Reply to comment]
இந்த கனவுகள் எப்போது நினைவாகும் என்ற ஏக்கத்தில் தான் ஒவ்வொறு தமிழனின் பகலும் விடிந்துக் கொண்டிருக்கிறது...
me too same feeling and same thought
உங்கள் பகிர்வு மிக அழகாக இருந்தது ..நன்றி சகோ
சகே
நிறையத் தான் கனவு காண்கிறீர்கள் சிரிக்கவும் செய்கிறது
சிந்திக்கவும் செய்கிறது
கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள
அப்படியே இன்றைய சட்டமன்ற
தீர்மானம்(பொருளாதாரத தடை)கொண்டுவந்து நிறை வேற்றி யுள்ள
முதல்வருக்கும் ஏக மனதாக நிறை
வேற்றியுள்ள அனைத்துக் கட்சி களுக்கும நன்றி நன்றி என(கனவு
காணமல்)கூற வேண்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
இதே சந்தோச நிலமை எங்கள் நாட்டுக்கு எப்ப வருமோ என ஏங்கிய படி இலங்கைத் தமிழர்கள் பலர் மாட்டு வண்டிகளில் மாடுகளைப் பூட்டத் தொடங்குகிறார்கள். நானும் ஓடிப் போய் மாட்டு வண்டிலில் மாடுகளைப் பூட்டுவோம் என்று பார்த்தால்...
ச்...சே..இது கனவென்று அப்போது தான் தெரிந்தது. //
உங்க ஊரு முதல்வர் பத்தி எழுதுங்க படிக்கிறோம்..அங்க இருந்து எங்க முதல்வரை பத்தி கவலைப்பட்டா எப்படி..?>
உங்க ஊரு அரசியல் நிலவரம் அறிய ஆவல்...எழுதுங்க
அடங் கொக்கா மக்கா! நானும் சீரியஸ் படிச்சு பாடமாக்கின பிறகுதானே டிஸ்கிய பாத்தன்! இந்த பதிவு செல்லாது செல்லாது!!
தொடக்கத்த பார்த்ததும் என்ன நம்ம சகோதரம் இப்போ செய்தி எல்லாம் எழுதுறாரு ஏன்னு படிச்சேன் கடைசியில தான் புரிஞ்சுது இது சகோதரம் தூக்கத்தில கண்ட கனவு ஏன்னு .
உண்மையில் நீங்கள் கண்ட கனவில் பலித்தால் நல்லது தானே பொறுத்திருந்து பார்க்கலாம் அளவான எதிர்பார்ப்புக்களோடு
ஹிஹிஹி கடைசில இப்பிடி முடிச்சிட்டீங்க சகோ...என்னமோ ஏதோன்னு வாசிச்சன் எங்க ஆ தி முக அபிமானி ஆகிட்டீங்கன்னு..
ஹிஹி சி பி கடுப்பாகிட்டாராம்
ஹிஹி சதீஷ் குமார் கூட கடுப்பாகிட்டாராம் ஹிஹி பின் பாதியை பார்த்து!!
இவங்க தான் பிரபல gun இரு கட்சியினதும் ஹிஹி
சகோ.... இப்படி நடக்குமா?
தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தமிழக மேம்பாட்டிற்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவுள்ளார். //
என்னயா ஏதோ புதுசா சொல்லுற.?
பல வற்றை அறிமுகப்படுத்தி நாட்டில் பசுமைப் புரட்சியினை விரிவாக்குதல்.//
அப்படியா.? ஹி ஹி.. இந்த அம்மா அந்த அளவுக்கு வொர்த் இல்லயே.!!
கனவு நனவாகலாம்.
ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மாதாந்த கொடுப்பனவுகளை வழங்குதல்.//
ஹலோ.!! நான் எங்க இருக்கேன்.. ஏன் யா அண்ட புழுகு புழுகுற.?
இது கனவென்று அப்போது தான் தெரிந்தது. //
நினச்சேன் யா.. அப்பவே நினச்சன்
வணக்கம் பாஸ் ..)
///விவசாயத்தோடு தொடர்புடைய தொழில் நுட்பங்கள் பல வற்றை அறிமுகப்படுத்தி நாட்டில் பசுமைப் புரட்சியினை விரிவாக்குதல்.// ம்ம் அஞ்சு வருசத்துக்கு பிறகு தான் தெரியும், விரிவானது பசுமை புரட்சியோ இல்லை அம்மையாரின் வங்கிக்கணக்கோ'ன்னு
///*ஏழைகளே நாட்டில் இருக்கக் கூடாது எனும் உயரிய நோக்கில் அனைவருக்கும் இலவசக் கல்வியோடு கட்டாயக் கல்வியினையும் அமுல்படுத்துதல். ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மாதாந்த கொடுப்பனவுகளை வழங்குதல்.// ஸ்பெக்ராம் பணத்தை கருணாநிதி என்கிட்டை ஒப்படச்சால் இதெல்லாம் நான் செய்வேன்'னு அறிக்கை விடுவா பாருங்கோ..
////*தொடர்பாடல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளினை அனைத்து மக்களும் சம அளவில் பெற்றுக் கொள்ளும் வண்ணம் தமிழகம் தழுவிய ரீதியில் விஸ்தரிப்பதோடு, கட்டண விகிதத்தினையும் குறைத்தல்.// தமிழ் நாட்டுக்கு ஒரு தயாநிதி மாறன் போதுமே பாஸ் ஹிஹிஹி
///*போக்குவரத்துத் துறையில் துரித கதியில் வளர்ச்சியினை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மக்களும் ட்ராபிக் இன்றிச் சுமூகமான பயணத்தினை நேர விரயமின்றி மேற் கொள்ளும் நோக்கோடும், மொனோ ரயில் திட்டம்/// ஆனா ஒரு கண்டிசன் அம்மா அந்த பக்கமா போகும் போது மட்டும் போக்குவரத்து தடை செய்யப்படும்...))
////*தெருவோரங்களில் சிறு நீர் கழிப்போர், வீதிகளில் அசுத்தம் பண்ணுவோர், எச்சில் உமிழ்வோர், மீது சுற்றாடல் சுகாதாரத்தைப் பேணும் திட்டத்தின் அடிப்படையில் தண்டப் பணம் அறவிடுவதோடு,// அத்தோடு அந்த தண்டப் பணத்திற்கு கணக்கு கேக்கிறவர்கள் மீது போடா சட்டமும் போடப்படும் ஹிஹிஹி
////*லஞ்சம், ஊழலற்ற கடமையில் கண்ணியமான் அதிகாரிகளை உருவாக்கும் நோக்கில் அதிகாரிகளின் முதுகில் 24 மணி நேரமும் அவர்களைக் கண்காணிக்கும் கமெராக்களைப் பொருத்திக் கண்காணித்தல்// முதல்ல அம்மையாருக்கு அல்லவா பொறுத்த வேணும்...))
///என் கனவில் நான் கண்டவை தான் மேற்படி திட்டங்கள். திடீரென்று பார்த்தால், என் கனவில்;
‘மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க! எனும் பாடல் வரிகள் கேட்கத் தொடங்குகிறது. புதிய தமிழகம் என்ற அறிவிப்புப் பலகையுடன் மக்கள் பலர் ஜெயலலிதாவை வாழ்த்த, அவா நடை போட்டு வந்தா../// யோவ் , கனவா இது ... நிரூபன் ஜெயலலிதாவின் வால் என்று கதைகட்டிவிடலாம்'னு இருந்தான்......... சொதப்பிட்டிங்களே பாஸ் ...
என்ன பாஸ் உங்க கனவில கன்னிப் பொண்ணுங்க வராம ஒரே பாட்டிகளா தான் வர்றாங்க......நேற்று என்னன்னா ஊர்மிளா பாட்டி, இண்டைக்கு ஜெயலலிதா பாட்டி, நாளைக்கு ஆரு..?
சகோ இதெல்லாம் ரொம்ப ஓவர்
நாங்கூட எப்ப அறிவிச்ச திட்டங்கள் இவை
நாம எப்படி படிக்காம விட்டுடோம்முன்னு
யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்
ரகளை பண்ணுரிங்க சகோ நீங்க
நல்ல சுவையான பதிவு
////நானும் ஓடிப் போய் மாட்டு வண்டிலில் மாடுகளைப் பூட்டுவோம் என்று பார்த்தால்...//// என்ன,மாட்டை "ஓட்டவட"ஓட்டிக் கொண்டு போய் அடிகாறனுக்கு வித்துப் போட்டாரோ?
////நானும் ஓடிப் போய் மாட்டு வண்டிலில் மாடுகளைப் பூட்டுவோம் என்று பார்த்தால்...////நல்ல விசயம்!(பழசை மறக்காம இருக்கிறது!)
///புதிய தமிழகம் என்ற அறிவிப்புப் பலகையுடன் மக்கள் பலர் ஜெயலலிதாவை வாழ்த்த, அவா நடை போட்டு வந்தா...///எப்புடி,திருவாரூர் தேர் அசைஞ்சு வர்ர மாதிரியா?இல்லே,என்னம்மோ இப்ப கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பாட்டு வந்திச்சே,இன்னா அது?............ஆங்..........................ஏதோ "திருவிழான்னு தெரிஞ்சுக்கோ" அப்புடி வருமே?அது மாதிரியா?
//என்ன பாஸ் உங்க கனவில கன்னிப் பொண்ணுங்க வராம ஒரே பாட்டிகளா தான் வர்றாங்க......நேற்று என்னன்னா ஊர்மிளா பாட்டி, இண்டைக்கு ஜெயலலிதா பாட்டி, நாளைக்கு ஆரு..?// ஸ்ரீதேவி பாட்டி!!!!!
we are blessed with AMMA!!
இது கனவா இல்ல உம்ம எதிர்வினையா மாப்ள !
கனவு நனவாகக் கூடாதா என்ன?
படிக்குபோது திகைத்துவிட்டேன்...நம்ம தமிழ்நாட்டிலா இப்படி என்று....ஹா ஹா...கலக்கல்...
நடக்காத எந்த ஒரு நிகழ்வையும் கனவில் கண்டு நிம்மதியடைவதுதான் நம்போன்றோரின் தலைவிதி.நல்ல கற்பனை நிரூ !
ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன் சகோ !சரிதான்
தமிழக அபிவிருத்திக்கு ஜெயலலிதாவின் அதிரடித் திட்டங்கள்!
ஆஹா அருமையா இருக்கும் போல! தொடர்ந்து வாசிப்போம்!
வரலாற்றில் இது வரை எவருமே அபிவிருத்திப் புரட்சியினை முன்னெடுக்காத வகையில், !!//////
மச்சி தமிழ் இடறுது.... முன்னெடுத்திராத வகையில் என்றுதான் வரும்! நாலைஞ்சு தடவை திரும்ப திரும்ப படிச்சுபார்!
நெற்றிக் கண் திறப்பினும்........!!!
*பசுமைப் புரட்சியினையும், நாட்டின் உற்பத்தினையும் பெருக்கும் நோக்கில் விவாசயிகளுக்கு கடனடிப்படையில் பல உதவிகளை வழங்குவதோடு, விவசாயத்தோடு தொடர்புடைய தொழில் நுட்பங்கள் பல வற்றை அறிமுகப்படுத்தி நாட்டில் பசுமைப் புரட்சியினை விரிவாக்குதல்.///////
தமிழகத்தின் பொருளாதார அடிப்படையே விவசாயம் என்பதை சரியாகத்தான் விளங்கிவைத்திருக்கிறார்!
*ஏழைகளே நாட்டில் இருக்கக் கூடாது எனும் உயரிய நோக்கில் அனைவருக்கும் இலவசக் கல்வியோடு கட்டாயக் கல்வியினையும் அமுல்படுத்துதல். ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மாதாந்த கொடுப்பனவுகளை வழங்குதல்./////
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்!
*தொடர்பாடல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளினை அனைத்து மக்களும் சம அளவில் பெற்றுக் கொள்ளும் வண்ணம் தமிழகம் தழுவிய ரீதியில் விஸ்தரிப்பதோடு, கட்டண விகிதத்தினையும் குறைத்தல்.
பதிவர்களுக்கும் இனிப்பான செய்தி
*போக்குவரத்துத் துறையில் துரித கதியில் வளர்ச்சியினை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மக்களும் ட்ராபிக் இன்றிச் சுமூகமான பயணத்தினை நேர விரயமின்றி மேற் கொள்ளும் நோக்கோடும், மொனோ ரயில் திட்டம், வீதிக்கு குறுக்கான மேம்பாலத் திட்டம், சீரான போக்குவரத்துப் பாதைக் காப்பீட்டுத் திட்டம் எனப் பல திட்டங்களை அறிமுகப்படுத்துதல். ////////
இத மட்டும் சீரா அமல்படுத்தினா கோவில் கட்டியே கும்புடலாம்
*ஏழை பணக்காரன் என்ற பேதங்களைக் களைய அனைவருக்கும் ஒரு பொதுவான சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டு ஊதியத் திட்டத்தினை தமிழக்த்தின் அனைத்துத் தொழிற் துறை மையங்களும் வழங்கும் வண்ணம் அறிமுகப்படுத்துதல்.
//////////
என்ன ஒரு அருமையான ஐடியா
*லஞ்சம், ஊழலற்ற கடமையில் கண்ணியமான் அதிகாரிகளை உருவாக்கும் நோக்கில் அதிகாரிகளின் முதுகில் 24 மணி நேரமும் அவர்களைக் கண்காணிக்கும் கமெராக்களைப் பொருத்திக் கண்காணித்தல்.
/!//////
யோவ் என்ன திடீருன்னு ரூட் மாறுது! அடப்பாவி அப்போ இவ்வளவு நேரமும் நீ விட்டதெல்லாம் பீலாவா<
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
(ஒளிமயமான)
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
(ஒளிமயமான)
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக
(ஒளிமயமான)
நமக்கும் தெரிகிறது!
இனிக்கி என்ன கனவு காண போறிங்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
Post a Comment