நாற்று வலையேறி உங்கள் மொனிட்டர் திரை வந்து மகிழ்விக்க இருக்கும் பாட்டுக்குப் பாட்டு(ப்) போட்டியுடன் கலந்து கொள்ள ஆவலாக உள்ள அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்!
கடந்த வாரம் இடம் பெற்ற கும்மியை/ போட்டியைத் தவற விட்டதாக, பல முன்னணிப் பாடகர்கள், பின்னணிப் பாடகர்கள், மற்றும் அதி திறமைசாலிகள் வருத்தப்பட்டிருந்தார்கள். அவர்கள் அனைவரினதும் விருப்பத்திற்கமைவாக, மீண்டும் இன்றைய தினம் இந்தப் பாட்டுக்குப் பாட்டு வலைப் போட்டியினை உங்கள் முன் கொண்டு வருகின்றேன்.
போட்டி விதி முறைகள்:
*போட்டியாளரிடம் கேட்கப்படும் பாடலின் எழுத்தில் தொடங்கும் பாடலின் இரண்டு வரிகளை அவர் இங்கே பின்னூட்டப் பெட்டியில் எழுத வேண்டும்,
உ+ம்: ‘க’ வில் தொடங்கும் பாடல் என்றால்
‘கஸ்தூரி மான்குட்டியாம், இது கண்ணீரை ஏன் சிந்துதாம்
உனை ஆவாரம் பூத் தொட்டதோ......
என எழுத வேண்டும், அப்படி எழுத முடியாதவர்கள்
ஒரு வரிக்கு மேல் பாடலை எழுதினால் போதுமானது.
*பக்திப் பாடல்களையோ அல்லது, உள்ளூர் அல்பங்களில் வெளியான பாடல்களையோ இங்கே சொல்லுவது தவிர்க்கப் பட வேண்டும்.
தென் இந்தியத் திரை இசைப் பாடல்களை மட்டுமே நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
*பாடலின் தொடக்க வரி ‘’ஏதாவது கோரஸ் அல்லது குழு இசையுடன் தொடங்கினால் அதனை விடுத்து, பாடலை மாத்திரம் தான் நீங்கள் பகிர வேண்டும்.
உ+ம்: ‘ச’ எழுத்தில் கேட்டால்,
நீங்கள் சஞ்சானே தோனே தானே.... ஏனோ தானே நோ....’ எனப் பாடல் எழுதுதல் தவறு. இந்தப் பாடலின் தொடக்கம்
’கூமாரி....என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது.. என்று தொடங்குவதால்
இப் பாடல் ‘கூ’ எனும் எழுத்திற்குப் பொருத்தமானதாகவே கருதப்படும்.
*முதல் போட்டியாளர் பாடி முடிக்கும் இறுதி எழுத்தில் இருந்து அடுத்த போட்டியாளருக்கான பாடலைத் தொடங்க வேண்டும், அல்லது பாடல் தொடங்கும் எழுத்தை எழுத்தை வழங்க வேண்டும்,
உ+ம்: தென் மேற்குப் பருவக் காற்று தேனீப் பக்கம் வீசும் போது சாரல்....
இன்பச் சாரல்.....
தெம்மாங்கு பாடிக் கொண்டு சிலு சிலு என்று சிந்துதம்மா.....
இங்கே ‘மா’ எனும் எழுத்தில் முடிந்திருப்பதால்,
அடுத்த போட்டியாளருக்கான எழுத்து
‘மா’ எனும் எழுத்தாக அமைய வேண்டும்.
*இறுதி எழுத்துக்களின் மூலம் பாடல்களைத் தெரிவு செய்ய முடியாத சந்தர்ப்பத்தில், போட்டியாளர், இறுதிச் சொல்லில் இருந்து பாடல்களைத் தெரிவு செய்வதற்கான எழுத்தினை வழங்கலாம்.
உ+ம்: ’நலம் வாழ என் நாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்....
இங்கே ‘ள்’ எனும் எழுத்தில் பாடல் முடிவதால், அடுத்த பாடலுக்குரிய தொடக்க எழுத்து, இறுதிச் சொல்லாகிய ‘வார்த்தைகளில் உள்ள’
‘வா’ எனும் எழுத்தில் தொடங்க வேண்டும்.
*போட்டியாளர்களுக்கு இது தொடர்பாக மேலதிக, சந்தேகங்கள் இருந்தால், கேட்கும் பட்சத்தில், தெளிவிக்கப்படும்!
*கடந்த வாரம் இடம் பெற்ற போட்டியில் போட்டியிட்டு
‘அட்ராசக்க சிபி செந்தில் குமார்; அவர்கள் முதலிடத்திலும்,
‘நாஞ்சில் மனோ’ அவர்கள் இரண்டாமிடத்திலும்,
’மதியோடை சுதா’ அவர்கள் மூன்றாம் இடத்திலும் உள்ளார்கள்.
இந்த வாரம் யார் யார் மோதப் போகிறார்கள் என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
*போட்டியில் பாடல் வரிகள் சரியாகச் சொல்லப்படுகின்றதா என்பதனை, நான் கவனித்துக் கொண்டிருப்பேன். யாருமே பாடல்களைச் சொல்லா விட்டால் நான் அப்பாடலைச் சொல்லிய பின்னர்(எனக்குத் தெரிஞ்சிருக்கனுமே;-)) ஹி....ஹி....), அடுத்த எழுத்தை உங்களுக்கு வழங்குவேன்.
எல்லோரும் தயாரா!
*போட்டியில் அதிக பாடல்களைச் சொல்லி வெற்றி பெறும் நபருக்கு, இறுதி வரை அடித்தாடும் நபருக்கு இரண்டு மின் நூல்களும், இரண்டு ஆங்கிலத் திரைப்படங்களைத் தரவிறக்கம் செய்வதற்கான Software உம் வழங்கப்படும்!
*தங்க நகை உலகில் மங்காப் புகழ் பெற்ற ‘நாஞ்சில் மனோ’ ஸ்தாபனத்தின் அனுசரணையுடனும், அட்ராசக்க காமெடி கும்மி சிபியின் விளம்பர உபயோகத்திலும் வலை உலகில் உங்களை நாடி வருகிறது
’நாற்றின் பாட்டுக்குப் பாட்டு!
பதிவர்களே, வாருங்கள், கலாயுங்கள், கலக்குங்கள்!
டிஸ்கி: பதிவில் வெற்றி பெறும் நபருக்கு, நான் வழங்கும் பரிசில்; திருப்தி இல்லை என்றால்,
போட்டியாளர் விரும்பினால்,
படங்களில் உள்ள யாராவது ஒரு பிரபல பாடகருடன் மேடையேறிப் பாடுவதற்கான சந்தர்ப்பம்
வழங்கப்படும்;-)))
டிஸ்கி: உ+ம்...உதாரணம்;-)))
ஹி...ஹி...ஹா...ஹா..!
|
66 Comments:
hehe!
என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்....
ஹி...ஹி...
தக்காளி கன்னம் வச்சி வடையை தள்ளிட்டு போறானே, குட்டியை தள்ளிட்டு போறா மாதிரி....
ஆஹா ...
MANO நாஞ்சில் மனோ said...
என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்....////// பாடலாம் சரி எப்படி ஆடுறது?
//என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்....////// பாடலாம் சரி எப்படி ஆடுறது?//
யோவ் வாத்தி இது பாட்டுக்கு பாட்டு போட்டிய்யா....
நடுவரை இன்னும் காணோம்....
எனக்கு கொஞ்சம் வேலை
@விக்கி உலகம்
hehe!//
ஹா...ஹா...
வணக்கமுங்க!
@MANO நாஞ்சில் மனோ
என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்....//
சகோ, உங்களோடு போட்டி போட யாரையும் காணலையே, ஏன்?
ஹி..ஹி...
@நண்டு @நொரண்டு -ஈரோடு
ஹி...ஹி...//
ஐயோ...ஐயோ...
என்ன பாடாமல் சிரித்து விட்டு எஸ் கேப் ஆகிறீங்க சகோ.
@MANO நாஞ்சில் மனோ
தக்காளி கன்னம் வச்சி வடையை தள்ளிட்டு போறானே, குட்டியை தள்ளிட்டு போறா மாதிரி....//
வடை போச்சுதா சகோ....
ஆஹா..ஆஹா...
கவனம்.. நம்ம, சகோ ரொம்ப உசாராகிட்டார். இனி எல்லாவற்றையுமே தள்ளிக் கொண்டு போகத் தொடங்கிடுவார்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ஆஹா ...//
இது என்ன பாட்டுத் தொடக்கமா சகோ?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்....////// பாடலாம் சரி எப்படி ஆடுறது?//
வெப் காம் பூட்டி ஆடலாம் தானே..
ஹி..ஹி..
@MANO நாஞ்சில் மனோ
//என்னோடு பாட்டு பாடுங்கள் எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்....////// பாடலாம் சரி எப்படி ஆடுறது?//
யோவ் வாத்தி இது பாட்டுக்கு பாட்டு போட்டிய்யா....//
அடிங்.....ஹா..ஹா..
@MANO நாஞ்சில் மனோ
நடுவரை இன்னும் காணோம்....//
நடுவருக்கு இடையில் அவசர வேலை வந்து விட்டது. ஹி..ஹி..
இதோ வந்து விட்டார் நடுவர்.
போட்டியின் விதி முறைகளை எல்லோரும் படித்தாச்சா.
@shanmugavel
எனக்கு கொஞ்சம் வேலை//
இப்புடிச் சொல்லிட்டு எஸ் ஆகிற ப்ளானு.
ஹா..ஹா..
இது நடக்கவே நடக்காது.
போட்டியாளர்கள் எல்லோரும் விதி முறைகளைப் படித்தாச்சா!
நம்ம சிபி எங்கே?
பாட்டுப் போட்டிக்கு, இசைக் கருவிகளை டெஸ்டிங் பண்ணப் போயிட்டாரா?
ஹோஹஓஹோ ... பாஸ் நமக்கு பாட எல்லாம் வராது
கலாய்க்கிறீங்க நிரூபன். என்னால் அது முடியாது.
அற்புதமா கலாய்க்கிறீங்க நிரூபன். அந்த வித்தை நமக்குப் பிடிபடவில்லை. ஜமாய்ங்க தோழா.
ரசிச்சு படிச்சேன்
இந்த கட்டத்துக்கு நான் நித்திரை பாஸ்
//*கடந்த வாரம் இடம் பெற்ற போட்டியில் போட்டியிட்டு
‘அட்ராசக்க சிபி செந்தில் குமார்; அவர்கள் முதலிடத்திலும்,
‘நாஞ்சில் மனோ’ அவர்கள் இரண்டாமிடத்திலும்,
’மதியோடை சுதா’ அவர்கள் மூன்றாம் இடத்திலும் உள்ளார்கள்.//
பாஸ் அடுத்த லிஸ்டில என் பெயரையும் சேர்த்துவிடுங்க. நான் உங்களுக்கு நல்லூரடியில சுண்டல் வாங்கி தாறன்.
தனியே தன்னந் தனியே நான்......
யாராவது இருக்கிறீங்களா நண்பர்களே!
பங்கேற்பாளர்களுக்கும், நடத்தும் உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்..
இந்த கட்டத்துக்கு நான் நித்திரை பாஸ்
இந்தப்போட்டிக்கு நான் வரல,
ஆனால் வித்தியாசமான பதிவொன்று
வாழ்த்துக்கள்.
இப்ப எந்த எழுத்தில பாட்டு போடுறது? ஒரே குழப்பமா இருக்குது...............................
உங்கள் தமிழுக்கு நான் அடிமை அண்ணா :)
பிரபல போட்டியாளர்களை இன்னும் காணல பாஸ்? :-)
சாரி பாஸ்,,,
சரியான நேரத்தில் கலந்துக்க முடியவில்லை..
அடுத்த போட்டியை மிஸ் பண்ண மாட்டேன்..
வாழ்த்துக்கள்..
என்ன சி பிய காணம்??
ஒரு விருது வாங்கிட்டா போதும்னு போய்ட்டாரோ?
புதிய முயற்ச்சி
நம்மளால இந்த போட்டியில் சவால் விட்டு கலந்துக்கமுடியும். ஆனால் உங்களுக்கே தெரியும் இப்போ இணையத்திற்கு மன்பு இருக்கிறதே சொற்ப நேரம்தான். உழைப்பாளர் தினத்தில் உழைப்பால் பதிவு பக்கம் வரமுடியாமல்போனதுக்கு மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்.
இங்க போட்டி நடக்குதா இல்லையா?
முதல் முறை இந்தப் பக்கம் வந்தேன். நிஜமாகவே இது போட்டியா இல்லை வெறும் கலாய்ப்பா...?
நாஞ்சில் மனோ சொன்ன பாடலுக்கு பதில் வராமல் வேறு பாடல் வந்துள்ளதே...
"என்னோடு பாட்டு பாடுங்கள்...எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்..." ஒரு வேளை வெறும் கமெண்ட்டோ ...
நிஜமாகவே போட்டி என்றால் ..இதற்கு விதிப்படி ஆ எழுத்தில் பதில் பாடல் "ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்..."
"தனியே தன்னந்த்தனியே நான்" என்பதும் கமெண்ட் இல்லாமல் பாடல் என்றால் பதில் பாடல் "நான் தன்னந்தனி காட்டு ராஜா...என் தோட்டத்தில் எத்தனை ரோஜா.."
@கந்தசாமி.
ஹோஹஓஹோ ... பாஸ் நமக்கு பாட எல்லாம் வராது//
பரவாயில்லை பாஸ், நாம என்ன வொய்ஸ் செலக்சனா வைக்கிறோம்..
அவ்..........
@இரா.எட்வின்
கலாய்க்கிறீங்க நிரூபன். என்னால் அது முடியாது.//
ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கிறது, முடியுமா முடியாதா என்று...
அவ்...
@இரா.எட்வின்
அற்புதமா கலாய்க்கிறீங்க நிரூபன். அந்த வித்தை நமக்குப் பிடிபடவில்லை. ஜமாய்ங்க தோழா.//
ஒரு எழுத்தில் பாட்டுச் சொல்லுவது உங்களுக்கு பிடிபடவில்லையா..
நீங்க பொய் சொல்லி விட்டு, நழுவுறீங்க என்று மட்டும் தெரியுது.
@ரிஷபன்
ரசிச்சு படிச்சேன்//
இதிலை என்னய்யா ரசித்து படிக்க இருக்கு..
நன்றிகள் சகோ.
@Mathuran
இந்த கட்டத்துக்கு நான் நித்திரை பாஸ்//
பரவாயில்லையே, நாம தண்ணி தெளிச்சு எழுப்ப மாட்டோமா..
பாட வராது. உங்களைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம்.
@Mathuran
//*கடந்த வாரம் இடம் பெற்ற போட்டியில் போட்டியிட்டு
‘அட்ராசக்க சிபி செந்தில் குமார்; அவர்கள் முதலிடத்திலும்,
‘நாஞ்சில் மனோ’ அவர்கள் இரண்டாமிடத்திலும்,
’மதியோடை சுதா’ அவர்கள் மூன்றாம் இடத்திலும் உள்ளார்கள்.//
பாஸ் அடுத்த லிஸ்டில என் பெயரையும் சேர்த்துவிடுங்க. நான் உங்களுக்கு நல்லூரடியில சுண்டல் வாங்கி தாறன்.//
எனக்கு சுண்டல் எல்லாம் வேண்டாம், ரியோ ஐஸ்கிரீம் தான் வேணும்.
@செங்கோவி
தனியே தன்னந் தனியே நான்......//
எதிர்ப் பாட்டுப் பாட, யாரையும் காணலையே சகோ.
@பாரத்... பாரதி...
பங்கேற்பாளர்களுக்கும், நடத்தும் உங்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்..//
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோ, ஆனால் யாரையும் காணமே.
என்ன பாட சொல்லாதே
நான் கண்ட படி பாடி புடுவேன்...
பாட்டு படவா..பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பாடு ஒன்னு நான் பாடட்டுமா பால்நிலவ கேட்டு
வார்த்தை ஒன்னு வளைக்கட்டுமா வானவில்லை கேட்டு
@பாரத்... பாரதி...
இந்த கட்டத்துக்கு நான் நித்திரை பாஸ்//
யாராவது நல்ல ராகத்துடன் பாடி, உங்க தூக்கத்தை கெடுக்க மாட்டாங்களா?
@மகாதேவன்-V.K
இந்தப்போட்டிக்கு நான் வரல,
ஆனால் வித்தியாசமான பதிவொன்று
வாழ்த்துக்கள்//
எல்லோருமே ஒதுங்கிட்டாங்களே, என்ன பண்ண.
@akulan
இப்ப எந்த எழுத்தில பாட்டு போடுறது? ஒரே குழப்பமா இருக்குது...............................//
போட்டிக்கு ஆட்களே இல்லை, இனி எப்பூடிப் பாட முடியும்.
@துஷ்யந்தனின் பக்கங்கள்
உங்கள் தமிழுக்கு நான் அடிமை அண்ணா :)//
இங்க எங்கே ஐயா, தமிழ் இருக்கு.
ஒரு போட்டி வைக்கிறதற்கான விளம்பரம்.
காமெடிக்கு அளவே இல்லையா.
கலாய்க்கிறதுக்கு நான் மாட்டிட்டேனா.
முடியலை..........
@FOOD
ஒரு பாட்டு பாடுய்யா! ஆஹா இந்த போட்டிக்கு நான் வரல. வித்தியாசமான முயற்சி. வாழ்துக்கள்.//
நன்றிகள் சகோ.
@ஜீ...
பிரபல போட்டியாளர்களை இன்னும் காணல பாஸ்? :-)//
குரலை வளம் படுத்தும் நோக்கில் பயிற்சி எடுக்க போயிட்டாங்க.
@மைந்தன் சிவா
சாரி பாஸ்,,,
சரியான நேரத்தில் கலந்துக்க முடியவில்லை..
அடுத்த போட்டியை மிஸ் பண்ண மாட்டேன்..
வாழ்த்துக்கள்..
என்ன சி பிய காணம்??
ஒரு விருது வாங்கிட்டா போதும்னு போய்ட்டாரோ?//
போட்டியே இன்னமும் ஆரம்பிக்கலை..
வாங்கய்யா, வாங்க..
என்ன ஒருத்தரையும் காணோம்.
@யாதவன்
புதிய முயற்ச்சி//
நன்றிங்க சகோ.
@Jana
நம்மளால இந்த போட்டியில் சவால் விட்டு கலந்துக்கமுடியும். ஆனால் உங்களுக்கே தெரியும் இப்போ இணையத்திற்கு மன்பு இருக்கிறதே சொற்ப நேரம்தான். உழைப்பாளர் தினத்தில் உழைப்பால் பதிவு பக்கம் வரமுடியாமல்போனதுக்கு மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்.//
இன்னொரு நாளைக்கு மாட்டுவீங்க இல்லே..
ஹி...ஹி...
@சிநேகிதி
இங்க போட்டி நடக்குதா இல்லையா?//
போட்டி நடக்குது சகோ, ஆனால் பாடத் தான் ஆட்களைக் காணோம்.
நடுவர் நான் மட்டும் தனிக் கடை நடாத்துறேன்.
ஹி....ஹி...
@டக்கால்டி
டக்கால்டி said... [Reply to comment]
என்ன பாட சொல்லாதே
நான் கண்ட படி பாடி புடுவேன்..//
இங்கே சகோ ‘பு’ என்னும் எழுத்தில் தொடங்கும் படி முடித்திருக்கிறார்.
‘புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்த கொள்ளை நிலா உடல்
நனைகின்றது..........
‘து’
@ஸ்ரீராம்.
முதல் முறை இந்தப் பக்கம் வந்தேன். நிஜமாகவே இது போட்டியா இல்லை வெறும் கலாய்ப்பா...?
நாஞ்சில் மனோ சொன்ன பாடலுக்கு பதில் வராமல் வேறு பாடல் வந்துள்ளதே...
"என்னோடு பாட்டு பாடுங்கள்...எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்..." ஒரு வேளை வெறும் கமெண்ட்டோ ...
நிஜமாகவே போட்டி என்றால் ..இதற்கு விதிப்படி ஆ எழுத்தில் பதில் பாடல் "ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்..."
"தனியே தன்னந்த்தனியே நான்" என்பதும் கமெண்ட் இல்லாமல் பாடல் என்றால் பதில் பாடல் "நான் தன்னந்தனி காட்டு ராஜா...என் தோட்டத்தில் எத்தனை ரோஜா.."//
சகோ, நிஜமாகவே போட்டி தான். கடந்த வாரம் போட்டி வைத்து, கல கல என கலாய்த்தோம்.
முதல் வருகைக்கும், நாற்றினை தரிசித்ததற்கும் நன்றிகள் நண்பா.
http://tamilnattu.blogspot.com/2011/04/blog-post_23.html
இந்த இணைப்பில் முதலாவது பாட்டுக்கு பாட்டு பகுதிக்கான லிங் இருக்கிறது. சென்று பார்க்கலாம் நண்பா.
போட்டிக்கான பாடல்களை யாரும் தொடர்ந்து கூறவில்லை சகோ.
ஒவ்வோர் நண்பர்களும் ஒரு எழுத்தில் பாடலை ஆரம்பித்து விட்டு எஸ் ஆகி விட்டார்கள்.
ஆதலால் தான் இந்த குழறுபடி வித்தை இடம் பெற்றுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் யாராவது இருந்தால் வாருங்கள்.
@Dr.எம்.கே.முருகானந்தன்
பாட வராது. உங்களைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறோம்.//
பரவாயில்ல, வாங்க சகோ..
இப்பொழுது பாடல் தொடங்க வேண்டிய எழுத்து
‘து’
"துயிலாத பெண்ணொன்று கண்டேன்...எங்கே...இங்கே... எந்நாளும்.."
@ஸ்ரீராம்.
"துயிலாத பெண்ணொன்று கண்டேன்...எங்கே...இங்கே... எந்நாளும்.."//
போட்டியில் பங்கேற்க வேண்டும் எனும் உங்களின் ஆர்வத்திற்கும், முயற்சிக்கும் நன்றிகள் சகோ. பாட்டுக் கடையில் யாரையுமே காணலை, ஆதாலால் வேறொரு நாளில் பாட்டுக்குப் பாட்டுடன் சந்திப்போம்.
நன்றிகள் சகோ.
Post a Comment