இன்று முதல் என் வலைப் பதிவினூடாக, இவ்வாறான அரசியல், சமூகம் சார் அரட்டைகள் இடம் பெறும் பகுதியாக ‘ஆலமரத்தடி’ எனும் பெயரில் ஒரு பகுதியினை உங்களின் பேராதரவுடன் தொடங்கலாம் என்று தீர்மானித்துள்ளேன்.
ஆலமரத்தடி, தேர் முட்டியடி, தேரடி, தவறணையடி(நம்மாளுங்க கள்ளுக் குடிக்கிற இடம்), தேநீர்க் கடையடி(கன்ரீன்), பஸ் நிலையம், சப்பாட்டுக் கடை, பொண்டுகளின்ரை அடுப்படி இவையெல்லாம் எங்கள் ஊரிலை அரட்டைகளுக்கும், காரணங்களேதுமற்ற வம்புச் சண்டைகளுக்கும் ரொம்பப் பேமஸ்ஸான இடங்களாகும்.
‘டோய் மவனே, சும்மா ட்ரெயிலர் காட்டுறதை விட்டிட்டு, மெயின் பிக்சருக்கை போடா என்று யாரோ பேசுறீங்க. சித்தப்பு எடுடா அந்த அரிவாளை(அட இது எங்கையோ கேட்ட குரலா இருக்கே, ஓ நம்ம நாஞ்சில் மனோ வாய்ஸ்) இப்பிடியெல்லாம் பேசின படி, என்னைத் தேடி ஆட்டோ வர முன்பே நான் நேரடியாக விசயத்திற்கு வாறேனுங்க.
இனி அரட்டையினுள் போவோமா..
வழக்கம் போல ஆலமரத்தடி இன்றும் கூடுகிறது. இளைய பிள்ளையாச்சி, மணியண்ணை, குணத்தான், முதலிய வயதான விஞ்ஞானிகளோடும், நிரூபனாகிய இளைய விஞ்ஞானியுடனும் அரட்டை களை கட்டத் தொடங்குகிறது. (ஊரிலை வேலை வெட்டி இல்லாமல் உள்ளூர் விடயங்கள் மூலம், உலக விடயங்களை அளக்கிற நாங்களெலோரும் விஞ்ஞானிகள் தானே, இப்பிடியாவது மனசைத் தேற்றிக்க விடுங்கப்பா)
ஆலமரத்தடியில் இருந்து கச்சானைத் தன்னுடைய பொக்கை வாயிற்குள் போட்ட படி இளைய பிள்ளையாச்சி தனது உரையாடலைத் தொடங்கினா.
’கேட்டியளோ சங்கதி, உந்தச் சீமான் பொடியன் ஏதோ வெட்டுறன், புடுங்குறன், வைகோவை வைச்சு அம்மாவுக்கு ஆதரவு கொடுத்து, தமிழக அரசியலிலை காங்கிரஸ்ஸை ஓரம் கட்டுறன் என்று கூத்தடிச்சுப் போட்டு இப்ப காத்துப் போன பலூன் மாதிரியெல்லே உடைஞ்சு போயிட்டார்,
’’மணியண்ணை தொடர்ந்தார், இளைய பிள்ளை, உவங்களுக்கு தங்கடை பெயர் பேப்பரிலை வர வேண்டும் என்று பேராசை போல, ஊரிலை உள்ள ரேடியோ, டீவிக்களிலை தங்களைப் பற்றிச் செய்தி வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலை ‘முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு அனல் பறக்கப் பேசுறது’
காங்கிரஸ் யாரோடை கூட்டணியை வைத்திருந்தாலும் இந்த முறை வெல்ல விடமாட்டோம் என்று வீராப்புக் காட்டுறது, பிறகு வைகோ அம்மாவை விட்டு வெளியேறினதும் கொழுத்தின வெடியளெல்லாம் புஸ் வானமாகின மாதிரி வாயை மூடிக் கொண்டு ஓடுறது. இது தானே வழமையாக நடக்கிறது.
உந்த நகைச்சுவை வசனங்களைத் தானே நாங்கள் காலங் காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறம். அயல் நாட்டிலை இருக்கிற எங்களுக்கே இதனைக் கேட்கச் சிரிப்பா இருக்கென்றால் தங்கடை நாட்டிலை இருந்து காமெடி டைம், சிரிப்பு தர்பார், நகைச்சுவை நேரம் பாக்கிற சனங்களுக்கு டீவியைப் போடாமலே படங்காட்டுறாங்களெல்லோ நம்மாளுங்க; என்று குணத்தான் பேசி முடித்தார்.
கையிலை இருந்த அப்பிள் ஐ போனை நோண்டிக் கொண்டிருந்த என்னைப் பார்த்து மணியண்ணை கேட்டார்.
அடோய் பொடியா, என்ன செய்கிறாய், ஏன் உந்தப் போனை வைச்சு நோண்டிக் கொண்டிருக்கிறாய்?
பதிலுக்கு நான்,
‘’நான் அண்ணை, புளொக்கிலை தமிழகத் தேர்தலைப் பற்றிப் படிக்கிறன்.
’என்னவாம் சொல்லுறாங்கள் தேர்தலைப் பற்றி எங்கடை உறவுக்காரங்கள் என்றார் குணத்தான்,
’’இந்த முறை வைகோ அம்மாவின்ரை கூட்டணியிலிருந்து பிரிஞ்சதாலை அம்மாவை விட ஐயாவுக்கு வெற்றி வாய்புக்கள் அதிகமாம் என்று எழுதியிருக்கிறார்கள் நம்மாளுங்க; என்று சொன்னேன்.
இடையிலை குறுக்கிட்ட இளைய பிள்ளையாச்சி, கலைஞரின்ரை பல தசாப்த கால அரசியல் வாழ்வை யாராலையும் வெல்ல முடியுமோ? அவரின்ரை அரசியல் சாணக்கியத்தையும், காய் நகர்த்தல்களையும் பார்த்தீங்களென்றால் புரியும் தானே! மனுசன் இன்றைக்கு முப்பது வருசத்திற்கும் மேலாலை தந்திராமா எல்லே காய் நகர்த்தி வருகுது. அதோடை எதிர்ப்பார்ப்புக்களைக் கூட்டுறதிலையும், சஸ்பென்ஸ் வைச்சு திரில் பட றேஞ்சிலை அரசியலை நகர்த்துறதிலையும் கலைஞர் கை தேர்ந்த ஆள் தான் என்று பேசி முடித்தா.
இதுவே அவரின்ரை அரசியல் சாணக்கியம் என்று அனல் பறக்க சீமான் போல கூறி விட்டு, வியர்வையைத் துடைத்தான், குணத்தான்.
’’மணியண்ணை: என்ன தான் இருந்தாலும் நீங்கள் கலைஞரைக் குறை சொல்லக் கூடாது. அந்தாள் இப்ப இலவச டீவி, கலண்டர், இலவச லப்டோப், இலவச கிறைண்டர் வழங்குகிற மாதிரி,
தான் இந்த முறைத் தேர்தலிலை வெல்ல முடியாமற் போய், அம்மா வெல்லப் போறா என்று ஒரு நிலமை வந்தால், ஐய்யா ஊகிச்சு அறிஞ்சாரெண்டால் தமிழீழத்தையும் எல்லே இலவசமாக கொடுத்திடுவார். அந்தளவு அரசியல் சாணக்கியம் உள்ள ஆள் என்று மணியண்ணை கலைஞரை விட்டுக் கொடுக்காதவர் போலப் பேசி முடித்தார்.
சரி...சரி பொழுது படப் போகுது(இருளப் போகுது) எல்லோரும் வீட்டை போவோம், கிளம்புங்கோ என்று சொன்னபடி இளைய பிள்ளையாச்சி என்னைப் பார்த்தா.
’’அடோய் தம்பி நிரூபன் நீ என்னடா செய்கிறாய்? - இது இளைய பிள்ளையாச்சி.
‘’ஆச்சி நான் யூடியூப்பிலை பாட்டுப் பார்க்கிறேன். பாட்டுப் பாக்கிறியோ, பாட்டு!
‘’என்ன பாட்டடா தம்பி, அதை நாங்களும் கேட்கிற மாதிரிச் சத்தமாப் போடேன் என்றா ஆச்சி..
நானும் பாட்டைப் போட்டேன்.
சொர்க்கம் படத்திலை இருந்து, டி.எம். எஸ் பாடின பாடலான
’சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் .......... என்ற படி பாடல் ஒளிபரப்பாகத் தொடங்கியது.
பிற் குறிப்பு: இப் பதிவில் உள்ள படங்கள் யாவும் தமிழர் குரல் வலைப் பதிவிலிருந்து கூகிளின் தேடல் உதவியுடன் எடுக்கப்பட்டவை.
|
33 Comments:
பின்னி பெடல் எடுத்துட்டீங்க
@சி.பி.செந்தில்குமார்
பின்னி பெடல் எடுத்துட்டீங்க//
நன்றிகள் சகோ. யோ பார்த்து மெல்லமாச் சொல்லுங்கோ. ஆட்டோ அனுப்பிடப் போறாங்கள்.
//நிரூபனாகிய இளைய விஞ்ஞானியுடனும் அரட்டை களை கட்டத் தொடங்குகிறது.//
அப்ப நானும் விஞ்ஞானி தான்..
//‘முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு அனல் பறக்கப் பேசுறது’//
ஹி ஹி
//இது தானே வழமையாக நடக்கிறது.//
கககபோ
//அப்பிள் ஐ போனை நோண்டிக் கொண்டிருந்த//
யோவ்.. ஆலமரத்தடியில ஆப்பிள் ஐ போன் கேக்குதா உனக்கு..
// எங்கடை உறவுக்காரங்கள்//
மாப்ள.. ஒரு கோட்டர் சொல்லேன்..
//கலைஞர் கை வந்த ஆள் தான் என்று பேசி முடித்தா.//
சரியான பேச்சு.. என் கருத்தும் அதேதான்..
//இதுவே அவரின்ரை அரசியல் சாணக்கியம் என்று அனல் பறக்க சீமான் போல கூறி விட்டு//
அப்ப இவரு டம்மி பீஸா.?? பேசமட்டும் தான் செய்வாரோ
//தமிழீழத்தையும் எல்லே இலவசமாக கொடுத்திடுவார்//
இதெல்லாம் ஓவர்.. வேணும்னா கேட்டு வாங்கிகடணும்.. அத உட்டுபுட்டு அங்கிட்டு இருந்து புளாக் போட்டா கொடுத்திடுவாரா???
////மணியண்ணை: என்ன தான் இருந்தாலும் நீங்கள் கலைஞரைக் குறை சொல்லக் கூடாது. அந்தாள் இப்ப இலவச டீவி, கலண்டர், இலவச லப்டோப், இலவச கிறைண்டர் வழங்குகிற மாதிரி,///அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........)))))
//சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டா//
அடிச்சு கைட கேப்பாங்க அப்பயும் இத யாருக்கும் சொல்லிடாத..
இப்ப பதிவு எழுதின விதத்துக்கு வருவோம்..வழக்கம்போல நடை அருமை.. ஒருவர் சொன்னார் என குறிப்பிட //குணத்தான்: // இப்படி போடும் நீங்கள் அவர் பேச்சின் இறுதியில் //என்று குணத்தான் பேசி முடித்தார்// என போடுவது அவசியமானதா.?? இருப்பதை அப்படியே எடுத்து சொன்னதுபோல உள்ளது.. இன்னும் நகை சேர்த்திருக்கலாம்.. உங்களை நீங்களே நக்கல் செய்வதை குறைத்துவிட்டு அரசியல் நக்கல் கூட்டினால் அலமரத்தடி இன்னும் சிறப்பா இருக்கும்..
மொத்ததில் புது ஆலமரத்தடியின் புது பொலிவு கொஞ்சம் மங்கிபோய் உள்ளதாக தெரிகிறது.. அடுத்த தடவ பின்னி பெடலெடுக்க வாழ்த்துக்கள்..
உந்த நகைச்சுவை வசனங்களைத் தானே நாங்கள் காலங் காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறம். அயல் நாட்டிலை இருக்கிற எங்களுக்கே இதனைக் கேட்கச் சிரிப்பா இருக்கென்றால் தங்கடை நாட்டிலை இருந்து காமெடி டைம், சிரிப்பு தர்பார், நகைச்சுவை நேரம் பாக்கிற சனங்களுக்கு டீவியைப் போடாமலே படங்காட்டுறாங்கள் நம்மாளுங்க என்றால் பாருங்களேன்
......அரசியல்வாதிகள் எல்லோரும் மக்களை வச்சு காமெடி பண்றாங்க .... :-(
எங்கூரு கூத்து சத்தம் அங்கன கூட கேட்குதாக்கும்:)
எங்களுக்குள்ளே அயிரம் பிரச்சனை இருக்கு நண்பா! வேட்டி கிளிப்பதும்,சேலை உருகுவதும் தன்குடும்பம் வாழ யாரையும் தாரைவாக்க தயங்காத அரசியல் வாதிகளை காலகாலமாக நம்புங்கள் என்று சொல்லியே தாலியறுத்தவர்களின் சித்தாந்தம் நமக்கு எதுக்கு இன்னும் 30 ஆண்டுகள் பின் செல்லவா?
////கையிலை இருந்த அப்பிள் ஐ போனை நோண்டிக் கொண்டிருந்த ////
அட நெத்தலி நோண்டிய கைகளுக்குள் செத்த எலியும் இருக்கிறதோ.... ஹ..ஹ...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...
சகோ. உங்களுக்குள் இவ்ளோ இருக்கா.. ஐ மீன் நகைச்சுவை .. கிழி கிழினு கிழிக்கிறீங்க.. ஒரு வேளை இலங்கை இந்தியாவின் மாநிலமா இருந்திருந்தா. இந்த திமுக அதிமுக அங்கெனயும் வந்திருக்கும் என்ன.. இன்னும் கொஞ்சம் எண்டர்டைன்மெண்டா இருந்திருக்கும் ..
Kalakkal Saga
ஆலமரத்தடி....அரசியலோட தொடங்கியிருக்கு.பாத்துக் கவனம் காக்கா கக்கா இருக்கப்போகுது.
தலையில ஒரு கடகத்தைக் கொழுவிக்கொண்டு இரடா
பொடியா...!
@தம்பி கூர்மதியன்
நிரூபனாகிய இளைய விஞ்ஞானியுடனும் அரட்டை களை கட்டத் தொடங்குகிறது.//
அப்ப நானும் விஞ்ஞானி தான்..//
நீங்களும் நம்ம கட்சியா? சீனியரா, ஜூனியரா! வாழ்க விஞ்ஞானம்.
@தம்பி கூர்மதியன்
//அப்பிள் ஐ போனை நோண்டிக் கொண்டிருந்த//
யோவ்.. ஆலமரத்தடியில ஆப்பிள் ஐ போன் கேக்குதா உனக்கு..//
என்ன கொடுமை சந்நிதி முருகா, கையாலை தான் ஐ போனைத் தொட சான்ஸ் கிடைக்குதில்லையென்றால், நம்மாளுங்க மனசாலையும் கற்பனை பண்ணிப் பார்க்க விடுறாங்களில்லை!
சும்மா ஒரு Strength இற்குப் போட்டமில்ல...
@தம்பி கூர்மதியன்
//இதுவே அவரின்ரை அரசியல் சாணக்கியம் என்று அனல் பறக்க சீமான் போல கூறி விட்டு//
அப்ப இவரு டம்மி பீஸா.?? பேசமட்டும் தான் செய்வாரோ//
இதுக்கு குணத்தான் தான் வந்து பதில் சொல்ல வேண்டும். குணத்தான் எங்கை இருந்தாலும் வருக..! பதில் தருக!
@தம்பி கூர்மதியன்
//தமிழீழத்தையும் எல்லே இலவசமாக கொடுத்திடுவார்//
இதெல்லாம் ஓவர்.. வேணும்னா கேட்டு வாங்கிகடணும்.. அத உட்டுபுட்டு அங்கிட்டு இருந்து புளாக் போட்டா கொடுத்திடுவாரா???//
அந்தாள் மத்திய அரசுக்கு காலங் காலமாக கடிதம் எழுதியே சாதனை புரிஞ்சு, அரசியலிலை சாதிச்சு வருகிறார். ஒரு புளொக்கிலை எழுதினா தூக்கித் தந்திட மாட்டாரு?
@கந்தசாமி.
////மணியண்ணை: என்ன தான் இருந்தாலும் நீங்கள் கலைஞரைக் குறை சொல்லக் கூடாது. அந்தாள் இப்ப இலவச டீவி, கலண்டர், இலவச லப்டோப், இலவச கிறைண்டர் வழங்குகிற மாதிரி,///அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........)))))//
சகோதரம், நன்றாக ரசித்துப் படித்திருக்கிறீர்கள் போலும், சிரிப்பு நின்று விட்டதா? இல்லை இன்னும் நினைத்துச் சிரிக்கிறீர்களா?
@தம்பி கூர்மதியன்
//
இப்ப பதிவு எழுதின விதத்துக்கு வருவோம்..வழக்கம்போல நடை அருமை.. ஒருவர் சொன்னார் என குறிப்பிட //குணத்தான்: // இப்படி போடும் நீங்கள் அவர் பேச்சின் இறுதியில் //என்று குணத்தான் பேசி முடித்தார்// என போடுவது அவசியமானதா.?? இருப்பதை அப்படியே எடுத்து சொன்னதுபோல உள்ளது.. இன்னும் நகை சேர்த்திருக்கலாம்.. உங்களை நீங்களே நக்கல் செய்வதை குறைத்துவிட்டு அரசியல் நக்கல் கூட்டினால் அலமரத்தடி இன்னும் சிறப்பா இருக்கும்..
மொத்ததில் புது ஆலமரத்தடியின் புது பொலிவு கொஞ்சம் மங்கிபோய் உள்ளதாக தெரிகிறது.. அடுத்த தடவ பின்னி பெடலெடுக்க வாழ்த்துக்கள்..//
சகோதரம், முதன் முதாலக பதிவின் குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி விமர்சனம் அளித்துள்ளீர்கள். நன்றிகள் நன்றிகள்.
அவசரத்தில் எழுதிய பதிவென்பதால் சரி பிழைக பார்க்காது பதிவேற்றி விட்டேன்.
இப்போது திருத்தி விட்டேன்.
என்னது;// மொத்ததில் புது ஆலமரத்தடியின் புது பொலிவு கொஞ்சம் மங்கிபோய் உள்ளதாக தெரிகிறது.//
இதனை நான் இளையபிள்ளை ஆச்சியிடம் சொன்னேன். அடுத்த முறை மாநாட்டு இடம் பெறும் போது நல்ல பவரான 1000Watt லைற்றுப் போட்டு வெளிச்சத்தை அதிகரிக்கவுள்ளதாக சொல்லியிருக்கிறா:))
புது ஆலமரத்தின் பொலிவு மங்கிப் போச்சோ, புதுப் பொருள் என்றால் பாவனைக்கு வரக் கொஞ்ச நாள் எடுக்கும் தானே, இது சாம்பிள் ஐயிட்டம் சித்தப்பு.
அடுத்த முறை, அடுத்த பதிவிலை குறைகளைக் களைந்து நிறைவான பதிவினைப் போடுகிறேன்.
உங்களின் பொன்னான நேரத்தில் என் பதிவிற்கும் பல நிமிடங்களை ஒதுக்கி, காத்திரமான கருத்துக்களைத் தந்தமைக்கு மிக மிக நன்றிகள்.
@Chitra
......அரசியல்வாதிகள் எல்லோரும் மக்களை வச்சு காமெடி பண்றாங்க .... :-(//
Madam, சத்தமாச் சொல்லாதீங்க, இப்பவே இருக்கிற ஏரியாவுக்கு ஆட்டோ அனுப்பிடப் போறாங்க.
@ராஜ நடராஜன்
//
எங்கூரு கூத்து சத்தம் அங்கன கூட கேட்குதாக்கும்:)//
சகோ, உறவுக்காரங்க என்றால் கேட்காமலா போயிடும், நன்றிகள் சகோதரம்.
@Nesan
//
எங்களுக்குள்ளே அயிரம் பிரச்சனை இருக்கு நண்பா! வேட்டி கிளிப்பதும்,சேலை உருகுவதும் தன்குடும்பம் வாழ யாரையும் தாரைவாக்க தயங்காத அரசியல் வாதிகளை காலகாலமாக நம்புங்கள் என்று சொல்லியே தாலியறுத்தவர்களின் சித்தாந்தம் நமக்கு எதுக்கு இன்னும் 30 ஆண்டுகள் பின் செல்லவா?//
சகோதரம், சும்மா ஒரு கலாய்ப்புத் தான். புண்பட்ட நெஞ்சைப் புன்னகையால் ஆற்றலாமே என்று ஒரு நப்பாசை தான்.
//என்னது இன்னொரு முப்பது ஆண்டுகள் பின் செல்லவா?//
இன்னும் ஒரு ஆண்டு முன்னுக்குப் போனால் உலகமே அழிஞ்சு போயிடும் என்று ஆளாளுக்கு அதிர்ச்சிக் குண்டைப் போட்டுக்கிட்டிருக்கிறான். நீங்க வேறை முப்பதாண்டுகள் பின்னுக்குப் போகச் சொல்லி!
இறைவா இந்த இடத்திலை முன்னுக்குப் போகவா இல்லை பின்னுக்கு போகவா என்பதை நீதான் சொல்ல வேண்டும்!
@♔ம.தி.சுதா♔
//
///கையிலை இருந்த அப்பிள் ஐ போனை நோண்டிக் கொண்டிருந்த ////
அட நெத்தலி நோண்டிய கைகளுக்குள் செத்த எலியும் இருக்கிறதோ.... ஹ..ஹ...//
சுதா, உள் வீட்டு ரகசியங்களை வெளியாலை போட்டு உடைப்பது மகா தப்பு, ஐ போனை மனசாலை கூட நினைச்சுக் கூடப் பார்க்க விடுறாங்களில்லையே மாப்பு!
@இக்பால் செல்வன்
சகோ. உங்களுக்குள் இவ்ளோ இருக்கா.. ஐ மீன் நகைச்சுவை .. கிழி கிழினு கிழிக்கிறீங்க.. ஒரு வேளை இலங்கை இந்தியாவின் மாநிலமா இருந்திருந்தா. இந்த திமுக அதிமுக அங்கெனயும் வந்திருக்கும் என்ன.. இன்னும் கொஞ்சம் எண்டர்டைன்மெண்டா இருந்திருக்கும் .//
பொறுங்கய்யா, பொறுங்க... எதிர் காலத்திலை ராமர் பாலம் எனும் பெயரிலை இரண்டு நாடுகளையும் இணைக்கும் நோக்கோடு பாலம் கட்டப் போறாங்களாம், பாக்கு நீரிணை ஊடாக பம்பரம் விடப் போறாங்களாம். அதுவும் வெறும் 40km தூர கடற் பயணம், காலையிலை பொழுது புலரும் போது புறப்பட்டால், மதிய வெய்யிலுக்கு முன்பதாக நம்ம ஊரிலை பிரச்சாரம் வைச்சிட்டு கிளம்பிடலாமெல்லோ சகோ!
இன்னும் கொஞ்ச எண்டர்டைன்மெண்டோ, நம்ம ஊர்க் காரங்க ரகளையே பண்ணி, அரசியலை ரணகளப்படுத்திடு வாங்கய்யா, எங்க ஊர் அரசியல் உங்க ஊரை விட படு மோசம்... இதற்கு மேல் வாய் திறந்தால் ஆட்டோவிற்கு பதிலாக வெள்ளை வான் தான் வரும்,
ஐ ஆம் எஸ்ஸு..............
@டக்கால்டி
//
Kalakkal Saga//
நன்றிகள் சகோ.
@ஹேமா
ஆலமரத்தடி....அரசியலோட தொடங்கியிருக்கு.பாத்துக் கவனம் காக்கா கக்கா இருக்கப்போகுது.
தலையில ஒரு கடகத்தைக் கொழுவிக்கொண்டு இரடா
பொடியா...!//
இது எங்கையோ கேட்ட குரலைப் போல இருக்கு, ஐய் நம்ம இளைய பிள்ளையாச்சியின்ரை வொய்ஸோடை ஒத்துப் போகுது, அப்ப அவவிற்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கோ?
கடகமோ, அடுத்த மாநாட்டுக்கு நாங்கள் ஒரு கொட்டிலே போடுறதா முடிவெடுத்திருக்கிறம், நீங்க வேறை.
நன்றிகள் சகோதரி.
Post a Comment