வீட்டில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை ஒன்று , பெற்றோர் சொற் கேட்காது தன் வழியில் வீட்டை விட்டு வெளியேறி ஊர் சுற்றப் போகும் போது
’அவள் இனித் திருந்த மாட்டாள், அவளுக்கு ஆட்டம் மெத்திப் போச்சு’ என ஏசுவார்கள்.
ஈழத்தில் ஆட்டம் மெத்திப் போச்சு எனும் சொல்லிற்கு நிகரான அர்த்ததோடு தமிழகத்தில் ’கொழுப்பு ஏறிப் போச்சு’ எனும் சொல்லினை உபயோகிப்பார்கள்.
இதற்கு நிகாரான சொல்லாகத் தமிழகத்தில் ரொம்ப ஆடுறா எனும் சொல்லினையும் சில இடங்களில் பயன்படுத்துவார்கள்.
ஈழத்தில் ஒருவர் மேதாவித்தனத்தோடு தவறுகளைச் செய்யும் போது ‘அவருக்கு கொழுப்புக் கூடிப் போச்சு’ என்று ஏசுவோம்.
ஈழத்தின் வன்னிப் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் சுட்டித் தனமான தமது பெண் பிள்ளைகளைக் கண்டிக்கும் போதும், ஏசித் திட்டும் போதும்,
’உனக்கென்ன அமரே! என்று ஓர் வார்த்தையினையும் கையாள்வார்கள்.
அமர் எனப்படுவது இங்கே பல அர்த்தங்களில் வந்து கொள்ளும், உதாரணமாக ஒரு பெண் ஆண் மீது மோகம் கொண்டு வாடுகையில் அல்லது ஆண் மீது காதல் கொண்டு ஆணின் நினைப்புடன் இருக்கையில் உனக்கென்ன அமரே எனக் கேட்டால்- இது கெட்ட அர்த்தத்தில் வரும்.
அதே போலச் சுட்டித் தனம் செய்யும் பெண்ணிடம் கேட்கையில்’
இச் சொல்லானது ’’நீ என்ன திமிர் பிடித்த நிலையில் இருக்கிறாயா? என்ற தொனியில் பொருள் தரும்.
இதே போல ஈழத்தின் வன்னிப் பகுதியில் உள்ள சில பழசுகள் ‘இளவயதுக் குமரிகள்(பிகருகளை) குறும்பு செய்கையில் ‘நீ ஒரு டான்ஸ் மாலை’ அல்லது டான்சு மாலை’ எனப் பேசுவார்கள். இங்கே டான்ஸ் மாலை எனும் சொல்லிற்கான அர்த்தம் தமிழகத்தில் வழக்கிலிருக்கும் ஆட்டக்காரி எனும் சொல்லிற்கு நிகரானதாக வரும்.
டான்ஸ் மாலை- ஆட்டக்காரி. ஒரு பெண்ணினைத் திட்டும் போது ஈழத்தில் நீ ஒரு ஆட்டக்காரி என்று சொல்லியும் திட்டுவார்கள்.
நீ ஒரு சதிர் என்று ஈழத்தில் திட்டுவார்கள். இங்கே சதிர் என்பதற்கான அர்த்தம் குழப்படிகார(Naughty) பெண்ணின் செய்கையினால் ஆத்திரமுற்ற பெரியவர்கள் அவளை கட்டுக்கடங்காத பெண்ணிற்கு ஒப்பிட்டுப் பேசுவதைக் குறிக்கும்.
சதிராட்டம் எனும் சொல்லும் இதனோடு தொடர்புடைய ஒரு சொல் தான். இச் சொற்றொடர்கள் தொடர்பாக நீங்கள் அறிந்த விடயங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே,
|
58 Comments:
ஹையா நான் தான் மொதோ வந்தேன் ...
இன்னும் கொஞ்ச நாளில் உங்க உதவியோடு நான் நானும் இலங்கை தமிழ் பேசிவிடுவேன் போல இருக்கு
@ரியாஸ் அஹமது
ஹையா நான் தான் மொதோ வந்தேன் ...//
ஆஹா...இனிய காலை வணக்கம் சகோ.
@ரியாஸ் அஹமது
இன்னும் கொஞ்ச நாளில் உங்க உதவியோடு நான் நானும் இலங்கை தமிழ் பேசிவிடுவேன் போல இருக்கு//
சகோ, எமது மொழி வழக்குகள் பற்றிய புரிதலை அனைத்து நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனும் ஒரு சிறிய முயற்சி தான் இது சகோ.
நல்ல பதிவு சகோ
"ஆத்திரமுற்ற பெரியவர்கள் அவளை கட்டுக்கடங்காத பெண்ணிற்கு ஒப்பிட்டுப் பேசுவதைக் குறிக்கும்."
எங்கள் ஊர் பக்கம் இதுபோன்ற செயல்களை செய்பவர்களை "பஜாரி" என்றும் சொல்வதுண்டு
>>
ஈழத்தில் ஒருவர் மேதாவித்தனத்தோடு தவறுகளைச் செய்யும் போது ‘அவருக்கு கொழுப்புக் கூடிப் போச்சு’ என்று ஏசுவோம்.
அப்போ நிரூபன் கலக்கறப்ப கோழுப்பு ஜாஸ்தி என சொல்லலாமா? #டவுட்டு ஹா ஹா
நன்றி நண்பரே ....
ஈழத்து சொல்லாடலை உங்கள் மூலம் கற்றுக்கொள்கிறோம் நன்றி நண்பரே
என்ன கொடுமை சார்....கொஞ்சம் இருங்க,இப்போ ஒட்டு மட்டும் போட்டு செல்கிறேன்,அவசரமாய் ஒரு ப்ரொஜெக்ட் வேலை முடிக்கணும் பாஸ்..அப்புறமா வாறன்
மாப்ள உங்க பதிவுகள் மூலம் பல தமிழ் சொற்றொடர்களை அறிந்து கொள்ள முடிகிறது நன்றி!
ரியாஸ் அஹமது said... [Reply to comment]
ஊறுகாய் மாதிரி குட்டி இருக்கீங்கள் ... நான் வாரன்
திமிர் பிடித்தவள். அடங்காப் பிடாரி என்றும் திட்டுவார்கள்!
சார்வாகன் said... [Reply to comment]
அருமைஅயாக ஆடுகிறீர்கள் நண்பரே!!!!!!!!!!!!!!!!
மகாதேவன்-V.K said... [Reply to comment]
வித்தியாசமா சிந்தித்துருக்கின்றீர்கள் சகோதரம் நம்ம தமிழோடு
தேடி தேடி விளக்கம் போடுகிறீர்...
எப்படியோ காலையிலே நால்லா நாலு திட்டு கத்துகிட்டேன்..
மாப்ளே! உன்னோட கடந்த சில பதிவுகள்ல நாங்க நிறைய விஷயங்கள் தமிழை பற்றி தெரிஞ்சுக்க முடியுது. தொடர்ந்து இது போல எதிர்பார்க்கிறேன்.
எல்லாம் புதிதாக இருக்கிறது! சுவாரஸ்யமாகவும் இருக்கிறது!(திரட்டிகளில் தலைப்பு வேறாக இருக்கிறதே!)
என்ன பாஸ், டஷ்போர்ட் ல தலைப்பு வேற மாதிரி வந்திருக்கு,,,,:-)
//ஈழத்து சொல்லாடலை உங்கள் மூலம் கற்றுக்கொள்கிறோம் நன்றி நண்பரே//
yes thanks for that nirupan!!
///அவளுக்கு ஆட்டம் மெத்திப் போச்சு’ என ஏசுவார்கள்/// மொத்தி போச்சா, முத்தி போச்சா .....!! எங்க ஊர்ல 'முத்திப்போச்சு' எண்டு சொல்வார்கள்...
////’உனக்கென்ன அமரே! என்று ஓர் வார்த்தையினையும் கையாள்வார்கள்./// இது அடிக்கடி அடிபர்ற வார்த்தை ...)
///சதிராட்டம்/// இந்த சொல்லும் வித்தியாசமாக பயன்படுத்துவார்கள்.........
நல்ல விளக்கங்கள் பாஸ் .......தொடருக்க ..
டான்ஸ் மாலை கேள்விபடாத ஒரு சொல்
அடங்கா பிடாரி, எடுப்பு பிடிச்சவள் எண்டு சொல்லுவினம் என்னோட வன்னியில் இருந்து வந்தவன் ஒருவன் படிச்சான் அவன் அட்டக்கார பெட்டைகளை பாத்து நாய்க்கு பிறந்ததுகள் எண்டு பேசுவான்
ஈழத்தமிழ், இந்திய தமிழ் இரண்டிலும் பெண்களை திட்டும் முறை பற்றிய தெளிவான விளக்கம் கொடுத்துள்ளிர்கள்
பாராட்டுக்கள் சகோ
டான்ஸ் மாலை- ஆட்டக்காரி. ஒரு பெண்ணினைத் திட்டும் போது ஈழத்தில் நீ ஒரு ஆட்டக்காரி என்று சொல்லியும் திட்டுவார்கள்.///
ஆமா இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க...?
தேன்தமிழ் சதிராட்டம் அருமை....!!!
>’உனக்கென்ன அமரே!
ex--யாழ்ப்பாணத்ஹ்டுக்காரனான எனக்கே 'அமர்' என்ற சொல் புதிதாகவுள்ளது.
சி.பி.செந்தில்குமார் said...
>>
ஈழத்தில் ஒருவர் மேதாவித்தனத்தோடு தவறுகளைச் செய்யும் போது ‘அவருக்கு கொழுப்புக் கூடிப் போச்சு’ என்று ஏசுவோம்.
அப்போ நிரூபன் கலக்கறப்ப கோழுப்பு ஜாஸ்தி என சொல்லலாமா? #டவுட்டு ஹா ஹா//
டேய் மூதேவி, பிட்டு படம் பார்க்க போகும் அவசரத்துல [கோழுப்பு] இப்பிடியாடா நாயே கமெண்ட்ஸ் போடுறது ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி....
விக்கி உலகம் said...
மாப்ள உங்க பதிவுகள் மூலம் பல தமிழ் சொற்றொடர்களை அறிந்து கொள்ள முடிகிறது நன்றி!//
ராஸ்கல் என்னமா சமாளிக்குறான் பாரு...
நல்ல தமிழ் படிக்க ஆர்வமாக இருக்கிறது.. நன்றி..
இங்கு வெளிநாட்டிலும் சொல்வார்கள் ** அங்க ஆடி முடிஞ்சுது இப்ப இங்க இஞ்ச வந்திட்டுது ஆடுறதுக்கு ** என்று!!
இப்படி கேவலமாக பெண்களை வசைபாடுபவர்களை எனக்குப் பிடிப்பதில்லை!!
மாப்ளே என்ன இது வேட் வெரிஃபிகேஷன் வச்சிருக்கிறே? என்னாச்சு?
இலங்கையில் ஆட்டக்காரிகள் என திட்டப்படும் பெண்களில் 89 சதவீதமான பெண்கள் நல்லவர்களே என்று ஆய்வொன்று கூறுகிறது!
** ஆய்வு செய்தவர் யார்? என்று குதர்க்கமாக கேட்க கூடாது! **
மச்சி பெண்களை ** சின்ன மேளம் ** என்றும் திட்டுகிறார்கள் தானே! அது ஏன்?
மாப்பிளே கீழ்வரும் சொற்களுக்கு விளக்கமளித்து ஒரு பதிவு போடேன்!
தேவாங்கு
பிரமசத்தி
புண்ணாக்கு
வெங்காயம்
பரதேசி
பன்னாடை
கோதாரி
நாசமறுவான்
தாலியறுப்பாள்
தொண்ணார்ரது
விலாங்கு பார்க்கிறது
மிலாந்துறது
வியளம் விடுறது
பண்டி
குரங்கு
மூதேசி
ஊத்தவாளி
அழுகல் பழக்க வழக்கம்
செம்மரி
எருமை
மினுங்குறது
சந்தி தூங்குறது
விசர் முத்துறது
கழண்ட கேசு
பேய்க்கதை கதைக்கிறது
மயிரைப் புடுங்குறது
கொப்பர்
கொம்மா
கோத்தை
வம்புல புறந்தது
வரம்புல புறந்தது
தேவடியாள்
பணியாரம்
எனக்கென்ன வியாதியே
எனக்கென்ன வில்லங்கமே
எனக்கென்ன விசரே
எனக்கென்ன மெண்டலே
சோத்துமாடு
அய்யோ எழுத எழுத கனக்க வருது! இதெல்லாத்தையும் வச்சு ஒரு பதிவு போடுடா மச்சி!
///மாப்ளே என்ன இது வேட் வெரிஃபிகேஷன் வச்சிருக்கிறே? என்னாச்சு?///அவர் வேட் வெரிபிகேசன் வச்சிருக்கிறது இருக்கட்டும்.எங்கே பதிவு?வெயில் அதிகமாகி விட்டதால் பஞ்சி பீடித்து விட்டதோ? ///எனக்குத் தெரிஞ்ச ஒரு சொல்லடை(வடை?)"சன்னதம் ஆடுறது"யாராவது ஏதாவது தவறாக செய்து விட்டால் அதனைப் பெரிதுபடுத்தி ஏறுமாறாகப் பேசுவதை "என்ன சன்னதம் ஆடுறாய்?" என்று கேட்பார்கள்.கரீக்டா?(தங்கிலீஸ்!)
ஹா ஹா என்ன பாஸ்?
எம்மவர்களின் சொற்பிரயோகங்களை ஏனையவர்களிடமும் கொண்டு சேர்க்கும் நல்ல முயற்சி..
வாழ்த்துக்கள் பாஸ்
///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
மாப்பிளே கீழ்வரும் சொற்களுக்கு விளக்கமளித்து ஒரு பதிவு போடேன்!
தேவாங்கு
பிரமசத்தி
புண்ணாக்கு
வெங்காயம்
பரதேசி
பன்னாடை
கோதாரி
நாசமறுவான்
தாலியறுப்பாள்
தொண்ணார்ரது
விலாங்கு பார்க்கிறது
மிலாந்துறது
வியளம் விடுறது
பண்டி
குரங்கு
மூதேசி
ஊத்தவாளி
அழுகல் பழக்க வழக்கம்
செம்மரி
எருமை
மினுங்குறது
சந்தி தூங்குறது
விசர் முத்துறது
கழண்ட கேசு
பேய்க்கதை கதைக்கிறது
மயிரைப் புடுங்குறது
கொப்பர்
கொம்மா
கோத்தை
வம்புல புறந்தது
வரம்புல புறந்தது
தேவடியாள்
பணியாரம்
எனக்கென்ன வியாதியே
எனக்கென்ன வில்லங்கமே
எனக்கென்ன விசரே
எனக்கென்ன மெண்டலே
சோத்துமாடு
அய்யோ எழுத எழுத கனக்க வருது! இதெல்லாத்தையும் வச்சு ஒரு பதிவு போடுடா மச்சி! ///
அவ்வ்
இலங்கை தமிழ் கலாசாரத்தை உங்கள் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது நன்றி
colombo tamil mika azhakaanathu ...... ketta suvaarasiyamaaka irukkum
மாப்பிளே கீழ்வரும் சொற்களுக்கு விளக்கமளித்து ஒரு பதிவு போடேன்!
தேவாங்கு
பிரமசத்தி
புண்ணாக்கு
வெங்காயம்
பரதேசி
பன்னாடை
கோதாரி
நாசமறுவான்
தாலியறுப்பாள்
தொண்ணார்ரது
விலாங்கு பார்க்கிறது
மிலாந்துறது
வியளம் விடுறது
பண்டி
குரங்கு
மூதேசி
ஊத்தவாளி
அழுகல் பழக்க வழக்கம்
செம்மரி
எருமை
மினுங்குறது
சந்தி தூங்குறது
விசர் முத்துறது
கழண்ட கேசு
பேய்க்கதை கதைக்கிறது
மயிரைப் புடுங்குறது
கொப்பர்
கொம்மா
கோத்தை
வம்புல புறந்தது
வரம்புல புறந்தது
தேவடியாள்
பணியாரம்
எனக்கென்ன வியாதியே
எனக்கென்ன வில்லங்கமே
எனக்கென்ன விசரே
எனக்கென்ன மெண்டலே
சோத்துமாடு
அய்யோ எழுத எழுத கனக்க வருது! இதெல்லாத்தையும் வச்சு ஒரு பதிவு போடுடா மச்சி!////
ada ithu nalla irukke ...... maaththiyosi ....nallaa yosikkiringa
குதியம் குத்துறாள் என்பதை மறந்துவிட்டீங்க போல நிரூ!
வீட்டில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை ஒன்று ,//
விளக்கம் சொல்லும்போது கூட பொண்ண விடமாட்டேங்குறான் பா..
‘நீ ஒரு டான்ஸ் மாலை’ அல்லது டான்சு மாலை’//
இவன் திருந்தமாட்டான் யா..
இச் சொற்றொடர்கள் தொடர்பாக நீங்கள் அறிந்த விடயங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே,//
கொள்ளலாம் என்பதை விட உன்னை கொல்லலாம்..
நண்பா. எந்தப் பெண்ணையாவது இப்படி திட்டனும் என்று நீண்ட நாள் ஆசையா?
நன்றி. நல்ல பதிவு.பேச்சுவழக்குகளை பலரும் அறிய உதவுகிறது.
கடவுளே....சிரிப்பு அடக்க முடியேல்ல.வடையண்ணா நல்லா வீட்ல வாங்கிக் கட்டியிருக்கிறார்.
அதான் அடுக்காக் கொட்டுறார் தனக்குக் கிடைச்ச பட்டமெல்லாம் !
நிரூ...”உமக்குப் பெரிய பஸ்ஸப்பா”
“பெரிய இவர் எண்ட நினைப்பு”
”நல்லா வந்து வாச்சுதுகள்
எனக்கெண்டு”
”ஆளும் மூஞ்சையும் கண்ணும் முழியும் பார் வைரவருக்குக் கிடைச்ச வாகனம்போல ஒரு உருவம்”
வெங்கணாந்தி
சோணகிரி
குரங்கன்
இன்னும் இருக்கு.ஞாபகம் உடன வராதாம்.இப்ப திட்டு வாங்கிறது குறைவுதானே.அதான் !
ஐயோ இந்த நோநாக்கல் விளையாட்க்கு நான் வரவில்லை
நம்ம யாழ்ப்பாண தமிழ் அருமை
அண்ணா, நீங்கள் நமது மொழி வழக்கத்தை அறிமுகப்படுத்தப்போக... இப்போ தமிழகம் தொடங்கி புலம் பெயர் நாடுகள் முழுவதிலும் இருந்து எப்படி திட்டுரது எண்டு படிச்சுக் கொண்டிருக்கிறாங்க.... ஹையோ... ஹையோ...
கடவுளே... தெரியாமல் உள்ளே வந்துட்டேன்ன்ன்ன்ன் மீஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))).
அட எனக்கு இப்பதான் ஞாபகம் வருது! மச்சி வன்னியில நாங்கள் கதைப்பம்
** ஆளுக்கு காத்துப் போச்சாம் **
** ஆளுக்கு ஒட்டப் போயிற்றாம் **
** அண்ண உங்கட பக்கத்தால ஒழுங்குகள் சரியோ **
** என்னண்டாண்ண எங்கட பக்கத்தால ஏழு வெள்ளையும், நாலு கறுப்பும் அண்ணை **
** அண்ணை அந்த எறியல் ஒழுங்கு ஒருக்கா கவனிச்சு விடுங்கோ **
** நிருபன் ஓட்டவட நிருபன் ஓட்டவட ... என்னெண்டா நிருபன், நான் கதைக்கிறது விளங்குதோ? என்னெண்டா நிருபன் அன்பண்ணையின்ர இடத்தால இண்டைக்கு ஒரு ஒழுங்கொண்டு இருக்கு!! ஓவர் ஓவர்!! ஓம் அதில உங்கட இடத்தால பத்து கதிரை கேட்டிருக்கினம், ஒருக்கா ஒழுங்கு படுத்தேலுமோ ஓவர் ஓவர் **
** வணக்கம் நிருபண்ணை.... என்னண்டாண்ணை பிரச்சனை, நாங்கள் அந்த விடயம் கதைச்சிட்டம்! ஆள் மசியிறமாதிரி தெரியேல, ஒருக்கா வட்டத்துக்குள்ள போட்டெடுக்கச்சொல்லி, ராங்கோ வன் அறிவிகினம் ஓவர் **
முக்கிய குறிப்பு - மேலே உள்ள வசனங்கள் சாதாரண பொதுமக்கள் அனவருக்குமே தெரியும் என்பதால், யாரும் தப்பாக நினைக்கவேண்டாம்!
@ஓட்டைவடை நீ கூடப் பேசுற எத்தினகதிர் இதெல்லாம் பப்ளிக்கில வேண்டாம் மூதேசி பரதேசி,பண்ணாடை,கோதாரியறுப்பான் ஐய்யோ உன்ற சகவாசம் வேண்டாம் காத்தால கதிர் அடிக்கனும் !
அடடா! உங்கள் பதிவு???!!! என்னத்தை சொல்ல! சுப்பர்.
கலக்கல் சகோ! :-)
இப்படியே எங்களை உங்க வழிக்கு கொண்டுவந்துடுவீங்க போல இருக்கே?
////////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said... [Reply to comment]
மாப்பிளே கீழ்வரும் சொற்களுக்கு விளக்கமளித்து ஒரு பதிவு போடேன்!
//////////
அதில் கக்கா எனும் வார்த்தை வராததால், அந்த கமெண்ட்டை புறக்கணிக்கிறேன்!
Post a Comment