இணைய வலை ஏறி வந்து அனைவர் இதயங்களையும் கவரும் பதிவர்களே, அவரசமாய் ஓடி வந்து அரிய பல தகவல்களைச் சேகரித்து எழுதுவோர் பதிவுகளைப் படிக்காமல் ஓட்டுப் போட்டு, ஒரே நிமிடத்தினுள் பின்னூட்டமிடும் ஜனநாயக வாதிகளே வணக்கம்! டோய் சித்தப்பூ, என்ன நடக்குது? நீ என்ன வில்லுப் பாட்டே நடத்தப் போறாய், வாயை மூடிட்டு பதிவை எழுதடா என்று உங்களில் யாரோ கோபப்பட்டுத் திட்டுவதும் கேட்கிறது. மீண்டும் எல்லோருக்கும் இனிய வணக்கங்கள்!
பதிவுலகம் எனப்படும் இந்த இனிய இணைய எழுத்துலகில், எங்கள் தமிழ் பதிவுலகில் நாளுக்கு நாள் எத்தனையோ மர்மங்களும், மஜாயால வித்தைகளும் நடப்பதாக அடிக்கடி பரபரப்பூட்டும், பதிவர்களின் பதிவுகள் மூலம் அறிந்து கொண்டேன். நான் பதிவெழுத வந்து ஒரு மாதமே ஆகாத இந் நிலையில் பதிவுலகம் பற்றியோ, பதிவர்களின் ஜனநாயக நடவடிக்கைகள் பற்றியோ அதிகப்பிரசங்கித்தனம் பண்ணுவது நல்லதல்ல. ஆனாலும் என் மனதில் பட்டவற்றை, என் உள்ளத்தில் உதித்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என இப் பதிவினை எழுதுகிறேன்.
சிந்தியுங்கள் செயற்படுங்கள்!
நான் எல்லோருடனும் நண்பனாகவே இருக்க விரும்புகிறேன். யாரையும் பகைக்க வேண்டும் என்றோ, என் பதிவுகளைப் பிரபலமாக்க வேண்டுமென்றோ இந்தப் பதிவினை எழுதவில்லை. அட பாவிப் பயலே, நேற்றுப் பெய்த மழையிலை முளைச்ச காளான் நீ, முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு பதிவரசியல் பற்றிப் பேசப் போறியோ என்று யாரும் எண்ணினால்
நான், வள்ளுவனின் முப்பாலும் கற்று,
மூன்றாம் பாலை மட்டும் தப்பாமல் கற்ற கன்றுக் குட்டி
தமிழில் இன்று வரை தவழ்ந்து நீராடி
தமிழோடு விளையாட நினைக்கும் கத்துக் குட்டி,
ஆகையால் உங்களோடு இப் பதிவுலகம் பற்றிய என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என ஆசைப்படுகிறேன்.
*பதிவுலகில் பதிவர்கள் கூட்டமாக, ஒரு குறூப்பாக இருக்கிறார்கள் என்பதனை அண்மையில் தான் தெரிந்து கொண்டேன். அட கூட்டம் என்றால் ஆளுங் கட்சிக்கு சப்போர்ட் பண்ணுவோர் என்றால் + ஓட்டு
எதிர்க் கட்சி என்றால் மைனஸ் - ஓட்டு.
*என்னைப் பொறுத்தவரை நான் எல்லாப் பதிவர்களுடனும் நட்புடன் பழக விரும்பும் ஒரு ஜீவன். ஆத்ம திருப்திக்காக மட்டுமல்லாது ஆவணங்களை, தமிழின் விடுபட்ட, அழிந்து போன வரலாறுகளை பதிய நினைக்கும் ஒருவன். எனக்கு பதிவுலகில் என்ன நடக்கிறது என்பது புரியாத காரணத்தினால் அண்மையில் ஒரு பதிவரின் பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் போட்டேன். உடனே எனக்கு ஒரு பின்னூட்டம் வந்தது,
’இந்த மாதிரி பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால், நீங்களும் பதிவுலகில் இருந்து ஏனைய பதிவர்களால் புறக்கணிக்கப்படலாம் என்று!
*இந்தப் பின்னூட்டத்தால் நான் மனமுடையவில்லை. ஆனாலும் பதிவர்களாகிய நமக்குள் ஏன் இந்த பேதம்?
இப்படி ஏன் வேற்றுமைகள்?
*எவ்வளவோ கஸ்ரப்பட்டு ஆங்கில இணையத்தளங்களைப் படித்தும், பல் வேறு வழிகளில் தேடியும் நான் எழுதிய ஒரு பதிவுக்கு பதிவு வெளியாகி இரண்டு நிமிட இடை வெளிக்குள்ளே (பதிவினை திரட்டிகளில் இணைக்க முன்னே) ஒரு அன்பு உள்ளம் ஓடோடி வந்து ‘பதிவினை முற்று முழுதாக படித்து முடித்தவர் போல போட்டாரய்யா ஒரு பின்னூட்டம். பாருங்கோ.
ஒரு கணம் ஆடிப் போய் விட்டேன். புதிய பதிவரான எனக்கே இப்படி நிலமை என்றால் ஏனைய பதிவர்கள் பல் வேறு வழிகளில் அலசி ஆராய்ந்து, தேடல்களின் மூலம் போடும் அருமையான அரிய பதிவுகளுக்கும் இதே நிலமை தானே ஏற்படும்.
*இவ் வகையில் பார்க்கும் போது பதிவுகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை விட எத்தனை பேர்
ஓடோடி வந்து பதிவினைப் படிக்காமல் பின்னூட்டம் போட்டு, பதிவிற்கு வாக்கும் போட்டு விட்டுப் போகிறார்கள் எனும் எண்ணிக்கையின் அடிப்படையில் தானே பதிவுலகம் இருக்கிறது.
*பதிவர்களின் பதிவுகள்; காவிகள், திரட்டிகள் மூலம் காவிச் செல்லப்பட்டு அகிலமெங்கும் இணையத்தின் மூலம் சென்றடைய வேண்டும் என்பது வரவேற்கத்தக்க விடயம். ஆனால் பதிவினைப் படிக்காது, தமது வருகையினை உறுதிப்படுத்தும் வகையில் பின்னூட்டமும் போட்டு, ஓட்டும் போட்டு விட்டுச் செல்வதற்கா நாம் பதிவெழுதுகிறோம் பதிவர்களே?
*ஆழமான கருத்துக்களோ, இல்லை காத்திரமான உள்ளடக்கமோ இல்லாத ஒற்றை வரி நகைச்சுவையினை உள்ளடக்கிய பதிவுகள் யாவும் வாசகர் பரிந்துரையிலும் சூடான இடுகையிலும் வருகிறது, மிக மிக ஆழமாக அலசி ஆராய்ந்து எழுதும் பதிவர்களின் பதிவுகள் இந்த அரசியலால் புறந்தள்ளப்படுகின்றது. பாசமிகு பதிவர்களே இது தான் எங்கள் பதிவுகளின் நோக்கமா?
*நாம் அனைவரும் பதிவெழுதும் போது, எமது பதிவுகள் அனைவரையும் கவர வேண்டும், அனைவரையும் இப் பதிவுகள் சென்றடைய வேண்டும் எனும் நோக்கில் தானா பதிவெழுதுகிறோம்? அல்லது எம் வலைப் பதிவில் எழுதப்பட்ட இப் பதிவினைப் படிக்காமல் எத்தனை பேர் கிளிக் பண்ணிப் பார்த்தார்கள் என ஹிட்ஸ் ஏத்தவா பதிவெழுதுகிறோம்?
ஆகவே சிந்தியுங்கள், செயற்படுங்கள் நண்பர்களே, இப் பதிவு யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல.
உங்களுடன் சில நிமிடங்கள்,
என்னால் இப் பதிவுலக அரசியலோடு ஒத்துப் போக முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை நேரம் கிடைக்கும் போது பதிவுகளைப் படிக்கிறேன். பதிவினைப் படித்து முடிந்ததும் அந்தப் பதிவின் உள்ளடக்கம், பதிவின் நோக்கம் முதலியவற்றை அலசிப் பார்க்கிறேன். பின்னர் பதிவின் குறை நிறைகளைச் சுட்டிப் பின்னூட்டம் போடுகிறேன். என்னால் ஒரு சிலரைப் போல பதிவினைப் படிக்காமல் ‘அருமையாக இருக்கிறது’
அசத்துறீங்க...கலக்கிட்டீங்க... நல்ல பதிவு, வாழ்த்துக்கள் என்றெல்லாம் ஒற்றை வரியில் பின்னூட்டி ஊக்கப்படுத்த முடியவில்லை. விமர்சிக்க மட்டுமே முடிகிறது. அதற்காக என்னை மன்னியுங்கள் நண்பர்களே!
*நல்ல கருத்துக்கள் மிகுந்த, ஆக்க பூர்வமான பதிவுகளினைத் தட்டிக் கொடுப்போம், காத்திரமான பதிவுகளினை வரவேற்போம், இத்தகைய பதிவர்களை ஊக்கப்படுத்துவோம். சும்மா ரெண்டு வரியிலை பத்திரிகையிலோ, இல்லை வேறு இணையத்திலோ வரும் ஆக்கங்களை பதிவாக எழுதினால் வரவேற்பு கிடைக்கும் என்றால், அதிக வாக்குகள் கிடைக்கும் என்றால்
என்னுடைய அடுத்த பதிவு ‘’நிர்வாணம்’ என்ற தலைப்பில் ஆடைகளே இல்லாத இரண்டு படங்களுடன்(ஆண் & பெண்) ஒரே ஒரு வரிப் பதிவாக வரும். உலகில் ஆடையில்லாமல் இருப்பதை ‘’நிர்வாணம்’ என்றழைப்பார்கள்.
எப்பூடி நம்ம வேலை. என்னங்க அரிவாளை தேடுறீங்க, ஏனுங்கோ ஆட்டோவுக்கு போன் பண்ணுறீங்க, என்னது பைக்கிலை ஏறி வந்து/ பிளைட் புடிச்சு வந்து யாழ்ப்பாணத்திலை இறங்கி வெட்டப் போறிங்களா? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேனுங்க. மீண்டும் உங்கள் அனைவரையும் அடுத்த பதிவினூடாக சந்திக்கும் வரை நான் வரட்டா, டாட்டா, பாய் பாய், சீ யூ.............
|
51 Comments:
நான் கொஞ்சம் வேகமா படிப்பேன்..
நீங்கள் சொன்ன இனைத்து விஷயங்களும் சரியே...
அந்த கடைசி படத்தில் உள்குத்து ஏதும் இல்லையே?
எழுத்துக்கள் பெரிதாக இருந்தால் படிக்க இன்னும் வசதியாக இருக்கும்...
---*நல்ல கருத்துக்கள் மிகுந்த, ஆக்க பூர்வமான பதிவுகளினைத் தட்டிக் கொடுப்போம், காத்திரமான பதிவுகளினை வரவேற்போம், இத்தகைய பதிவர்களை ஊக்கப்படுத்துவோம-----
ஒன்றுபடுவோம்...
நாசமா போச்சி போங்க.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
நிரூபன், இது தமிழ் பதிவுலகில் மிக சகஜம். இதற்கு ஒன்றும் பண்ண இயலாது. முடிந்தவரை இந்த அரசியல்களில் சிக்காமல் குழுக்களில் மாட்டாமல் பதிவு போடுங்கள் அவ்வளவுதான்
NIRU......... I LIKE TO SAY ONE TRUTH......
YOU WILL NEVER BECOME A FAMOUS BLOGGER IF YOU GO ON THIS WAY.
அவங்கவங்க கருத்தை சொல்ல உரிமை இருக்கு.. அத படிக்கிறதும், படிக்காம இருக்குறதும் நம்ம இஷ்டம்...
எனது வலைபூவில் இன்று: ஜப்பான் சுனாமி பேரழிவு - வீடியோ
நல்ல பதிவு..
பதிவரசியல் அனைத்து இடங்களிலும் நடக்கிறது.
சில இடங்களில் வெளிப்படையாக...
சில இடங்களில் மறைமுக குழுக்களாக..
கேட்டால் இல்லை என்பார்கள்..
நடத்தையால் வேறுபட்டு நிற்பார்கள்..
மாத்தியோசி,
பதிவுலகில் இவ்வாறு எழுதுவதில் தவறில்லையே..
அனைவரையும் தான் சாடியுள்ளார்..சாட வேண்டிய விடயமும் கூட!!

அண்மையில் ஒரு பதிவரின் பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் போட்டேன். உடனே எனக்கு ஒரு பின்னூட்டம் வந்தது,
’இந்த மாதிரி பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால், நீங்களும் பதிவுலகில் இருந்து ஏனைய பதிவர்களால் புறக்கணிக்கப்படலாம் என்று//
இதுவும் பண்றானுங்களா?
நீங்கள் நினைக்கும் கருத்துக்களை பதிவுகளாக போடுங்கள். அவ்வளவுதான் .
வேறு எந்த சிந்தனயும் வேண்டாம். ஒட்டு,பின்னூட்டம்,ஹிட்ஸ் பற்றி எண்ணாதீர்கள்.
பிறர் தங்களுக்கு உண்டான மனோ பாவத்தில் எழுதுவதால் எல்லோரும் ஒரே குறிக்கோளுடன் இருப்பதாக எண்ணாதீர்கள்.
இது முழுக்க முழக்க சுதந்திரமான இடம். மற்றவர்கள் பற்றி நாம் ஏன் குறை பட வேண்டும்.
உங்களின் ஆக்கங்களை விரும்பி ஒரு வாசக வட்டம் நாளடைவில் வந்து விடும்.இதுதான் இங்கு நடை முறை.
எழுத்து சற்று பெரிதாக வேண்டும்.
ALL THE BEST.
அரசியல் இல்லாத இடம் இல்லை .அரசியல் இல்லாத இடத்தில் சுவாரசியமும் இல்லை .வாசிக்கப்பட வேண்டும் என்பது அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதன் வெளிப்பாடே .இதில் தவறில்லையே ?உங்கள் font size மிகவும் சிறியதாக இருக்கிறது .வாசிக்க சிரமமாக இருக்கிறது
உங்க கருத்துக்கள் வலிமையானவை..
*பதிவுலகில் பதிவர்கள் கூட்டமாக, ஒரு குறூப்பாக இருக்கிறார்கள் என்பதனை அண்மையில் தான் தெரிந்து கொண்டேன்.//
அதிலேயே அவர்கள் கூட்டத்தின் தரம் , பயம் புரியும்..:). பின் அந்த கூட்டத்தினரே ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதும் நடக்கும்.:)
’இந்த மாதிரி பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால், நீங்களும் பதிவுலகில் இருந்து ஏனைய பதிவர்களால் புறக்கணிக்கப்படலாம் என்று!"
??
பிந்தொடர . பிரசுரிக்க வேண்டாம்
திறமைகள் என்றுமே நிலைத்து நிற்கும் .பதவி புகழ் அனைத்துமே நம்மை தேடி வர வேண்டும் நாம் தேடி போக கூடாது இது பலருக்கு புரிவதில்லை .உங்கள் என்னத்தை பதிவு செய்யுங்கள் தொடர்ந்து
ஹும் நிர்வாணிகளின் ஊரில் இப்படி ஒரு கோவணதாரி.
என்னே கடவுளின் லீலை. வாழ்க .. தொடர்க
உலகம் அழகு விஷயங்களின் அரங்கம் அவ்வளவே - நாம் பார்க்கும் பார்வையில் மட்டுமே அது தெரியும்............
பதிவெழுதுவது என்பது அவரவர் விருப்பம் இதில் அரசியல் எனப்படுவது யாதெனின் யாரையாவது தேவையில்லாமல் சீண்டும் போது வருகிறது...........வட்ட அரசியல் எங்கும் உண்டு அது அவர்கள் நிலைப்பாடு எனும் போது அதனை அவ்வாறே விட்டு செல்வது நலம்.........நம்ம பொழப்ப பாப்போமுங்க ஹி ஹி!
- இவை என் தாழ்மையான கருத்துக்கள் நண்பா
வேடந்தாங்கல் - கருன் said...
நான் கொஞ்சம் வேகமா படிப்பேன்..
நீங்கள் சொன்ன இனைத்து விஷயங்களும் சரியே...
அந்த கடைசி படத்தில் உள்குத்து ஏதும் இல்லையே?
எழுத்துக்கள் பெரிதாக இருந்தால் படிக்க இன்னும் வசதியாக இருக்கும்...
---*நல்ல கருத்துக்கள் மிகுந்த, ஆக்க பூர்வமான பதிவுகளினைத் தட்டிக் கொடுப்போம், காத்திரமான பதிவுகளினை வரவேற்போம், இத்தகைய பதிவர்களை ஊக்கப்படுத்துவோம-----
ஒன்றுபடுவோம்..//
ம்.. நன்றிகள் தோழா! உங்கள் கருத்துக்களுடன் நானும் உடன்படுகிறேன்!
MANO நாஞ்சில் மனோ said...
நாசமா போச்சி போங்க.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//
என்னங்க என்னையா திட்டுறீங்க.
எல் கே said...
நிரூபன், இது தமிழ் பதிவுலகில் மிக சகஜம். இதற்கு ஒன்றும் பண்ண இயலாது. முடிந்தவரை இந்த அரசியல்களில் சிக்காமல் குழுக்களில் மாட்டாமல் பதிவு போடுங்கள்//
நன்றிகள் நண்பா. முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
NIRU......... I LIKE TO SAY ONE TRUTH......
YOU WILL NEVER BECOME A FAMOUS BLOGGER IF YOU GO ON THIS WAY.//
hi oodda vadai, Thanks for letting me know the secret hiding behind the bloggers world.
I don't want to be a famous Author through this illegal way.
I don't care about those reason's.
thanks for that.
மைந்தன் சிவா said...
நல்ல பதிவு..
பதிவரசியல் அனைத்து இடங்களிலும் நடக்கிறது.
சில இடங்களில் வெளிப்படையாக...
சில இடங்களில் மறைமுக குழுக்களாக..
கேட்டால் இல்லை என்பார்கள்..
நடத்தையால் வேறுபட்டு நிற்பார்கள்..
மாத்தியோசி,
பதிவுலகில் இவ்வாறு எழுதுவதில் தவறில்லையே..
அனைவரையும் தான் சாடியுள்ளார்..சாட வேண்டிய விடயமும் கூட!//
நல்லா அனுபவப்பட்டுள்ளீர்கள் போலும்!
நடைமுறையில் உள்ளதை எழுதி இருக்கிறீர்கள். :))
இந்த பதிவரசியலில் நாம் சிக்காமல் இருப்பது எப்படி எனப்பார்த்தால் போதும்.
வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா
http://arivhedeivam.blogspot.com/
ஒரு மாதத்திலேயே இம்புட்டு விஷயத்தைக் கவனிச்சிட்டீங்களா? சபாஷ்! :-)
பூங்குழலி said...
அரசியல் இல்லாத இடம் இல்லை .அரசியல் இல்லாத இடத்தில் சுவாரசியமும் இல்லை .வாசிக்கப்பட வேண்டும் என்பது அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதன் வெளிப்பாடே .இதில் தவறில்லையே ?உங்கள் font size மிகவும் சிறியதாக இருக்கிறது .வாசிக்க சிரமமாக இருக்கிறது.//
இப்போது font Size குறையை நிவர்த்தி செய்து விட்டேன். நன்றிகள்.
பயணமும் எண்ணங்களும் said...
*பதிவுலகில் பதிவர்கள் கூட்டமாக, ஒரு குறூப்பாக இருக்கிறார்கள் என்பதனை அண்மையில் தான் தெரிந்து கொண்டேன்.//
அதிலேயே அவர்கள் கூட்டத்தின் தரம் , பயம் புரியும்..:). பின் அந்த கூட்டத்தினரே ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதும் நடக்கும்.:)
’இந்த மாதிரி பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால், நீங்களும் பதிவுலகில் இருந்து ஏனைய பதிவர்களால் புறக்கணிக்கப்படலாம் என்று!"
??//
இதிலை கட்சி அரசியல் வேறை. நடக்கட்டும், நடக்கட்டும்.
கக்கு - மாணிக்கம் said...
நீங்கள் நினைக்கும் கருத்துக்களை பதிவுகளாக போடுங்கள். அவ்வளவுதான் .
வேறு எந்த சிந்தனயும் வேண்டாம். ஒட்டு,பின்னூட்டம்,ஹிட்ஸ் பற்றி எண்ணாதீர்கள்.
பிறர் தங்களுக்கு உண்டான மனோ பாவத்தில் எழுதுவதால் எல்லோரும் ஒரே குறிக்கோளுடன் இருப்பதாக எண்ணாதீர்கள்.
இது முழுக்க முழக்க சுதந்திரமான இடம். மற்றவர்கள் பற்றி நாம் ஏன் குறை பட வேண்டும்.
உங்களின் ஆக்கங்களை விரும்பி ஒரு வாசக வட்டம் நாளடைவில் வந்து விடும்.இதுதான் இங்கு நடை முறை.
எழுத்து சற்று பெரிதாக வேண்டும்.//
ம்...உங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள். நடை முறை அரசியல் பற்றிய விளக்கத்திற்உ நன்றிகள்.
பயணமும் எண்ணங்களும் said...
பிந்தொடர . பிரசுரிக்க வேண்டாம்//
ஏதோ என் மனதிலை பட்டதைச் சொல்லியிருக்கிறேன். அவ்வளவும் தான். இதிலை எந்த உள் கூத்தும் இல்லை.
பிரபாஷ்கரன் said...
திறமைகள் என்றுமே நிலைத்து நிற்கும் .பதவி புகழ் அனைத்துமே நம்மை தேடி வர வேண்டும் நாம் தேடி போக கூடாது இது பலருக்கு புரிவதில்லை .உங்கள் என்னத்தை பதிவு செய்யுங்கள் தொடர்ந்//
நன்றிகள் தோழா.
ம்..உங்க பிளாக்கில் நான் கமெண்ட் போட்டாலும் அதுக்கு ரிப்ளை பண்ணக்கூடாதுன்னும் சொல்லி இருக்கானுகளா... ம் ..நடக்கட்டும்
இன்னும் 6 மாதத்திற்கு நடப்பதை மட்டும் கவனியுங்கள் நண்பரே....நான் 3 வருடம் கழித்துதான் சில விஷயங்களை எழுதுகிறேன்
இந்த சிக்கலில் சிக்காத பதிவர்கள் மிகவும் குறைவு. எல்லோரும் தன் பங்கிற்கு ஒருமுறை அழுதுவிட்டு வழக்கம்போல் பதிவை தொடர்கிறார்கள்.
நீங்களும் அதையே தான் செய்ய போகிறீர்கள்.
பதிவெழுத வந்த புதிதில் எல்லோருக்கும் இப்படித் தோன்றுவதுதான் இயல்புதான். கவலைப் படாமல் உங்களுக்குத் தோன்றும் விஷயங்களை உங்கள் பாணியில் எழுதுங்கள். பதிவுலகில் அரசியல் ஒன்றும் புதிதல்ல. அதற்குள் தேவையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள்! அது அவர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...!
ஆர்.கே.சதீஷ்குமார் said...
அண்மையில் ஒரு பதிவரின் பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் போட்டேன். உடனே எனக்கு ஒரு பின்னூட்டம் வந்தது,
’இந்த மாதிரி பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால், நீங்களும் பதிவுலகில் இருந்து ஏனைய பதிவர்களால் புறக்கணிக்கப்படலாம் என்று//
இதுவும் பண்றானுங்களா//
சகோ ஐ ஆம் சோ சொறி, உங்க பின்னூட்டத்திற்குப் பதிலளிக்கத் தவறி விட்டேன். இல்லைங்க சும்மா ஒருத்தன் வந்து நான் சகோதரம் சிபியோடை ஒரு பதிவரைப் பற்றிய விமர்சனப் பதிவில் பின்னூட்டம் போட்டவுடன் துள்ளிட்டுப் போனான். அவ்வளவு தான். உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்.
chittoor murugesan said...
ஹும் நிர்வாணிகளின் ஊரில் இப்படி ஒரு கோவணதாரி.
என்னே கடவுளின் லீலை. வாழ்க .. தொடர்//
இதெல்லாம் கடவுளின் லீலையா? நல்லாத் தான் விடுறீங்க றீலு
சி.பி.செந்தில்குமார் said...
உங்க கருத்துக்கள் வலிமையானவை.//
நன்றிகள் சகோ, புதிய உலகினைப் தரிசிக்கலாம் எனும் ஆதங்கம் தான்!
விக்கி உலகம் said...
உலகம் அழகு விஷயங்களின் அரங்கம் அவ்வளவே - நாம் பார்க்கும் பார்வையில் மட்டுமே அது தெரியும்............
பதிவெழுதுவது என்பது அவரவர் விருப்பம் இதில் அரசியல் எனப்படுவது யாதெனின் யாரையாவது தேவையில்லாமல் சீண்டும் போது வருகிறது...........வட்ட அரசியல் எங்கும் உண்டு அது அவர்கள் நிலைப்பாடு எனும் போது அதனை அவ்வாறே விட்டு செல்வது நலம்.........நம்ம பொழப்ப பாப்போமுங்க ஹி ஹி!
- இவை என் தாழ்மையான கருத்துக்கள் நன்றி//
சகோ விக்கி, அதற்காக ஒரு கூட்டத்தினர் சேர்ந்து ஆதாரமில்லாத விடயங்களை நிரூபிக்க முனைகிறார்கள் என்றால் பார்துக் கொண்டிருக்கலாமா?
நிகழ்காலத்தில்... said...
நடைமுறையில் உள்ளதை எழுதி இருக்கிறீர்கள். :))
இந்த பதிவரசியலில் நாம் சிக்காமல் இருப்பது எப்படி எனப்பார்த்தால் போதும்.
வாழ்த்துகளுடன்
நிகழ்காலத்தில் சிவா
http://arivhedeivam.blogspot.com//
நன்றிகள் சகோ!
சேட்டைக்காரன் said...
ஒரு மாதத்திலேயே இம்புட்டு விஷயத்தைக் கவனிச்சிட்டீங்களா? சபாஷ்! :-//
எல்லாம் பெரியவங்க நீங்கள் கற்றுத் தாற பாடம் தான்! நண்பர் சதீஷ்குமார், சிபி செந்தில் ஆகியோரின் பதிவுகளைப் படிக்கையில் இந்தப் பதிவர்களுக்கு இடையேயான குழு அரசியல் பற்றி அவர்கள் விளக்கியிருந்தார்கள். அந்த அனுபவம் தான்!
இராஜராஜேஸ்வரி said...
உங்க கருத்துக்கள் வலிமையானவை..
Interesting//
நன்றிகள்!
ஆர்.கே.சதீஷ்குமார் said...
ம்..உங்க பிளாக்கில் நான் கமெண்ட் போட்டாலும் அதுக்கு ரிப்ளை பண்ணக்கூடாதுன்னும் சொல்லி இருக்கானுகளா... ம் ..நடக்கட்டும்//
சகோ ஐ ஆம் சோ சொறி, உங்க பின்னூட்டத்திற்குப் பதிலளிக்கத் தவறி விட்டேன். இல்லைங்க சும்மா ஒருத்தன் வந்து நான் சகோதரம் சிபியோடை ஒரு பதிவரைப் பற்றிய விமர்சனப் பதிவில் பின்னூட்டம் போட்டவுடன் துள்ளிட்டுப் போனான். அவ்வளவு தான். உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்.
ஆர்.கே.சதீஷ்குமார் said...
இன்னும் 6 மாதத்திற்கு நடப்பதை மட்டும் கவனியுங்கள் நண்பரே....நான் 3 வருடம் கழித்துதான் சில விஷயங்களை எழுதுகிறேன்//
நீங்க சொல்லீட்டிங்க எல்லே. பொறுமை தான் நல்லது. நான் இவற்றையெல்லாம் இனிப் பொருட்படுத்தாது என் வழியில் போகப் போகிறேன்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவெழுத வந்த புதிதில் எல்லோருக்கும் இப்படித் தோன்றுவதுதான் இயல்புதான். கவலைப் படாமல் உங்களுக்குத் தோன்றும் விஷயங்களை உங்கள் பாணியில் எழுதுங்கள். பதிவுலகில் அரசியல் ஒன்றும் புதிதல்ல. அதற்குள் தேவையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள்! அது அவர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...//
ஆஹா.... அருமை அருமையான கருத்துக்கள். நகைச்சுவைத் தென்றலிற்குள் இவ்வளவு ஆழமான சிந்தனைகளா? நன்றிகள்.
ஆனாலும் நாங்கள் ஒவ்வொருவரும் அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என இருந்தால் ந்ல்ல திறமையுள்ள பதிவர்களின் ஆக்கங்கள் படிக்கப்படாமல் காணாமற் போய்விடுமே சகோதரா?
ஜீவன்சிவம் said...
இந்த சிக்கலில் சிக்காத பதிவர்கள் மிகவும் குறைவு. எல்லோரும் தன் பங்கிற்கு ஒருமுறை அழுதுவிட்டு வழக்கம்போல் பதிவை தொடர்கிறார்கள்.
நீங்களும் அதையே தான் செய்ய போகிறீர்கள்.//
சபாஷ் சரியாகச் சொன்னீர்கள்! தனி ஒருவன் குரல் கொடுப்பதால் பலனில்லை என்பதை உணர்ந்தவர்களின் குரலை வரவேற்கிறேன். ஆனால் இந்த மாயையினுள் சீரழியும், அல்லது காணாமற் போகடிக்கப்படும் நல்ல பதிவுகளின் நிலமைக்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்?
////////நிரூபன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
பதிவெழுத வந்த புதிதில் எல்லோருக்கும் இப்படித் தோன்றுவதுதான் இயல்புதான். கவலைப் படாமல் உங்களுக்குத் தோன்றும் விஷயங்களை உங்கள் பாணியில் எழுதுங்கள். பதிவுலகில் அரசியல் ஒன்றும் புதிதல்ல. அதற்குள் தேவையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள்! அது அவர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...//
ஆஹா.... அருமை அருமையான கருத்துக்கள். நகைச்சுவைத் தென்றலிற்குள் இவ்வளவு ஆழமான சிந்தனைகளா? நன்றிகள்.
ஆனாலும் நாங்கள் ஒவ்வொருவரும் அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என இருந்தால் ந்ல்ல திறமையுள்ள பதிவர்களின் ஆக்கங்கள் படிக்கப்படாமல் காணாமற் போய்விடுமே சகோதரா?//////
அப்படி சொல்லவில்லை நண்பரே... நல்ல பதிவுகளை ஊக்கப்படுத்த வேண்டியது நமது பொறுப்பும் கடமையும் கூட..! ஆனால் பதிவு அரசியல் பதிவுகளில் தலையிடுவது வேண்டாம் என்கிறேன். பெரும்பாலும் குழுக்களே அரசியல் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றன. அதன் பின்னணி தெரியாமல் தலையிடுவதோ யார் சரி/தவறு என்று நாம் முடிவு செய்வதோ சரியாக இருக்காது அல்லவா?
உங்கள் ஆதங்கத்தை சொல்லி இருக்கிறீர்கள். இதில் வேதனைப்பட ஒன்றும் இல்லை.
//பன்னிக்குட்டி ராம்சாமி
பதிவெழுத வந்த புதிதில் எல்லோருக்கும் இப்படித் தோன்றுவதுதான் இயல்புதான். கவலைப் படாமல் உங்களுக்குத் தோன்றும் விஷயங்களை உங்கள் பாணியில் எழுதுங்கள். பதிவுலகில் அரசியல் ஒன்றும் புதிதல்ல. அதற்குள் தேவையில்லாமல் சிக்கிக் கொள்ளாதீர்கள்! அது அவர்கள் பிரச்சனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்...!//
உண்மை..
உங்களின் பின்னூட்டங்கள் முரண்பாடுகளை வெளிப்படுத்தவும் தயங்க வில்லை என்பதை அறிவேன்..
நிரூபனின் வார்த்தைகள் எப்போதும் நடு நிலையாகவே இருக்கும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளீர்கள்..
நிரூபன்....வந்து கொஞ்ச நாளிலிலேயே பதிவுலகம் அடிக்குதுபோல.போகப் போக அடி பழகிடும்.பேருக்கும் புகழுக்குமா எழுதுறோம் நிரூபன்.மனதில சொல்ல வேணும் எண்டு நினைக்கிற விஷயத்தைப் பக்குவமாக எழுதுங்கோ உங்களுக்காக மட்டும்.
பின்தொடர்கறோம் நாங்கள் !
அட அட இதை மட்டும் எப்படி தவற விட்டேன்... மவனே எனக்கும் இந்த அனுபவம் நல்லாவே எற்பட்டது....
ஒன்று அசினின் அக்கம் மற்றது பாரதிராஜாவின் களவு பற்றி எழுதிய ஆக்கம்... அப்புறம் தான் பட்டுத் தெளிந்தேன்... அதற்காக திருப்பியும் எழுதமாட்டேன் என்று சொல்லமாட்டேன் பதுங்கிப் பாயப் போகிறேன்...
Post a Comment