Thursday, April 7, 2011

நான் ஒரு பெண் வாங்கியுள்ளேன்!

SMART COMMENT FOUNDER SAID: This is a adult only Concept, No permission For Babies.   


உறவுகளே, இப் பதிவினூடாக உங்களின் தமிழறிவிற்குச் சவால் விட வந்திருக்கிறேன்.  இங்கே நான்கு தலைப்புக்களில் உங்களுக்கான, உங்கள் சிந்தனைகளைத் தூண்டக் கூடிய, உங்கள் மூளைகளுக்கு வேலை கொடுக்கும் வகையிலான விடயங்கள் உள்ளன.

போட்டி விதி முறைகள்: ஒருவர் எத்தனை கேள்விகளுக்கு வேண்டுமானாலும் பதில் சொல்லலாம், எத்தனை தடவை வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். ஆனால் பரிசில்கள் இறுதி முடிவுகளின் பின்னர் தான் வழங்கப்படும்.


முதலாவது விடயம், வெளியூரில் உள்ள மகன் தந்தைக்கு அனுப்பும் கடிதம், 
இலங்கைத் தீவின் யுத்த சூழ் நிலையால் தனது பள்ளிப் படிப்பை இடை நடுவில் நிறுத்தி விட்டு, நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்த ஒரு இளைஞனின் கடிதம் இது. 

                                                                                                                                         21.04.1992
                                                                                                                                        பிராங்பூட்,
                                                                                                                                        சேர்மணி,

                                                    அன்புள்ள அப்பாவிற்கு, ஆசை மகன் எலுதிக் கொல்வது.
நான் நலம், நீங்களும் இறைவன் அருளல் நலமாக இருப்பீர்கல் என நினைக்கிறேன். அப்பா, நான் கடந்த வாரம் ஒரு பெண் வாங்கியுள்ளேன். இது தான் எங்கள் நாட்டில் உள்ள அழகான பெண். விலை கொஞ்சம் அதிகம். இரண்டு மூன்று தடவை யூஸ் பண்ணினேன். நன்றாகப் பாவிக்கிறது. உங்களுக்கும் நான் யூஸ் பண்ணிய பெண் படிக்கும் என்பதால் அனுப்பி வைக்கிறேன்.  கடிதம் கிடைத்தமும் பல் போடவும்.
                                                                                                                  இப்படிக்கு,
                                                                                                                   உங்கள் பச மகன்,
                                                                                                                    ரூபன்...

இதில் உள்ள உங்கள் தமிழறிவிற்குச் சவால் விடும் விடயம் என்னவாக இருக்கும்? கடிதத்தில் உள்ள தவறுகளைக் கண்டறிந்து, இக் கடிதத்தினைத் திருத்தி எழுத வேண்டும். வீரர்களே...........புறப்படுங்கள்... உங்களை ஒருத்தன் சீண்டிப் பார்த்து விட்டான்! 


அடுத்த விடயம்,  ஒரு சிறிய பத்திரிகைச் செய்தி, இச் செய்தியில் உள்ள தவறினைத் திருத்தி எழுத வேண்டும், முடியுமா? முடியுமா?


இலங்கை அரசாங்கமானது விவசாயிகளின் நன்மை கருதி சிறுநீர்த் தேக்கங்களை அமைக்கவுள்ளதுடன், நீர்ப்பாசானாத் திட்டங்களையும் விரிவுபடுத்தவுள்ளது.


அடுத்து,  ஒரு கவிதை, இக் கவிதையில் சிலேடையாய் இரண்டு சொற்கள் ஒளிந்துள்ளன, அவை எவை, எவை எனக் கூற வேண்டும். 


இன்றைய தமிழரின் நிலமை
தலைவிதிவசமாய் ஆகி விட்டது!


இறுதியாக இன்னுமோர் கவிதை, இக் கவிதையினுள் தனது ஒரு சில பாடல்கள் மூலம் முன் பொரு காலத்தில் எல்லோரையும் ஆட்டிப் படைத்த, ஆட வைத்த பிரபல நடிகை ஒருவரின் பெயர் மறைந்துள்ளது.  யார் அந்த நடிகை என்று கண்டறிய முடியுமா?

ரம்பாவின் நடனத்தால்
ராத்திரியைத் தொலைத்தேன்
சினேகாவின் சிரிப்பில்
சிந்தனையை இழந்தேன்,
அசினின் அழகு கண்டு
அன்புக் காதலியை மறந்தேன்,
நதியாவின் நடனத்தால்
நைல் நதியின் அர்த்தம் தனை உணர்ந்தேன்!!
                                                                                        

இது உங்கள் சிந்தனைக்கும், தமிழறிவிக்கும் ஒரு சவாலா அமையட்டும்!

சிங்கத்தைச் சீண்டிப்புட்டான் எனும் ஒரு உணர்வு மனதினுள் வர வேண்டாமா? இதோ....................பதில்களுடன் பின்னூட்டப் பெட்டியைத் தட்டுங்கள் நண்பர்களே!

105 Comments:

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

வடை எனக்கே...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

வெட்டு...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அருவா...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

கத்தி...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

கடப்பாரை....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

குத்து...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

கோடாலி....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

சுத்தியல்....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஆணி....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

பக்கோடா...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

டீ...

ம.தி.சுதா said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

காப்பி...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

21.04.1992
பிராங்பூட்,
ஜேர்மனி,

அன்புள்ள அப்பாவிற்கு, ஆசை மகன் எழுதிக் கொள்வது.
நான் நலம், நீsங்களும் இறைவன் அருளல் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்பா, நான் கடந்த வாரம் ஒரு பென் வாங்கியுள்ளேன். இது தான் எங்கள் நாட்டிsல் உள்ள அழகான பென். விலை கொஞ்சம் அதிகம். இரண்டு மூsன்று தடவை யூஸ் பண்ணினேன். நன்றாகப் பாவிக்கிறது. உங்களுக்கும் நான் யூஸ் பண்ணிய பென் பிடிக்கும் என்பதால் அனுப்பி வைக்sகிறேன். கடிதம் கிடைத்ததும் பதில் போடவும்.
இப்படிக்கு,
உங்கள் பச மகன்,
ரூபன்..

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அடடா டீ'யோட முடிச்சி வச்சிட்டாரே மதி சுதா....

ம.தி.சுதா said...
Best Blogger Tips

இலங்கை அரசாங்கமானது விவசாsயிகளின் நன்மை கருதி சிறு நீர்த் தேக்கங்களை அமைக்sகவுள்ளதுடன், நீர்ப்பாசானாத் திட்டங்களையும் விரிவுபடுத்தவுsள்ளது.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ரம்பாவின் நடனத்தால்
ராத்திரியைத் தொலைத்தேன்
சினேகாவின் சிரிப்பில்
சிந்தனையை இழந்தேன்,
அசினின் அழகு கண்டு
அன்புக் காதலியை மறந்தேன்,
நதியாவின் நடனத்தால்
நைல் நதியின் அர்த்தம் தனை உணர்ந்தேன்!!



இதை எவ்வளவு கஷ்ட பட்டு எழுதினேன் தெரியுமா....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

//சிங்கத்தைச் சீண்டிப்புட்டான் எனும் ஒரு உணர்வு மனதினுள் வர வேண்டாமா? //

அதான் வடை போண்டா பஜ்ஜி எல்லாம் வாங்கிட்டேன் ஹா ஹா ஹா ஹா....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

21.....

Jana said...
Best Blogger Tips

ஆ....அன்ன ஹரி..மதிசுதா திருத்தி அமைக்குறார். ஸோ நான் அந்த விளையாட்டுக்கு வரவில்லை. ஆனால் பயலின் கடிததத்தில் தப்பு இல்லை. அதை வாங்கி 3 தடவை யூஸ் பண்ணி வேறு விட்டான். பலே...

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

ha....ha...ha... raittu. vidu joot

Chitra said...
Best Blogger Tips

நிரூபன் சார், தமிழ் வார்த்தைகளை, தவறாக பிரித்து எழுதினாலோ, சின்ன சின்ன எழுத்துப் பிழைகளுக்கு இடம் கொடுத்தாலோ, வில்லங்கமான அர்த்தங்களை கொண்டு வந்து தந்து விடும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். தமிழ், இலக்கண சுத்தமாக எழுதினால், "சொல்ல வந்த செய்திகளை அ"ளி"க்கும். இல்லை என்றால், சொல்ல வந்த செய்திகளை அ"ழி"க்கும்." :-)))))

ம.தி.சுதா said...
Best Blogger Tips

இன்றைய தமிழரின் நிலமை
(தலை) விதிவசமாய் ஆகி விட்டது!

இன்றைய தமிழரின் நிலமை
தலைவிதி (வசமாய்) ஆகி விட்டது!

ம.தி.சுதா said...
Best Blogger Tips

/////ரம்பாவின் நடனத்தால்
ராத்திரியைத் தொலைத்தேன்
சினேகாவின் சிரிப்பில்
சிந்தனையை இழந்தேன்,
அசினின் அழகு கண்டு
அன்புக் காதலியை மறந்தேன்,
நதியாவின் நடனத்தால்
நைல் நதியின் அர்த்தம் தனை உணர்ந்தேன்!!////

medicine exam ல் விழையாய் பதிலளித்தால் மநை பள்ளிவழங்கவார்கள் அதனால் சிந்திக்கிறேன் அறிந்தால் பதிலிடுகிறேன்... வெற்றியோ தோல்வியோ பங்கு பற்றிய திருப்தியுடன் போகிறேன்...

www.eraaedwin.com said...
Best Blogger Tips

ஆஹா நிரூபன். நல்லாத்தான் இருக்கு இந்த விளையாட்டும்.

நிரூபன்,
பலமுறை தமிழ் மணத்தில் பதிவிட முயன்று தோற்றேன். கணினியில் நான் ஒரு தத்தக்கா பித்தக்கா. சரி செய்து தர முடியுமா? கடவு சொல்லை தரவா? இப்போது எனது வலையில் இண்டளியை ஒரு நண்பர் வைத்துக் கொடுத்தார். அதேபோல் செய்து தர இயலுமா? சிரமம் எனில் மன்னிக்கவும்

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

வடை எனக்கே..
வெட்டு...
அருவா....//

சகோ, இப்ப முடிவா என்ன தான் கேட்கிறீங்க....
வடையா இல்லை அரிவாளா வேணும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


போண்டா...
வெட்டு..
அருவா...
கத்தி...
கடப்பாரை....//

இதுவும் இலவசமாக கொடுக்கிறாங்கள் என்று சொல்ல வாறீங்களா?

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔


This post has been removed by the author.//

இடுகையை வலைப் பதிவு நிர்வாகி நீக்கி விட்டார். அப்படீன்னா?
என்ன அர்த்தம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


காப்பி...//

பில்டர் காப்பியா இல்லை நாயார் கடை சாயாவா வேணும்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

it's not suitable to write in ENGLISH to this post.so pls wait another 7 hrs.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

21.04.1992
பிராங்பூட்,
ஜேர்மனி,//

இவ் இடத்தில் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம் சகோ.

ரேவா said...
Best Blogger Tips

சகோ அந்த எழுத்துப் பிழைகள் தெரியுது...ஆனா மத்த எதுவும் எனக்கு தெரியலையே

Mathuran said...
Best Blogger Tips

றூம் போட்டு யோசிப்பிங்களோ........ முடியல நிருபன்//

Anonymous said...
Best Blogger Tips

//இலங்கை அரசாங்கமானது விவசாயிகளின் நன்மை கருதி சிறுநீர்த் தேக்கங்களை அமைக்கவுள்ளதுடன், நீர்ப்பாசானாத் திட்டங்களையும் விரிவுபடுத்தவுள்ளது.//

இதில் சிறுநீர்த் தேக்கம் என வரக்கூடாது - இது சிறிய நீர்த்தேக்கம் என வர வேண்டும். மலையாளத்திலும் சிறிய என்று தான் வரும்.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

தமிழ் வாத்தியாருக்கு ஒரு வணக்கத்தை போட்டுட்டு நான் அப்பீட்டு

Anonymous said...
Best Blogger Tips

அதே போல கடித்தத்தில் உள்ள பிழைகள் :

எலுதி - எழுதி

அருளல் - அருளால்

இருப்பீர்கள் - இருக்கின்றீர்கள்

பெண் ( pen ) - பேனா, பேனை, எழுதுகோல்

பல் - பதில்

பச - அன்பு

Anonymous said...
Best Blogger Tips

//நீர்ப்பாசானாத் திட்டங்களையும் விரிவுபடுத்தவுள்ளது//

இதில் நீர்ப்பாசான அல்ல - நீர்பாசனம் என வரவேண்டும். பாசானம் என்றால் விடம்/நஞ்சு

Anonymous said...
Best Blogger Tips

//இன்றைய தமிழரின் நிலமை
தலைவிதிவசமாய் ஆகி விட்டது!//

நிலமை - நிலைமை

தலைவிதிவசமாய் ஆகி - தலை விதி வசமாகி

இரண்டு சொற்கள் தெரியவில்லை சகோ. அந்த நடிகையும் தெரியவில்லை நீங்களே சொல்லுங்கள்

ஜீவன்சிவம் said...
Best Blogger Tips

அவ்வளோ பொறுமை கிடையாது சாமி, நீங்களே சொல்லிடுங்கோ

Ram said...
Best Blogger Tips

விளையாட்டுக்கு வரவில்லை..

மன்னியுங்கள்..

YOGA.S said...
Best Blogger Tips

21.04.1992 பிராங்பேர்ட்,ஜேர்மனி. அன்புள்ள அப்பாவுக்கு ஆசை மகன் எழுதிக் கொள்வது,நான் நலம்.நீங்களும் இறைவன் அருளால் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.அப்பா,நான் கடந்த வாரம் ஒரு பென்(பேனா)வாங்கியுள்ளேன்.இது தான் எங்கள் நாட்டில்?!உள்ள அழகான பென்(பேனா).விலை கொஞ்சம் அதிகம்.இரண்டு,மூன்று தடவை யூஸ்(பாவித்து)பண்ணினேன். நன்றாகப் பாவி!?க்கிறது. உங்களுக்கும் நான் யூஸ்(பாவித்த)பண்ணின பென்(பேனா)பிடிக்கும் என்பதால் அனுப்பி வைக்கிறேன்.கடிதம் கிடைத்ததும் பதில் போடவும். இப்படிக்கு உங்கள் பாச மகன் ரூபன். ///இலங்கை அரசாங்கமானது,விவசாயிகளின் நன்மை கருதி சிறிய வகை நீர்த் தேக்கங்களை அமைத்து நீர்ப்பாசனத் திட்டங்களை விரிவுபடுத்துயுள்ளது//(நம்பத் தகுந்த செய்தி அல்லாவிடினும்) இன்றைய தமிழரின் நிலைமை:(1)தலைவிதி வசமாகி விட்டது (2)தலைவி திவசமாகி விட்டது அந்த நடிகை தான்..................................................................அஞ்சலிதேவியோ???????

ஹேமா said...
Best Blogger Tips

தமிழோடு விளையாட நிறையவே பிடிக்கும்.ஆனால் பிந்திப்போச்சு.
எல்லாரும் சொல்லியாச்சு.

தலைவிதி வசம்
தலைவி திவசம்....நானும் இப்படித்தான் நினைத்தேன்.

நடிகை சில்க் ஸ்மிதா !

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

21.04.1992
பிராங்ஃபர்ட்,
ஜெர்மனி

அன்புள்ள அப்பாவிற்கு, ஆசை மகன் எழுதிக்கொள்வது,
நான் நலம், நீங்களும் இறைவன் அருளால் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்பா, நான் கடந்த வாரம் ஒரு எழுதுகோல் வாங்கினேன். இதுதான் எங்கள் நாட்டில் உள்ளதிலேயே அழகான எழுதுகோல். விலை கொஞ்சம் அதிகம். இரண்டு மூன்று தடவை பயன்படுத்தினேன். நன்றாக பாவிக்கிறது. உங்களுக்கும் நான் பயன்படுத்திய எழுதுகோல் பிடிக்கும் என்பதால் அனுப்பி வைக்கிறேன். கடிதம் கிடைத்ததும் பதில் போடவும்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு மகன்,
ரூபன்...

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

இலங்கை அரசாங்கமானது விவசாயிகளின் நன்மை கருதி சிறு நீர்தேக்கங்களை அமைக்கவுள்ளதுடன், நீர்ப்பாசனத் திட்டங்களையும் விரிவுபடுத்தவுள்ளது.

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

இன்றைய தமிழரின் நிலைமை தலைவிதி வசமாகிவிட்டது...

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

நடிகை பெயர் தெரியவில்லை... இருப்பினும் ரா, சி, அ, ந என்னும் நான்கு முதல் எழுத்துக்களை மையப்படுத்தியே விடை இருக்கும் என்று நம்புகிறேன்...

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

முதலில் சகோதரன், மதிசுதாவின் முயற்சிகளுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

21.04.1992
பிராங்பூட்,
ஜேர்மனி,

அன்புள்ள அப்பாவிற்கு, ஆசை மகன் எழுதிக் கொள்வது.
நான் நலம், நீsங்களும் இறைவன் அருளல் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்பா, நான் கடந்த வாரம் ஒரு பென் வாங்கியுள்ளேன். இது தான் எங்கள் நாட்டிsல் உள்ள அழகான பென். விலை கொஞ்சம் அதிகம். இரண்டு மூsன்று தடவை யூஸ் பண்ணினேன். நன்றாகப் பாவிக்கிறது. உங்களுக்கும் நான் யூஸ் பண்ணிய பென் பிடிக்கும் என்பதால் அனுப்பி வைக்sகிறேன். கடிதம் கிடைத்ததும் பதில் போடவும்.
இப்படிக்கு,
உங்கள் பச மகன்,
ரூபன்..//


மதிசுதா அனுப்பிய கடிதத்தில் ஒரு சில திருத்தங்களை மேற் கொள்ள வேண்டியுள்ளது,

இங்கே மதிசுதா, இறைவன் அருளல் என்பதை... கவனிக்கத் தவறி விட்டார். இறைவன் அருளால் என வரவேண்டும்,


உங்கள் பச மகன்//

உங்கள் பாச மகன் ரூபன் என வர வேண்டும்.

முயற்சிக்கு நன்றிகள் சகோ. இரண்டு தவறுகளைத் திருத்தத் தவறி விட்டீர்கள்.//


மதிசுதா அனுப்பிய கடிதத்தில் ஒரு சில திருத்தங்களை மேற் கொள்ள வேண்டியுள்ளது,

முதலாவது தவறு, பிராங்பூட், என்பது பிராங்போர்ட் என வர வேண்டும்,

இங்கே மதிசுதா, இறைவன் அருளல் என்பதை... கவனிக்கத் தவறி விட்டார். இறைவன் அருளால் என வரவேண்டும்,


உங்கள் பச மகன்//

உங்கள் பாச மகன் ரூபன் என வர வேண்டும்.

முயற்சிக்கு நன்றிகள் சகோ. மூன்று தவறுகளைத் திருத்தத் தவறி விட்டீர்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


அடடா டீ'யோட முடிச்சி வச்சிட்டாரே மதி சுதா....//

இல்லை சகோ, இனிமேத் தான் மிக்ஸர், பகோடா, பூந்தி லட்டு, எல்லாமே வரும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔


இலங்கை அரசாங்கமானது விவசாsயிகளின் நன்மை கருதி சிறு நீர்த் தேக்கங்களை அமைக்sகவுள்ளதுடன், நீர்ப்பாசானாத் திட்டங்களையும் விரிவுபடுத்தவுsள்ளது.//


நன்றிகள் சுதா,

விவசாsயிகளின் நன்மை கருதி சிறு நீர்த் தேக்கங்களை //

உங்கள் விடையின் அடிப்படையில் இவ் வசனத்தைப் படிக்கும் போது.. சிறு நீர்த் தேக்கங்களை என்று சேர்த்துப் படிப்பது போன்று தான் வரும், ஆதலால்,

’’சிறிய நீர்த்தேங்கள் என வர வேண்டுன்,

அடுத்தது
நீர்ப்பாசானாத்//

இது நீர்ப்பாசன.. என வந்திருந்தால் உங்களுக்கான வெற்றிப் பரிசு வாசற் கதவுகளைத் தட்டியிருக்கும்,

ஓடோடி, வந்து ஆர்வமுடன் கலந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களின் முயற்சிக்கும் நன்றிகள். நான் நினைக்கிறேன், அவசர அவசரமாகப் பதில்களைச் சொல்ல வேண்டும் எனும் நோக்கத்தில் சிறு, சிறு தவறுகளைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

ரம்பாவின் நடனத்தால்
ராத்திரியைத் தொலைத்தேன்
சினேகாவின் சிரிப்பில்
சிந்தனையை இழந்தேன்,
அசினின் அழகு கண்டு
அன்புக் காதலியை மறந்தேன்,
நதியாவின் நடனத்தால்
நைல் நதியின் அர்த்தம் தனை உணர்ந்தேன்!!



இதை எவ்வளவு கஷ்ட பட்டு எழுதினேன் தெரியுமா....//

இதை எழுதினது நான்...
இதை அப்படியே காப்பி செய்து பேஸ்ற் பண்ன உங்களுக்கு கஷ்டமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ


அதான் வடை போண்டா பஜ்ஜி எல்லாம் வாங்கிட்டேன் ஹா ஹா ஹா ஹா....//

நான் இன்னமும் திருப்பூர் ஆனந்த பவனுக்குச் செலுத்த வேண்டிய கடனை அடைக்கவில்லை என்பதால், வடை, பஜ்ஜி தரமாட்டேன் எனச் சொல்றாங்க சகோ,

நிரூபன் said...
Best Blogger Tips

@Jana


ஆ....அன்ன ஹரி..மதிசுதா திருத்தி அமைக்குறார். ஸோ நான் அந்த விளையாட்டுக்கு வரவில்லை. ஆனால் பயலின் கடிததத்தில் தப்பு இல்லை. அதை வாங்கி 3 தடவை யூஸ் பண்ணி வேறு விட்டான். பலே...//

பயலின் கடிதத்தில் தப்பு இல்லையா இல்லை அந்தப் பென்னில் தப்பு இல்லையா?

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash


ha....ha...ha... raittu. vidu joot//

சகோ, இப்படியே சொல்லிப் புட்டு எஸ் ஆகினா எப்பூடி?
பதிலைச் சொல்லுறது!

நிரூபன் said...
Best Blogger Tips

@Chitra


நிரூபன் சார், தமிழ் வார்த்தைகளை, தவறாக பிரித்து எழுதினாலோ, சின்ன சின்ன எழுத்துப் பிழைகளுக்கு இடம் கொடுத்தாலோ, வில்லங்கமான அர்த்தங்களை கொண்டு வந்து தந்து விடும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். தமிழ், இலக்கண சுத்தமாக எழுதினால், "சொல்ல வந்த செய்திகளை அ"ளி"க்கும். இல்லை என்றால், சொல்ல வந்த செய்திகளை அ"ழி"க்கும்." :-)))))//

நன்றிகள் சகோதரி. புரிந்து கொண்டு, ஒரு உற்சாகமான உதாரணத்தைத் தந்திருக்கிறீர்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

இன்றைய தமிழரின் நிலமை
(தலை) விதிவசமாய் ஆகி விட்டது!//

இங்கே முதலாவதாக நீங்கள் கூறுவதில் அதிகமாக அர்த்தங்கள் தொனிக்கவில்லை.

இன்றைய தமிழரின் நிலமை
தலைவிதி (வசமாய்) ஆகி விட்டது!//

உங்களின் முதலாவது பதிலும், இரண்டாவது பதிலும் ஒரே விதமான அர்த்தங்களையே தருகின்றன.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

/////ரம்பாவின் நடனத்தால்
ராத்திரியைத் தொலைத்தேன்
சினேகாவின் சிரிப்பில்
சிந்தனையை இழந்தேன்,
அசினின் அழகு கண்டு
அன்புக் காதலியை மறந்தேன்,
நதியாவின் நடனத்தால்
நைல் நதியின் அர்த்தம் தனை உணர்ந்தேன்!!////

medicine exam ல் விழையாய் பதிலளித்தால் மநை பள்ளிவழங்கவார்கள் அதனால் சிந்திக்கிறேன் அறிந்தால் பதிலிடுகிறேன்... வெற்றியோ தோல்வியோ பங்கு பற்றிய திருப்தியுடன் போகிறேன்...//


பாராட்டுக்கள் சுதா, உங்களின் மன ஆளுமைக்கும், முயற்சிக்கும் நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இரா.எட்வின்


ஆஹா நிரூபன். நல்லாத்தான் இருக்கு இந்த விளையாட்டும்.//

பதிலைச் சொல்லாமல் எஸ் ஆகிட்டீங்களே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


it's not suitable to write in ENGLISH to this post.so pls wait another 7 hrs.//

இப்ப நான் பத்து மணித்தியாலமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். பதிலைக் காணவே இல்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா


சகோ அந்த எழுத்துப் பிழைகள் தெரியுது...ஆனா மத்த எதுவும் எனக்கு தெரியலையே//

இப்புடிச் சொல்லிட்டு எஸ் ஆனா, எப்பூடி?
பதிலைச் சொல்லி, பரிசினைத் தட்ட வேண்டாமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Mathuran


றூம் போட்டு யோசிப்பிங்களோ........ முடியல நிருபன்///

யாழில் ஏன் றூம் போட்டு, காசை வீணடிக்க வேண்டும், அத்தோடு றூம் போடப் போனால் லொட்ஜ் காரன் அப்பா, அம்மாவிடம் போட்டுக் கொடுக்க மாட்டான்.
ஆதலால், நாங்க கண்டல் காடுகள், ஈச்சம் பற்றை முதலிய இடங்களிலை இருந்து தான் யோசிப்போம்.

ஒத்த வரியிலை எதையாச்சும் சொல்லி, எஸ் ஆகிடுறாங்க..
வசமா ஒருவருவருமே மாட்ட மாட்டேங்குகிறாங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


தமிழ் வாத்தியாருக்கு ஒரு வணக்கத்தை போட்டுட்டு நான் அப்பீட்டு//

இப்புடிச் சொன்னா எப்பூடி சகோ?
ஜோதியிலை ஐக்கியமாக வேணாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

அதே போல கடித்தத்தில் உள்ள பிழைகள் :

எலுதி - எழுதி

அருளல் - அருளால்

இருப்பீர்கள் - இருக்கின்றீர்கள்

பெண் ( pen ) - பேனா, பேனை, எழுதுகோல்

பல் - பதில்

பச - அன்பு//


இங்கேயும் ஒரு தவறை விட்டு விட்டீர்கள்,
இருப்பீர்கள்..........
பச... என்பது, பாச என்று வர வேண்டும்,

நான் கூறியது சொற் திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றில்லைச் சகோதரம், எழுத்துத் திருத்தங்களைத் தான் செய்ய வேண்டும் என்று.
வாழ்த்துக்கள் சகோதரா.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

/இலங்கை அரசாங்கமானது விவசாயிகளின் நன்மை கருதி சிறுநீர்த் தேக்கங்களை அமைக்கவுள்ளதுடன், நீர்ப்பாசானாத் திட்டங்களையும் விரிவுபடுத்தவுள்ளது.//

இதில் சிறுநீர்த் தேக்கம் என வரக்கூடாது - இது சிறிய நீர்த்தேக்கம் என வர வேண்டும். மலையாளத்திலும் சிறிய என்று தான் வரும்.//


//நீர்ப்பாசானாத் திட்டங்களையும் விரிவுபடுத்தவுள்ளது//

இதில் நீர்ப்பாசான அல்ல - நீர்பாசனம் என வரவேண்டும். பாசானம் என்றால் விடம்/நஞ்சு
//


சபாஷ் சகோதரம்! வாழ்த்துக்கள் சகோதரனே.
ஆஹா... ஆஹா... இரண்டாவது விடயத்தில் உள்ள தவறுகளைத் திருத்தி, சகோதரன் இக்பால் செல்வன் அவர்கள் ஒரு மின்னூலினையும், புதிய ஆங்கிலத் திரைப்படம் ஒன்றைத் தரவிறக்கிக் கொள்வதற்கான இணைய விபரங்களையும் பரிசாகப் பெற்றுக் கொள்கிறார். அவருக்குரிய பரிசில்கள் வெகு விரைவில் அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

உங்களின் முயற்சிக்கும், பதில்களுக்கும், வாழ்த்துக்களும், நன்றிகளும்!

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நான் எஸ்கேப்பு..

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

//இன்றைய தமிழரின் நிலமை
தலைவிதிவசமாய் ஆகி விட்டது!//

நிலமை - நிலைமை

தலைவிதிவசமாய் ஆகி - தலை விதி வசமாகி

இரண்டு சொற்கள் தெரியவில்லை சகோ. அந்த நடிகையும் தெரியவில்லை நீங்களே சொல்லுங்கள்//

ஒவ்வோர் தவறுகளையும் நன்றாகக் கூர்ந்து கவனித்திருக்கிறீர்கள் சகோதரம்.

நிலமை... நிலைமை...
இது சரியான பதம். மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீவன்சிவம்


அவ்வளோ பொறுமை கிடையாது சாமி, நீங்களே சொல்லிடுங்கோ//

இப்புடி ஒத்த வார்த்தையிலை சொல்லிட்டு, எஸ் ஆகினா எப்பூடி;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

விளையாட்டுக்கு வரவில்லை..

மன்னியுங்கள்.//

என்ன சகோ, எஸ் ஆகிட்டீங்க...
உங்களை அப்புறமா கவனிச்சுக்கிறன்;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@YOGA.S

21.04.1992 பிராங்பேர்ட்,ஜேர்மனி. அன்புள்ள அப்பாவுக்கு ஆசை மகன் எழுதிக் கொள்வது,நான் நலம்.நீங்களும் இறைவன் அருளால் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.அப்பா,நான் கடந்த வாரம் ஒரு பென்(பேனா)வாங்கியுள்ளேன்.இது தான் எங்கள் நாட்டில்?!உள்ள அழகான பென்(பேனா).விலை கொஞ்சம் அதிகம்.இரண்டு,மூன்று தடவை யூஸ்(பாவித்து)பண்ணினேன். நன்றாகப் பாவி!?க்கிறது. உங்களுக்கும் நான் யூஸ்(பாவித்த)பண்ணின பென்(பேனா)பிடிக்கும் என்பதால் அனுப்பி வைக்கிறேன்.கடிதம் கிடைத்ததும் பதில் போடவும். இப்படிக்கு உங்கள் பாச மகன் ரூபன்.

///இலங்கை அரசாங்கமானது,விவசாயிகளின் நன்மை கருதி சிறிய வகை நீர்த் தேக்கங்களை அமைத்து நீர்ப்பாசனத் திட்டங்களை விரிவுபடுத்துயுள்ளது//

(நம்பத் தகுந்த செய்தி அல்லாவிடினும்) இன்றைய தமிழரின் நிலைமை:(1)தலைவிதி வசமாகி விட்டது (2)தலைவி திவசமாகி விட்டது.//

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் யோகா. உங்களின் முயற்சிக்கும், உங்களின் தமிழார்வத்திற்கும் மிக்க நன்றிகள்.

இன்றைய போட்டியில் இரண்டு பெரும் தவறுகளைத் திருத்தி, பரிசினைத் தட்டிச் செல்கின்றீர்கள்.
அதுவும் முதலாம் பரிசு, வரிக்கு வரி அவதானித்து, பிழைகளைக் கண்டறிந்து, பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

உங்களுக்குரிய முதலாம் பரிசாக இரண்டு மின் நூல்களும், இரண்டு ஆங்கிலத் திரைப்படங்களும் நீங்கள் தரவிறக்கி(Download) பார்க்கக் கூடிய வகையில் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவுள்ளேன்.
உங்களது மின்னஞ்சல் முகவரியினைத் தந்தால் பரிசில்களை அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

மீண்டும் உங்களுக்கு வாழ்த்துக்களோடு பாராட்டுக்களும் நன்றிகளும்!



அந்த நடிகை தான்..................................................................அஞ்சலிதேவியோ???????//

இல்லைச் சகோதரம், அஞ்சலி தேவிக்குரிய ‘ஞ்’ எனும் எழுத்து கவிதையில் இல்லை. ஆதலால் இறுதிக் கேள்விக்குரிய பதிலை நீங்கள் தவற விட்டு விட்டீர்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

தமிழோடு விளையாட நிறையவே பிடிக்கும்.ஆனால் பிந்திப்போச்சு.
எல்லாரும் சொல்லியாச்சு.

தலைவிதி வசம்
தலைவி திவசம்....நானும் இப்படித்தான் நினைத்தேன்.//

உங்களுக்கு ஆறுதற் பரிசு மட்டும் தான் தரலாம்.

நடிகை சில்க் ஸ்மிதா !//

இல்லவே இல்லை...’’ஸ்’’ எனும் எழுத்து கவிதையில் வரவில்லையே.
நன்றிகள் சகோதரி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Philosophy Prabhakaran

1.04.1992
பிராங்ஃபர்ட்,
ஜெர்மனி

அன்புள்ள அப்பாவிற்கு, ஆசை மகன் எழுதிக்கொள்வது,
நான் நலம், நீங்களும் இறைவன் அருளால் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்பா, நான் கடந்த வாரம் ஒரு எழுதுகோல் வாங்கினேன். இதுதான் எங்கள் நாட்டில் உள்ளதிலேயே அழகான எழுதுகோல். விலை கொஞ்சம் அதிகம். இரண்டு மூன்று தடவை பயன்படுத்தினேன். நன்றாக பாவிக்கிறது. உங்களுக்கும் நான் பயன்படுத்திய எழுதுகோல் பிடிக்கும் என்பதால் அனுப்பி வைக்கிறேன். கடிதம் கிடைத்ததும் பதில் போடவும்.
இப்படிக்கு,
உங்கள் அன்பு மகன்,
ரூபன்...//

நன்றிகள் சகோதரம், நீங்கள் இன்னும் கொஞ்சம் ஒரு படி மேலே போய், தூய தமிழில், ஒரு சில சொற்களை, இணைத்து கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள்.நான் கேட்டுக் கொண்டது, கடிதத்தில் காணப்படும் தவறினைத் திருத்த வேண்டும் என்பதே. எனினும் தூய தமிழில் எழுதிய உங்களின் தமிழார்வத்தைப் பாராட்டுவதோடு, உங்களுக்கு மூன்றாம் பரிசிற்குரிய ஒரு மின் நூலினையும் அனுப்பி வைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Philosophy Prabhakaran


இலங்கை அரசாங்கமானது விவசாயிகளின் நன்மை கருதி சிறு நீர்தேக்கங்களை அமைக்கவுள்ளதுடன், நீர்ப்பாசனத் திட்டங்களையும் விரிவுபடுத்தவுள்ளது.//

சகோதரம், சிறு நீர்த் தேக்கங்களை என்றால் செய்தியாகப் வாசிக்கும் போது சிறுநீர்த் தேக்கம் எனும் பொருளில் தான் இது வரும்,
ஆதலால் சிறிய நீர்த் தேக்கம் என்பதே சரி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Philosophy Prabhakaran


இன்றைய தமிழரின் நிலைமை தலைவிதி வசமாகிவிட்டது...//

இன்னொரு சொல்லினைத் தவற விட்டு விட்டீர்கள் சகோதரம்.
உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@Philosophy Prabhakaran


நடிகை பெயர் தெரியவில்லை... இருப்பினும் ரா, சி, அ, ந என்னும் நான்கு முதல் எழுத்துக்களை மையப்படுத்தியே விடை இருக்கும் என்று நம்புகிறேன்...//

விடைக்கு அண்மையாக வந்து விட்டீர்கள், இன்னும் கொஞ்சம் றை பண்ணியிருந்தால் இதிலும் வெற்றி பெற்றிருக்கலாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

முதலில் பதிவில் உள்ள தவறுகளைப் பார்ப்போம்,
முதலாவது விடயம், இது தான்,

21.04.1992
பிராங்பூட்,
சேர்மணி,

அன்புள்ள அப்பாவிற்கு, ஆசை மகன் எலுதிக் கொல்வது.
நான் நலம், நீங்களும் இறைவன் அருளல் நலமாக இருப்பீர்கல் என நினைக்கிறேன். அப்பா, நான் கடந்த வாரம் ஒரு பெண் வாங்கியுள்ளேன். இது தான் எங்கள் நாட்டில் உள்ள அழகான பெண். விலை கொஞ்சம் அதிகம். இரண்டு மூன்று தடவை யூஸ் பண்ணினேன். நன்றாகப் பாவிக்கிறது. உங்களுக்கும் நான் யூஸ் பண்ணிய பெண் படிக்கும் என்பதால் அனுப்பி வைக்கிறேன். கடிதம் கிடைத்தமும் பல் போடவும்.
இப்படிக்கு,
உங்கள் பச மகன்,
ரூபன்...//

இங்கே

பிராங்பூட்,
சேர்மணி,
எலுதிக் கொல்வது,

நீங்களும் இறைவன் ’’அருளல்’’
இருப்பீர்கல்,
பெண்,
நான் யூஸ் பண்ணிய பெண் ’’படிக்கும்’’
’’பல் போடவும்.

உங்கள் பச மகன்,//

இவையே முதலாவதாக தரப்பட்டுள்ள கடிதத்தில் உள்ள தவறுகள்.

இக் கடிதத்தின் திருந்திய வடிவம் அடுத்த பின்னூட்டத்தினூடாகத் தரப்படும்.

நிரூபன் said...
Best Blogger Tips

1.04.1992
பிராங்போர்ட்,
ஜேர்மனி,

அன்புள்ள அப்பாவிற்கு, ஆசை மகன் எழுதிக் கொள்வது.
நான் நலம், நீங்களும் இறைவன் அருளால் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்பா, நான் கடந்த வாரம் ஒரு பென் வாங்கியுள்ளேன். இது தான் எங்கள் நாட்டில் உள்ள அழகான பென். விலை கொஞ்சம் அதிகம். இரண்டு மூன்று தடவை யூஸ் பண்ணினேன். நன்றாகப் பாவிக்கிறது. உங்களுக்கும் நான் யூஸ் பண்ணிய பென் பிடிக்கும் என்பதால் அனுப்பி வைக்கிறேன். கடிதம் கிடைத்தமும் பதில் போடவும்.
இப்படிக்கு,
உங்கள் பாச மகன்,
ரூபன்...//

நன்றிகள் எஸ் யோகா அவர்களே!

நிரூபன் said...
Best Blogger Tips

இலங்கை அரசாங்கமானது விவசாயிகளின் நன்மை கருதி சிறுநீர்த் தேக்கங்களை அமைக்கவுள்ளதுடன், நீர்ப்பாசானாத் திட்டங்களையும் விரிவுபடுத்தவுள்ளது.//

இங்கே உள்ள தவறுகள்
சிறுநீர்த் தேக்கங்கள்,
நீர்ப்பாசானத் திட்டங்கள்//

நிரூபன் said...
Best Blogger Tips

இலங்கை அரசாங்கமானது விவசாயிகளின் நன்மை கருதி சிறுநீர்த் தேக்கங்களை அமைக்கவுள்ளதுடன், நீர்ப்பாசானாத் திட்டங்களையும் விரிவுபடுத்தவுள்ளது.//

இதன் திருந்திய வடிவம்,


இலங்கை அரசாங்கமானது விவசாயிகளின் நன்மை கருதி சிறிய நீர்த் தேக்கங்களை அமைக்கவுள்ளதுடன், நீர்ப்பாசனத் திட்டங்களையும் விரிவுபடுத்தவுள்ளது//



இதில் உள்ள தவறுகளைக் கண்டறிந்து மாற்றம் செய்தவர்கள் சகோதரம் இக்பால் செல்வன் மற்றும்
சகோதரம் எஸ்.யோகா.
இவர்கள் இருவருக்கும் நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

இன்றைய தமிழரின் நிலமை
தலைவிதிவசமாய் ஆகி விட்டது!//

இதில் உள்ள
தவறு, நிலமை//

இதன் திருந்திய வடிவம்,

இன்றைய தமிழரின் நிலைமை
தலைவிதிவசமாய் ஆகி விட்டது!

இனி இச் சிறு வரிகளில் ஒளிந்திருக்கும் சிலேடைகள்

1)தலை விதிவசம்,
2)தலைவி திவசம்(ஒருவர் இறந்த பின்னர் பின்னர் ஆண்டு தோறும் அவர் நினைவாக கொண்டாடப்படும் ஒரு நினைவு கூரல் நிகழ்வின் பெயர்)

இதற்குரிய சரியான பதில்களைச் சொன்னவர்கள்,
சகோதரன் எஸ் யோகா, மற்றும் சகோதரி ஹேமா அவர்கள்.
இவ் இருவருக்கும் மீண்டும், மீண்டும் எனது நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

இன்றைய தமிழரின் நிலமை
தலைவிதிவசமாய் ஆகி விட்டது!//

இதில் உள்ள
தவறு, நிலமை//

இதன் திருந்திய வடிவம்,

இன்றைய தமிழரின் நிலைமை
தலைவிதிவசமாய் ஆகி விட்டது!

இனி இச் சிறு வரிகளில் ஒளிந்திருக்கும் சிலேடைகள்

1)தலை விதிவசம்,
2)தலைவி திவசம்(ஒருவர் இறந்த பின்னர் பின்னர் ஆண்டு தோறும் அவர் நினைவாக கொண்டாடப்படும் ஒரு நினைவு கூரல் நிகழ்வின் பெயர்)

இதற்குரிய சரியான பதில்களைச் சொன்னவர்கள்,
சகோதரன் எஸ் யோகா, மற்றும் சகோதரி ஹேமா அவர்கள்.
இவ் இருவருக்கும் மீண்டும், மீண்டும் எனது நன்றிகள்.

techsatish said...
Best Blogger Tips

84 vathu vadai

இதையும் பாருங்கள் live Watch Online TV-RADIO

நிரூபன் said...
Best Blogger Tips

இனி எல்லோருடைய மூளையினையும் பிய்த்து, உங்கள் சிந்தனையினை அதிகப்படுத்திய விடயம், இது தான், இந்த விடயத்திற்கு இறுதி நேரம் வரை ஒருவருமே பதில் சொல்லவில்லை.


ரம்பாவின் நடனத்தால்
ராத்திரியைத் தொலைத்தேன்
சினேகாவின் சிரிப்பில்
சிந்தனையை இழந்தேன்,
அசினின் அழகு கண்டு
அன்புக் காதலியை மறந்தேன்,
நதியாவின் நடனத்தால்
நைல் நதியின் அர்த்தம் தனை உணர்ந்தேன்!!//

இங்கே இக் கவிதையினுள் தனது ஒரு சில பாடல்கள் மூலம் முன் பொரு காலத்தில் எல்லோரையும் ஆட்டிப் படைத்த, ஆட வைத்த பிரபல நடிகை ஒருவரின் பெயர் மறைந்துள்ளது. யார் அந்த நடிகை என்று கேட்டிருந்தேன்.


ஒரு சில பாடல்கள் எனும் போதே உங்களுக்கு ‘கிளிக்’ ஆகி இருக்க வேண்டும்..
ரம்பாவின் முதல் எழுத்தில் வரும் ‘ர’
கண்டு எனும் சொல்லில் வரும் ‘க’
அசின், சினேகா, சிந்தனை
இம் மூன்றெழுத்துக்களிலும்
உள்ள ‘சி’’
நதியாவின் பெயரில் உள்ள ‘யா’’//

சிரிச்சு சிரிச்சு வந்தா.......சீனா தானா டோய்......... எனத் தொடங்கும்வசூல் ராஜா எம்பி, பி.எஸ், இல் இடம் பெற்ற பாடல் மூலம் அறிமுகமான நடிகையினை மறந்து விட்டீர்களா?

இவர் அம்பா சமுத்திரம் அம்பானி படத்திலும் கருணாஸுடன் ஒரு பாடலில் தூள் கிளப்பியிருந்தார்.

இந்தப் புதிருக்கான விடையினை யாருமே சரியாகச் சொல்லவில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

அன்பார்ந்த தமிழ் பேசும் உறவுகளே! உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி, என் பதிவுகளுக்கு நீங்கள் வழங்கி வரும் பேராதரவிற்கும், என்னுடைய இந்தப் போட்டிக்கு நீங்களனைவரும் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கும், உங்களின் முயற்சிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தனிமரம் said...
Best Blogger Tips

இப்படி எல்லாவற்றையும் ஓன்றாகத்தந்தால் நமக்கு நேரம் போதாது பதில் எழுத வார இறுதிநாள் வரட்டும் ஒன்று மட்டும் சிலுக்கு சுமித்தா கவர்ச்சித்தாரகை.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

எங்க ஊர் மொழியில் இப்படித்தான் கடிதம்

21.04.1992
ஃப்ராங்க்பர்ட் ஜெர்மனி,
அன்புள்ள அப்பாவிற்கு,

ஆசை மகன் எழுதிக்கொள்வது.
நான் நலம், நீங்களும் இறைவன் அருளால் நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்பா, நான் கடந்த வாரம் ஒரு பேனா வாங்கியுள்ளேன். இது தான் எங்கள் நாட்டில் உள்ள அழகான பேனா. விலை கொஞ்சம் அதிகம். இரண்டு மூன்று தடவை உபயோகித்துப் பார்த்தேன். நன்றாக எழுதுகிறாது. உங்களுக்கும் நான் உபயோகித்த பேனா பிடிக்கும் என்பதால் அனுப்பி வைக்கிறேன். கடிதம் கிடைத்ததும் பதில் போடவும். இப்படிக்கு, உங்கள் பாச மகன் ரூபன்...

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//சிறுநீர்த் தேக்கங்களை //

சிறுநீர்த் தேக்கங்கள்...சின்ன இடைவெளி:)

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//இன்றைய தமிழரின் நிலமை
தலைவிதிவசமாய் ஆகி விட்டது!//

தலைவிதி இன்றைய தமிழரின் நிலமை வசமாய் ஆகிவிட்டது

விதிவசமாய் இன்றைய தமிழரின் நிலமை தலை ஆகி விட்டது.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//ரம்பாவின் நடனத்தால்
ராத்திரியைத் தொலைத்தேன்
சினேகாவின் சிரிப்பில்
சிந்தனையை இழந்தேன்,//

ஒரு பிரபலம்ன்னு நீங்க சொல்றீங்க
என் கண்ணுக்கு பத்மினி,சாவித்திரி,கே.ஆர்.விஜயான்னு

மூணாத் தெரியுதே:)

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

ரகசியா!இது அழுகுணி ஆட்டம்...

நிலாமதி said...
Best Blogger Tips

தங்கள் வித்தியாசமான் சிந்தனைக்குரிய போட்டிக்கு என் பாராட்டுக்கள
தமிழை கொலை செய்கிறார்கள் வெளிபுனர்வுக்கு நன்றி

நிரூபன்................

தனிமரம் said...
Best Blogger Tips

தோழி நிலாமதி வெளிப்புனர்வு அல்ல விழிப்புனர்வு திருத்திக்கொள்ளவும்.

YOGA.S said...
Best Blogger Tips

அன்பான சகோதரரே!உங்கள் அன்புக்கு எந்து ஆழ்ந்த வணக்கங்கள்!புலம் பெயர்ந்திருந்தாலும் தூய தமிழில் எழுதவும்,பேசவும் நிறையவே பிடிக்கும்!புலம் பெயர்ந்தோருக்கு தமிழே தெரியாது என்று ஒரு உளறு வாயன் அண்மைக் காலங்களில் பிதற்றியது உங்கள் கவனத்தில் இருக்குமென நினைக்கிறேன்.போகட்டும்,நான் பெரிதாக திரைப் படங்கள் பார்ப்பதில்லை!உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றிகள்!உங்கள் ஆக்கங்களை அப்பப்போ படிப்பதுண்டு!தொடருங்கள்.வாழ்த்துக்கள் மீண்டும்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


இப்படி எல்லாவற்றையும் ஓன்றாகத்தந்தால் நமக்கு நேரம் போதாது பதில் எழுத வார இறுதிநாள் வரட்டும் ஒன்று மட்டும் சிலுக்கு சுமித்தா கவர்ச்சித்தாரகை.//

இல்லைச் சகோதரம், சிலுக்குச் சுமிதா என்பது தவறான விடை.....(கவிதையில் ’சு’ வரவில்லையே)

உங்கள் அனைவரின் வேண்டுகோளிற்கமைவாக, இனிமேல் சனிக் கிழமைகளில் தான் போட்டி வைப்பது என்று முடிவெடுத்துள்ளேன். சந்தோசமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


இப்படி எல்லாவற்றையும் ஓன்றாகத்தந்தால் நமக்கு நேரம் போதாது பதில் எழுத வார இறுதிநாள் வரட்டும் ஒன்று மட்டும் சிலுக்கு சுமித்தா கவர்ச்சித்தாரகை.//

இல்லைச் சகோதரம், சிலுக்குச் சுமிதா என்பது தவறான விடை.....(கவிதையில் ’சு’ வரவில்லையே)

உங்கள் அனைவரின் வேண்டுகோளிற்கமைவாக, இனிமேல் சனிக் கிழமைகளில் தான் போட்டி வைப்பது என்று முடிவெடுத்துள்ளேன். சந்தோசமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

/ரம்பாவின் நடனத்தால்
ராத்திரியைத் தொலைத்தேன்
சினேகாவின் சிரிப்பில்
சிந்தனையை இழந்தேன்,//

ஒரு பிரபலம்ன்னு நீங்க சொல்றீங்க
என் கண்ணுக்கு பத்மினி,சாவித்திரி,கே.ஆர்.விஜயான்னு

மூணாத் தெரியுதே:)//

நீங்கள் கூறும் மூன்று பெயர்களும், இந்தப் பதிவில் வரவே இல்லை.
உங்களின் இறுதி நேர முயற்சிக்குப் பாராட்டுகளு, நன்றிகளும்.
விடைகளை நான் ஏற்கனவே ரிலீஸ் செய்து விட்டேன். அடுத்த போட்டியின் போது, உங்கள் அனைவரையும் அன்புடன், ஆவலுடன் உரிய நேரத்திற்கு வர வேண்டும் என அழைக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@நிலாமதி

தங்கள் வித்தியாசமான் சிந்தனைக்குரிய போட்டிக்கு என் பாராட்டுக்கள
தமிழை கொலை செய்கிறார்கள் வெளிபுனர்வுக்கு நன்றி

நிரூபன்................//

தமிழை கொலை செய்கிறார்கள் என்று சொல்லியவாறு, கீ போர்ட்டில் ஒரு சில தவறுகளை விட்டு, நீங்கள் தமிழைப் புனர்வாழ்வு செய்து விட்டீங்களே;-))
உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் சகோதரி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


தோழி நிலாமதி வெளிப்புனர்வு அல்ல விழிப்புனர்வு திருத்திக்கொள்ளவும்.//

உங்களின் தமிழார்வத்திற்கும் நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@YOGA.S

அன்பான சகோதரரே!உங்கள் அன்புக்கு எந்து ஆழ்ந்த வணக்கங்கள்!புலம் பெயர்ந்திருந்தாலும் தூய தமிழில் எழுதவும்,பேசவும் நிறையவே பிடிக்கும்!புலம் பெயர்ந்தோருக்கு தமிழே தெரியாது என்று ஒரு உளறு வாயன் அண்மைக் காலங்களில் பிதற்றியது உங்கள் கவனத்தில் இருக்குமென நினைக்கிறேன்.போகட்டும்,நான் பெரிதாக திரைப் படங்கள் பார்ப்பதில்லை!உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றிகள்!உங்கள் ஆக்கங்களை அப்பப்போ படிப்பதுண்டு!தொடருங்கள்.வாழ்த்துக்கள் மீண்டும்!//

அடடா.........நீங்களா சகோதரம், மறுபடியும், மீண்டும், மீண்டும் நன்றிகள். உளறுவாயன் you mean நம்ம ஜனாதி.........ப....ம்..ம். புரிகிறது சகோதரம்.
உங்களுக்குரிய பரிசில்களை எப்படி அனுப்பி வைப்பது சகோதரம்?
மீண்டும் நன்றிகளும், வாழ்த்துக்களும் சகோதரம்.

யோகா.எஸ் said...
Best Blogger Tips

சகோதரரே!மீழவும் வற்புறுத்துகிறீர்கள்.பரிசுக்காக எழுதவில்லை.மீண்டும் சொல்கிறேன்,உங்களை அவமதிக்கவோ அல்லது உங்கள் அன்பை மறுதலிப்பதற்காகவோ இவ்வாறு மறுப்பதாக எண்ணி விட வேண்டாம்!உங்களால் முடிந்தால் ஓர் சிறு உதவி:தாய்த் தமிழக மக்களுக்கு எங்கள் போராட்டத்தின் உண்மை நிலை சரியாக எடுத்துச் செல்லப்படவில்லை.அதற்கு தமிழகத்திலுள்ள ஊடகங்கள் துணை செய்வதில்லை.இங்கே பதிவிடும் சொற்ப தொகை நண்பர்களுக்கு ஈழ விடுதலையின் ஆதி,அந்தம் புரியும்!ஆனால் இங்கே பதிலுரைத்த"ராஜ நடராஜன்"ஈழப் போராட்டம் பற்றிய தெளிவான புரிதலின்றியிருக்கிறார்!அவருக்கு முடிந்தால் உதவவும். நன்றிகள்!மீண்டும் பார்க்கலாம்!அடுத்த வாரம் சனிக்கிழமை.நன்றி,வணக்கம்.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

/////////@♔ம.தி.சுதா♔


This post has been removed by the author.//

இடுகையை வலைப் பதிவு நிர்வாகி நீக்கி விட்டார். அப்படீன்னா?
என்ன அர்த்தம்.
April 7, 2011 8:05 PM/////////

பாத்திரா இந்த கூகுலின் விளையாட்டை நன்றாக எத்தி விட்டு கூத்துப் பார்க்கிறது... அதை நான் தான் அழித்தேன்.. (தவறுகள் இருந்ததால்)

ம.தி.சுதா said...
Best Blogger Tips

ஃஃஃஃஃஃஇன்றைய தமிழரின் நிலமை
(தலை) விதிவசமாய் ஆகி விட்டது!//

இங்கே முதலாவதாக நீங்கள் கூறுவதில் அதிகமாக அர்த்தங்கள் தொனிக்கவில்லை.

இன்றைய தமிழரின் நிலமை
தலைவிதி (வசமாய்) ஆகி விட்டது!//

உங்களின் முதலாவது பதிலும், இரண்டாவது பதிலும் ஒரே விதமான அர்த்தங்களையே தருகின்றன.ஃஃஃஃ

சகோதரா இது இந்தத் தலையில்லை அந்தத் தலை மீள ஒரு முறை பாருங்கள்.. ஹ..ஹ...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

சகோ இப்பத் தான் நான் விட்ட தவறை பார்த்தேன் காரணம் அவசரம் அவசரம்...

சுதா SJ said...
Best Blogger Tips

அச்சச்சோ நான் சின்ன பையன்,
நான் இந்த பக்கம் வர கூடாது..
( அதான் 18+ னு சொல்லிடிங்க பாஸ், அவ்வ்வ்வ் ......)

மாய உலகம் said...
Best Blogger Tips

தாமதமாகிவிட்டது போல பிழையை திருத்திவிட்டார்களோ.... ஒரு எழுத்து மாறினாலும் ஏதேதோ அர்த்தமெல்லாம் வருதே... நான் வர்ல இந்த விளையாட்டுக்கு... அவ்வ்வ்வ்வ்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails