ஆரத் தழுவும் தென்றல், அருகருகே சத்தமிட்டுப் பறக்கும் பறவைகள், ஓடை நிறைந்தோடும் நீர், ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும் சுற்றம் என வளங் கொழித்த கிராமத்து வாழ்வும், ஒவ்வோர் ஊர்களுக்கேரிய தனித்துவமான வட்டார மொழிகளும், எத்தனை புதிய தொழில் நுட்பங்கள் வந்து உலகமானது புதுமையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தாலும், இலகுவில் எம் இதயப் பரப்பை விட்டு நீங்கி விடாது என்பதில் ஐயமில்லை.
இப் பதிவின் மூலம், ஈழத்தின் பெரும்பாலான ஊர்களில் பேச்சு வழக்கிலிருக்கும் சொல்லான மாரடித்தலைப் பற்றிப் பார்ப்போம்.
இறப்பு வீடு அல்லது சாவீடு நடக்கும் போது ஒப்பாரி வைத்து சுற்றம் எல்லோரும் கூடி நின்று அழுவார்கள். அதுவும் எல்லையற்ற அன்பு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால் அவரின் விருப்பத்திற்குரியவர் நெஞ்சிரண்டிலும் கைகளால் அடித்து அடித்து அழுவார்கள்.
இவ்வாறு அழும் முறையை மாரடித்து அழுதல் அல்லது மாரடித்தல் என்று கூறுவார்கள்.
’’கூலிக்கு மாரடித்தல் என்பது ‘முற் காலப் பகுதியில் ஈழத்த்தில் நிகழும் இறப்பு நிகழ்வுகள் அல்லது சாவீடுகளில் கூலிக்கு ஆட்களை அமர்த்தி நெஞ்சில் அடித்து அழவைக்கும் வழக்கம் இருந்தது. அதனை விளிக்க கூலிக்கு மாரடித்தல் எனும் பதத்தினை கையாண்டார்கள்.
ஒரு மனிதன் குறைந்த குறைந்த கூலியுடன் அதிகளவான வேலையினைச் செய்யும் போது (அடிமை போன்று தொழிலாளியை முதலாளி நடத்தும் போது) அந் நிலையினைப் பார்ப்பவர்களும் ’இஞ்ச பாரன்(பாருங்களேன்) இவன் கூலிக்கு மாரடிக்கிறான் எனப் பேசிக் கொள்வார்கள்.
இதே போல வேண்டத்தகாத அல்லது விருப்பமில்லாத செயலினைச் செய்தலினையும் மாரடித்தல் என்றே கூறுவார்கள். இவ் இடத்தில் மாரடித்தலானது ஒரு வேண்டத்தகாத செயலினைச் செய்து அச் செயலோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் நிலையினை உணர்த்தும் வகையில் பொருள் கொள்ளப்படும்.
ஊரில் இருக்கும் வயதான மனிதர்களும், வேலையற்ற்று வெட்டியாக இருப்போரும் அடிக்கடி கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள், அல்லது இடையூறு(Disturbance) பண்ணிக் கொண்டிருப்பார்கள். இத்தகைய சூழ் நிலையில் ‘உன்னோடு பெரிய கரைச்சலாக இருக்கிறது(Your are giving me big problem/ Trouble) எனப் பேசிக் கொள்வோம்.
இன்னும் ஒரு படி மேலே போய் கோபத்தின் உச்சக் கட்டமாக, ’’உன்னோடு மாரடிக்க என்னாலை முடியாது’’ எனப் பேசி, எமக்கு இடையூறு தரும் நபரின் முகத்தில் அடித்தாற் போல ஒரு பதிலைக் கூறி அவரின் வாயினை அடக்கி விடுவோம்.
மாமனாரை நம்பி! மாரடித்த சொங்கி எனும் பதமானது, ஒருவர் தன்னுடைய மாமாவினை நம்பி அவர் தனக்கு எல்லா விடயங்களையும் நிறைவேற்றுவார் எனக் கனவு கண்டு கொண்டிருக்கும் போது, அக் கனவுகள் யாவும் சிதைந்து போகும், நிலமையானது ஏற்படும் வேளையில், மாமனாரை நம்பிக் கொண்டிருந்த நபரானவர் கையறு நிலைக்கு வந்து விடுவார். ஆகவே அத்தகைய நிலையில் உள்ள ஒருவரைத் தான் சொங்கி என்று அழைப்போம்.
‘ஏமாந்து போன ஒருவரை, நம்பிக் கெட்டுப் போன ஒரு நபரை, மூளை கொஞ்சம் குறைவானவர் என்று விளிக்கப்படும் நபரைச் சொங்கி எனும் பதத்தாலும் ஈழத்தில் குறிப்பிடுவார்கள்.
இந்த மாரடித்தல் எனும் பதத்தினை மக்கள் அனைவர் மனங்களுக்கும் கொண்டு சென்ற பெருமை ஈழத்த்தில் ஓர் காலத்தில் கவிஞராகவிருந்த இரத்தினதுரையினையே சாரும். அவரது
‘ஈடு வைத்து ஈடு வைத்து நந்த லாலா.......எனத் தொடங்கும் பாடலில் பின் வருமாறு எழுதியிருந்தார்.
மாமனையே நம்பி நம்பி நந்தலால....
இப்ப மாரடிச்சுக் கொள்ளுறாவே நந்தலாலா........
இவ் இடத்தில் அக் காலப் பகுதியில் இலங்கையின் ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்கா அம்மையார் தனது மாமாவும் பாதுகாப்பு அமைச்சருமாகிய அனுருத்த ரத்வத்தவினை நம்பி ஏமாந்து போன கதியினை அல்லது தமிழர்களிடம் நிலங்களைப் பறி கொடுத்த நிலமையினை விளக்கும் வகையில் கவிஞர் அவர்கள் எழுதியிருந்தார்.
இவை தான் மாரடித்தல் பற்றி நான் அறிந்த, தேடிப் பெற்றுக் கொண்ட விடயங்கள். மாரடித்தல் பற்றி உங்களுக்கு வேறேனும் தெரிந்தால் பின்னூட்டம் ஊடக எழுதுங்கள் உறவுகளே!
ஐயோ நீருபன், உன்னோடு மாரடிக்க என்னால் முடியாது’ என நீங்கள் என்னை ஏச முதல்,
ஐ ஆம் எஸ் கேப்!
டிஸ்கி: துகள் என்பது தூசியினை அல்லது (Dust) இனைக் குறிக்கப் பயன்படும் விஞ்ஞான ரீதியிலான பதமாகும். வன்னியிலிருந்து வந்ததுகள் வலையில் எழுதுதுகள் என்றும், வன்னியிலிருந்து போராட முடியாது தப்பி வந்ததுகள் என்றும் எள்ளி நகைப்போருக்கு இதற்குரிய அர்த்தம் சரியாகத் தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டாலும் சொல்லிக் கொள்வது நம் கடமையல்லவா.
துகள் என்றால் தூசி. தூசி எப்போதுமே உறுத்திக் கொண்டு தானாம் இருக்கும், அதுவும் தூசி கண்ணுக்குள் விழுந்தால் ‘எப்போதுமே உறுத்தியபடி தான் இருக்கும். வன்னியிலிருந்து வந்தோர் சாதிக்க வந்தோர் என்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா உறவுகளே!
வன்னியிலிருந்து வந்து எழுதுவோரின் எழுத்துக்களைப் பிடிக்காதோர், பதிவினை முழுமையாகப் படிக்காது, வயித்தெரிச்சலுடன் சொல்லும் வார்த்தை தான் ‘முட்கம்பிக்குப் பின்னால் மக்கள் நிற்கும் படத்தினைப் போட்டு வன்னியிலிருந்து வந்த அனைவரும் பதிவெழுதி அனுதாபம் தேடுகிறார்கள் எனும் பதமாகும். இன்னும் ஒரு படி மேலே சென்று இதன் உள்ளார்ந்த அர்த்ததினைப் பார்த்தால், புதிய பதிவர்களை வளர விடாமல் நசுக்கும் ஆதிக்கச் செயற்பாட்டின் மறு வடிவம் தான் இது என்பதும் அனைவருக்கும் தெளிவாகப் புலப்படும் உண்மையாகும்.
|
49 Comments:
யோவ் உம்மோட மாரடிக்க முடியாதுய்யா! எங்க இன்று முழுக்க ஆளையே காணோம்?,
////இறப்பு வீடு அல்லது சாவீடு நடக்கும் போது ஒப்பாரி வைத்து சுற்றம் எல்லோரும் கூடி நின்று அழுவார்கள். அதுவும் எல்லையற்ற அன்பு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால் அவரின் விருப்பத்திற்குரியவர் நெஞ்சிரண்டிலும் கைகளால் அடித்து அடித்து அழுவார்கள்.
இவ்வாறு அழும் முறையை மாரடித்து அழுதல் அல்லது மாரடித்தல் என்று கூறுவார்கள்.//// ஆமா இதுக்கு பல அர்த்தங்களும் இருக்கு போல...
///இன்னும் ஒரு படி மேலே போய் கோபத்தின் உச்சக் கட்டமாக, ’’உன்னோடு மாரடிக்க என்னாலை முடியாது’’ எனப் பேசி, எமக்கு இடையூறு தரும் நபரின் முகத்தில் அடித்தாற் போல ஒரு பதிலைக் கூறி அவரின் வாயினை அடக்கி விடுவோம்./// எனக்கு அனுபவம் ஹிஹிஹி
@நிகழ்வுகள்
யோவ் உம்மோட மாரடிக்க முடியாதுய்யா! எங்க இன்று முழுக்க ஆளையே காணோம்?,//
வணக்கம் சகோ, எப்படி இருக்கிறீங்க.
இன்று ஆணி அதிகம், அதான் காண முடியலை.
@நிகழ்வுகள்
எனக்கு அனுபவம் ஹிஹிஹி//
சேம், சேம் பப்பி சேம்.
ஓர் காலத்தில் கவிஞராகவிருந்த இரத்தினதுரையினையே சாரும். அவரது
‘ஈடு வைத்து ஈடு வைத்து நந்த லாலா.......எனத் தொடங்கும் பாடலில் பின் வருமாறு எழுதியிருந்தார்.
மாமனையே நம்பி நம்பி நந்தலால....
இப்ப மாரடிச்சுக் கொள்ளுறாவே நந்தலாலா........
//// ஒ இது இரத்தினதுரையின் வரிகளா? 2002 ஆணையிரவு வெற்றியின் போது இயற்றி பாடப்பட்ட பாடல், மாமன் -ரத்வத்தே
மருமகள் -சந்திரிக்கா ;-)
////அனுருத்த ரத்வத்தவினை நம்பி ஏமாந்து போன கதியினை அல்லது தமிழர்களிடம் நிலங்களைப் பறி கொடுத்த நிலமையினை விளக்கும் வகையில் கவிஞர் அவர்கள் எழுதியிருந்தார்.//// இந்தியாவுக்கோடி போனா நந்தலாலா, இப்ப இஸ்ரேலிலுக்கும் ஒடுறாவாம் நந்தலாலா ;-) அப்ப பதினைந்து வயசில கேட்ட பாடல் இப்ப கூட நினைவிருக்கு....
////வன்னியிலிருந்து வந்து எழுதுவோரின் எழுத்துக்களைப் பிடிக்காதோர், பதிவினை முழுமையாகப் படிக்காது, வயித்தெரிச்சலுடன் சொல்லும் வார்த்தை தான் ‘முட்கம்பிக்குப் பின்னால் மக்கள் நிற்கும் படத்தினைப் போட்டு வன்னியிலிருந்து வந்த அனைவரும் பதிவெழுதி அனுதாபம் தேடுகிறார்கள் எனும் பதமாகும். இன்னும் ஒரு படி மேலே சென்று இதன் உள்ளார்ந்த அர்த்ததினைப் பார்த்தால், புதிய பதிவர்களை வளர விடாமல் நசுக்கும் ஆதிக்கச் செயற்பாட்டின் மறு வடிவம் தான் இது என்பதும் அனைவருக்கும் தெளிவாகப் புலப்படும் உண்மையாகும். //// இது எப்ப நடந்தது...நான் என்ர முகநூலை முடக்கிவிட்டேன் பாஸ் , ஒரே நேரத்தில இரண்டு முகநூல், பிளாக்கர் என்று கண்ரோல் பண்ண முடியல்ல... ;-)
@நிகழ்வுகள்
//// ஒ இது இரத்தினதுரையின் வரிகளா? 2002 ஆணையிரவு வெற்றியின் போது இயற்றி பாடப்பட்ட பாடல், மாமன் -ரத்வத்தே
மருமகள் -சந்திரிக்கா ;-)//
மச்சி, பப்ளிக் பப்ளிக்!
எனக்கும் உங்களுக்கும் ஐந்து வருசம் தான், அதோடை பாணும் பருப்புக் கறியும் தானே தருவாங்கள்.
அட "கோதாரில" விழுவானே ;-) ஆமா இந்த "கோதாரி" என்ற சொல்லும் ஈழத்தில அதிகம் பாவிக்கிற சொல்லு தானே, ஆனா இது வரை எனக்கு அர்த்தம் முழுசாக புரியவில்லை, இதைப்பற்றியும் யாராவது சொல்லுங்கோவன்...( கோதாரி என்று ஒரு நதி இருக்கு போல???)
@நிகழ்வுகள்
அட "கோதாரில" விழுவானே ;-) ஆமா இந்த "கோதாரி" என்ற சொல்லும் ஈழத்தில அதிகம் பாவிக்கிற சொல்லு தானே, ஆனா இது வரை எனக்கு அர்த்தம் முழுசாக புரியவில்லை, இதைப்பற்றியும் யாராவது சொல்லுங்கோவன்...( கோதாரி என்று ஒரு நதி இருக்கு போல???)//
ஏனய்யா, சம்பந்தம் இல்லாமல் என்னைத் திட்டுறீங்க.
கோதாரி விழுவானே, கறுமம் பிடிப்பானே என்று ஊரிலை பழசுகள், நைன்ரியள் தான் திட்டுங்கள். இது தொடர்பாக ஒரு தனிப் பதிவு போட்டு விளக்கம் தாறேன்.
கங்கை, காவிரி, கோதாவரி என்று தான் நதி இருக்கு சகோ.
கோதாரி என்று நதி இல்லை மச்சி.
////மச்சி, பப்ளிக் பப்ளிக்!
எனக்கும் உங்களுக்கும் ஐந்து வருசம் தான், அதோடை பாணும் பருப்புக் கறியும் தானே தருவாங்கள்.//// யோவ், ஒரு ராத்தல் பாண் ஐம்பது ரூபாய்க்கு மேல இப்போ! 96 ல ஒன்பது ரூபாய்க்கு வாங்க கியூவில நிண்டதா நினைவு ! முன்னர் இழிவு பண்டமா இருந்தது இப்ப ஆடம்பர பண்டமாய் ஆச்சு, ஆக இப்ப அது கூட தராங்கள், ஒன்லி அடுப்பு கரி தான்....
தமிழ் மணம் மூன்று ,இன்டலி நாலு ,தமிழ் டென் என்னோட கோவம்....
@நிகழ்வுகள்
////மச்சி, பப்ளிக் பப்ளிக்!
எனக்கும் உங்களுக்கும் ஐந்து வருசம் தான், அதோடை பாணும் பருப்புக் கறியும் தானே தருவாங்கள்.//// யோவ், ஒரு ராத்தல் பாண் ஐம்பது ரூபாய்க்கு மேல இப்போ! 96 ல ஒன்பது ரூபாய்க்கு வாங்க கியூவில நிண்டதா நினைவு ! முன்னர் இழிவு பண்டமா இருந்தது இப்ப ஆடம்பர பண்டமாய் ஆச்சு, ஆக இப்ப அது கூட தராங்கள், ஒன்லி அடுப்பு கரி தான்....
நண்பேண்டா, என்ன ஒரு ரசனையான மனிதன் நீங்கள். கூடவே என்னையும் உள்ளே அழைத்துப் போவதற்கான ஏற்பாடு.
அவ்...
அடுப்புக் கரி அங்கே போய் கியூவில் நின்றா சாப்பிடனும், அவ்....
இந்த மாரடித்தல் எனும் பதத்தினை மக்கள் அனைவர் மனங்களுக்கும் கொண்டு சென்ற பெருமை ஈழத்த்தில் ஓர் காலத்தில் கவிஞராகவிருந்த இரத்தினதுரையினையே சாரும்.
சகோ இந்த மாரடித்தல் என்னும் பதத்தினை எமது இந்திய நன்பர்களுக்கு தெரியப்படுத்திய பெருமை
உம்மையே சாரும் .
நல்லதொரு பதிவு சகோ. மாரடித்தல் போன்ற சொற்கல் அனைத்தும் மரபுச் சொற்களில் ( PHRASES ) வரும் .. அதன் மெய்ப் பொருளைத் தராது வேறொருப் பொருள் கொடுப்பதே இப்படியான மரபுச் சொற்கள்.. ஒரு மொழியினை தெளிவாகப் படிக்கவேண்டும் எனில் மரபுச் சொற்கள் மிகவும் அவசியம்.. இல்லை எனில் என்ன சொல்கிறார் என நமக்குப் புரியாமலே போய்விடும் ...
சில நேரங்களில் வட்டாரத்துக்கு வட்டாரம் மரபுச் சொற்கள் பல மாறுபடுவதும் உண்டு .. மாரடித்தல் போன்ற சொற்கள் தமிழ் சமூகம் எங்கிலும் பயன்பாட்டிலும் இருக்கின்றது .... !!!
இதே போல பல புதிய மரபுச் சொற்களும் ஆங்காங்கே உருவாகி வருகின்றன....
உதா. எமது சென்னைவாசிகளிடம் இச்சொற்கள் பிரபலம் ஆணிப் பிடுங்கவேண்டாம், ஆப்படித்தல், அசிங்கப் பட்டான் ஆட்டோக் காரன் - சிலவற்றில் சினிமாத் தாக்கமும் இருக்கின்றது ...
வெட்டிக் கிழித்தாய்ப் போன்ற சொற்களும் மரபுச் சொற்களில் வரலாம் ...
சகோ ஆறுதலாக கருத்திட நேரம் போதவில்லை யார் மேல் கொபமோ அவரை தான் அந்த அண்ணர் சுட்டியிருக்கணும் அவர் பன்மையில் விழித்திருப்பதாக எனக்கு பட்டது நானும் இதே படம் பாவிக்கிறேன் அதனால் காரணம் கேட்டேன் அவர் கண்டக்கல என்ன செய்யலாம்... பதில் தராத படியால் நானும் அதே படடியல் தானோ...
என்ன பாஸ் காலங்காத்தால மூணு நாலு மணிக்கு உலாவுறீங்க??
இது உள்குத்து பதிவா இல்லை வெளிக்குத்து பதிவா??
ஒப்புக்கு மாரடித்தல் கேள்விப்பட்டு இருக்கிங்களா
?
அவர்கள் மனிதர்களில் இருந்து மாறுபட்ட இனமாகவே கருதப்படுவார்கள்
ஆகா அப்டிப் போடு. நானும் பல முறை பல தளங்களில் உள்ள பூட்டைப் பார்த்து யோசித்துள்ளேன். அப்புறம் இன்று தான் நீங்க ஈழத்தைச் சேர்ந்தவர் என்பதை கண்டு கொண்டேன். சற்று வித்யாசமான சிந்தனைகளுக்கு சொந்தகாரரான உங்களுக்கு என் வாழ்த்துகள். இது போல தொடர்ந்து எழுதுங்க.
நல்லதொரு பதிவு ..!
http://erodethangadurai.blogspot.com/
NANRI ENANKU ITHU PUTHIYA THAGAVAL NANRI
மாப்ள பகிர்வுக்கு நன்றி!
மாரடித்தல் பதம் இங்கும் உண்டு சகோ..வெறுமனே காசுக்காக மட்டுமே ஏனோ தானோயென வேலை செய்வதையும் கூலிக்காக மாரடித்தல் குறிக்கும் அல்லவா..
@செங்கோவி
மாரடித்தல் பதம் இங்கும் உண்டு சகோ..வெறுமனே காசுக்காக மட்டுமே ஏனோ தானோயென வேலை செய்வதையும் கூலிக்காக மாரடித்தல் குறிக்கும் அல்லவா..//
ஆமாம் சகோ, இதனையும் என் பதிவில் பச்சை நிற எழுத்தின் மூலம் விளக்கியுள்ளேன் சகோ.
மாரடிக்க முடியல உம்ம கூட ஹி ஹி
செம பதிவுய்யா /..
இவ்வாறு அழும் முறையை மாரடித்து அழுதல் அல்லது மாரடித்தல் என்று கூறுவார்கள்.//
யோவ்.. இதெல்லாம் எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சது தான்யா.. ஏன் இப்படியெல்லாம் போட்டு கொடுமை படுத்துற.?
அதனை விளிக்க கூலிக்கு மாரடித்தல் எனும் பதத்தினை கையாண்டார்கள்.//
அடப்பாவிகளா.. இது எல்லா தமிழர்களுக்கும் தெரியுமே.. என்னயா இது இதுக்கெல்லாம் ஒரு பதிவா.?
மாமனாரை நம்பிக் கொண்டிருந்த நபரானவர் கையறு நிலைக்கு வந்து விடுவார். //
மாமாவை மட்டும் தான் நம்பணுமா.?
அந்த முகபுத்தக செயல் கண்டிப்பாக கண்டிக்கபடவேண்டிய ஒன்று..
உங்கள் கோபம் சரிதான்.. மற்றபடி மேல் கூறிய பதிவுகள்-அதான் மாரடிப்பது பற்றி.. ஹி ஹி..
இங்கேயும் இதுமாதிரியான மாரடித்து அழுவதுண்டு. இதற்கென்றே ஒரு கூட்டம் கூடும்.
இப்போ புரிஞ்சு போச்சு! :-)
பானுக்கு வாங்க கியூவில நிண்ட மறக்கது முடியாது அதிலும் பல சுவாரசியங்கள் நடக்கும்
காத்திருந்து களைத்துப் போனேன் பின் தூங்கிப் போனேன் புரிந்து கொள்வீர்கள்
இந்தப் பதிவுகள் ஊடே என் கிராமத்து நடைமுறையை பலர் ஆறிந்து கொள்வார்கள் .
உண்மையில் மாரடித்தலை நேரில் பலரின் மறைவுகளை பாத்து கடந்துவந்தவன் என்பதில் ஒன்று மட்டும் சொல்லுகிறேன் முன்னர் எங்கள் பாட்டி மார் ஒப்புச் சொல்லி மாராடிப்பார்கள் இதில் இறந்தவரின் பெருமையை மட்டும் சொல்லி அழும்போது அருகில் இருப்பவர்களும் சேர்ந்து அழுவார்கள். அழுது இருக்கிறேன் .இப்போதெல்லாம் இது அருகி வருகிறது என்பேன் நாகரிக வாளர்ச்சியாக்கும்! புலம்பெயர் தேசத்தில் கத்தி ஊரைகூட்ட முடியாது தாயகத்தில் இப்போது ஒப்புத்தெரிந்த பாட்டிமார் அருகிப் போய்விட்டார்கள் . மற்ற இடங்களை பின்னுட்டம் ஊடே தெரிந்து கொள்கிறேன்.
கூலிக்கு மாராடித்தல் நம்மபிழைப்பு நேரம் போதவில்லை இன்னும் எழுதலாம் !
1)... எழுதுவன் சுதந்திரத்தை எப்படி பறிக்கலாம் என்பவர்கள் ஏன் ஒரு யுகத்தின் மனவடுக்களுக்கு ஒரு பதிவும் போடாமல் ஒப்புக்கு பாட்டையும் மொக்கையாகவும் போட்டுவிட்டு செல்கிறார்கள்?
2) பூவோட சேர்ந்து நார் மணப்பது போல உங்களுடன் சேர்ந்து எனக்கும் சிலர் அனுப்பும் மின்னஞ்சல் நண்பர்கள் கருத்தை படியுங்கள் என்னை ஆராயாதீர்கள் என்றதை மட்டும் கூறிவிட்டு மாராடிக்க எனக்கில்லை நேரம்.
நிரூ...நம்மில் சிலர் பொழுதுபோக்கவும் புகழுக்காகவும் மாரடிப்பினம் தெரியுமோ !
1283. அனஸ் இப்னு மாலிக் அறிவித்தார்.
கப்ருக்கருகே அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி அவர்கள் கடந்து சென்றபோது, 'அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!" என்றார்கள். அதற்கு அப்பெண், என்னைவிட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்பட வில்லை' என்று நபி அவர்கள் யாரென அறியாமல் கூறினாள். அ(வளிடம் உரையாடிய)வர் நபியெனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே காவலாளிகள் எவருமில்லை. 'நான் உங்களை (யாரென) அறியவில்லை" என்று நபி அவர்களிடம் கூறினாள். 'பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வதே)' என்று இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள்.
Volume :2 Book :23
எனவே இறப்பினால் துன்பம் ஏற்படும்போது பொறுமையை கைக் கொள்ள வெண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
1304. இப்னு உமர் அறிவித்தார்.
ஸஅத் இப்னு உபாதா நோயுற்றபோது நபி அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅத் இப்னு அபீ வக்காஸ், அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (ஸஅத் இப்னு உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், 'என்ன? இறந்துவிட்டாரா?' எனக் கேட்டார்கள். 'இல்லை; இறைத்தூதர் அவர்களே!' என்றனர். நபி அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். பின் நபி அவர்கள், '(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை - பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான். நிச்சயமாகக் குடும்பத்தினர் ஒப்பாரி வைத்து அழுவதால் இறந்த உடல் வேதனை செய்யப்படுகிறது" என்று கூறினார்கள்.
ஒப்பாரி வைப்பவர்களை உமர் கண்டால் கம்பினால் அடிப்பார்; கல்லெறிவார். இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்.
Volume :2 Book :23
மேற்கண்ட நபி மொழிகள் மூலம் ஒப்பாரி வைத்து அழுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆள் வைதது கூலிக்கு மாரடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டது.
நிரு உம்மோட மாரடிக்கிறது சரியான கஷ்டம்!
//அன்பிற்கினிய உறவுகளே!
ஆரத் தழுவும் தென்றல், அருகருகே சத்தமிட்டுப் பறக்கும் பறவைகள், ஓடை நிறைந்தோடும் நீர், ஒன்றாய்ச் சேர்ந்திருக்கும் சுற்றம் என வளங் கொழித்த கிராமத்து வாழ்வும்,//
ஆரம்பமே அசத்தல்... மேலும் படிக்கத்தூண்டுகிறது
மாரடித்தல் என்ற ஒரு சொல்லுக்குள் இவ்வளவு அர்த்தங்களா? அருமையான பதிவு நிரூபன்.. பகிர்வுக்கு நன்றி
புலம்பெயர் உறவுகளே ஏன் இப்படி?
கூலிக்கு மாரடிப்பவர்கள் என்று கிராமத்தில் உண்டு சகோ.இறுதி ஊர்வலத்தில் முன்னால் மாரடித்து செல்வார்கள்.நன்று.
நானும் மாரடிக்க வந்துட்டேம்லேய் மக்கா...
வித்தியாசமான பதிவு நன்றி
அருமையான தகவல்கள்
ஒரு ஆராய்ச்சி கட்டுரையே போட்டாச்சா
தலைப்பு வைக்கிறதுல கில்லாடிய்யா நீரு
@தர்சிகன்
//
உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் சகோ தர்சிகன்.
அந்த உறவுகளைத் திட்டுவதால் எமக்கு நன்மைகள் ஏதும் ஏற்படப் போவதில்லைச் சகா.
அவர்களும் எங்களின் தமிழ் உறவுகள் தான்.
உங்களின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்கிறேன். ஆனாலும் இந்தப் பின்னூட்டத்தை, வலைப் பதிவின் மறு மொழி மட்டுறுத்தல் கோட்பாட்டிற்கமைவாக வைத்திருக்க முடியாத நிலையில் உள்ளேன் சகோ.
புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்துதல் தான் தான் மேதாவிதனத்தை நிருபிக்கும் என நம்பும் ஒரு வித மனப்பாங்கு உடையவர்கள் இவர்கள் , விட்டு தள்ளுங்கள் சகோ , நமக்கு நிறைய வேலை இருக்கிறது ............
சொங்கிக்கு இதுதான் அர்த்தமா?தெரிந்துகொண்டேன் சகோ....
Post a Comment