கருமமே கண் எனும் வாக்கிற்கமைவாக, இன்றைக்கு எப்படியாவது பட்டம் கட்டி, ஒட்டி, ஏத்தித் தான் தீருவேன் எனும் சபதத் தோடிருந்த சுதன், தாயின் கட்டளைக்குக் கீழ்ப் படிந்தவனாய், றோட்டினை நோக்கி விரைகிறான்.
''டோய் ஜிம்மி........ஏன் குலைக்கிறாய், இஞ்சை வா.... வா.....எனத் தனது அன்பு நாயினைத் தடவித் தன் இரு கைகளிலும் தூக்கி வைத்துக் கொண்டு, வீட்டை நோக்கி வரும் சுதன், ‘அம்மா.....அம்மா, நாய் வந்து றோட்டைப் பார்த்துக் குலைக்கேல்லை, அது எங்கடை கிணற்றடியைப் பார்த்துத் தான் குலைக்குது, பக்கத்துக் காணியிக்கை இருக்கிறதுக்காய் யாரோ ரெண்டு மூன்று பேர் ’லாண்ட் மாஸ்ரரிலை(Land Master) சாமான் கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்துத் தான் ஜிம்மி குலைச்சது’’
எனக் கூறி முடித்து விட்டு, ’’ஜிம்மி சும்மா கண்ட படி குலைச்சுச் சத்தம் போடக் கூடாது’’ என ஜிம்மியின் தலையினைத் தடவி வீட்டு ‘விறாந்தையினுள்(வராந்தா) நாயினை இறக்கி விட்டு, மீண்டும் தனது பட்டம் கட்டும் வேலையில் மும்முரமாக ஈடுபடத் தொடங்குகிறான்.
பாக்கியம், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் நிலம் விழுங்கும் பூதங்களாகப் புறப்பட்ட ஊர் விழுங்கிப் பேய்களின் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாகத் தனது சொந்த ஊரான பலாலியிலிருந்து கணவன் சிவராமன், மற்றும் பிள்ளைகளான சுதன், செழியன், லக்ஸிகா ஆகியோருடன் இடம் பெயர்ந்து, சாவகச்சேரியில் உள்ள ஓர் தெருவோரக் காணியினுள் காலமிட்ட சாபம் எனும் போக்கில் கால் தெறிக்க ஊரை விட்டு ஓடி வந்த களைப்பு மாறாதவர்களாய், மீண்டும் தன் சொந்த ஊரிற்குப் போய் வாழுவேன் எனும் ஏக்கங்களோடு, இலவு காத்த கிளியாய் கொட்டில் வீடொன்றினுள் வாழ்ந்து கொண்டிருக்கும், அடுக்களையுடனும், வீட்டின் அன்றாடக் கடமைகளோடும் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத் தலைவி.
இராணுவம், பலாலி, காங்கேசன் துறை, தையிட்டி, மயிலிட்டி முதலிய பகுதிகளை ஆக்கிரமித்த போது தங்கள் கையில் அகப்பட்ட பொருட்களுடன் உயிரைப் பாதுகாப்பதற்காக இடம் பெயர்ந்து ஊரை விட்டு, ஓடிவந்து, வறுமையின் பிடியில், ஊரை, ஊரவர்களை, உறவினர்களைப் பிரிந்த சோகத்துடன் கொட்டில் வீட்டில் தங்கள் வாழ்க்கையினைத் தொடங்குகிறார்கள் பாக்கியம், சிவராமன் தம்பதியினர்.
பரந்து விரிந்திருந்த விவசாய நிலமும், ஏவல் செய்யக் கூலியாட்களும் என வாழ்ந்திருந்த வாழ்வை, அழகான வீட்டை, கோயிலை இழந்த சோகம் அப்போது பாக்கியம், சிவராமன் தம்பதிகள் வாழ்வில் தொடர்ந்த ஆறாத் துயராய் கண்களில் அடிக்கடி நீர்த் திவலைகளை வரச் செய்த படியிருந்தது.
விவசாய வேலைகளைக் கவனிக்க ஏவலாளர்களும், அந்த ஏவலாளர்கள் ‘வெள்ளாளன்’ வெள்ளாடிச்சி’ எனப் பாக்கியத்தையும், சிவராமனையும் அழைப்பதும் அந் நாளில் இவர்களுக்கு ஒரு பெருமிதத்தைத் தந்திருக்க வேண்டும்.
கீழ்ச் சாதி மக்களுக்கு இந்த வெள்ளாளச் செருக்கின் காரணமாய், வீட்டின் உட் புறத்தினுள் அனுமதி இல்லை எனும் இறுக்கமான சாதிப் பிடிப்புக் கொள்கை காரணமாக; வாசலில் இருந்து ‘வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது’ போன்ற உணர்வுடன்; தம் எதிர்காலம் ஏன் இப்படி ஆனது எனச் சிந்திக்கத் தெரியாத அன்றாடங் காய்ச்சிகளினது கடின உழைப்பினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, வாழ்க்கையினை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் தான் இந்தச் சிவராமன், பாக்கியம் தம்பதிகள்.
தம் திமிர் பிடித்த வெள்ளாள வாழ்வு’ இடப் பெயர்வால் சிதைந்து போன கவலையில் அயலவர்களின் உதவியோ, அரசாங்கத்தின் உதவியோ எதுவுமற்று, சாவகச்சேரியில் தெருவோரக் காணியொன்றில் கொட்டில் வீட்டில் தமது பிள்ளைகளுடன் தம் வாழ்வைத் தொடங்குகிறார்கள் சிவராமனும், பாக்கியமும்.
சிவராமனும், பாக்கியமும் தங்கள் வாழ்க்கையினை மீளத் தொடங்கிய சிறிது காலத்தில், பாக்கியத்தின் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பற்றிமா, தன் ஆசை மகனான காந்தன் போராட்டத்தில் இணைந்த துயர் தாங்காதவளாய் நாள் தோறும் தன் அன்பு மகனை எண்ணிய படி வாழ்கிறாள்.
பற்றிமாவின் தனிமையினை நீக்கும் வகையில்; பாக்கியம், சிவராமன் குடும்பம் ஆதரவாய் இருக்கவில்லை எனும் காரணத்தால்,
தன் வீட்டினை அவ் ஊருக்குப் புதிதாக வந்த ’கிளார்க்’ கோவிந்தனின் பராமரிப்பில் தற்காலிகமாக விட்டுப் பற்றிமா தன் மருமகள் வீட்டை நோக்கிப் போகிறாள்.
பற்றிமாவின் வீட்டினுள் கோவிந்தனும், பொன்னம்மாவும், தமது பிள்ளைகளான நித்தி, சுரேஷ் உடன் குடியேறுகிறார்கள்.
பாக்கியத்தின் மனதிற்குள் இச் சம்பவங்கள் எல்லாம் ஒரு குழப்ப நிலையினைத் தோற்று வித்தது. பற்றிமா ஆச்சி ’கோவிய’(ஈழத்தில் உள்ள ஒரு சாதியினர்) ஆட்கள் என்ற காரணத்தால் தானே நான் அவாவோடை பழகமால் இருந்தனான். சீ.....இனிமேலும் இப்படி இருக்கக் கூடாது, அவசர ஆபத்திற்கு, ஏதாவது ஒன்று நடந்திட்டால், சொந்தக் காரரும்(உறவினர்களும்) இல்லாத இடத்தில் அயலவர்கள் தான் உதவியாய் இருப்பார்கள். ஆகவே, இப்ப புதுசாக் குடி வந்த ஆட்களுடன் கண்டிப்பாய்ப் போய்ப் பேசியேஆக வேண்டும் எனச் சுய நலத்துடன் தன் உள்ளுணர்வை மறைத்துச் சிந்திக்கிறாள்.
’’வீட்டுக்காரர், வீட்டுக் காரர், உங்கடை நாயை ஒருக்கால் பிடியுங்கோ, எனக் குரலெழுப்பிய படி, வீட்டிற்கு குடி வந்த முதல் நாளே, பொன்னம்மா, பாக்கியத்தின் வீட்டுப் படலையினை(வீட்டுக் கேற்றினை) குசலம் விசாரிப்பதற்காய்த் தட்டுகிறாள்,
‘நாய் கட்டி, இருக்குது, வாங்கோ, வாங்கோ என இன் முகத்துடன் வரவேற்ற பாக்கியம், தன் கொட்டில் வீட்டுக் குந்தில்(கொட்டில் வீட்டின் சிறிய சுவரில்) பொன்னம்மாவை இருக்கச் சொல்லி விட்டு, நலம் விசாரிக்கத் தொடங்குகிறாள்.
பாக்கியம் தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் விபரிக்கத் தொடங்குகிறாள். பொன்னமா, தான் பிறந்தது, இலங்கையின் மத்திய மலை நாட்டில் உள்ள ஹட்டன் டிக்கோயா, என்றும் பின்னர் மலை நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இடம் பெயர்ந்து வவுனியாவில் இருந்ததாகவும், தற்போது தான் யாழ்ப்பாணத்திற்கு வந்ததாகவும் கூறினாள்.
எப்படியாவது இவையள்(இவர்கள்) என்ன சாதி என்று அறிஞ்சு போட வேணும், எனத் திட சங்கற்பம் பூண்டவளாய் பாக்கியம் பொன்னம்மாவைக் குறுக்கு விசாரணை செய்யத் தொடங்குகிறாள்.
பாக்கியம் பொன்னம்மாவைப் பார்த்து;
உங்களுக்கு இங்கை சொந்தக்காரர் யாராவது இருக்கிறார்களா?
பொன்னம்மா, இல்லை என்று பதிலளிக்கிறாள்.
அப்ப உங்களுக்குப் பற்றிமா ஆச்சி சொந்தமே?
அதற்கும் இல்லை என்றே பதிலுரைத்தாள் பாக்கியம்......
’’சீ......கடவுளே, ஏன் நான் இப்படி? எல்லோரும் மனிதர்கள் தானே, இவளிட்டையெண்டாலும் சாதியை மறைத்துப் பழக வேணும் என பாக்கியம் மனதினுள் நினைக்கிறாள்.
ஆனால் மனதினுள் வெள்ளாளப் பேய் தலை விரித்தாட,
‘அப்ப நீங்கள் எஸ்டேட்(Estate) ஆட்க்களே...........................என, மனதை விட்டுக் கேட்டே விட்டாள்.
இப்படி ஒரு அஸ்திரத்தை, அதுவும் குடி வந்த முதல் நாளே பொன்னம்மா எதிர்பார்த்திருக்க மாட்டாள்.................
பொன்னம்மா, கண்கள் கலங்கியவளாய், அதனை வெளிக் காட்டாதவளாய், ஓம்.......நாங்கள் எஸ்டேட் தான்...........எனத் தரையினைப் பார்த்து, பாக்கியத்தின் முகம் பார்க்காதவளாய் பதில் சொல்லுகிறாள்.
‘நீங்கள் எஸ்டேட் என்றாலும் உங்கடை தமிழ் தெளிவாகத் தானே இருக்கிறது. ‘எங்கடையாட்கள் பேசுகிற மாதிரிச் சுத்தத் தமிழ் தானே பேசுறீங்கள்?? எனப் பாக்கியம் நாசூக்காக, பொன்னம்மாவின் மனதினைத் தேற்றுவது போலப் பூசி மெழுகினாள்.
’’உங்கடை அவர்(கணவன்) என்ன செய்கிறார் எனப் பாக்கியம் கேட்டாள்,
‘’அவர் வந்து சாவகச்சேரிச் சந்தியிலை உள்ள கவுன்சிலிலை ‘கிளார்க்’(எழுது வினைஞர்) ஆக இருக்கிறார் எனப் பொன்னம்மா பதிலளித்தாள். அப்ப நீங்கள் படிச்ச ஆட்கள் தான்........ என்ன?
’’சீ.......அப்படியெல்லாம் இல்லை.. என்றாள் பொன்னம்மா.
’’உங்களுக்குத் தேத்தண்ணி போட்டுத் தரலாம் தான், ஆனால் அடுப்பு(சமையல் செய்யும் இடம்) பற்ற வைக்க, தீப் பெட்டி பொட்டி இல்லை. இவர் சைக்கிள் கடையாலை வரும் போது தான் வாங்கிக் கொண்டு வருவார்........குறை நினைக்காதேங்கோ,(don't take serious) எனத் தன் வெள்ளாளப் புத்தியினால், ''தாழ்ந்த சாதிக்கு தேநீர் கொடுக்கப் பழைய குவளை இல்லையே எனும் உண்மையினை மறைக்க முடியாதவளாய் நொண்டிச் சாட்டுச் சொல்கிறாள் பாக்கியம்.
பாக்கியம்..........அப்ப நான் வெளிக்கிடப் போறேன். உங்களைச் சந்தித்தது ரொம்பச் சந்தோசம், பிள்ளையளுக்கு சமைக்க வேணும் எனக் கூறி விட்டு, நடக்கத் தொடங்குகிறாள் பொன்னம்மா.
தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய பொன்னம்மாவை வழி மறித்த பாக்கியம், ’’பொன்னம்மா உங்களுக்கு எத்தினை வயசிருக்கும்?
''ஏன் கேட்கிறீங்கள் பாக்கியம்?
’’இல்லைச், சும்மா ஒரு இதுக்குத் தான் கேட்கிறன்........
‘’எனக்கு முப்பத்திரண்டு வயசு, ஓ..........
’’உங்களுக்கு முப்பத்திரண்டே, எனக்கு முப்பந்தைந்து வயசு எனத் தான் கேட்க வந்த விடயத்தை உள் மனதினுள் மறைத்தபடி போலியாகப் புன்னகைக்கிறாள் பாக்கியம்.
பொன்னம்மா, நீங்கள் இனிமேல் என்னை......................................
பாலுறவு தொடரும்...............
இது ஈழத்தில் இடம் பெற்ற உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறுகதையாகும், இதில் வரும் கதா பாத்திரங்கள் மட்டும் கற்பனையே!
இச் சிறுகதை பற்றிய உங்களின் ஆக்கபூர்வமான உள்ளக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர் பார்க்கிறேன்.
|
76 Comments:
என்ன உண்மை சம்பவம்.? படிச்சிட்டு வர்றேன்..
தலைப்பு வில்லங்கமா இருக்கு... வரேன்..
தங்களின் தமிழ் புரிந்துகொள்ள சற்று கடினமாக இருக்கிறது.
யதார்த்தமான சிறுகதை...
//யதார்த்தமான சிறுகதை.//
படிக்கவே இல்லையோ.!! இது தொடர்கதை..
இக்கதையினை எடுத்து ஒரே மூச்சில் எழுதவில்லை.. இரண்டு, மூன்றாக பிரிவில் உட்காந்து எழுதியிருக்குறீர்கள்..
முதல் பாதி எழுத்து நடைக்கும் பிற்பாதி எழுத்து நடைக்கும் வித்யாசம் இருக்கு..
ஆரம்பிக்கும் போது மிகவும் உணர்ச்சிகரமாகவும் பின்னர் கதையாக பாவித்தும் எழுதியிருக்கின்றீர்..
எழுத்து நடை நன்று..
அதிகமாக இலங்கை சார்ந்த ஊர்கள் வருவதால் உள்ளாற முடியவில்லை..
பரீட்சையம் இல்லாத ஊர்களை கேட்கும்போது ஒரு விலகல் ஏற்படுகிறது..
பின்பாதியில் அரசியல் நக்கல்கள் கதையின் வீரியத்தை குறைக்கிறது..
சாதி, சாதி சார்புடைய கதைகளை நான் படிப்பதில்லை..
ஆனந்த விகடனில் வெளி வரவேண்டிய சிறுகதை...
அருமையா இருக்கு மக்கா வாழ்த்துகள்...
ஆனந்த விகடனில் வெளி வரவேண்டிய சிறுகதை...
அருமையா இருக்கு மக்கா வாழ்த்துகள்...
மண்ணின் உள்ளீடுகள் பற்றி உங்களைப் போன்றவர்கள் சொல்வதே புரிதலுக்கு உதவும்.
ம்ம்ம்...நிரூ...ஸ்டார்ட் மியூசிக்.
அரசியல்,சாதிசமயமெல்லாம் போட்டுக் கிளிபடப்போகுது எண்டு நினைக்கிறன்.
மதி சொன்னமாதிரி சிலேடை சொல்ல வரேக்க கதை சோர்வாகுது.
தலையங்கம் வில்லங்கமா வேணுமெண்டு வச்சிருக்கீங்கபோல.
கதை பலகோணங்களில் தொடங்கி எங்கேயோ ஒண்டு சேரப்போகுது.
இன்னும் விறுவிறுப்பாகுமெண்டு நினைக்கிறன் !
ஓரு முடிவோடு தொடங்கியுள்ளீர்கள் அடிப்படை சமூக கட்டுமானத்தை சீர்திருத்த வெளிக்கிட்டீங்க எழுத்துத்துனையுடன் சாதியம்,போர்க்கால நிலை இடப்பெயர்வு ,ஊழல் ,தனிமனித சாடல்கள் காத்திரமான நாவல் வாசிக்க காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் ! இடையில் செங்கையாழியான் நாவல் ஞாபகம் வருகிறது அதை முறியடிப்பீர்கள் என்ற நம்பிக்கையுண்டு இடையில் ஆங்கில வாடையடிக்கிறது பாத்திர வார்ப்புகளின் இயல்பை மீறும்போல் உள்ளது கவனிக்கவும் நண்பரே! மீண்டும் வாழ்த்துக்களுடன்.
vanthuten
நடுநடுவே உள்ள அரசியல் தெளிப்புகள் சிறுகதை அனுபவத்தை சிதறடிக்கிறது சகோதரம்.தொடருங்கள்
நடை நல்லாருக்கு
@தம்பி கூர்மதியன்
என்ன உண்மை சம்பவம்.? படிச்சிட்டு வர்றேன்..//
உண்மையாக நடந்தது என்றால் உண்மைச் சம்பவம் இல்லாமல் நிஜக் கதையா;-)))
@!* வேடந்தாங்கல் - கருன் *!
தலைப்பு வில்லங்கமா இருக்கு... வரேன்..//
அப்போ நீங்கள் தலைப்பை நம்பியா என்றீ ஆகியிருக்கீங்க........
@!* வேடந்தாங்கல் - கருன் *!
தங்களின் தமிழ் புரிந்துகொள்ள சற்று கடினமாக இருக்கிறது.
யதார்த்தமான சிறுகதை..//
சகோ, புரிந்து கொள்ளக் கடினமான தமிழ் என்று ஒரு அடை மொழி கொடுக்கும் நீங்கள், எப்படி யதார்த்தமான சிறுகதை என்று சார்ட்டிபிக்கேற் கொடுக்க முடியும்?
குழப்புதே..............
@தம்பி கூர்மதியன்
//யதார்த்தமான சிறுகதை.//
படிக்கவே இல்லையோ.!! இது தொடர்கதை..//
சகோ.........ஹா..........
நம்ம ஸிமார்ட் சிஸ்டம் இந்த நேரம் சிலிப்பிங் என்று நினைக்கிறேன்;-))
@தம்பி கூர்மதியன்
இக்கதையினை எடுத்து ஒரே மூச்சில் எழுதவில்லை.. இரண்டு, மூன்றாக பிரிவில் உட்காந்து எழுதியிருக்குறீர்கள்..//
இல்லைச் சகோதரம், கதையினை ஒரே மூச்சில், உட்கார்ந்து, கொஞ்சம் நேரம் யோசித்து, கதிரையை விட்டு எழும்பாது எழுதினேன்.
//முதல் பாதி எழுத்து நடைக்கும் பிற்பாதி எழுத்து நடைக்கும் வித்யாசம் இருக்கு..//
முதல் பாதியில் இயற்கை வரண்ணைகள், ஊர் பற்றிய குறிபுக்களையும் பிளக் அண்ட் வைற் படமாக கொடுத்திருக்கிறன். இரண்டாம் பாதியில் கலர் படமாக நடை முறை விடயங்களுக்கு, கதை நிகழ் களத்திற்கு வந்திருக்கிறேன். அது தான் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு.
//ஆரம்பிக்கும் போது மிகவும் உணர்ச்சிகரமாகவும் பின்னர் கதையாக பாவித்தும் எழுதியிருக்கின்றீர்..//
ஆரம்பிக்கும் போது... கதையை இலகு நடையில் நகர விட்டிருக்கிறேன், பின்னர் நானே கதையினைச் சொல்வது போல உள்ளிருந்து எழுதியிருக்கிறேன்.
சரியாகத் தான் அலசியிருக்கிறீர்கள். நன்றிகள்! நன்றிகள் சகோதரம்!
@தம்பி கூர்மதியன்
எழுத்து நடை நன்று..
அதிகமாக இலங்கை சார்ந்த ஊர்கள் வருவதால் உள்ளாற முடியவில்லை..//
சிறுகதையினுள் யதார்த்தத்தை, கதை நிகழ் களத்தினை உட் புகுத்த வேண்டும் என்றால் அந்தப் பிரதேசத்தின் மொழி நடையினை உட் புகுத்த வேண்டியது, தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. இது உங்களுக்குச் சிரமாக அமையும் என நினைக்கவில்லை. ஆனாலும் ஊர்களை விடுத்து, சம்பவங்களுடன் ஒன்றித்தால், இலகுவாகப் புரிந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.//
//பரீட்சையம் இல்லாத ஊர்களை கேட்கும்போது ஒரு விலகல் ஏற்படுகிறது..//
ஊர்களை விடுத்து, அனுமான்ஷய விடயங்களை, விஞ்ஞான ரீதியில் வேற்றுக் கிரக நாவலாக உருவாக்க நான் முனையவில்லை. ஆதலால் பரீட்சயம் இல்லாத ஊர் பற்றிய விடயங்கள் கண்டிப்பாக வெளியிருந்து வாசிக்கும் உள்ளங்களுக்குச் சிரமத்தினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அடுத்த பகுதிகளை எழுதும் போது இதனை நிச்சயமாகக் கருத்திற் கொள்கிறேன்.
//பின்பாதியில் அரசியல் நக்கல்கள் கதையின் வீரியத்தை குறைக்கிறது..//
மீண்டும், மீண்டும் படித்துப் பார்த்தேன், சோகம் இழையோடும் கதையில் இவை தேவையற்றது என்பதனை உணர்ந்துள்ளேன், இன்னும் ஒரு சில நொடிகளில் அவற்றினை நீக்கவுள்ளேன்.
சாதி, சாதி சார்புடைய கதைகளை நான் படிப்பதில்லை..//
சகோதரம், நான் சாதியினைச் சார்ந்து, இந்தக் கதையினை எழுதத் தொடங்கவில்லை. எங்கள் ஊரில் புழக்கத்திலிருந்த மேல் சாதி, கீழ் சாதி எனும் வர்க்க வேடுபாறுகளின் அடிப்படையில் எவ்வாறு மக்களின் வாழ்வியல் முறைகள் அமைந்திருந்தது என்பதனை, ஒரு சாதியினையும் சாராது, நடு நிலையாக நின்று அலசமுற்பட்டிருக்கிறேன். நீங்கள், உங்களைப் போன்ற உள்ளங்கள் இதனை நிச்சயம் படிக்க வேண்டும், அப்போது தான் ஈழத் தமிழர் எனும் அடையாளத்தினையும் தாண்டி உள்ள உள்ளீடுகளையும் இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.
மிக மிக நன்றிகள், உங்களின் பரந்து பட்ட பார்வைக்கும், வீரியம்மிக்க கருத்துக்களுக்கும்!
@இராஜராஜேஸ்வரி
சகோதரம், என் கதையினை முழுமையாகப் படித்திருந்தால் சிங்களத் தமிழுக்கும், தமிழுக்கும் உள்ள வேறுபாட்டினை நிச்சயமாய் உணர்ந்திருப்பீர்கள் அல்லது வேறு பிரித்தறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்;-)))
சிங்களத் தமிழ் என்றால் என்ன? ஈழத் தமிழர்கள் பயன்படுத்தும் தமிழ் என்றால் என்ன என்று ஒரு தனிப் பதிவே போட்டு அலசலாம். நல்ல தொரு கருப் பொருளை, இக் கால கட்டத்தில் தமிழக உறவுகளுக்கு நிச்சயமாய்ச் சென்று சேரக் கூடிய கருப் பொருளை நீங்கள் தந்திருக்கிறீர்கள். இது பற்றிய ஒரு விவாத, அலசல் பதிவினை வெகு விரைவில் எழுதி, சிங்களத் தமிழ் பற்றிய புரிதலை விளக்கலாம் என நினைக்கிறேன்,
நன்றிகள் சகோதரம்.
@MANO நாஞ்சில் மனோ
ஆனந்த விகடனில் வெளி வரவேண்டிய சிறுகதை...
அருமையா இருக்கு மக்கா வாழ்த்துகள்..//
சகோதரம், பெரிய, பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க.இதிலை உள் கூத்து ஏதும் இல்லையே?
ஏதோ என்னால் முடிஞ்ச அளவிலை நம்ம ஊரு மேட்டரைப் பதிவாக்கியிருக்கிறன், நன்றிகள் சகோ.
@ராஜ நடராஜன்
மண்ணின் உள்ளீடுகள் பற்றி உங்களைப் போன்றவர்கள் சொல்வதே புரிதலுக்கு உதவும்.//
நன்றிகள் சகோதரம்.
@ஹேமா
ம்ம்ம்...நிரூ...ஸ்டார்ட் மியூசிக்.//
ஏன் நான் என்ன பைலா டான்ஸே ஆடப் போறேன் சகோ;-))
//அரசியல்,சாதிசமயமெல்லாம் போட்டுக் கிளிபடப்போகுது எண்டு நினைக்கிறன்.//
இது தான் ஊகித்து அறிதலோ? நன்றிகள் சகோ.
மதி சொன்னமாதிரி சிலேடை சொல்ல வரேக்க கதை சோர்வாகுது.//
ம்... இதனைப் பின்னர் தான் உணர்ந்தேன். இப்போதே நீக்கி, ஒரு சில மாற்றங்களைச் செய்யலாம் என முடிவெடுத்துள்ளேன்.
//தலையங்கம் வில்லங்கமா வேணுமெண்டு வச்சிருக்கீங்கபோல.//
இல்லைச் சகோதரம், கதையின் தலைப்பினை மெய்பிக்கும் விடயங்கள் அடுத்த பாதியில் வரவுள்ளன.
கதை பலகோணங்களில் தொடங்கி எங்கேயோ ஒண்டு சேரப்போகுது.
இன்னும் விறுவிறுப்பாகுமெண்டு நினைக்கிறன் !//
நன்றிகள், நன்றிகள் சகோதரம்,
@Nesan
ஓரு முடிவோடு தொடங்கியுள்ளீர்கள் அடிப்படை சமூக கட்டுமானத்தை சீர்திருத்த வெளிக்கிட்டீங்க எழுத்துத்துனையுடன் சாதியம்,போர்க்கால நிலை இடப்பெயர்வு ,ஊழல் ,தனிமனித சாடல்கள் காத்திரமான நாவல் வாசிக்க காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் !//
நன்றிகள் சகோதரம்,
//இடையில் செங்கையாழியான் நாவல் ஞாபகம் வருகிறது அதை முறியடிப்பீர்கள் என்ற நம்பிக்கையுண்டு இடையில் ஆங்கில வாடையடிக்கிறது பாத்திர வார்ப்புகளின் இயல்பை மீறும்போல் உள்ளது கவனிக்கவும் நண்பரே! மீண்டும் வாழ்த்துக்களுடன்.//
செங்கை ஆழியானின் நாவல்கள் மீது எனக்கு ஈடுபாடுகள் இந் நாள் வரை இருந்ததில்லை. அதற்கான காரணத்தையும் நான் அறியவில்லைச் சகோதரம், அத்தோடு, செங்கை ஆழியானின் நாவல்களைப் படிக்க வேண்டும் எனும் எண்ணமும் என் பாழாய்ப் போன மனதிற்கு இது வரைக்கும் வந்தேயில்லை..
கதையில் நிச்சயமாக கவனம் சேர்ப்பேன் சகோ.
மீண்டும், மீண்டும் நன்றிகள்.
@டக்கால்டி
vanthuten//
இது என்ன சகோ, வருகையினைச் சொல்லும், அலப்பறையோ;-))
நன்றிகள் சகோ,
@டக்கால்டி
vanthuten//
இது என்ன சகோ, வருகையினைச் சொல்லும், அலப்பறையோ;-))
நன்றிகள் சகோ,
@shanmugavel
நடுநடுவே உள்ள அரசியல் தெளிப்புகள் சிறுகதை அனுபவத்தை சிதறடிக்கிறது சகோதரம்.தொடருங்கள்.//
மிக்க நன்றிகள். இன்னும் ஒரு சில நிமிடங்களில் அந்தக் குறையினை நிவர்த்தி செய்து விடுவேன் சகோதரம்.
@சி.பி.செந்தில்குமார்
நடை நல்லாருக்கு//
சகோ, கதையோடை நடையா இல்லை, தப்சியோடை நடையா;-)))
நன்றிகள் சகோதரம்.
ம்ம் தொடரட்டும்.........!
வணக்கம் நிரூபன் / ஈழத்து சாதி கொடுமை உங்களை நன்றாகவே வடு ஏற்ப்படுத்தியுள்ளது போல. ம்ம்ம் காலம் மாறும் பார்ப்போம்...
யாழ்ப்பாணத்து தமிழ் உரை நடை எனக்கு வாசிக்க இலகுவாக உள்ளது. தொடருங்கள்.......
/////இராணுவம், பலாலி, காங்கேசன் துறை, தையிட்டி, மயிலிட்டி முதலிய பகுதிகளை ஆக்கிரமித்த போது தங்கள் கையில் அகப்பட்ட பொருட்களுடன் உயிரைப் பாதுகாப்பதற்காக இடம் பெயர்ந்து ஊரை விட்டு, ஓடிவந்து, வறுமையின் பிடியில், ஊரை, ஊரவர்களை, உறவினர்களைப் பிரிந்த சோகத்துடன் கொட்டில் வீட்டில் தங்கள் வாழ்க்கையினைத் தொடங்குகிறார்கள் பாக்கியம், சிவராமன் தம்பதியினர்//////96 இடப்பெயர்வு நினைவுக்கு வருகிறது எனக்கு (((
///‘அப்ப நீங்கள் எஸ்டேட்(Estate) ஆட்க்களே...........................என, மனதை விட்டுக் கேட்டே விட்டாள்.
இப்படி ஒரு அஸ்திரத்தை, அதுவும் குடி வந்த முதல் நாளே பொன்னம்மா எதிர்பார்த்திருக்க /// எஸ்டேட் ஆட்கள் என்றால் மலையக தமிழர்கள் தானே. ஆனால் எஸ்டேட்டில் வேலை செய்த யாழ் தமிழர்களும் உள்ளார்கள் சகோ...எங்க ஊரிலும் ஒருவர் தான் எஸ்டேட்டில் வேலை செய்ததாக பெருமை அடித்துக்கொள்வார்.)))
/////’’உங்களுக்குத் தேத்தண்ணி போட்டுத் தரலாம் தான், ஆனால் அடுப்பு(சமையல் செய்யும் இடம்) பற்ற வைக்க, தீப் பெட்டி பொட்டி இல்லை. இவர் சைக்கிள் கடையாலை வரும் போது தான் வாங்கிக் கொண்டு வருவார்........குறை நினைக்காதேங்கோ/// ம்ம்ம் இப்படிப்பட்ட நொண்டி சாட்டு சொல்லி அனுப்புவதை நானும் நேரிலே கண்டிருக்கிறேன்..
நிலை கெட்டுப் போனாலும் சாதி உணர்வு மங்குவதில்லை என்பதையும் , உயிர்ப்பயம் வரும் போது சாதியாவது ஒண்ணாவது எனும் எண்ணம் துளிர்க்கும் என்பதையும் அழகாகச் சொல்லிக் கொண்டு போகிறீர்கள் , தொடருங்கள்.
சாதியை மையமாக வைத்து எழுதப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன். கதை முடிவில் படிப்பவரில் ஒன்றிரண்டு நபராவது சாதியை கைவிட்டால் நலமே!
/எப்படியாவது இவையள்(இவர்கள்) என்ன சாதி என்று அறிஞ்சு போட வேணும்//
இந்தக்கணினி யுகத்திலும் இப்படிப்பட்ட ஈரவெங்காய கேள்விகளை கேட்கும்
விளக்கெண்ணைகளை முதலில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.
ஈழத்தமிழில் தங்கள் இயல்பான எழுத்துக்களை வாசிப்பது ஒரு வித்யாசமான அனுபவம். நன்றி!
நிரு தயவுசெய்து பொறுத்தருள்க! இந்தவார லீவு நாள் வரட்டும், பதிவை சிறுகதை படித்து, நீங்கள் எதிர்பார்க்கும், விமர்சனத்தை முன்வைக்கிறேன்! இப்போது இருப்பது கொஞ்சூண்டு நேரம்!!
ம்ம்ம்...நல்லா இருக்குது நிரூபன் தொடருங்கள்.
"..''தாழ்ந்த சாதிக்கு தேநீர் கொடுக்கப் பழைய குவளை இல்லையே எனும் உண்மையினை மறைக்க .."
பொய்முகங்களின் முக மூடிகளை கிழித்தெறிவது நன்றாக இருக்கிறது. அவசியம் செய்ய வேண்டியது.
எதார்த்தமா இருக்கு அண்ணா
ஆனந்த விகடன் படிக்கிற ஒரு பீல் ,
அடுத்த பகுதி எப்போ வெரும் அண்ணா..???
present
மாப்ள பகிர்வுக்கு நன்றி..........இந்த கதையில் வரும் சமூக பாகு பாடு என்பது நிஜத்தில் இன்றும் வாழ்வதையே காட்டுகிறது.........எனவே இது கதை அல்ல காதை(உண்மை!)
நல்லா இருக்கு எழுத்து நடையும், வட்டார வழக்கும்.
தொடருங்க.
வவ்...........வவ்................வள்.........வள்.........என்றவாறு, மக்களின் பிரச்சினையைச் சரிவரப் புரிந்து கொள்ளால் பாராளுமன்றத்திற்குச் சென்று வாய் கிழியக் கதறும் அரசியல் வாதியினைப் போல, வீதியினை வெறித்துப் பார்த்த படி குலைத்துக் கொண்டிருந்த ஜிம்மியின் சத்தத்தைச் சகிக்க முடியாதவளாய்
இதைத்தான் சொல்லுவது சொல்லமுடியாத சில விடயங்களை லாவகமாய் சொல்வதென்பது ஏங்க கொண்டுபோய் முடிச்சு போடணுமோ அங்க போட்டுருகாய் நண்பா
எல்லாவற்றிலும் சாதிபாகும் மெல் சாதியினர் களவாய் கள்ளு குடிக்கவும் கட்டி அணைக்கவும் சாதிபாற்பதில்லை என கேள்விபட்டிருகேறேன்
இலங்கையில் சாதீயம்? (எங்குதான் அது இல்லை.). இலங்கை தமிழ் தான் கொஞ்சம் புரியவில்லை, ஆனால் தொடரும் தமிழால் அர்த்தம் புரிகிறது.
நிரூபன்,
எழுத்து நடை ரொம்ப பிடித்திருக்கிறது. அந்த சூழ்நிலையிலே நாங்களே இருந்து பொழங்குவது போன்ற பிரமையை தருகிறது...
தொடருங்க வாசிக்க காத்திருக்கோம்...
@பன்னிக்குட்டி ராம்சாமி
ம்ம் தொடரட்டும்.........!//
நன்றிகள் சகோ..
@கந்தசாமி.
வணக்கம் நிரூபன் / ஈழத்து சாதி கொடுமை உங்களை நன்றாகவே வடு ஏற்ப்படுத்தியுள்ளது போல. ம்ம்ம் காலம் மாறும் பார்ப்போம்...//
சகோ, சாதிக் கொடுமை எனக்கு வலியினை ஏற்படுத்தியது என்று சொல்வதிலும் பார்க்க, வெட்கத்தை விட்டு, மனம் திறந்து என் குடும்பம், என் பாட்டன், பாட்டியும் இந்தச் சாதிப் பாகு பாட்டின் மூலம் ஏழைகளை, சமூகத்தில் உள்ளவர்களை கீழ்ச் சாதி என்று உதாசீனப்படுத்துவதை/ நடாத்துவதை என் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன்.
பலரின் அனுப மொழிகளைக் கேட்டிருக்கிறேன்,
என் வீட்டிற்கு அருகிலே தாங்கள் ஏன் கீழ் சாதியில் பிறந்தோம் என்று சொல்லி வேதனைப்படும் ஒரு சில மக்களின் உணர்வுகளை அறிந்துள்ளேன். நேரில் பார்த்துள்ளேன்.
அதன் வெளிப்பாடுகள் தான் இந்தக் கதை...
@கந்தசாமி.
வணக்கம் நிரூபன் / ஈழத்து சாதி கொடுமை உங்களை நன்றாகவே வடு ஏற்ப்படுத்தியுள்ளது போல. ம்ம்ம் காலம் மாறும் பார்ப்போம்...//
நன்றிகள் நன்றிகள்.
@கந்தசாமி.
/////இராணுவம், பலாலி, காங்கேசன் துறை, தையிட்டி, மயிலிட்டி முதலிய பகுதிகளை ஆக்கிரமித்த போது தங்கள் கையில் அகப்பட்ட பொருட்களுடன் உயிரைப் பாதுகாப்பதற்காக இடம் பெயர்ந்து ஊரை விட்டு, ஓடிவந்து, வறுமையின் பிடியில், ஊரை, ஊரவர்களை, உறவினர்களைப் பிரிந்த சோகத்துடன் கொட்டில் வீட்டில் தங்கள் வாழ்க்கையினைத் தொடங்குகிறார்கள் பாக்கியம், சிவராமன் தம்பதியினர்//////96 இடப்பெயர்வு நினைவுக்கு வருகிறது எனக்கு (((//
ஆமாம், வலி நிறைந்தது குடா நாட்டு மக்களைப் பொறுத்த வரை 1996ம் ஆண்டு இடப் பெயர்வு தான்.... ஆனாலும் அதனை விட வலி நிறைந்தது, வார்த்தைகளுக்குள் அடக்க முடியாதது வன்னி மண்ணின் வரலாறு காணாத சோகம்..........
@கந்தசாமி.
///‘அப்ப நீங்கள் எஸ்டேட்(Estate) ஆட்க்களே...........................என, மனதை விட்டுக் கேட்டே விட்டாள்.
இப்படி ஒரு அஸ்திரத்தை, அதுவும் குடி வந்த முதல் நாளே பொன்னம்மா எதிர்பார்த்திருக்க /// எஸ்டேட் ஆட்கள் என்றால் மலையக தமிழர்கள் தானே. ஆனால் எஸ்டேட்டில் வேலை செய்த யாழ் தமிழர்களும் உள்ளார்கள் சகோ...எங்க ஊரிலும் ஒருவர் தான் எஸ்டேட்டில் வேலை செய்ததாக பெருமை அடித்துக்கொள்வார்.)))//
இவர்கள் பெருமை அடித்துக் கொள்வார்கள், ஆனால் அந்த ஊர் மக்களை எப்படியெல்லாம் அழைப்பார்கள் என்பதை, அவர்களுடன் பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
@சிவகுமாரன்
நிலை கெட்டுப் போனாலும் சாதி உணர்வு மங்குவதில்லை என்பதையும் , உயிர்ப்பயம் வரும் போது சாதியாவது ஒண்ணாவது எனும் எண்ணம் துளிர்க்கும் என்பதையும் அழகாகச் சொல்லிக் கொண்டு போகிறீர்கள் , தொடருங்கள்//
நன்றிகள், நன்றிகள்.
@சுவனப்பிரியன்
சாதியை மையமாக வைத்து எழுதப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன். கதை முடிவில் படிப்பவரில் ஒன்றிரண்டு நபராவது சாதியை கைவிட்டால் நலமே//
சகோ, நான் இக் கதையினைச் சாதியினை வைத்து எழுதவில்லை, சமூகத்தில் காணப்படும் சாதிப் பாகுபாடுகள் எவ்வாறு ஏழைகளின் வயிற்றில் வலியை ஏற்படுத்துகின்றன என்பதனை மையப்படுத்தியிஏ எழுதுகிறேன்.
முடிவில்....சாதி வெறி பிடித்தவர்கள் சாதியினை இறுக்கமாகப் பின்பற்றும் காலத்தில், எவ்வாறு கதையின் முடிவினை மட்டும் யதார்த்தத்திற்குப் புறம்பாக மாற்ற முடியும்?
@! சிவகுமார் !
/எப்படியாவது இவையள்(இவர்கள்) என்ன சாதி என்று அறிஞ்சு போட வேணும்//
இந்தக்கணினி யுகத்திலும் இப்படிப்பட்ட ஈரவெங்காய கேள்விகளை கேட்கும்
விளக்கெண்ணைகளை முதலில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.//
சகோ, இந்த ஈர வெங்காயங்கள் புற்றீசல்கள் போல முளை விடுகின்றனவே.. என்ன செய்யலாம்?
//ஈழத்தமிழில் தங்கள் இயல்பான எழுத்துக்களை வாசிப்பது ஒரு வித்யாசமான அனுபவம். நன்றி!//
நன்றிகள் சகோ..........
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரு தயவுசெய்து பொறுத்தருள்க! இந்தவார லீவு நாள் வரட்டும், பதிவை சிறுகதை படித்து, நீங்கள் எதிர்பார்க்கும், விமர்சனத்தை முன்வைக்கிறேன்! இப்போது இருப்பது கொஞ்சூண்டு நேரம்!!//
நான் என்ன நித்தியானந்தாவா? இல்ல பிரமானந்தாவா? பொறுத்தருள..
நன்றிகள்.. நன்றிகள்..
@Jana
ம்ம்ம்...நல்லா இருக்குது நிரூபன் தொடருங்கள்.//
நன்றிகள்.
@Dr.எம்.கே.முருகானந்தன்
..''தாழ்ந்த சாதிக்கு தேநீர் கொடுக்கப் பழைய குவளை இல்லையே எனும் உண்மையினை மறைக்க .."
பொய்முகங்களின் முக மூடிகளை கிழித்தெறிவது நன்றாக இருக்கிறது. அவசியம் செய்ய வேண்டியது//
நன்றிகள் ஐயா..
@துஷ்யந்தனின் பக்கங்கள்
எதார்த்தமா இருக்கு அண்ணா
ஆனந்த விகடன் படிக்கிற ஒரு பீல் ,
அடுத்த பகுதி எப்போ வெரும் அண்ணா..???//
ஆஹா... நான் ஒரு சிறு நாற்று சகோ.
நன்றிகள் சகோ, அடுத்த பகுதியை வெகு விரைவில் தர முயற்சி செய்கிறேன்.
@ரஹீம் கஸாலி
present//
Thank you my student, I did my register marking.
I will see you in my next class.
bye
@விக்கி உலகம்
மாப்ள பகிர்வுக்கு நன்றி..........இந்த கதையில் வரும் சமூக பாகு பாடு என்பது நிஜத்தில் இன்றும் வாழ்வதையே காட்டுகிறது.........எனவே இது கதை அல்ல காதை(உண்மை!)//
நிஜங்களைச் சொல்ல வேண்டுமென்பதே எனது அவாவும். நன்றிகள் சகோ,
@சுசி
நல்லா இருக்கு எழுத்து நடையும், வட்டார வழக்கும்.
தொடருங்க.//
நன்றிகள் சகோ.
@யாதவன்
வவ்...........வவ்................வள்.........வள்.........என்றவாறு, மக்களின் பிரச்சினையைச் சரிவரப் புரிந்து கொள்ளால் பாராளுமன்றத்திற்குச் சென்று வாய் கிழியக் கதறும் அரசியல் வாதியினைப் போல, வீதியினை வெறித்துப் பார்த்த படி குலைத்துக் கொண்டிருந்த ஜிம்மியின் சத்தத்தைச் சகிக்க முடியாதவளாய்
இதைத்தான் சொல்லுவது சொல்லமுடியாத சில விடயங்களை லாவகமாய் சொல்வதென்பது ஏங்க கொண்டுபோய் முடிச்சு போடணுமோ அங்க போட்டுருகாய் நண்பா
வவ்...........வவ்................வள்.........வள்.........என்றவாறு, மக்களின் பிரச்சினையைச் சரிவரப் புரிந்து கொள்ளால் பாராளுமன்றத்திற்குச் சென்று வாய் கிழியக் கதறும் அரசியல் வாதியினைப் போல, வீதியினை வெறித்துப் பார்த்த படி குலைத்துக் கொண்டிருந்த ஜிம்மியின் சத்தத்தைச் சகிக்க முடியாதவளாய்
இதைத்தான் சொல்லுவது சொல்லமுடியாத சில விடயங்களை லாவகமாய் சொல்வதென்பது ஏங்க கொண்டுபோய் முடிச்சு போடணுமோ அங்க போட்டுருகாய் நண்பா//
ஆஹா.. எப்படி எழுதினாலும் கூர்ந்து கவனிக்கிறீங்களே, நன்றிகள் நன்றிகள். சில விடயங்களைப் பப்ளிக்கா சொல்லக் கூடாது, சொன்னால் நாள் குறித்திடுவாங்கள். அது தான் ஒரு சின்ன விளையாட்டு.
நன்றிகள் சகோ.
@யாதவன்
எல்லாவற்றிலும் சாதிபாகும் மெல் சாதியினர் களவாய் கள்ளு குடிக்கவும் கட்டி அணைக்கவும் சாதிபாற்பதில்லை என கேள்விபட்டிருகேறேன்//
சரியாய்ச் சொல்லுகிறீர்கள் சகோ.
எம்மவர்கள் தவறணைகளில் ஒன்றாக கள்ளு குடிக்கவுன், ஏனைய விடயங்களைச் செய்யவும் சாதி பார்க்க மாட்டார்கள். ஆனால் திருமணம், விழாக்கள் என்று வரும் போது மட்டும் சாதி பார்ப்பார்கள்.
நன்றிகள் சகோ.
@பலே பிரபு
இலங்கையில் சாதீயம்? (எங்குதான் அது இல்லை.). இலங்கை தமிழ் தான் கொஞ்சம் புரியவில்லை, ஆனால் தொடரும் தமிழால் அர்த்தம் புரிகிறது.//
சகோ... இந்தப் பதிவில் நான் இலங்கையில் சாதியம் எனும் கட்டுரை வரையவில்லை..
இப் பதிவில் சிறு கதை தான் எழுதியுள்ளேன்.
நீங்கள் படித்த பதிவு வேறு, பின்னூட்டம் எழுதும் பதிவு வேறு என நினைக்கிறேன்.
நன்றிகள்.
@Thekkikattan|தெகா
நிரூபன்,
எழுத்து நடை ரொம்ப பிடித்திருக்கிறது. அந்த சூழ்நிலையிலே நாங்களே இருந்து பொழங்குவது போன்ற பிரமையை தருகிறது...
தொடருங்க வாசிக்க காத்திருக்கோம்...//
நன்றிகள் சகோ. உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவு தான் இச் சிறு கதையினை மேலும் மேலும் மெரு கூட்ட உதவும்.
இச் சிறுகதை பற்றிய விமர்சனங்களைக் விசேடமாக வாசக நெஞ்சங்களிடமிருந்து எதிர்பார்த்திருந்தேன்.
சகோதரன் ‘தம்பி கூர்மதியன், ஹேமா, நேசன், முதலியோர் முன் வைத்திருந்தார்கள். அவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அன்பு உறவுகளிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கதையின் போக்கு அருமை,தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்.
நானும் ஒரு மலையக தமிழன்.பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருக்கிறேன்,சின்ன வயதில் இருந்து "நீங்க எஸ்டேட் ஆட்களே" போன்ற பல கேள்விகள் என்னிடத்திலும் பிறரிடத்திலும் கேட்கப்பட்டுள்ளன.இதுவே வடக்கு தமிழர்கள் மீது வெறுப்பாய் மாற காரணமாகி விட்டது.இந்த சந்ததியிலாவது எங்களை வேற்று மனிதராய் பார்ப்பது மாறட்டும்.
-அருண்-
@அருண்
கதையின் போக்கு அருமை,தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்.
நானும் ஒரு மலையக தமிழன்.பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருக்கிறேன்,சின்ன வயதில் இருந்து "நீங்க எஸ்டேட் ஆட்களே" போன்ற பல கேள்விகள் என்னிடத்திலும் பிறரிடத்திலும் கேட்கப்பட்டுள்ளன.இதுவே வடக்கு தமிழர்கள் மீது வெறுப்பாய் மாற காரணமாகி விட்டது.இந்த சந்ததியிலாவது எங்களை வேற்று மனிதராய் பார்ப்பது மாறட்டும்.
-அருண்-//
முதன் முதலாக என் வலைக்கு வருகை தந்திருக்கிறீர்கள் சகோ., என் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்டவராய் கொண்டவராய், கதையினை விளங்கிப் பின்னூட்டமிட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். வடக்கு, கிழக்குத் தமிழர்களால் புறந்தள்ளப்பட்ட மலையக மக்களைப் பற்றியது தான் இக் கதை. இக் கதையினைத் தவிர்த்து இன்னோர் பதிவிலும் மலையக மக்களினைத் தமிழர்கள் எவ்வாறு புறக்கணித்தார்கள் என்பதனை எழுதியுள்ளேன். நேரமிருந்தால் பாருங்கள் சகோ. உங்களைப் போன்ற உள்ளங்களிடமிருந்து, மலையக உறவுகளிடமிருந்து கருத்துக்கள் வரும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ.
@இராஜராஜேஸ்வரி
சிங்களத்தமிழில்? What the expression is this? What is your point? Please think before you write.
VANAKKAM, THAMILAGATHIL ERUNDHU RAMAKRISHNAN,
MUDHALIL THAMILIL ENADHU KARURTHUKALAI ELUTHAMAIKKU MANIKKAVUM,
ENAKKAU THAMILLIL EPADI TYPE SEVATHU ENDRU TERIYAVILLAI,
OK,
ELANGAIYIL, MALAYAGA THAMILARGAL,ENDHA SAADHIYINAR ENDRU VAGAI PDUTHAPATTU ULLANAR, EYAN AVARGALAI KEEL SAADI ENDRA YENNAM NORTH @ EAST THAMILARGALUKKU VANDADU,
EELA YUDHATHIL MALAYAGA THAMILAR NILAIPADU ENNA,
VILLAKAVUM ALLADHU THODARBUDAYA NET ADDRESS THANDHU VUDHAVAVUM, ENGU THAMILAGATHIL ELAGAI THAMILARGALIN SAADHIYAM THODARBAGA MIGA EANN ONDRUME THIRIYA VILLAI
MATTRABADI, UNGAL EDHU KDHAYALLA NIJAM ENDRAVARU EDHDHARTHAMAGA ELAGAI THAMIL KALACHARATHAI(CULTURE) PURINDHUGOLLA MUDIGIRADHU
THODARATTUM UNGALLODA MUYARCHI.
VAALTHUKKAL.
நிலை கெட்டுப் போனாலும் சாதி உணர்வு மங்குவதில்லை என்பதையும் , உயிர்ப்பயம் வரும் போது சாதியாவது ஒண்ணாவது எனும் எண்ணம் துளிர்க்கும் என்பதையும் அழகாகச் சொல்லிக் கொண்டு போகிறீர்கள் , தொடருங்கள்.
/எப்படியாவது இவையள்(இவர்கள்) என்ன சாதி என்று அறிஞ்சு போட வேணும்//
இந்தக்கணினி யுகத்திலும் இப்படிப்பட்ட ஈரவெங்காய கேள்விகளை கேட்கும்
விளக்கெண்ணைகளை முதலில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.//
சகோ, இந்த ஈர வெங்காயங்கள் புற்றீசல்கள் போல முளை விடுகின்றனவே.. என்ன செய்யலாம்?
//ஈழத்தமிழில் தங்கள் இயல்பான எழுத்துக்களை வாசிப்பது ஒரு வித்யாசமான அனுபவம். நன்றி!//
பல வேளைகளில் இவற்றை கண்னெதிரே கண்டதுண்டு....ஆனால் இந்த வெள்ளாள மனதை வென்ற மனதர்களையும் கண்டிருக்கிறேன்... முளுவதுமாக அல்ல... அருமையான பதிவு நண்பரே..
Post a Comment