நாங்கள் பள்ளிக் கூடத்தில் படித்த காலப் பகுதியில் ஒரு சிறு பிள்ளைத் தனமான விளையாட்டு விளையாடுவோம், எங்களது ’குறூப்பினுள் யாராவது ஒருத்தன் புதிதாக சேர்ந்திட்டான் என்றால், நாங்கள் பேசும் மொழி நடை அவனுக்குப் புரியாத மாதிரித் தான் திட்டங்களைத் தீட்ட வேண்டும் என்பது எங்களது பிரதான நோக்கமாக இருக்கும்.(ஏதோ பெரிய அரசியல், போராட்ட வீரர்கள் மாதிரி, இவங்கள் பெரிய ப்ளான் எல்லாம் பண்ணிருக்காங்க என்று மிரட்டுறீங்க.. வேணாம்... பாஸ்;-)))
உதாரணத்திற்கு பள்ளிக் கூடம் முடிந்ததும் கள்ள மாங்காய் பிடுங்கப் போதல், கிணற்றில் நீந்தப் போதல், கிறிக்கற் அடிக்கப் போதல், இளநீர் பிடுங்கப் போதல் முதலிய பல விடயங்களை வகுப்பின் சக மாணவர்களுக்குத் தெரியாமல் செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் பிளானாக இருக்கும்.
நாங்கள் பேசும் மொழி, ஏதோ நாங்கள் கண்டு பிடித்த மொழி என்று நினைக்க வேண்டாம், இந்தச் சங்கேத பாசை காலாதி காலமாக எங்கள் ஊர்களில் இருந்து வருகிறது. (இதனைக் கண்டு பிடித்தவர், உருவாக்கியவர் யார் என்று ஆதார பூர்வமாகத் தெரிந்தால் பிளீஸ் யாராவது சொல்லுங்கோ)
நாங்கள் பேசும் போது பேசும் ஒவ்வோர் சொல்லின் முதல் எழுத்துடன் ‘ல்’ சேர்த்து பேசுவோம்.
ஒவோர் வசனங்களைப் பேசும் போதும் முதல் எழுத்துடன் ‘ல்’ சேர்த்துப் பேசுவது தான் இந்தச் சங்கேத பாசையின் சிறப்பாகும், இந்தப் பாசையினை எப்படி நாங்கள் பேசுகிறோம் எனும் உத்தி(Technical) தெரியாதவர்களுக்கு, இந்தப் பாசை புரியவே புரியாது.
யாரைத் திட்ட வேண்டும் என்றாலும் சரி, அல்லது யாருடனாவது ஏதாவது ரகசியங்கள் பேச வேண்டும் என்றாலும் சரி, ஒரு கூட்டத்தின் மத்தியில் உங்கள் மனதிற்குப் பிடித்தவருடன் நீங்கள் உரையாட வேண்டும் என்றாலும் சரி இந்தப் பாசை உங்களுக்கும் நிச்சயமாய் கை கொடுக்கும். அது என்ன பாசை என்று ஒரு தடவை ட்றை பண்ணிப் பார்ப்போமா.
எல் என்ரை பில் ப்ளாக்கை, பல் படிக்க வல் வந்திருக்கும், அல் அனைவருக்கும், நல் வணக்கம்!
நில்நீங்க நல்நல்ல சுல்சுகம் எல்என்று அல்அறிகிறேன்.!
உல்உங்கடை நல்நாட்டிலை கல்கலைஞர் கொல்கொள்ளை அல்அடிச்சு இல்இருக்கிறார் எல்என்னும் வில்விடயத்தை, நல்நாங்கள் அல்அறிவோம்.
இல்இந்த முல்முறைத் தெல்தேர்தலிலை, யல்யார், வெல்வெல்லப் பொல்போகீனம்?
சரி இந்தச் சங்கேத பாசையினுள் மறைந்திருக்கும் விடயங்களைக் கண்டறிய முடியுமா?
கல்கலைஞர், சொல்சோனியா, நல்நன்றாக கல்கபட நல் நாடகம் செல்சேர்ந்து நல்நடிக்கீனம்.
உல்உந்த, தில்திருவிளையாடல், இல்இனிமேல் எல் எங்களிட்டை, ஒல் ஒருபோதும் வல் வாய்க்காது,.
சல்சாகும் வல்வயசிலை, உல்உந்தக் கில்கிழவனுக்கு எல்ஏன் இல்இந்த பெல்பேராசை?
உல்உந்தக் கில்கிழவன், எல்எங்கள் இல்ஈழம் பல்பற்றி, இல் இனிமேலும் பெல்பேசக் கூடாது,
நல்நாங்கள் எல்எல்லோரும், ஒல்ஒருநாள் அல்அடிச்சால், பல் பறக்கும் எல் என்பது, உல் உவர்க்குத் தெல் தெரியாதோ?
இந்த நினைவுகளை மீட்டிப் பார்க்கையில் என் பாடசாலைக் காலச் சிறு பராயம் மட்டும் நினைவில் வந்து போகிறது.
உல்உங்களுக்கு, இல்இப் பல்பதிவு, புல் புரிஞ்சுதா?
நல்நான் பொல்போய், மல்மாலை மில் மீண்டும் வல் வருகிறேன்!
|
69 Comments:
நில் நிருபா கல் காலை வல் வணக்கம்!
இல் இந்த பல் பதிவு, நல் நன்றாக இல் இருக்கு! எல் எமது பல் பழைய நல் ஞாபகங்களை மில் மீட்டி தல் தருது!!
இல் இந்த பல் பதிவு இல் இந்திய நல் நண்பர்களுக்கு புல் புரிவது, கொல் கொஞ்சம் கல் கஷ்டம் தான்!
சங்கேத பாஷையை அவர்கள் மட்டுமா பயன்படுத்தினர்? சனங்களும் தானே?
நிரு காலம எறியல் என்ன மாதிரி?
இதே போல நானும் ஒரு பாஷை கேள்விப்பட்டேன்! பயன்படுத்தியும் இருக்கிறேன்!
" இக்கிடு இந்த பக்கிடு பதிவை, நெக்கிடு நேத்து எக்கிடு எதிர் பக்கிடு பார்த்தேன்! நக்கிடு நல்ல வெக்கிடு வேளை, நிக்கிடு நீங்க பொக்கிடு போட இக்கிடு இல்ல ! "
இனிமையான பழைய ஞாபகங்கள்! அருமை நண்பா!!
உல்உங்களுக்கு, இல்இப் பல்பதிவு, புல் புரிஞ்சுதா?
.....
எல்எங்களுக்கு, இல்இப் பல்பதிவு, புல்புரிஞ்சுது.
போங்க பாஸ் ! நமக்கு நிறைய வேளை இருக்குதுங்க ...........
உல்லும் இல்லும்
எல்லும் கொல்ல
நல்ல நல்ல படிக்க
முடியு தில்ல?
தல் தமிழ் மல் மறந்து போல் போச்சு! ஹில் ஹி...ஹில் ஹி...ஹில் ஹி...
எனது வலைப்பூவில்: கேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி! வீடியோ!!
///கல்கலைஞர், சொல்சோனியா, நல்நன்றாக கல்கபட நல் நாடகம் செல்சேர்ந்து நல்நடிக்கீனம்.//
ஹா ஹா ஹா ஹா நல்ல உதாரணம் ஹா ஹா ஹா...
//இந்த நினைவுகளை மீட்டிப் பார்க்கையில் என் பாடசாலைக் காலச் சிறு பராயம் மட்டும் நினைவில் வந்து போகிறது.//
நீங்கள் "ல்' வைத்து பேசினீர்கள். நாங்கள் சிறு வயதில் அதே போல "ன" வச்சி பேசுவோம்.....
//உல்உங்களுக்கு, இல்இப் பல்பதிவு, புல் புரிஞ்சுதா?//
புல்......
மல்மறந்த வில்விளையாட்டேல்லாம் நல்நல்ல ஞாபகம் வல்வருதய்யா பெல்பொடியா!
தலைப்பு எனக்கும் தெரிந்த பால பாடமாக இருக்கும் போல இருக்குதே:)
படிச்சிட்டு வருகிறேன்...
என்ன நிரூ...வெள்ளிக்கிழமை கொஞ்சம் லீவு விட்டிருக்கீங்கபோல.எல்லாரும் விளையாடட்டும் எண்டு.
பாருங்கோ நடாவுக்கு இதுகூட விளங்கேல்ல.பாவம் நடா !
//இல்இந்த முல்முறைத் தெல்தேர்தலிலை, யல்யார், வெல்வெல்லப் பொல்போகீனம்?//
அல் அது மெல் மே பல் 13க்கு அல் அப்புறம் தெல் தெரியும்.
சல் சரியா:)
//பாருங்கோ நடாவுக்கு இதுகூட விளங்கேல்ல.பாவம் நடா !//
ஹேமா!எல் எனக்கு பில் பிகாசோ கல் கவிதை தல் தான் தெல் தெரியாது:)
உல் உங்க கல் கவிதைக்கு எல் எல்லோரும் அல் அவருக்கு புல் புரிந்த மல் மாதிரியே பில் பின்னூட்டம் சொல் சொல்றாங்க பில் பிகாசோ பல் படம் மாதிரி.
நல் நான் நில் நீங்கள் எல் என்ன சொல் சொல்ல வல் வாறீங்க எல் என்பதுவே எல் எனக்கு முல் முக்கியம்.
ஹேமா!இந்தப் பின்னூட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா:)
NIRU..... COME TO ON LINE
நன்றி நிரூபன்... பள்ளி ஞாபகங்களை மீட்டியதற்கு....
இதே போல ஒவ்வொரு எழுத்துகளுக்கு முன்னால் 'க' சேர்த்து பேசி நாங்கள் விளையாடுவோம்.
உ.தா . நீ நலமா ? கநீ கநகலகமா ?
பல்பழைய செய்செய்திலாம்...நல்நல்நல்லா எல்எழுதி இல்இருக்கியள்.
அல்அது சல் சரி..உம் உமக்கு பெல் பாசை தெல்தெரியாமா?
// இது என்னுடைய பாடசாலைக் கால நினைவுகளை மீட்டும் பதிவாகும்...//
ஹி ஹி.. மீட்டு எடுங்க.. பாப்போம்..
// புரியாத மாதிரித் தான் திட்டங்களைத் தீட்ட வேண்டும்//
//போராட்ட அமைப்புக்களும் தமது இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக//
இது உங்களுக்கே ஓவரா இல்ல.?
//பிடுங்கப் போதல், கிணற்றில் நீந்தப் போதல், கிறிக்கற் அடிக்கப் போதல், இளநீர் பிடுங்கப் போதல்//
அடடே!! நம்ம கட்சி.. ஹி ஹி..
//சக மாணவர்களுக்குத் தெரியாமல் செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் பிளானாக இருக்கும்.//
நண்பர்களிடம் மறைப்பதா.?? அய்யகோ.!!
//நாங்கள் கண்டு பிடித்த மொழி என்று நினைக்க வேண்டாம்,//
அட நம்ம நிரூபன பத்தி நமக்கு தெரியாதா.? உங்களுக்கு அவ்வளவு தெறம கிடையாதுன்னு எனக்கு தெரியும்..
//உல்உங்கடை நல்நாட்டிலை கல்கலைஞர் கொல்கொள்ளை அல்அடிச்சு இல்இருக்கிறார் எல்என்னும் வில்விடயத்தை, நல்நாங்கள் அல்அறிவோம்.//
இது ரகசியமா.?? ஏன் உங்க பாசையில சொல்றீங்க.? இதுதான் ஊருக்கே தெரிஞ்சதாச்சே
//இந்த நினைவுகளை மீட்டிப் பார்க்கையில் என் பாடசாலைக் காலச் சிறு பராயம் மட்டும் நினைவில் வந்து போகிறது.//
அது என்னைக்குமே அழிக்க முடியாததுங்க.. சூப்பர்..
//உல்உங்களுக்கு, இல்இப் பல்பதிவு, புல் புரிஞ்சுதா?//
புரியாம பின்ன.. நல்லாவே புரிஞ்சிது..
//நல்நான் பொல்போய், மல்மாலை மில் மீண்டும் வல் வருகிறேன்!//
நைட்டே ஆகபோகுது.. வாங்கப்பா...
ஜெயம் படத்துல வர சதா தங்கச்சி பொண்ணு தான் ஞாபகத்துக்கு வருது சகா...ஹ்ம்ம் என்ன பண்ண? இட் அது பட் ஆனால் வாட் அது என்ன ஆகும்...
tamil teacher? hi hi
இளமைக்கால நினைவலைகள்...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நில் நிருபா கல் காலை வல் வணக்கம்!//
உல்உங்களுக்கும், எல் எனது வல்வணக்கங்கள்/
நல்நலமா? நில்நீங்கள்?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இல் இந்த பல் பதிவு, நல் நன்றாக இல் இருக்கு! எல் எமது பல் பழைய நல் ஞாபகங்களை மில் மீட்டி தல் தருது!!//
ஒல்ஓம்,அல்அல்லவா?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இல் இந்த பல் பதிவு இல் இந்திய நல் நண்பர்களுக்கு புல் புரிவது, கொல் கொஞ்சம் கல் கஷ்டம் தான்!//
இல்இல்லை, எல்எல்லோருக்கும் பொல்போதிய வில்விளக்கம், நல்நன்றாக கொல்கொடுத்திருக்கின்றேன்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
சங்கேத பாஷையை அவர்கள் மட்டுமா பயன்படுத்தினர்? சனங்களும் தானே?
நிரு காலம எறியல் என்ன மாதிரி?//
ஆமாம் சகோதரம், ஹா.......ஹா....
காலம எறியல் பற்றித் தனிப் பதிவே போட்டுக் கலாய்க்கலாம்;-))
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இதே போல நானும் ஒரு பாஷை கேள்விப்பட்டேன்! பயன்படுத்தியும் இருக்கிறேன்!
" இக்கிடு இந்த பக்கிடு பதிவை, நெக்கிடு நேத்து எக்கிடு எதிர் பக்கிடு பார்த்தேன்! நக்கிடு நல்ல வெக்கிடு வேளை, நிக்கிடு நீங்க பொக்கிடு போட இக்கிடு இல்ல ! "
இந்தப் பதிவை நேற்று எதிர்பார்த்தேன், நல்ல வேளை, நீங்க போடவில்லை என்று சொல்லவாறீங்க....ஆனால் உங்களின் இந்தப் பாசையினை நான் அறியவில்லைச் சகோதரம்....
எம்மைப் போன்ற குழப்படிகாரப் பிள்ளைகளுக்குத் தெரியாமல் ரகசியாமாக ஒரு மொழியினைப் பயன்படுத்தி, வரலாற்றுத் தவறினை இழைத்து விட்டீர்கள்;-))
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இனிமையான பழைய ஞாபகங்கள்! அருமை நண்பா!!//
நன்றிகள் சகோதரம், இன்னும் அதிகமான பழைய ஞாபகங்கள் இருக்கின்றன, கிளறத் தான் நேரமில்லை.
@Chitra
உல்உங்களுக்கு, இல்இப் பல்பதிவு, புல் புரிஞ்சுதா?
.....
எல்எங்களுக்கு, இல்இப் பல்பதிவு, புல்புரிஞ்சுது//
இது தான் என் பதிவின் வெற்றி மற்றும் காத்திரத் தன்மை, மிக்க நன்றிகள் சகோதரி. மெய் சிலிர்க்கிறது உங்களைப் போன்ற சகோதர்களிடமிருந்து இதனை எதிர்பார்க்கும் போது.
நன்றிகள் சகோதரம்.
@இக்பால் செல்வன்
போங்க பாஸ் ! நமக்கு நிறைய வேளை இருக்குதுங்க ...........//
ஏன் பாஸ், நான் உங்களை வேலைக்குப் போக வேண்டாம் என்று சொன்னேனா?
அவ்............
@ஆதவா
உல்லும் இல்லும்
எல்லும் கொல்ல
நல்ல நல்ல படிக்க
முடியு தில்ல?//
சகோதரம், பதிவின் இறுதியில், இந்தப் மொழியினை எப்படிக் கையாள்வது என்று விளக்கமளித்திருக்கிறேன்.
மீண்டும் ஒரு தடவை முயற்சி செய்து பாருங்கள், நிச்சயமாய் படிக்க முடியும்.
@தமிழ்வாசி - Prakash
தல் தமிழ் மல் மறந்து போல் போச்சு! ஹில் ஹி...ஹில் ஹி...ஹில் ஹி...//
நில்நிச்சயமாவோ? நல்நான் நல்நம்ப மல்மாட்டேன்.
நன்றிகள் சகோதரம்.
@MANO நாஞ்சில் மனோ
/கல்கலைஞர், சொல்சோனியா, நல்நன்றாக கல்கபட நல் நாடகம் செல்சேர்ந்து நல்நடிக்கீனம்.//
ஹா ஹா ஹா ஹா நல்ல உதாரணம் ஹா ஹா ஹா...//
நன்றிகள் சகோதரம்.....இது உதாரணமா? இல்லை நிஜமான கருத்தா?
@MANO நாஞ்சில் மனோ
//இந்த நினைவுகளை மீட்டிப் பார்க்கையில் என் பாடசாலைக் காலச் சிறு பராயம் மட்டும் நினைவில் வந்து போகிறது.//
நீங்கள் "ல்' வைத்து பேசினீர்கள். நாங்கள் சிறு வயதில் அதே போல "ன" வச்சி பேசுவோம்.....//
சகோ, சும்மா ஒத்த வரியிலை சொல்லி விட்டு, எஸ் ஆகினால் எப்பூடி? அதனை விளக்கமாக, விளக்கி ஒரு பதிவாக போட்டால் தானே, எல்லோரும் அறிந்து கொள்வார்கள். உங்கள் பழைய நினைவுகளையும் பதிவாக்குவீர்கள் என நினைக்கிறேன்.
நன்றிகள் சகோ.
@MANO நாஞ்சில் மனோ
//உல்உங்களுக்கு, இல்இப் பல்பதிவு, புல் புரிஞ்சுதா?//
புல்...//
பதிவைப் படிச்சு புல் ஆகி விட்டதா(கண்டிப்பா பதிவில் போதை இல்லை)
இல்லை.........உங்களுக்கு வயிறு புல் ஆகி விட்டதா;-))
@இராஜராஜேஸ்வரி
இம்சை அரசன்..மாதிரி மலரும் நினைவுகள். பாராட்டுக்கள்.//
நன்றிகள், நன்றிகள், இம்சை அரசன் மாதிரி என்றால் புரியவேயில்லையே?
@Nesan
மல்மறந்த வில்விளையாட்டேல்லாம் நல்நல்ல ஞாபகம் வல்வருதய்யா பெல்பொடியா!//
முல்மூளையின் ஒல்ஓரத்தில் பல்பதிந்திருந்த நல்ஞாபகங்களை, நல்நான் துல்தூசு தல்தட்டி வில்விட்டிட்டன் எல்என்று சொல்சொல்லுறீங்கள்.
நல்நன்றிகள் சல்சகோதரா.
@ராஜ நடராஜன்
தலைப்பு எனக்கும் தெரிந்த பால பாடமாக இருக்கும் போல இருக்குதே:)
படிச்சிட்டு வருகிறேன்..//
உங்களுக்கும் இந்தத் தலைப்புத் தெரியுமா?
அப்படிப் போடுங்க சகோ, அருவாளை...
@ஹேமா
என்ன நிரூ...வெள்ளிக்கிழமை கொஞ்சம் லீவு விட்டிருக்கீங்கபோல.எல்லாரும் விளையாடட்டும் எண்டு.
பாருங்கோ நடாவுக்கு இதுகூட விளங்கேல்ல.பாவம் நடா !//
சகோதரி, உங்களின் வாயால் இப்படி ஒரு வார்த்தையைக் கேட்க நாங்கள் என்ன தவம் செய்தோமோ?
ஏன்னா......................................................நீங்க நம்மடை வயசையெல்லோ குறைச்சு சொல்லிட்டீங்க;-))
@ராஜ நடராஜன்
/இல்இந்த முல்முறைத் தெல்தேர்தலிலை, யல்யார், வெல்வெல்லப் பொல்போகீனம்?//
அல் அது மெல் மே பல் 13க்கு அல் அப்புறம் தெல் தெரியும்.
சல் சரியா://
இல்இதுக்காக, கல்காத்திருக்கிறன்.
@ராஜ நடராஜன்
//பாருங்கோ நடாவுக்கு இதுகூட விளங்கேல்ல.பாவம் நடா !//
ஹேமா!எல் எனக்கு பில் பிகாசோ கல் கவிதை தல் தான் தெல் தெரியாது:)
உல் உங்க கல் கவிதைக்கு எல் எல்லோரும் அல் அவருக்கு புல் புரிந்த மல் மாதிரியே பில் பின்னூட்டம் சொல் சொல்றாங்க பில் பிகாசோ பல் படம் மாதிரி.
நல் நான் நில் நீங்கள் எல் என்ன சொல் சொல்ல வல் வாறீங்க எல் என்பதுவே எல் எனக்கு முல் முக்கியம்.
ஹேமா!இந்தப் பின்னூட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா://
ஆஹா.......ஆஹா...........
சகோ, ஒரே இடத்திலை வைத்து, டபுள் அட்டாக் நடாத்திட்டாரு, நம்ம பதிவிற்கும் கருத்திச் சொன்னதுடம், சகோதரி ஹேமாவின் கவிதைக்கு வாசகர்களின் விளக்கங்கள் எப்படி அமைகின்றன என்றும் சொல்லிட்டாரு.
நீங்க........எப்பவுமே ஆளுங் கட்சி தானா சகோ?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
NIRU..... COME TO ON LINE//
சகோ, வந்திட்டேன் சகோ.
@Mathuran
நன்றி நிரூபன்... பள்ளி ஞாபகங்களை மீட்டியதற்கு....//
நன்றிகள் சகோ. அப்படியென்றால் நீங்கள் இப்போ ஐந்தாம் வகுப்பா? இல்லை இரெண்டாம் கிளாசிலையா இருக்கிறீர்கள்?
@சிவகுமார்
இதே போல ஒவ்வொரு எழுத்துகளுக்கு முன்னால் 'க' சேர்த்து பேசி நாங்கள் விளையாடுவோம்.
உ.தா . நீ நலமா ? கநீ கநகலகமா ?//
இது தான் சகோ, தமிழனுக்கும் தமிழனுக்கும் உள்ள ஒற்றுமை. பார்த்தீங்களா? நானும் நீங்களும் ஒன்னாப் படிச்சிருக்கோம்ல.....;-))
@Jana
பல்பழைய செய்செய்திலாம்...நல்நல்நல்லா எல்எழுதி இல்இருக்கியள்.
அல்அது சல் சரி..உம் உமக்கு பெல் பாசை தெல்தெரியாமா?//
கொல்கொஞ்சம் தெல்தெரியும்.
தெரியாமா? இல் இது சில்சிங்களமோ?
@தம்பி கூர்மதியன்
// இது என்னுடைய பாடசாலைக் கால நினைவுகளை மீட்டும் பதிவாகும்...//
ஹி ஹி.. மீட்டு எடுங்க.. பாப்போம்..//
சகோதரம், வேணாம், ஏதோ வாயுக்காலை தங்க கட்டி எடுக்கிற ஆளைப் பாத்து சொல்லுறது மாதிரி, என்னையப் பாத்து மீட்டு எடுங்க என்று சொல்லுறீங்க..அப்புறம் நான் சாமியாராகிடுவேன்;-))
@தம்பி கூர்மதியன்
// புரியாத மாதிரித் தான் திட்டங்களைத் தீட்ட வேண்டும்//
//போராட்ட அமைப்புக்களும் தமது இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக//
இது உங்களுக்கே ஓவரா இல்ல.?//
சகோ, நாமளும் சின்ன வயசிலை குறூபாக தானே இருந்தனாங்கள்.....ஒரு டீமாக தானே இருந்தோம். அதான் சகோ.
@தம்பி கூர்மதியன்
//பிடுங்கப் போதல், கிணற்றில் நீந்தப் போதல், கிறிக்கற் அடிக்கப் போதல், இளநீர் பிடுங்கப் போதல்//
அடடே!! நம்ம கட்சி.. ஹி ஹி..//
சகோ, பாக்கு நீரிணை நம்மளைப் பிரிச்சாலும் நாம பாசத்திலை அண்ணன், தம்பி எங்கிறதுக்கு இதை விட வேறை என்ன ஒற்றுமை வேண்டும்?
அப்ப தேர்தலிலை வேட்பாளரா உங்களைத் தெரிவு செய்து தலைவராக்கிடுறேன். நான் தொண்டன் ஆகிடுறேன், ஓக்கேவா;-)))))))
@தம்பி கூர்மதியன்
/சக மாணவர்களுக்குத் தெரியாமல் செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் பிளானாக இருக்கும்.//
நண்பர்களிடம் மறைப்பதா.?? அய்யகோ.!!//
நண்பர்களிடம் ஏன் மறைக்கிறோம் என்றால், ஒரு சில நம்(ண்)பர்கள் இந்த மாதிரி திருட்டு விளையாட்டுக்கு வரமாட்டாங்க, அப்புறூவர் ஆகி நம்மளையே ஹெட் வாத்தியார் கிட்ட போட்டுக் கொடுத்திடுவாங்க....
இவங்களாச்சும் பரவாயில்லை,
இன்னும் சில பாசக்காரப் பசங்க இருக்கிறாங்களே,
அவங்க, நம்ம வூட்டுக்குப் பக்கத்திலை இருப்பானுங்க... நைசா அப்பா, இல்லாட்டி அம்மா, இல்லாட்டி சகோதரர்களிடம் திரியை பத்த வைச்சிடுவாங்க.
பிறகு நம்மடை இந்தமாதிரி வம்பு வேலையெல்லாம் வீட்டுக்குத் தெரிஞ்சு, வீட்டைச் சுத்தச் சுத்த நாள் பூரா நமக்கு கும்பாவிஷேகம், சங்காபிஷேகம் பண்ணி, கை காலை காயமாக்கிடுவாங்க.
இப்ப புரியுதா, நம்ம டெக்னிக்கு;-))
@தம்பி கூர்மதியன்
//நாங்கள் கண்டு பிடித்த மொழி என்று நினைக்க வேண்டாம்,//
அட நம்ம நிரூபன பத்தி நமக்கு தெரியாதா.? உங்களுக்கு அவ்வளவு தெறம கிடையாதுன்னு எனக்கு தெரியும்..//
நானே உண்மையை ஒத்துக் கிட்டு, வெளியை சொல்லிட்டேன், அதை நீங்க வேறை மேடை போட்டு, ஊரைக் கூட்டிச் சொல்லனுமா;-))
வலிக்குது;-))))))))))
அவ்................
@தம்பி கூர்மதியன்
/உல்உங்கடை நல்நாட்டிலை கல்கலைஞர் கொல்கொள்ளை அல்அடிச்சு இல்இருக்கிறார் எல்என்னும் வில்விடயத்தை, நல்நாங்கள் அல்அறிவோம்.//
இது ரகசியமா.?? ஏன் உங்க பாசையில சொல்றீங்க.? இதுதான் ஊருக்கே தெரிஞ்சதாச்சே//
உங்க ஊருக்கு மட்டுமா ஆட்டோ, வரும்?
நம்ம ஊருக்கு கப்பலே வந்திடாது))))))))));-
@தம்பி கூர்மதியன்
//உல்உங்களுக்கு, இல்இப் பல்பதிவு, புல் புரிஞ்சுதா?//
புரியாம பின்ன.. நல்லாவே புரிஞ்சிது..//
உங்களனைவருக்கும் புரிந்ததன் ஊடாக, ஒரு சிறிய விடயத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்ட திருப்தி, நன்றிகள் சகோதரம்.
@தம்பி கூர்மதியன்
//நல்நான் பொல்போய், மல்மாலை மில் மீண்டும் வல் வருகிறேன்!//
நைட்டே ஆகபோகுது.. வாங்கப்பா...//
வந்திட்டன் சகோ..
@டக்கால்டி
ஜெயம் படத்துல வர சதா தங்கச்சி பொண்ணு தான் ஞாபகத்துக்கு வருது சகா...ஹ்ம்ம் என்ன பண்ண? இட் அது பட் ஆனால் வாட் அது என்ன ஆகும்...//
ஆகா... ஆகா..இது வேறை புது ரகளையா இருக்கிறதே சகோ, நன்றிகள் சகோ.
@சி.பி.செந்தில்குமார்
tamil teacher? hi hi//
உங்களின் அடுத்த பதிவிற்கு தமிழ் டீச்சர் ஸ்டில் தேடுறீங்களா?
@மாதேவி
இளமைக்கால நினைவலைகள்...//
வசனம் முடிவடையாது தொக்கி நிற்கிறது...
ஏன் ஒத்த வார்த்தையிலை சொல்லிட்டு, எஸ் ஆகிட்டீங்க;-))
நன்றிகள் சகோதரம்.
Post a Comment