வணக்கம் உறவுகளே, மீண்டும் உங்கள் அனைவரையும் மற்றுமோர் விவாத மேடையின் வாயிலாகச் சந்திக்கிறேன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அறிவிப்பு: பதிவிற்குள் நுழைய முன் - இந்தப் பதிவின் நோக்கம் ஈழப் போராட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி அல்ல, இந்தப் பதிவின் ஊடாக ஈழப் போரின் வீழ்ச்சிக்கு பிரதேச வாதம் எவ்வாறு பங்களிப்புச் செய்துள்ளது என்பதனை மாத்திரமே ஆராயவுள்ளேன். வாசகர்களும், பதிவர்களும் பதிவோடு தொடர்புடைய கருத்துக்களைப் பின்னூட்டங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம், பதிவிற்குத் தொடர்பில்லாத கருத்துக்களைப் பகிர்ந்து, பதிவின் திசையினை மாற்ற முற்படமாட்டீர்கள் எனும் நம்பிக்கையில் இந்த விவாத மேடை எனும் பகுதியினை- மீண்டும் உங்கள் முன் கொண்டு வருகின்றேன்.
இப் பதிவினூடாக முதன்மைப் படுத்தப்பட இருப்பது போராட்டம் அல்ல, பிரதேசவாதம் பற்றிய பார்வையே, என்பதனை வாசகர்கள் அனைவரும் கருத்திற் கொள்ளவும்.
விவாத மேடையில் இறுதியாக வெளி வந்த, ஈழத்திற்காய் தீக்குளிக்கப் போகும் புதுமைப் பெண்’ எனும் பதிவினைப் புரிந்து கொள்ளாது பலர் பின்னூட்டங்களை எழுதிப் பதிவின் காத்திரத் தன்மையினை மழுங்கடித்துப் பதிவின் நோக்கத்தினை, மாற்றும் வகையில் கருத்துக்களை வழங்கிய காரணத்தினால், கடந்த வாரம் விவாத மேடைப் பகுதியினை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடியாதிருந்தது.
ஈழம் என்றால் எல்லோருக்கும் தெரியும், இலங்கைத் தீவிற்குரிய பண்டைய இலக்கிய நயம் மிக்க பெயர் ஈழம். ஈழத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளாக வடகிழக்கு மாகாணங்களையும், தென் - மேல் மாகாணங்களையும், மத்திய மலை நாட்டினையும் குறிப்பிடலாம். இந்தப் பகுதிகளில் உள்ள தமிழர்கள்
வட கிழக்கு மாகாணங்களில் உள்ள யாழ்ப்பாணம், கிளி நொச்சி, முல்லைத் தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை முதலிய இடங்களில் தமிழர்கள் பெரும் பான்மையாகவும், பூர்விகமாகவும் வாழ்ந்தாலும்- அந்தப் பிரதேசங்களைச் சார்ந்து வாழும் மக்களிடையே பண்பாட்டு அடிப்படையிலும், மொழி உச்சரிப்பு (pronunciation or Slang) அடிப்படையிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன,
இது இனத்தால் ஒன்றுபடுவதற்கு தடையாக விளங்கும் ஓர் விடயமும் அல்ல.
ஆனால் எம் தமிழர்களின் பரம்பரைக் குணம்- பிரிந்து வாழுதல் ஏனைய மனிதர்களோடு ஒட்டி வாழாது தங்களைத் தாங்களே உயர்ந்தவர்களாக நினைத்து தற் பெருமையுடன் வாழுதல். இந் நிலமையின் காரணத்தால் எம் தமிழர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஒரு விடயம் தான், தமக்குள்ளே வேற்றுமைகளைக் கையாளத் தொடங்கியமை. ’ஈழம் எனும் கோட்பாட்டின் கீழ் எல்லோரும் ஓரணியில் நின்று போராடினார்களே! என்று உங்கள் மனங்களில் கேள்விகள் எழலாம். ஈழம் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் எல்லோரும் ஓரணியில் நின்றார்கள் என்று இங்கே சொல்ல முடியாது. பலரிடம் வேற்றுமைகள் நிரம்பி இருந்தன. இவற்றினைத் தனித் தனியே ஆராய முற்பட்டால், வெள்ளை வான்கள் வீடு நோக்கி வரும், ஆதலால் அதனைத் தவிர்ப்போம்.
இந்த வேற்றுமைகள் எங்கே இருந்து பிறந்தன என்றால், எமது சமூகங்களிடம் இருந்து கிராமங்கள் வாயிலாகப் பிறந்தது, இது பின்னர் பல்கிப் பெருகி ஒவ்வோர் மாவட்டங்கள் வாயிலாக வளர்ச்சியடைந்து பின் நாளில்(இன்றைய கால கட்டத்தில்) தேசிய ரீதியில்(Nation Wide) நச்சுப் பதார்த்தமாக விருத்தியடைந்துள்ளது.
ஈழத்தில் சமூக ரீதியான பிரதேசவாதங்கள் எப்படித் தோற்றம் பெற்றன என்று பார்ப்போம். முதலில் வட கிழக்கில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில்.........................................
’டோய், நிறுத்தடா. யாழ்ப்பாண மாவட்டத்தில் நீ ஆரம்பிக்கிறியே இதுவும் பிரதேசவாதம் தானே, எங்கே, உன்னிடம் வேற்றுமை இல்லை என்றால் மட்டக்களப்பில் இருந்தோ அல்லது மன்னாரில் இருந்தோ நீ ஆரம்பி, பார்க்கலாம் என்று யாராவது குதர்க்கமாக இங்கே வந்து பேசலாம். இலங்கைப் படத்தின் மேற் பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் என்பதே அவர்களுக்கான பதிலாக இருக்கும்.
யாழ்ப்பாணக் குடா நாட்டில் பிரதேச வாதம்!
யாழ்ப்பாணத் தீவகற்பத்தில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என நான்கு பெரும் பிரிவுகள் உள்ளன, இவை பூகோள அடிப்படையில் குடா நாட்டினை அடையாளப்படுத்தும் நோக்கில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பதாகவே ஒல்லாந்தர்களினால் பிரிக்கப்பட்டிருந்தன.
ஆனால் இங்கே உள்ள மக்கள் அனைவருக்கும் தனி நாடு வேண்டும், எனும் ஆசை இருந்தாலும், இப் பிரதேசங்களின் அடிப்படையில் வேற்றுமைகள் அவர்களின் அடி மனங்களில் காணப்படுகின்றது என்பது உண்மையே!
உதாரணமாக வலிகாமத்தின் பலாலி எனும் ஊரினையோ அல்லது அதனைச் சார்ந்த காங்கேசன்துறை, வசாவிளான், மயிலிட்டி எனும் ஊர்களிலோ வாழும் மக்கள் விவசாயத்தினைத் தான் தமது வாழ்வாதாரமாக, போருக்கு முன்னரான காலப் பகுதியில் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்து ஏனைய மக்கள் எப்படி நகைப்பார்கள் தெரியுமா?
தக்களாளிப் பழம், செம்பாட்டார், என பிரதேச அடிப்படையில் நையாண்டி கலந்து அழைப்பார்கள், இவ் இரு சொற்களுக்கும் விளக்கங்கள் தேவை இல்லை என நினைக்கிறேன். (விவசாயத்தினைச் சார்ந்த சொற்கள்)
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் இடம் பெயர்ந்து இந்த ஊர் மக்கள் யாழில் உள்ள ஏனைய ஊர் மக்களோடு ஒட்டி வாழ வந்த போது அவர்களால் இந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். அல்லது விலக்கி வைக்கப்பட்டார்கள். ஈழத்தில் இன்று வரை சொந்த ஊருக்குச் சென்று வாழாத மக்களும் இந்த வலி வடக்கு மக்களே.
’கச்சைக் கொடியை பச்சைப் பாம்பென்று அடிச்ச
பச்சைப் பலாலியான்’
இப்படி ஏனைய யாழ்ப்பாணத் தமிழர்கள் வலிகாமம் வடக்கினைச் சேர்ந்த தமிழர்களை நையாண்டி செய்து, அவர்களைத் தம்மிடமிருந்து பிரித்துப் பார்ப்பார்கள்.
இம் மக்களைப் பிரித்துப் பார்க்க இன்னோர் காரணம், விவசாய நிலத்தினைச் சேர்ந்த இந்த மக்களின் கலர், ஏனைய மக்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படும், கடுமையான கறுப்பாக இருக்கும்(Dark Black), ஆதலால் பாடசாலைகளில் இப் பகுதியினைச் சார்ந்தவர்கள் படிக்கும் போது ‘வறையோட்டுக் கரியான்’ செம்பாட்டுக் கரியான்’ எனக் கிண்டலடித்து ஏனைய உயர் குடி யாழ்ப்பாணிகள் மகிழ்ச்சியடைந்து கொள்வார்கள்.
தீவகத்து மக்களை எடுத்துக் கொண்டால் அவர்களின் வாழ்வாதாரம், மீன்பிடியாகவே இருக்கும், ஆனாலும் தீவகத்தில் பனைகள் அதிகமாக இருப்பதாலும், பனங் கொட்டையில் இருந்து செய்யப்படும் ஒடியலில் தீவகத்தின் தயாரிப்புக்களே பிரபலம், தரமானவை என்பதாலும் அந்தப் பகுதியினைச் சார்ந்த மக்களை
’தீவார்’ புழுக் கொடியல் நக்கியள்’ என்று அழைத்து மகிழ்வார்கள், இன்னொரு முக்கியமான விடயம், யாழின் ஏனைய பகுதி மக்கள் தீவுப் பகுதியில் திருமணத் தொடர்புகளை வைத்துக் கொள்ளவே விரும்ப மாட்டார்கள். விளக்கம் கேட்டால், தீவார் என்றால் குறைஞ்ச ஆட்களாம் என்று ஒரு காரணம் வேறு சொல்லுவார்கள்.
தென்மராட்சிப் பகுதியின் புவியியல் அமைவிடம் காரணமாக, அப் பகுதியின் நிலத்தடி நீர் சிகப்பு நிறமாகவே காணப்படும், அத்தோடு உவர் தன்மை அதிகமாகவும் காணப்படும்(Sour). இத் தென்மராட்சிப் பகுதிக் கிணறுகளில் உள்ள தண்ணீரும் சிகப்பு நிறமாக சவர் தன்மையுடன் காணப்படுவதால், இங்கே உள்ள மக்களை ஏனைய யாழ்ப்பாணிகள் ‘சவர் தண்ணிக்காறார்’ என்று கேலி செய்து மகிழ்வார்கள்.
அளவெட்டி மக்களை தவிலூதிகள் என்றும், கைதடி, நாவற்குழி, கொட்டடி முதலிய ஊர்களைச் சேர்ந்த மக்களை ‘மரமேறிகள் என்றும் அழைத்து மகிழ்வார்கள்.(சீவல் தொழில் செய்வோர் அதிகமாக வாழுவதால்)
வடமராட்சிப் பகுதியானது மீன்பிடித் தொழிலுக்குப் பிரபலம் என்பதால், கரையார், கப்பலோட்டிகள் என அழைத்து ஏனைய யாழ்ப்பாண மக்கள் மகிழ்ந்து கொள்வார்கல்.
இப்படியெல்லாம் சொல்லித் தமக்குள் தாமே வேறுபட்டு நிற்கும் ஒட்டு மொத்த யாழ்ப்பாண மக்களையும் அயல் மாவட்டக்காரன் அழைக்கும் பெயர் தான் பனங்காய் சூப்பிகள், பனங் கொட்டை நக்கிகள்.
இந்தப் பெயர் ஏன் வந்தது தெரியுமா? யாழில் பனை மரங்கள் அதிகமாக இருப்பதால், அவற்றின் உள்ளீடுகளான பனம் பழத்தினை யாழ்ப்பாண மக்கள் அதிகளமாக உண்டு, சூப்பி மகிழ்வதால் தானாம் என்று நக்கலுடன் கலந்து கூறுவார்கள்.
ஒரு மாவட்டத்திற்குள் இத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்றால், ஒரு தனி நாட்டினை இந்த மக்கள் கையில் கொடுத்தால், அந்த நாட்டிற்குள் எப்படியான திருவிளையாடல்கள் நிகழும் என்பதனை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இதனை வாசகர்களாகிய உங்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
வன்னிப் பகுதியில் உள்ள பிரதேசவாதம் பற்றிய தகவல்களோடு அடுத்த விவாத மேடையினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்......!
டிஸ்கி: ஈழப் போருடன் தொடர்புடைய, நடந்து முடிந்த விடயங்களை மீண்டும் மீண்டும் கிளறுவதால், அல்லது இவற்றினை ஆராய்ச்சி செய்வதால் என்ன இலாபம்? என்ன பயன்- என்று நீங்கள் கேட்கலாம்.
தமிழகத்தில் உள்ள மூத்த இலக்கிய அறிஞர்களின் வேண்டு கோளுக்கமைவாகவும், நான் இது வரை எழுதிய, ஈழத்தில் சாதியம் பற்றிய ஆய்வுகளையும், பிரதேசவாதம் பற்றிய ஆய்வுகளையும் நூலுருவில் வெளியிடவுள்ளேன். இதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினரவாது இத்தகைய தவறுகளைச் செய்யாது நல்லதொரு வளமான வாழ்வினைக் கட்டியெழுப்புவார்கள் எனும் நம்பிக்கையில் தான், இந்தப் பதிவுகளை எழுதுகிறேன். இவற்றினை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!
|
92 Comments:
வணக்கம் நிரு! நல்லதொரு தலைப்பை எடுத்துள்ளீர்கள்! நன்று! ஆனால் நான் இன்று சொல்லப் போகும் கருத்துக்கள் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்! ஏனென்றால் நான் சொல்ல இருப்பவை மாற்றுக்கருத்துக்கள்! ஈழத்தில் சாதீயத்தை எந்தப் கொம்பனாலும் ஒழிக்க முடியாது என்பது எனது கருத்தாகும்! காரணம் எவரெல்லாம் kசாதி குறைந்தவர்கள் என்று எம்மால் புறக்கணிக்கப்படுகிறார்களோ, அவர்கள் தான் pசாதிப் பிரிவுகளை வளர்க்கிறார்கள்! அதாவது சாதி குறைந்தவர்களாலேயே சாதி வளர்க்கப்படுகிறது!
நிரு, உங்களுக்கு தெரியும் நான் யாழ். இந்து வேளாளர் குலத்தை சேர்ந்தவன்! எனது சாதியினை அடுத்தவர்களுக்கு சொல்வதில் ஒரு பெருமை! நான் ஏன் சாதி குறைந்தவர்களுடன் பழகுவதில்லை என்றால், சின்ன வயசில் இருந்தே நான் அப்படியே வளர்க்கப்பட்டேன்! எனது பெற்றோர் என்னை அப்படித்தான் வளர்த்தார்கள்!
நாங்கள் பாடசாலைக்கு செல்லும் போது, எவ்வளவு நீட் ஆக, சேர்ட் இன் பண்ணி, சப்பாத்து போட்டுக்கொண்டுதான் போவேன்! எனது வகுப்பில் சில சாதி குறைந்த பிள்ளைகள் படித்தார்கள்! அவர்கள் தலை வாருவதில்லை - பரட்டை தலை! விரலில் நகம் வெட்டுவதே இல்லை ! காலில் செருப்புகூட போடுவதில்லை! உடுப்புகள் அயன் பண்ணுவதே கிடையாது!
மேலும் அந்தப் பிள்ளைகள் படு மோசமான தூசன வார்த்தைகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கர்கள்! எமக்கோ அந்த வார்த்தைகளை உச்சரிக்கவே கூச்சமாக இருக்கும்!
அத்துடன் ஒழுங்காக படிக்கவும் மாட்டார்கள்! பெயில் விட்டு பெயில் விட்டு பெரிய மல்லன்கள் எல்லோரும் என்னுடன் படித்தார்கள்! அவர்களுடன் எல்லாம் பழக கூடாது என்று எனக்கு அம்மா கண்டிப்புடன் சொல்லி அனுப்புவார்!
( நிரு, இப்ப நித்திரை தூக்கி அடிக்குது - காலமை வாறன் மிச்சத்துக்கு )
உண்மை சுடுகிறது நண்பரே!!.தமிழகத் தமிழர்களுக்கு ஈழத்தின் பல நுண்ணிய பிரச்சினைகள் புரிவது இல்லை(என்னையும் சேர்த்துதான்).தொடர்ந்து எழுதுங்கள்.
தெரியப்பட வேண்டிய பல விஷயங்களை உள்ளடக்கிய பதிவு தொடரட்டும் உம்பணி நன்றி!
>>>இதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினரவாது இத்தகைய தவறுகளைச் செய்யாது நல்லதொரு வளமான வாழ்வினைக் கட்டியெழுப்புவார்கள் எனும் நம்பிக்கையில் தான், இந்தப் பதிவுகளை எழுதுகிறேன்.
ஓக்கே//.. தொடரட்டும்
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வணக்கம் நிரு! நல்லதொரு தலைப்பை எடுத்துள்ளீர்கள்! நன்று! ஆனால் நான் இன்று சொல்லப் போகும் கருத்துக்கள் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்! ஏனென்றால் நான் சொல்ல இருப்பவை மாற்றுக்கருத்துக்கள்! ஈழத்தில் சாதீயத்தை எந்தப் கொம்பனாலும் ஒழிக்க முடியாது என்பது எனது கருத்தாகும்! காரணம் எவரெல்லாம் kசாதி குறைந்தவர்கள் என்று எம்மால் புறக்கணிக்கப்படுகிறார்களோ, அவர்கள் தான் pசாதிப் பிரிவுகளை வளர்க்கிறார்கள்! அதாவது சாதி குறைந்தவர்களாலேயே சாதி வளர்க்கப்படுகிறது!//
வணக்கம் ஓட்டவடை நாராயணா, சாதி குறைந்தவர்களால் சாதி எவ்வாறு வளர்க்கப்படுகிறது என்பதனைக் கொஞ்சம் விரிவாகக் கூறினால் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
நான் அறிந்த வரை கோயில் நிர்வாகங்களையும், ஒரு சில உயர் குடி மக்களையும் சார்ந்து தான் சாதிகள் வளர்த்தெடுக்கப்படுகின்றன.
சாதியம் இந்திய இனங்களில் இருந்து பிரிக்க முடியாத ஒன்று.. ஈழம் மட்டும் விதிவிலக்காகவா இருந்துவிடப் போகிறது!
OK..... OK......
வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனித நேயம் நம் நாடில் இல்லை நண்பா
பிரதேசவாதம் எப்படி எல்லாம் சீர் அழித்தது என்று நானும் தொழில் நிமித்தம் பிறபகுதியில் பணிபுரியும் போது நேரடியாக உணர்ந்தவன் ஆனால் இதை எப்படி ஒழிப்பது சாத்தியமாகுமா? சாதாரன அடித்தட்டு மக்களிடம் ஊரிப்போன பழக்கம் இதுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது!காத்திருக்கிறேன் நல்ல கருத்துக்கள் வரும் என்ற நம்பிக்கையில்!
இப்ப நித்திரை தூக்கி அடிக்குது - காலமை வாறன் மிச்சத்துக்கு /// இந்த தமிழ் படிக்கும் போதே இவ்வளவு இனிமையாக இருக்கிறதே கேட்டால்?
அருமையான வாதம் சகோ.
நிரு எனது கருத்துக்களை நான் சுதந்திரமாக சொல்லிக்கொண்டு போகிறேன்! நீங்கள் என்மீது கோபிக்க கூடாது! அப்புறம் ப்ளாக் பக்கம் நீங்க ரெண்டுநாளா வரவே இல்ல! கோபம் இல்லைத்தானே!!
நிரு, சாதிகுறைந்தவர்களை நாங்கள் ஒதுக்குகிறோம் என்கிறீர்கள்! ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவர்களாகவே எம்மில் இருந்து ஒதுங்கிச் செல்கின்றனர்! தங்கள் தங்கள் ஆக்களுடன் சேர்ந்து கூட்டமாக இருக்கின்றனர்! எம்மைப் பார்க்கும் போது, நிமிர்ந்து கதைக்கிறார்கள் இல்லை! தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்! நாங்களா சொன்னோம் அவர்களை ஒதுங்கிப் போகச்சொல்லி!
" சாதிக் குணம்" என்று என்று ஒன்று இருக்கிறது! அது நூறு வீதம் உண்மை! அவர்களது பழக்கவழக்கங்கள் உதவாது! நான் சொன்னேனே, சின்ன வயசிலேயே தூசனம் கதைக்கிறது, கள்ளு குடிக்கிறது, பீடி பத்துறது, சின்ன வயசில கலியாணம் செய்யுறது! டசின் கணக்கில புள்ளை பெறுறது, அதுகளை ஒழுங்கா வளர்க்காமல், சின்ன வயசிலேயே தொழில் பழக்கிறது........ இப்புடி அடுக்கிக் கொண்டே போகலாம்!
இவர்கள் தங்களது உதவாத பழக்க வழக்கங்களால், எம்மைக் கண்டு அச்சப்படுகின்றனர்! ஆங்கிலம் கலந்த எமது பேச்சுத் தமிழே போதும், அவர்கள் எம்மில் இருந்து விலகிச்செல்ல!
நிரு, பெத்த தாய் தேப்பனை, நீ .... வா.... போ என்று அழைக்கும் கேவலத்தை எங்காவது கண்டிருக்கிறீர்களா? நாங்கள், வாங்க , போங்க என்று எவ்வளவு மரியாதையாக அழைக்கிறோம்! அம்மாவைப் பார்த்து, நீ என்று உச்சரிக்க ஒருபோதும் எங்களால் முடியாது! நா கூசும்! அத்துடன் சின்னப் பிள்ளைகளை கூட நாங்கள், வாங்க போங்க என்றுதானே அழைக்கிறோம்! பண்பாட்டு ரீதியில் எவ்வளவோ உயர்ந்து நிற்கிறோம்! ஆனால் அவர்கள்?
பெற்றோரையே கெட்ட வார்த்தையால் திட்டுகிற எத்தனையோ, இளம் சிறார்களை நான் கண்டிருக்கிறேன்! பெண் பிள்ளைகளும் தான்! நான் படித்த பாடசாலையில், பின் வாங்கில் கொஞ்ச கூட்டம் இருக்கும் எந்த நேரமும் ஒரே கலியாணக் கதைதான் கதைக்குங்கள்! அதே மாதிரி சின்ன வயசிலேயே கலியாணம் கட்டி, புள்ளையும் பெத்துப் போடுங்கள்!
என்னோடு படித்த பல பெடியள், பத்துவருஷத்துக்கு முன்னாலையே கலியாணம் கட்டி நாலு பிள்ளைகளுக்கு அப்பனாக இருக்கிறார்கள்! நாங்களா சொன்னோம், அவர்களை பெத்து தள்ளச்சொல்லி!
முதலில் அவர்கள் நாகரிக உலகத்துக்கு பழக்கப்பட வேண்டும்! கூட்டம் கூட்டமாக வாழ்வதை விடுத்து, வெளியே வரவேண்டும், தங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிப்பிக்க வேண்டும்! ஒரு மீனவரின் மகன் மீன் பிடி தொழில்தான் செய்யவேண்டும் என்று எங்காவது சட்டம் இருக்கிறதா? ஏன் டாக்டராக வரக்கூடாது?
நிரு நான் போலித்தனமாக எழுத விரும்பவில்லை! உண்மைகளையும், நடை முறைகளையும் தான் எழுதியுள்ளேன்! இலங்கையில் சாதியை ஒழிக்கவே முடியாது! அப்படி ஒழிக்க வேண்டுமானால், அந்தந்த சாதிக்காரர் திருந்தி, வெளியுலகத்துக்கு வந்தாலொழிய மற்றும் படி நடக்காது!!
விடுதலைப் புலிகளால் சாதியினை ஒழிக்க முடிந்ததா?
விடுதலைப் போராட்டம் தோல்வியடைய பிரதேச வாதமும், சாதிப்பிரிவுகளும் தான் காரணமா?
போன்ற பல கருத்துக்கள் என்னிடம் நிறைந்துள்ளன! சொல்வதற்கு நேரம்தான் இல்லை! ஓகே நிரு, வேலைக்கு கெளம்புறேன்!!
/////’கச்சைக் கொடியை பச்சைப் பாம்பென்று அடிச்ச
பச்சைப் பலாலியான்’ /// அது அப்படி இல்லை பாஸ்,
பட்டபகலில் பட்டை கொடியை பாம்பு என்று அடிச்ச கொச்சை சுளிபுரத்தார். பட்டை கொடி என்பது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க பயன்படும் கயிறு.. அந்த கயிற்றை பகலில பாம்பு என்று நினச்சு அடி பின்னி எடுத்தார்கள் என்று இவ்வாறு சொல்வார்கள்..
ஊஆடவடை அன்னாரின் கருத்துக்கள் பலவற்றில் நானும் ஒன்றித்து போகிறேன். பல சமயங்களில் அவர்கள் தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்கிறார்கள். அதுன்கியே வாழ்கிறார்கள். கல்வியில் நாட்டமின்மை சிறு வயசிலே தொழிலுக்கு செல்வது முக்கியமாக சிறு வயசு திருமணம்.
ஒரு தடவை பதினேழு வயசான ஒரு பொடியனுக்கு பதினைந்து வயசு உயர்குல பொண்ணோடு காதல் இதை அந்த பையன் தன் தாயிடம் சொல்ல தாய் அந்த பொண்ணு வீட்டில் தன் மகனுக்கு பொண்ணு கேட்டு வந்துட்டா.. விடுவார்களா, அந்த பதினேழு வயசு பையனை பிடித்து பொண்ணு வீட்டுகாரர்கள் அடி பின்னி எடுத்துவிட்டார்கள். ஆனால் இப்பொழுது அந்த பையன் படிப்பையும் விட்டு விட்டு வேறு ஒருத்தியை திருமணம் செய்துவிட்டான். இங்கே அந்த மகனை கண்டிக்காது பொண்ணு கேட்டு வந்த அந்த தேன் பிழை தானே இது .
நான் நினைக்கிறேன் தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்லப்படுபவர்கள் இதை உணர்ந்து சகல துறையிலும் முன்னேற்றம் அடையும் போது பல மடங்கு ஈழத்து சாதியம் குறைக்கும் என்று.
சாதி சாதி ச்சே......
நண்பரே வெள்ளை வான் என்றால் என்ன?( தெரியாததால்தான் கேட்கிறேன், ஈழம் சார்ந்த விடயங்கள் படிக்கும் பொழுது இது அடிக்கடி வருகிறது, இது ஏதேனும் வாகனமா?)
நாராயணன் கந்தசாமி பின்னோட்டங்களில் அப்படியே இலங்கையின் உயர் சாதி தடிப்பு தெரிகிறது. இவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களை தலை நிமிர விடமாட்டார்கள். நல்ல காலமாக ஈழம் நிறைவேறவில்லை.
/// thequickfox said...
நாராயணன் கந்தசாமி பின்னோட்டங்களில் அப்படியே இலங்கையின் உயர் சாதி தடிப்பு தெரிகிறது. இவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களை தலை நிமிர விடமாட்டார்கள். நல்ல காலமாக ஈழம் நிறைவேறவில்லை////
தவறாக புரிந்த கொண்டுள்ளீர்கள். தாம் தாழ்த்தப்பட்ட சாதி என்று தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் அதிலிருந்து முதலில் வெளி வர வேண்டும் என்று தான் சொன்னேன். அதற்க்கு தான் ரஜீவன் அவர்களும் சில உதாரணம் சொன்னார்.
நான் சுழிபுரம் என்னும் கிராமத்திலே பிறந்து வளர்ந்தனான் /// பட்டபகலில் பட்டை கொடியை பாம்பு என்று அடிச்ச கொச்சை சுளிபுரத்தார்./// அது தான் நம்மூரை ஏன் இவ்வாறு சொல்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தேன்.
///ஒரு தடவை பதினேழு வயசான ஒரு பொடியனுக்கு பதினைந்து வயசு உயர்குல பொண்ணோடு காதல் இதை அந்த பையன் தன் தாயிடம் சொல்ல தாய் அந்த பொண்ணு வீட்டில் தன் மகனுக்கு பொண்ணு கேட்டு வந்துட்டா.. விடுவார்களா, அந்த பதினேழு வயசு பையனை பிடித்து பொண்ணு வீட்டுகாரர்கள் அடி பின்னி எடுத்துவிட்டார்கள்./// இதுவும் நம்ம ஊரில் நடந்த ஒரு சம்பவம் தான் ( 2008 இல் நடந்தது)
சாதி என்பது என்னைப்பொறுத்தவரை மனதைப் பொறுத்ததே.சமூகம் என்ன சொன்னாலும்,வீட்டில் என்ன சொன்னாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்பவர்களோடு தொடர்ந்தும் பழகும் மனநிலை எங்களுக்கு வேண்டும்.நான் அப்படித்தான் நிரூ.அவர்களுக்கும் சந்தோஷம்.50% மக்களுக்காவது இந்த மனநிலை இருக்கிறதா நம் நாட்டில்?இருந்திருந்தால் !
ஜாதி ஜாதி ஏன் இந்த பிரிவு ஏற்கனவே
பணக்காரன்-ஏழை
நிறம் சம்பந்தப்பட்ட பிரிவு
மொழிவாரியான பிரிவு
கடவுள் சம்பந்தப்பட்ட பிரிவுகள்
இப்படி பல பிரிவுகள் நம்மை ஆட்கொண்டுள்ள போதிலும் ஏன் இந்த ஜாதி வேறு இடையில். ஜாதி ஒழிக்கப்படவேண்டிய ஒன்று.
ரஜிவா தங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ரஜீவா நீங்கள் கூறுவது உங்கள் காலத்தில் நடந்தது உங்கள் பெற்றோர்களிடம் கேட்டு பாருங்கள் என்ன நடந்தது என்று.
நானும் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன் தான்(பறையன்) என் பெற்றோர்கள் எங்கள் ஊரில் இருக்கும் உயர்சாதி வகுப்பினரிடம் தான் வேலை செய்தார்கள். ஆதலால் அவர்கள் இருக்கும் தெருவில் சென்றாலே எங்களை ஒருவித கேலியாக பார்ப்பார்கள். அந்த தெருவில் உள்ள சிறு பிள்ளைகள் கூட என் தந்தையை பேர் சொல்லி வாடா போடா என்று தான் கூப்பிடுவார்கள். அந்த சமயத்தில் எனக்கு மிக எரிச்சலாக இருக்கும் ஆனால் சாப்பாட்டுக்கு அவர்களிடம் தான் போக வேண்டும் என்று அமைதியாக இருந்து விடுவோம். என் தந்தையை தரக்குறைவாக கேலியாக பேசும் அவர்களிடம் எங்களால் எப்படி சகஜமாக இருக்க முடியும். ஆகவே பிரிவினையை நிர்ணயிப்பதில் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.
உங்கள் அம்மா அவர்களிடம் உங்களை சேரக்கூடாது என்று கூறும் போது நீங்கள் ஏன் சேரக் கூடாது என்று கேள்வி கேட்டு இருப்பீர்களா?
இதெல்லாம் எங்களுக்கு புதிய விஷயங்கள். தொடருங்கள் நிரூபன்
ஒரு மாவட்டத்திற்குள் இத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்றால், ஒரு தனி நாட்டினை இந்த மக்கள் கையில் கொடுத்தால், அந்த நாட்டிற்குள் எப்படியான திருவிளையாடல்கள் நிகழும் என்பதனை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இதனை வாசகர்களாகிய உங்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
சிறப்பான அலசல் சகோ .ஆனால் மேற்கண்ட வரிகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.அடித்தாலும் பிடித்தாலும் அண்ணன் தம்பிதானே!
யாழ்பாணத்தில் இவ்வளவு வேறுபாடா?
நான் நினைத்தேன் மாவட்டங்களுக்கு இடையில் தான் வேறுபாடுகள் என்று?
சாதிக் கொடுமை நமது சமூகத்தில் என்றுதான் ஒழியும்? இலங்கை தமிழர்கள் அனுபவிக்கும் பல கொடுமைகளில் இதுவும் ஒன்று.
நிருபனுக்கு ஒரு பணிவான அறிவிப்பு:சில பதிவுகளுக்கு நான் எந்தவித விமர்சனமும் பண்ண மாட்டேன்..குறை நினைக்க வேண்டாம்..
மற்றம்படி வழமை போல மிச்ச பதிவுகளுக்கு நான் ப்ரெசென்ட் ஹிஹி
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மேலும் அந்தப் பிள்ளைகள் படு மோசமான தூசன வார்த்தைகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கர்கள்! எமக்கோ அந்த வார்த்தைகளை உச்சரிக்கவே கூச்சமாக இருக்கும்!//
இல்லைச் சகோ, எல்லா இடங்களிலும் இப்படி இடம் பெறுவதில்லை, அந்தப் பிள்ளைகள் தூசன வார்த்தைகள் / கெட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறார்கள் என்றால் அவர்களைப் படிப்பித்த,
அப் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களின் நிலமை என்ன?
இப் பிள்ளைகள் திருந்தக் கூடாது என்று அவர்கள் நினைத்தமை தானே?
அல்லது ஆசிரியர்கள் உயர் குலத்தில் இருந்ததால், மாணவர்கள் தாழ்ந்த குலம் எனும் இடை வெளியும் இதற்கான ஓர் காரணமாகவும் இருக்கலாம் அல்லவா?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அத்துடன் ஒழுங்காக படிக்கவும் மாட்டார்கள்! பெயில் விட்டு பெயில் விட்டு பெரிய மல்லன்கள் எல்லோரும் என்னுடன் படித்தார்கள்! அவர்களுடன் எல்லாம் பழக கூடாது என்று எனக்கு அம்மா கண்டிப்புடன் சொல்லி அனுப்புவார்!//
இதே அறிவுரைகளுடன் தான் நானும் வளர்க்கப்பட்டேன், ஆனால் என்னுடன் படித்த அனைத்து நண்பர்களும் படிப்பில் கெட்டிக்காரர்கள். என்னுடைய பெற்றோர் மட்டும் சாதி வெறியில் தீவிரமாக இருந்தார்கள். என் வீட்டிற்கே இத்தகைய நண்பர்களை அழைத்துவரக் கூடாது என்று அறிவுரை வழங்கியிருந்தார்கள்.
1987ம் ஆண்டு உயிலங்குளத்திற்குப் போகும் வழியில் ஏற்பட்ட சாதிச் சண்டை காரணமாக என் தந்தை ஒருவரைக் கொலை செய்திருக்கிறார். பின்னர் கோட்டை ஜெயிலில் சிறிது காலம் இருந்து விட்டு, வெள்ளாளர்களின் பணத் திமிரின் காலமாக வெளியே வந்துள்ளார்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அத்துடன் ஒழுங்காக படிக்கவும் மாட்டார்கள்! பெயில் விட்டு பெயில் விட்டு பெரிய மல்லன்கள் எல்லோரும் என்னுடன் படித்தார்கள்! அவர்களுடன் எல்லாம் பழக கூடாது என்று எனக்கு அம்மா கண்டிப்புடன் சொல்லி அனுப்புவார்! //
என் சித்தப்பா, துணுக்காயில் உள்ள பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் அந்தக் காலத்தில் முகாமையாளராக இருந்தவர், அவரைக் காதலித்த கோவிய இனத்தைச் சேர்ந்த பெண், நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட காரணத்தினால் அப் பெண் கொத்தம்பியா குளத்தினுள் மூழ்கிச் செத்திருக்கிறா.
இவை சாதி எனும் இறுக்கமான மரபினுள் வாழ்ந்த என்னுடைய வம்சங்களின் கட்டுக் கோப்புக்கள்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இவற்றுக்கு நடுவிலே, என் நண்பர்கள் சிலரை வீட்டிற்கு அழைத்து வரும் போது, வீட்டிற்குள் நுழைய அனுமதி தர மாட்டார்கள். வீட்டுக் குந்தினுள் இருத்துவார்கள்.
ஒரு நண்பன், அடுத்த பிறப்பிலாவது நாங்கள் உயர் சாதியாகப் பிறக்க வேண்டும், அப்போது தான் உங்களுக்குச் சரிக்குச் சமனாக ஒரே கோப்பையில் உண்டு மகிழ முடியும் என மன வேதனையுடன் கூறிய வார்த்தைகள் என்னை என் சமூகத்தின் நம்பிக்கையில் இருந்து உடைத்தெறிந்து புது மனிதனாக வாழ வழிகாட்டியாக அமைந்து கொண்டன.
@சார்வாகன்
உண்மை சுடுகிறது நண்பரே!!.தமிழகத் தமிழர்களுக்கு ஈழத்தின் பல நுண்ணிய பிரச்சினைகள் புரிவது இல்லை(என்னையும் சேர்த்துதான்).தொடர்ந்து எழுதுங்கள்.//
உங்களின் வருக்கைக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் சகோ.
@FOOD
வேலையின் காரணமாக பிரிந்த மக்கள், இன்று சாதியின் அடிப்படையிலே பிரிந்து கிடப்பதும், அதிகார வர்க்கம், அடிமை வர்க்கம் என்று தாழ்ந்து போவதும் கண்டு பிறந்த உணர்ச்சிகள் உங்கள் எழுத்துக்களில்.//
உங்களின் கருத்துரைகளுக்கு நன்றிகள் சகா.
@சி.பி.செந்தில்குமார்
>>>இதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினரவாது இத்தகைய தவறுகளைச் செய்யாது நல்லதொரு வளமான வாழ்வினைக் கட்டியெழுப்புவார்கள் எனும் நம்பிக்கையில் தான், இந்தப் பதிவுகளை எழுதுகிறேன்.
ஓக்கே//.. தொடரட்டும்//
நிறைய விடயங்களைச் சொல்லுவீங்க என்றால், இப்படி எஸ் ஆகிட்டீங்களே.
@விக்கி உலகம்
தெரியப்பட வேண்டிய பல விஷயங்களை உள்ளடக்கிய பதிவு தொடரட்டும் உம்பணி நன்றி!//
நன்றிகள் சகோ, நண்பர்கள் அனைவரதும் ஆதரவும், ஊக்கமும் இருக்கும் வரை என் பயணம் தொடரும்.
@யாதவன்
வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனித நேயம் நம் நாடில் இல்லை நண்பா//
ஹா...ஹா...
தமிழகத்து தமிழர்களுக்கு ஈழத்து பிரச்னைகள் தெரியாது, ஆனால் அவர்கள் இலங்கையில் சிங்களர் பெருவாரியான ஆட்சியின் கொடுமைகளை பேசுகிறார்கள் என்று பல முறை எண்ணியதுண்டு. ஈழம், மலை, கொழும்பு பிரிவுகள் பற்றியே ஓரளவு தெரியும். ஆனால் அங்கிருந்த சமூக பிரிவுகளைப் பற்றி படித்ததில்லை.
தமிழ் நாட்டுத் தமிழர்கள், அரசியல் கட்சிகளின் விடா முயற்சிகளையும் கடந்து சாதிப் பிரிவுகளை ஓரளவு குறைக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். ஆனால், இலங்கையில் இந்த அளவுக்கு இருப்பது மிக வருத்தமாக இருக்கிறது. அன்னியர் (சிங்களவர் என்ற பொருளில்) அடக்கி வைத்துள்ளபோது, விடுதலைக்கு அல்லது தமிழர் உரிமைக்காக போராடும் காலத்தில் கூட இது போன்ற சமூக பிரிவுகள் மேலோங்கி நின்றது /நிற்பது அதிர்ச்சியே.
இது போன்ற பதிவுகளை, தமிழ் நாட்டு வலைஞர்கள் காணுவார்கள் என நம்புகிறேன்.
சாதி பிரிவு என்பது "வட நாட்டு பார்ப்பனர்கள் கொண்டு வந்த சகதி, சாதி பிரச்னைக்கு பார்ப்பனரே காரணம்" என்று இந்த நூற்றாண்டிலும் கத்திக் கொண்டிருக்கும் கலைஞர்களும் வலைஞர்களும் கண்டு, இங்குள்ள "பார்ப்பனர்" குறித்து தம் கண்ணோட்டத்தை
திருத்திக் கொள்வர் என நம்புகிறேன்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
இப்ப நித்திரை தூக்கி அடிக்குது - காலமை வாறன் மிச்சத்துக்கு /// இந்த தமிழ் படிக்கும் போதே இவ்வளவு இனிமையாக இருக்கிறதே கேட்டால்?
அருமையான வாதம் சகோ.//
நன்றிகள் சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
" சாதிக் குணம்" என்று என்று ஒன்று இருக்கிறது! அது நூறு வீதம் உண்மை! அவர்களது பழக்கவழக்கங்கள் உதவாது! நான் சொன்னேனே, சின்ன வயசிலேயே தூசனம் கதைக்கிறது, கள்ளு குடிக்கிறது, பீடி பத்துறது, சின்ன வயசில கலியாணம் செய்யுறது! டசின் கணக்கில புள்ளை பெறுறது, அதுகளை ஒழுங்கா வளர்க்காமல், சின்ன வயசிலேயே தொழில் பழக்கிறது........ இப்புடி அடுக்கிக் கொண்டே போகலாம்! //
கீழ்ச் சாதியில் உள்ள பெண்ணைக் காதலித்து, மணம் முடிக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அவளிடம், தங்கள் கைங்கரியங்களையெல்லாம் முடித்த பின்னர், அவளை வேண்டாம் எனச் சொல்லுவது எந்தச் சாதிக் குணம் சகோ?
தேநீர் குடிப்பதற்கு சிரட்டைகளைக் கொடுத்து கொத்தடிமைகளாக நடாத்துவது எந்தச் சாதிக் குலம் சகோ?

கோயில்களில் பத்துத் திருவிழாக்கள் இருக்கின்றன என்றால் முதல் ஒன்பது திருவிழாக்களையும் தாங்க்ள் ஒரு கூட்டாமாகச் சேர்ந்து நடாத்தி விட்டு, இறுதித் திரு விழாவை மட்டும் கீழ்ச் சாதி மக்களிடம் கொடுத்து தெய்வ சந்நிதானத்திலும் அவர்களை சரி நிகர் சமானா மதிக்காத குணம் எந்தச் சாதிக்குரியது சகோ?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
விடுதலைப் புலிகளால் சாதியினை ஒழிக்க முடிந்ததா?//
விடுதலைப் புலிகளால் சாதியினை ஒழிக்க முடியவில்லை சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரு நான் போலித்தனமாக எழுத விரும்பவில்லை! உண்மைகளையும், நடை முறைகளையும் தான் எழுதியுள்ளேன்! இலங்கையில் சாதியை ஒழிக்கவே முடியாது! அப்படி ஒழிக்க வேண்டுமானால், அந்தந்த சாதிக்காரர் திருந்தி, வெளியுலகத்துக்கு வந்தாலொழிய மற்றும் படி நடக்காது!!//
இக் கருத்துக்களை நான் நிராகரிக்கிறேன் சகோ, எத்தன்யோ குடும்பங்கள் சாதியினை விட்டு வெளியே வந்து ஏனைய சமூகங்களோடு ஒட்டி வாழ விரும்புகிறார்கள். ஆனால் அந்தச் சமூகங்கள் தான் இந்த மக்களை அணைத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.
என் ஆராய்ச்சியின் அடிப்படையில்,
சாதியினைத் தூக்கிப் பிடிக்கும் உயர் குலத்தவர்கள் எப்போது இந்தச் சாதிப் பாகுபாடுகளை முற்றாக நீக்குகிறார்களோ அப்பிஓ தான் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் உணர்வுகள் சரியாகப் புரிந்து கொள்ளப்படும், இவ் இடத்தில் தாழ்ந்த சாதி மக்களிடம் தான் பிழை எனும் வகையில் உங்களின் வாதங்களையும், கருத்துக்களையும் முன் வைக்கிறீர்கள் சகோ.
தவறு இறுக்கமான சாதிக் கொள்கையுடன் நடக்கும் உயர் குடி மக்களிடம் தான் பெரும்பான்மையாக உள்ளது.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
போன்ற பல கருத்துக்கள் என்னிடம் நிறைந்துள்ளன! சொல்வதற்கு நேரம்தான் இல்லை! ஓகே நிரு, வேலைக்கு கெளம்புறேன்!!//
உங்களின் வேலைப் பளுவிற்கு மத்தியிலும் காத்திரமான கருத்துக்களை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
விடுதலைப் போராட்டம் தோல்வியடைய பிரதேச வாதமும், சாதிப்பிரிவுகளும் தான் காரணமா? //
சாதிப் பிரிவுகளை விட, பிரதேசவாதமும், உட் பூசல்களும், பதவி ஆசைகளுமே விடுதலைப் போராட்டம் தோல்வியடையக் காரணமாக இருந்தன சகோ.
@கந்தசாமி.
/////’கச்சைக் கொடியை பச்சைப் பாம்பென்று அடிச்ச
பச்சைப் பலாலியான்’ /// அது அப்படி இல்லை பாஸ்,
பட்டபகலில் பட்டை கொடியை பாம்பு என்று அடிச்ச கொச்சை சுளிபுரத்தார். பட்டை கொடி என்பது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க பயன்படும் கயிறு.. அந்த கயிற்றை பகலில பாம்பு என்று நினச்சு அடி பின்னி எடுத்தார்கள் என்று இவ்வாறு சொல்வார்கள்..//
ஊருக்கு ஊர் இதனை வேறுபடுத்திச் சொல்லுவார்கள் என நினைக்கிறேன் சகோ.
எழுத்துப் பிழை ஒன்று இடம் பெற்று விட்டது, பச்சைக் கொடி என்பது தான் சரியான விடயம்,
பலாலி விவசாய மக்களை விளிக்க இவ்வாறான வார்த்தையினைத் தான் பயன்படுத்துவார்கள்.
/////’பச்சைக் கொடியை பச்சைப் பாம்பென்று அடிச்ச
பச்சைப் பலாலியான்’ /// அது அப்படி இல்லை பாஸ்,
பலாலி வாசிகளை அழைப்பது பற்றிய என் வசனத்தில் சில நேரம் தவறிருக்கலாம். உங்களுக்குச் சரியான வடிவம் தெரிந்தால் திருத்துங்க பாஸ்.
@beemarao
நண்பரே வெள்ளை வான் என்றால் என்ன?( தெரியாததால்தான் கேட்கிறேன், ஈழம் சார்ந்த விடயங்கள் படிக்கும் பொழுது இது அடிக்கடி வருகிறது, இது ஏதேனும் வாகனமா?)//
நெசமாகத் தான் கேட்கிறேன், உண்மையிலே உங்களுக்கு ஈழம் சார்ந்த விடயங்கள் தெரியாதா சகோ, வெள்ளை வான் என்பது இனந் தெரியாத நபர்களினால் கப்பப் கோரி ஆட்களைப் பிணைக்கா, கொலை செய்வதற்காக கடத்தப் பயன்படும் வாகனம் தான் - வெள்ளை வான் சகோ.
கூகிளில் தேடினால் நிறைய விபரங்கள் கிடைக்கும் சகோ.
என் வாயால் இவை எல்லாவற்றையும் வர வைத்து எனக்கு ஏழரையைக் கூட்ட வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா;-)))
ஹி....ஹி...
@சசிகுமார்
ஜாதி ஜாதி ஏன் இந்த பிரிவு ஏற்கனவே
பணக்காரன்-ஏழை
நிறம் சம்பந்தப்பட்ட பிரிவு
மொழிவாரியான பிரிவு
கடவுள் சம்பந்தப்பட்ட பிரிவுகள்
இப்படி பல பிரிவுகள் நம்மை ஆட்கொண்டுள்ள போதிலும் ஏன் இந்த ஜாதி வேறு இடையில். ஜாதி ஒழிக்கப்படவேண்டிய ஒன்று.//
ஆமாம் சகோ, நிச்சயமாய் ஒரு இனத்தை தேசிய ரீதியில் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்றால், சாதி இல்லாத நிலமை உருவாக வேண்டும் சகோ.
@எல் கே
இதெல்லாம் எங்களுக்கு புதிய விஷயங்கள். தொடருங்கள் நிரூபன்//
நன்றிகள் சகோ,
@சுவனப்பிரியன்
சாதிக் கொடுமை நமது சமூகத்தில் என்றுதான் ஒழியும்? இலங்கை தமிழர்கள் அனுபவிக்கும் பல கொடுமைகளில் இதுவும் ஒன்று.//
நன்றிகள் சகோ.
@akulan
யாழ்பாணத்தில் இவ்வளவு வேறுபாடா?
நான் நினைத்தேன் மாவட்டங்களுக்கு இடையில் தான் வேறுபாடுகள் என்று?//
அழுக்குகள் எங்களுக்கு உள்ளே தான் இருக்கின்றன சகோ. வெளியே இல்லச் சகோ.
@மைந்தன் சிவா
நிருபனுக்கு ஒரு பணிவான அறிவிப்பு:சில பதிவுகளுக்கு நான் எந்தவித விமர்சனமும் பண்ண மாட்டேன்..குறை நினைக்க வேண்டாம்..
மற்றம்படி வழமை போல மிச்ச பதிவுகளுக்கு நான் ப்ரெசென்ட் ஹிஹி//
இதெல்லாம் நீங்க சொல்லியா நான் புரிஞ்சு கொள்ளனும் சகோ, நமக்கு ஏற்கனவே தெரியும் சகோ, நன்றிகள் சகோ.
தாகம் எனும் முகவரியில் இருந்து பின்னூட்டமிட்ட நபரின் கவனத்திற்கு,
தமிழ் மணம், தமிழிஷ் திரட்டிகளின் விதிகளுக்கு அமைவாக தங்களின் புரோபைலுடனான பின்னூட்டத்தை இணைக்க முடியவில்லை நண்பரே, ஊரோடியின் பதிவில் யாழ்ப்பாணத்தில் உள்ள சாதிகளை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளாரே தவிர, யாழில் உள்ல சாதிகளின் தோற்றம், அவற்றின் சமூகம் மீதனான செல்வாக்குகள் பற்றி அவர் எதனையும் குறிப்பிடவில்லைச் சகோ.
ஈழத்தில் சாதியம் பற்றி நான் இரண்டு பதிவுகள் எழுதியியுள்ளேன்.
http://www.thamilnattu.com/2011/02/blog-post_8276.html
http://www.thamilnattu.com/2011/04/02.html
அவற்றினைப் படிக்க வேண்டும் எனும் ஆவல் உங்களுக்கிருந்தால், இந்த இணைப்பினூடாகச் சென்று பாருங்கள் சகோ.
உங்களது கருத்துக்களுக்கு நன்றிகள் சகோ.
ப்ளாக்கரில் ஏற்பட்ட தொழில் நுட்பத் தடங்கல்கள் காரணமாக, காணாமற் போன பின்னூட்டங்களை, என் மின்னஞ்சலில் இருந்து இங்கே பதிவர்களின் முகவரிகளோடு மீள் பிரசுரம் செய்கிறேன்.
தமிழகத்து தமிழர்களுக்கு ஈழத்து பிரச்னைகள் தெரியாது, ஆனால் அவர்கள் இலங்கையில் சிங்களர் பெருவாரியான ஆட்சியின் கொடுமைகளை பேசுகிறார்கள் என்று பல முறை எண்ணியதுண்டு. ஈழம், மலை, கொழும்பு பிரிவுகள் பற்றியே ஓரளவு தெரியும். ஆனால் அங்கிருந்த சமூக பிரிவுகளைப் பற்றி படித்ததில்லை.
தமிழ் நாட்டுத் தமிழர்கள், அரசியல் கட்சிகளின் விடா முயற்சிகளையும் கடந்து சாதிப் பிரிவுகளை ஓரளவு குறைக்க வேண்டும், நீக்க வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். ஆனால், இலங்கையில் இந்த அளவுக்கு இருப்பது மிக வருத்தமாக இருக்கிறது. அன்னியர் (சிங்களவர் என்ற பொருளில்) அடக்கி வைத்துள்ளபோது, விடுதலைக்கு அல்லது தமிழர் உரிமைக்காக போராடும் காலத்தில் கூட இது போன்ற சமூக பிரிவுகள் மேலோங்கி நின்றது /நிற்பது அதிர்ச்சியே.
இது போன்ற பதிவுகளை, தமிழ் நாட்டு வலைஞர்கள் காணுவார்கள் என நம்புகிறேன்.
சாதி பிரிவு என்பது "வட நாட்டு பார்ப்பனர்கள் கொண்டு வந்த சகதி, சாதி பிரச்னைக்கு பார்ப்பனரே காரணம்" என்று இந்த நூற்றாண்டிலும் கத்திக் கொண்டிருக்கும் கலைஞர்களும் வலைஞர்களும் கண்டு, இங்குள்ள "பார்ப்பனர்" குறித்து தம் கண்ணோட்டத்தை
திருத்திக் கொள்வர் என நம்புகிறேன்.
உண்மை சுடுகிறது நண்பரே!!.தமிழகத் தமிழர்களுக்கு ஈழத்தின் பல நுண்ணிய பிரச்சினைகள் புரிவது இல்லை(என்னையும் சேர்த்துதான்).தொடர்ந்து எழுதுங்கள்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரு, உங்களுக்கு தெரியும் நான் யாழ். இந்து வேளாளர் குலத்தை சேர்ந்தவன்! எனது சாதியினை அடுத்தவர்களுக்கு சொல்வதில் ஒரு பெருமை! நான் ஏன் சாதி குறைந்தவர்களுடன் பழகுவதில்லை என்றால், சின்ன வயசில் இருந்தே நான் அப்படியே வளர்க்கப்பட்டேன்! எனது பெற்றோர் என்னை அப்படித்தான் வளர்த்தார்கள்!//
சகோ, இதே குலத்தில் பிறந்தாலும் சாதிகள் இருக்கக் கூடாது எனும் கொள்கையினைத் தான் என் சமூகம் எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது, ஆனால் நீங்கள் மட்டும் எப்படி சமூகத்தில் இருந்து மாறாமல் வாழ்கிறீர்களோ தெரியவில்லை. ஏலவே என் பதிவில் கூறியிருக்கிறேன், என் சமூகம், நான் பிறந்த மண்ணின் இறுக்கமான சாதிக் கொள்கைகள் தான் எனக்கு வெறுப்பைத் தந்தன. ஏனைய மக்களிடமும் அன்பாகப் பழகும் அளவிற்கு என்னை மாற்றின என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன் சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நாங்கள் பாடசாலைக்கு செல்லும் போது, எவ்வளவு நீட் ஆக, சேர்ட் இன் பண்ணி, சப்பாத்து போட்டுக்கொண்டுதான் போவேன்! எனது வகுப்பில் சில சாதி குறைந்த பிள்ளைகள் படித்தார்கள்! அவர்கள் தலை வாருவதில்லை - பரட்டை தலை! விரலில் நகம் வெட்டுவதே இல்லை ! காலில் செருப்புகூட போடுவதில்லை! உடுப்புகள் அயன் பண்ணுவதே கிடையாது!//
இதற்கான காரணம் சாதி குறைந்தவர்கள் என நீங்கள் விளிக்கும் உள்ளங்களின் பெற்றோர்களுக்கு கல்வியறிவு குறைவாக இருந்தமை ஆகும்,
இவ் இடத்தில் ஒரே ஒரு கேள்வி, நீங்கள் படித்த பாடசாலையில் எலலா மாணவர்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கும் பண்பு இல்லையென்பதற்கு இவ் வரிகளே சான்றாக அமைகின்றன,
முதலாவது காரணம், பாடசாலை நிர்வாகம் உயர்சாதியின் ஆதிக்கப் பிடியின் கீழ் இருந்திருக்கலாம். ஆதலால் சாதி குறைவான பிள்ளைகள் எக்கேடு கேட்டாலும் கெட்டுப் போகட்டும் என அவர்கள் நினைத்து, அந்தப் பிள்ளைகளுக்கு கண்டிப்பான உத்தரவு வழங்காமல், அவர்களுக்கு அறிவுரை கூறி நல்ல உடை அணிந்து வரச் சொல்லிச் சொல்லாமல் நழுவி இருக்கலாம் சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மேலும் அந்தப் பிள்ளைகள் படு மோசமான தூசன வார்த்தைகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கர்கள்! எமக்கோ அந்த வார்த்தைகளை உச்சரிக்கவே கூச்சமாக இருக்கும்!//
இல்லைச் சகோ, எல்லா இடங்களிலும் இப்படி இடம் பெறுவதில்லை, அந்தப் பிள்ளைகள் தூசன வார்த்தைகள் / கெட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறார்கள் என்றால் அவர்களைப் படிப்பித்த,
அப் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களின் நிலமை என்ன?
இப் பிள்ளைகள் திருந்தக் கூடாது என்று அவர்கள் நினைத்தமை தானே?
அல்லது ஆசிரியர்கள் உயர் குலத்தில் இருந்ததால், மாணவர்கள் தாழ்ந்த குலம் எனும் இடை வெளியும் இதற்கான ஓர் காரணமாகவும் இருக்கலாம் அல்லவா?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அத்துடன் ஒழுங்காக படிக்கவும் மாட்டார்கள்! பெயில் விட்டு பெயில் விட்டு பெரிய மல்லன்கள் எல்லோரும் என்னுடன் படித்தார்கள்! அவர்களுடன் எல்லாம் பழக கூடாது என்று எனக்கு அம்மா கண்டிப்புடன் சொல்லி அனுப்புவார்!//
இதே அறிவுரைகளுடன் தான் நானும் வளர்க்கப்பட்டேன், ஆனால் என்னுடன் படித்த அனைத்து நண்பர்களும் படிப்பில் கெட்டிக்காரர்கள். என்னுடைய பெற்றோர் மட்டும் சாதி வெறியில் தீவிரமாக இருந்தார்கள். என் வீட்டிற்கே இத்தகைய நண்பர்களை அழைத்துவரக் கூடாது என்று அறிவுரை வழங்கியிருந்தார்கள்.
1987ம் ஆண்டு உயிலங்குளத்திற்குப் போகும் வழியில் ஏற்பட்ட சாதிச் சண்டை காரணமாக என் தந்தை ஒருவரைக் கொலை செய்திருக்கிறார். பின்னர் கோட்டை ஜெயிலில் சிறிது காலம் இருந்து விட்டு, வெள்ளாளர்களின் பணத் திமிரின் காலமாக வெளியே வந்துள்ளார்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அத்துடன் ஒழுங்காக படிக்கவும் மாட்டார்கள்! பெயில் விட்டு பெயில் விட்டு பெரிய மல்லன்கள் எல்லோரும் என்னுடன் படித்தார்கள்! அவர்களுடன் எல்லாம் பழக கூடாது என்று எனக்கு அம்மா கண்டிப்புடன் சொல்லி அனுப்புவார்! //
என் சித்தப்பா, துணுக்காயில் உள்ள பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் அந்தக் காலத்தில் முகாமையாளராக இருந்தவர், அவரைக் காதலித்த கோவிய இனத்தைச் சேர்ந்த பெண், நம்ப வைத்து ஏமாற்றப்பட்ட காரணத்தினால் அப் பெண் கொத்தம்பியா குளத்தினுள் மூழ்கிச் செத்திருக்கிறா.
இவை சாதி எனும் இறுக்கமான மரபினுள் வாழ்ந்த என்னுடைய வம்சங்களின் கட்டுக் கோப்புக்கள்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இவற்றுக்கு நடுவிலே, என் நண்பர்கள் சிலரை வீட்டிற்கு அழைத்து வரும் போது, வீட்டிற்குள் நுழைய அனுமதி தர மாட்டார்கள். வீட்டுக் குந்தினுள் இருத்துவார்கள்.
ஒரு நண்பன், அடுத்த பிறப்பிலாவது நாங்கள் உயர் சாதியாகப் பிறக்க வேண்டும், அப்போது தான் உங்களுக்குச் சரிக்குச் சமனாக ஒரே கோப்பையில் உண்டு மகிழ முடியும் என மன வேதனையுடன் கூறிய வார்த்தைகள் என்னை என் சமூகத்தின் நம்பிக்கையில் இருந்து உடைத்தெறிந்து புது மனிதனாக வாழ வழிகாட்டியாக அமைந்து கொண்டன.
@சார்வாகன்
உண்மை சுடுகிறது நண்பரே!!.தமிழகத் தமிழர்களுக்கு ஈழத்தின் பல நுண்ணிய பிரச்சினைகள் புரிவது இல்லை(என்னையும் சேர்த்துதான்).தொடர்ந்து எழுதுங்கள்.//
உங்களின் வருக்கைக்கும், ஊக்கத்திற்கும் நன்றிகள் சகோ.
@FOOD
வேலையின் காரணமாக பிரிந்த மக்கள், இன்று சாதியின் அடிப்படையிலே பிரிந்து கிடப்பதும், அதிகார வர்க்கம், அடிமை வர்க்கம் என்று தாழ்ந்து போவதும் கண்டு பிறந்த உணர்ச்சிகள் உங்கள் எழுத்துக்களில்.//
உங்களின் கருத்துரைகளுக்கு நன்றிகள் சகா.
@விக்கி உலகம்
தெரியப்பட வேண்டிய பல விஷயங்களை உள்ளடக்கிய பதிவு தொடரட்டும் உம்பணி நன்றி!//
நன்றிகள் சகோ, நண்பர்கள் அனைவரதும் ஆதரவும், ஊக்கமும் இருக்கும் வரை என் பயணம் தொடரும்.
@சி.பி.செந்தில்குமார்
>>>இதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினரவாது இத்தகைய தவறுகளைச் செய்யாது நல்லதொரு வளமான வாழ்வினைக் கட்டியெழுப்புவார்கள் எனும் நம்பிக்கையில் தான், இந்தப் பதிவுகளை எழுதுகிறேன்.
ஓக்கே//.. தொடரட்டும்//
நிறைய விடயங்களைச் சொல்லுவீங்க என்றால், இப்படி எஸ் ஆகிட்டீங்களே.
@கே.ஆர்.பி.செந்தில்
சாதியம் இந்திய இனங்களில் இருந்து பிரிக்க முடியாத ஒன்று.. ஈழம் மட்டும் விதிவிலக்காகவா இருந்துவிடப் போகிறது!//
இன்றைய இந்தியாவின் நகர்ப்புறங்களிலும், கல்வியறிவு மேம்பட்ட இடங்களிலும் இந்தச் சாதியம் குறைவாகவே காணப்படுகிறது. அப்படி இருக்கையில் இந்தியாவை விடக் கல்வியறிவு வீதத்தில் உயர்ந்த இலங்கையில் மாத்திரம் ஏன் சாதிளை ஒழிக்க முடியாது?
@தமிழ்வாசி - Prakash
OK..... OK......//
உங்களிடமிருந்து விவாதத்திற்கான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் சகோ.
@யாதவன்
வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனித நேயம் நம் நாடில் இல்லை நண்பா//
ஹா...ஹா...
@Nesan
பிரதேசவாதம் எப்படி எல்லாம் சீர் அழித்தது என்று நானும் தொழில் நிமித்தம் பிறபகுதியில் பணிபுரியும் போது நேரடியாக உணர்ந்தவன் ஆனால் இதை எப்படி ஒழிப்பது சாத்தியமாகுமா? சாதாரன அடித்தட்டு மக்களிடம் ஊரிப்போன பழக்கம் இதுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது!காத்திருக்கிறேன் நல்ல கருத்துக்கள் வரும் என்ற நம்பிக்கையில்!//
சகோ, உங்கள் அனுபவங்களையும், பிரதேசவாதம் பற்றிய உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டால் அருமையாக இருந்திருக்கும்,
இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு எமது அடுத்த தலை முறையினரிடம் தான் இருக்கிறது. கல்வியறிவு நிரம்பியவர்களாக, சமுதாய மேம்பாட்டினையும் முன்னேற்றத்தையும் கருதியவர்களாக எப்போது எமது அடுத்த தலை முறையினர் பிறப்பெடுக்கிறார்களோ அவர்கள் தான் இந்தப் பிரதேசவாதத்தை முற்று முழுதாக இல்லாது ஒழிக்கப் போகும் நபர்களாக இருப்பார்கள்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
இப்ப நித்திரை தூக்கி அடிக்குது - காலமை வாறன் மிச்சத்துக்கு /// இந்த தமிழ் படிக்கும் போதே இவ்வளவு இனிமையாக இருக்கிறதே கேட்டால்?
அருமையான வாதம் சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரு எனது கருத்துக்களை நான் சுதந்திரமாக சொல்லிக்கொண்டு போகிறேன்! நீங்கள் என்மீது கோபிக்க கூடாது! அப்புறம் ப்ளாக் பக்கம் நீங்க ரெண்டுநாளா வரவே இல்ல! கோபம் இல்லைத்தானே!!//
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பண்பு எனக்கு இல்லைச் சகோ, அப்படியொரு பழக்கம் இருந்திருந்தால், இத்தகைய ஓப்பின் விவாதங்களுக்கோ, அல்லது விவாத மேடைக்கோ நான் வந்திருக்க மாட்டேன் சகோ, உங்கள் மீது நான் கோபிக்க மாட்டேன். இரண்டு நாளாக பயங்கர ஆணி. அதனால் தான் உங்களின் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன் மச்சி.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரு, சாதிகுறைந்தவர்களை நாங்கள் ஒதுக்குகிறோம் என்கிறீர்கள்! ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவர்களாகவே எம்மில் இருந்து ஒதுங்கிச் செல்கின்றனர்! தங்கள் தங்கள் ஆக்களுடன் சேர்ந்து கூட்டமாக இருக்கின்றனர்! எம்மைப் பார்க்கும் போது, நிமிர்ந்து கதைக்கிறார்கள் இல்லை! தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்! நாங்களா சொன்னோம் அவர்களை ஒதுங்கிப் போகச்சொல்லி!//
ஹி...ஹி...
சகோ என்னுடைய சாதியம் பற்றிய இரண்டு பதிவுகளையும் நீங்கள் படிக்கவில்லையா?
என் வீட்டில் நான் கண்ட உண்மை,
உயர் குடியில் பிறந்தவர்கள் என்ற கர்வத்துடன், உயர் குடி மக்களே தாழ்ந்தவர்களை அடிமைகளாகவோ அல்லது ஏவலாளர்களாகவோ நடாத்த விரும்புகின்றார்கள் என்பது மட்டும் நிஜம்.
அவர்களை அவர்களே தாழ்த்திக் கொள்ளவில்லைச் சகோ, ஆளும் வர்க்கம் ஆதிக்க இனமாகிய விவசாயக் குடிகள்(உங்களை, எங்களைப் போன்றோர்) இந்த மக்களை அடிமைகளாக, ஏவலாளர்களாக நடாத்த வேண்டும் எனும் எண்ணத்தில் இவர்களுக்குரிய் பண்புகள் இவை தான், இவர்கள் இவ்வாறு தான் நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டாத ஒரு விதியினை உருவாக்கி விட்டார்கள். அதனால் தான், இந்த மக்கள் பாரம்பரியமாக உள்ள் இந்த முறைக்ளை மீற முடியாதவர்களாக வாழப் பழகிக் கொண்டார்கள்/
வாழப் பழக்கப்பட்டார்கள்!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
" சாதிக் குணம்" என்று என்று ஒன்று இருக்கிறது! அது நூறு வீதம் உண்மை! அவர்களது பழக்கவழக்கங்கள் உதவாது! நான் சொன்னேனே, சின்ன வயசிலேயே தூசனம் கதைக்கிறது, கள்ளு குடிக்கிறது, பீடி பத்துறது, சின்ன வயசில கலியாணம் செய்யுறது! டசின் கணக்கில புள்ளை பெறுறது, அதுகளை ஒழுங்கா வளர்க்காமல், சின்ன வயசிலேயே தொழில் பழக்கிறது........ இப்புடி அடுக்கிக் கொண்டே போகலாம்!//
சாதிக் குணம் என்பது என் பார்வையில் நூற்றுக்கு நூறு வீதம் வெள்ளாளர்களைச் சார்ந்தே உள்ளது, தாழ்ந்த சாதி வகுப்பினருக்கு இவை தான் இயல்புகளாக இருக்க வேண்டும் என நிர்வகித்தவர்கள் யாரோ, அவர்களிடத்தே தான் சாதிக் குணம் அதிகமாக் காணப்படுகிறது.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
" சாதிக் குணம்" என்று என்று ஒன்று இருக்கிறது! அது நூறு வீதம் உண்மை! அவர்களது பழக்கவழக்கங்கள் உதவாது! நான் சொன்னேனே, சின்ன வயசிலேயே தூசனம் கதைக்கிறது, கள்ளு குடிக்கிறது, பீடி பத்துறது, சின்ன வயசில கலியாணம் செய்யுறது! டசின் கணக்கில புள்ளை பெறுறது, அதுகளை ஒழுங்கா வளர்க்காமல், சின்ன வயசிலேயே தொழில் பழக்கிறது........ இப்புடி அடுக்கிக் கொண்டே போகலாம்! //
கீழ்ச் சாதியில் உள்ள பெண்ணைக் காதலித்து, மணம் முடிக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அவளிடம், தங்கள் கைங்கரியங்களையெல்லாம் முடித்த பின்னர், அவளை வேண்டாம் எனச் சொல்லுவது எந்தச் சாதிக் குணம் சகோ?
தேநீர் குடிப்பதற்கு சிரட்டைகளைக் கொடுத்து கொத்தடிமைகளாக நடாத்துவது எந்தச் சாதிக் குலம் சகோ?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
" சாதிக் குணம்" என்று என்று ஒன்று இருக்கிறது! அது நூறு வீதம் உண்மை! அவர்களது பழக்கவழக்கங்கள் உதவாது! நான் சொன்னேனே, சின்ன வயசிலேயே தூசனம் கதைக்கிறது, கள்ளு குடிக்கிறது, பீடி பத்துறது, சின்ன வயசில கலியாணம் செய்யுறது! டசின் கணக்கில புள்ளை பெறுறது, அதுகளை ஒழுங்கா வளர்க்காமல், சின்ன வயசிலேயே தொழில் பழக்கிறது........ இப்புடி அடுக்கிக் கொண்டே போகலாம்!//
இல்லைத் தாழ்ந்த சாதி மக்களுக்கு, வீட்டிற்குள் அனுமதி இல்லை, வீட்டு வாசற் குந்தில் தான் அனுமதி எனக் கூறி பழைய கோப்பையில் சாப்பாடு கொடுத்து வீட்டிற்ற்கு வெளியே அவர்களை வைத்து நாய் போல நடத்துவது எந்தச் சாதிக் குணம் சகோ?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
" சாதிக் குணம்" என்று என்று ஒன்று இருக்கிறது! அது நூறு வீதம் உண்மை! அவர்களது பழக்கவழக்கங்கள் உதவாது! நான் சொன்னேனே, சின்ன வயசிலேயே தூசனம் கதைக்கிறது, கள்ளு குடிக்கிறது, பீடி பத்துறது, சின்ன வயசில கலியாணம் செய்யுறது! டசின் கணக்கில புள்ளை பெறுறது, அதுகளை ஒழுங்கா வளர்க்காமல், சின்ன வயசிலேயே தொழில் பழக்கிறது........ இப்புடி அடுக்கிக் கொண்டே போகலாம்! //
கோயில்களில் பத்துத் திருவிழாக்கள் இருக்கின்றன என்றால் முதல் ஒன்பது திருவிழாக்களையும் தாங்க்ள் ஒரு கூட்டாமாகச் சேர்ந்து நடாத்தி விட்டு, இறுதித் திரு விழாவை மட்டும் கீழ்ச் சாதி மக்களிடம் கொடுத்து தெய்வ சந்நிதானத்திலும் அவர்களை சரி நிகர் சமானா மதிக்காத குணம் எந்தச் சாதிக்குரியது சகோ?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இவர்கள் தங்களது உதவாத பழக்க வழக்கங்களால், எம்மைக் கண்டு அச்சப்படுகின்றனர்! ஆங்கிலம் கலந்த எமது பேச்சுத் தமிழே போதும், அவர்கள் எம்மில் இருந்து விலகிச்செல்ல!//
இல்லைச் சகோ, இன்றைய கால கட்டத்தில் இவர்களும் ஓரளவிற்கு முன்னேறத் தொடங்கி விட்டார்கள் சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
முதலில் அவர்கள் நாகரிக உலகத்துக்கு பழக்கப்பட வேண்டும்! கூட்டம் கூட்டமாக வாழ்வதை விடுத்து, வெளியே வரவேண்டும், தங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிப்பிக்க வேண்டும்! ஒரு மீனவரின் மகன் மீன் பிடி தொழில்தான் செய்யவேண்டும் என்று எங்காவது சட்டம் இருக்கிறதா? ஏன் டாக்டராக வரக்கூடாது? //
சகோ, இன்றைய கால கட்டத்தில் அவர்களும் படித்து, முன்னேறுகிறார்கள், ஏனைய சமூகங்களோடும் ஒட்டி வாழ விரும்புகிறார்கள் தான். ஆனால் உயர் குலங்களோ அல்லது ஏனைய சமூகங்களோ அவர்களை ஏற்றுக் கொள்ளவோ , மதித்து நடக்கவோ தயாரில்லை என்பது தான் என் கருத்து சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரு நான் போலித்தனமாக எழுத விரும்பவில்லை! உண்மைகளையும், நடை முறைகளையும் தான் எழுதியுள்ளேன்! இலங்கையில் சாதியை ஒழிக்கவே முடியாது! அப்படி ஒழிக்க வேண்டுமானால், அந்தந்த சாதிக்காரர் திருந்தி, வெளியுலகத்துக்கு வந்தாலொழிய மற்றும் படி நடக்காது!!//
இக் கருத்துக்களை நான் நிராகரிக்கிறேன் சகோ, எத்தன்யோ குடும்பங்கள் சாதியினை விட்டு வெளியே வந்து ஏனைய சமூகங்களோடு ஒட்டி வாழ விரும்புகிறார்கள். ஆனால் அந்தச் சமூகங்கள் தான் இந்த மக்களை அணைத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.
என் ஆராய்ச்சியின் அடிப்படையில்,
சாதியினைத் தூக்கிப் பிடிக்கும் உயர் குலத்தவர்கள் எப்போது இந்தச் சாதிப் பாகுபாடுகளை முற்றாக நீக்குகிறார்களோ அப்பிஓ தான் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் உணர்வுகள் சரியாகப் புரிந்து கொள்ளப்படும், இவ் இடத்தில் தாழ்ந்த சாதி மக்களிடம் தான் பிழை எனும் வகையில் உங்களின் வாதங்களையும், கருத்துக்களையும் முன் வைக்கிறீர்கள் சகோ.
தவறு இறுக்கமான சாதிக் கொள்கையுடன் நடக்கும் உயர் குடி மக்களிடம் தான் பெரும்பான்மையாக உள்ளது.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
விடுதலைப் புலிகளால் சாதியினை ஒழிக்க முடிந்ததா?//
விடுதலைப் புலிகளால் சாதியினை ஒழிக்க முடியவில்லை சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
விடுதலைப் போராட்டம் தோல்வியடைய பிரதேச வாதமும், சாதிப்பிரிவுகளும் தான் காரணமா? //
சாதிப் பிரிவுகளை விட, பிரதேசவாதமும், உட் பூசல்களும், பதவி ஆசைகளுமே விடுதலைப் போராட்டம் தோல்வியடையக் காரணமாக இருந்தன சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
போன்ற பல கருத்துக்கள் என்னிடம் நிறைந்துள்ளன! சொல்வதற்கு நேரம்தான் இல்லை! ஓகே நிரு, வேலைக்கு கெளம்புறேன்!!//
உங்களின் வேலைப் பளுவிற்கு மத்தியிலும் காத்திரமான கருத்துக்களை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் சகோ.
@கந்தசாமி.
/////’கச்சைக் கொடியை பச்சைப் பாம்பென்று அடிச்ச
பச்சைப் பலாலியான்’ /// அது அப்படி இல்லை பாஸ்,
பட்டபகலில் பட்டை கொடியை பாம்பு என்று அடிச்ச கொச்சை சுளிபுரத்தார். பட்டை கொடி என்பது கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க பயன்படும் கயிறு.. அந்த கயிற்றை பகலில பாம்பு என்று நினச்சு அடி பின்னி எடுத்தார்கள் என்று இவ்வாறு சொல்வார்கள்..//
ஊருக்கு ஊர் இதனை வேறுபடுத்திச் சொல்லுவார்கள் என நினைக்கிறேன் சகோ.
எழுத்துப் பிழை ஒன்று இடம் பெற்று விட்டது, பச்சைக் கொடி என்பது தான் சரியான விடயம்,
பலாலி விவசாய மக்களை விளிக்க இவ்வாறான வார்த்தையினைத் தான் பயன்படுத்துவார்கள்.
/////’பச்சைக் கொடியை பச்சைப் பாம்பென்று அடிச்ச
பச்சைப் பலாலியான்’ /// அது அப்படி இல்லை பாஸ்,
பலாலி வாசிகளை அழைப்பது பற்றிய என் வசனத்தில் சில நேரம் தவறிருக்கலாம். உங்களுக்குச் சரியான வடிவம் தெரிந்தால் திருத்துங்க பாஸ்.
@MANO நாஞ்சில் மனோ
சாதி சாதி ச்சே......//
ஏன் இன்று மௌன விரதமோ.
@beemarao
நண்பரே வெள்ளை வான் என்றால் என்ன?( தெரியாததால்தான் கேட்கிறேன், ஈழம் சார்ந்த விடயங்கள் படிக்கும் பொழுது இது அடிக்கடி வருகிறது, இது ஏதேனும் வாகனமா?)//
நெசமாகத் தான் கேட்கிறேன், உண்மையிலே உங்களுக்கு ஈழம் சார்ந்த விடயங்கள் தெரியாதா சகோ, வெள்ளை வான் என்பது இனந் தெரியாத நபர்களினால் கப்பப் கோரி ஆட்களைப் பிணைக்கா, கொலை செய்வதற்காக கடத்தப் பயன்படும் வாகனம் தான் - வெள்ளை வான் சகோ.
கூகிளில் தேடினால் நிறைய விபரங்கள் கிடைக்கும் சகோ.
என் வாயால் இவை எல்லாவற்றையும் வர வைத்து எனக்கு ஏழரையைக் கூட்ட வேண்டும் என்று உங்களுக்கு ஆசையா;-)))
ஹி....ஹி...
@ஹேமா
சாதி என்பது என்னைப்பொறுத்தவரை மனதைப் பொறுத்ததே.சமூகம் என்ன சொன்னாலும்,வீட்டில் என்ன சொன்னாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்பவர்களோடு தொடர்ந்தும் பழகும் மனநிலை எங்களுக்கு வேண்டும்.நான் அப்படித்தான் நிரூ.அவர்களுக்கும் சந்தோஷம்.50% மக்களுக்காவது இந்த மனநிலை இருக்கிறதா நம் நாட்டில்?இருந்திருந்தால் !//
ஆம் சகோ, இந்த மனநிலை எம் நாட்டில் எல்லோருக்கும் இருந்திருந்தால், இன்றைக்கு தமிழனுக்குத் இந்த அவல நிலை வந்திருக்காது சகோ.
@சசிகுமார்
ஜாதி ஜாதி ஏன் இந்த பிரிவு ஏற்கனவே
பணக்காரன்-ஏழை
நிறம் சம்பந்தப்பட்ட பிரிவு
மொழிவாரியான பிரிவு
கடவுள் சம்பந்தப்பட்ட பிரிவுகள்
இப்படி பல பிரிவுகள் நம்மை ஆட்கொண்டுள்ள போதிலும் ஏன் இந்த ஜாதி வேறு இடையில். ஜாதி ஒழிக்கப்படவேண்டிய ஒன்று.//
ஆமாம் சகோ, நிச்சயமாய் ஒரு இனத்தை தேசிய ரீதியில் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்றால், சாதி இல்லாத நிலமை உருவாக வேண்டும் சகோ
@சசிகுமார்
இதெல்லாம் எங்களுக்கு புதிய விஷயங்கள். தொடருங்கள் நிரூபன்//
நன்றிகள் சகோ,
@shanmugavel
ஒரு மாவட்டத்திற்குள் இத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்றால், ஒரு தனி நாட்டினை இந்த மக்கள் கையில் கொடுத்தால், அந்த நாட்டிற்குள் எப்படியான திருவிளையாடல்கள் நிகழும் என்பதனை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இதனை வாசகர்களாகிய உங்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
சிறப்பான அலசல் சகோ .ஆனால் மேற்கண்ட வரிகளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.அடித்தாலும் பிடித்தாலும் அண்ணன் தம்பிதானே!//
அது சரி, அடித்தாலும் பிடித்தாலும் அண்ணன் தம்பி என்றால், ஒரு நாட்டினை இரண்டு கூறுகளாக்க நினைக்கும் உள்ளங்கள் இருக்கும் வரை எப்படி ஒரு இனத்திற்கான தீர்வு கிடைக்கும் சகோ.

Post a Comment