தூர இடப் பயணங்களிற்கு எல்லோரும் இரவு ரயிலினைத் தான் தெரிவு செய்வார்கள். நானும் அலுவலகப் பணி நிமித்தம் தலை நகருக்குச் செல்லும் நோக்கோடு ஒரு நாள் இரவு ரயிலில் என் பயணத்தினைத் தொடங்கினேன்.
வழமையாகப் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் ரயில், என் நல்ல நேரம், யாருமே இல்லாத பெட்டி ஒன்று எனக்கு கிடைக்க, அதில் டபுள் சீட் உள்ள இடத்தில் நான் நீட்டி நிமிர்ந்து தூங்கத் தொடங்குகிறேன். பாயிண்டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ் ஆகப் புறப்பட்ட ரயில் ஒரு இடத்தில் நிற்கத் தொடங்க, நானும் விழித்துக் கொள்ள, அழகிய பெண்ணொருத்தி, நான் இருந்த அதே பெட்டியினுள் வந்து உட்காருகிறாள்.
என் அதிஷ்டம்...இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும் என்று எத்தனை நாள் ஏங்கி இருந்தேன் எனும் நினைப்போடு, தூக்கமும், மண்ணாங்கட்டியும்; என்று என் மனதிற்குள் நானே பேசியபடி, விழித்திருந்து, என் பிரயாணப் பையினுள் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.
புத்தகத்தைப் படிக்கிற மாதிரி நடிச்சுக் கொண்டு, சந்திலை சிந்து பாடிச் சீன் பார்க்கிறது தானே பசங்களோடை வேலை.
டட்டட்ட....டட்ட...டட்ட.....டட்ட....எனச் சத்தத்தமிட்டு, அசைந்த வாறு ரயில் பயணித்துக் கொண்டிருக்கிறது. சிறிது தூரம் சென்ற பின் எனக்கு முன்னாடி இருந்த பெண்,
என்னைப் பார்த்து,
‘எக்ஸ்கியூஸ்மீ!
கிழிஞ்சுது கிருஷ்ணகிரி, ஒரு வேளை கடைக் கண்ணாலை நான் அவளைப் பார்க்கிறதைப் பார்த்திருப்பாளோ,
இன்னைக்கு நம்ம கதைக்கு ஆப்புத் தான் என்று யோசிக்க,
எக்ஸ்கியூஸ்மி, ஹலோ, ஆர்யூ தமிழ்?(Are you Tamil)
என் மூஞ்சியைப் பார்த்தா, உனக்குத் தெரியலை? என்று மனசிற்குள் கடுப்பாகி யோசித்து விட்டு,
யேஸ், ஐ ஆம் தமிழ்! என்று பதில் சொன்னேன்,
ஓ......ரியலீ...மீ டூ(Me to) நானும் தமிழ் தான் என்று 32 பல்லும் முன்னுக்கு வந்து விழுங்குவது போன்ற சிரிப்போடு ஒரு பதில் சொன்னாள் பாருங்கள், தானும் தமிழாம்...
சரி, இத்தோடு நிறுத்திக் கொள்வாள் என்று நினைத்த நேரம் பார்த்து, அடுத்ததா ஒரு கேள்வியைக் கேட்டாள் பாருங்க,
‘நீங்க என்ன படிக்கிறீங்க,
நான் என்ன படிச்சா உனக்கென்ன, ரயிலில் ஏறினமா, பயணம் செய்தமா, என்று இருக்கிறதை வுட்டிட்டு, சிபிஐ ஆப்பிசர் மாதிரித் துருவித் துருவிக் கேட்கிறாளே இவள்; என மனதினுள் நினைத்துக் கொண்டு,
’உங்கடை பார்வைக்கு என்ன மாதிரித் தெரியுது?
பார்த்தா தெரியலை? நான் புக் படிக்கிறேன் எனப் பதில் சொன்னேன்.
அவளும் விடுவதாயில்லை. இன்னைக்குச் செத்தமடா.. என்று நினைத்து முடிக்க முன்னாடி, அடுத்த கேள்வியைக் கேட்டாள்,
என்ன புக்? நாவலா?
இல்லைச் சிறுகதையா?
கறுமம், கறுமம், நான் என்ன புக் படிச்சால் இவளுக்கென்ன, இதுக்கு மேல இவளைப் பேசச் சான்ஸ் குடுக்க கூடாது என்ற நினைப்பில்
இது நாவலும் இல்லை, சிறுகதையும் இல்லை. இப்போ புதிதாக இன்ர நெட்- ப்ளாக்கில் அறிமுகப்படுத்தியிருக்கிற புளி என்ற இலக்கியம்’
அதனைத் தான் படிக்கிறேன் என்றேன்.
ஓ....இன்ரஸ்ரிங்,(Oh interesting) , மை நேம் இஸ் ஊர்மிலா!, அப்போ உங்களோடை பெயரை நான் தெரிஞ்சுக்கலாமா?
ஆஹா...இது தாண்டா நிரூபா சான்ஸ்.. நீயா நினைச்ச மேட்டரைப் பிகரே வழிக்கு கொண்டு வருது, என நினைத்தவாறு,
என்னோடை பெயர் வந்து, நான் பொறந்தப்போ என் அத்தை ஆசையாக வைத்த பெயர் நிரூபன். ஏன் என் பெயரே நிரூபன் தான், ஆனால்
இப்போ கொஞ்ச நாளா நம்ம கூட்டாளிப் பசங்க ஆசையா நிருபன் என்று மாத்திக் கூப்பிடுறாங்க என்று, எக்ஸ்ட்ராவா ஒரு பிட் கொடுத்தேன்.
ஓ....ரெண்டு நேம் உங்களுக்கு, யூ ஆர் சோ சுவீட்(you are so sweet) என்று சிரித்தாள்.
ஒரு சின்னச் சந்தேகம், உங்க பெயர் ஊர்மிலா வா? கொஞ்சம் புதுசா இருக்கே என்றேன்.
பிளடி இடியற், (Bloody Idiot) நீங்க எந்தக் காலத்தில் இருக்கிறீங்க, ஆக்சுவலி மை நேட்டிவ் நேம் இஸ் ஊர்மிளா, ஆனால் அது பஷன் இல்லைப் பாருங்க. அதான் ஊர்மிலா என்று நானே எனக்கு மாத்திக் கிட்டேன், நம்ம நண்பிகளுக்கும் இப்படியே அழைக்கச் சொல்லி இப்போ ஊர்மிலாவே என்னோடை நேம் ஆகிடுச்சு. அதை வுடுங்க.
பை த வே(By the way) நான் ஒன்னு தெரிஞ்சுக்கலாமா?
ஆர் யூ சிங்கிள்?
ஆஹா...ஓஹோ...ஆஹஹா....மாட்டிக்கிட்டுதடா; என்று நினைத்த போது, என்ன யோசிக்கிறீங்க, பதிலைச் சொல்லக் காணோம்?
நான் சிங்கிள் தான்,
ஓ, அப்போ நீங்களும் கலியாணம் கட்டலை,
நானும் கலியாணம் கட்டலை, என்று இரண்டு பேரும் கலியாணம் கட்டினால் எப்படி இருக்கும்?
ஆஹா...இவள் என்ன வலிய வந்து கேட்கிறாள், ஒரு வேளை லூசா இருப்பாளோ, எனக்குள் நானே யோசித்தேன்,
இப்பத் தானே பார்த்தோம், அதுக்குள்ளே முடிவைச் சொல்லுவதா, கொஞ்சம் யோசிச்சுச் சொல்லுறேனே என்று பதிலுரைத்தேன்.
அவளோ விடுவதாயில்லை, இப்ப நீங்க என்னைக் கட்டுறீங்களா? இல்லை ரயிலை நிறுத்தி, இவர் என்னை ரேப் பண்ண ட்ரை பண்ணிட்டார் என்று ஒரு கேஸைப் போட்டு, வாழ்க்கை பூரா வெளியே வராத படி பண்ணட்டுமா?
என்னா நினைச்சுக் கிட்டிருக்காய், உன் மனசிலை. ஒரு இளம் பெண் தனியா ரயில்ல வந்தா, ரேப் பண்ணுற மாதிரிப் பார்க்கிறாய், இரடா ராஸ்கல், உனக்கு இன்னைக்குப் பாடம் கற்பிக்கிறேன், என்று சொல்லியவாறு, அவள் ரயிலை நிறுத்தும் நோக்கில் பெல்லினை அடிக்கப் போக,
சீட்டில் இருந்த நானோ ஓடிப் போய் மூனு சீட்டுத் தள்ளியிருந்த அவள் மேல் பாய்ஞ்சடிச்சு, விழுந்து ஐயோ...
என் மானத்தைக் கப்பலேற்றிடாதே, உனக்குப் புண்ணியம் கிடைக்கும், ரயிலை நிறுத்தி ஊரைக் கூப்பிட்டு மானத்தை வாங்கிடாதே, என்று கெஞ்சி, அவளைக் கட்டிப் பிடிச்சு- கட்டுறன், விடடி,
ஊர்மிளா உன்னைக் கட்டுறன் விடடி,
உன்னையைக் கட்டுறன் விடடி! என்று சொல்ல,
கனவிலை இதெல்லாம் நடந்திட்டிருக்கு என்பது தெரியாமல், சுய நினைவின்றி நான் கட்டிப் பிடித்துக் கொண்டு விழித்துப் பார்க்கிறேன், அது பக்கத்துச் சீட்டில் இருந்த ஒரு குண்டுப் பூசணிக்காய் கிழவி.
அந்த நேரமே ஒரு பொலிடோலைக் குடிச்சுச் செத்திடலாம் போல இருந்திச்சு.
கிழவி ரயிலை நிறுத்த, போலிசும் ஓடி வர, என் நிலமையைச் சொல்லவா வேணும்.
டேய் பன்னாடை பரதேசி, உனக்கெப்படியடா என் பேரு ஊர்மிளா என்று தெரிஞ்சிச்சு?- இது கிழவி
நானும் உன்னைய நல்லா நோட் பண்ணிக் கொண்டு தான் இருந்தேன். நான் ஏறின நேரம் தொடக்கம் நீ என் பேரைச் சொல்லிச் சொல்லி தூங்கிற மாதிரி அக்ட் (Act) பண்ணிக் கொண்டு லவ்சு விட்டிருக்கிறாய் படவா.
உனக்கு எப்பூடி என் பேரு தெரியும்? சொல்லடா நாதாரி என்று கிழவி ஒரு கேள்வி கேட்டிச்சுப் பாருங்க.
அப்பவே, ரயில் ஓடத் தொடங்க, நான் குதிச்சு செத்திடலாம் போல இருந்திச்சு.
என்னதூ, சாகப் போற உனக்கு ஊர்மிளாவா, ஏய் கிழவி என்ன பொய் தானே சொல்லுறா.
போடா....ஆமணக்கு வாயா, ஊத்தேஸ்வரி என்ற என் பெயரை, இந்தக் காலத்திற்கேற்ற மாதிரிச் சேஞ்ச் பண்ணி, என் ஆத்துக்காரர் தான் ஊர்மிளா என்று வைச்சிருக்கிறார் தெரியுமா?
போலீஸ் என்னையைப் பார்த்து, டோய், சொல்லுறமில்ல. அப்புறம் என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு. வாடா வந்து ஜீப்பிலை ஏறடா என்று சொல்லிச்சுப் பாருங்க. எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்!
இப்ப சொல்லுங்க, யாருக்காச்சும் ரயிலில் கனவு வர வேண்டும் என்று நினைக்கிறீங்களா?
ஆளை விடுங்க சாமிங்களா!
டிஸ்கி: இக் கதையில் வரும் ரயில் பயணச் சம்பவத்தை, அந்தக் காலத்தில்(இற்றைக்குப் பல வருடங்களுக்கு முன்பதாக) யாழ்ப்பாணத்தில் பிரபலமாகவிருந்த லூஸ் மாஸ்டரின் தனி நடிப்பு கசற்றில் இருந்து சுட்டு, என்னோடை வசனங்களைக் கோர்த்து எழுதியிருக்கிறேன்.
|
68 Comments:
அஹா..............
அசத்தல் காமெடி பதிவு. அதுவும் உங்களை ஜீப்ல எத்தினாங்க பாத்தியலோ அது சூப்பர் காமெடி. #மத்தவன் கஷ்டத்துல சிரிக்கும் சங்கம்
சுவாரஸ்யமான நடை எழுத்து நீங்கள் நல்ல கதை எழுதலாம் உங்கள் எழுத்தில் சுவாரஸ்யம் இருப்பதால் கதை நிறைய எழுதுங்கள்
@Ashwin-WIN
அஹா..............
அசத்தல் காமெடி பதிவு. அதுவும் உங்களை ஜீப்ல எத்தினாங்க பாத்தியலோ அது சூப்பர் காமெடி. #மத்தவன் கஷ்டத்துல சிரிக்கும் சங்கம்//
மவனே, மாட்டினீங்க, பிச்சுப் புடுவன், பிச்சு...
@பிரபாஷ்கரன்
சுவாரஸ்யமான நடை எழுத்து நீங்கள் நல்ல கதை எழுதலாம் உங்கள் எழுத்தில் சுவாரஸ்யம் இருப்பதால் கதை நிறைய எழுதுங்கள்//
நன்றி சகோ,
உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் ஆதரவும், ஆசிர்வாதமும் இருக்கும் வரை என்னால் முடிந்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வேன் சகா.
போடா....ஆமணக்கு வாயா, ஊத்தேஸ்வரி என்ற என் பெயரை, இந்தக் காலத்திற்கேற்ற மாதிரிச் சேஞ்ச் பண்ணி, என் ஆத்துக்காரர் தான் ஊர்மிளா என்று வைச்சிருக்கிறார் தெரியுமா?
கட்டுப்படுத்த முடியாமல் சிரிச்சிட்டேன் சகோ
அற்புதமான நகைச்சுவை பதிவு சகோ
மனம் லேசானது.............
ஊதிப் பருத்த ஊர்மிளா!
ஹா ஹா ஹா தலைப்பே ஒரு மார்க்கமா இருக்கு!
வணக்கம் பாஸ் ...)
@A.R.ராஜகோபாலன்
கட்டுப்படுத்த முடியாமல் சிரிச்சிட்டேன் சகோ
அற்புதமான நகைச்சுவை பதிவு சகோ
மனம் லேசானது.............//
உங்களின் ஆதரவும், அன்பும் தான் இதற்கெல்லாம் காரணம் சகோ. நன்றி சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஊதிப் பருத்த ஊர்மிளா!
ஹா ஹா ஹா தலைப்பே ஒரு மார்க்கமா இருக்கு!//
மார்க்கமா வைச்சால் தானே, மார்க்கமா வாறாங்க மாப்பிளை.
@கந்தசாமி.
வணக்கம் பாஸ் ...)//
யோ...வணக்கம் பாஸ், என்று நீங்க சொன்னால்,
நான் என்னாத்த சொல்லுறது,
வணக்கம் மாப்பிளை./
என் மூஞ்சியைப் பார்த்தா, உனக்குத் தெரியலை? என்று மனசிற்குள் கடுப்பாகி யோசித்து விட்டு,
யேஸ், ஐ ஆம் தமிழ்! என்று பதில் சொன்னேன்,// //அதெல்லாம் அந்த காலம் பாஸ் ,மூஞ்சியை பார்த்தவுடனே தமிழேன் னு தெரியும். ஆனா இப்ப எல்லாம் fair & lovely பூசிக்கொண்டு திரியிறாங்கலாமே...(உங்கள சொல்லலா)ஹிஹிஹி
/////கறுமம், கறுமம், நான் என்ன புக் படிச்சால் இவளுக்கென்ன, இதுக்கு மேல இவளைப் பேசச் சான்ஸ் குடுக்க கூடாது என்ற நினைப்பில்
இது நாவலும் இல்லை, சிறுகதையும் இல்லை. இப்போ புதிதாக இன்ர நெட்- ப்ளாக்கில் அறிமுகப்படுத்தியிருக்கிற புளி என்ற இலக்கியம்’///// புளி என்ற இலக்கியமா ,இல்ல புலி என்ற இயக்கமா....ஹிஹிஹி
@கந்தசாமி.
அதெல்லாம் அந்த காலம் பாஸ் ,மூஞ்சியை பார்த்தவுடனே தமிழேன் னு தெரியும். ஆனா இப்ப எல்லாம் fair & lovely பூசிக்கொண்டு திரியிறாங்கலாமே...(உங்கள சொல்லலா)ஹிஹிஹ//
ஹி, பானையில் உள்ளது தானே அகப்பையில் வரும்.
அப்போ நீங்களும் அந்தக் காலத்தில் பேர் அண்ட் லவ்லி பூசியிருக்கிறீங்க..
இப்ப எல்லாம் இமாமி.. என்று புதுசு புதுசா வந்திட்டு பாஸ்.
///பிளடி இடியற், (Bloody Idiot) நீங்க எந்தக் காலத்தில் இருக்கிறீங்க,// இப்படி பேச்சு வாங்கியதெல்லாம் வெளில சொல்லகூடாது பாஸ் ... நீங்க ரொம்ப அப்பாவி தான் போங்க ..)))
@கந்தசாமி.
புளி என்ற இலக்கியமா ,இல்ல புலி என்ற இயக்கமா....ஹிஹிஹி//
மாப்பு, நானும் நீயும் ஒன்னு இரண்டு எண்ண வேண்டும் உள்ளுக்குள்ள ஆசை இருந்தால், மூச்சு விடுங்க.
///ஆர் யூ சிங்கிள்?
ஆஹா...ஓஹோ...ஆஹஹா....மாட்டிக்கிட்டுதடா; என்று நினைத்த போது, என்ன யோசிக்கிறீங்க, பதிலைச் சொல்லக் காணோம்?
நான் சிங்கிள் தான்,//// ம்ம்ம் ஒரு பொண்ணு வந்து "நீ சிங்கிளா" எண்டு கேட்டால் எவன் தான் உண்மையா சொல்லப்போறன், டப்புன்னு ஆமா எண்டுடுவான்..)
@கந்தசாமி.
///பிளடி இடியற், (Bloody Idiot) நீங்க எந்தக் காலத்தில் இருக்கிறீங்க,// இப்படி பேச்சு வாங்கியதெல்லாம் வெளில சொல்லகூடாது பாஸ் ... நீங்க ரொம்ப அப்பாவி தான் போங்க ..)))//
இதையெல்லாம் சொன்னால் தானே, இந்தக் காலத்தில் உண்மையை நம்புறாங்க சகா.
@கந்தசாமி.
ம்ம்ம் ஒரு பொண்ணு வந்து "நீ சிங்கிளா" எண்டு கேட்டால் எவன் தான் உண்மையா சொல்லப்போறன், டப்புன்னு ஆமா எண்டுடுவான்..//
அஃதே....அஃதே........அஃதே....
ஹி....ஹி....
ஆமா, ஓட்ட வடை வந்தார், போயிட்டாரா.
///போடா....ஆமணக்கு வாயா, ஊத்தேஸ்வரி என்ற என் பெயரை, இந்தக் காலத்திற்கேற்ற மாதிரிச் சேஞ்ச் பண்ணி, என் ஆத்துக்காரர் தான் ஊர்மிளா என்று வைச்சிருக்கிறார் தெரியுமா?/// ஹஹாஹா என்ன கொடும நிரூபன்.....
///லூஸ் மாஸ்டரின்// இவர் தானா "அண்ணே ரைட்" என்ற பிரபல்யமான நகைச்சுவைக்கு சொந்தக்காரர்...
உங்க பதிவுகள் என் டஷ்போர்ட் ல விழுகுதில்ல பாஸ் இன்டிலியில் பார்த்து தான் வந்தேன்...
@கந்தசாமி.
///லூஸ் மாஸ்டரின்// இவர் தானா "அண்ணே ரைட்" என்ற பிரபல்யமான நகைச்சுவைக்கு சொந்தக்காரர்...//
ஆமா சகோ, அவரே தான்.
@கந்தசாமி.
உங்க பதிவுகள் என் டஷ்போர்ட் ல விழுகுதில்ல பாஸ் இன்டிலியில் பார்த்து தான் வந்தேன்...//
பாஸ், பாலோவர்ஸினை நீக்கி விட்டு, மீண்டும் ஒரு தடவை பாலோவர்ஸினை புதிதாக கொடுத்துப் பாருங்க பாஸ்..
சரியாகிடும் என நினைக்கிறேன்.
நிருபன்.. ஒரு சின்ன சந்தேகம்.. இன்னும் உயிரோடதானே இருக்கிறீங்க?:) குதிக்க கிதிக்க இல்லையே ரெயினிலிருந்து?:)).
நல்ல அழகாக எழுதியிருக்கிறீங்க.. சூப்பர் நகைச்சுவை.
லூஸ் மாஸ்டரை மறக்கமுடியுமோ...
நானும் ரங்கீலா ஊர்மிளா என்று ஓடிவந்தாள் இப்படி கவுத்துப்புட்டியலே! ரயிலில் கனவு காண்பதா தூக்கம்தான் வரும் நமக்கு அதில்தான் பாதிவாழ்க்கை போகிறது.
என் அதிஷ்டம்...இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும் என்று எத்தனை நாள் ஏங்கி இருந்தேன் எனும் நினைப்போடு, தூக்கமும், மண்ணாங்கட்டியும்; என்று என் மனதிற்குள் நானே பேசியபடி, விழித்திருந்து, என் பிரயாணப் பையினுள் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.
மச்சி உனக்குத்தான் எவ்வளவு பெரிய மனசு? இப்படி கொஞம் கூட மறைக்காமல் உண்மையை சொல்லிட்டியே!
கறுமம், கறுமம், நான் என்ன புக் படிச்சால் இவளுக்கென்ன, இதுக்கு மேல இவளைப் பேசச் சான்ஸ் குடுக்க கூடாது என்ற நினைப்பில்
அவள் நோமலாத்தானே கேட்டவள்! நீங்கள் ஏனப்பா டென்சன் ஆகினீங்கள்?
இப்போ கொஞ்ச நாளா நம்ம கூட்டாளிப் பசங்க ஆசையா நிருபன் என்று மாத்திக் கூப்பிடுறாங்க என்று ஒரு விட்டைப் போட்டேன்.
மாப்ளே விட்டை என்றால் என்ன? எனக்கும் சொல்லித்தாவன்! நானும் பொடுறன்
ஆஹா...ஓஹோ...ஆஹஹா....மாட்டிக்கிட்டுதடா; என்று நினைத்த போது, என்ன யோசிக்கிறீங்க, பதிலைச் சொல்லக் காணோம்?
அடப்பாவி நல்லாக் கேட்டெ பேர் !
ஆஹா...இவள் என்ன வலிய வந்து கேட்கிறாள், ஒரு வேளை லூசா இருப்பாளோ, எனக்குள் நானே யோசித்தேன்,
இதுக்குத்தான் எங்களோட அவளுகள் கதைக்கிறேல!
ஆரம்ப வரிகளில் நம்ம சகோவுக்கு ஒரு பிகர் கிடச்சிருசுன்னு சந்தொசப்பட்டா கடைசியில இப்படி பூசணிக்காயை உடசிட்டிங்களே.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
கதை போல தெரியலை. எங்கோ ஒரு பெண்ணிடம் வாங்கி கட்டியது போல இருக்கே. அவ்வளவு ஒன்றிப் போனேன் என்று சொல்ல வந்தேன், நிரு(ரூ)பன். ஹாஹா
தலைப்பை பாரு ஊதிப்பருத்த பூசணிக்கைன்னு!!!ஹிஹி
//ஓ....ரெண்டு நேம் உங்களுக்கு, யூ ஆர் சோ சுவீட்(you are so sweet) என்று சிரித்தாள். //
பயபுள்ளை அப்போதே கால்'ல விழுந்திருப்பாறு..
//ஆஹா...இவள் என்ன வலிய வந்து கேட்கிறாள், ஒரு வேளை லூசா இருப்பாளோ, எனக்குள் நானே யோசித்தேன்,//
சத்தியமா??அம்மா சத்தியமா???செல்லாது செல்லாது நான் நம்பமாட்டேன்
// இப்ப நீங்க என்னைக் கட்டுறீங்களா? இல்லை ரயிலை நிறுத்தி, இவர் என்னை ரேப் பண்ண ட்ரை பண்ணிட்டார் என்று ஒரு கேஸைப் போட்டு, வாழ்க்கை பூரா வெளியே வராத படி பண்ணட்டுமா?//
ஹிஹி அது நம்ம பாஸ்'சாலா முடியாதுன்னு அவங்களுக்கு தெரியாது ஹிஹி அவரு உத்தம புத்திரர்னு சொல்ல வந்தான் ஹிஹி
ஹிஹி லூஸ் மாஸ்டரா??ம்ம்ம்
மாப்ள உன்னோட வார்த்தை ஜாலத்துடன் பகிர்வு அருமை ஹிஹி!
ஆங்கில சிறுகதையின் உல்டா என்றாலும் உங்க டச் பிரமாதம்
பதிவுலகில் ஃபிகர் மேட்டரில் நீங்க தான் நெம்பர் ஒன் என்பதை நிரூபித்து நிரூபன் ஆகிவிட்டீர்.. விக்கி தக்காளி,ஜீவன், உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன் என்னை மன்னிக்க.. அவ்ங்களுக்கு 2 வது 3 வது 4 வது இடம் தான்
கனவு ச்சே கதை சூப்பர்
அடப்பாவி மக்கா.............
நல்ல ஊர்மிலாதான்யா.....
/////////சி.பி.செந்தில்குமார் said...
பதிவுலகில் ஃபிகர் மேட்டரில் நீங்க தான் நெம்பர் ஒன் என்பதை நிரூபித்து நிரூபன் ஆகிவிட்டீர்.. விக்கி தக்காளி,ஜீவன், உணவு உலகம் ராசலீலா ராஜேந்திரன் என்னை மன்னிக்க.. அவ்ங்களுக்கு 2 வது 3 வது 4 வது இடம் தான்/////////
பாவம் சிபி.....
உங்களுடைய கமென்ட் சூப்பரா இருக்கு தல
நெசமாவே இப்படி ஒரு சம்பவம் நடந்தா எப்படி இருக்கும்?!ஹா,ஹா,ஹா!
அசத்தலான நகைச்சுவைப் பதிவு..
இன்னும் சிரிச்சுட்டே இருக்கேன்..
நன்றி சகோ..
பாஸ் மனசத்தொட்டு சொல்லுலுங்க இது உங்களுக்கு நிஜமா நடந்ததுதான ???
ஹீ ஹீ
பாஸ் ரியலி சூப்பர்
ஒரு தேர்ந்த சிறுகதை போல் இருக்கு
//போடா....ஆமணக்கு வாயா, ஊத்தேஸ்வரி என்ற என் பெயரை, இந்தக் காலத்திற்கேற்ற மாதிரிச் சேஞ்ச் பண்ணி, என் ஆத்துக்காரர் தான் ஊர்மிளா என்று வைச்சிருக்கிறார் தெரியுமா?
//
ஹா ஹா
ஆச்சி ஆத்துகாரருக்கு என்ன ஒரு ரசனை ??
இந்த மூஞ்சியப் பாத்தாலே தமிழ் எண்டு எழுதிக்கிடக்கு.பிறகு ஒரு கேள்வி.ஊத்திப் பருத்த ஊர்மிளா...கலக்குங்க நிரூ !
நிருபனின் ரயில் பயணங்களில் சூப்பர் கனவு
உங்களின் கமென்ட் சுப்பர் அண்ணா
முதல் படம் அசத்தல்!!
ஓ......ரியலீ...மீ டூ(Me to) நானும் தமிழ் தான் என்று 32 பல்லும் முன்னுக்கு வந்து விழுங்குவது போன்ற சிரிப்போடு ஒரு பதில் சொன்னாள் பாருங்கள், தானும் தமிழாம்.//
hahaa நல்லா கடலை போடுறீங்க!!
சுவாரஸ்யமான நடை ....
வணக்கம். சகோ.
நீண்டநாளைக்குப்பிறகு பின்னூட்டமிடுகிறேன்.. கதை சூப்பர்.. உங்கள் எல்லா பதிவுகளையும் படிக்க முடிந்தாலும் பின்னூட்டமிட முடிவதில்லை.. மீண்டும் வருகிறேன்.
//புத்தகத்தைப் படிக்கிற மாதிரி நடிச்சுக் கொண்டு, சந்திலை சிந்து பாடிச் சீன் பார்க்கிறது தானே பசங்களோடை வேலை.//
அது எப்புடி உக்களுக்கு தெரியும்... (பசங்கள பற்றி)
//ஆஹா...இது தாண்டா நிரூபா சான்ஸ்.. நீயா நினைச்ச மேட்டரைப் பிகரே வழிக்கு கொண்டு வருது, என நினைத்தவாறு, //
பாஸ் நீங்க குடுத்து வைச்சனிங்க பாஸ்
//ஓ, அப்போ நீங்களும் கலியாணம் கட்டலை,
நானும் கலியாணம் கட்டலை, என்று இரண்டு பேரும் கலியாணம் கட்டினால் எப்படி இருக்கும்?//
எங்களுக்கெல்லாம் ஓசீல ஒரு சீன் பார்க்க கிடைச்சிருக்கும்
ஃஃகனவிலை இதெல்லாம் நடந்திட்டிருக்கு என்பது தெரியாமல், சுய நினைவின்றி நான் கட்டிப் பிடித்துக் கொண்டு விழித்துப் பார்க்கிறேன், அது பக்கத்துச் சீட்டில் இருந்த ஒரு குண்டுப் பூசணிக்காய் கிழவி.ஃஃஃ
அடிங்கொக்கா மக்கா..... நான்சென்ஸ், பிளெடி இடியட், ராஸ்கல் கோ அன்ட் டேக் கியர் கப் ஒப் டீ.......
கிழவியாம் கிழவி..... ஓவரா கடுப்பேத்திராரு..
ஹி ஹி அந்த போட்டோ சூப்பரா இருக்கு பாஸ், பேசி முடிச்சிருங்க.... நாங்கெல்லாம் அண்ணிய வரவேற்க ஆரத்தியோட காத்திருக்கிறம்
பிந்தி வந்தாலும் இரசித்து சிரிக்கமுடிஞ்சுது.
ஊதிப் பருத்த ஊர்மிளா!
ஹா ஹா ஹா
நான் நிருபனுக்கு என்னவோ எதோ நடந்திட்டு என்று நினைச்சன் அது சரி அந்த ஊர்மிலாண்ட படம் எங்க சுட்டிங்க
--
இந்த சம்பவம் உங்களுக்கு நடந்த மாதிரியே எழுதி அதை பிறகு கனவில நடந்ததது என்று சொல்லி கடசில கதையே வேறு இடத்தில இருந்து சுட்டது என்று சொல்லி ஏமாதிட்டின்களே
இப்படி ஒரு ஏமாத்ததை எதிர்பாகல உன்மேல நடந்திருந்த நிருபனுக்கு சிங்குச்சா ஜிங்குச்சா தான்
//இன்ர நெட்- ப்ளாக்கில் அறிமுகப்படுத்தியிருக்கிற புளி என்ற இலக்கியம்’
அதனைத் தான் படிக்கிறேன் என்றேன். //
haa! haa!haa!
Post a Comment