ஒரு சில இடங்களில் இன்னமும் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் கொடுத்தே திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் பெற்றோர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் குஜராத், மற்றும் பஞ்சாப் முதலிய மாநிலங்களில் திருமணத்தின் பின் இடம் பெறும் முதலிரவின் போது மணமகன், மணமகள் முதலியோரைத் தனியறையில் விட்டு, கட்டிலில் வெள்ளைத் துணியை விரித்து விடுவார்கள்.
மறு நாள் காலை கட்டிலில் இரத்தம் இருந்தால் தான் பெண் கன்னி கழியாமல் இருக்கிறாள் எனும் நம்பிக்கையில் திருமணத்தின் முக்கிய அம்சமான மாமியார் வீட்டவர்களின் வரவேற்பு, உபசாரம் இடம் பெறும், இல்லை என்றால் எல்லோரும் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு விஜய் படம் பார்த்த ரசிகர்கள் போல சோகத்துடன் தான் இருப்பார்கள். இதனை ஒரு பெரிய பண்டிகை போன்று மணமகளைப் பல்லக்கில் ஏற்றி வீதியுலாவாக அழைத்து வந்து கொண்டாடி மகிழ்வார்கள். இதே நிலமை எமது இலங்கையில் உள்ள சகோதர இனத்தவர்களான சிங்களவர்களிடமும் இன்று வரை நடை முறையில் இருக்கிறது. இஸ்லாமிய உறவுகளிடமும் இந்தப் பண்பாடு இன்றும், காணப்படுகின்றது
ஆசியாவிலுள்ள ஏனைய இன மக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழர்களிடம் இப்படியொரு பண்பு இல்லை என்றே கூறலாம். கன்னித் திரை தொடர்பான டெஸ்ட்டிங்கில் தமிழர்கள் ஈடுபடுவதில்லை என்பது உண்மை, எங்காவது கிராமப் புறங்களில், இவ் நிகழ்வுகள் இன்றும் நடை முறையில் இருக்கலாம், ஆனால் தமிழர்களிடமும், தமிழ் ஆண்களிடமும் உள்ள மிக, மிக கெட்ட பழக்கம் என்ன தெரியுமா?சந்தேகப்படுவது.
உடலுறவின் போது இரத்தம் வரவில்லை என்றால் திருமணத்திற்கு முன்னரான உடலுறவு தான் இதற்கான காரணம் என்றும், அப் பெண் தவாறன நடத்தை உடையவள்; ஏற்கனவே கெட்டுப் போய் விட்டாள் எனும் வகையில் உளவியல் ரீதியில் குழப்பமடைந்து கற்பனைகளில் மூழ்கி, பெண்ணை வார்த்தைகளால் துன்புறுத்திச் சாகடிப்பது எமது சமூகத்தில் நடக்கும் ஒரு விபரீத நிகழ்வாகி விட்டது இன்று.
ஒரு பெண் பூப்படைந்த காலப் பகுதியின் பின்னர், அவள் சைக்கிள் ஓடுவதால், விளையாட்டுக்களில் பங்கு பற்றுவதால், அல்லது நடனமாடுவதால் கன்னித் திரை கிளிவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எத்தனையோ இடங்களில் இதனை நம்ப மறுத்தவர்களாய், ’நீ ஏற்கனவே கை பட்ட சீடி, நீ பாவிச்ச பொருள் தானே’ என்றெல்லாம் வசை மொழிகளைக் கூறி, பெண்ணைத் திட்டி, வார்த்தைகளால் கொன்று அவளின் வாழ்க்கையினைச் சீரழிக்கும் செயற்பாடுகளில் கணவன், மற்றும் மாமியார் வீட்டுக்காரர் ஈடுபடுவதாக வைத்தியர்கள் கூறுகிறார்கள்.
ஒரு ஆண் மகன் திருமணம் செய்யப் போகும் போது, சும்மா ஒரு தமாசுக்காக ‘மச்சான் உன் ஆளை அந்தப் பையன் கூட ரெண்டு வருசத்திற்கு முன்னாடி கண்டிருக்கிறேன்’ என்று சொன்னாலே போதும், நெருப்பு தானாகவே பற்றிக் கொள்ளும். பெண்ணின் வாழ்க்கையில் அன்று முதல் ஏழரை உச்சத்தில் ஏறி உட்கார்ந்து கொள்ளும்.
இன்றைய கால கட்டத்தில் ஒரு ஆண் மகன், வெளி நாட்டில் ஏற்கனவே திருமணமாகி, விவகாரத்துப் பெற்று இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் பெண் மட்டும் முதற் தாரமாக அந்த மணமகனை மணம் முடிக்க வேண்டும் எனும் நிலமை தற்போது காணப்படுகிறது, இங்கேயும் பார்த்தால், ஆண் ஏற்கனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்தவனாக இருந்தாலும், பெண் மட்டும் மணமாகாதாவளாக இருக்க வேண்டும் எனும் தனி மனித ஆதிக்க உணர்வுகளே முதன்மைப்படுத்தப்படுகின்றன. இந்த தனிமனித ஆதிக்கச் சிந்தனைகள எமது சமூகத்தில் இருந்து இலகுவில் அகற்ற முடியுமா?
உடலுறவின் பின்னர் இரத்தம் வரவில்லை என்பதால் அப் பெண் தவறானவள் எனும் கண்ணோட்டத்தில் எமது சமூகம் ஏன் பார்க்கின்றது? பெண்களின் கன்னித் திரை கிழியாமல் இருந்தாலும், உடலுறவின் போது சிலருக்கு இரத்தம் வராது என்று விஞ்ஞானம் கூறுகின்றது. ஆனால் எமது சமூகத்தில் ஏன் கன்னித் திரையின் அடையாளமாக இரத்தம் வர வேண்டும் என நம்புகிறார்கள்?
ஆண்களின் பார்வையில், அவர்கள் சமூகத்தில் திருமணத்திற்கு முன்னர் எவ்வகையான உறவுகளை வைத்திருந்தாலும் அவற்றை உடலியல் ரீதியாக நிரூபிக்க முடியாது, ஆனால் பெண்களை மட்டும் ஆண்கள் ஏன் பிறிதோர் கண்ணோட்டத்தில் இவள் கெட்டுப் போனவள் எனும் நோக்கோடு பார்க்க வேண்டும்? இயற்கையான காரணிகளை விடுத்து, பெண்ணின் உடலியல் ரீதியான செயற்பாடுகள் தான், அவளின் கன்னித் திரை கிழிவிற்கு காரணம் எனும் நம்பிக்கையில் பெண்களைத் துன்புறுத்தும் ஆண்களை மாற்ற ஏதாவது வழி முறைகள் இருக்கின்றனவா? தெரிந்தால் கூறுங்கள்.
எமது கலாச்சாரத்தில் காணப்படும், கன்னித் திரை தொடர்பான தெளிவில்லாத நம்பிக்கைகளின் பின்னணி என்ன? இதற்கான காரணம் என்ன? ஆண்கள் மட்டும் திருமணத்திற்கு முன்னர் மனதால் ஒரு பெண்ணைக் கூட நினைப்பதில்லையா? ஒரு பெண் பாலியல் உறவின் மூலம் தான் தன் கன்னித் திரையினை இழந்திருக்கிறாள் என்று எமது சமூகத்தவர்கள் மட்டும் ஏன் திடமாக நம்புகிறார்கள்? இந்த தெளிவற்ற நம்பிக்கைகளை சரியான கண்ணோட்டத்தில் அணுகி, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது சாத்தியமா? ஒரு பெண்ணின் கற்பு என்பதன் அடையாளமாய் கன்னித் திரையினை எம்மவர்கள் கருதுவது சரியா?
இத்தகைய வினாக்களோடு இன்றைய விவாத மேடை உங்களுக்காய் விரிகின்றது.
இக் கேள்விகள் தொடர்பான பதில்களோடு, உங்களது கருத்துக்களை நீங்கள் பதிவு செய்யத் தொடங்கலாம் நண்பர்களே!
தயவு செய்து பதிவுடன் தொடர்புடைய கருத்துக்களை மட்டும் வெளியிடுங்கள் உறவுகளே!
திருமணத்திற்கு முன்னரான உடலுறவு சரியா அல்லது தவறா என்று வாதிடுவது இப் பதிவின் நோக்கமல்ல.
|
58 Comments:
கன்னித்திரை பற்றிய நல்ல அலசல்
பலர் தவறாக நினைக்கிறார்கள்.. நீங்கள் தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்
தெளிவான விளக்கம்
அருவா அருவா
சகோதரம் இது கிராமப் புறத்திற்கு மட்டுமே எப்போதும் சாத்தியமானது ஆகும் காரணம் HYMEN என அழைக்க்ப்படும் இச்சவ்வானது தற்கால பெண் பிள்ளைகளின் விளையாட்டுகளில் பங்கேற்றல், துவிச்சக்கரவண்டி செலுத்தல் போன்றவற்றால் கிழிவடைந்துவிடும்..
ஆனால் இது அண்டாண்டு காலம் தொடரப் போகும் ஒரு பிரச்சனை தான்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் நூறாவதுபதிவை திருடிய சுயநலக்காரி..
கற்ப்பு என்பது ஒழுக்கமே என்பதாக நினைக்கிறேன்....
அதற்கும் இந்த திரைக்கும் சம்பந்தம் என்று கூறுபவர்கள் சில சமூகத்தில் மட்டுமே!
குஷ்பூ அதிரடியா பேசித்தான் இதை சொதப்பிருச்சே...
சைக்கிள் ஓட்டினாலே முடிஞ்சிருதாம்
// எமது இலங்கையில் உள்ள சகோதர இனத்தவர்களான சிங்களவர்களிடமும்//
அவர்களை சகோதரர்கள் என்று பாவிக்கும் மனப்பான்மை இன்னும் தங்களைப்போன்றவர்களுக்கு உள்ளவரை மனிதநேயம் நீடூழி வாழும்.
கன்னித்திரை தொடர்பாக நல்ல தெளிவான விளக்கம் நண்பா
ஒரு பெண்ணின் கன்னித்திரை உடலுறவின் போது மட்டும் தான் பாதிக்கப்படுவதில்லை
பெண்கள் விளையாட்டுக்கள் , கடினமான வேலைகளை செய்யும் போதும் பதிக்கப்படுகின்றன
நல்ல கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் . தொடர்ந்து இது போன்ற பதிவுகளை உங்களிடம் எதிர்பார்கிறேன்
இந்த அறியாமை இன்னுமா இருக்கிறது..இப்போது படித்த மக்களிடையே ஓரளவு விழிப்புணர்வு வந்துவிட்டது..
முன்பெல்லாம் வயதுக்கு வந்தவடன் திருமணம் பேசி விடுவார்கள்.வெளியிலும் அனுப்பமாட்டார்கள்.இப்போது அப்படியல்ல! உடற்பயிற்சி மூலம் கிழிய வாய்ப்புள்ளது என்பதே உண்மை.
முன்னைய காலத்திலே இது தொடர்பாக ஒரு மூட பழக்கம் இருந்துள்ளது. ஆனால் கன்னித்திரை கிழித்தல் என்பது சாதாரண விடயம் தான் என்று மருத்துவ ரீதியாகவும் கூறப்பட்ட உண்மை. நான் வாழும் சமூகத்தில் இது தொடர்பான பிரச்சனையை கண்டதில்லை. ஆனால் சில கிராம புறங்களிலே இது இன்னமும் இருக்கலாம். சரியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தான் இதற்க்கான தீர்வு.
///ஆனால் தமிழர்களிடமும், தமிழ் ஆண்களிடமும் உள்ள மிக, மிக கெட்ட பழக்கம் என்ன தெரியுமா?சந்தேகப்படுவது/// நம் கூட பிறந்ததாச்சே ((((
///திருமணத்திற்கு முன்னரான உடலுறவு சரியா அல்லது தவறா என்று வாதிடுவது இப் பதிவின் நோக்கமல்ல.// பாஸ் அப்புறம் குஷ்பூ வுக்கு நடந்தது தான் உங்களுக்கும் நடக்கும் ...........ஹிஹிஹி
யாரும் கையில் எடுக்க தயங்கும் வித்தியாசமான பதிவோடு வந்துள்ளீர்கள். தொடருங்கள் ..........
//விஜய் படம் பார்த்த ரசிகர்கள் போல //
ஏன் இந்த கொலைவெறி....
இது நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவும் கூட....
// அவள் சைக்கிள் ஓடுவதால், விளையாட்டுக்களில் பங்கு பற்றுவதால், அல்லது நடனமாடுவதால் கன்னித் திரை கிளிவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.//
மிக மிக உண்மை....
இது பழைய பஞ்சாங்கம்!கருத்து சொல்ல வேண்டியவங்க ஒருத்தரைக்கூட காணோம்.இதற்குள்ள நீ முந்தி நான் முந்தின்னு பின்னூட்டம் மட்டும்:)
சர்ச்சையில் இறங்குவது என்றமுடிவா!வெளிநாடுகளில் இது சம்மந்தமாக யாரும் அலட்டுவது இல்லை இளைஞர் இடையே விழிப்புணர்வு வரவேண்டும்!
விழிப்புணர்வு செய்தி....
//இதே நிலமை எமது இலங்கையில் உள்ள சகோதர இனத்தவர்களான சிங்களவர்களிடமும் இன்று வரை நடை முறையில் இருக்கிறது. இஸ்லாமிய உறவுகளிடமும் இந்தப் பண்பாடு இன்றும், காணப்படுகின்றது//
அடப்பாவிங்களா உண்மையாவா? :-)
@சி.பி.செந்தில்குமார்
கன்னித்திரை பற்றிய நல்ல அலசல்//
நன்றிகள் சகோ.
விஜய் படம் பார்த்த ரசிகர்கள் போல சோகத்துடன் தான் இருப்பார்கள்.///
ஒரு சீரியசான பதிவிலும் என்ன ஒரு நக்கல்
@சி.பி.செந்தில்குமார்
பலர் தவறாக நினைக்கிறார்கள்.. நீங்கள் தெளிவு படுத்தி இருக்கிறீர்கள்//
நன்றிகள் சகோ, ஆனால் வழமையான வலைப் பதிவர்களின் வருகை என் வலைக்கு இன்று இப் பதிவின் மூலம் குறைந்து விட்டது.
நிறைய விடயங்கள் சொல்லுவீங்கள் என்று நினைத்தேன், ஆனால் ஒற்றை வரியில் எஸ் ஆகிட்டீங்களே.
@யாதவன்
தெளிவான விளக்கம்//
ஒற்றை வரியில் சொல்லி போட்டு எஸ் ஆகுறீங்களே, இது நியாயமா?
@விக்கி உலகம்
அருவா அருவா//
யாரை வெட்ட அருவா.
@♔ம.தி.சுதா♔
சகோதரம் இது கிராமப் புறத்திற்கு மட்டுமே எப்போதும் சாத்தியமானது ஆகும் காரணம் HYMEN என அழைக்க்ப்படும் இச்சவ்வானது தற்கால பெண் பிள்ளைகளின் விளையாட்டுகளில் பங்கேற்றல், துவிச்சக்கரவண்டி செலுத்தல் போன்றவற்றால் கிழிவடைந்துவிடும்..//
அதனைப் பதிவில் சொல்லியிருக்கிமில்ல.
@விக்கி உலகம்
கற்ப்பு என்பது ஒழுக்கமே என்பதாக நினைக்கிறேன்....
அதற்கும் இந்த திரைக்கும் சம்பந்தம் என்று கூறுபவர்கள் சில சமூகத்தில் மட்டுமே!//
ஆமாம் சகோ,
@ஆர்.கே.சதீஷ்குமார்
குஷ்பூ அதிரடியா பேசித்தான் இதை சொதப்பிருச்சே..//
நானும் விவகாரத்தில் மாட்டிக்க கூடாதுன்னு தான், எச்சரிக்கையுடன் ஒரு வரியை அழுத்தமாக எழுதியிருக்கிறேன்.
@! சிவகுமார் !
/ எமது இலங்கையில் உள்ள சகோதர இனத்தவர்களான சிங்களவர்களிடமும்//
அவர்களை சகோதரர்கள் என்று பாவிக்கும் மனப்பான்மை இன்னும் தங்களைப்போன்றவர்களுக்கு உள்ளவரை மனிதநேயம் நீடூழி வாழும்.//
பதிவிற்கு ஏதாவது தொடர்புள்ள விடயங்கள் சொல்லுவீங்க என்றால், இப்புடி பொதுக் கருத்தைச் சொல்லிப் போட்டு எஸ் ஆகிட்டீங்களே,
@Mahan.Thamesh
கன்னித்திரை தொடர்பாக நல்ல தெளிவான விளக்கம் நண்பா
ஒரு பெண்ணின் கன்னித்திரை உடலுறவின் போது மட்டும் தான் பாதிக்கப்படுவதில்லை
பெண்கள் விளையாட்டுக்கள் , கடினமான வேலைகளை செய்யும் போதும் பதிக்கப்படுகின்றன//
இதையும் நான் பதிவில் சொல்லியிருக்கிறேன் சகோ, ஆனால் நான் பதிவில் கேட்கும் விடயங்களுக்கு நீங்கள் விளக்கம் சொல்லவில்லையே!
@பிரபாஷ்கரன்
நல்ல கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் . தொடர்ந்து இது போன்ற பதிவுகளை உங்களிடம் எதிர்பார்கிறேன்//
நன்றிகள் சகோ.
@செங்கோவி
இந்த அறியாமை இன்னுமா இருக்கிறது..இப்போது படித்த மக்களிடையே ஓரளவு விழிப்புணர்வு வந்துவிட்டது..//
படித்த மக்களிடம் இப்படியான நிலமை இல்லைச் சகோ, ஆனால் படித்தவர்களிடமும் சந்தேகம் என்ற கொடிய நோய் இருக்கிறதே சகோ.
@shanmugavel
முன்பெல்லாம் வயதுக்கு வந்தவடன் திருமணம் பேசி விடுவார்கள்.வெளியிலும் அனுப்பமாட்டார்கள்.இப்போது அப்படியல்ல! உடற்பயிற்சி மூலம் கிழிய வாய்ப்புள்ளது என்பதே உண்மை.//
தற்போது நிலமை மாறியிருக்கிறது சகோ. ஆனாலும் ஒரு சிலர் சந்தேகப்பட்டு, தம் வாழ்க்கையினைச் சீரழிக்கிறார்களே
@கந்தசாமி.
முன்னைய காலத்திலே இது தொடர்பாக ஒரு மூட பழக்கம் இருந்துள்ளது. ஆனால் கன்னித்திரை கிழித்தல் என்பது சாதாரண விடயம் தான் என்று மருத்துவ ரீதியாகவும் கூறப்பட்ட உண்மை. நான் வாழும் சமூகத்தில் இது தொடர்பான பிரச்சனையை கண்டதில்லை. ஆனால் சில கிராம புறங்களிலே இது இன்னமும் இருக்கலாம். சரியான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தான் இதற்க்கான தீர்வு.//
நன்றிகள் சகோ.
@கந்தசாமி.
///ஆனால் தமிழர்களிடமும், தமிழ் ஆண்களிடமும் உள்ள மிக, மிக கெட்ட பழக்கம் என்ன தெரியுமா?சந்தேகப்படுவது/// நம் கூட பிறந்ததாச்சே ((((//
ம்...ம்...
@கந்தசாமி.
///திருமணத்திற்கு முன்னரான உடலுறவு சரியா அல்லது தவறா என்று வாதிடுவது இப் பதிவின் நோக்கமல்ல.// பாஸ் அப்புறம் குஷ்பூ வுக்கு நடந்தது தான் உங்களுக்கும் நடக்கும் ...........ஹிஹிஹி//
அது தெரிந்து தானே இப்பூடி எச்சரிக்கையினை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறேன்.
@கந்தசாமி.
யாரும் கையில் எடுக்க தயங்கும் வித்தியாசமான பதிவோடு வந்துள்ளீர்கள். தொடருங்கள் ..........//
எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான் காரணம் சகோ.
@MANO நாஞ்சில் மனோ
/விஜய் படம் பார்த்த ரசிகர்கள் போல //
ஏன் இந்த கொலைவெறி...//
ச்..சும்மா ஒரு தாமாஷிற்காக தான்.
@MANO நாஞ்சில் மனோ
இது நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவும் கூட....//
ஏதாவது கருத்தைச் சொல்லுறதை வுட்டிட்டு, ஒத்தை வரியில விழிப்புணர்வென்று சொல்லிட்டு ஓடுறீங்களே;-))
@ராஜ நடராஜன்
இது பழைய பஞ்சாங்கம்!கருத்து சொல்ல வேண்டியவங்க ஒருத்தரைக்கூட காணோம்.இதற்குள்ள நீ முந்தி நான் முந்தின்னு பின்னூட்டம் மட்டும்:)//
இந்த விடயங்கள் என்றால் யாருமே வாறாங்க இல்லையே...
@Nesan
சர்ச்சையில் இறங்குவது என்றமுடிவா!வெளிநாடுகளில் இது சம்மந்தமாக யாரும் அலட்டுவது இல்லை இளைஞர் இடையே விழிப்புணர்வு வரவேண்டும்!//
சகோ,நாம இப்போ உள் நாட்டை மட்டும் தான் இதிலை குறிப்பிட்டிருக்கிறோம். வெளிநாடுகள் பற்றி ஆராயும் அளவிற்கு போதிய தொடர்புகள், அறிவுகள் இல்லைச் சகோ.
@FOOD
நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு. உண்மைகள் அறிந்து கொண்டால், ஒருவருக்கும் துன்பமில்லை. பகிரிவிற்கு நன்றி.பல நூறு ஹிட்ஸ் பெற்று பல்லாயிரம் பேரை சென்றடைய வேண்ட்டும்.//
ஏதாவது கருத்துக்கள் சொல்லி விட்டு செல்லுவீங்க என்றால், வாழ்த்து மட்டும் சொல்லிட்டு எஸ் ஆகுறீங்களே.
@தமிழ்வாசி - Prakash
விழிப்புணர்வு செய்தி....//
நன்றிகள் சகோ.
@ஜீ...
//இதே நிலமை எமது இலங்கையில் உள்ள சகோதர இனத்தவர்களான சிங்களவர்களிடமும் இன்று வரை நடை முறையில் இருக்கிறது. இஸ்லாமிய உறவுகளிடமும் இந்தப் பண்பாடு இன்றும், காணப்படுகின்றது//
அடப்பாவிங்களா உண்மையாவா? :-)//
இது கூடத் தெரியாமலா..
ஹி..ஹி...ஹி...
@ரஹீம் கஸாலி
விஜய் படம் பார்த்த ரசிகர்கள் போல சோகத்துடன் தான் இருப்பார்கள்.///
ஒரு சீரியசான பதிவிலும் என்ன ஒரு நக்கல்//
ஹா...ஹா....
நன்றிகள் சகோ.
நல்ல வேளை தமிழகத்தில்
இந்த மடத்தனம் இல்லை
சமூக உணர்வுள்ள நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அருமையானப் பதிவு மிகவும் அவசியமான பதிவு சகோ.
கன்னித்திரை கிழிதல் பரிசோதனை தமிழகத்தில் பரவலாக இல்லாவிட்டாலும், சில ஊர்களில் இருப்பது உண்மையே. இதனால் என்னவோ தான் முதலிரவை பெண்வீட்டில் வைக்கும் நிலை வந்ததோ என்னவோ?
கன்னித்திரை கிழிதல் பரிசோதனை இழிநிலை சீன நாட்டிலும் காணப்படுகின்றது.
திருமணம் என்பது ஆணும், பெண்ணும் கற்போடு இணையும் புனித நிலை. ஆனால் பிற்காலத்தில் அப்புனிதம் பெண்ணுக்கு மட்டுமே என்ற நிலையாக்கிவிட்டார்கள்.
அது நிற்க. முதலிரவில் கன்னித்திரை குருதி வந்தப் பெண் உத்தமி எனவோ, வராத பெண் மோசமானவள் என்றோ அர்த்தமில்லை. கன்னித்திரை மீண்டும் கிழிய வைக்கக் கூட டெக்னிக் இருக்கு என ஒரு மருத்துவர் கூறியுள்ளார். அத்தோடு ஒரு பெண் ஏமாற்ற நினைத்தால் ஆணை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம். அப்படி இருக்க கன்னித்திரை கிழியாத, அல்லது குருதி வராத பெண் மோசமானவள் என எப்படி ஆண்கள் நினைக்க முடியும். இதை விட கேவலமான புத்தி யாருக்கும் வராது.
கன்னித்திரை என்பது உடலுறவு மட்டுமில்லாமல் உடல்பயிற்சி, ஓடுதல், விளையாடுதல் எனப் பல காரணங்களால் கிழிப் பட்டு விடுவதே உண்மை. அப்படியானால் அவர்கள் எல்லாம் என்ன மோசமான பெண்களா?
மணம் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலானது, புரிதல் அடிப்படையிலானது - உமது துணையின் மீது நம்பிக்கையோ, புரிதலோ ஏற்படாமல் என்ன மண்ணாங்கட்டிக்கு உங்களுக்கு கலியாணமும், முதலிரவும் .................. !!!!
அதற்குப் பேர் விபச்சாரம் தானே !!!
நடத்துங்க நண்பா
நண்பேன்டா- கடி..கடி...கடி.. இது செம காமெடி... -
http://tamilaaran.blogspot.com/2011/04/blog-post_4055.html
@சி.பி.செந்தில்குமார்
I agree.......
www.aagaayamanithan.blogspot.com
யாரும் கையில் எடுக்க தயங்கும் பிரச்சனையான வித்தியாசமான பதிவோடு வந்துள்ளீர்கள்.
குழந்தைப்பேறு இல்லாதவர்களை மலடி என்று வறுத்தெடுக்கும் கொடுமைதான் இருந்து வருகிறது என்று நினைத்தேன்.
இப்படியும் அவலங்கள் எல்லாம் இருக்கிறது என்பதை உங்கள் பதிவின் மூலமே நான் அறிகிறேன்.
வீட்டிலேயே அடைபட்டு கிடந்த காலத்திலும் பெண்கள் எத்தனையோ வன்மையான பணிகளைச் செய்து இருக்கிறார்களே.
பெண்கள் உடற்திறன் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தற்காலத்தில் இப்படியெல்லாம் சந்தேகப் பட்டால்... அவளின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
விழிப்புணர்வு தருவது தவிர வேறு வழி இல்லை.
இந்தப் பதிவின் மின்னஞ்சலைப் பார்த்து பலநாட்களாகியும் வரமுடியவில்லை. நான் தான் இந்தப் பதிவுக்கு பின்னூட்டமிடும் கடைசி பெண் பதிவராக இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் முதலும் கடைசியுமாக நான் இருப்பது... இது போன்ற விவாதங்களில் பங்கு பெறுவதற்குக்கூட பெண்கள் தயங்குகின்றார்கள் என்பது வேதனை.
இக்பால் செல்வன் said...
மணம் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலானது, புரிதல் அடிப்படையிலானது - உமது துணையின் மீது நம்பிக்கையோ, புரிதலோ ஏற்படாமல் என்ன மண்ணாங்கட்டிக்கு உங்களுக்கு கலியாணமும், முதலிரவும் .................. !!!! //
சரியாகச் சொன்னீர்கள். அஸ்திவாரமே இல்லாமல் கட்டடம் கட்டுவது போலத்தான்.
’நல்ல உயிர் நீயெனக்கு நாடியடி நானுனக்கு...’ இதெல்லாம் கனவாகி போகுமோ???
சுவாரசியமா படிச்சு பின்னூட்டமிட்டதில் சொல்ல வேண்டியதை கோட்டை விட்டாச்சு.
சமூக உணர்வுள்ள நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment