மத்தவனோடை துன்பம் என்றால், எல்லோரும் படிக்க ரெடியாகிடுவீங்களே...
அவ்.........................;-)) வாங்கோ, வாங்கோ!
சமாதான காலத்தில்(2002ம் ஆண்டு) மிக நீண்ட காலத்தின் பின்னர் கொழும்பிற்கு, நம்ம அரசாங்கம் வழங்கும் தேசிய அடையாள அட்டையினை மாளிகாவத்தையில் பெற்றுக் கொள்வதற்காகவும், பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காகவும்(Birth Certificate) போயிருந்தேன். விதி என் வாழ்க்கையிலும் விளையாடும் என்று யார் கண்டது!!
கொழும்பில் உறவினர் வீடு ஏதும் இல்லாத நிலையில் சரவணாஸ் லொட்ஜ்ஜில் போய் நண்பர்களுடன் ரூம் போட்டு நின்றேன். மேட்டர் என்னவென்றால், கொழும்பு ரொம்ப மாறிப் போய், கொஞ்சம் டெவலப் ஆகின மாதிரி இருந்திச்சு. நாங்க ரூம் போட்ட லாட்ஜ்ஜில் உள்ள டாய்லெட் இருக்கே... அது வெஸ்ரேன் டாய்லெட்.
காலங் காத்தால எந்திருச்சு, பெப்சிப் போத்தலையோ, இல்லாட்டி கொக்க கோலாப் போத்தலையோ வாய்ப் பக்கத்தாலை வெட்டி, அதனுள் கொஞ்சம் தண்ணி விட்டுக் கொண்டு பனையடி வாரத்தில் ஒதுங்கிய என்னை மாதிரி ஆட்களுக்கு, இந்த வெஸ்ரேன் டாயிலெட் கொஞ்சம் புதுசு தானே:-))
ஹி...ஹி...
வெட்கத்தை விட்டுச் சொல்லுறேன், நம்புங்கோ. வீட்டில டாயிலெட் இருந்தாலும், காலங் காத்தாலை ஒரு வேப்பங் குச்சியை வாயுக்கை வைச்சுக் கொண்டு, போத்தலுக்கை தண்ணீரை நிரப்பிக் கையில் எடுத்துக் கொண்டு; பனை வடலிக்கு கீழ் போய்க் குந்தியிருக்கிறதும் ஒரு சுகம் தான்.
(எடுங்கடா அந்த அருவாளை, இவனை இப்பவே முடிச்சிடுவம்)
ஆனாலும் கேவலங் கெட்ட, இழிவான வேலை என்ன தெரியுமே, முன் அனுபவம், பின் அனுபவம் ஏதுமின்றி வெஸ்டேன் டாயிலெட் கொமெட்டில்(western toilet commode) போய்க் குந்தியிருப்பது தான். ஹி...ஹி..ஹா..ஹா....
என்னைப் போலப் பல பேருக்கு இப்பூடி ஒரு அனுபவம் இருந்திருக்கும்.(வெட்கத்தை விட்டு, உண்மையை ஒத்துக்குங்க, வேறு வழியே இல்ல) நம்ம ஊர் டாயிலெட் எல்லோருக்கும் தெரியும் தானே. அதில் போய்க் குந்தியிருக்கிறவனுக்கு, வெஸ்டேன் டாயிலெட்டில் போய் இருப்பதென்பது, பிராடு வேலை செய்து பிழைக்கும் வலைப் பதிவாளனை அப்பாவி ஒருவன் பார்த்து மூக்கிலை விரல் வைத்து வியப்பது போன்ற செயல் தானே;-))))))))))))
முதன் முதலாக ஒரு வெஸ்டேன் கொமட்டில் போய் உட்காரப் போறேன். உள்ளே போய்க் கதவைப் பூட்டிப் போட்டுப் சுற்றும் முற்றும் பார்த்தால், தண்ணியையும் காணேல்ல, தண்ணீர்ப் பைப்பையும் காணேல்ல. அடிங் கொய்யாலா... வலது பக்க சைட்டில மட்டும் ‘ருசு’ (Tissue) பேப்பர் இருந்திச்சு.
இரண்டு விதமான பிளாஸ்ரிக் வளையங்கள் இருந்தன. ஒன்று டாய்லெட்டை முழுமையாக மூடுவதற்கு, மற்றையது எதற்கென்று தெரியாதவனாய் விழி பிதுங்க யோசித்தேன். இறுதியில்; அட இந்த இடம் தான், உட்கார ஏற்ற இடம் என்று யோசித்து தெளிவடைந்தேன்.
இந்த இடத்தில் நமக்கு முன்னாடி பல பேர் உட்கார்ந்திருப்பாங்க எனும் நம்பிக்கையில் நிறைய ருசுவைப் போட்டுச் சுற்றி வரத் துடைத்தேன். பின்னர் ஒரு Safety ஆக இருக்கட்டுமே எனும் துணிவில் மீண்டும் ருசுவைச் சுற்றி வரப் போட்டு விட்டு, இதிலையும் நம்ம ஊர் டாயிலெட்டில் உட்கார்வது மாதிரித் தானே இருப்பாங்க என்ற நினைப்பில் கால் இரண்டையும் மேலே வைத்து உட்கார்ந்தேன், மேட்டர் எல்லாம் கிளியராகியதும், எந்திருச்சு, துடைச்சுப் போட்டு, தண்ணியை அமுக்கினால்.............................ஐயோ, அம்மா.......நான் போட்ட ருசுவின் அளவு அதிகமானதால் தண்ணி பெருகத் தொடங்கி விட்டது. டாய்லேட் (block) நிரம்பிப் போச்சு.
மேட்டரை வெளியை சொன்னால், டவுசரை உருவிடுவாங்களே, என்று பயந்து, பதை பதைக்க வெளியே ஓடி வந்த என்னைப் பார்த்து விட்டு, ஒரு சகோதர மொழிக்காரன்(சிங்கள அன்பர்) உள்ளே போனான். போனது தான் தாமதம்.....ஹோட்டல் மனேஜ்ஜரைப் பார்த்து சிங்களத்தில கத்திக் கொண்டு ஓடினான்.
சுற்றும் முற்றும் பார்த்து விட்டுச் சொன்னேன்.
’’பேப்பரைக் கொஞ்சம் அதிகமாகப் போட்டு விட்டேன் என்று.
மனேஜ்ஜர், சுத்திகரிப்புத் தொழிலாளியைக் கூப்பிட்டு பிரச்சினையை முடிக்க முதல், மேட்டரை என் நண்பர்கள் கிட்டச் சொல்லி, மானத்தைக் கப்பலேற்றி விட்டிட்டார்.
பூனை சைசில இருந்து கொண்டு, நிரூபன் யானை இலத்தி போட்ட மாதிரிப் போட்டு டாயிலெட்டை ப்ளொக் பண்ணி விட்டாய் என்று எல்லா இடமும் கதையைப் பரப்பி விட்டிட்டாங்க.
அடிங் கொய்யாலா......பிறகு எப்பூடி இருந்திச்சு, நம்ம நிலமை என்று கற்பனை பண்ணிப் பாருங்க. வன்னி முழுவதும், யாழ்ப்பாணம் முழுவதும் ‘இலத்தி நிரூ......., இலத்தி நிரூ...என்று ஒரு பட்டப் பெயரோடு நான் பேமஸ் ஆகிட்டன். என் நண்பர்களுள் ஒருவரான திருமாறன், என் கூட இருக்கும் வரை இதே நிகழ்வினை அடிக்கடி சொல்லிச் சொல்லி, என்னையை வைச்சு காமெடி பண்ணி மகிழ்வான்.
இப்போ, இந்தப் பதிவின் முக்கிய நோக்கம் என்ன என்றால்,
நான் பட்ட இந்த அவஸ்தையினை, நீங்கள் எல்லோரும் படக் கூடாது தானே?
இதான, நம்ம கூட்டாளி ஒருவர்(என்ன நமக்கு இவரு கூட்டாளி ஆகிட்டாரே என்று யோசிக்க கூடாது) நம்மளை மாதிரி இப்படி அவஸ்தைப் பட்ட ஒருவர்,
உங்க எல்லோர் நன்மை கருதியும் ஒரு சூடான மேட்டரை யூரியூப்பில் போட்டிருக்கிறார்.
வெஸ்டேன் டாயிலெட் எப்பூடி யூஸ் பண்ணுவது என்று தெரியாதவர்களுக்காக; இந்தியாவின் யூரியூப் நட்சத்திரம் வில்பர் சர்குணராஜ்ஜின் விளக்கம், இங்கே உள்ளது, இதோ பார்த்துப் பயன் பெறுங்கள்!
|
94 Comments:
vadai
நான் தான் முதல் ஆளா?
சரி....ஓட்டு போட்டுட்டு வர்றேன்
ஆனாலும் கேவலங் கெட்ட, இழிவான வேலை என்ன தெரியுமே, முன் அனுபவம், பின் அனுபவம் ஏதுமின்றி வெஸ்டேன் டாயிலெட் கொமெட்டில்(western toilet commode) போய்க் குந்தியிருப்பது தான். ஹி...ஹி..ஹா..ஹா....>>>>>
மொத முறை போறப்போ கிடைக்கும் அனுபவம் இருக்கே! ஹா,,,,ஹா,,,,
SUPER
காலங் காத்தாலை ஒரு வேப்பங் குச்சியை வாயுக்கை வைச்சுக் கொண்டு, போத்தலுக்கை தண்ணீரை நிரப்பிக் கையில் எடுத்துக் கொண்டு; பனை வடலிக்கு கீழ் போய்க் குந்தியிருக்கிறதும் ஒரு சுகம் தான்.
உண்மைதான் சகோ
ஆஹா நிரூபன்.
ரொம்ப அருமை
என்ன நீங்களுமா இப்படி?
@தமிழ்வாசி - Prakash
vadai//
வியாழக் கிழமை அதிகாலையில் வடை கொடுப்பதில்லை,
ஒன்லி, தேங்காய் & பழம் பாக்கு!
இதில் எது வேண்டுமோ, அதனை எடுத்துக்கலாம்;-))
@தமிழ்வாசி - Prakash
நான் தான் முதல் ஆளா?//
இதுல கூடவா சந்தேகம்..
அவ்.........முடியல...
@தமிழ்வாசி - Prakash
சரி....ஓட்டு போட்டுட்டு வர்றேன்//
ஏன் எங்காச்சும் எலக்சன் நடக்குதா;-))
@தமிழ்வாசி - Prakash
ஆனாலும் கேவலங் கெட்ட, இழிவான வேலை என்ன தெரியுமே, முன் அனுபவம், பின் அனுபவம் ஏதுமின்றி வெஸ்டேன் டாயிலெட் கொமெட்டில்(western toilet commode) போய்க் குந்தியிருப்பது தான். ஹி...ஹி..ஹா..ஹா....>>>>>//
சேம் சேம் பப்பி சேம்....
மொத முறை போறப்போ கிடைக்கும் அனுபவம் இருக்கே! ஹா,,,,ஹா,,,,
உங்களுக்கு கக்கூஸ் என்றாலே பிரச்சினை தான் போல இருக்கே சகோ...
@Mahan.Thamesh
SUPER//
ஒத்த வரியிலை சொல்லிட்டு, எஸ் ஆகிறீங்களே, இது நியாயமா.. நான் வேறு பழைய ஞாபகங்களை கிளறி நொந்து போயிருக்கேன்;-))
ஹி...ஹி....
இந்த இடுகைக்கும் வடையா?
@Mahan.Thamesh
காலங் காத்தாலை ஒரு வேப்பங் குச்சியை வாயுக்கை வைச்சுக் கொண்டு, போத்தலுக்கை தண்ணீரை நிரப்பிக் கையில் எடுத்துக் கொண்டு; பனை வடலிக்கு கீழ் போய்க் குந்தியிருக்கிறதும் ஒரு சுகம் தான்.
உண்மைதான் சகோ//
நீங்களும் நம்ம கட்சியா...
@இரா.எட்வின்
ஆஹா நிரூபன்.
ரொம்ப அருமை//
எது அருமை?
நான் பட்ட வேதனையா..
அவ்.......முடியல..
நன்றிகள் சகோ.
@இக்பால் செல்வன்
என்ன நீங்களுமா இப்படி?//
அப்போ நீங்களும் தானா...
@டக்கால்டி
உங்களுக்கு கக்கூஸ் என்றாலே பிரச்சினை தான் போல இருக்கே சகோ...//
என்ன செய்ய, நான் தமிழனாய்ப் பிறந்திட்டேனே;-)))
@டக்கால்டி
இந்த இடுகைக்கும் வடையா?//
பழக்க தோசம் இல்லே...
ஹி...ஹி...
அவஸ்தைப்பட்டதை இதுபோன்ற விஸயங்களை யாரும்
வெளியே சொல்லத் தயங்குவார்கள்
தங்கள் சொன்னதுமட்டுமின்றி
அடுத்தவர்கள் இதுபோன்று அவதியுறக்கூடாது என
விளக்கத்துடன் பதிவு போட்டிருப்பது பாராட்டுக்குறியது
நன்றி
// என்னைப் போலப் பல பேருக்கு இப்பூடி ஒரு அனுபவம் இருந்திருக்கும்.(வெட்கத்தை விட்டு, உண்மையை ஒத்துக்குங்க, வேறு வழியே இல்ல) //
ஒத்துக்குறேன்... நம்ம வில்பர் சற்குணராஜ் இருக்கும்போது இனி நமக்கு என்ன கவலை...
மாப்ள உம்ம விளக்கம் நல்லா இருந்தது..........கழிவை வெளிப்படுத்த ஓடியது என்னை நினைத்துப்பார்த்தேன்....ஹிஹி அய்யோ அய்யோ!
அண்ணே! எம் மாமே பன்னிக்குட்டிய ரொம்ப நாளா காணோம! எங்கயாச்சும் பார்த்தேளா? சிநேகிதனை..... சிநேகிதனை ரகசிய சிநேகிதனை........
ஹிஹி உண்மை தான் நிரூ,அனைவரும் முதலில் இவ்வாறு அனுபவப்பட்டு தான்
பின்னர் வழிக்கு வருவார்கழ்க்
காத்திரப் பதிவராமே நீங்கள்?என் ப்ளாக்'இல் அவ்வாறு தான்
அலங்கரிக்கிறீர்கள்!!
என்னய்யா நடக்குது இங்க..
பூனை சைசில இருந்து கொண்டு, நிரூபன் யானை இலத்தி போட்ட மாதிரிப் போட்டு டாயிலெட்டை ப்ளொக் பண்ணி விட்டாய் என்று எல்லா இடமும் கதையைப் பரப்பி விட்டிட்டாங்க.
நல்லா இருக்குது................
சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்குய்யா..அதுவும் //பூனை சைசில இருந்து கொண்டு, நிரூபன் யானை இலத்தி போட்ட மாதிரிப் போட்டு டாயிலெட்டை ப்ளொக் பண்ணி விட்டாய் // சூப்பர்!
Super! :-)
wilber rocks..!
ஹி ஹி ஹி ,ஒத்துக்குறேன்
மாப்பிள எனக்க கட்டநாயக்கா விமான நிலையத்தில் இப்படி எற்பட்டது என்ன கொடுமடா சாமி பக்கத்தில இருக்கிறவன்ர கால் தெரியுது நான் பட்ட பாடிருக்கே.. ஐயெயோ..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)
இப்படி உண்மையை ஒத்துக்கொள்ள முடிகிற நீங்கள் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கிறீங்கள் .நல்ல விசயங்களை பகிர்கிரது உங்கள் முயற்ச்சிகள் நமக்கு மட்டும் வடை கிடைக்கிது இல்லையே!
நீங்கள் பதிவு இடும்போது பாலப்போன கும்பகரணன் வந்துவிடுகிறான்!
இதைவிட லாஜ்ஜில் வேற பல அனுபவங்கள் கிடைத்திருக்குமே!அவையும் வருமா இல்லை தனிக்கை செய்வீர்களா!(இப்படி உண்மை சொல்லுவர்கள் வெளியில் சொன்னால் கேட்பம் )
லாஜ்ஜில் ஞாயிறுப்பொழுதுகள் எப்போதும் பல துயரங்களை அரங்கேற்றும் அவைகளையும் நட்சத்திர பதிவர் நீங்கள் எழுதலாமே!விழிப்புனர்வும் ஏற்படுமே!
ஹா..ஹா..ஹா கலக்கிட்டிங்க போங்க (பாஸ் நான் டாய்லெட்ட சொல்லல்ல????????? பதிவ சொன்னன்?
என்ன கொடும சரவணன்:-) போக போக எல்லாம் சரியாகிவிடுமே (அட பழக்கத்த சொன்னேப்பா))))
பாஸ் இனி கொட்டல் பார்க்கேக்க கொமெட்டையும் ஒருக்கா எட்டி பாருங்கோ:-)
அடேங்கப்பா...அதுக்கும் ஒரு பதிவா? இருந்தாலும் சுவாரஸ்யமாத்தான் சொல்லிருக்கீங்க..
//முதன் முதலாக ஒரு வெஸ்டேன் கொமட்டில் போய் உட்காரப் போறேன். உள்ளே போய்க் கதவைப் பூட்டிப் போட்டுப் சுற்றும் முற்றும் பார்த்தால், தண்ணியையும் காணேல்ல, தண்ணீர்ப் பைப்பையும் காணேல்ல. அடிங் கொய்யாலா... வலது பக்க சைட்டில மட்டும் ‘ருசு’ (Tissue) பேப்பர் இருந்திச்சு.//
அட மக்கா காலையிலே நியூஸ் பேப்பர் படிச்சிட்டே உக்காந்தா அந்த சுகமே தனிதான்....ம்ஹும் நீர்தான் மக்கு.....
//மேட்டரை வெளியை சொன்னால், டவுசரை உருவிடுவாங்களே, என்று பயந்து, பதை பதைக்க வெளியே ஓடி வந்த என்னைப் பார்த்து விட்டு, ஒரு சகோதர மொழிக்காரன்(சிங்கள அன்பர்) உள்ளே போனான். போனது தான் தாமதம்.....ஹோட்டல் மனேஜ்ஜரைப் பார்த்து சிங்களத்தில கத்திக் கொண்டு ஓடினான்.////
ஹா ஹா ஹா செத்தான் அவன் ஹே ஹே ஹே ஹே...
//மனேஜ்ஜர், சுத்திகரிப்புத் தொழிலாளியைக் கூப்பிட்டு பிரச்சினையை முடிக்க முதல், மேட்டரை என் நண்பர்கள் கிட்டச் சொல்லி, மானத்தைக் கப்பலேற்றி விட்டிட்டார்.
பூனை சைசில இருந்து கொண்டு, நிரூபன் யானை இலத்தி போட்ட மாதிரிப் போட்டு டாயிலெட்டை ப்ளொக் பண்ணி விட்டாய் என்று எல்லா இடமும் கதையைப் பரப்பி விட்டிட்டாங்க.///
ஹி ஹி ஹி ஹி நல்லாவே நாறி இருக்கீங்க....
//வெஸ்டேன் டாயிலெட் எப்பூடி யூஸ் பண்ணுவது என்று தெரியாதவர்களுக்காக; இந்தியாவின் யூரியூப் நட்சத்திரம் வில்பர் சர்குணராஜ்ஜின் விளக்கம், இங்கே உள்ளது, இதோ பார்த்துப் பயன் பெறுங்கள்!///
ம்ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க....
Good Post இலத்தி நிரூ :)
hi hi hi ஹி ஹி ஹி
உண்மையில் வேதனையான விஷயம்தான்...
வளர்ந்து விட்ட சமுதாயத்தில் ஒரு சிலருக்கு அந்த வளர்ச்சியின் பகுதிக்கூட சேர்வதில்லை...
ஒரு பகுதியினர் வெஸ்ட்ன் டாய்லட் லெவலுக்கு சென்று விட்டனர்.. மற்றவர்கள் இன்னும் கழிப்பிட வசதிக்கூட இல்லாமல் இருக்கிறார்கள்..
என்ன செய்ய...
கழிவறையில் என்னய்யா கண்பியூஷன்....
நானும் அப்படித்தான்..
சென்னை சபீத இஞ்னியரிங் கல்லூரியில் வேலைகிடைத்தது (DTP Opprater)வெஸ்டன் டாய்லெட் மற்றும் A/c க்கு பயந்து அங்கிருந்து இரண்டே நாளில் வந்து விட்டேன்...
தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..
என்னத்தை சொல்ல? வீடியோ பார்த்தாச்சும் திருந்துங்கப்பா!!!!
//எல்லோரும் படிக்க ரெடியாகிடுவீங்களே...
அவ்.........................;-)) வாங்கோ, வாங்கோ!//
என்னய பாத்து என்ன வார்த்தை பேசிட்டீங்கோ.!!
intresting sago !
இது போன்று ஒரு பதிவை முன்பு ஒரு முறை நீங்கள் எழுதியிருப்பதாக நினைவு..
உங்கள் அனுபவத்திற்கேற்ப வீடியோ.
வில்பர் சர்குணராஜ்ஜின் யூ டியூப்கள் பற்றி ஏற்கனவே வார இதழ் ஒன்றில் படித்திருக்கிறேன். வீடியோவை இப்போது தான் பார்க்கிறேன். அட்டகாசமாக தமிழ் போல ஆங்கிலம் பேசுகிறார், தமிழ் கலந்து.
@Ramani
அவஸ்தைப்பட்டதை இதுபோன்ற விஸயங்களை யாரும்
வெளியே சொல்லத் தயங்குவார்கள்
தங்கள் சொன்னதுமட்டுமின்றி
அடுத்தவர்கள் இதுபோன்று அவதியுறக்கூடாது என
விளக்கத்துடன் பதிவு போட்டிருப்பது பாராட்டுக்குறியது
நன்றி//
யான் பெற்ற துன்பம், இவ் வையகம் பெறக் கூடாது பாருங்க;-))
ஹி...ஹி..அது தான்..
நன்றிகள் சகோ.
@Philosophy Prabhakaran
// என்னைப் போலப் பல பேருக்கு இப்பூடி ஒரு அனுபவம் இருந்திருக்கும்.(வெட்கத்தை விட்டு, உண்மையை ஒத்துக்குங்க, வேறு வழியே இல்ல) //
ஒத்துக்குறேன்... நம்ம வில்பர் சற்குணராஜ் இருக்கும்போது இனி நமக்கு என்ன கவலை...//
நண்பேண்டா...
ஹி..ஹி..
@விக்கி உலகம்
மாப்ள உம்ம விளக்கம் நல்லா இருந்தது..........கழிவை வெளிப்படுத்த ஓடியது என்னை நினைத்துப்பார்த்தேன்....ஹிஹி அய்யோ அய்யோ!//
ஆய், சேம் சேம், பப்பி சேம்.
@திருமதி.பன்னிக்குட்டி
அண்ணே! எம் மாமே பன்னிக்குட்டிய ரொம்ப நாளா காணோம! எங்கயாச்சும் பார்த்தேளா? சிநேகிதனை..... சிநேகிதனை ரகசிய சிநேகிதனை........//
நீங்க, நெசமாவே, திருமதி பன்னிக்குட்டியா?
நான் நினைத்தேன், பன்னிக் குட்டி உங்க கூட குளு கடற்கரையில் இருப்பார் என்று;-))
இப்படித் தவிக்க விட்டுப் போய் விட்டாரே!
@மைந்தன் சிவா
ஹிஹி உண்மை தான் நிரூ,அனைவரும் முதலில் இவ்வாறு அனுபவப்பட்டு தான்
பின்னர் வழிக்கு வருவார்கழ்க்
காத்திரப் பதிவராமே நீங்கள்?என் ப்ளாக்'இல் அவ்வாறு தான்
அலங்கரிக்கிறீர்கள்!!//
சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிறதெண்டு கிளம்பிட்டீங்களா?
நான் பாட்டுக்கு சிவனே என்னு போய்க் கிட்டு இருக்கிறேன். பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் பேசி என்னை வம்பிலை மாட்டி விட வேண்டாம் சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
என்னய்யா நடக்குது இங்க..//
அதைப் பார்த்தா தெரியலை சகோ
ஹி..ஹி...
@akulan
பூனை சைசில இருந்து கொண்டு, நிரூபன் யானை இலத்தி போட்ட மாதிரிப் போட்டு டாயிலெட்டை ப்ளொக் பண்ணி விட்டாய் என்று எல்லா இடமும் கதையைப் பரப்பி விட்டிட்டாங்க.
நல்லா இருக்குது...............//
என்ன நான் போட்ட லத்தியா;-))
அவ்.......முடியலை சகோ.
உங்க இரசனையை எப்பூடிப் பாராட்டுவதென்றே தெரியலை.
@செங்கோவி
சிரிச்சுச் சிரிச்சு வயிறு வலிக்குய்யா..அதுவும் //பூனை சைசில இருந்து கொண்டு, நிரூபன் யானை இலத்தி போட்ட மாதிரிப் போட்டு டாயிலெட்டை ப்ளொக் பண்ணி விட்டாய் // சூப்பர்!//
நன்றிகள் சகோ.
@ஜீ...
Super! :-)//
நன்றிகள் சகோ.
@mani
wilber rocks..!//
நன்றிகள் சகோ.
@♔ம.தி.சுதா♔
மாப்பிள எனக்க கட்டநாயக்கா விமான நிலையத்தில் இப்படி எற்பட்டது என்ன கொடுமடா சாமி பக்கத்தில இருக்கிறவன்ர கால் தெரியுது நான் பட்ட பாடிருக்கே.. ஐயெயோ..//
சகோ, நீங்களுமா...
ஹி...ஹி....
@Nesan
இப்படி உண்மையை ஒத்துக்கொள்ள முடிகிற நீங்கள் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கிறீங்கள் .நல்ல விசயங்களை பகிர்கிரது உங்கள் முயற்ச்சிகள் நமக்கு மட்டும் வடை கிடைக்கிது இல்லையே!
நீங்கள் பதிவு இடும்போது பாலப்போன கும்பகரணன் வந்துவிடுகிறான்!//
என்னது, மற்றவங்களுக்கு பாடமா இருக்கிறேனா...
ஐயோ...ஐயோ..
கண்டிப்பாக ஒரு நாள் வடை கிடைக்கும் சகோ.
உங்களுக்கு ஏற்ற நேரம் என்ன என்று சொல்லுங்க. ஒரு சேஞ்சிற்கு மாத்திப் போடுறேன்..
இது எப்பூடி;-))
@Nesan
இதைவிட லாஜ்ஜில் வேற பல அனுபவங்கள் கிடைத்திருக்குமே!அவையும் வருமா இல்லை தனிக்கை செய்வீர்களா!(இப்படி உண்மை சொல்லுவர்கள் வெளியில் சொன்னால் கேட்பம் )//
இந்த ப்ளாக்கில் தணிக்கை ஏதும் கிடையாது. எல்லாமே வரும். ஆனால் மகளிரணிகளின் எதிர்ப்பலைகள் எழுந்திடுமே என்று பயமாக இருக்கு சகோ.
@Nesan
லாஜ்ஜில் ஞாயிறுப்பொழுதுகள் எப்போதும் பல துயரங்களை அரங்கேற்றும் அவைகளையும் நட்சத்திர பதிவர் நீங்கள் எழுதலாமே!விழிப்புனர்வும் ஏற்படுமே!//
சும்மா இருக்கிற ‘நாற்றை’ உசுப்பேத்தி, பப்பாவிலை ஏத்தி கவிழ்க்கிற நோக்கமா?
வேணாம் சாமி, நான் எல்லாம் நட்சத்திரப் பதிவரே இல்லை, ஒரு சாதா பதிவராக இருந்திட்டுப் போயிடுறேன்.
எல்லாம் எழுதுவோம். ஆனால் எதிர்ப்பலைகள் வந்திடாது.
@Mathuran
ஹா..ஹா..ஹா கலக்கிட்டிங்க போங்க (பாஸ் நான் டாய்லெட்ட சொல்லல்ல????????? பதிவ சொன்னன்?//
நன்றிகள் சகோ, நீங்க மட்டும் என்கிட்ட மாட்டினீங்க..
அவ்.................
@கந்தசாமி.
என்ன கொடும சரவணன்:-) போக போக எல்லாம் சரியாகிவிடுமே (அட பழக்கத்த சொன்னேப்பா))))//
அண்ணன் அனுபவசாலி தத்துவம் சொல்லுறாரு, வாங்கய்யா, வாங்க, வந்து கேட்டுக்குங்க.
@கந்தசாமி.
பாஸ் இனி கொட்டல் பார்க்கேக்க கொமெட்டையும் ஒருக்கா எட்டி பாருங்கோ:-)//
சகோ, இப்போ எல்லாம் பழகியாச்சு சகோ.
@ரஹீம் கஸாலி
அடேங்கப்பா...அதுக்கும் ஒரு பதிவா? இருந்தாலும் சுவாரஸ்யமாத்தான் சொல்லிருக்கீங்க..//
நான் பட்ட துன்பம் எல்லோரும் படக் கூடாதில்ல. அது தான். நன்றிகள் சகோ.
@MANO நாஞ்சில் மனோ
அட மக்கா காலையிலே நியூஸ் பேப்பர் படிச்சிட்டே உக்காந்தா அந்த சுகமே தனிதான்....ம்ஹும் நீர்தான் மக்கு.....//
அப்போ, நீங்க ருசு பேப்பர் யூஸ் பண்ணுவதில்லையா?
நியூஸ் பேப்பரா...சீ....
@MANO நாஞ்சில் மனோ
ஹா ஹா ஹா செத்தான் அவன் ஹே ஹே ஹே ஹே...//
ஆமா...சகோ
@MANO நாஞ்சில் மனோ
ஹி ஹி ஹி ஹி நல்லாவே நாறி இருக்கீங்க....//
நாறினமா, நோண்டி நொங்கெடுத்திட்டாங்க சகோ.
@MANO நாஞ்சில் மனோ
ம்ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க....//
ஏன் என்ன இங்க டாயிலெட்டா நடத்திக்கு இருக்கேன்...
அவ்.....................
@Jana
Good Post இலத்தி நிரூ :)//
வேணாம்...வலிக்குது,
அழுதிடுவேன் )))));
@சமுத்ரா
:) //
ஏதாவது சொல்லுவீங்க என்று நினைத்தேன். இப்பூடிக் கவலையுடன் கையைக் காட்டிப் போட்டுப் போயிட்டீங்களே சகோ.
@சி.பி.செந்தில்குமார்
hi hi hi ஹி ஹி ஹி//
என்னோடை வேதனை உங்களுக்கு காமெடியா இருக்கா...
இருங்க அடுத்த தடவை வைச்சுக்கிறன்.
கவிதை வீதி # சௌந்தர் said...
உண்மையில் வேதனையான விஷயம்தான்...
வளர்ந்து விட்ட சமுதாயத்தில் ஒரு சிலருக்கு அந்த வளர்ச்சியின் பகுதிக்கூட சேர்வதில்லை...
ஒரு பகுதியினர் வெஸ்ட்ன் டாய்லட் லெவலுக்கு சென்று விட்டனர்.. மற்றவர்கள் இன்னும் கழிப்பிட வசதிக்கூட இல்லாமல் இருக்கிறார்கள்..
என்ன செய்ய...//
எல்லாம் பின் தங்கிய எங்கள் சமூதத்தின் தவறு தான் சகோ.
கவிதை வீதி # சௌந்தர் said...
கழிவறையில் என்னய்யா கண்பியூஷன்....
நானும் அப்படித்தான்..
சென்னை சபீத இஞ்னியரிங் கல்லூரியில் வேலைகிடைத்தது (DTP Opprater)வெஸ்டன் டாய்லெட் மற்றும் A/c க்கு பயந்து அங்கிருந்து இரண்டே நாளில் வந்து விட்டேன்...
தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..//
அட, நீங்களும் நம்ம தோஸ்தில்ல...
சேம் சேம்...நன்றிகள் சகோ
@vanathy
என்னத்தை சொல்ல? வீடியோ பார்த்தாச்சும் திருந்துங்கப்பா!!!!//
இது ஓவர் நக்கலு...
திருந்திட்டமில்ல
@தம்பி கூர்மதியன்
//எல்லோரும் படிக்க ரெடியாகிடுவீங்களே...
அவ்.........................;-)) வாங்கோ, வாங்கோ!//
என்னய பாத்து என்ன வார்த்தை பேசிட்டீங்கோ.!!//
என்னய்யா...ஒத்த வார்த்தையோடு எஸ் ஆகிட்டீங்க சகோ.
@shanmugavel
intresting sago !//
நன்றிகள் சகோ.
@பாரத்... பாரதி...
இது போன்று ஒரு பதிவை முன்பு ஒரு முறை நீங்கள் எழுதியிருப்பதாக நினைவு..//
இல்லைச் சகோ, அந்தப் பதிவு, டாய்லெட் ஏன் போகமாட்டேங்குது என்று எழுதியது.
இது வெஸ்டேன் டாய்லெட் எப்பூடி யூஸ் பண்ணுவது என்று எழுதிய பதிவு..
ஹி...ஹி...
@பாரத்... பாரதி...
உங்கள் அனுபவத்திற்கேற்ப வீடியோ.//
ரொம்ப ஓவர் சகோ..நீங்க.
@பாரத்... பாரதி...
வில்பர் சர்குணராஜ்ஜின் யூ டியூப்கள் பற்றி ஏற்கனவே வார இதழ் ஒன்றில் படித்திருக்கிறேன். வீடியோவை இப்போது தான் பார்க்கிறேன். அட்டகாசமாக தமிழ் போல ஆங்கிலம் பேசுகிறார், தமிழ் கலந்து//
ஆமா சகோ, அவரு நிறைய யூஸ் புல் விடயங்களை யூடியூப்பில் சொல்லியிருக்காரு.
இதை எழுத தில் வேணும்..சிறிதும் சங்கடம் இல்லாமல் உண்மை அனுபவத்தை பகிர்ந்த நண்பருக்கு பாராட்டுக்கள்
அடேயப்பா ..இது போன்ற சங்கடம் பெரும்பாலும் எல்லோருக்கும் உண்டு
உங்கள் பதிவுகளில் இது முக்கிய இடம் பிடிக்கும்னு நினைக்கிறேன்
நீங்கள் செய்தது மிகவும் ஆபத்தான விஷயம். அந்த பீங்கான் உடைந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை அறிய எனது இப்பதிவில் உள்ள பவர் பாயிண்ட் கோப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.
http://dondu.blogspot.com/2010/01/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ஆர்.கே.சதீஷ்குமார்
இதை எழுத தில் வேணும்..சிறிதும் சங்கடம் இல்லாமல் உண்மை அனுபவத்தை பகிர்ந்த நண்பருக்கு பாராட்டுக்கள்//
வாழ்வில் அனுபவித்த அவலத்தை எழுதவுமா தில் வேணும் சகோ!
இதில் உள் குத்து எதுவும் இல்லையே!
@ஆர்.கே.சதீஷ்குமார்
இதை எழுத தில் வேணும்..சிறிதும் சங்கடம் இல்லாமல் உண்மை அனுபவத்தை பகிர்ந்த நண்பருக்கு பாராட்டுக்கள்//
அப்போ சேம், சேம் பப்பி சேம்.
@ஆர்.கே.சதீஷ்குமார்
உங்கள் பதிவுகளில் இது முக்கிய இடம் பிடிக்கும்னு நினைக்கிறேன்//
நிஜமாகவா சகோ.
நன்றிகள் சகோ.
dondu Said...
நீங்கள் செய்தது மிகவும் ஆபத்தான விஷயம். அந்த பீங்கான் உடைந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை அறிய எனது இப்பதிவில் உள்ள பவர் பாயிண்ட் கோப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.
http://dondu.blogspot.com/2010/01/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்//
ஆஹா....ஆஹா... இப்புடியெல்லாம் யோசித்திருக்கிறீங்களா..கண்டிப்பாக உங்க வலைக்கு வந்து பார்க்கிறேன் சகோ, நன்றிகள் சகோ.
Post a Comment