Thursday, June 2, 2011

ஈழ முஸ்லிம்களை அடக்கி வாழ நினைக்கும் இலங்கைத் தமிழர்கள்! 

இலங்கைத் தீவில் வாழும் மக்களுள் முஸ்லீம் மக்களும் தமக்கென்றோர் தனியான, நீண்ட பாரம்பரிய வரலாற்றினைக் கொண்டவர்களாக வாழ்கிறார்கள்.  இலங்கைத் தீவில்(ஈழத்தில்)  முதன் முதலாக வியாபார நோக்கோடு கி.பி 414ம் ஆண்டு தென் அரேபிய வர்த்தகர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனாலும் அவர்களது வருகையானது வியாபார நோக்கோடு இருந்தது.  இதன் பின்னர், கி.பி 628ம் ஆண்டளவில் 'வஹாப் இப்னு அபீ ஹப்ஸா' எனும் நபிகளின் தோழர் இலங்கைக்கு வருகை தந்து, ’’இலங்கையர்களை இஸ்லாமியர்களாகவும், இலங்கை மன்னனாக அக் காலத்திலிருந்தவனை இஸ்லாமிற்கு மதம் மாறும் படியும் கோரியிருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

இக் காலப் பகுதியின் பின்னர் இலங்கையில் இஸ்லாமியர்கள் குடியேறியிருந்தாலும், ஈழத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான வரலாறானது, கிபி 711ம் நூற்றாண்டில் இடம் பெற்ற முஹம்மத் பின் காஸிமின் சிந்துப் படையெடுப்போடு தான் ஆரம்பமாகிறது. அதாவது முஹம்மத் பின் காஸிமின் படையெடுப்பு இடம் பெற்ற காலப் பகுதிக்கும், 
கிபி 628ம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் ஈழத்தில் முஸ்லிம்கள் குடியேறினாலும், அந்த ஆண்டினைச் சரியாகக் கணிப்பிடக் கூடிய குறிப்புக்கள் வரலாற்று ஆய்வாளர்களின் கைகளுக்குக் கிடைக்காமற் போய் விட்டன. 


இக் காலப் பகுதியில், தென் இந்தியாவிலிருந்து ஈழத்தில் குடியேறியிருந்த தமிழர்களிற்கு இடையேயான மத மாற்றச் செயற்பாடுகளோடு தான் இலங்கையில் முஸ்லிம் இனமானது வேர் கொள்ளத் தொடங்குகிறது.(இப்போதைய இலங்கைத் தமிழர்கள் என நாம் சொல்லிக் கொள்வோர்) 
இதன் பின்னர் தான் ஈழத்தவர்கள் எனும் அடை மொழிக்குள் இருந்த தமிழர்களில் இஸ்லாமின் கொள்கைகளை ஏற்றுறுக் கொண்டோர், விரும்பி மதம் மாறத் தொடங்குகிறார்கள்.


ஈழத் தமிழர்களோடு உடன் பிறப்புக்களாக இருந்து பின்னர் மதம் மாறிய கன்றுகளை, இன்றும் கூட ஈழத் தமிழர்கள் வெறுத்தும் ஒதுக்கியும் புறம் தள்ளி வருகிறார்கள்.  இதே போல ஈழத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு இடையேயும் நீறு பூத்த நெருப்பாக ஈழத் தமிழர்கள் மீதான வன்மங்கள், குரோதங்கள் மனதளவில் இன்று வரை இருந்தே வருகின்றன. 


இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது கட்டவிழ்து விடப்பட்ட முதலாவது கலகம், அல்லது வன்முறை1915ம் ஆண்டளவில் சிங்களவர்களால், முஸ்லிம்களின் மத வழிப்பாட்டுக் கருவியினை அடிப்படையாக வைத்துத் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. பிரித்தானியரின் முஸ்லிம்கள் மீதான நியாயமான தீர்ப்புக்களை அடுத்து இக் கலகமானது முடிவிற்கு வந்தது. 


தமிழ்- முஸ்லிம் உறவு மீதான வரலாற்று விரிசலுக்குத் தூண்டிலாக அமையும் சம்பவமாகவும், இதே கலகம் தான் விளங்குகிறது, இதற்கான காரணம் இந்துவாகவும், தமிழனாகவும் அக் காலத்திலிருந்த சேர் பொன் இராமநாதன் அவர்கள் இக் கலவரத்தினை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில் சிங்களவர்களுக்காக பிரிட்டிஷ் அரசிடம்- சிங்களவர் பக்கம் நின்று வாதாடினார். இச் சம்பவத்தினை முஸ்லிம்கள் தமிழர்கள் சிங்களவர் பக்கம் நிற்கிறார்கள் எனும் கோணத்தில் பார்த்த காரணத்தால், தமிழர்களை அக் காலம் தொட்டே, முஸ்லிம்கள் தமது எதிரியாகவே பார்க்கத் தொடங்கினார்கள். 


1948ம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இடம் பெற்ற சனத் தொகைக் கணக்கெடுப்பின் போது, தமிழினைத் தாய் மொழியாகக் கொண்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள் தமிழர்கள் என்ற அடை மொழிக்கு கீழேயும், முஸ்லிம்கள் இஸ்லாமியத் தமிழர்கள் என்ற அடை மொழிக்கு கீழேயும் கணக்கெடுக்கப்பட்டார்கள். இச் சொற்பதமும் தமிழர்கள் தரப்பினால் முஸ்லிம் தமிழர் உறவுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட விரிசலுக்குரிய காரணமாக மாறத் தொடங்கியது. 


இந்தச் சர்ச்சையினைத் தணிக்கும் வகையில் முஸ்லிம் இனத் தலைவர்கள் முன் வைத்த சமரச முயற்சிகள் யாவும் தமிழர்களால் புறந்தள்ளப்பட்டன, துஷ் பிரயோகம் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழர்கள் தம்மிடமிருந்து- முஸ்லிம்களைப் பிரித்துக் காட்டும் இன்னோர் முயற்சியாக சோனகர்கள் என்ற பதத்தினை அறிமுகப்படுத்துகிறார்கள்.


இச் சொற்பதமானது பின் நாளில் சோனி என வழக்கொழிந்து, முஸ்லிம்களை எள்ளி நகைக்கவும், துஷ் பிரயோகம் செய்து கிண்டலடிக்கவும் தமிழர்களால் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையாக மாற்றமுறுகிறது. 


ஈழத்திற்கான விடுதலைப் போரானது தீவிரமடைந்த 1980களைத் தொடர்ந்து இஸ்லாமியத் தமிழர்கள் எனும் வேறு பிரித்தறியும் செயற்பாடும் தமிழாதரவுச் சக்திகளால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.  முஸ்லிம்களில் கல்வித் தகமைகளில் தேர்ச்சி பெற்றவர்கள்(அதிகம் படித்தவர்கள்) அக் காலப் பகுதியில் குறைவாக இருந்த காரணத்தால், முஸ்லிம்களுக்கென்றிருந்த அரசியல் தலமையான முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் அஸ்ரப் அவர்கள் எஸ்.ஜே.வி செல்வநாயகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலமைக்குத் தள்ளப்படுகிறார். 


ஆதிக்க வர்க்கங்களாக உருவாகிய தமிழ் சிங்கள இனங்கள் முஸ்லிம்களின் உரிமைகளையும், அவர்களின் கலாச்சார மத சம்பிரதாயங்களையும் ஒடுக்குவதில் மாத்திரம் தான் முனைப்புக் காட்டினவே தவிர இன்று வரை முஸ்லிம்களைத் தம்மோடு அணைத்து வாழ்வதில், இலங்கைத் தீவில் யாருமே ஆர்வம் காட்டவில்லை. 


ஈழப் போராட்டம் தீவிரம் பெற்றிருந்த 1990ம் ஆண்டில், ஒரு சில முஸ்லிம் சகோதரர்கள் காட்டிக் கொடுப்புக்களைச் செய்ததாக புலிகள் அறிந்து கொள்கிறார்கள். இதன் பின்னர் நீண்ட கால அவகாசம் ஏதுமின்றி (குறுகிய மணி நேரத்திற்குள்) யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட முஸ்லிம்களை அவர்களது சொத்துக்களைச் சூறையாடிப் பறி முதல் செய்த பின்னர் நிர்க்கதி நிலைக்கு ஆளாக்கி 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணத்தை விட்டுப் புலிகள் வெளியேற்றினார்கள்.  இதே போல இலங்கையில் 1990களில் புலிகளின் ஆளுமையின் கீழிருந்த அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்களைப் புலிகள் வெளியேற்றினார்கள். 


ந்தச் சம்பத்தினைத் தொடர்ந்து பெருமளவான முஸ்லிம் இளைஞர்கள் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொள்கிறார்கள். புலிகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்குகிறார்கள். 


இந்தக் குரோதங்களின் உச்ச விளைவாக காத்தான் குடி முஸ்லிம் பள்ளி வாசலில் 126 பேரும், ஏறாவூரில் 116 பேரும் புலிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இது தவிர இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டும் இக் காலப் பகுதியில் இடம் பெற்ற புலிகளின் சிறு சிறு நடவடிக்கைகள் மூலமாக 500 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 


இது ஒரு வரலாற்றுத் துயர் மிகு செயல் எனப் புலிகள் ஒரு தசாப்தத்தின் பின்னர் மன்னிப்புக் கோரி, முஸ்லிம்களை அரவணைக்க நினைத்தாலும், முஸ்லிம் மக்கள் மனங்களைப் புலிகளால் வெல்ல முடியாதிருந்தது. முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிக்கைகளைக் கட்டியெழுப்ப முடியாதிருந்தது. இச் செயற்பாடுகளே இன்று வரை கட்டியெழுப்ப முடியாதிருக்கும் தமிழ் முஸ்லிம் பிரிவிற்கான மூல காரணிகளாகவும் விளங்குகின்றன.


முஸ்லிம்களுக்கென்றிருந்த காத்த்திரமான தலமையாகிய எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் செப்டெம்பர் 16ம் திகதி 2000ம் ஆண்டன்று உலங்கு வானூர்தி விபத்த்தில் உயிரிழக்கிறார். இதன் பின்னர் இன்று வரை முஸ்லிம்களிற்கென்ற உறுதியான தலமை இலங்கையில் உருவாக்கப்படவில்லை என்றே கூறலாம். 


இக் காலப் பகுதியில் புதிதாக வரும் அரசியல்வாதிகள் அனைவரும் தமது சுய நலன்களை அடிப்படையாக வைத்து முஸ்லிம் உரிமைகளைப் பேரம் பேசுகிறார்களேயன்றி, முஸ்லிம்களுக்கான உறுதியான பலம் மிக்க தலமையினை நிர்ணயிப்பதில் பல சிக்கல்களை எதிர் நோக்குகிறார்கள். 


இவற்றை விட சோனிகள், தொப்பி பிரட்டிகள், முழு மாடு தின்னியள், சோனகர், என இழி நிலைக்குத் தமிழர்களால் ஆளாக்கப்ப்படும் முஸ்லிமளுக்கும், 
‘பனங்காய் சூப்பிகள், கோம்பை சூப்பிகள்’ என முஸ்லிம்களால் அழைக்கப்படும் தமிழர்களுக்கும் இடையில் மனதளவில் காணப்படும் பழைய குரோதங்கள்- இப்போதும் நீறு பூத்த நெருப்பாகத் தான் இருக்கின்றன. 


யுத்தம் ஓய்ந்த பின்னர் முஸ்லிம்கள் தமது தாயக நிலப்பரப்பிற்குத் திரும்பினாலும், மனதளவில் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையேயான பழைய நெருப்பு இன்றும் இருந்து கொண்டே இருக்கிறது, அல்லது மக்களை வைத்து தனியரசியல் செய்யும் நபர்களால் காலத்திற்குக் காலம் தூண்டப்பட்டு வருகிறது. 


முஸ்லிம்களைப் பொறுத்தவரை, தமிழர்களைப் போலன்றி ஒற்றுமையில் சிறந்தவர்கள். அவர்களது பள்ளி வாசல் மூலம் எடுக்கும் தீர்மானங்கள் இந்த ஒற்றுமைக்குச் சான்றாக அமைந்து கொள்ளும். 


இலங்கையின் தென் மாகாணங்களையும், மேல் மாகணத்தையும் பொறுத்தவரை சிறு வயதிலிருந்தே, தமிழ் முஸ்லிம் மாணவர்கள் ஒன்றாக வளருவதால் அவர்களுக்கிடையே குரோதங்களோ, பகைமை உணர்வுகளோ மனதளவில் இல்லை என்றே கூறலாம். ஆனால் இந்தப் பகைமை உணர்வுகளோடு வாழும் வடகிழக்கு மக்கள் எப்போது, எங்கே ஒன்று கூடி முஸ்லிம்களோடு பேசித் தமது காழ்ப்புணர்ச்சிகளை நீக்கிக் கொள்வார்கள் என்பது ஈழத்தில் உள்ள அனைவர் மனங்களிலும் தொக்கி நிற்கும் வினா. 


ப் பதிவின் அடிப்படையில் நான் உங்களிடம் சில விடயங்களை முன் வைக்கிறேன்;


*இலங்கை அரசானது தமிழர்களுக்கான தீர்வினைக் காலதி காலமாக இழுத்தடித்துக் கொண்டே வருகிறது. சந்தர்ப்ப சூழ் நிலைகளால் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்பட்டாலும், 


’’எந்த ஒரு சுய நிர்ணய உரிமை உடைய இனமும்- இன்னோர் இனத்தின் கீழ் அடங்கி வாழ மாட்டாது. அந்த வகையில் தமிழர்களுக்கான உரிமை வழங்கப்பட்டால் - முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு நீங்கள் கூறப் போகும் பதில் என்ன? முஸ்லிம்களுக்கான உரிமையினை யார் வழங்கப் போகிறார்கள்?


*முஸ்லிம்கள் தமிழர்களின் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் வாழ்வதையோ, தமிழர்கள் முஸ்லிம்களோடு இணைந்து வாழ்வதையோ இக் காலச் சந்ததிகள் அல்லது புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் விரிசலை இன்று வரை கட்டிக் காக்கும் புத்தி ஜீவிகள், கல்வியளாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக உள்ள நிலையில், 
இதே பிரிந்து வாழும் அல்லது பிரித்து வாழும் நிலையை ஒவ்வோர் ஈழத் தமிழர்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப் போகிறார்களா? அல்லது முஸ்லிம்களையும் எமது உறவுகளாக நினைத்து அரவணைத்து வாழப் போகிறோமா? இல்லை



எமது எதிர்காலச் சந்ததியினருக்கு ஊடாக, தமிழ் முஸ்லிம் உறவினைக் கட்டியெழுப்ப விரும்பினால், நாம் எமது குழந்தைகளினை முஸ்லிம் சகோதர்களோடு அந்நியோன்னியமாகப் பழக விட வேண்டும். அதே போன்று எமது குழந்தைகளுக்கு இனங்களுக்கிடையேயான ஒற்றுமையினை வலியுறுத்திக் கூற வேண்டும். அதனை உங்களில் எத்தனை பேர் செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?
இத்தகைய ஓர் முயற்சியினைக் வெகு விரைவில் செயற்படுத்த நாம் எவ்வாறான வழி முறையினைக் கையாளாலாம்?


இது தான் இந்த வார வியாழன் விவாத மேடை உங்கள் முன் கொண்டு வரும் கேள்விகள்.




டிஸ்கி: இப் பதிவில் பதிவின் அளவினைக் கருத்திற் கொண்டு 2000ம் ஆண்டின் பின்னரான முஸ்லிம், தமிழ் கலவர விடயங்களையும் பல நடை முறை அரசியல் விடயங்களையும் பதிவில் இணைக்க முடியவில்லை உறவுகளே!


டிஸ்கி 2: இப் பதிவிற்கான உச்சாத்துணை நூல்கள், மேற்கோள்கள் 
தமிழ் வீக்கிப் பிடியா, இலங்கையின் இஸ்லாமிய வரலாறு, இலங்கையில் இஸ்லாம், இஸ்லாமிய மஞ்சரி முதலிய நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவையாகும்.

136 Comments:

Anonymous said...
Best Blogger Tips

இவ்விவாதத்துக்கு பின்னூட்ட கருத்தென்பது கத்திமேல நடக்கிறது போல....)

Anonymous said...
Best Blogger Tips

90 றுகளில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள், 96 களில் யாழை விட்டு பின்வாங்கப்பட்ட புலிகள்..............நிற்க , இன்று பதினைந்து வருடமாகியும் மீண்டும் யாழில் முஸ்லீம்களை மீள் குடியேற்றவில்லை / மீள் குடியேற்ற அரசாங்கம் விரும்பவில்லை..... சிங்கள அத்துமீறல் குடியேற்றங்களில் கொண்ட அவசரம் கூட அவர்கள் மீது காட்டவில்லை. ஆனால் இது பற்றி முசிலீம் அரசியல் தலைமைகள் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை.

Anonymous said...
Best Blogger Tips

ஈழ விடுதலை போராட்டங்களிலும் முசிலீம் சகோதர்களின் பங்களிப்பு இருந்துள்ளது , ஆனால் மிக குறைவு..90 ரில் நடந்த சம்பவம் தமிழ் விடுதலை இளைஞர்களின் தான்தோன்றி தனமானதாக இருக்கலாம். அதுக்கும் யாழ் மக்களுக்கும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை...

Anonymous said...
Best Blogger Tips

அப்புறம் வர்றன் நித்திரை கண்ணை கட்டுது ;-)

சுதா SJ said...
Best Blogger Tips

வந்தாச்சு, படிச்சாச்சு, வோட்டும் போட்டாச்சு,
ஆனால் எதுவும் புரிஞ்ச மாதிரி தெரியல்ல,
நான் வளர இன்னும் இருக்குண்ணு நினைக்குறேன்....lol

தனிமரம் said...
Best Blogger Tips

நல்ல விடயத்தை ஆராய்ந்துள்ளீர்கள் உணர்வுகள் சிலநேரங்களில் உணர்ச்சிப் பிழம்பாகப் போனதன் வலிகள்தான் 1990 இன் இடம்பெயர்வு இது சில விடயங்களில் காலத்தின் தேவையாக சிலர் செய்த பாரதூரமான செயல்கள் எவ்வளவு இழப்பை ஏற்படுத்தியது என்பதை சிலருக்கு ஏற்படுத்தி  இருந்தது அதன் தாக்கம்  மூத்தவர்கள் செவிவழியாக சொல்லக் கேட்டிருக்கிறன்!
மேலும் 2003 இல் சில இஸ்லாமிய நண்பர்கள் மீள யாழ் வந்தார்கள் குடியேற துரதிஸ்டவசம் அவர்கள் குடியிருப்புக்களை தமிழ் உறவுகள் அகலவில்லை !இன்னொரு விடயன் நாளை வருகிறேன் எனக்கும் தூக்கம்  போட்டுத்தாக்குது நண்பா!

Unknown said...
Best Blogger Tips

எனக்கு இந்த வரலாற்று தகவல் இந்த பதிவின் மூலம் தான் தெரியும் . விரைவில் ஒற்றுமை பிறக்க இறைவனை பிராத்திப்போம்

Anonymous said...
Best Blogger Tips

@ நிரூபன் - இலங்கைத் தமிழர் ஒருவரிடம் இருந்து இப்படியான பார்வையில் ஒரு பதிவுக்கே பெரிய கும்பிடு போட வேண்டும்.

முதலில் இஸ்லாமியர்கள் என்போர் தமிழர்கள் இல்லையா என்றக் கேள்விக்குப் பதில் தேட வேண்டும். இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை எனில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஏன் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ள வேண்டும் என்றக் கருத்து எழுகின்றது. இஸ்லாமியர்கள் அரபி வம்சாவளிகள் எனில் இலங்கையின் குடியேறிய பொழுது சிங்கள மொழியை அல்லவா பேசி இருக்க வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களில் 99.999 சதவீதமானோர் தமிழே தாய் மொழி. சிங்கள தாய் மொழி முஸ்லிம்கள் என எவரையும் கேள்விட்ப்பட்டதில்லை.

இரண்டு வடக்குக் கிழக்கில் வாழும் பெரும்பாலானோர் தமிழர்களாய் இருந்து மதம் மாறியவர்கள் என்பதே உண்மையாகும். வெகு சிலரே காயல்பட்டினத்தில் இருந்து குடியேறியவர்கள் - அவர்கள் பெரும்பாலும் கொழும்பிலேயே வாழ்கின்றர்கள்.

Anonymous said...
Best Blogger Tips

மதமாறிய இஸ்லாமியர் பலரும் தலித்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரே என்பதும் வரலாற்று உண்மை - அதனாலேயே டச்சுக் காலத்தில் தம்மை மேல் சாதியாக ஆக்கிக் கொண்ட வேளாளர் மத்தியில் முஸ்லிம் வெறுப்புணர்வு இன்று வரை இருக்கின்றது .... யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட 99 சதவீத தமிழர்கள் இன்றளவும் முஸ்லிம் வெறுப்பாளர்களே என்பது வேதனையான ஒன்று.. ஆனால் பிற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் அப்படி இருந்தார்களா? என்றால் இல்லை என்பதே உண்மை... !!! குறிப்பாக கிழக்கு மாநிலத் தமிழர்கள் - முஸ்லிம்களுக்கு இடையேயான குடி முறை வழக்கங்கள். வன்னியில் வாழ்ந்த தமிழர்கள் - முஸ்லிம்கள் இடையேயான கோயில் நிகழ்வுகளில் பங்குப் பற்றும் உரிமைகள் என்பதைக் கூறலாம்....

Anonymous said...
Best Blogger Tips

முஸ்லிம்களை தமிழர்களிடம் இருந்து தனித்துப் போவதில் பெரும்பங்காற்றியவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆதிக்க அரசியல் சக்திகளே என்பதும் வரலாற்று உண்மை. இதனையே தமிழ்ப் புலிகளும் மேலும் மேலும் செய்துவந்தார்கள். அவர்கள் ஒருபோதும் முஸ்லிம்களை நம்பியது இல்லை என்பதும், புலிகள் நடத்திய படுகொலைகளுமே இதற்கு சாட்சி....

முஸ்லிம்கள் - இந்திய வம்சாவளியினருக்கு இடையே எந்த பிணக்கும் ஏற்பட்டதும் இல்லை என்பதும் நினைவில் வைக்கவேண்டியதொரு தகவல்.

வடக்கு கிழக்கில் தமிழர்களிடம் இருந்து முஸ்லிம்களைப் பிரிக்கும் வேலையில் உச்சக்கட்ட பணியாற்றிவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும் ஆவார்கள்.

இன்றைய நிலையில் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, மலையக தமிழர்களுக்கோ எந்தவித உருப்படியான தலைமைகள் இல்லாத துர்பாக்கிய நிலை என்பதும் உண்மை. இந்த இனம் அனைத்தும் தமது குறுந்தேசிய இனவாதங்களை விட்டுவிட்டு '' நாம் இலங்கைத் தமிழர் '' என்ற ஒரேக் கூரைக்குள் வரவேண்டும்.

அதற்கான முயற்சிகளை இளைய சமூகம் செய்ய வேண்டும் ....

இளைஞர்கள் மனது வைத்தால் நடக்காதது என்று ஒன்றுமில்லை ...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

தங்கள் மீது சலாம் உண்டாகட்டும் சகோ.நிரூபன்,

அருமையான இடுகை..!

பொதுவாக முஸ்லிம்கள் அல்லாத
ஈழத்தமிழர்களால் சொல்லப்படாமல் மறைக்கப்படும் அல்லது கேட்டாலும் பதில் சொல்லாது தப்பிக்கும் மனதை நெருடும் வரலாற்று உண்மைகளை தாங்கள் தைரியமாக சொன்னதற்கு நன்றி.

பல ஈழ முஸ்லிம்கள் தளங்களில் இவை பற்றி நிறைய படித்திருக்கிறேன். வீடியோவும் கூட சில தளங்களில் பார்த்திருக்கிறேன்.

///தமிழர்களுக்கான உரிமை வழங்கப்பட்டால் - முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு நீங்கள் கூறப் போகும் பதில் என்ன? முஸ்லிம்களுக்கான உரிமையினை யார் வழங்கப் போகிறார்கள்?///
------மிக மிக அவசியமான இக்காலத்துக்கு ஏற்ற முன்மொழிதல். வரவேற்கிறேன் சகோ.நிருபன்..!


இங்கே எங்கள் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் போன்று 'ஒரே தமிழின'மாக அல்லாது....

தமிழ் பேசினாலும்... 'தமிழர்கள்' என்ற 'இன'த்திலிருந்து... "தமிழ்முஸ்லிம்கள்" என்ற ஒரு தனி 'இனம்' பிறந்து, அது வெகுதூரம் சென்று விட்டதையே அங்கே நாம் உணர்கிறோம். மேலும், உங்கள் பதிவே அதற்கு சாட்சி..!

//முஸ்லிம் இனமானது//...
//முஸ்லிம் இனத் தலைவர்கள்//...
என்றல்லாம் இனப்பாகுபாடு இருப்பது தெளிவாக இருக்கிறது. ஒற்றுமைக்கு பாரிய விரிசல் ஏற்பட்டபின்னர்... அதற்கு எவ்வித மறுசீரமைப்பை எத்தரப்பும் செய்யாதிருக்கும் போது...

///எந்த ஒரு சுய நிர்ணய உரிமை உடைய இனமும்- இன்னோர் இனத்தின் கீழ் அடங்கி வாழ மாட்டாது.///---என்று நீங்களே உங்கள் முன்மொழிதல் வினாவிற்கு தெளிவாக சரியான பதில்.... சொல்லிவிட்டதாலும்...

1947-ல், பாரதம்...இந்தியா-இலங்கை-பாகிஸ்தானாக பிரிக்கப்பட்டது அல்லவா..?

அது 'சிறந்த புத்திசாலித்தனம்' எனப்பட்டது அல்லவா..?

அதேபோல...

'சிங்கள-இலங்கை', 'தமிழ்-ஈழம்...' & "முஸ்லிம்-ஈழஸ்தான்..." என்று மூன்று தனித்தனி அரசுகளாக ஆகட்டுமே..? என்ன கெட்டுவிடும் இப்போது..?

Unknown said...
Best Blogger Tips

நண்பா அருமையான ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கீங்க......
மத மாற்றம் என்பதே சொந்த மதத்தால் புறக்கணிக்கப்படும் போது ஏற்படுவதே.....
அதனால் நம் சகோதரர்களிடையே பிணக்குகள் தீர ஒன்று படுவோம்!

சஞ்சயன் said...
Best Blogger Tips

எம் ஆர் ஸ்டாலின் எழுதிய”தமிழீழப் புரட்டு” என்னும் புத்தகமும் இப்பிரச்சனை பற்றி பேசுகிறது.

saarvaakan said...
Best Blogger Tips

அருமையான‌
இப்போதைக்கு மிகவும் அவசியமான் பதிவு.தமிழர்களில் மத்ரீதியான பிரிவு ஈழத்தில் ஏற்பட்டது மிகவும் துரதிஷ்டமானது.பழைய காயங்களுக்கு மருந்திட்டு ,புதிய பாதை நோக்கி பயணிக்க வேண்டிய நேரமிது.நிச்சயமாக இஸ்லாமிய தமிழர்களின் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் கண்டிக்கப் படத்தக்கது.ஆனாலும் இக்காலகட்டத்தில் இலங்கை அரசு போர்க்குற்ற அறிக்கையினால் சில அழுத்தங்களுக்கு உள்ளாகி இருப்பதால் ஒரு தீர்வுக்கு ஒத்து வருவதற்கு வாய்ப்பு உண்டு.இத்னை த்மைழர் அனைவருமே பயன்படுத்த தவறினால் பிறிதொரு சந்தர்ப்பம் வாய்ப்பது அபூர்வம்.இஸ்லாமியர்கள் கூட உலகளாவிய அளவில குரல் கொடுத்து தங்களுக்கான தீர்வை பெற முயற்சிக்க வேண்டும்.இலங்கையை வற்புறுத்த சில இஸ்லாமிய நாடுகளின் உதவி கேட்பது கூட தவறில்லை.பிற தமிழர்களோடு ஒருங்கினைந்து இலங்கையின் மீது அழுத்தம் கொடுத்து தங்களுக்கான சுய மரியாதையோடு கூடிய வாழ்வுரிமை,அரசியல் சுய நிர்ணய உரிமை பெற இதுவே தருணம்.
நன்றி ந‌ண்பர் நிரூப‌ன்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நண்பா.. இந்தப்பதிவுக்கு பின்னூட்டம் இடும் அளவுக்கோ,கருத்து சொல்லும் அளவுக்கோ எனக்கு மெச்சூரிட்டி பத்தாது..

Anonymous said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Anonymous said...
Best Blogger Tips

@ முஹமத் ஆஷிக் - இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் தனி இனமாக இருப்பதாக எனக்குப் படவில்லை ... அரசியல் ரீதியாக தனியே செயல்படுகின்றார்களே ஒழியே.. ஏனைய வாழ்வியல் ரீதியாக வடக்கு - கிழக்கில் பிற தமிழர்கள் சார்ந்தும், சிங்கள் தேசத்தில் சிங்கள மக்கள் சார்ந்தே வாழ வேண்டிய நிலை இருக்கின்றது.

முஸ்லிம் ஈழஸ்தான் - என நீங்கள் எளிதாக இங்கிருந்து தீயை பற்ற வைத்துவிடுவீர்கள் - இதனால் வெந்து வேகப் போவது அப்பாவி மக்களே ஆவார்.

ஈழஸ்தான் என்றோ - முஸ்லிம்களுக்கு அலகுகள் என்பதோ சாத்தியமே இல்லாத முட்டாள் கோட்பாடு - இதனை விதைத்த அரசியல் அரவேற்காடுகளில் ஒருவர் தான் அஷ்ரஃப் போன்றோரும்.

ஈழஸ்தான் என்பது தமிழ்நாட்டின் தமிழ்ஸ்தான் என்ற ஒன்றை முஸ்லிம்கள் கேட்பதற்கு ஒப்பானது என்பதே ....

ஒரு இனம தனிநாடாகப் பிரிந்துப் போக தொடர்ச்சியான நிலப்பரப்பு, அந்த நிலப்பரப்பில் தொடர்ந்து காலம் காலமாக மக்கள் வசிப்பு. போதிய வளங்கள் மற்றும் அந்த நிலப்பகுதிக்கு தனி அடையாளம் மற்றும் மக்கள் தனித்து வாழக் கூடிய சூழல் இருக்க வேண்டும்.

ஈழஸ்தான் என்று எதனைப் பிரிப்பீர்கள் சொல்லுங்கள் .. இலங்கையில் உள்ள 15 லட்சம் முஸ்லிம்களில் 8 லட்சம் பேர் சிங்கள மாவட்டங்களில் வசிப்போர் 7 லட்சம் பேர் வரை தமிழர் மாவட்டங்களில் வசிப்போர்.

இவர்கள் அனைவரும் ஆங்காங்கே சிங்கள மற்றும் தமிழ் கிராமங்களுக்கு இடையில் வசிப்போர் ஆவார்கள். ஈழஸ்தான் என்ற ஒன்றே ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு ஆப்பான ஒரு கருது கோளாகும்.

அப்படி ஒன்று அமைக்க நினைத்தால் ஒரு முஸ்லிம் கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமம் துண்டிக்கப்படும்... இது எப்படி சாத்தியமாகும் என சிந்தித்துப் பாருங்கள் ...

உங்களைப் போன்றோர் தான் இங்கிருந்து குழப்பம் செய்வோர்கள் ஆவார்கள் ....

தனி ஈழம் என்பதே புவியியல் ரீதியாக தோல்விக் கண்டப் போது தனி ஈழஸ்தான் என்பது கனவிலும் நடக்காத எண்ணமாகும்.

குறிப்பாக கிழக்கு மாகாணம் என்பதில் தமிழ் - சிங்கள - முஸ்லிம் கிராமங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து உள்ளன.. இவற்றைப் பிரிப்பது நடக்காத காரியமாகும் .... !

வடக்கைப் பொறுத்தவரை 99 சதவீதம் தமிழர்கள் நிரம்பியப் பகுதி .. ஆனால் கிழக்கிலோ - புத்தளத்திலோ இது நடவாத சாத்தியம். கிழக்கிலும் - புத்தளம் பகுதியில் தான் முஸ்லிம்கள் செறிவாக வாழ்வதாக அறிய முடிகின்றது.

ஆகவே இப்படியான பேச்சுக்களை நம்பி பிளவுப் படாமல். இலங்கை அரசியல் மற்றும் வாழ்வியலில் அனைவரும் சமம் என்ற நிலையை எட்ட வேண்டும். தமிழ் மொழி பேசும் பகுதிகளை தனி மாநிலமாக - மொழி வாரி மாநிலமாக அங்கீகாரம் செய்து அதற்கான பூரண சுயாட்சியைப் பெறுவதுமே சிறந்த வழி - அதுவே நீண்டகால யுத்தம் இனிமேல் நடைப் பெறாமல் வழி வகுக்கும் .....

முஸ்லிம்கள் விரும்பினாலும், விரும்பாவிடினும் ... இதில் இஸ்லாமிய கிராமங்கள் ஒன்று தமிழ் பகுதிகளோடு இணைந்து செயல்பட வேண்டும், அல்லது சிங்கள பகுதிகளோடு இணையவேண்டும் .... அதிலும் மட்டக்களப்பு மற்றும் மன்னார் பகுதிகளில் இருக்கும் இஸ்லாமிய கிராமங்கள் தமிழ் பகுதிகளோடு மட்டுமே இருக்க முடியும் என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டியதொரு ஒன்றாகும். திருமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இருக்கும் இஸ்லாமிய கிராமங்கள் ஒன்று சிங்களமயமாதலில் சேரவேண்டி வரும் - இல்லையாயின் தமிழர்களோடு இணைந்து வாழ வேண்டி வரும் ...

தனியே ஒரு முஸ்லிம் மாகாணமோ, ஈழஸ்தானோ புவியியல் ரீதியாக சாத்தியப்படாத ஒன்று .. அப்படி ஒரு சிறியப் பகுதியை காஸா போல இலங்கை முஸ்லிம்கள் ஏற்படுத்தினால் - பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களினது நிலை என்னவாகும் ? அதனால் ஏற்படும் கலங்களைப் புரிந்துக் கொள்ளவும் வேண்டும் ..

எல்லாம் சிக்கல்மயமான ஒன்று .. அதனால் சாத்தியப்படுவதைப் பேசுங்கள், செயல்படுங்கள் என்பேன்

suvanappiriyan said...
Best Blogger Tips

/முஸ்லிம் ஈழஸ்தான் - என நீங்கள் எளிதாக இங்கிருந்து தீயை பற்ற வைத்துவிடுவீர்கள் - இதனால் வெந்து வேகப் போவது அப்பாவி மக்களே ஆவார்.

ஈழஸ்தான் என்றோ - முஸ்லிம்களுக்கு அலகுகள் என்பதோ சாத்தியமே இல்லாத முட்டாள் கோட்பாடு - இதனை விதைத்த அரசியல் அரவேற்காடுகளில் ஒருவர் தான் அஷ்ரஃப் போன்றோரும்.//

உங்கள் கருத்தை நானும் ஆதரிக்கிறேன் இக்பால். தனி ஈழமே தீர்வாகாது என்கிறபோது ஈழஸ்தான் என்பது நடக்க முடியாத ஒன்றே! தற்போது விடுதலைப் புலிகள் சுத்தமாக துடைத்தெறியப் பட்டதால் முஸ்லிம்களும், தமிழ் இந்துக்களும் பழைய சண்டைகளை மறந்து இலங்கையை ஒன்றிணைந்து கொண்டு செல்ல வேண்டும். சிறந்த தலைமையின் மூலமே இது சாத்தியப்படும். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் முஸ்லிம்கள் தரப்புக்கு ஏற்ற அமைப்பாக நான் கருதுகிறேன்.

மற்றபடி இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பூர்வீகமாக தமிழ் இந்துக்களே! தமிழகத்தைப் போல் சாதிக் கொடுமையால் மதம் மாறியவர்கள். எனவே தமிழ் இந்துக்களின் ரத்த உறவுகளே இன்றைய இலங்கை தமிழ் முஸ்லிம்கள்.

மற்றபடி சிறந்த ஆய்வு இடுகையை அளித்த சகோ. நிரூபனுக்கு நன்றிகள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

@ இக்பால் செல்வன்...

கட்டுரையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் 'தனி இனம்' என்றுதான் கூறப்படுகிறது.

அப்படித்தான் இதுநாள்வரை மற்ற இனங்களால் பாவிக்கபடுகிறது.

தமிழக முஸ்லிம்கள போல் இலங்கையை சேர்ந்த முஸ்லிம்கள் ஒரே தமிழ் இனமாக வாழ அனுமதிக்கப்படவில்லை.

இரண்டு தசாப்தங்கள் கடந்து போனபின்னர் இனி அது சாத்தியமா என்பது... அந்த இரண்டு தமிழினங்களும் முடிவு செய்ய வேண்டியது.

அப்படி முடியாது எனும்போது...

வேறு என்ன தீர்வு...?

///எந்த ஒரு சுய நிர்ணய உரிமை உடைய இனமும்- இன்னோர் இனத்தின் கீழ் அடங்கி வாழ மாட்டாது.///...
//முஸ்லிம் இனமானது//...
//முஸ்லிம் இனத் தலைவர்கள்//...

----------தெளிவாக பதிவில் இனம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது...!

தமிழ்நாட்டையும் ஈழத்தையும் போட்டு குழப்பாதீகள்.

ஒரு இனத்துக்கு சிங்களர்களிடமிருந்து தனி ஈழம் கேட்போர்... அதை இலங்கை எனும் ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது என்று குரல் கொடுக்காதோர்...

இன்னொரு இனத்துக்கு தனி '...ஸ்தான்' கேட்பது சரியல்ல என எப்படி சொல்ல முடியும்..?

ஏன் ஓவ்வொரு இனத்துக்கும் தனி நீதி...?

தம் இன மக்களுக்கு சமநீதி அளிக்காமல் கொன்றொழித்த சிங்களருடன் ஒற்றுமையாக வாழுங்கள் தமிழர்களே என்று சொல்வது கேவலம் அல்லவா..?

அதேபோல...

அதே...

துலாக்கோல்...


தமிழர்கள் vs. தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் மட்டும் ஏன் அளவிடக்கூடாது என்பதே ஏன் கேள்வி..!


"ஈழ மக்களை அடக்கி வாழ நினைக்கும் சிங்களர்கள்!"---இதற்கு தீர்வு தனி ஈழம் என்கிறீர்கள்...!


"ஈழ முஸ்லிம்களை அடக்கி வாழ நினைக்கும் ஈழத் தமிழர்கள்!"---இதற்கு என்ன தீர்வு...?

ஒற்றுமையாக சேர்ந்து அடங்கி வாழுங்கள் என்பதா...?


ஒரு தமிழ் கண்ணுக்கு.....கமலம்...

மற்றொரு தமிழ் கண்ணுக்கு அமிலமா..?

மங்குனி அமைச்சர் said...
Best Blogger Tips

இது வேற டிராக் பாஸ் , நோ கமண்ட்ஸ்

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நான் டூர் முடிச்சுட்டு வந்துட்டேன் நண்பா..

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

///முஸ்லிம்கள் விரும்பினாலும், விரும்பாவிடினும் ... இதில் இஸ்லாமிய கிராமங்கள் ஒன்று தமிழ் பகுதிகளோடு இணைந்து செயல்பட வேண்டும், அல்லது சிங்கள பகுதிகளோடு இணையவேண்டும் ...///

----இதுதான் பிரச்சினை இன்றி தம்முள் சண்டை போட்டுக்கொண்ட... மக்கள் வாழ நல்ல சுமுகமான நீதியான தீர்வா... சகோ இக்பால் செல்வன்...?

இதையேதான் சகோ.சுவனப்பிரியனும் ஆதரிக்கிறீர்களா...?

என்னுடைய... ஆசை... உலகில் நாடுகளே இல்லாமல்... 'நாம் அனைவரும் citizen of world' என்ற தொலைநோக்கு ஒற்றுமையை நோக்கி செல்ல வேண்டும் என்பதே...!

அதற்கு உலகெங்கும் ஆயிரம் முட்டுக்கட்டைகள்...

அதில் இரண்டு தான்...
தனி ஈழ தமிழின வெறியும்,
சம நீதி கொடுக்காத சிங்கள பேரின வெறியும்...!

ஒற்றுமை பற்றி பேச நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது சகோ...!

நிற, இன, மத, மொழி, ஜாதி ஒற்றுமை நம்மிடம் இல்லையேல்...

உலக ஒற்றுமையும்...
'we are equal...'
&
'we are all citizen of world'
என்ற தொலைநோக்கு கோட்பாடும்... நிறைவேறா...!

ஷர்புதீன் said...
Best Blogger Tips

விவாதத்திர்க்குரிய கருத்துக்களை கண்டால் ஓடும் பதிவர்களை அடுத்து வரும் எல்லா விஜய் /சிம்பு /ரித்தீஷ்/ பவர் ஸ்டார்ட் சீனிவாசன் படங்களை பார்க்க உத்தரவிடுகிறேன்.

எனது பதிவிலும் இன்று விவாதம்தான், என்ன ஆச்சு பதிவுலகுக்கு ? ஒரே மதம் குறித்த பதிவுகளாக இருக்கிறது ?

சசிகுமார் said...
Best Blogger Tips

நல்ல கருத்துக்கள்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

வருத்தமாக இருக்கிறது,படிப்பதற்கு.
எனக்கு ஒன்று புரியவில்லை. மனக்கசப்பு என்றால் இரு வேறு மதங்களிடையோ அல்லது இரு வேறு மொழியினரிடையோ ஏற்படலாம். ஆனால் இங்கு முஸ்லிம்,தமிழர் என்று சம்பந்தமில்லாத பிரிவுகள்! அம்முஸ்லிம்களும் தமிழர்கள்தானே?
பின் ஏன் இப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

பாராட்டுக்கள் நிரூபன், இக்பால் செல்வன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்! இது மிகவும் சிக்கலான விஷயம்! நான் மாட்ருக்கருத்துக்கள் தான் சொல்வேன்! அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கா? அப்புறம் என் மீது கோபப்படக்கூடாது!

ஏனென்றால் போனமுறை சாதிப்பிரச்சனைக்கு நான் போட்ட கமெண்டுகளால் சில பல சிக்கல்கள் எழுந்தது....!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஒரு சிறிய திருத்தம் - மாற்றுக்கருத்துக்கள்

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


இவ்விவாதத்துக்கு பின்னூட்ட கருத்தென்பது கத்திமேல நடக்கிறது போல....)//

முதல் வருகைக்கும், மங்களகரமாக விவாதத்தினை ஆரம்பித்து வைத்த உங்களின் நல் முயற்சிக்கும் நன்றிகள் சகோ.

கத்தி மேல் நடப்பது- அப்படியானால் உங்களால் எங்கள் கடந்த காலத் தவறுகளை மறந்து வாழவோ அல்லது முஸ்லிம்களுக்குச் சார்பாகக் கருத்தினைச் சொல்லவோ முடியவில்லை.

இரண்டும் கெட்டான் நிலையில் நிற்கிறீர்கள் என்று அர்த்தமாகுமா? இல்லை நடு நிலையாளர் என்று பொருள்படுமா சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

வணக்கம் நிருபன்! இது மிகவும் சிக்கலான விஷயம்! நான் மாட்ருக்கருத்துக்கள் தான் சொல்வேன்! அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கா? அப்புறம் என் மீது கோபப்படக்கூடாது!

ஏனென்றால் போனமுறை சாதிப்பிரச்சனைக்கு நான் போட்ட கமெண்டுகளால் சில பல சிக்கல்கள் எழுந்தது....!!!//

சகோ, என் பதிவில் எப்போதும் எல்லோர் கருத்துகளையும் வரவேற்கும் எண்ணம் தான் எனக்கிருக்கிறது. உங்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு நான் தடை போட மாட்டேன் சகோ. தாரளமாக நீங்கள் பதில் கூறலாம் சகோ.

Ibnu Halima said...
Best Blogger Tips

ஏக இறைவனின் அருளும் கருணையும் நம் மீது நிலவட்டுமாக,
பேசா பொருளை விவாதமாக்கிய உங்களின் மனவுறுதிக்கு முதலில் வாழ்த்துக்கள் நிரூபன். இதையே ஒரு முஸ்லிம் பெயருடைய ஒருவர் எழுதியிருந்தால் இந்நேரம் அவரை "சிங்கள அடிவருடி" "கைக்கூலி" என்றெல்லாம் பற்பல பட்டங்கள் கொடுத்து ராஜபக்சேவுக்கு அருகில் கொண்டு போய் நிறுத்தியிருப்பார்கள். ஆனால் எழுதியவரின் பெயர் நிரூபன் என்றிருப்பதால் இத்தகைய பட்டங்களில் இருந்து நீங்கள் தப்பித்தீர்கள். செந்தமிழன் சீமான் முதல் எழுச்சிதமிழன் திருமா வரை இதைப் பற்றி பேசவே அஞ்சுகிறார்கள். பேசினால் தம்முடைய கூடாரம் காலியாகி விடுமென்ற பயமும் காரணமாயிருக்கலாம். சமீபத்தில் கீற்று நடத்திய ஒரு நிகழ்வில் கூட இலங்கை தமிழ் பேரினவாதிகளால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட சோக கதையை சொல்ல வந்த ஒருவர் பட்டபாடு இருக்கிறதே. சொல்லி மாளாது. மிக தைரியமாக இதை விவாத களத்திற்கு கொண்டு வந்த உங்களை மீண்டுமொருமுறை பாராட்டுகிறேன் நிரூபன்.

Ibnu Halima said...
Best Blogger Tips

என்னை பொறுத்தவரை இலங்கை என்ற நாட்டை துண்டாடுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒன்றுபட்ட இலங்கையில் சிங்களர்களை போன்று சமமான உரிமைகளை பெற்று தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். இதற்காக சர்வதேச நாடுகள் இலங்கைக்கு கடுமையான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இதற்காவது இந்தியா உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டை நாம் கூட தனியாக பிரித்து கொடு என்று போராட்டம் செய்தவர்கள் தான் ஒரு காலத்தில். ஆனால் இன்று இந்தியாவின் பிரிக்கமுடியாதவொரு அங்கமாக தமிழ்நாடு இருக்கவில்லையா? பஞ்சாபை பிரித்து கொடு என்று போராட்டம் நடத்திய பஞ்சாபிகளில் பலர் இன்று அதை கைவிட்டு சுமூகமாக வாழவில்லையா? எனவே தனிநாடு கோரிக்கை இலங்கையில் ஏற்புடையதல்ல என்பது தான் எனது கருத்து.

Ibnu Halima said...
Best Blogger Tips

இலங்கை நிலவரத்தை பொறுத்தவரை அங்கிருக்கின்ற முஸ்லிம்கள் மத்தளம் போன்று இரண்டு பக்கமும் அடி வாங்குகிறவர்களாக இருக்கிறார்கள். சிங்கள பேரினவாதிகள் ஒரு புறம் முஸ்லிம்களை ஒடுக்க மறுபக்கம் தமிழ் பேரினவாதிகள் முஸ்லிம்களை தம் பங்கிற்கு போட்டு தாக்கினார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய விடுதலைப்புலிகள் ஆர்.எஸ்.எஸ் ஐ விட பயங்கரவாதிகள் என்பதில் சந்தேகமே இல்லை. புனிதமாக கருதுகிற வழிப்பாட்டு தளத்தின் (பள்ளிவாசல்) உள்ளே நுழைந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் படுகொலை செய்ததை எந்தவொரு முஸ்லிமும் மறப்பார்களா என்பது சந்தேகமே. மேலும் நீங்கள் குறிப்பிட்ட சர் பொன் ராமநாதனின் சிங்கள ஆதரவு நடவடிக்கையை அன்றைய தினத்தில் எந்தவொரு தமிழர்களும் கண்டிக்கவே இல்லை. ஏனெனில் பாதிக்கப்பட்டது முஸ்லிம் என்ற மதத்தை சார்ந்தவன் என்ற எண்ணம் தான். அவர்களும் தமிழ் மொழி பேசுகிறவர்கள் என்ற நினைப்பெல்லாம் அன்று எந்தவொரு முஸ்லிமல்லாத தமிழருக்கும் இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அது தான் பியால்விர்கான முதல் படி என்று நான் நினைக்கிறேன்.

Ibnu Halima said...
Best Blogger Tips

இன்றைய அடிப்படை தேவை சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலையாக தமிழர்கள் போன்ற பிரிவுகளில் நிலவும் பரஸ்பர நம்பிக்கையின்மையை களைவது. இந்த நான்கு பிரிவினரும் ஒன்றிணைந்து இலங்கையை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வது எப்படி என்று சிந்திக்க வேண்டும். தமக்குள்ளே இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய முயற்சி செய்வது , பிறர் மீது கொண்டிருக்கின்ற அவநம்பிக்கையை போக்கி கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்வது என்ற திசையில் பயணித்தால் விளைவுகள் ஆரோக்கியமானதாய் இருக்கும். இதை விடுத்து தனிநாடு, தமிழ் ஈழம் என்று சொல்வதெல்லாம் மேடை பேச்சுக்கு உதவலாமே தவிர ஒருபோதும் நன்மைகளை தராது. தமிழ் ஈழம் என்று சொல்லி செந்தமிழன் சீமான் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கலாமே தவிர இலங்கையில் முள்வேலியில் இருக்கும் தமிழனின் வயிற்றில் அவை ஒரு சொட்டு தண்ணீரை கூட வார்க்காது.

Ibnu Halima said...
Best Blogger Tips

இன்னும் நிறைய நிறைய இந்த விடயத்தை குறித்து கருத்து தெரிவிக்க ஆசை தான். ஆனால் சந்தர்ப்பம் கிட்டவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் இது குறித்து பிறிதொரு சமயத்தில் கருத்து தெரிவிக்கிறேன் நிரூபன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

90 றுகளில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லீம் சகோதரர்கள், 96 களில் யாழை விட்டு பின்வாங்கப்பட்ட புலிகள்..............நிற்க//

மாப்பிளை, இதில் எங்கே 96களில் புலிகள் வெளியேறியதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன்,

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

இன்று பதினைந்து வருடமாகியும் மீண்டும் யாழில் முஸ்லீம்களை மீள் குடியேற்றவில்லை / மீள் குடியேற்ற அரசாங்கம் விரும்பவில்லை..... சிங்கள அத்துமீறல் குடியேற்றங்களில் கொண்ட அவசரம் கூட அவர்கள் மீது காட்டவில்லை. ஆனால் இது பற்றி முசிலீம் அரசியல் தலைமைகள் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை.//

இல்லைச் சகோ, இன்று பல நூற்றுக் கணக்கான முஸ்லிம் மக்கள் யாழில் மீளக் குடியமர்ந்துள்ளார்கள். ஆனாலும் முஸ்லிம் அமைச்சர்களின் மெத்தனப் போக்கு கொஞ்சம் வியப்பாகத் தான் இருக்கிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


ஈழ விடுதலை போராட்டங்களிலும் முசிலீம் சகோதர்களின் பங்களிப்பு இருந்துள்ளது , ஆனால் மிக குறைவு..90 ரில் நடந்த சம்பவம் தமிழ் விடுதலை இளைஞர்களின் தான்தோன்றி தனமானதாக இருக்கலாம். அதுக்கும் யாழ் மக்களுக்கும் சம்மந்தம் இருப்பதாக தெரியவில்லை...//

புலிகளினால் குரோதங்கள் உருவாக்கப்பட முன்பதாக அல்லது புலிகள் அமைப்பினர் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்ற முன்பதாக இலங்கைத் தமிழர்களுக்கும், முஸ்லிம் சகோதர்களுக்கும் இடையில் மனவியல் அடிப்படையில் நக்கல்கள், நையாண்டிகள், காழ்ப்புணர்வுகள் இருந்தன.

இதன் ஓர் அம்சம் தான் அந் நாளில் முஸ்லிம்கள் வீதியால் நடந்து போகும் போது சோனி போறான் தலைப்பாகை பறக்கிறது,

சோனகர், மாடு தின்னியள் எனும் யாழ்ப்பாணத் தமிழர்களின் அடை மொழிகளும், அவர்கள் மீதான நக்கல் பார்வைகளும் இருந்தன சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


அப்புறம் வர்றன் நித்திரை கண்ணை கட்டுது ;-)//

ஏன் என் பதிவைப் படித்தா, நித்திரை கண்ணைக் கட்டுது.

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தனின் பக்கங்கள்

வந்தாச்சு, படிச்சாச்சு, வோட்டும் போட்டாச்சு,
ஆனால் எதுவும் புரிஞ்ச மாதிரி தெரியல்ல,
நான் வளர இன்னும் இருக்குண்ணு நினைக்குறேன்....lol//

அடிங்....சைட் கப்பில் எஸ் ஆகிறீங்களா. உங்களை அப்புறமா கவனிக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

நல்ல விடயத்தை ஆராய்ந்துள்ளீர்கள் உணர்வுகள் சிலநேரங்களில் உணர்ச்சிப் பிழம்பாகப் போனதன் வலிகள்தான் 1990 இன் இடம்பெயர்வு இது சில விடயங்களில் காலத்தின் தேவையாக சிலர் செய்த பாரதூரமான செயல்கள் எவ்வளவு இழப்பை ஏற்படுத்தியது என்பதை சிலருக்கு ஏற்படுத்தி இருந்தது அதன் தாக்கம் மூத்தவர்கள் செவிவழியாக சொல்லக் கேட்டிருக்கிறன்!
மேலும் 2003 இல் சில இஸ்லாமிய நண்பர்கள் மீள யாழ் வந்தார்கள் குடியேற துரதிஸ்டவசம் அவர்கள் குடியிருப்புக்களை தமிழ் உறவுகள் அகலவில்லை !இன்னொரு விடயன் நாளை வருகிறேன் எனக்கும் தூக்கம் போட்டுத்தாக்குது நண்பா!//

ஆமாம் சகோ, காலம் செய்த துரதிஸ்டம் என்று சொன்னாலும், இன்று வரை- பல வருடங்களின் பின்னரும் முஸ்லிம்களோடு நாம் சேர்ந்து வாழப் பின்னிப்பதன் காரணம் என்ன சகோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@ரியாஸ் அஹமது


எனக்கு இந்த வரலாற்று தகவல் இந்த பதிவின் மூலம் தான் தெரியும் . விரைவில் ஒற்றுமை பிறக்க இறைவனை பிராத்திப்போம்//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

@ நிரூபன் - இலங்கைத் தமிழர் ஒருவரிடம் இருந்து இப்படியான பார்வையில் ஒரு பதிவுக்கே பெரிய கும்பிடு போட வேண்டும்.

முதலில் இஸ்லாமியர்கள் என்போர் தமிழர்கள் இல்லையா என்றக் கேள்விக்குப் பதில் தேட வேண்டும். இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை எனில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் ஏன் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ள வேண்டும் என்றக் கருத்து எழுகின்றது. இஸ்லாமியர்கள் அரபி வம்சாவளிகள் எனில் இலங்கையின் குடியேறிய பொழுது சிங்கள மொழியை அல்லவா பேசி இருக்க வேண்டும்.//

வணக்கம் சகோ, இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? அவர்களின் பூர்வீகம் என்ன என்பதனை என்னுடைய இப் பதிவின் இரண்டாவது பந்தியில் விளக்கியுள்ளேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

மதமாறிய இஸ்லாமியர் பலரும் தலித்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரே என்பதும் வரலாற்று உண்மை - அதனாலேயே டச்சுக் காலத்தில் தம்மை மேல் சாதியாக ஆக்கிக் கொண்ட வேளாளர் மத்தியில் முஸ்லிம் வெறுப்புணர்வு இன்று வரை இருக்கின்றது .... யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட 99 சதவீத தமிழர்கள் இன்றளவும் முஸ்லிம் வெறுப்பாளர்களே என்பது வேதனையான ஒன்று.. ஆனால் பிற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் அப்படி இருந்தார்களா? என்றால் இல்லை என்பதே உண்மை... !!! குறிப்பாக கிழக்கு மாநிலத் தமிழர்கள் - முஸ்லிம்களுக்கு இடையேயான குடி முறை வழக்கங்கள்.//

ஆமாம், சகோ இந்த விடயங்களையும் இப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். உண்மையும் இது தான். தமிழர்கள் தங்களிலிருந்து மதம் மாறிய தம் உடன் பிறப்புக்களைத் தான் இன்றும் கூடப் பிரித்துப் பார்க்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


முஸ்லிம்களை தமிழர்களிடம் இருந்து தனித்துப் போவதில் பெரும்பங்காற்றியவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆதிக்க அரசியல் சக்திகளே என்பதும் வரலாற்று உண்மை. இதனையே தமிழ்ப் புலிகளும் மேலும் மேலும் செய்துவந்தார்கள். அவர்கள் ஒருபோதும் முஸ்லிம்களை நம்பியது இல்லை என்பதும், புலிகள் நடத்திய படுகொலைகளுமே இதற்கு சாட்சி....//

புலிகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே முஸ்லிம்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி தொடங்கி விட்டது. அதற்கு உதாரணமாகப் பதிவில் முதன் முதலாக இலங்கையில் இடம் பெற்ற சிங்கள முஸ்லிம் கலவரம் தொடர்பான விடயங்களையும், அதன் பின்னரான வரலாற்றுத் தகவல்களையும்,

தனிச் சிங்களச் சட்டத்தின் பின் முஸ்லிம்கள் எவ்வாறு நோக்கப்பட்டார்கள் என்பதையும் விளக்கமாகக் கூறியுள்ளேன் சகோ.

புலிகளுக்கு முற்பட்ட காலப் பகுதியில் தொடங்கிய தமிழ் முஸ்லிம் இனத்துவ விரிசல் புலிகள் காலத்தில் விஸ்பரூபம் எடுத்துக் கொள்கிறது சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


முஸ்லிம்கள் - இந்திய வம்சாவளியினருக்கு இடையே எந்த பிணக்கும் ஏற்பட்டதும் இல்லை என்பதும் நினைவில் வைக்கவேண்டியதொரு தகவல்.//

ஆனாலும் மலையகப் பகுதியில் ஒரு சில இடங்களில் முஸ்லிம் மக்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் இடையில் சிறு சிறு கலவரங்கள் இடம் பெற்றுள்ளன சகோ.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஒகே நல்லது!

நிரு உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள்! முதலில் நீங்கள் ஈழம் என்ற சொல்லுக்கு விளக்கம் தர வேண்டுகிறேன்! பலபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஈழம் என்பது இலங்கையில் வடகிழக்கை குறிக்கும் என்றும், தமிழீழத்தை குறிக்கும் என்றும்!

தமிழகத்தில் பேசும் போது ஈழத்தமிழர் என்றே பேசுகிறார்கள்! அவர்கள் ஈழத்தமிழர்கள் என்று அனுதாபம் காட்டுவது ஒட்டுமொத்த இலங்கை தமிழர்கள் மீதுமாகும்!

அதாவது யுத்தத்தால் ஒரு போதுமே பாதிக்கப்படாத தமிழர்கள், ஷெல்லடி என்றால் என்னவென்று தெரியாத தமிழர்கள், பங்கர் வெட்டி அறியாத தமிழர்கள், சிங்களவனோடு சேர்ந்து வாழ்தல் குற்றமில்லை என்று கருதும் தமிழர்கள், அவர்களோடு சேர்ந்து பைலா போடும் தமிழர்கள்

இப்படி பலவிதமான தமிழர்கள் இலங்கையில் இருக்கிறார்கள்!

ஆனால் இவர்கள் அனைவருமே ஈழத்தமிழர்கள் என்றே தமிழக மக்களால் அழைக்கப்படுகின்றனர்!

தமிழக மக்கள் காட்டும் அனுதாபம் நான் சொன்ன மேற்படி தமிழர்களுக்கும் போய்ச்சேருகிறது!

முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்களின் தீக்குளிப்பு மேற்சொன்ன தமிழர்களுக்காகவும் தானா?

எனக்கு ஒரே குழப்பமா இருக்கு?

நிரு, இப்பதிவின் தலைப்பு ஈழத்தமிழர்கள் ஈழத்து முஸ்லிம்களை அடக்கி வாழ நினைப்பதாக சொல்கிறது!

நீங்கள் சுட்டும் ஈழத்தமிழர்கள் என்போர் யார்? கண்டி நுவரெலியா தமிழர்களுமா?

பதில்?

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


வடக்கு கிழக்கில் தமிழர்களிடம் இருந்து முஸ்லிம்களைப் பிரிக்கும் வேலையில் உச்சக்கட்ட பணியாற்றிவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரும் ஆவார்கள்.//

இல்லைச் சகோ, முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்ப காலத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்தே தான் இருந்தது. பின்னர் தான் இரு கட்சிகளும் பிரிந்து கொண்டன.

இதிலும் தமிழர்கள் முஸ்லிம்களை இஸ்லாமியத் தமிழர்கள் எனும் அடை மொழியோடு அழைத்த காரணமும் இப் பிரிவிற்கான காரணங்களுள் ஒன்று சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

இன்றைய நிலையில் தமிழர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, மலையக தமிழர்களுக்கோ எந்தவித உருப்படியான தலைமைகள் இல்லாத துர்பாக்கிய நிலை என்பதும் உண்மை. இந்த இனம் அனைத்தும் தமது குறுந்தேசிய இனவாதங்களை விட்டுவிட்டு '' நாம் இலங்கைத் தமிழர் '' என்ற ஒரேக் கூரைக்குள் வரவேண்டும்.

அதற்கான முயற்சிகளை இளைய சமூகம் செய்ய வேண்டும் ....

இளைஞர்கள் மனது வைத்தால் நடக்காதது என்று ஒன்றுமில்லை ...//

இதனைத் தான் என் பதிவினூடாகவும் சொல்லியிருக்கிறே சகோ,
உங்கலின் புரிந்துணர்விற்கு நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'


தங்கள் மீது சலாம் உண்டாகட்டும் சகோ.நிரூபன்,

அருமையான இடுகை..!//

நன்றிகள் சகோ,

நிரூபன் said...
Best Blogger Tips

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'


1947-ல், பாரதம்...இந்தியா-இலங்கை-பாகிஸ்தானாக பிரிக்கப்பட்டது அல்லவா..?

அது 'சிறந்த புத்திசாலித்தனம்' எனப்பட்டது அல்லவா..?

அதேபோல...

'சிங்கள-இலங்கை', 'தமிழ்-ஈழம்...' & "முஸ்லிம்-ஈழஸ்தான்..." என்று மூன்று தனித்தனி அரசுகளாக ஆகட்டுமே..? என்ன கெட்டுவிடும் இப்போது..?//

சகோ நீங்கள் கூறும் ஈழஸ்தான் எனும் கூற்று இக் காலத்திற்கேற்றதாகப் படவில்லை சகோ. காரணம் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்திற்கே பல வருடங்களான நிலையிலும் பயனேதும் கிட்டவில்லை.

எதிர்காலத்தில் ஒரு நாட்டினை மூன்றாகத் துண்டாடுவதற்கு பெரும்பான்மை இனமாகிய சிங்கள இன மக்கள் இணங்க மாட்டார்கள் என்பது தான் யதார்த்தம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கி உலகம்


நண்பா அருமையான ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கீங்க......
மத மாற்றம் என்பதே சொந்த மதத்தால் புறக்கணிக்கப்படும் போது ஏற்படுவதே.....
அதனால் நம் சகோதரர்களிடையே பிணக்குகள் தீர ஒன்று படுவோம்!//

நன்றிகள் சகோ.

தனிமரம் said...
Best Blogger Tips

நண்பா 2003 இல் திரும்பிய இஸ்லாமிய சகோதரர்கள் 5சந்தியில் இதை விளக்கத்தேவையில்லை யாழில் இருப்பதால்  சில வீடுகளைப் போய் பார்த்தால் (உண்மையில் இது அவர்களின் வீடுகள் தான் இதுக்காக எனக்கு செம்பு வரும்  என்பதைத்தாண்டி  அவர்கள் வீட்டில் போராளிகளின் உறவினர்கள் இருந்தார்கள் என் குடும்பத்தினர் கூடத்தான் ) உடனடியாக காலி பண்ணும் வசதி இருக்கவில்லை யாழில் இலண்டன் காரர்கள் வீட்டின் விலையை , வாடகையை உயர்த்தினார்கள் நான் நேரில் பாதிகப்பட்டவன் இப்படியான தருனத்தில் பலர் வீடுகளை விட்டு எழும்பவில்லை(கொஞ்சவீடுதானே இருந்தது மீதி போனது எங்கள் துயரம்)பாவம் அவர்கள் சில நண்பர்கள் வீட்டில் கடைகளில் இருந்தார்கள்  அந்த இடம் கஸ்தூரியார் வீதியை ஊடருக்கும் பள்ளிக்கு போகும் பாதையில் (ரோட்டை மறந்து விட்டேன் வயசு போய்விட்டது) ஆனாலும் பாவம் அன்நாட்களில் ஏதும் செய்ய முடியவில்லை இவர்கள் வியாபாரம் செய்தார்கள் பழைய இரும்புகளை (ஆமி போட்ட  மூள்கம்பிகூட) கொழும்புக்கு ஏற்றினார்கள் இன்னொன்று யாழில் மரபுப் பொருள்கள் தேக்குக் கட்டில் , பெட்டகம், பலசிலைகள் எல்லாம் பெருன்பான்மை சகோதரர்கூடச் சேர்ந்து இவர்கள் வாங்கிச் சென்று  இலாபம் சம்பாதித்தார்கள் இதைப் புரிந்தே பின்நாளில் போராளிகள் ஓமந்தையில் சிலபொருட்கள் வெளியேற தடை போட்டார்கள் இது நான் கண்கூடாக கண்ட உண்மை எனக்கு எந்த பின்னூட்டங்கள் வந்தாலும்  (வலையை முடக்கினாலும் கருத்து மாறாது)  இப்படியான நிலமையில் யாரை யார் நம்ப முடியும் இருந்தாலும் அவர்களையும் அரவனைக்கனும் ஏன் எனில் என் நண்பர் குடும்பங்களில் குத்துவிளக்கு ஏற்ற வந்த மருமகள் வரிசையில் இருக்குறார்கள் சில இஸ்லாமிய சகோதரிகள்! இன்னும் சொல்ல பல இருக்கு இப்படியான பதிவுகளை திங்களில் வந்தால்  கொஞ்சம் நேரம் இருக்கும் இந்த புலம்பெயர் ஏதிலிக்கு!

நிரூபன் said...
Best Blogger Tips

@விசரன்


எம் ஆர் ஸ்டாலின் எழுதிய”தமிழீழப் புரட்டு” என்னும் புத்தகமும் இப்பிரச்சனை பற்றி பேசுகிறது.//

நன்றிகள் சகோ, அந்தப் புத்தகம் என் கைக்குக் கிடைக்கவில்லை.
கிடைத்திருந்தால் இன்னும் பல தகவல்களை அறியக் கூடியதாக இருக்கும். பகிர்விற்கு நன்றிகள் சகா.

நிரூபன் said...
Best Blogger Tips

@சார்வாகன்

நன்றிகள் சகோ, இலங்கையை வற்புறுத்த, இஸ்லாமியச் சகோதர்கள் உலக நாடுகளை நாடுவதில் தவறில்லை. ஆனால் அந்தத் தீர்வுகளையோ அல்லது உலக நாடுகள் கூறும் விடயங்களையோ எமது உள்ளூர் அரசு ஏற்குமா என்பது கேள்விக் குறி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


நண்பா.. இந்தப்பதிவுக்கு பின்னூட்டம் இடும் அளவுக்கோ,கருத்து சொல்லும் அளவுக்கோ எனக்கு மெச்சூரிட்டி பத்தாது..//

புரிகிறது சகோ.
வருகைக்கு நன்றி சகா.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


This post has been removed by the author.//

சகோ, இதனை நான் அழிக்கவில்லை;-))

ஒரு ப்ளாக் சாப்பிட்டிருக்குமோ;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


@ முஹமத் ஆஷிக் - இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் தனி இனமாக இருப்பதாக எனக்குப் படவில்லை ... அரசியல் ரீதியாக தனியே செயல்படுகின்றார்களே ஒழியே.. ஏனைய வாழ்வியல் ரீதியாக வடக்கு - கிழக்கில் பிற தமிழர்கள் சார்ந்தும், சிங்கள் தேசத்தில் சிங்கள மக்கள் சார்ந்தே வாழ வேண்டிய நிலை இருக்கின்றது.

முஸ்லிம் ஈழஸ்தான் - என நீங்கள் எளிதாக இங்கிருந்து தீயை பற்ற வைத்துவிடுவீர்கள் - இதனால் வெந்து வேகப் போவது அப்பாவி மக்களே ஆவார்.//

ஆமாம் சகோ, முப்பதாண்டு ஈழப் போரிற்கே முடிவேதும் கிடைக்காத நிலையில் பல உயிர்களை இறக்கச் செய்வதற்குரிய வழியாகத் தான் தனி ஈழஸ்தான் போராட்டமும் அமையும். இக் காலத்தில் அது சாத்தியமற்ற ஒன்று சகோ.

உங்கள் கருத்துக்களுக்கும், விளக்கங்களுக்கும் நன்றிகள் சகா.

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்

தற்போது விடுதலைப் புலிகள் சுத்தமாக துடைத்தெறியப் பட்டதால் முஸ்லிம்களும், தமிழ் இந்துக்களும் பழைய சண்டைகளை மறந்து இலங்கையை ஒன்றிணைந்து கொண்டு செல்ல வேண்டும். சிறந்த தலைமையின் மூலமே இது சாத்தியப்படும். ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் முஸ்லிம்கள் தரப்புக்கு ஏற்ற அமைப்பாக நான் கருதுகிறேன்.

மற்றபடி இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் பூர்வீகமாக தமிழ் இந்துக்களே! தமிழகத்தைப் போல் சாதிக் கொடுமையால் மதம் மாறியவர்கள். எனவே தமிழ் இந்துக்களின் ரத்த உறவுகளே இன்றைய இலங்கை தமிழ் முஸ்லிம்கள்.

மற்றபடி சிறந்த ஆய்வு இடுகையை அளித்த சகோ. நிரூபனுக்கு நன்றிகள்.//

சகோ, நமக்குள் ஒற்றுமை மேலோங்க வேண்டும் எனும் கருத்த்தினைப் புரிந்து நீங்கள் வழங்கியுள்ள விளக்கங்கள் தான் இக் காலத்திற்குப் பொருத்தமானதாகும்,
நன்றிகள் சகா.

நிரூபன் said...
Best Blogger Tips

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'

@ இக்பால் செல்வன்...

கட்டுரையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் 'தனி இனம்' என்றுதான் கூறப்படுகிறது.

அப்படித்தான் இதுநாள்வரை மற்ற இனங்களால் பாவிக்கபடுகிறது.//

சகோ, கட்டுரையில் தமிழர்களில் இருந்து மதம் மாறிய முஸ்லிம் சகோதர்களைத் தமிழர்கள் தான் தமது சுய நலம் வேண்டித் தமிழ் இஸ்லாமியர்கள் என்று பிரித்தார்கள் என்று தான் நான் எழுதியுள்ளேன்.

இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சி தான்,
பின் நாளில் முஸ்லிம்கள் தனி இனமாக உருவாகக் காரணமாகியது சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மங்குனி அமைச்சர்

இது வேற டிராக் பாஸ் , நோ கமண்ட்ஸ்//

பாஸ், பாதை மாறி வந்தாலென்ன? கொஞ்சம் பசியாறிட்டுப் போறது.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஷர்புதீன்

விவாதத்திர்க்குரிய கருத்துக்களை கண்டால் ஓடும் பதிவர்களை அடுத்து வரும் எல்லா விஜய் /சிம்பு /ரித்தீஷ்/ பவர் ஸ்டார்ட் சீனிவாசன் படங்களை பார்க்க உத்தரவிடுகிறேன்.

எனது பதிவிலும் இன்று விவாதம்தான், என்ன ஆச்சு பதிவுலகுக்கு ? ஒரே மதம் குறித்த பதிவுகளாக இருக்கிறது ?//

அடிங்....ஐடியா சொல்லுற ஆளைப் பாரு...

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்


நல்ல கருத்துக்கள்//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்

வருத்தமாக இருக்கிறது,படிப்பதற்கு.
எனக்கு ஒன்று புரியவில்லை. மனக்கசப்பு என்றால் இரு வேறு மதங்களிடையோ அல்லது இரு வேறு மொழியினரிடையோ ஏற்படலாம். ஆனால் இங்கு முஸ்லிம்,தமிழர் என்று சம்பந்தமில்லாத பிரிவுகள்! அம்முஸ்லிம்களும் தமிழர்கள்தானே?
பின் ஏன் இப்படி?//

ஆமாம் ஐயா, தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வற்ற நிலை தான் இந் நிலமைக்கு காரணம். அனைவரும் புரிந்துணர்வோடு பழக வேண்டும் என்பது தான் இப் பதிவினூடாக நான் முன் வைக்கும் கருத்துக்களும்.
நன்றிகள் ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி


பாராட்டுக்கள் நிரூபன், இக்பால் செல்வன்!//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


ஒரு சிறிய திருத்தம் - மாற்றுக்கருத்துக்கள்//

அதானே பார்த்தேன், என்னது மாட்டுக் கருத்துக்களா. அவ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@Ibnu Halima

நன்றிகள் சகோ, ஒரு சந்ததி விட்ட தவறுகளை, மீண்டும் மற்றுமோர் சந்ததிக்குச் கொண்டு செல்லக் கூடாது எனும் எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்தப் பதிவு.

நிரூபன் said...
Best Blogger Tips

@Ibnu Halima

எனவே தனிநாடு கோரிக்கை இலங்கையில் ஏற்புடையதல்ல என்பது தான் எனது கருத்து.//

இல்லைச் சகோ, தமிழர்கள் பிரிந்து வாழ்வதோ அல்லது தனி நாட்டினைப் பெறுவதோ இக் காலத்தில் ஏற்புடைய ஒரு விடயமாகத் தெரியவில்லை. அதற்கு நடை முறை அரசியல் நிகழ்வுகளே சான்றாகின்றன, ஆனால்
தமிழர்களும் இஸ்லாமியர்களும் தமக்கென ஒரு தீரிவினைப் பெற்று நிரந்தரமாகச் சுபீட்சத்துடன் வாழ உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்பது தான் எல்லோரினது ஆசை.

நிரூபன் said...
Best Blogger Tips

@Ibnu Halima

உங்களின் விரிவான பதிலிற்கும், விளக்கங்களிற்கும் நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


ஒகே நல்லது!

நிரு உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள்! முதலில் நீங்கள் ஈழம் என்ற சொல்லுக்கு விளக்கம் தர வேண்டுகிறேன்! பலபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஈழம் என்பது இலங்கையில் வடகிழக்கை குறிக்கும் என்றும், தமிழீழத்தை குறிக்கும் என்றும்!

தமிழகத்தில் பேசும் போது ஈழத்தமிழர் என்றே பேசுகிறார்கள்! அவர்கள் ஈழத்தமிழர்கள் என்று அனுதாபம் காட்டுவது ஒட்டுமொத்த இலங்கை தமிழர்கள் மீதுமாகும்!//

சகோ ஈழம் எனும் சொற்பதமானது சங்க இலக்கியங்களை அடிப்படையாக வைத்து எழுந்த இலங்கையின் புராதன தமிழ்ப் பெயர். அல்லத் முழு இலங்கையினையும் குறிக்கச் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு தூய தமிழ்ப் பெயர். இதற்குரிய விளக்கங்களை நான் என்னுடைய விவாத மேடைப் பதிவில் சொல்லியிருக்கிறேன்,
ஆனாலும் தங்களின் கேள்விகளின் காத்திரத் தன்மையினை உணர்ந்து இதற்கென்று ஓர் தனிப் பதிவின் மூலம் ஈழம் எனும் சொல்லிற்கான விளக்கத்தினை முன் வைக்கலாம் என்றிருக்கிறேன்.

நல்லதோர் விடயத்தை, கருவாகத் தந்த உங்களிற்கு நன்றி சகோ.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

சகோ.நிருபன்,
///*இலங்கை அரசானது தமிழர்களுக்கான தீர்வினைக் காலதி காலமாக இழுத்தடித்துக் கொண்டே வருகிறது. சந்தர்ப்ப சூழ் நிலைகளால் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்பட்டாலும்,////---இதில் "தீர்வு" என்பது என்ன..?

அது "தனி ஈழம்" தான் என்று நான் ஏன் புரிந்து கொண்டேன் என்றால்...

///எந்த ஒரு சுய நிர்ணய உரிமை உடைய இனமும்- இன்னோர் இனத்தின் கீழ் அடங்கி வாழ மாட்டாது. அந்த வகையில் தமிழர்களுக்கான உரிமை வழங்கப்பட்டால் - முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு நீங்கள் கூறப் போகும் பதில் என்ன? முஸ்லிம்களுக்கான உரிமையினை யார் வழங்கப் போகிறார்கள்?///---ஆக, இதில் முஸ்லிம்களுக்கான உரிமையை சிங்களர்களும் வழங்கவில்லை... ஒருவேளை "தீர்வு" எனும் தனி ஈழம் கிடைத்தாலும் அதில் ஒரு பகுதியை ஈழத்தமிழர்கள் முஸ்லிம்களுக்காக வழங்கப்போவதுமில்லை..!

இதனை... அடுத்துவரும் உங்களின் மிக நல்ல கருத்துக்களுக்கு ///அதனை உங்களில் எத்தனை பேர் செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?
இத்தகைய ஓர் முயற்சியினைக் வெகு விரைவில் செயற்படுத்த நாம் எவ்வாறான வழி முறையினைக் கையாளாலாம்?///----இங்கே ஒருவர்கூட பதில் அளிக்கவில்லை என்பது நெஞ்சை சுடுகிறது..!


நான் "ஈழஸ்தான்"...என்று ஒரு பேச்சுக்கு குறிப்பிட்டதற்கே... //பல உயிர்களை இறக்கச் செய்வதற்குரிய வழியாகத் தான் தனி ஈழஸ்தான் போராட்டமும் அமையும். இக் காலத்தில் அது சாத்தியமற்ற ஒன்று சகோ.//---என்று மறுதலித்து விட்டீர்கள். இதே விதிதான் சிங்கள பேரினவாத்திற்கும் பொருந்தும் அல்லவா..?


///தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்...///---இதுதான்ராஜபக்சே சொல்லும், பாசிஸ சர்வாதிகார அடக்குமுறை சிங்கள வெறி..! இதை நீங்கள்,நாம் எதிர்க்கிறோம்..!

அப்புறம்...
சகோ.இக்பால் செல்வனின்... ///முஸ்லிம்கள் விரும்பினாலும், விரும்பாவிடினும்...///---இதுதான் அதேபோன்ற தமிழின வெறி..!

ஆனால், இதற்கு நீங்கள் ஒரு கண்டனமும் தெரிவிக்க வில்லை. இதனை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா..?
உங்கள் பதில் என்ன..?

ஆக...

கூட்டிக்கழித்து பார்த்தால்...

காயத்துக்கு மருந்திட யார்க்கும் மனம் இல்லை...!


உங்கள் பதிவில்... ஆப்ரஹாம் லிங்கனின்..."The best way to destroy an enemy is to make him a friend"---இதில் என்ன சொல்கிறீர்கள்...? யார் இங்கே enemy..?
---இதற்கும்...

///தமிழ் முஸ்லிம் உறவினைக் கட்டியெழுப்ப விரும்பினால், நாம் எமது குழந்தைகளினை முஸ்லிம் சகோதர்களோடு அந்நியோன்னியமாகப் பழக விட வேண்டும்.///
----இதற்கும்...

ஏதும் சம்பந்தம் உண்டா..சகோ.நிருபன்..?

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ....எனக்கென்னவோ இந்தப் பதிவு பிடிக்கேல்ல.மனசில படுறதைச் சொல்றன்.மதப்பிரச்சனை,சாதிப்பிரச்சனை எண்டெல்லாம் நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளைப் பதிவாக்கிறீங்கள் எண்டாலும் பழையதுகளைக் கிளறுவதாகவே எனக்குப் படுது.எங்கட ஊத்தைகளை நாங்களே மணந்து பாக்கிறமாதிரி இருக்கு எனக்கு.மறந்து மறைந்து போகும் நிலை வேணும் எங்களுக்கு இப்ப.நடக்கிற வேலைகள் இன்னும் நிறைய இருக்கு.
ஒன்றாகவேணும் நிரூ !

கவி அழகன் said...
Best Blogger Tips

பெரிய மீன் சின்ன மீனை தின்ன தான் பாக்கும் , நீங்கள் எழுதியதில் பல விடயங்களில் ஒத்துபோனாலும் முஸ்லிம் மக்கள் இப்பவும் மனதளவில் தமிழர்களிடம் குரோதமாக இருக்கிறார்கள் என்பதை விட முஸ்லிம் அரசியல் வாதிகள் அதை ஒரு அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லலாம்.
என் சொந்த அனுபவத்தில் பல மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் நண்பர்களோடு பழகியிருக்கிறேன் பல முஸ்லிம் கிராமங்களில் வேலை செய்திருக்கிறேன் நண்பர்கள் மக்கள் என்றும் குரோத மனப்பாங்கோடு பழகுவதில்லை
இப்பொழுது அம்பாறையில் முஸ்லிம் காணிகள் சிங்களவர்களால் பறிக்கப்படுவதால் புலிகள் இருந்தால் நல்லம் என்று பல முஸ்லிம்கள் சொல்லுகிறார்களாம் என்று என் நண்பன் சொன்னான்
வியாபரத்தை தொழிலாக கொண்டவர்கள் குரோத்ததை வளர்பதில்லை அப்படி வளர்த்தால் வியாபாரம் கெட்டுவிடும் என்று அவர்கள் யாராக இருந்தாலும் தமிழரோ சிங்களவரோ அன்பாக பழகி வடிவா கவனித்து தான் அனுப்புகிறார்கள்
இன்னும் பல தனிப்பட்ட அனுபவம் இருந்தாலும் எலாம் எழுதமுடியாமல் இருக்கு

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

நீங்களும்,இக்பால் செல்வனும் தீர்வுகளுக்கான விவாதக் களத்தை கொண்டு வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இக்பால் செல்வனின் தமிழர்கள் மொழியின் அடிப்படையில் ஒன்று பட்டு வாழ வேண்டும் என்பதே சரியான தீர்வாக இருக்குமென்று நினைக்கின்றேன்.தமிழகத்திலும் திராவிட,ஆரிய சிந்தனைகள் இருந்தாலும் கூட மனதுக்குள் உவ்வே காட்டினாலும் ஒன்றொடு ஒன்று அவ்வப்போது இணைந்து கொள்ளவும் செய்கிறது.அதை விட மத வழிபாடுகளில் வித்தியாசப்பட்டாலும் ஏனைய கலாச்சார அடிப்படையில் இந்துக்களும்,முஸ்லீம்களும் மொழியென்ற ஊன்றுகோலோடு நிமிர்ந்து நிற்க இயலும்.

ஆசிக்கின் விவாதம் விவாதப்படி சரியானதேயென்றாலும் தொலை நோக்குப் பார்வையில் மூன்று நிலை வாழ்க்கை சரியாகத் தோன்றவில்லை.அதுவும் அதற்கான போராட்ட குணங்கள் கூட இஸ்லாமியர்களிடம் இல்லாத நிலையில்.

தமிழர்களிடமும் இணையாத,சிங்களத்தவர்களோடும் இணைய இயலாத நிலையிலேயே இப்பொழுது முஸ்லீம்கள் பயணிக்கிறார்கள்.

தனி ஈழம் என்ற கட்டமைப்பில் இக்பால் செல்வன் கூறியது போல் நாம் இலங்கைத் தமிழர்கள் என்ற நிலையில் போராடவும் பின்னூட்டத்தில் திரு.சார்வகன் கூறியது போல் இஸ்லாமியர்கள் கூட உலகளாவிய அளவில குரல் கொடுக்க இயலாது போனாலும் அமைப்பு என்ற ரீதியில் இஸ்லாமிய நாடுகளின் உதவியை நாடுவதும் கூட இலங்கை அரசு சட்ட அமைப்புக்கு அழுத்தங்களை கொண்டு வரும்.

ஆகுலன் said...
Best Blogger Tips

நல்ல பதிவு அண்ணா..............

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

ஹேமாவின் பின்னூட்டம் காண நேர்ந்தது.நேரடியாக நோக்கினால் மைக்ரோ மன உளவியலைப் பிரித்து நோக்கும் போது கோபங்கள்,பின்னடைவுகள்,ஒன்றோடு ஒன்று ஒட்டாத மனநிலையையே உருவாக்கும்.ஆனால் இந்த கால கட்டத்தில் பேசித் தீர்ப்பது மட்டுமே தீர்வுகளுக்கான ஏதாவது ஒரு வழிப்பாதையை திறக்கும்.

முந்தைய பின்னூட்டத்தில் சொன்னபடி தமிழர் என்ற அமைப்பில் இணையாமல் பயணித்த நிலையே கூட விடுதலைப்புலிகளுக்கு நம்பகத்தன்மையின்மை காரணமாக இருந்திருக்கலாம்.ஆனாலும் முஸ்லீம்கள் விரட்டப்பட்டது விடுதலைப்புலிகளின் வரலாற்றுத்தவறு என்பதோடு தற்போதைய சூழலில் அதனையும் தாண்டி வடகிழக்கு மக்களுடன் பயணிக்க வேண்டிய சூழலில் முஸ்லீம்கள் இருக்கிறார்கள்.

தமிழர்களுடன் இணைந்து குரல் கொடுப்பதுவே முஸ்லீம்களுக்கு இணைந்து வாழும் சூழலை உருவாக்கும்.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//என்னை பொறுத்தவரை இலங்கை என்ற நாட்டை துண்டாடுவதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். //

பிரச்சினைகளின் அடிப்படைகள் உருவான விதம் அதன் திசைகள் மாறிபோய் நீண்ட நாட்களான பின் அடைப்பானில் இருக்கும் மாதிரியான கருத்துக்கள் வேர்களை நோக்காத மேம்போக்கான பார்வையென்பேன்.

இதற்கான சூழல்கள் உருவாகின்றன என்ற எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் எச்சரிக்கைகளையெல்லாம் புறம் தள்ளிய அப்போதைய இலங்கை அரசின் சிங்கள பேரினவாத கோட்பாடே இன்றைய நிலைக்கு காரணங்கள்.அப்படியும் ராஜபக்சே வரை இலங்கை அரசு திருந்தியபாடில்லை.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

இலங்கையில் மக்களின் மனநிலை எப்படியென்று என்னால் சொல்ல இயலவில்லை.ஆனால் வளைகுடா நாடுகளில் சிங்களவர்கள்,முஸ்லீம்கள்,இந்துக்கள் என்ற பாகுபாடில்லாமல் இலங்கை என்ற குடையில் ஒன்றாக கலந்து விடுகிறார்கள்.ஆனாலும் சிங்களவர்களுக்கும்,இந்துக்களுக்கும் மொழி ஒரு பிரச்சினையே.முஸ்லீம்களுக்கும்,இந்துக்களுக்கும் இந்த பிரச்சினையில்லை.

எனவே மக்கள் இணைவதில் பிரச்சினைகள் இல்லையென்பதோடு மொத்த சீரழிவுக்கும் அரசு இயந்திரத்தின் சட்டங்களும்,காவல்துறை,ராணுவத்தின் அடக்கு முறைகளே மக்களைப் பிரித்தன,பிரிக்கின்றன எனலாம்.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//இல்லைச் சகோ, தமிழர்கள் பிரிந்து வாழ்வதோ அல்லது தனி நாட்டினைப் பெறுவதோ இக் காலத்தில் ஏற்புடைய ஒரு விடயமாகத் தெரியவில்லை.//

சகோ நிருபன்!இனியும் வளரும் வரலாற்றின் உண்மைகள் எங்கே கொண்டு போய் விடும் தெரியுமா?

கால ஓட்டத்தில் போராடித் தோற்றுப்போன உணர்வால் பெரும் பூதங்களான உலக அரசியல் இல்ங்கைக்கு சார்பாக இருந்தால் இறையாண்மை என்ற பெயரில் அனைத்தையும் மறந்து முன்பும்,தற்போதும் இருக்கும் சிங்கள மேலாண்மையை ஏற்றுக்கொண்டு விடுவது.

அப்படியில்லையெனில் தமிழர்களின் போராட்ட குணத்தாலும்,மக்கள் உரிமைகளை ஓரளவுக்கு மதிக்கும் மேற்கத்திய நாடுகளின் உதவியால் கூடவே அவரவர் சுயநல பூகோள நலன்களோடு குறைந்த பட்சம் Federal State என்ற நிலையிலாவது கௌரவமாக வாழும் நிலையென இரண்டில் ஒன்று.

முதலாவது நிகழ்ந்தால் தமிழர்கள் தோற்றுவிட்டார்கள் என்று பொருள்.
இரண்டாவது நிகழ்ந்தால் தமிழர்களின் வெற்றியென்று பொருள்.எது நிகழ்ந்தாலும் நாணயத்தின் மறுபக்கமாக பிரச்சினைகளும் கூடவே பயணிக்கும்.

shanmugavel said...
Best Blogger Tips

இக்பால் செல்வனை வழிமொழிகிறேன்.உங்கள் இடுகைகளிலேயே மிகச்சிறப்பான பதிவு சகோ .வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

நிரு... இந்த பதிவுக்கு ரொம்ப மெனக்கட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். சிறந்த தொகுப்பு.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

பின்னூட்டம் இடுவதற்கான கண்டிஷன்கள் கண்ணை கட்டுதே சகோ.

NKS.ஹாஜா மைதீன் said...
Best Blogger Tips

நன்றி சகோ....ஈழத்தில் முஸ்லிம்களின் நிலையை எடுத்து காட்டியதற்கு....இதுவும் தனி ஈழம் கிடைக்காததற்கு ஒரு காரணம் என நான் நினைக்கின்றேன்...கடந்த கால கசப்புகளை மறந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்று மொழியின் அடிப்படையில் முஸ்லிம்களும்,ஈழ தமிழர்களும் ஒன்று சேர வேண்டும்...காலபோக்கில் இது சாத்தியப்படும் என்றே நம்புகிறேன்...

Anonymous said...
Best Blogger Tips

////நிரூபன் said...

@கந்தசாமி.


இவ்விவாதத்துக்கு பின்னூட்ட கருத்தென்பது கத்திமேல நடக்கிறது போல....)//

முதல் வருகைக்கும், மங்களகரமாக விவாதத்தினை ஆரம்பித்து வைத்த உங்களின் நல் முயற்சிக்கும் நன்றிகள் சகோ./////

ஹஹாஹா இருக்கட்டும் இருக்கட்டும்

Anonymous said...
Best Blogger Tips

////கத்தி மேல் நடப்பது- அப்படியானால் உங்களால் எங்கள் கடந்த காலத் தவறுகளை மறந்து வாழவோ அல்லது முஸ்லிம்களுக்குச் சார்பாகக் கருத்தினைச் சொல்லவோ முடியவில்லை.

இரண்டும் கெட்டான் நிலையில் நிற்கிறீர்கள் என்று அர்த்தமாகுமா? இல்லை நடு நிலையாளர் என்று பொருள்படுமா சகோ.///

தப்பென்பது ஈழ தமிழர்கள் மட்டுமானதல்ல அதற்காக ஈழ தமிழர்கள் தப்பு செய்யவில்லை என்று சொல்லவில்லை, அதே போல ஈழ முசிலீம்களும் 'பொன் இராமநாதன் காலத்தில் இருந்து or பிறகு தமிழர்கள் மீது குரோதத்தை வளர்த்துக்கொண்டே வந்துள்ளார்கள்.
ஆக தமிழர்கள் / போராளிகள் செய்த தவறுகளை சுட்டும் போது துரோகி பட்டமும் , முசிலீம்கள் செய்த தப்பை சுட்டும் போது இனவாதி என்ற பட்டமும் விழலாம் அது தான் சொன்னே 'கத்தி மேலே நடப்பது'' போல என்று ..........

Anonymous said...
Best Blogger Tips

நான் பல சமயங்களில் அவதானித்துள்ளேன் ஈழத்தில் உள்ள / ஈழத்தை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எந்த ஒரு தமிழ் பேசும் முசிலீம் மதத்தவரும் தன்னை தமிழராக அடையாளப்படுத்தார்கள்... இதற்க்கு இது வரை எனக்கு காரணம் புரியவில்லை. ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் பேசும் முசிலீம் சகோதரன் தன்னை தமிழனாக தான் அடையாளப்படுத்துவார்...
ஆக ஈழத்திலே விரோதம் என்பது இரண்டு தரப்பிலும் இருந்தது / இருந்துவருகிறது .நிச்சயமாக நிலைமை மாறும் என்று நம்புகிறேன்..

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

நானும் வந்துட்டேன்...

Anonymous said...
Best Blogger Tips

//// ஈழ முஸ்லிம்களை அடக்கி வாழ நினைக்கும் ஈழத் தமிழர்கள்! ////

ஈழம் என்பது ஒட்டு மொத்த இலங்கையையும் குறிக்கும் சொல்லாக தான் இருந்து வந்தது. ( சிறு உதாரணமாக பொன்னியின் செல்வன் நாவலை குறிப்பிடலாம் ) ஆனால் தற்போது ஈழம் என்றால் தமிழர் வாழும் வட கிழக்கு என்று திரிவு பட்டுவிட்டது... நான் நினைக்கிறேன் ஈழம் ,தமிழீழம் என்ற இரண்டு சொற்களுக்கான அர்த்தமும் வேறுபாடும் என்று...

நானறிந்து கிழக்கின் அநேக தமிழர்கள் முஸ்லீம்களுடன் ஒற்றுமையாக தான் வாழ்கிறார்கள்..
--------------------------------------------------------
///இல்லைச் சகோ, இன்று பல நூற்றுக் கணக்கான முஸ்லிம் மக்கள் யாழில் மீளக் குடியமர்ந்துள்ளார்கள். ///
இலங்கை அரசாங்கம் முஸ்லீம்களை யாழில் மீள் குடியமர்த்தியதாக இதுவரை அறியவில்லை...

Anonymous said...
Best Blogger Tips

///முஸ்லிம்களுக்கென்றிருந்த காத்த்திரமான தலமையாகிய எம்.எச்.எம் அஷ்ரப் /// இவருக்கு பிறகு ஒரு காத்திரமான தலைமை முஸ்லீம்களுக்கு கிடைக்காமல் போனது துரதிஸ்ரமே.. ரவுவ் ஹகீம் நல்ல தலைவராக வருவார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் அவரும் தம்மை பலப்படுத்துவதை விட்டு பலமான பெரும்பான்மை கட்சிகள் பக்கம் தாவுவதையே முக்கியமாக கொள்கிறார்..

Anonymous said...
Best Blogger Tips

தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?

நிரூபன் தங்களின் பதிவை மையமாக வைத்து திரு. முகம்மது ஆசிக்கின் கேள்விகளுக்கு சேர்த்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளேன். கவனித்தால் மகிழ்வேன். நன்றிகள்.

Anonymous said...
Best Blogger Tips

@ NKS ஹாஜா மொய்தீனை வழிமொழிகின்றேன். முகம்மது ஆசிக்குக்கு இன்னும் விளக்கங்கள் தேவைப்படுகின்றது என நினைக்கின்றேன்.

எப்பூடி.. said...
Best Blogger Tips

YES, இது ஒரு காத்திரமான பதிவு. இந்த பதிவிற்கு நிச்சயமாக எப்படி பின்நூட்டமிடுவதென்று சத்தியமாக தெரியவில்லை, குற்ற உணர்ச்சி அதற்க்கு காரணமாக இருக்கலாம்.

மறக்கப்பட முடியாத மன்னிக்க முடியாத செயலுக்காக ஒரு ஈழத்தமிழனாய் முஸ்லிம் சமூகத்திடம் VERRY VERRY VERRY SORRY; இந்த மன்னிப்பு என் தனிப்பட்ட வேண்டுதல், என்னெனின் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டால் இன்னமும் பல ஈழத்தமிழர்களுக்கு கோபம் வரலாம் :(

I Respect 'ALL' Humans including Singalees; எனக்கு சீமானை பிடிக்காது, ஆனால் சீமானின் 'தம்பி' திரைப்படத்தில் வரும் ஒரு வரி வசனம் என்னை பாத்தித்தது

"உயிர் வலி எல்லோருக்கும் ஒண்ணுதான்"

பதிவுக்கு நன்றி.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

@சகோ.இக்பால் செல்வன் அவர்கள்...

//அவை மூன்றுப்பன்றிகள் என்றக்கதையை உணர்த்துவதற்காகவும் இடம்பெறச் செய்தேன்//---???

ஆனால், எனக்கு யானைகள் படம் போட்டு பதில் சொன்னதற்கு மிக்க நன்றிகள்.

உங்களின் அவசர கொடுக்கி... ஸாரி...குடுக்கைத்தனம் மிகத்தெளிவாக மீண்டும் ஒருமுறை தெரிகிறது..!

நான் என்ன சொன்னேன்...?

அந்த ஈழஸ்தான் (இது சும்மா ஒரு அடையாளப்பெயர்தான்..கஜகஸ்தான்,தஜிக்கிஸ்தான்,உஸ்பெகிஸ்தான்,கிர்கிஸ்தான்.. மாதிரி) எனும் 'தீர்வு'... முஸ்லிம்கள் 'தனி இனம்' என்று கருதப்படுமேயானால்..!

நிகழ்காலத்தில் அப்படித்தானே கருதப்படுகிறது..?

சகோ.நிருபன் மீண்டும் தெளிவாக சொல்லி விட்டாரே..!

///இத்தகைய பிரித்தாளும் சூழ்ச்சி தான், பின் நாளில் முஸ்லிம்கள் தனி இனமாக உருவாகக்காரணமாகியது சகோ///

--என்று..!

அப்புறம்...

தமிழினவாதம் vs. சிங்கள பேரினவாதம்...

முடிந்து...

இனி...

தமிழ்ப்பேரினவாதம் vs. தமிழ்முஸ்லிம் இனவாதம்

...என்று இன்னொரு முப்பது வருஷம்... போர்.. சாவுகள்... என இழுக்கும்..!

போர் எப்போது வரும்..?
போர் எப்போது வரும்..?

ஒருவேளை தனி ஈழம் கிடைத்து அதில் முஸ்லிம்கள் தனி இனம் தான் என்று கருதப்பட்டு அடக்கியாளப்பட்டால் வரும்....

எப்படி.. ஓர் இனத்துக்கு ஒரு 'தீர்வோ' அப்படித்தானே இன்னொரு இனத்துக்கும் அதே தீர்வு தரப்பட வேண்டும்..!?

ஆனால்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

ஆனால்...

சகோ.இக்பால் செல்வன்...

///முஸ்லிம்கள் விரும்பினாலும், விரும்பாவிடினும்...///---என்று சொன்னீர்களே...இதுதான் தமிழின வெறி..!

இதைவிட்டுவிட்டு முதலில் நீங்கள் மீண்டு வெளியே வாருங்கள்..!

அப்புறம்,

ஈழஸ்தான்(?) என்ற ஒரு புண்ணாக்கு தேவையே இல்லையே...!

உங்கள்... ///தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?///---என்ற எதிர்பதிவுக்கு பதில் சொல்ல வேண்டிய ஆள் நீங்கள்தான்,சகோ.இக்பால் செல்வன்..!

உங்கள் தமிழின வெறியை விட்டு முதலில் வெளியே வந்து விட்டால் உங்களின் அந்த பதிவே தேவை இல்லையே சகோ.இக்பால் செல்வன்..!?

இப்பதிவில், உண்மைகளை அப்பட்டமாக சொல்லி மிக நேர்மையாக... "என்ன செய்வதாக உத்தேசம்" என்று ஈழத்தமிழர்களை கேட்டிருக்கிறார் சகோ.நிருபன்.

அவர் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லி இருக்காவிட்டாலும் பரவாயில்லை...

மீண்டும் ஒரு இனவெறியை... பெரும்பாண்மையிடம் சிறுபான்மை // முஸ்லிம்கள் விரும்பினாலும், விரும்பாவிடினும்...//---என்று அடங்கித்தான் போகணும் என்று தமிழ் இனவெறியை பற்ற வைத்து விட்டு...

அதை நான் கேட்டதற்கு பதிலே சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிட்டு...

இப்போது ரொம்ப நல்லவர் மாதிரி வேஷம் கட்டி ஒரு பதிவு போட்டு...

என் பின்னூட்டத்தில் ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்துப்போட்டு கடும் வஞ்சகமாக மற்றவற்றை மறைத்து என்னை ஏதோ ஒரு "பிரிவினைவாதி" போல ரொம்ப கேவலமாய் வில்லன் ஆக்குகிறீர்களே...! பலே..!

சகோ.இக்பால் செல்வன் பதிவுலகுக்கு நீங்கள் மிக மிக மோசமான முன்னுதாரணம் ஆகி வருகிறீர்கள். இனியாவது தயவு செய்து திருந்திக்கொள்ளுங்கள்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

சகோ.இக்பால் செல்வன்,
உங்கள் சகிப்புத்தன்மையை விடவெல்லாம்... பரந்த விஷயம் என்னுடைய citizen of world concept.

அதை இங்கேயும் கூட நான் முன்மொழிந்திருக்கிறேன்.

வெறும் இரண்டே மனிதர்களே ஆதியில் இவ்வுலகில் இருந்து... இப்போது அதே இவ்வுலகில் 195+ நாடுகள் என ஏன் பிரிந்துள்ளோம்..!

அதோடு... இன்னும் இரண்டு சேர்ந்தால் என்ன கெட்டு விட்டது இப்போது..?

முப்பது வருஷம் போர் மிச்சம் ஆகியிருக்கும். இன்னுமொரு பல வருஷம் போர் மிச்சம் ஆகும்..! மனித உயிர் நாசம் மிச்சம் ஆகும்..!

முதலில்...
ஈழத்தில் பிரிந்தோர் ஆழ்மனதில் ஒற்றுமை ஏற்படவேண்டும்...

அது உடனே நடவாது.

அதற்கான நீண்டகாலத்திட்டம் தான்...

சகோ.நிருபன் மிக அருமையாக சொன்னது...

//முஸ்லிம்கள் தமிழர்களின் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ் வாழ்வதையோ, தமிழர்கள் முஸ்லிம்களோடு இணைந்து வாழ்வதையோ இக் காலச் சந்ததிகள் அல்லது புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் விரிசலை இன்று வரை கட்டிக் காக்கும் புத்தி ஜீவிகள், கல்வியளாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக உள்ள நிலையில்,
இதே பிரிந்து வாழும் அல்லது பிரித்து வாழும் நிலையை ஒவ்வோர் ஈழத் தமிழர்களும் தொடர்ந்தும் முன்னெடுக்கப் போகிறார்களா? அல்லது முஸ்லிம்களையும் எமது உறவுகளாக நினைத்து அரவணைத்து வாழப் போகிறோமா? இல்லை


எமது எதிர்காலச் சந்ததியினருக்கு ஊடாக, தமிழ் முஸ்லிம் உறவினைக் கட்டியெழுப்ப விரும்பினால், நாம் எமது குழந்தைகளினை முஸ்லிம் சகோதர்களோடு அந்நியோன்னியமாகப் பழக விட வேண்டும். அதே போன்று எமது குழந்தைகளுக்கு இனங்களுக்கிடையேயான ஒற்றுமையினை வலியுறுத்திக் கூற வேண்டும். அதனை உங்களில் எத்தனை பேர் செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?
இத்தகைய ஓர் முயற்சியினைக் வெகு விரைவில் செயற்படுத்த நாம் எவ்வாறான வழி முறையினைக் கையாளாலாம்?//

பொன்னான வரிகள் இவை..!
பொன்னான வரிகள் இவை..!

இதற்கு ஈழத்தமிழர்கள் எவராவது பதில் சொன்னார்களா...?

இதற்கு ஈழத்தமிழர்கள் எவராவது பதில் சொன்னார்களா...?

இதற்கு ஈழத்தமிழர்கள் எவராவது பதில் சொன்னார்களா...?

சகோ.இக்பால் செல்வன், இதற்கு நீங்களாவது சரியான நல்லிணக்க பதில் சொல்லி இருந்தால்...

முஸ்லிம்களை தமிழ் இனமாகவே மற்ற ஈழத்தமிழர் கருதினால்...

'ஈழஸ்தானும்' வேண்டாம் ஒரு புடலங்காயும் வேண்டாமே..!

இபோதாவது புரிகிறதா..?

மன்னிப்பு கேட்கும் சகோ.எப்பூடிக்கு என் மரியாதை கலந்த ஒரு சலாம்..! மனிதத்தில் அவர் மிக உயர்ந்து நிற்கிறார்..!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

நிரு, இப்பதிவின் தலைப்பு ஈழத்தமிழர்கள் ஈழத்து முஸ்லிம்களை அடக்கி வாழ நினைப்பதாக சொல்கிறது!

நீங்கள் சுட்டும் ஈழத்தமிழர்கள் என்போர் யார்? கண்டி நுவரெலியா தமிழர்களுமா?

பதில்?//

சகோ, இங்கே தவறு நடந்து விட்டது, நானும் அவசரத்திலும், இது பற்றியெல்லாம் யோசிக்காது ஈழத் தமிழர்கள் எனும் வார்த்தையினைச் சேர்த்து விட்டேன், உண்மையில் மலையக மக்களிற்கும், முஸ்லிம் சகோதரர்களுக்கும் எந்த வித முரண்பாடுகளும் இல்லை.

உங்கள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு என் பதிவின் தலைப்பினை மாற்றி விட்டேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

இருந்தாலும் அவர்களையும் அரவனைக்கனும் ஏன் எனில் என் நண்பர் குடும்பங்களில் குத்துவிளக்கு ஏற்ற வந்த மருமகள் வரிசையில் இருக்குறார்கள் சில இஸ்லாமிய சகோதரிகள்! இன்னும் சொல்ல பல இருக்கு இப்படியான பதிவுகளை திங்களில் வந்தால் கொஞ்சம் நேரம் இருக்கும் இந்த புலம்பெயர் ஏதிலிக்கு!//

ஆமாம், சகோ இரு தரப்புக்களிலும் தவறுகள் இருக்கின்றன சகோ. அவற்றினையும் இப் பதிவில் சுட்டியுள்ளேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'


சகோ.நிருபன்,
///*இலங்கை அரசானது தமிழர்களுக்கான தீர்வினைக் காலதி காலமாக இழுத்தடித்துக் கொண்டே வருகிறது. சந்தர்ப்ப சூழ் நிலைகளால் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்பட்டாலும்,////---இதில் "தீர்வு" என்பது என்ன..?

அது "தனி ஈழம்" தான் என்று நான் ஏன் புரிந்து கொண்டேன் என்றால்...//

சகோ இங்கே தீர்வு என நான் விளிப்பது தனி ஈழத்தை அல்ல,
மாநில ஆட்சி, அல்லது தமிழர்கள் சுதந்திரமாக வாழக் கூடிய ஒரு இணைந்த மாகாண ஆட்சியினைத் தான் குறிப்பிடுகிறேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'

///எந்த ஒரு சுய நிர்ணய உரிமை உடைய இனமும்- இன்னோர் இனத்தின் கீழ் அடங்கி வாழ மாட்டாது. அந்த வகையில் தமிழர்களுக்கான உரிமை வழங்கப்பட்டால் - முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கு நீங்கள் கூறப் போகும் பதில் என்ன? முஸ்லிம்களுக்கான உரிமையினை யார் வழங்கப் போகிறார்கள்?///---ஆக, இதில் முஸ்லிம்களுக்கான உரிமையை சிங்களர்களும் வழங்கவில்லை... ஒருவேளை "தீர்வு" எனும் தனி ஈழம் கிடைத்தாலும் அதில் ஒரு பகுதியை ஈழத்தமிழர்கள் முஸ்லிம்களுக்காக வழங்கப்போவதுமில்லை..//

சகோ, நான் இப் பதிவில் கூறியுள்ள விடயம், ஈழத் தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் முஸ்லிம்கள் ஒரு போதும் வாழ இணங்கமாட்டார்கள், ஆகவே தான் இதனை முஸ்லிம்களும் விரும்பமாட்டார்கள்.

தனி ஈழம் என்பது சாத்தியப்படாத விடயாமாகத் தான் இக் காலத்தில் தெரிகிறது. ஆகவே தான் ஈழத் தமிழர்களுக்குரிய தீர்வாக நான் சொல்வது மாநில ஆட்சியினை.
அப்படி ஒரு நிலை வந்தால், அங்கே முஸ்லிம்களுக்கான உரிமை பற்றி நிச்சயம் சர்ச்சைகள் உருவாகும்.

ஈழத் தமிழர்களும் முஸ்லிம்களுக்கான தீரிவினைக் கொடுக்கும் பக்குவ நிலையில் இல்லை. அப்படி ஒரு நல் எண்ணம் ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்தால், பழைய குரோதங்களையெல்லாம் மறந்து ஒற்றுமையாகிருப்பார்களே!

நிரூபன் said...
Best Blogger Tips

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'


நான் "ஈழஸ்தான்"...என்று ஒரு பேச்சுக்கு குறிப்பிட்டதற்கே... //பல உயிர்களை இறக்கச் செய்வதற்குரிய வழியாகத் தான் தனி ஈழஸ்தான் போராட்டமும் அமையும். இக் காலத்தில் அது சாத்தியமற்ற ஒன்று சகோ.//---என்று மறுதலித்து விட்டீர்கள். இதே விதிதான் சிங்கள பேரினவாத்திற்கும் பொருந்தும் அல்லவா..?//

ஆம் சகோ நிச்சயமாக அது தான் பொருந்தும், காரணம் போரின் வலிகளை அனுபவித்த ஈழத் தமிழன் இனி ஒரு ஆயுதப் போராட்டம் பற்றிச் சிந்திக்கும் நிலையில் இங்குள்ள மக்கள் அனைவரும் தெளிவாகவே இருக்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'


//தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்...///---இதுதான்ராஜபக்சே சொல்லும், பாசிஸ சர்வாதிகார அடக்குமுறை சிங்கள வெறி..! இதை நீங்கள்,நாம் எதிர்க்கிறோம்..!//

என் அன்புக்குரிய சகோதரனே!
இன்றைய கால கட்டத்தில் இவ்வளவு அவலங்களின் பின்னரும் ராஜபக்சேவிடம் போய் மிரட்டி வாங்கும் எண்ணத்தில் தமிழர்கள் இல்லை. மாறி விட்டார்கள் அல்லது போரின் பின்னரான முகாம் வாழ்க்கையின் மூலம் மாற்றப்பட்டார்கள்.
ஆகவே தருவதைத் தாருங்கள், அது எதுவானாலும் பெற்றுக் கொள்கிறோம் எனும் நிலையில் தான் ஈழத் தமிழர்கள் இன்று இருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்களுக்கென்று ஒரு தலமையோ, அல்லது திடமான அரசியல் கட்சியோ இக் காலத்தில் இல்லாமையும் இந் நிலமைகான காரணமாகும் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'


அப்புறம்...
சகோ.இக்பால் செல்வனின்... ///முஸ்லிம்கள் விரும்பினாலும், விரும்பாவிடினும்...///---இதுதான் அதேபோன்ற தமிழின வெறி..!//

சகோதரம்,
முஸ்லிம்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,
தமிழர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் - இலங்கை அரசு திணிப்பதைத் தானே நாமெல்லோரும் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
அதனைத் தான் விளக்க நாமிருவரும் இப் பதங்களைக் கையாள வேண்டியுள்ளது.

ஈழத்தின் தற்போதைய ஊடகச் சுதந்திரத்தைக் கருத்திற் கொண்டு பல கருத்துக்களைப் பகிர முடியாதுள்ளது, மன்னிக்கவும் சகோதரம்,

Anonymous said...
Best Blogger Tips

ஈழத்தமிழர்களுக்கு - முஸ்லிம்களுக்கும் புரிந்துணர்வு வராது அல்லது இல்லை என்றில்லை.

கிழக்கில் வாழும் தமிழர்கள் -முஸ்லிகளுக்கு இடையே குறைந்தது சில புரிதல்களாகவது இருக்கு. ஏனெனில் அவர்களின் அருகருகே வாழும் பாங்கே..

ஆனால் வடக்குத் தமிழர்கள் - முஸ்லிம் இடையேயான ஒற்றுமை ஓங்கினால் மாத்திரமே .. தமிழ் மாநிலம் ஒன்று உருவாக வாய்ப்பு இருக்கு ... !!!

ஒருவேளை தமிழ் - முஸ்லிம் - சிங்கள மக்களுக்கு மேல் ஒரு எஜமானன் இருந்திருந்தால் இப்படி அடித்து கொண்டிருக்க மாட்டார்கள்... இப்போது சிங்களவர் எஜமானன் ஆனதால் தமிழ் - முஸ்லிம்களை தமக்கு கீழே கொண்டு வர நினைக்கின்றார்கள். நாளை தமிழர் எஜமானன் ஆனால் முஸ்லிம்களை அவர்கள் கீழே இருக்க செய்வார்கள்.. புரிந்துணர்வும் - சமத்துவமும் வராத வரை சிக்கல்கள் தொடரும் என்பதில் ஐயமில்லை ... !!!

ஆனால் புரிந்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் - காலமும் வெகு தொலைவில் இல்லை . சிங்கள மக்கள் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கி உள்ளார்கள் .. வெகு விரைவில் ஒரு தெளிவு பிறக்க வேண்டும் ... பிறக்கும்

நிரூபன் said...
Best Blogger Tips

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'


உங்கள் பதிவில்... ஆப்ரஹாம் லிங்கனின்..."The best way to destroy an enemy is to make him a friend"---இதில் என்ன சொல்கிறீர்கள்...? யார் இங்கே enemy..?
---இதற்கும்...//

சகோதரம் என் பதிவில் தமிழர்கள் முஸ்லிம்கள் மீதான குரோதம், காழ்ப்புணர்வு, காரணமாக அவர்களை எதிரிகளாகவே பார்க்கிறார்கள்,

அதே போல முஸ்லிம்களின் அடி மனதிலும் தமிழர்கள் மீதான பழைய வன்மங்கள் இருப்பதாகத் தானே பதிவில் சொல்லியிருக்கிறேன்,

இதனடிப்படையில் பார்க்கையில் என் அருமைச் சகோதரனே,
இரண்டு தரப்பும் மனதளவில் எதிரிகளாகத் தங்களைக் கருதித் தானே இணைந்து வாழாது, சேர்ந்து வாழாது வாழ்கிறார்கள்.

ஆகவே தான் மேற் கூறப்பட்டுள்ள இரு தரப்புக்களையும் எதிரிகளாக விளிக்க-
முஸ்லிம்களுக்கு தமிழர்கள் எதிரி

தமிழர்களுக்கு முஸ்லிம்கள் எதிரி எனும் பதங்களை விளிக்கவே எதிரியை நண்பனாக்கிக் கொள்ளுவதே சிக்கல்களைத் தீர்ப்பதற்குரிய வழி எனும் ஆபிரகாம் லிங்கனின் வாக்கியத்தைப் பயன்படுத்த நேரிட்டது.

சகோ இங்கே யார் யார்க்கு எதிரி என்பது மேற் கூறப்பட்ட விளங்களால் தெளிவாகியிருக்கும் என நினைக்கிறேன் சகா.

நிரூபன் said...
Best Blogger Tips

@முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'

///தமிழ் முஸ்லிம் உறவினைக் கட்டியெழுப்ப விரும்பினால், நாம் எமது குழந்தைகளினை முஸ்லிம் சகோதர்களோடு அந்நியோன்னியமாகப் பழக விட வேண்டும்.///
----இதற்கும்...

ஏதும் சம்பந்தம் உண்டா..சகோ.நிருபன்..?//

இரண்டு தரப்பிற்கும் இரண்டு தரப்பினரே எதிரியாக உள்ளார்கள் என்பதனை விளிக்க இப் பதத்தினைப் பயன்படுத்தினேன் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

நிரூ....எனக்கென்னவோ இந்தப் பதிவு பிடிக்கேல்ல.மனசில படுறதைச் சொல்றன்.மதப்பிரச்சனை,சாதிப்பிரச்சனை எண்டெல்லாம் நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளைப் பதிவாக்கிறீங்கள் எண்டாலும் பழையதுகளைக் கிளறுவதாகவே எனக்குப் படுது.எங்கட ஊத்தைகளை நாங்களே மணந்து பாக்கிறமாதிரி இருக்கு எனக்கு.மறந்து மறைந்து போகும் நிலை வேணும் எங்களுக்கு இப்ப.நடக்கிற வேலைகள் இன்னும் நிறைய இருக்கு.
ஒன்றாகவேணும் நிரூ !//

சகோதரி, நான் இங்கே பழையதைக் கிளறவில்லை. பழைய காயங்களிற்கு மருந்திட்டு,
நாம் செய்த அதே தவறினை எமது எதிர்காலச் சந்ததியும் செய்யாதவாறு எவ்வாறு எமது சமூகத்தினை மாற்றலாம் என்பதைத் தான் இப் பதிவில் ஆராய்ந்துள்ளேன் சகோ.

உங்கள் கருத்துக்களிற்கு நன்றிகள் சகோதரி.

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD


உங்களின் சமுதாய சிந்தனை தெளிவாக உள்ளது. சமுதாயத்தின் மீதான அக்கறை, சற்றே உங்களைப் பிறரிடமிருந்து மாறுபடுத்திக் காட்டுகின்றது.//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@யாதவன்

பெரிய மீன் சின்ன மீனை தின்ன தான் பாக்கும் , நீங்கள் எழுதியதில் பல விடயங்களில் ஒத்துபோனாலும் முஸ்லிம் மக்கள் இப்பவும் மனதளவில் தமிழர்களிடம் குரோதமாக இருக்கிறார்கள் என்பதை விட முஸ்லிம் அரசியல் வாதிகள் அதை ஒரு அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லலாம்.//

ஆமாம் சகோ, அரசியல்வாதிகளின் தவறும் இதற்கான காரணமாக இருக்கிறது. அதனையும் பதிவில் சுட்டியுள்ளேன் சகோ.

உங்களின் அனுபவங்களைக் கட்டுரையாக்குங்கள். படிப்பதற்காக காத்திருக்கிறோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


நீங்களும்,இக்பால் செல்வனும் தீர்வுகளுக்கான விவாதக் களத்தை கொண்டு வருவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


ஆசிக்கின் விவாதம் விவாதப்படி சரியானதேயென்றாலும் தொலை நோக்குப் பார்வையில் மூன்று நிலை வாழ்க்கை சரியாகத் தோன்றவில்லை.அதுவும் அதற்கான போராட்ட குணங்கள் கூட இஸ்லாமியர்களிடம் இல்லாத நிலையில்.//

சகோதரம்; அப்படியாயின் முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கும், அவர்களின் வளமான வாழ்விற்கும் நாம் என்ன செய்யப் போகிறோம் சகோ?

ஈழத் தமிழர்கள் மாத்திரம் தமக்குரிய தீர்வினைப் பெற்று வாழ முஸ்லிம்கள் மட்டும் யாருடைய நிழலின் கீழ் வாழ வேண்டும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@akulan


நல்ல பதிவு அண்ணா..............//

நன்றி மாப்பிளை.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


ஹேமாவின் பின்னூட்டம் காண நேர்ந்தது.நேரடியாக நோக்கினால் மைக்ரோ மன உளவியலைப் பிரித்து நோக்கும் போது கோபங்கள்,பின்னடைவுகள்,ஒன்றோடு ஒன்று ஒட்டாத மனநிலையையே உருவாக்கும்.ஆனால் இந்த கால கட்டத்தில் பேசித் தீர்ப்பது மட்டுமே தீர்வுகளுக்கான ஏதாவது ஒரு வழிப்பாதையை திறக்கும்.//

ஆமாம் சகோ, இந்த வழி முறை ஒன்று தான் எதிர்காலத்தில் சாத்தியப்படக் கூடியது. அதற்காகத் தான் இந்தக் கட்டுரையினை வரைந்துள்ளேன்,
எமது எதிர்காலச் சந்ததியின் மூலமாகத் தான் இவ் வழி முறை சாத்தியமாகும் என நம்புகிறேன்,

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

தமிழர்களுடன் இணைந்து குரல் கொடுப்பதுவே முஸ்லீம்களுக்கு இணைந்து வாழும் சூழலை உருவாக்கும்.//

அப்படி என்றால், என் பதிவில் முஸ்லிம்களைத் தமிழர்கள் எங்கெங்கு, எப்படியெல்லாம் புறக்கணிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறேன்,

இதனடிப்படையில், இந்த நிலமைகளை எல்லாம் மறந்து முஸ்லிம்களை அரவணைக்க தமிழர்கள் தயாரா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


//இல்லைச் சகோ, தமிழர்கள் பிரிந்து வாழ்வதோ அல்லது தனி நாட்டினைப் பெறுவதோ இக் காலத்தில் ஏற்புடைய ஒரு விடயமாகத் தெரியவில்லை.//

சகோ நிருபன்!இனியும் வளரும் வரலாற்றின் உண்மைகள் எங்கே கொண்டு போய் விடும் தெரியுமா?

கால ஓட்டத்தில் போராடித் தோற்றுப்போன உணர்வால் பெரும் பூதங்களான உலக அரசியல் இல்ங்கைக்கு சார்பாக இருந்தால் இறையாண்மை என்ற பெயரில் அனைத்தையும் மறந்து முன்பும்,தற்போதும் இருக்கும் சிங்கள மேலாண்மையை ஏற்றுக்கொண்டு விடுவது.

அப்படியில்லையெனில் தமிழர்களின் போராட்ட குணத்தாலும்,மக்கள் உரிமைகளை ஓரளவுக்கு மதிக்கும் மேற்கத்திய நாடுகளின் உதவியால் கூடவே அவரவர் சுயநல பூகோள நலன்களோடு குறைந்த பட்சம் Federal State என்ற நிலையிலாவது கௌரவமாக வாழும் நிலையென இரண்டில் ஒன்று.//

சகோதரம், இதனைத் தான் என் பதிவிலும் சொல்லியிருக்கிறேன், பிரிந்து வாழ்வதோ தனி நாடோ சாத்தியப்படாது, ஆனால் தீர்வாக மாநில ஆட்சி பெற்று வாழ்வது சந்தர்ப்ப சூழ் நிலைகளால் எதிர்காலத்தில் சாத்தியப்படலாம் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel


இக்பால் செல்வனை வழிமொழிகிறேன்.உங்கள் இடுகைகளிலேயே மிகச்சிறப்பான பதிவு சகோ .வாழ்த்துக்கள்.//

நன்றி சகா.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


நிரு... இந்த பதிவுக்கு ரொம்ப மெனக்கட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். சிறந்த தொகுப்பு.//

பாஸ், பதிவெழுத ஒன்றரை மணி நேரம் எடுத்தது, ஆனால்
பதிவிற்கான தயார்படுத்தலுக்குரிய நூல்களைப் படிக்க ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியது சகோ.

நன்றி சகா.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


பின்னூட்டம் இடுவதற்கான கண்டிஷன்கள் கண்ணை கட்டுதே சகோ.//

அவ்....இந்தப் பதிவிற்கு மாத்திரம் தான் அது.

நிரூபன் said...
Best Blogger Tips

@NKS.ஹாஜா மைதீன்


நன்றி சகோ....ஈழத்தில் முஸ்லிம்களின் நிலையை எடுத்து காட்டியதற்கு....இதுவும் தனி ஈழம் கிடைக்காததற்கு ஒரு காரணம் என நான் நினைக்கின்றேன்...கடந்த கால கசப்புகளை மறந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்று மொழியின் அடிப்படையில் முஸ்லிம்களும்,ஈழ தமிழர்களும் ஒன்று சேர வேண்டும்...காலபோக்கில் இது சாத்தியப்படும் என்றே நம்புகிறேன்...//

சபாஷ் சகோ, இதனைத் தான் என் பதிவின் மூலமும் நான் வேண்டி நிற்கிறேன்,

ரொம்ப நன்றி மாப்பிளை.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

தப்பென்பது ஈழ தமிழர்கள் மட்டுமானதல்ல அதற்காக ஈழ தமிழர்கள் தப்பு செய்யவில்லை என்று சொல்லவில்லை, அதே போல ஈழ முசிலீம்களும் 'பொன் இராமநாதன் காலத்தில் இருந்து or பிறகு தமிழர்கள் மீது குரோதத்தை வளர்த்துக்கொண்டே வந்துள்ளார்கள்.
ஆக தமிழர்கள் / போராளிகள் செய்த தவறுகளை சுட்டும் போது துரோகி பட்டமும் , முசிலீம்கள் செய்த தப்பை சுட்டும் போது இனவாதி என்ற பட்டமும் விழலாம் அது தான் சொன்னே 'கத்தி மேலே நடப்பது'' போல என்று ...........//

ஆஹா...நீங்க தத்துவ ஞானியாக இருப்பீங்க போல இருக்கே.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

நான் பல சமயங்களில் அவதானித்துள்ளேன் ஈழத்தில் உள்ள / ஈழத்தை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் எந்த ஒரு தமிழ் பேசும் முசிலீம் மதத்தவரும் தன்னை தமிழராக அடையாளப்படுத்தார்கள்... இதற்க்கு இது வரை எனக்கு காரணம் புரியவில்லை. ஆனால் இந்தியாவில் ஒரு தமிழ் பேசும் முசிலீம் சகோதரன் தன்னை தமிழனாக தான் அடையாளப்படுத்துவார்...
ஆக ஈழத்திலே விரோதம் என்பது இரண்டு தரப்பிலும் இருந்தது / இருந்துவருகிறது .நிச்சயமாக நிலைமை மாறும் என்று நம்புகிறேன்..//

ஆமாம், சகோ, இந்த நிலை மாற வேண்டும் என்பது தான் எல்லோரது எதிர்பார்ப்பும் கூட.
நானும் பார்த்திருக்கிறேன், ஒரு சில இடங்களில் முஸ்லிம் இளைஞர்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதை தவிர்க்கிறார்கள். இதற்குரிய காரணத்தை நண்பர்கள் யாராவது விளங்கப்படுத்த முடியுமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


நானும் வந்துட்டேன்...//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


ஈழம் என்பது ஒட்டு மொத்த இலங்கையையும் குறிக்கும் சொல்லாக தான் இருந்து வந்தது. ( சிறு உதாரணமாக பொன்னியின் செல்வன் நாவலை குறிப்பிடலாம் ) ஆனால் தற்போது ஈழம் என்றால் தமிழர் வாழும் வட கிழக்கு என்று திரிவு பட்டுவிட்டது... நான் நினைக்கிறேன் ஈழம் ,தமிழீழம் என்ற இரண்டு சொற்களுக்கான அர்த்தமும் வேறுபாடும் என்று... //

ஆமாம் சகோ, நானும் கவனக் குறைவால் யோசிக்காது ஈழத் தமிழர்கள் எனும் பாணியில் தலைப்பினை வைத்து விட்டேன், பின்னர் தான் ஓட்ட வடை அவர்கள் விளங்கப்படுத்தினார்.
இப்போது தலைப்பினை மாற்றி விட்டேன், ஈழம் தமிழீழம் ஆகிய இரு சொற்களிற்கிடையேயான வேறுபாட்டினை விளக்கும் வகையில் ஒரு பதிவினை அடுத்த பதிவாக எழுதியுள்ளேன் சகோ,

நன்றி மாப்பிளை.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்


தனிநாடு மட்டுமே தீர்வாகுமா?

நிரூபன் தங்களின் பதிவை மையமாக வைத்து திரு. முகம்மது ஆசிக்கின் கேள்விகளுக்கு சேர்த்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளேன். கவனித்தால் மகிழ்வேன். நன்றிகள்.//

சகோ, இப்போது தான் என் பதிவிற்கான பின்னூட்டங்களிற்குப் பின்னூட்டம் எழுதிக் கொண்டிருக்கிறேன், முடிந்ததும் உங்களின் வலைக்கு வருகிறேன் சகா.

நிரூபன் said...
Best Blogger Tips

@எப்பூடி..

YES, இது ஒரு காத்திரமான பதிவு. இந்த பதிவிற்கு நிச்சயமாக எப்படி பின்நூட்டமிடுவதென்று சத்தியமாக தெரியவில்லை, குற்ற உணர்ச்சி அதற்க்கு காரணமாக இருக்கலாம்.

மறக்கப்பட முடியாத மன்னிக்க முடியாத செயலுக்காக ஒரு ஈழத்தமிழனாய் முஸ்லிம் சமூகத்திடம் VERRY VERRY VERRY SORRY; இந்த மன்னிப்பு என் தனிப்பட்ட வேண்டுதல், என்னெனின் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டால் இன்னமும் பல ஈழத்தமிழர்களுக்கு கோபம் வரலாம் :(

I Respect 'ALL' Humans including Singalees; எனக்கு சீமானை பிடிக்காது, ஆனால் சீமானின் 'தம்பி' திரைப்படத்தில் வரும் ஒரு வரி வசனம் என்னை பாத்தித்தது

"உயிர் வலி எல்லோருக்கும் ஒண்ணுதான்"

பதிவுக்கு நன்றி.//

என் பதிவில் நான் எதிர்பார்த்த, அதே சிந்தனையினைக் கொண்ட திறந்த மனமுடைய உங்களிற்கு வாழ்த்துக்களும்,
நன்றிகளும் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, இவ் விவாதத்தில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//சகோதரம்; அப்படியாயின் முஸ்லிம்களின் எதிர்காலத்திற்கும், அவர்களின் வளமான வாழ்விற்கும் நாம் என்ன செய்யப் போகிறோம் சகோ?

ஈழத் தமிழர்கள் மாத்திரம் தமக்குரிய தீர்வினைப் பெற்று வாழ முஸ்லிம்கள் மட்டும் யாருடைய நிழலின் கீழ் வாழ வேண்டும்? //

மீண்டும் ஒரு முறை மறுமொழிக்காக திரும்ப வந்தேன்.நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை விட நம்முடன் சேர்ந்து இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுவே கேள்வி.பொதுக்கருத்துக்களை பொதுவில் வைக்கும் போதும்,தனியாகவும் தங்கள் கருத்துக்கள்,மன அலைகளை குறைந்த பட்சம் வெளியிட வேண்டும்.

எத்தனை பேர் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள்?வீடியோ கடைக்குப் போனால் நண்பர்களுடன் கலந்துரையாடல் செய்யும் போது கூட இலங்கைப் பிரச்சினை தமக்கு சம்பந்தமில்லாத மாதிரியே தொடர்ந்து வந்து போகின்றவர்களின் மனநிலையென்பதும்,வன்னி நிலத்து நண்பர்கள் சிலர் தமது கடைகளில் வீரகேசரி முதற்கொண்டு சீமான் வரை ஆர்வம் காட்டுகிறார்கள்.டாக்சி ஓட்டும் நண்பர் முஸ்லீம் நண்பர் ஒருவரை சாண்ட்விச் சாப்பிடும்போது சந்தித்தேன்.நலமா என விசாரித்து விட்டு இலங்கை பற்றிக் கேட்டால் இப்பொழுது ஒன்றும் பிரச்சினையே இல்லை.பாலும்,தேனும் பாய்வது மாதிரி கூறுகிறார்.

தமிழர்களாக மதம் கடந்து இணைந்து வாழும் மனோபாவத்தை தமிழர்கள் அனைவருமே சிந்திக்கலாம்.இது மட்டுமே சாத்தியம்.தமிழர்களுமல்லாது,சிங்களவர்களுமல்லாது மதில் மேல் பூனை நிலை முஸ்லீம்களுக்கு உதவாது எனபது எனது பார்வை.

Anna said...
Best Blogger Tips

மிக நன்றாக எழுதியுள்ளீர்கள். நடந்ததை அலசி ஆராய்ந்து விட்ட பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்டு இனி இவ்வாறு பிழைகள் நடக்காமல் இருக்க வழிகள் செய்து அடுத்தடுத்த generations ஜ ஆவது ஒற்றுமையாக்கவே செயல்படவேண்டும்.

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

இதுவரை நான் அறிந்திடாத பல விஷயங்களை உள்ளடக்கிய பதிவு , இலங்கை தமிழர்களை பற்றி பேசும்போது இவர்களை பற்றியும் பேசுவது மிக அவசியமாகிறது , இந்த கயிற்றில் நடப்பது போலான பதிவில் சகோ அற்புதமாய் தான் தரப்பு நியாயங்களை அடுக்கி நம் மனதை கொள்ளை கொள்கிறார்
வாழ்த்துக்கள் சகோ

Unknown said...
Best Blogger Tips

நல்ல பதிவு இதுவரை நான் அறியா
பலசெய்திகள்.ஈழம் பற்றி ஏற்கனவே
கனமாக இருக்கும் மனம் மேலும்
கனமாக போனது
எதையும் எழுத இயலவில்லை
மன்னிக்கவும்

புலவர் சா இராமாநுசம்

ஈழபாரதி said...
Best Blogger Tips

முதலில் முஸ்லீம்கள் தீர்வு எப்படி இருக்க வேண்டும் என நினைப்பதற்க்கு முதல், போராடத்தொடங்க வேண்டும்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
Best Blogger Tips

///முதலில் முஸ்லீம்கள் தீர்வு எப்படி இருக்க வேண்டும் என நினைப்பதற்க்கு முதல், போராடத்தொடங்க வேண்டும்///

---யாரை எதிர்த்து போராட வேண்டும்..?

மசூதிகளிலேயே சுட்டுக்கொன்று மிச்ச மக்களை விரட்டிய ஈழத்தமிழர்களை எதிர்த்தா...?

அல்லது,

அப்போது அடைக்கலம் கொடுத்த சிங்களர்களை எதிர்த்தா..?

ஒரு நீண்டகால
போராட்டம் பாரிய இழப்புகளை தவிர வேறு எப்பலனையும் அடையவில்லை என்பதை கண்டபிறகும்... இனியொரு போராட்டம் அவசியமா சகோ.ஈழபாரதி...?

***********************************

தயவு செய்து, இப்பதிவின் கடைசி பாராக்களை மீண்டும் ஒரு முறை படித்து அதற்கு பதில்கண்டு சுமுகமான வழியை இனிமேலாவது நாம் தேடுவோமே சகோ.ஈழபாரதி..!


இன்றைய அவசர தேவை...

நிறைய நிருபன்கள்..!

ஈழபாரதிக்கள் அல்ல..!

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

99 % யாழ் மக்கள் முஸ்லிம்களை வெறுக்கிறார்கள், என்ற 'உயர்ந்த' எண்ணத்தை யார் கிழப்பி விட்டதோ தெரியவில்லை. ஜோராக 'ஓடுகிறது'.

ஆனால் பாகிஸ்தான்காரன் புண்ணியத்தில் முஸ்லிம் ஊர்காவல் படைகள் செய்தவைகளையும் எழுதியிருக்கலாம்.

யாழில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்த யாழ் தமிழரும் இந்த 99% இல் வருமா?

Unknown said...
Best Blogger Tips

இது எனது புதிய விசயம்.. ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு..

ஈழபாரதி said...
Best Blogger Tips

//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
///முதலில் முஸ்லீம்கள் தீர்வு எப்படி இருக்க வேண்டும் என நினைப்பதற்க்கு முதல், போராடத்தொடங்க வேண்டும்///

---யாரை எதிர்த்து போராட வேண்டும்..?

மசூதிகளிலேயே சுட்டுக்கொன்று மிச்ச மக்களை விரட்டிய ஈழத்தமிழர்களை எதிர்த்தா...?

அல்லது,

அப்போது அடைக்கலம் கொடுத்த சிங்களர்களை எதிர்த்தா..?

ஒரு நீண்டகால
போராட்டம் பாரிய இழப்புகளை தவிர வேறு எப்பலனையும் அடையவில்லை என்பதை கண்டபிறகும்... இனியொரு போராட்டம் அவசியமா சகோ.ஈழபாரதி...?

***********************************

தயவு செய்து, இப்பதிவின் கடைசி பாராக்களை மீண்டும் ஒரு முறை படித்து அதற்கு பதில்கண்டு சுமுகமான வழியை இனிமேலாவது நாம் தேடுவோமே சகோ.ஈழபாரதி..!


இன்றைய அவசர தேவை...

நிறைய நிருபன்கள்..!

ஈழபாரதிக்கள் அல்ல..!//

சிங்களவர்கள் உங்களுக்கு உதவி செய்தார்கள் என்றால் பிறகு எதற்கு, தமிழர்களுக்கு தீர்வு கிடைத்தான் முஸ்லீம்களுக்கும் வேண்டும் என்று கேட்கிறீர்கள், உங்களுக்கும் சிங்களவர்கலுக்கும்தானே எந்த வொரு பிரச்சினையும் இல்லை, பிரச்சினை இல்லாதவனுக்கு எதற்கு தீர்வு, கருனாவும், பிள்ளையானும் கூடத்தான் சிங்களத்துடன் சேர்ந்து நிற்கிறார்கள் அவர்கள் தமக்கு தீர்வு வேண்டும் என்றா கேட்கிரார்கள்.

Tamil Vaanan said...
Best Blogger Tips

http://transcurrents.com/tamiliana/archives/600

வாசியுங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@Tamil


புலிகளால் முஸ்லிம்கள் யாழில் இருந்து விரட்டப்பட்டதையும், கிழக்கு மாகாண படுகொலைகளையும் குரூரமான படத்துடன் வெளியிட்டு புண்ணை கிளறியதுக்கு நன்றிகள்.

அதே போல் முஸ்லிம் படை புலனாய்வாளர்களால் சித்திரவதை செய்யப்பட்ட/கொன்றொழிக்கப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்களை பற்றியும் மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் முஸ்லிம் இன காடையர்களால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை பற்றியும் கூறியிருந்தால் ஒரு நடுநிலைமைதன்மை இக்கட்டுரைக்கு கிடைத்திருக்கும். என்ன செய்ய அது சம்பந்தமான குறிப்புகள் கிடைக்கவில்லை போலும். அது சரி அண்மையில் நடைபெற்ற மூதூர் படுகொலைகளை பற்றிகூடவா தெரியவில்லை?//

சகோதரம், என் பதிவினை நீங்கள் முழுமையாகப் படித்தீர்களா?
முதலில் பதிவினை எனக்காக ஒரு தரம் முழுமையாகப் படித்து விட்டு, உங்கள் கருத்துக்களை முன் வைக்கலாமே.
கடந்த காலங்களில் எமது சந்ததி செய்த தவறினை, எதிர் காலச் சந்ததியினர் செய்யக் கூடாது எனும் நோக்கில் தான் இக் கட்டுரையினை எழுதினேன்.

நீங்கள் கூறுகின்ற படுகொலைகளைப் பற்றி விரிவாகக் கூறினால் இதனை ஒரு பதிவாக வெளியிட முடியாது.
ஒரு தொடர் பதிவாகத் தான் எழுத முடியும். ஆகவே தான் முஸ்லிம்களால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட குரோதங்களையும், 1990ம் ஆண்டு, 2000ம் ஆண்டின் பின்னரான கொலைச் சம்பவங்கள் பற்றியும் பதிவில் பகிர முடியவில்லை என்பதை பதிவின் கீழ் சிகப்பு மையினால் டிஸ்கி எனும் அடை மொழியோடு தந்திருக்கிறேன். கவனிக்கவில்லையா.


//நிருபன் சோனகர் என்ற வார்த்தை தமிழர்களால் அறிமுகப்படுத்தபட்டது என்பதற்கு தகுந்த ஆதாரம் உள்ளதா?

சரித்திரம் பிழையாக திரிபுபடுத்தபட்டால் அது இன்னொரு பிரச்சனைக்கு ஆரம்பமாக இருக்கும்.//

பதிவின் இரண்டாவது பந்தியில் இந்த வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறேன், நீங்கள் படிக்கவில்லையா சகோ.

ப்ளீஸ் பதிவினைப் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை முன் வைத்தால் அவை காத்திரமான விவாதத்திற்கு வழி வகுக்கும்.

அதனை விடுத்து முஸ்லிம் காடையர்கள் என்ற தொனியில் இனத்துவேசத்துடன் உங்களைப் போன்ற உறவுகளால் எழுதப்படும் கருத்துக்களை வலைப் பதிவுத் திரட்டிகளின் விதி முறைகளுக்கமைவாகவும், இன்னோர் சந்ததியும் இச் சம்பவங்களையோ, உங்களைப் போன்றோரால் வழங்கப்படும் கருத்துக்களையோ அறியக் கூடாது எனும் நோக்கோடும்,
தங்களின் இப் பின்னூட்டத்தை நீக்க வேண்டிய நிலமைக்கு நான் ஆளாகியுள்ளேன்.

சகோதரம், தயவு செய்து புரிந்து கொள்ளவும்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails