ஈழம் எனும் சொல் இன்றைய கால கட்டத்தில் அகிலமெல்லாம் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாகி விட்டது. தமிழக மக்கள் மத்தியில் ஈழம் எனும் சொல்லிற்குரிய அர்த்தமோ, தலை கீழான நிலையில் நோக்கப்படுகிறது.
இலக்கணக்காரரின் கூற்றின் அடிப்படையிலும், வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையிலும், ஈழம் எனும் சொல் ஒட்டு மொத்த அல்லது முழு இலங்கைத் தீவினையும் குறிக்கத் தமிழகத்தின் சங்க கால இலக்கியத்தில் சுட்டப்பட்ட ஒரு சொல்லாக இருக்கின்றது.
விரிவாகப் பார்க்கையில் தமிழகத்தின் சங்க கால இலக்கியப் பாடல்களில் வரும் கல் வெட்டுக்களின் அடிப்படையில் ஈழத்து நாகனார், ஈழத்து குடுமிகன், ஈழம் எனும் சொற் பிரயோகங்கள் காணப்பட்டன. இலங்கையில் வாழும் தமிழர்களின் பூர்வீக வரலாற்றை அறிய அல்லது ஆராய முற்படும் அறிஞர்களும் ஈழத்தில் சங்க காலம் தொட்டுத் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனும் கூற்றினை நிறுவ இக் கல்வெட்டுக்களில் காணப்படும் ஈழம் பற்றிய குறிப்புக்களை மூலாதாரங்களாகச் சுட்டுகிறார்கள்.
ஈழம் எனப்படும் சொல்லிற்குரிய வரலாற்று ரீதியான பெயர் அல்லது புராதன பெயர் முழு இலங்கைத் தீவினையும் குறிக்கவே பயன்படுகின்றது.
ஈழத் தமிழர்கள் என்று நாம் விளிக்கின்ற போது
இலங்கையில் வாழும் - தமிழர் தாயகப் பகுதிகளான வட கிழக்கில் வாழும் தமிழர்கள்(இலங்கைத் தமிழர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மற்றும்
பிரித்தானியர் காலத்தில் இந்தியாவிலிருந்து மலையகத்திற்கு, தொழிலாளர்களாக கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவளி அல்லது மலையகத் தமிழர்களும் இணைந்து கொள்கிறார்கள்.
தமிழக மக்கள் பார்வையில் இலங்கையின் வட கிழக்கில் வாழும்(தமிழீழம் எனப் போர் இடம் பெற்ற காலத்தில் பிரகடனம் செய்யப்பட்ட) தமிழ் மக்களைத் தான் ஈழத் தமிழர்கள் எனச் சுட்டுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ஈழத் தமிழர்கள் எனும் வட்டத்தினுள் தமிழ் மொழியினைத் தாய் மொழியாகப் பேசும் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களுமே வந்து கொள்கிறார்கள்.
ஈழம் எனும் சொல், ஒரு சில இடங்களில் வியாபாரங்களை இக் காலத்தில் ஊக்குவிக்கும் சொல்லாக மாறி விட்டது. தமிழகத்தின் வார இதழகள், நாளிதழ்கள் சிலவற்றில் ஈழம் எனும் சொல், அதற்குரிய அர்த்தத்தினைச் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால், வியாபாரம் கருதி, வியாபார நோக்கோடு கூடிய ஒரு வருமான மீட்டும் பதமாகி விட்டது.
ஈழத் தமிழர்கள் எனும் தொனிப் பதத்திற்குப் பதிலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் ‘தமிழர் தாயகப் பகுதி மக்கள்’ அல்லது தமீழ மக்கள் எனும் சொல்லினைக் கையாண்டார்கள்.
அதே போல ஈழம் எனும் சொல் - வரலாற்றின் அடிப்படையில் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களையும் குறிப்பதால், தமிழீழ மக்கள் எனும் பதம் பிற் காலத்தில் இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளிலும், ஊடகங்களிலும் வழக்கிற்கு வந்தது.
ஆகவே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஈழத் தமிழர்கள் எனும் கூற்றினை தமிழக ஊடகங்கள் கையாளும் போது, அது இலங்கையில் வாழும், யுத்தத்தை அனுபவிக்காத- கொழும்பில் வாழும் தனி நாடு விரும்பாத பல தமிழர்களையும், அச் சொல்லானது சுட்டி நிற்கிறது.
தமிழக உறவுகளே! இனி மேல் ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் இரங்க வேண்டாம். ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் இரக்கமுறுகிறீர்கள் என்றால்- அதன் அர்த்தம் போர் இடம் பெறும் போது போருக்கு ஆதரவாக இருந்த தமிழர்களையும், போர்க் காலத்தில் சுக போகங்களை அனுபவித்து ஈழத்தின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்காகவும் அனுதாபப்படுகிறீர்கள் என்று அர்த்தமாகிறது.
ஈழத்திற்காக தீக் குளித்த முத்துக்குமார்,
ஈழ மக்களுக்கு வெகு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும்,
தனி ஈழம் தான் ஒரே தீர்வென்று நீங்கள் கூறுவதன் அர்த்தம் என்ன?
தனி ஈழம் தான் தீர்வென்றால்- தனியான இலங்கை என்று தான் அர்த்தப்படுகிறது. ஆகவே தனியான இலங்கை ஒரு குடையாட்சியின் கீழ் இருப்பதையா உங்களில் அனைவரும் விரும்புகின்றீர்கள். சிந்தியுங்கள்! செயற்படுங்கள்! உங்கள் உறவுகள் அனைவருக்கும் ஈழம் எனும் பதத்திற்கான அர்த்தத்தினை தெரியப்படுத்துங்கள்.
இலங்கையில் வாழும் ஒவ்வோர் தமிழ்க் குடி மகனும் ஏதோ ஒரு வகையில் இராணுவச் சோதனைகளுக்கோ, அல்லது சுற்றி வளைப்புத் தேடுதல்களுக்கோ ஆளாகியிருப்பான்.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், யுத்தத்தில் பல உயிர், உடமைகளை இழந்தவர்கள் இலங்கையின் தமிழர்களின் பூர்விகப் பகுதியான வட கிழக்கில் வாழும் தமிழர்களே! இவர்களைத் தான் புலிகளின் காலத்தில் தமிழீழ மக்கள் என அழைத்தார்கள். இந்த மக்கள் தான் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் மக்கள்!
ஆகவே இன்று முதல் உங்கள் ஊர்களில் உள்ள ஊடகங்கள் வாயிலாக ஈழத் தமிழர்கள் என்ற பதத்தினைத் தவிர்த்து இலங்கையின் வட கிழக்குத் தமிழர்கள் என்ற பதத்தினையோ அல்லது தமிழீழ மக்கள் எனும் பதத்தினையோ நீங்கள் அறிமுகப்படுத்துங்கள். ஈழத் தமிழன் எனும் சொல்லிற்கான சரியான அர்த்தத்தினை உங்கள் உறவுகள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!
டிஸ்கி: இப் பதிவினை எழுதுவதற்குத் தூண்டு கோலாகவும், இப் பதிவிற்குரிய கருப் பொருளினையும், ஈழத்திற்கான பொருள் விளக்கம் வேண்டிய கருத்துக்களையும் என்னுடைய கடந்த பதிவினூடாக (ஈழ முஸ்லிம்களை அடக்கி வாழ நினைக்கும் ஈழத் தமிழர்கள்!) எனக்குத் தந்த சகோதரன் ‘ஓட்ட வடை நாராயணண்’ அவர்களிற்கு இந் நேரத்தில் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
69 Comments:
Vadai vandam koopi vanum
நல்ல பதிவை சொல்வதாக நினைத்து பிரதேசவாதம் தலை தூக்குவதாக இருக்கிறது நண்பா பின்னால் வருகிறேன்
நான் ஒன்று சொல்லட்டுமா ?இங்குள்ள பலரும் இதனை அபத்தமாகப் பார்க்கலாம் ..
வெள்ளையர் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது - இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றி சென்றிருந்தால் ..
இன்று இலங்கையின் இந்த பிரிவினைகள் இருந்திருக்காது. பல லட்சம் மக்களும் இறந்திருக்க மாட்டார்கள் .... !!!
ராஜபக்ஷா - சிங்கள மாநிலத்துக்கும், பிரபாகரன் தமிழ் மாநிலத்துக்கும் முதலமைச்சர்களாக இருந்திருப்பார்கள். இருவரும் மத்திய காங்கிரசோடு கூட்டணிப் போட்டு இருப்பார்கள் .... ஒருவேளை அதிமுகவின் ஈழத் தலைவராக கூட பிரபாகரன் இருந்திருக்கலாம்..
என்ன லஞ்சமும், ஊழலும் இருந்திருக்கும் ..
இப்போ மட்டும் என்ன இலங்கை சிங்கப்பூராவா இருக்கு ??
இனி இவற்றைப் பேசி என்னப் பயன் ... வாழ வழித் தேடுவதே ஒவ்வொரு ஏழையின் கனவாக இருக்கும் .... !!!
போருக்கு முகம் கொடுத்தும் சில பொருளாதார ,மாற்றுக்கொள்கையால் விரட்டப் பட்டவர்களும் கொழும்பில் தங்கியிருந்தார்கள் அவர்கள் போருக்கு எதிராக குரல் கொடுக்க முடியும் நிலை இருக்கவில்லை வெள்ளை வானும் , இனம் தெரியாத நபர்களும் கொலை செய்த வரலாறு தெரியாத நண்பா!
நானும் எதிர்பார்த்த பதிவு...
ஈழம் / தமிழீழம் இரண்டு பதத்துக்கும் அர்த்தம் வேறு....
//// ஈழத் தமிழர்கள் எனும் வட்டத்தினுள் தமிழ் மொழியினைத் தாய் மொழியாகப் பேசும் ஒட்டு மொத்த இலங்கைத் தமிழர்களுமே வந்து கொள்கிறார்கள்.//// ( இதில் முஸ்லீம் சகோதரர்களும் அடங்குவார்கள்)இந்த ஒரு வரியே படிப்பவர்களுக்கு தெளிவை கொடுக்கும் என நம்புகிறேன்...
///ஈழம் எனும் சொல், ஒரு சில இடங்களில் வியாபாரங்களை இக் காலத்தில் ஊக்குவிக்கும் சொல்லாக மாறி விட்டது. தமிழகத்தின் வார இதழகள், நாளிதழ்கள் சிலவற்றில் ஈழம் எனும் சொல், /// நக்கீரனை உதாரணமாக கொள்ளுங்கள் ))
யாரப்பா அது மைனஸ் ஓட்டு போட்டது...
இப் பதிவிற்கு மைனஸ் ஓட்டுப் போட்ட காரியவாதி,
kvrudra, நீங்கள் நேர்மையுள்ள மனிதர் என்றால், இப் பதிவில் மைனஸ் ஓட்டு குத்தும் அளவிற்கு விபரீதமான விடயங்கள் இருக்கும் என நீங்கள் கருதினால்
அன்பரே, தாங்கள் மைனஸ் ஓட்டுப் போட்ட காரணத்தை அவையோருக்குத் தெரியப்படுத்த முடியுமா?
@Nesan
Vadai vandam koopi vanum//
பாஸ் பால் கோப்பியா இல்லே, பச்ச்த் தணிக் கோப்பியா வேணும்?
@Nesan
நல்ல பதிவை சொல்வதாக நினைத்து பிரதேசவாதம் தலை தூக்குவதாக இருக்கிறது நண்பா பின்னால் வருகிறேன்//
பாஸ், சும்மா தீயைப் பற்ற வைக்கிறீங்களே,
அவ்.... முழுமையாகப் படியுங்க பாஸ்.
நண்பா ஓட்டை வடை யாரையோ உள்குத்துக் குத்த உங்களிடம் அடைக்கலம் தேடுகிறார் நீங்கள் சொல்லுவதுப்போல் எல்லாத் தமிழர்களும் போருக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் பாதிக்கப் பட்டவர்கள் அவர்களிடத்தில் ஈழம் என்றாள் வடகிழக்கு மக்கள் மட்டும்தான் என்று சொல்லுவது எப்படிச் சாத்தியமாகும்!
ஈழம் என்ற சொல் மூலம் தமிழக வியாபாரிகள் எவ்வளவு பணம் உழைக்கிறார்கள் என்று நன்கு அறிவேன் புலம்பெயர் தேசத்தில் நடக்கும் சினிமா வியாபாரத்தை தாண்டி!
@இக்பால் செல்வன்
நான் ஒன்று சொல்லட்டுமா ?இங்குள்ள பலரும் இதனை அபத்தமாகப் பார்க்கலாம் ..
வெள்ளையர் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கும் போது - இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக மாற்றி சென்றிருந்தால் ..
இன்று இலங்கையின் இந்த பிரிவினைகள் இருந்திருக்காது. பல லட்சம் மக்களும் இறந்திருக்க மாட்டார்கள் .... !!//
ஆமாம் சகோ, மாநில ஆட்சியின் கீழாவது இலங்கையர்கள் அனைவரும் ஒன்றாக இருந்திருப்பார்கள் அல்லவா,
நன்றிகள் சகோ.
@Nesan
போருக்கு முகம் கொடுத்தும் சில பொருளாதார ,மாற்றுக்கொள்கையால் விரட்டப் பட்டவர்களும் கொழும்பில் தங்கியிருந்தார்கள் அவர்கள் போருக்கு எதிராக குரல் கொடுக்க முடியும் நிலை இருக்கவில்லை வெள்ளை வானும் , இனம் தெரியாத நபர்களும் கொலை செய்த வரலாறு தெரியாத நண்பா!//
சகோ, இப் பதிவினை நீங்கள் முழுமையாகப் படிக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது,
என் அன்புச் சகோதரனே,
மீண்டும் ஒரு தடவை இப் பதிவினைப் படிக்க முடியுமா?
@கந்தசாமி.
நானும் எதிர்பார்த்த பதிவு...
ஈழம் / தமிழீழம் இரண்டு பதத்துக்கும் அர்த்தம் வேறு..//
நன்றி சகோ.
@Nesan
நண்பா ஓட்டை வடை யாரையோ உள்குத்துக் குத்த உங்களிடம் அடைக்கலம் தேடுகிறார் நீங்கள் சொல்லுவதுப்போல் எல்லாத் தமிழர்களும் போருக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் பாதிக்கப் பட்டவர்கள் அவர்களிடத்தில் ஈழம் என்றாள் வடகிழக்கு மக்கள் மட்டும்தான் என்று சொல்லுவது எப்படிச் சாத்தியமாகும்!//
அன்பிற்குரிய சகோதரா,
நான் இப் பதிவில் என்ன எழுதியிருக்கிறேன், நீங்கள் பின்னூட்டங்கள் மூலமாக என்ன எழுதுகிறீர்கள்?
ஈழத் தமிழர்கள் என்பது வரலாற்று நூல்களின் அடிப்படையில் இலங்கை எனும் தேசத்தில் காலாதி காலமாக/ பூர்வீகமாக வாழ்ந்த தமிழர்களைக் குறிக்கும்,
ஈழம் எனும் சொல்லிற்குரிய விளக்கம்- இலங்கையின் பண்டைய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட பெயர் தான் ஈழம்.
ஆகவே இவ் இடத்தில் நான் ஈழத்திற்குரிய சரியான விளக்கத்தினைக் கொடுத்துள்ளேன், ஈழம் என்றால் வட கிழக்கு மக்களை மட்டும் தான் குறிக்கும் என நான் இங்கே ஒரு வரி கூட எழுதவில்லை.
எனக்கு இதில் பல குழப்பங்கள் இருக்கு நண்பா வடகிழக்கைத்தாண்டி மலையகத்தமிழர்கள் ஒட்டி உறவாடும் சகோதர்களை பிரித்துப் பார்க்கச் சொல்லுவது போல் இருக்கிறது நான் யாழ்ப்பாணத்தவன்,
திருகோணமலையில் வாழ்ந்தவன் என்று பொதுவில் ஈழத்தவன் என்பதை தாண்டி எப்படி பாஸ் சொல்லுவது! சில வியாபாரிகளுக்காக எதைச் சாடுவது ஓட்டைவடையின் பார்வையில் நான் முரன்படுகின்றேன் ! ஏங்களுக்கு தீர்வு வரும்வரை இப்படி வார்த்தையாலங்களுக்கு மயங்குவதா?
யாருடைய பதிவையும் படிக்காமல் பின்னுட்டம் இடுவதில்லை நான் இந்தப் பதிவை மீண்டும் மீண்டும் படித்தேன் கருத்தில் சில வசணங்களில் எனக்கு முரண்பாடு நண்பா! பிழையாக உங்களுக்கு என் கருத்துக்கள் இருந்தால் மன்னித்துவிடுங்கள். இந்த பதிவில் நான் கிரேட் எஸ்கேப் பாஸ் ஒட்டுப் போட்டுவிட்டேன்!
நேசன் @
///எல்லாத் தமிழர்களும் போருக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் பாதிக்கப் பட்டவர்கள் ////நண்பா நீங்கள் சொல்வது உண்மை தான்..
////அவர்களிடத்தில் ஈழம் என்றாள் வடகிழக்கு மக்கள் மட்டும்தான் என்று சொல்லுவது எப்படிச் சாத்தியமாகும்! ///
நண்பா இந்த பதிவு பற்றி சுருங்க கூறின்
ஈழம் என்பது முற்காலத்தில் இலங்கை குறிக்கும் ஒரு சொற்பதம். ஆக அது வடகிழக்கு சார்ந்த பெரும்பான்மையாக தமிழர்கள் வசிக்கும் பகுதியை மட்டும் குறிக்கும் சொல் என்பது தவறு...
ஈழ தமிழர்கள் என்பவர்கள் இலங்கையில் தமிழ் மொழியை தம் தாய் மொழியாய் கொண்ட அனைவரும்.....
// வார இதழகள், நாளிதழ்கள் சிலவற்றில் ஈழம் எனும் சொல், அதற்குரிய அர்த்தத்தினைச் சரியாகப் புரிந்து கொள்ளாத காரணத்தால், வியாபாரம் கருதி, வியாபார நோக்கோடு கூடிய ஒரு வருமான மீட்டும் பதமாகி விட்டது.//
மறுக்க முடியாத உண்மை அண்ணா,
இந்திய பத்திரிகைகள் சில வற்றுக்கு ( உதாரணம்- நக்கீரன்) ஈழம் என்பது பணம் காய்க்கும் மரம் போன்றது.
முதலில் இப்பதிவுக்கு மைனஸ் ஓட்டுப்போட்ட அன்பரை வன்மையாக கண்டிக்கிறேன்! இந்த மைனச் ஓட்டு எதனைக் குறிக்கிறது என்றால், இலங்கையில், பொராட்ட சூழலுக்கு வெளியே, எமக்கு தனிநாடு தேவையில்லை, எதையும், யாரையும் அட்ஜஸ் பண்ணி வாழ்வோம் என்ற மனோ நிலையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற வரலாற்று உண்மையினை, போராட்டத்துக்கு பங்களிப்பு வழங்காமல் இருந்துவிட்டோமே, அதை ஒருத்தன் சுட்டிக் காட்டிவிட்டானே என்ற மன உளைச்சலில் போடப்பட்டதுதான் இம் மைனஸ் ஓட்டு!
வேறு வழியில்லாமல் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தோம்! உண்மையிலேயே எங்களுக்கு தனி நாடு ஒன்று தேவை தான் என்று கருதக்க்கூடிய ஒருவர் இவ்வாறு மைனஸ் ஓட்டு போட்டிருக்க மாட்டார்!
இதனை இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமானல் - தமிழக நண்பர்கள் மத்தியின் மானம் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் போடப்பட்டதாகும்! பாவம் அந்த நபர்!!
எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும் - மைனஸ், போராட்ட
வணக்கம் நேசன்!
நான் யாரையோ உள்குத்து குத்த நிருபனிடம் அடைக்கலம் தேடுவதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்!
நான் இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை! நீங்கள் என் மதிப்புக்குரியவர்!
நேசன், நானும் ஒரு ப்ளாக் வைத்திருக்கிறேன்! நான் ஏன் அதில் உள்குத்து போடக்கூடாது? கடந்த மாத கடைசியில் இரண்டு உள்குத்துக்கள் அதில் போட்டேனே!
இனியும் தேவைப்பட்டால், எனது ப்ளாக்கில் தான் உள்குத்துக்கள் போடுவேனே தவிர, நிருபனையோ வேறு எவரையோ தூண்டிவிட மாட்டேன்!
நான் ஒரு பாதுகாப்பான நாட்டில் இருந்து கொண்டு, பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் இடத்தில் இருக்கும் நிருபனை, இப்படி ஒரு சர்ச்சைக்குரிய பதிவை போடுமாறு தூண்டுவேனா?
உண்மை என்ன?
நிருபனின் நேற்றைய பதிவு ஈழத்தமிழர்கள் ஈழத்து முஸ்லிம் மக்களை அடக்கியாள நினைக்கிறார்கள் என்று இருந்தது! ஆனால் இலங்கையில் உள்ள எல்லாத்தமிழர்களும் முஸ்லிம்களை வெறுக்கவில்லை! வடக்கு கிழக்குக்கு வெளியே பல இடங்களில் தமிழர்களும்., முஸ்லிம்களும் மிகுந்த ஒற்றுமையாக வாழ்கிறார்கள்!
எனவே இதனை சுட்டிக்காட்டி நிருபனுக்கு பலத்த கண்டனம் தெரிவிக்க விரும்பினேன்! அதற்குமுன்னர் நிருவிடம் ஒரு கோரிக்கை வைத்தேன்,
அது பின்வருமாறு,
நிரு உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள்! முதலில் நீங்கள் ஈழம் என்ற சொல்லுக்கு விளக்கம் தர வேண்டுகிறேன்! பலபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஈழம் என்பது இலங்கையில் வடகிழக்கை குறிக்கும் என்றும், தமிழீழத்தை குறிக்கும் என்றும்!
தமிழகத்தில் பேசும் போது ஈழத்தமிழர் என்றே பேசுகிறார்கள்! அவர்கள் ஈழத்தமிழர்கள் என்று அனுதாபம் காட்டுவது ஒட்டுமொத்த இலங்கை தமிழர்கள் மீதுமாகும்!
அதாவது யுத்தத்தால் ஒரு போதுமே பாதிக்கப்படாத தமிழர்கள், ஷெல்லடி என்றால் என்னவென்று தெரியாத தமிழர்கள், பங்கர் வெட்டி அறியாத தமிழர்கள், சிங்களவனோடு சேர்ந்து வாழ்தல் குற்றமில்லை என்று கருதும் தமிழர்கள், அவர்களோடு சேர்ந்து பைலா போடும் தமிழர்கள்
இப்படி பலவிதமான தமிழர்கள் இலங்கையில் இருக்கிறார்கள்!
ஆனால் இவர்கள் அனைவருமே ஈழத்தமிழர்கள் என்றே தமிழக மக்களால் அழைக்கப்படுகின்றனர்!
தமிழக மக்கள் காட்டும் அனுதாபம் நான் சொன்ன மேற்படி தமிழர்களுக்கும் போய்ச்சேருகிறது!
முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்களின் தீக்குளிப்பு மேற்சொன்ன தமிழர்களுக்காகவும் தானா?
எனக்கு ஒரே குழப்பமா இருக்கு?
நிரு, இப்பதிவின் தலைப்பு ஈழத்தமிழர்கள் ஈழத்து முஸ்லிம்களை அடக்கி வாழ நினைப்பதாக சொல்கிறது!
நீங்கள் சுட்டும் ஈழத்தமிழர்கள் என்போர் யார்? கண்டி நுவரெலியா தமிழர்களுமா?
பதில்?
-----------
இவ்வாறு ஈழத்தமிழர்கள் என்று நீிங்கள் யாரைக்குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்டு அதற்கு நிரு சொல்லும் பதிலை வைத்து, எனது கண்டனங்களை வெளியிட இருந்தேன்!
ஆனால் நிரு, நான் சொன்னதை மிக லாவகமாக புரிந்துகொண்டு, அதில் வந்த ஒரு இன்ஸ்பிறேஷனால்தான், இன்றைய பதிவை தயார் செய்திருக்க வேண்டும்!
மற்றும் படி நான், இப்படியெல்லாம் போடும்படி நிருவுக்கு சொல்லவே இல்லை! நேசன் நீங்கள் இதை நம்பியே ஆகவேண்டும்! இதுதான் உண்மை!
மொத்த இலங்கையும் சங்ககால இலக்கியப்படி ஈழம் என்றே அழைக்கப்படுகிறது.எனவே மொத்த இலங்கையும் தமிழர்களின் பூர்வீகம் என்ற நிலையில் இனிமேல் விவாதிக்கலாம்.இதனையும் தாண்டி குமரிக்கண்டம் தியரியாக கூட இஸ்ரேல்காரன் பைபிளை முன்னிலைப்படுத்துவது மாதிரியும் சிந்திக்க கற்றுக்கொள்ளவும் சிங்களவர்கள் இந்தியாவின் ஒரிஸ்ஸா மாகாணத்திலிருந்து குடி பெயர்ந்தவர்கள் என்ற நிலையையும் முன்னிலைப்படுத்தலும் அதற்கான சான்றுகள் திரட்டுவதுமே புதிய சிந்தனைகளை தோற்றுவிக்கும்.
இக்பால் செல்வன்!இப்போதும் எழுதப்படாத சட்டமாக இலங்கை இந்தியாவின் ஒரு பகுதிதான்:)இல்லைன்னா பயந்தடித்து ஜி.எல்.பெருசும்,ராஜபக்சேவும் டெல்லி தர்பாருக்கு கூப்பிட்ட குரலுக்கு ஓடுவார்களா?
சகோ நிருபன்.பதிவின் சாரம் மேம்பாடாக இருந்தாலும் தலைப்புக்களை அடிக்கடி கோட்டை விடுவதை அவதானிக்கிறேன்.
ம்ம் எல்லாம் என்பது முழு இலங்கையையும் அந்தக்காலத்தில் குறித்தது...ஆனால் இப்போ அவ்வாறு இல்லை சகோ..
ம்ம் எல்லாம் என்பது முழு இலங்கையையும் அந்தக்காலத்தில் குறித்தது...ஆனால் இப்போ அவ்வாறு இல்லை சகோ..
present
பகிர்வுக்கு நன்றி மாப்ள!
மிக நல்ல பதிவு சகோ
ஈழம் / தமிழீழம் சம்பந்தமான பல விளக்கங்களை தந்துள்ளீர்கள்
"விரிவாகப் பார்க்கையில் தமிழகத்தின் சங்க கால இலக்கியப் பாடல்களில் வரும் கல் வெட்டுக்களின் அடிப்படையில் ஈழத்து நாகனார், ஈழத்து குடுமிகன், ஈழம் எனும் சொற் பிரயோகங்கள் காணப்பட்டன".
வரலாறும் உங்களுக்கு கைவந்த கலையோ சகோ
தகவலுக்கு நன்றி.....
நிரு நண்பர்கள் சிலர் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து மேலே போட்ட சில கமெண்டுகளை நீக்கியுள்ளேன்! - உங்கள் நன்மை கருதி!!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
பாஸ், அவை பதிவிற்குத் தொடர்புடைய கருத்துக்கள் பாஸ்,
அவற்றால் ஏதும் சிக்கலகள் உருவாகாது என்று நினைக்கிறேன்.
நீங்கள் எவரையும் சாடாது பொதுவான ஒரு கருத்தினைத் தான் இங்கே முன் வைத்துள்ளீர்கள்.
நண்பருக்கு வணக்கம்...
தாங்கள் பதிவிடும் நேரம் என் நேரத்திற்கு எதிர்பதமாய் இருப்பதால் சரியான நேரத்தில் தங்களுக்கு பின்னூட்டம் இடமுடியவில்லை...
தாமதமாக வரும்போது அதிகமான பின்னூட்டங்கள் ஈடப்பட்டு அந்த பதிவு விரிவாக அலசப்பட்டு விடுகிறது. அதன் பிறகு நான் தரும் பொருள் தேவையில்லாத ஒண்றாகிவிடும்...
ஈழம், தமிழீழம் அழகாக பிரித்து காட்டியுள்ளீர்.
தமிழகத்தில் சில அரசியல் தலைவர்களுக்கும் ஊடங்களுக்கும் இந்த வரலாறு தெரியாததது வருத்தப்படக்கூடிய விஷயம்தான்.
தனி தமிழீழம் விரைவில் மலர ஆண்டனை வேண்டுவதை விட எனக்கு வேறு வழித்தெரியவில்லை...
நன்றி நண்பரே.. தொடர்ந்து சந்திப்போம்..
சரியான வாதம்..ஈழதமிழர்கள் என்று பொதுவாக சொல்வதில்தான் எத்தனை விஷயங்கள் புதைந்து கிடைக்கிறது...
புதிய தகவல்கள் நிறைய தெரிந்து கொண்டேன்..ஈழம் இத்தனை இருக்கா
கொழும்பில் வாழும் தமிழர்கள் எல்லாரும் தனிநாடு விரும்பாதவர்களோ (அவர்களிலும் வடக்கிலிருந்து வந்தோர் அதிகம்!) அல்லது வடக்கு கிழக்கில் வாழ்ந்தோர் எல்லாருமே தனி நாட்டை விரும்பினார்கள் என்றோ கூற முடியாது! ஒட்டு மொத்தமாக கொழும்பிலிருப்போரைக் குறை கூறுவது சரியல்ல! - ஆனால் கொழும்புத் தமிழ் என்று தனியாக தம்மைக் கருதும் ஒரு இனம் இருக்கிறது! அவர்கள் பற்றிப் பேச இங்கு அவசியமில்லை! - அவர்கள் தான் 'டமில்' படிப்பதில்லையே!
அசத்தல் இடுகை. நான் இப்படியொரு பதிவை எழுத எப்பவோ நினைத்தேன் ஆயினும் இருந்த சில சூழல் என்னைத் தடுத்தது. அடுத்தது ஜீயின் கருத்தையும் ஏற்கிறேன்.
நல்ல விளக்கம்..
ஜீ நீங்கள் சொல்வது 100% உண்மை...
நிறைய புது தகவல்களா இருக்கே...!!!
ஊடகங்களில் வரும் செய்திகள் எல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்கும் என் போன்றோருக்கு நீங்கள் தரும் செய்திகள் ஆச்சரியம் தருகிறது, இதுவரை ஈழத்தில் இருப்பவர் எல்லாம் ஒரே தமிழர்கள் என்றும், அவர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மட்டும் பிரச்சனை என்றும் நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால் இந்த பதிவை படித்த பிறகு தமிழர்களுக்கு இடையே கூட பிரச்சனைகள் இருக்கும் என்றே அனுமானிக்கிறேன், அதிலும் தமிழை விரும்பாத தமிழர்கள் என்றொரு கூட்டம் இருப்பதை கண்டால் நெஞ்சு கொதிக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள் சகோ வாழ்த்துக்கள்
உங்களின் வாதம் சரி என்றே தோன்றுகிறது..
நேற்று இக்பால் அவர்களின் பதிவும் படித்தேன்.அதேபோல் உங்கள் பதிவும் விளக்கமும் தெளிவும் புரியாதவர்களையும் புரிய வைக்கிறது.
ஆனால் எல்லாமே கை தவறிப்போய்விட்ட விஷயம்.இனிச் செய்யவேண்டிய விஷயங்களோடு கை கோர்த்து நிற்போம்.
நிறைவான தேடலுக்கும் ஆர்வத்திற்கும் உங்களுக்கும் வடையண்ணாவுக்கும் நன்றி !
நல்ல பதிவுக்குக்கூட மைன்ஸ் ஓட்டு போடும் கலாச்சாரம் இருப்பது மனதை கனக்க வைக்கிறது
நல்ல ஒரு அலசல்
நல்ல ஒரு அடி
பாஸ் உங்களுடைய கடந்த இரு பதிவுகள் படிக்கவில்லை.. நேரம் போதாமைதான் காரணம்.. மேலோட்டமாக படித்துவிட்டேன் இப்போதைக்கு ஓட்டு மட்டும் போட்டுச்செல்கிறேன் .... ஆறுதலாக வந்து முழுவதும் படிக்கிறேன்
@வணக்கம் ஓட்டைவடையாரே! ஒவ்வொருத்தரின் வலையைப் படிக்கும் போதும் அவர்களின் முன்னால் பதிவின் தொடராக வரும் கருத்துக்களை உள்வாங்கித்தான் என் தேடல்களை ,கருத்துக்களை பொதுவில் வைக்கின்றேன் அப்படித்தான் உங்கள் வலையைப் படிப்பதற்கும், நாற்றைப் படிப்பதற்கும் இடையில் என் பார்வை மாறுபடுகிறது .அதன் நிமித்தம்தான் உங்கள் வலையில் போடாமல் ஏன் இடம்மாறிப் போனீர்கள் என்ற தொனியில்தான் நிரூவிடம் உள்குத்து பதம் பாவித்து கேட்டது . வலையில் கருத்து மோதல்களுக்கு இடம் உண்டு உண்மையில் சிலரின் பதிவில் தொலைந்து போன அவலங்கள், தப்பியோடி வந்த காலகட்டங்கள் வேறுபடுகிறது எங்களின் உணர்வுகள் என்பதன் ஊடாக சில கருத்துக்களை நல்ல நண்பர்களிடம் காட்டமாகவும் . சிலவேளைகளில் குறும்பாகவும் பின்னுட்டம் போடுகின்றேன். நேற்றைய பதிவில் நீங்கள் கூறி அல்லது நிரு புரிந்து கொண்டதை நான் விளங்கிக் கொண்டது மாறுபடுகிறது அதனால்தான் அப்படி கேட்டேன் !
உண்மையில் ஈழம் என்ற வார்த்தையில் மற்றவர்கள் கதி என்ன ?நுவரெலியா,கண்டியில் இருப்பவர்களும் மறைமுகமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதை உங்களிடம் தாழ்மையாக கூறிக்கொள்கிறேன்! @ஜி இன் கருத்தையும் உள்வாங்குகிறேன் டமில் படிக்காதவர்களுக்காக தமிழில் படித்து பலரில் சிலர் இன்னும் எங்கள் உறவுகளுடன் பூசாவிலும் வெலிக்கடையிலும் இருப்பது நீங்கள் அறியாது அல்ல !!
எத்தனை காலம்தான் நாம் பிரிந்து வெள்ளரசுகளிடம் சோரம் போவது!
நல்ல நண்பராக உங்களை எப்போதுமே புரிந்து கொண்டிருக்கிறேன்.
உங்களை நம்புகின்றேன்!
எனது கருத்துக்கள் உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்!
நட்புடன் நேசன்!
தெளிவான விளக்கம் சகோ .வாழ்த்துக்கள்.
அநேக புதிய செய்திகளை அறிந்து கொண்டேன்!
உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு பக்கத்தில் ஒரு புள்ளியாக துருத்திக் கொண்டிருக்கும் இலங்கையில் அதிலும் இலங்கைக்கு உள் இருக்கும் ஈழத்தில் இவ்வளவு இடியாப்ப சிக்கல்களா!
பல புதிய செய்திகளையும் தெரிந்து கொண்டேன்!
பகிர்தலுக்கு நன்றி!
@ராஜ நடராஜன்
சகோ நிருபன்.பதிவின் சாரம் மேம்பாடாக இருந்தாலும் தலைப்புக்களை அடிக்கடி கோட்டை விடுவதை அவதானிக்கிறேன்.//
தலைப்போடு தொடர்புடைய விடயங்களும் பதிவில் வருகின்றன தானே சகா.
@ஜீ...
கொழும்பில் வாழும் தமிழர்கள் எல்லாரும் தனிநாடு விரும்பாதவர்களோ (அவர்களிலும் வடக்கிலிருந்து வந்தோர் அதிகம்!) அல்லது வடக்கு கிழக்கில் வாழ்ந்தோர் எல்லாருமே தனி நாட்டை விரும்பினார்கள் என்றோ கூற முடியாது! ஒட்டு மொத்தமாக கொழும்பிலிருப்போரைக் குறை கூறுவது சரியல்ல! - ஆனால் கொழும்புத் தமிழ் என்று தனியாக தம்மைக் கருதும் ஒரு இனம் இருக்கிறது! அவர்கள் பற்றிப் பேச இங்கு அவசியமில்லை! - அவர்கள் தான் 'டமில்' படிப்பதில்லையே!//
சகோதரம் நான் கூற வரும் கருத்தினை, நீங்கள் தவறாகப் புரிந்து விட்டீர்கள் சகோ. நான் கொழும்பில் வாழும் எல்லோரையும் குறை கூறவில்லை. நான் இங்கே விளக்கியிருப்பது இப்படித் தான்.
//ஆகவே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஈழத் தமிழர்கள் எனும் கூற்றினை தமிழக ஊடகங்கள் கையாளும் போது, அது இலங்கையில் வாழும், யுத்தத்தை அனுபவிக்காத- கொழும்பில் வாழும் தனி நாடு விரும்பாத பல தமிழர்களையும், அச் சொல்லானது சுட்டி நிற்கிறது.//
இங்கே தனி நாடு விரும்பாத பல தமிழர்களையும் என்று சுட்டும் போது,
ஏனைய தமிழர்கள் விரும்புகிறார்கள் எனும் பதம் தொக்கி நிற்கிறது சகோ.
கொழும்புத் தமிழ் பற்றிய அருமையான விளக்க்கத்திற்கு நன்றி சகோ.
@Nesan
@வணக்கம் ஓட்டைவடையாரே! ஒவ்வொருத்தரின் வலையைப் படிக்கும் போதும் அவர்களின் முன்னால் பதிவின் தொடராக வரும் கருத்துக்களை உள்வாங்கித்தான் என் தேடல்களை ,கருத்துக்களை பொதுவில் வைக்கின்றேன் அப்படித்தான் உங்கள் வலையைப் படிப்பதற்கும், நாற்றைப் படிப்பதற்கும் இடையில் என் பார்வை மாறுபடுகிறது .அதன் நிமித்தம்தான் உங்கள் வலையில் போடாமல் ஏன் இடம்மாறிப் போனீர்கள் என்ற தொனியில்தான் நிரூவிடம் உள்குத்து பதம் பாவித்து கேட்டது .//
சகோதரம், என் பதிவில் தானே ஈழ முஸ்லிம்கள், ஈழத் தமிழர்கள் பற்றிய விவாதத்தினை முன் வைத்திருந்தேன்,
அந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் வழங்கிய தமிழக உறவு ஒருவர், ஈழத் தமிழர், தமிழர் தாயகப் பகுதித் தமிழர் எனும் பதங்களிற்கான வித்தியாசம் தெரியாது பின்னூட்டமிட்டிருந்தார்.
அப் பின்னூட்டத்தைப் படித்த ஓட்ட வடையார்,
என்னிடம் ஈழத் தமிழர் பற்றிய விளக்கத்தை நிரு நீங்கள் முதலில் கொடுத்தால் தான் பதிவினை எல்லோரும் புரிந்து கொள்வார்கள் எனப் பின்னூட்டம் இட்டார்.
ஆகவே என்னுடைய இப் பதிவிற்கான கருப் பொருளை அல்லது பதிவிற்குரிய விடயத்தினை நண்பர் ஓட்ட வடை வழங்கிய பின்னூட்டத்திலிருந்து தான் எடுத்தேன் என நான் இங்கே சொல்லுவதற்கான அர்த்தம் இது தான் சகோ.
இங்கே எந்த உள் குத்தும் இல்லை. பலருக்குத் தெரியாத ஒரு விடயத்தை சீரிய முறையில் வெளிப்படுத்தவே இப் பதத்தினைக் கையாண்டேன்.
@Nesan
வலையில் கருத்து மோதல்களுக்கு இடம் உண்டு உண்மையில் சிலரின் பதிவில் தொலைந்து போன அவலங்கள், தப்பியோடி வந்த காலகட்டங்கள் வேறுபடுகிறது//
என் பதிவினை நீங்கள் சுட்டுகிறீர்களா?
இல்லை சிலரின் என்று வேறு யாரையும் சுட்டுகிறீர்களா என்று தெரியவில்லை. என் பதிவில் காலங்களை எழுதுகையிலோ, அல்லது வரலாறுகளைத் தொகுக்கையில் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஒருவரின் உதவியினையும், புவியியல் ஆசிரியர் ஒருவரின் உதவியினையும் பெற்றுத் தான் வரலாற்றுத் தகவல்களைத் தொகுப்பேன் என என்னுடைய ஈழத்தில் சாதியம் பதிவில் எழுதியிருந்தேன்.
அதே போல என் பதிவுகளில் ஏதாவது விடயங்களில் தவறுகள் என்று சொல்லுமிடத்து, நான் யாருடனும் பிடிவாதம் பிடிப்பது கிடையாது, அக் கூற்றில் உண்மையிருப்பின் உடனடியாகவே அந்த விடயங்களை மாற்றியிருக்கிறேன். இதற்கு நன்றிகளைத் தவறினைச் சுட்டிக் காட்டும் நண்பர்களுக்கு உடனுக்குடன் பின்னூட்டங்கள் வாயிலாகவும் சொல்லியிருக்கிறேன்.
ஆகவே என் பதிவில் கால கட்டங்கள் வேறுபடாது சகோ. அப்படி ஏதாவது கால கட்டங்கள் வேறுபட்டால் சுட்டிக் காட்டுங்கள்- நியாயமான கருத்துக்கள் என்றால் திருத்துகிறேன்.
@Nesan
உண்மையில் ஈழம் என்ற வார்த்தையில் மற்றவர்கள் கதி என்ன ?நுவரெலியா,கண்டியில் இருப்பவர்களும் மறைமுகமாக யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதை உங்களிடம் தாழ்மையாக கூறிக்கொள்கிறேன்! @ஜி இன் கருத்தையும் உள்வாங்குகிறேன் டமில் படிக்காதவர்களுக்காக தமிழில் படித்து பலரில் சிலர் இன்னும் எங்கள் உறவுகளுடன் பூசாவிலும் வெலிக்கடையிலும் இருப்பது நீங்கள் அறியாது அல்ல !!
எத்தனை காலம்தான் நாம் பிரிந்து வெள்ளரசுகளிடம் சோரம் போவது!
நல்ல நண்பராக உங்களை எப்போதுமே புரிந்து கொண்டிருக்கிறேன்.
உங்களை நம்புகின்றேன்!//
அன்புக்குரிய சகோதரம்,
இப் பதிவின் மேலிருந்து கீழாக நான்காவது பந்தியில் சிகப்புக் கோடுகளிடப்பட்ட இரண்டு வரிகளில் ஈழம் என்றால் என்ன என்பதற்குரிய அர்த்தத்தினை விளக்கியுள்ளேன்.
அத்தோடு இன்னோர் கூற்றினை;
’’அதாவது இலங்கையில் வாழும் தமிழர்கள் அல்லது ஈழத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களே! எனும் கூற்றினை
//////
இலங்கையில் வாழும் ஒவ்வோர் தமிழ்க் குடி மகனும் ஏதோ ஒரு வகையில் இராணுவச் சோதனைகளுக்கோ, அல்லது சுற்றி வளைப்புத் தேடுதல்களுக்கோ ஆளாகியிருப்பான்.///////
இவ் வரிகள் மூலமாக விளக்கியுள்ளேன்.
நான் கூற வருவதை திரும்பத் திரும்ப நீங்கள் தவறாகவே புரிந்து கொள்கிறீர்கள்.
ஈழத் தமிழர்கள்- அது ஈழம் என அழைக்கப்படும் இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த தமிழர்களையும் குறிக்கும் பதமாகும்.
தமிழக மக்கள் இப்போது அனுதாபப்படுகையில் யாருக்காக அனுதாபப்பட்டார்கள்?
முத்துக்குமார் யாருக்கா தீக்குளித்தார்?
சீமான் யாருக்காக பேசினார்?
’இலங்கையின் வட கிழக்கில் வாழ்ந்த மக்களை முதன்மைப் படுத்தித் தானே/////////
அப்படி இருக்கையில் ஏன் யுத்தத்தால் பாதிக்கப்படாத, ஈழத்தில் வாழும்(இலங்கையில் வாழும்) ஒட்டு மொத்த தமிழர்களிற்கும் ஈழம் எனும் அடை மொழி கொடுத்து அனுதாபப்பட வேண்டும்?
வட கிழக்கில் வாழும் தமிழர்களை அல்லது தமிழீழம் என புலிகளால் பிரகடனம் செய்யப்பட்ட வரை படத்தில் உள்ள தமிழர்களைச் சுட்ட ஈழம் எனும் சொல்லினை உபயோகிப்பது சரியா?
இது தான் என் பதிவின் கருப்பொருளிற்கான கேள்வியும், விடைகளும்.
நான் சொல்வது ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் சிந்துகிறார்கள் எனும் போது, அது கொழும்பில் வாழும் டமில் விரும்பிகளையும் சேர்க்கச் சொல்லி அல்ல,
ஈழத்திற்கான வரைவிலக்கணத்தினைப் புரிந்து
தமிழர் தாயக மக்கள்/ தமிழீழ மக்கள் என வட கிழக்கு மக்களை அழைக்கச் சொல்லியும்,
ஈழத்திற்கான அர்த்ததினைப் புரிந்து கொண்டு, அப் பதத்தின் ஊடாக முழு இலங்கை மீதும் அனுதாபப்படுவதைத் தவிர்க்குமாறும் தான் நான் பதிவில் எழுதியுள்ளேன்.
புரிதல் என்பது இதயத்திலிருந்து வர வேண்டும்!ஏதோ வந்தோம் படித்தோம் என்று இல்லாமல் ஆழ்மான சிந்தனையுடையவர்கள் கருத்து மோதலில் ஈடுபடுவது வரவேற்கக் கூடியதே!எனினும் ஒரு சில தாய்த் தமிழக உறவுகள் "நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்"என்பதாகவே அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகிறார்கள்.சிலருடன் பல தடவைகள் மோதல்(கருத்து) ஏற்பட்ட அனுபவம் உண்டு!இங்கும் கருத்துரைத்திருக்கிறார்கள்.அது போக ஓட்ட வட ஏன் இரண்டு தினங்களாக அடுப்பு எரிக்கவில்லை?(வடை சுட)இணைப்பில் கோளாறா?
///இலங்கைத் தமிழர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மற்றும்
பிரித்தானியர் காலத்தில் இந்தியாவிலிருந்து மலையகத்திற்கு, தொழிலாளர்களாக கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவளி அல்லது மலையகத் தமிழர்களும் இணைந்து கொள்கிறார்கள்///
அப்படியா?
///தனி ஈழம் தான் தீர்வென்றால்- தனியான இலங்கை என்று தான் அர்த்தப்படுகிறது///
ஈழம், தமிழீழம் என்ற வித்தியாசம் தெரியாமல் போகிற போக்கில் யாரும் பயன்படுத்தவில்லை நிரூபன். ஈழம்=இலங்கை என்கிற அர்த்தம் எல்லாம் இப்போது நடைமுறையிலிருக்கிறதா என்ன? முன்னொருகாலத்திலே ஈழம் என்றால் இலங்கை என்று வழங்கி வந்தார்கள். இன்றைக்கு ஈழம் என்பது தமிழீழம் என்ற அர்த்தத்திலேயே பார்க்கப்படுகிறது, முக்கியமாக அரசியல், இலக்கிய, எழுத்து வட்டங்களில். ஏன், இலங்கையில் தமிழ் கொஞ்சம் தெரிந்த ஒரு ராணுவவீரரிடம் ‘நான் ஒரு ஈழத்தமிழன்’ என்று சொல்லித்தான் பாருங்களேன்
எம்மவர்களை வைத்து இன்னும் அரசியல் செய்யும் தமிழக அரசியல்வாதிகள் இன்னும் எங்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. பின் அது இது எண்டு வந்திருவாங்க! என்னதான் இருந்தாலும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள்தான் துன்பங்கள் அனுபவித்தார்கள் என்றில்லை எல்லா தமிழர்களுக்கும் எங்கேயும் கஸ்டம்தான்!
இப்போது புரிந்து கொள்கிறேன் நண்பா! இன்னொரு விடயம் தப்பியோடிவந்தகாலகட்டம் வேறு படுகிறது , அவலங்கள் என்பது. நான் வெளிநாடு வந்த காலகட்டத்திற்கும் ஓட்டைவடையார் வந்தகாலகட்டத்திற்கும் இடையில் என் மனதில் , கருத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத்தான் குறிக்கும் முகமாகத்தான் வேறுபடுகிறது என்கின்ற நோக்கில் கூறினேன் .மற்றும்படி உங்கள் பதிவிலோ ,நண்பர் வடையண்ணா பதிவிலோ .,அல்லது மற்றவர்கள் யாரிடமும் நான் காலகட்டம் வேறுபடுகிறது என்று வாதாடவும்மாட்டன்.ஏனெனில் எங்கள் வலிகளை ஓவ்வொருத்தர் பார்வையில் சொன்னாலும் சாரம் பட்ட வேதனைகளும் இழப்புக்களுமே முக்கியம். இன்னொண்று நண்பா நீங்கள். நாராயணன் ஆறியாத ஒன்றும் இல்லை என் கருத்துக்களை பணியில் இருந்துகொண்டுதான் இரண்டு தோனியில் கால்வைத்தது போல் கருத்துக்களை இடும்போது விபரமாக ஆறஅமர இருந்து பின்னூட்டம் போடுவதற்கு நேரச்சிக்கல் விருப்பா,கடமையா என்றாள் இந்த ஏதிலிக்கு இரண்டும் முக்கியம்..இதைப் புரிந்த நீங்களே என் சிறு பின்னூட்டத்திற்கு இத்தனை தூரம் மினக்கெடனுமா?
எது எப்படியோ இப்பதிவில் உங்களை அதிகம் சிரமப்படுத்திவிட்டேன் என உனர்கின்றேன் அதுக்காக மன்னித்துவிடுங்கள் நண்பா நீரூபனே!வடையாரிடமும் சேர்த்தே இந்த மன்னிப்பை கோருகின்றேன்!
நட்புடன் நேசன்!!
@கிருத்திகன்
ஈழம், தமிழீழம் என்ற வித்தியாசம் தெரியாமல் போகிற போக்கில் யாரும் பயன்படுத்தவில்லை நிரூபன். ஈழம்=இலங்கை என்கிற அர்த்தம் எல்லாம் இப்போது நடைமுறையிலிருக்கிறதா என்ன? முன்னொருகாலத்திலே ஈழம் என்றால் இலங்கை என்று வழங்கி வந்தார்கள். இன்றைக்கு ஈழம் என்பது தமிழீழம் என்ற அர்த்தத்திலேயே பார்க்கப்படுகிறது, முக்கியமாக அரசியல், இலக்கிய, எழுத்து வட்டங்களில். ஏன், இலங்கையில் தமிழ் கொஞ்சம் தெரிந்த ஒரு ராணுவவீரரிடம் ‘நான் ஒரு ஈழத்தமிழன்’ என்று சொல்லித்தான் பாருங்களேன்//
சகோதரம், ஈழம் எனும் சொல் இன்று தமிழீழம் என்ற அர்த்தத்தில் வழக்கிலிருக்கிறது என்றால்,
ஈழத்து மக்களோ, அல்லது முன்னாள் போராட்ட அமைப்புக்களோ ஈழம் எனும் சொல்லினைப் பயன்படுத்தாது தமிழீழம், எனுன் சொல்லினைத் தானே பயன்படுத்தினார்கள்.
விடுதலைப் போராட்ட பாடல்களில் கூட தமிழ் ஈழ...
ஊடகங்களில் அந் நாளில் தமிழர் தாயக அல்லது தமிழீழ மக்கள் எனும் சொற்களினைத் தானே பயன்படுத்தினார்கள்.
தமிழக அரசியல் இலக்கிய எழுத்து வட்டங்களில் ஈழம் என்பது தமிழீழ மக்களைக் குறிக்கத் தான் பயன்படுகிறது, உண்மை சகோ. அதனைப் பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன், தமிழக உறவுகள் பார்வையில் வடக்கு கிழக்கு பகுதியினை விளிக்கத் தான் ஈழம் எனும் சொல்லினைப் பயன்படுத்துகிறார்கள் என்று.
இப்போது எனது கேள்வி,
ஈழத் தமிழன் எனும் சொல்லினுள் மலையகத் தமிழர்கள், இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் வந்து கொள்ள மாட்டார்களா?
இலங்கையில் ஈழம் எனும் சொல்லிற்கான அர்த்தம் ‘இலக்கிய அடிப்படையில் முழு இலங்கையினையும் தானே குறிக்கப்பயன்படுகிறது.
அது மருவி இருந்தாலும், ஈழத்தினை மையமாகக் கொண்டு எழுச்சி பெற்ற போரிலக்கியங்கள் ஈழத்திற்குப் பதிலாக
தமிழீழம் எனும் பதத்தினைத் தானே கையாண்டன சகோதரம்.
///ஈழத் தமிழன் எனும் சொல்லினுள் மலையகத் தமிழர்கள், இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் வாழும் தமிழர்கள் வந்து கொள்ள மாட்டார்களா?///
இது ஒரு மிகப்பெரிய அரசியல் கேள்வி நிரூபன். ஒரு குறித்த பிரதேசத்தைமட்டும் தலமையாக முன்னிறுத்தி இயங்கிய முன்னைய தமிழ் அரசியல்வாதிகள் எப்போதுமே மலையகத் தமிழர்களைத் தமிழர்களாக நினைத்ததில்லை. அவர்கட்கான பிரசாவுரிமை பறிக்கப்பட்டபோதும் வாழாவிருந்தார்கள். இன்றைக்கு ‘ஈழத் தமிழர்கள்’ என்கிற பதத்தை பெரும்பாலானவர்கள் தமிழீழம் என்கிற புலிகளால் வரையறுக்கப்பட்ட பிரதேசமக்களைக் குறிக்கவே பயன்படுத்துகிறார்கள். மலையகத் தமிழர்கள் என்கிற இன்னொரு பதமும் மிகவும் பிரக்ஞாபூர்வமாகப் பயன்பட்டுவருகிறது. இவை சரியா பிழையா என்பது இலங்கையின் சிறுபான்மை இனங்களுக்கான அரசியல் போராட்டத்தின் மிகப் பெரிய கேள்வி.
Post a Comment