ரீயூசன் முடியும் நேரமும் வந்தது, பெண்கள் எல்லோரும் வகுப்பறையினை விட்டுக் கிளம்பிய பின்னர் தான் ஆண்கள் வெளியே போக முடியும் எனும் எங்களூர் ரியூசன் வழக்கப்படி, தன் பொறுமையினை, இந்தப் பாழாய்ப் போன ரியூசன் மாஸ்டர் செக் பண்ணுகிறார் என நொந்து கொண்டான் அருண்.
என்னடா மச்சான் யோசிக்கிறாய்?
இல்லையடா சுதன், எங்கடை கிளாஸிலை உள்ள பொட்டையளை முதலிலை போகச் சொல்லிப் போட்டு, பிறகெல்லே எங்களைப் போகச் சொல்லுறாங்கள். அது தான், இண்டைக்கும் அவளை மிஸ்ட் பண்ணிடுவேன் என்று நினைக்கிறேன். அதாண்டா மச்சான்.
‘’நீ சரியான லூசு மச்சான், உனக்கு மண்டையிக்கை ஒன்றும் இல்லையே? பொட்டையளை முன்னுக்கு விட்டிட்டு, பொடியங்களைப் பின்னுக்குப் போகச் சொல்லுறது ஏன் தெரியுமோ?
பொண்ணுங்களை றோட்டிலை யாரும் சேட்டை விடாதபடி பாதுகாத்து, வீடு வரைக்கும் பத்திரமாய்க் கொண்டு போய்ச் சேர்க்கிற சமூக சேவைப் பொறுப்பிற்கு எங்களை மாதிரி பொடியங்கள் இருகிறாங்கள் என்ற நம்பிக்கையில் தானே!
கவலையை விடடா. இன்றைக்கு நீ மிஸ்ட் பண்ணச் சான்சே இல்லைடா.
’’உனக்குப் பகிடி கூடிப் போச்சடா மச்சான். வாடா.. வாடா.. எல்லோரும் போயிட்டாளுங்க. இனி நாங்களும் வெளிக்கிடுவம் என்றவாறு அவசர அவசரமாக ஓடிப் போய் தன் லூமாலாச் சைக்கிளில் ஒரு கெந்தல் கெந்திக் காலைச் சீற்றுக்கு மேலாலை போட்டு பெடலை இறுக்கி உழக்கத்(மிதிக்க) தொடங்கினான் அருண்.
அவனுக்குப் பின்னால் சுதனும் போகிறான். இருவரும் கிரவல்(மண் றோட்டு) றோட்டின் உராய்விற்கு ஏற்றாற் போல வேகம் வேகமாக சைக்கிளை ஓட்டியவாறு சேஸிங்கில் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னால் கம்சிகாவும், சாதனாவும். கூப்பிடு தூரத்தில் தான் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கிட்டப் போய் இன்றைக்கு எப்படியாவது கம்சிகாவிடம் முடிவைக் கேட்பம் என்றவாறு... சைக்கிளை கொஞ்சம் இறுக்கி மிதிச்சு, அவள் அருகே அருண் போகவும்..........சுதன் கூப்பிடவும் சரியாக இருந்தது...
‘டோய் மச்சான்.......ஒருக்கால் நேர பாரனடா.. ’அண்ணையாக்கள்’ ஜீப்பிலை... வாறாங்கள் என்று....சொன்னது தான் தாமதம், சைக்கிள் காண்டிலைப் பற்றிய கை போன போக்குத் தெரியாதவனாய் சைக்கிளைக் கீழே போட்டு விட்டு... பக்கத்திலிருந்த வரப்பிற்குள் ஓடிப் போய் சிறு நீர் கழிப்பதற்காய் காற்சட்டைச் ’சிப்பைக் கழட்டினான் அருண்....
‘குசப்புகள்..........திருந்தவே மாட்டானுகள்....எனத் திட்டிய படி சொண்டுக்குள் ஒரு சிரிப்புடன் , தம் அருகே போய் கொண்டிருந்த ஜீப்பினைக் கடந்து சென்றார்கள் கம்சிகாவும், சாதனாவும்......!
’’பாலியாற்றின் பாலத்தினூடும்
கொத்தம்பியா குளத்தின்
வரப்புகளிலும்
உனக்காக ஓடி ஓடி(த்)
தேய்ந்து போனது
என் லுமாலாச் சைக்கிளின்
ரயர் மட்டுமல்ல........
என் உள்ளமும் தான்!
சொல் விளக்கம்:
*பகிடி- நக்கல், நையாண்டி
* வெளிக்கிடுவம்: புறப்படுவம்
*கெந்தல் கெந்துதல்-ஜம்ப் பண்ணி சைக்கிளில் ஏறுதல்.
*நேர-நேராகப் பார்த்தல்
*சைக்கிள் காண்டில்: சைக்கிள் கைப் பிடி
* ஒருக்கால்- ஒரு வாட்டி, அல்லது ஒரு தடவை
*அண்ணையாக்கள்- முன் ஒரு காலத்தில் எங்களூரில் அண்ணையாக்கள் என அழைக்கப்பட்ட போராட்டத்துடன் தொடர்புடையவர்கள்.
*லுமாலா சைக்கிள்: Lumala எனும் Brand இனைச் சேர்ந்த இலங்கையில் பாவனையில் உள்ள ஒரு சைக்கிள்.
*குசப்புகள் அல்லது கொசப்புகள்: குழப்படிகாரப் பொடியள், அல்லது Naughty boys.
|
72 Comments:
ம்... ஜமாஇங்க நிரூபன்
ம்..ஜமாய்ங்க நிரூபன்
இன்னும் விடயத்திற்கு வரவில்லையே தோழா ஆவல்விடுகிறது இல்லை!
ம்ம்ம்.. கலாய்க்கிறீங்க. கலக்குறீங்க போஸ்
சொல் விளக்கங்கள் மூலமாக நிறைய வார்த்தைகள் தெரிந்து கொள்கிறோம். பகிர்வுக்கு நன்றிங்க.
இலங்கைத்தமிழ் வாத்தியார் வாழ்க
only votes now. comments after!
அசத்தல், மீண்டும் பள்ளிப் பருவத்திற்கு அழைத்து சென்றிருக்கிர்கள்.
பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்துக்கொண்டேம்...கலக்கல் பதிவு...
கற்றுக்கொண்டேன்... கற்றுக்கொண்டேன்...'
இதே போல அசத்தலாய் தொடருங்கள் சகோ..
நல்லதொரு பதிவு
கதை நல்லாயிருந்தது.. புரியாத சில வார்த்தைகளுக்கு விளக்கம் அளித்ததற்கு நன்றி..
//அண்ணையாக்கள்- முன் ஒரு காலத்தில் எங்களூரில் அண்ணையாக்கள் என அழைக்கப்பட்ட போராட்டத்துடன் தொடர்புடையவர்கள்.//
விளக்கத்தில் பொதிந்திருக்கும் கருத்து அருமை அதுதான் நிஜம்
இப்படி பாதில கதைய முடிச்சா எப்படி?
நானும் வந்துட்டேனே....
//சொல் விளக்கம்:
*பகிடி- நக்கல், நையாண்டி
* வெளிக்கிடுவம்: புறப்படுவம்
*கெந்தல் கெந்துதல்-ஜம்ப் பண்ணி சைக்கிளில் ஏறுதல்.
*நேர-நேராகப் பார்த்தல்
*சைக்கிள் காண்டில்: சைக்கிள் கைப் பிடி
* ஒருக்கால்- ஒரு வாட்டி, அல்லது ஒரு தடவை
*அண்ணையாக்கள்- முன் ஒரு காலத்தில் எங்களூரில் அண்ணையாக்கள் என அழைக்கப்பட்ட போராட்டத்துடன் தொடர்புடையவர்கள்.
*லுமாலா சைக்கிள்: Lumala எனும் Brand இனைச் சேர்ந்த இலங்கையில் பாவனையில் உள்ள ஒரு சைக்கிள்.//
வித்தியாசமாக சூப்பரா ரசிக்கும் படியா இருக்குது மக்கா...
பதிவு நல்லா இருக்குங்க மாப்ள!
//இனி நாங்களும் வெளிக்கிடுவம் என்றவாறு அவசர அவசரமாக ஓடிப் போய் தன் லூமாலாச் சைக்கிளில் ஒரு கெந்தல் கெந்திக் காலைச் சீற்றுக்கு மேலாலை போட்டு பெடலை இறுக்கி உழக்கத்(மிதிக்க) தொடங்கினான் அருண்.//
சகோ!கொஞ்சுது தமிழ்!
நீங்க ரொம்ப குசப்பு:)
தலைப்பு கவிதைக்கு சொந்தம்!கதைக்கல்ல!
நான் நினைக்கின்றேன்.. இந்த பதிவில் கனக்க இடக்கல் அடக்கல்களை கையாளவேண்டிய தேவை உங்களுக்கு ஏற்பட்டுவிட்டது... இல்லாவிடின் ஏராளமாக வெளிவந்திருக்குமே :)
அருமையா சுவாரசியமா போகுது நிருபன்
எழுத்து திறமை கடி போடுது வசிபவரை
அதுவும் மண் மணக்கும் பாசிகள் வாசிக்க வாசிக்க மெய் சிலிர்க்குது
இளமைக்கால சம்பவங்கள் சுவை சேர்க்குது கதைக்கு
இது என்ன உண்மையா.? சரி அப்படியானால் இப்ப அந்த பொண்ணு என்ன பண்றாங்க.?
இது கற்பனையா.? இருக்காதுன்னு நினைக்கிறேன். இருந்தா மொட்டையா இருக்கு..
இதெல்லாம் வரிக்கு வரி விமர்சனம் பண்ண முடியாது.. ஹி ஹி.. மொக்கை வாங்குன பொடியன்ஸ்..
நிரு...உங்க வட்டார மொழியில் டீ உச்சரிப்பு ரீ யா...நேத்து என் இணைய இலங்கை சகோதரி ரீ குடிக்க போறேன்னு சொன்னாங்க ...ஒரு வேளை எழுத்து பிழையோனு நினைச்சேன்...இப்போ தான் உங்க வட்டார வழக்குன்னு தெரிஞ்சுகிட்டேன்..அட இதுவும் சுவாரஸ்யம் தான் நிரு...;)))
ஆஹா! கவிதையில கலக்கிட்டீங்க நிரூபன் .உள்ளம் தேய்ந்துபோவது புதுசு !
//காலைச் சீற்றுக்கு மேலாலை //
இதுக்கு என்ன அர்த்தம் நிரூபன் ? பதிவு நல்லா இருக்கு
இதோ நானும் வந்துட்டேன்...
ஹஹா அருமையான கதை...அசல் யாழ் மனம் வீசுகிறது நிருபன்..
நானும் இத்தகைய நிலைமைகளை(?)அனுபவித்தவன்..பார்த்தவன்..
கலக்கல்...
கொஞ்சம் லேட்.. சாரி பாஷு...
பதிவு நன்று.. சூப்பர்'ரா இருந்திச்சு... அந்த அருண் யாருன்னு சொல்லவே இல்லையே..?
உங்க ஸ்லாங் அட..அட..அட... கலக்கல் பாஸ்...?
நல்ல ஜாலியான கதை.
அவிட நீங்கள் T ஐ R என்றுதான் பாவிப்பியளோ ( ரியூசன், ரயர்)
விளக்கத்துக்குள்ளும் ஒரு கதை பொதிந்துள்ளதே!
@இரா.எட்வின்
ம்..ஜமாய்ங்க நிரூபன்//
நன்றிகள் சகோ.
@Nesan
இன்னும் விடயத்திற்கு வரவில்லையே தோழா ஆவல்விடுகிறது இல்லை!//
ஆகா..ஆகா.. இது ஒரு குறுங் கதை சகோ, ஆதலால் பல விடயங்களைச் சுருக்கி, சிறிய விடயப் பரப்பிற்குள் உள்ளடக்க வேண்டிய தேவை ஏற்பட்டு விட்டது.
நன்றிகள் சகோ.
@றமேஸ்-Ramesh
ம்ம்ம்.. கலாய்க்கிறீங்க. கலக்குறீங்க போஸ்//
நன்றிகள் சகோ. எல்லாம் உங்க ஆதரவு தான்.
@Chitra
சொல் விளக்கங்கள் மூலமாக நிறைய வார்த்தைகள் தெரிந்து கொள்கிறோம். பகிர்வுக்கு நன்றிங்க.//
சொல் விளக்கம் இல்லை என்றால் பின்னாடி வாறவங்க கொன்னே போடுவாங்க. அதான்.
நன்றிகள் சகோ.
@சி.பி.செந்தில்குமார்
இலங்கைத்தமிழ் வாத்தியார் வாழ்க//
ஆய் சகோவின்ரை வாயிற்கு சர்க்கரை அள்ளிப் போடனும், நன்றி சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
only votes now. comments after!//
இப்புடிச் சொல்லிட்டு எஸ் ஆகினால் எப்பூடி. இந்தக் கதையுடன் தொடர்புடைய பிரதான நபர் தன் இளமைக் காலத்தை மறைத்து எஸ்கேப் ஆகலாமா?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
அசத்தல், மீண்டும் பள்ளிப் பருவத்திற்கு அழைத்து சென்றிருக்கிர்கள்.//
நன்றிகள் சகோ, வாத்தியார் இப்பவும் பள்ளிப் பையனாகவே காற் சட்டையுடன் திரிவதாக அறிந்தேன், உண்மையா சகோ;-))
@சிநேகிதி
பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்துக்கொண்டேம்...கலக்கல் பதிவு...//
நன்றிகள் சகோ.
@பாரத்... பாரதி...
கற்றுக்கொண்டேன்... கற்றுக்கொண்டேன்...'//
இனிமேல் இங்கே கற்றுக் கொள்ள வருவோருக்கு தனிப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்;-))
ஹி...ஹி...
நன்றி சகோ.
@பாரத்... பாரதி...
நல்லதொரு பதிவு//
நன்றிகள் சகோ.
@பதிவுலகில் பாபு
கதை நல்லாயிருந்தது.. புரியாத சில வார்த்தைகளுக்கு விளக்கம் அளித்ததற்கு நன்றி..//
என் பதிவைப் பொறுமையோடு படித்துக் கொண்டிருந்த உங்களுக்கும் நன்றிகள் சகோ.
@Mathuran
விளக்கத்தில் பொதிந்திருக்கும் கருத்து அருமை அதுதான் நிஜம்//
நன்றி சகோ...
@பன்னிக்குட்டி ராம்சாமி
இப்படி பாதில கதைய முடிச்சா எப்படி?//
சகோ இது ஒரு குறுங் கதை சகோ. கதையின் முடிவு, கதையே இவ்வளவு தான்,
நன்றிகள் சகோ.
@பன்னிக்குட்டி ராம்சாமி
இப்படி பாதில கதைய முடிச்சா எப்படி?//
சகோ இது ஒரு குறுங் கதை சகோ. கதையின் முடிவு, கதையே இவ்வளவு தான்,
நன்றிகள் சகோ.
@MANO நாஞ்சில் மனோ
வித்தியாசமாக சூப்பரா ரசிக்கும் படியா இருக்குது மக்கா...//
எல்லாமே உங்கள் ஆசிர்வாதங்கள் தான் சகோ..ஹி..ஹி...
@விக்கி உலகம்
பதிவு நல்லா இருக்குங்க மாப்ள!//
நன்றிகள் மாமா;-))
@ரஹீம் கஸாலி
nice//
thanks.
@ராஜ நடராஜன்
சகோ!கொஞ்சுது தமிழ்!//
இந்த வசனத்தை, நான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே;-))
நன்றிகள் சகோ.
@ராஜ நடராஜன்
நீங்க ரொம்ப குசப்பு:)//
நிஜமாவா. நன்றிகள் சகோ,
@ராஜ நடராஜன்
தலைப்பு கவிதைக்கு சொந்தம்!கதைக்கல்ல!//
இப்படியெல்லாம் கூர்ந்து கவனிக்கிறீங்களே, கதையிற்கு ஏற்றால் போல கவர்ச்சியாக இருக்கட்டுமே என்று தான் இத் தலைப்பை வைத்தேன்.
@FOOD
சொல் விளக்கங்கள் அருமை. புதிதாய் பல அர்த்த்ங்கள் அறிந்திட உதவிற்று.//
நன்றிகள் சகோ.
@Jana
நான் நினைக்கின்றேன்.. இந்த பதிவில் கனக்க இடக்கல் அடக்கல்களை கையாளவேண்டிய தேவை உங்களுக்கு ஏற்பட்டுவிட்டது... இல்லாவிடின் ஏராளமாக வெளிவந்திருக்குமே :)//
அவ்....அவ்....அவ்...
அஃதே...அஃதே...
ஆமாம் சகோ, குறுங் கதையாக இதனை எழுதுவோம் என்பதனால் தான் இப்படியொரு சுருக்கம். இல்லை என்றால் நிறைய விடயங்களைச் சொல்லியிருக்கலாம்.
அனுபவசாலிகளுக்குத் தானே உள்ளடக்கம் தெரியும்;-))
ஹி..ஹி...
@யாதவன்
அருமையா சுவாரசியமா போகுது நிருபன்
எழுத்து திறமை கடி போடுது வசிபவரை
அதுவும் மண் மணக்கும் பாசிகள் வாசிக்க வாசிக்க மெய் சிலிர்க்குது
இளமைக்கால சம்பவங்கள் சுவை சேர்க்குது கதைக்கு//
நன்றிகள் சகோ.
@தம்பி கூர்மதியன்
இது என்ன உண்மையா.? சரி அப்படியானால் இப்ப அந்த பொண்ணு என்ன பண்றாங்க.? //
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. அந்தப் பொண்ணுங்க என்ன பண்ணுறாங்க.. வெரி இம்போர்ட்டன் கேள்வி...ஏன் பொருத்தம் பார்ப்பதற்காக தங்களின் புகைப்படத்தையும், சாதகத்தையும் அனுப்ப போகிறீர்களோ?
@தம்பி கூர்மதியன்
இது கற்பனையா.? இருக்காதுன்னு நினைக்கிறேன். இருந்தா மொட்டையா இருக்கு..//
நிஜம் என்பதால் நிறைய விடயங்களை மறைச்சிருக்கிறேனாம்...;-))
ஹி..ஹி..
@தம்பி கூர்மதியன்
இதெல்லாம் வரிக்கு வரி விமர்சனம் பண்ண முடியாது.. ஹி ஹி.. மொக்கை வாங்குன பொடியன்ஸ்..//
ஒரு சில வேளைகளில் இப்படியான சங்கடங்களில் மாட்டுவது வீரனுக்கு அழகு தானே.. முத வாட்டி பேச முடியலை என்றா வுட்டுடவா போறம்?
அடுத்த வாட்டி ட்ரை பண்ணிட மாட்டம்;-))
@ஆனந்தி..
நிரு...உங்க வட்டார மொழியில் டீ உச்சரிப்பு ரீ யா...நேத்து என் இணைய இலங்கை சகோதரி ரீ குடிக்க போறேன்னு சொன்னாங்க ...ஒரு வேளை எழுத்து பிழையோனு நினைச்சேன்...இப்போ தான் உங்க வட்டார வழக்குன்னு தெரிஞ்சுகிட்டேன்..அட இதுவும் சுவாரஸ்யம் தான் நிரு...;)))//
ஆமாம் சகோதரி, எங்கள் மொழியில் உள்ள இந்த ‘ரி’ றீ வேறுபாடுகள் காரணமாகத் தான் மண் வாசனையுடன் ஒரு சில பதிவுகளை எழுதும் போது தமிழக உறவுகளுக்குப் புரியாமற் போய் விடுகின்றன.
'T' இனை ஆங்கிலத்தில் ரி என்று அழைப்பது போலத் தான் நாங்களும் அழைப்போம்.
உதாரணத்திற்கு
Tuition centre: ரியூசன் சென்ரர்
Tea: ரீ
Tube: ரியூப் என்று தான் பேசுவோம்.
இதே போல ‘R' வரிசை எழுத்துக்களையும் உங்களுக்குப் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன்.
Register: றெஜிஸ்டர்
Rape: றேப்
Raw: றோ
இப்போது உங்களுக்கு எங்கள் உச்சரிப்புப் பற்றிக் கொஞ்சம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நன்றிகள் சகோ.
@shanmugavel
ஆஹா! கவிதையில கலக்கிட்டீங்க நிரூபன் .உள்ளம் தேய்ந்துபோவது
புதுசு !//
நன்றிகள் சகோ. பல ஆசைகள் நிறைவேறாமல் இருந்தால் உள்ளம் காலப் போக்கில் தேய்து விடும் தானே..
ஹி...ஹி..
@எல் கே
//காலைச் சீற்றுக்கு மேலாலை //
இதுக்கு என்ன அர்த்தம் நிரூபன் ? பதிவு நல்லா இருக்கு//
ஒரு வசனத்தை தவற விட்டு விட்டேனே’-))
காலைச் சீற்றின் மேற் பக்கமாகப் தூக்கிச் சைக்கிள் பெடலில் வைத்து மிதித்துச் சைக்கிள் ஓடுவது.
@மைந்தன் சிவா
ஹஹா அருமையான கதை...அசல் யாழ் மனம் வீசுகிறது நிருபன்..
நானும் இத்தகைய நிலைமைகளை(?)அனுபவித்தவன்..பார்த்தவன்..
கலக்கல்...//
உஸ்...சத்தம் போடாதேங்கோ. பிரதேசவாதம் கதைக்கிறம் என்று யாராச்சும் சண்டைக்கு வந்திடப் போறாங்க;-))
நன்றிகள் சகோ.
@சரியில்ல.......
கொஞ்சம் லேட்.. சாரி பாஷு...//
இல்லைப் பரவாயில்லை வாங்க சகோ.
@சரியில்ல.......
பதிவு நன்று.. சூப்பர்'ரா இருந்திச்சு... அந்த அருண் யாருன்னு சொல்லவே இல்லையே..?
உங்க ஸ்லாங் அட..அட..அட... கலக்கல் பாஸ்...?//
நம்ம ஓட்ட வடை தான் அருண் சகோ.
நன்றிகள் சகோ.
@செங்கோவி
விளக்கத்துக்குள்ளும் ஒரு கதை பொதிந்துள்ளதே!//
ஆமாம் சகோ.. அக் கதையினை இலகுவில் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாது சகோ.
நல்ல கதை, நிருபன். மலரும் நினைவுகளோ???? அந்தக் காலம் திரும்ப வராது. பல நாட்களின் பின்னர் இலங்கைத் தமிழில் ஒரு கதை படிச்சாச்சு. நன்றி.
பழைய பதிவுகள் இப்போதான் படிக்கிறேன் தாமதத்திற்கு வருந்துகிறேன் நண்பா
@vanathy
நல்ல கதை, நிருபன். மலரும் நினைவுகளோ???? அந்தக் காலம் திரும்ப வராது. பல நாட்களின் பின்னர் இலங்கைத் தமிழில் ஒரு கதை படிச்சாச்சு. நன்றி//
ஆமாம், சகோ மலரும் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் முயற்சியும் தான் இது, நன்றிகள் சகோ.
@ஆர்.கே.சதீஷ்குமார்
பழைய பதிவுகள் இப்போதான் படிக்கிறேன் தாமதத்திற்கு வருந்துகிறேன் நண்பா//
இல்லைச் சகோ, உங்களின் வேலைப் பளு எனக்கு நன்றாகவே தெரியும் சகோ. ஆறுதலாகவே நீங்கள் படிக்கலாம், உங்களின் வருகைக்கு நன்றிகள்.
முன் ஒரு காலத்தில்
Post a Comment