சுற்றும் முற்றும் வீதியைப் பார்க்கிறேன். வீதியில் சன சந்தடியைக் காணேம். இது தான் தக்க தருணம் என மனதினுள் நினைத்தபடி சைக்கிளை வேகமாகச் செலுத்தி அவளை ஓவரேக் எடுத்து முன்னாலே போய் நின்ற வாறு கேட்கிறேன்.
‘ஹலோ எக்ஸ்கியூஸ்மி, உங்கடை பெயர் என்ன’?
‘அடே நாயே, எருமையே, சனியனே, ஊரிலை போற பொட்டையளுக்குப் பின்னாலை திரியிற கவாலியே, தெருப் பொறுக்கியே........இன்னும்....இன்னும் பல வார்த்தைகளினால் தனது கோபத்தை அள்ளி வீசினாள் அவள். இவளவு பேசி முடித்த பிறகும் ‘நான் சிரித்த படி ‘என்னது எங்கடை ஊர் ரேடியோ, ரீவீக்கள் மாதிரி விளங்காத பாசையிலை பேசுறீங்க. எதுவாய் இருந்தாலும் நேரடியாக விளங்கிற தமிழிலை சொல்லலாம் தானே என்றேன்?
அடே ரோசமில்லாத பொறுக்கி, இவளவு பேசினதுக்குப் பிறகும் சுறணையில்லாமல் சிரிச்சுக் கொண்டு நிக்கிறியே, உன்னைச் செருப்பாலை அடிக்கவேணும்.. எனச் சொல்லிக் கொண்டு உயரமான ஹீல் செருப்பைக் கழற்றப் போனவளைப் பார்த்துச் சொன்னன், ’அடிக்க முதல் கொஞ்சம் யோசிச்சு அடியுங்கோ, ஏனெண்டால் உங்களுக்கு கணவனாக வாறவரின்ரை கன்னத்திலை செருப்படையாளம் இருக்க உங்கள் மனம் ஏற்குமோ? என ஒரு பஞ்ச் வசனத்தை எடுத்து விட்டேன்.
அவள் என்னுடைய சமயோசிதமான பதிலினைக் கேட்டுச் சமரசம் செய்பவள் போல என்னிடம் மெதுவாக இறங்கி வந்து பேசினாள். ’’உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை. இப்ப நாலைஞ்சு நாளாப் பார்க்கிறன். எனக்குப் பின்னலை வந்து டிஸ்ரபன்ஸ் பண்ணுறீங்க. என்ன வேணும் சொல்லுங்கோ? என்றாள் அவள்.
இது தான் சந்தர்ப்பம் என நினைத்து, நிலத்தைக் குனிந்து பார்த்தபடி ‘உங்கடை பெயர் என்ன வென்று சொல்ல முடியுமோ என்றேன்?
’என்னது என் பெயர் வேணுமோ? பெயரைச் சொன்னால், அதற்குப் பிறகு பின்னாலை வர மாட்டாய் தானே? என்றாள்.
அதப் பற்றி பிறகு யோசிப்பம் முதலிலை பெயரைச் சொல்லுங்கோ என்றேன்.
என்ன என்ரை பெயரை அவ்வளவு ஈசியாச் சொல்லிடுவேனா? உனக்கு மண்டையிலை மூளை இருக்கா என்று அறிய வேணாம், அதான் என் பெயரை நேரடியாச் சொல்ல மாட்டேன். இந்தா ஒரு புதிர் சொல்லுறன். அதிலை இருந்து என்ரை பெயரை க் கண்டு பிடிச்சால் நீ விண்ணன் என்றாள்.
’வள்ளுவனின் முப்பாலிலுள்ள ஒரு பாலின் முதலெழுத்தும்
‘பிராயாணத்திற்குப் பயன்படும் ஊர்தியின் இரண்டாமெழுத்தையும்,
‘எட்டை ஏழுதரம் பெருக்கி வரும் விடையிலுள்ள
நடு இரண்டெழுத்தையும்,
ஊரிலை விரதமென்றால் நீங்கள் சோறு வைக்கிற
பறவையின்ரை முதலெழுத்தை இறுதியெழுத்தாகவும் போட்டால்
என் பெயர் வரும் என்று சொன்னாள்.’
உண்மையாகவே ஒரு கணம் அதிர்ந்து தான் போட்டேன் நண்பர்களே.
அவள் என்னை சுய நினைவிற்குக் கொண்டு வந்தாள்.
’என்ன முழிக்கிறீங்கள், சரி இன்னுமொழு குழூ தாறன்,
என்ர பெயர் தொடங்கிறதும் முடிகிறதும் ஒரே எழுத்திலை தான். இப்ப கண்டு பிடியுங்கோ பார்ப்பம் என்றாள்.
தொடர்ந்தும் முழித்தேன்.
‘அட பன்னாடை, உனக்கு இதுக்கே பதில் தெரியேல்லை, பிறகு எனக்குப் பின்னாலை சுத்துறியோ எனத் திட்டினாள்.
நான் கொஞ்சம் கௌரவமாக என் சேர்ட்டின் கொலரை இழுத்து விட்டுச் சொன்னன்.
’எனக்கு விடை தெரியும். ‘விடையை இப்ப சொன்னால் நாளைக்கு உங்களைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்காது. அதனாலை நாளைக்குப் பின்னேரம் நீங்கள் பள்ளிக் கூடம் விட்டு வரும் போது சொல்லுறேன் என்று இலாவகமாக நழுவி ஓடி வந்து விட்டேன்.
‘அவளுக்கு எங்கே தெரியப் போகுது எனக்கு விடை தெரியாது என்று?
நண்பர்களே, நீங்கள் எல்லோரும் என் காதலுக்குத் துணை இருப்பீங்க எனும் துணிவிலை தான் ‘நாளைக்குப் பதில் சொல்லுறேன்’ என்று எஸ்கேப்பு ஆகி வந்தேன். இப்ப நீங்க தான் என்னைக் காப்பற்றனும். இந்தப் புதிருக்கு விடையைச் சொல்லி என் காதலை ஜெயிக்கப் பண்ணுவீங்க என்ற ஒரே நம்பிக்கையிலை தான் உங்களிட்டை சரணாகதி அடைஞ்சிட்டேன்.
கிட்ட வாங்கோ, மெதுவாகக் காதைக் கொடுங்கோ, நான் புளொக் எழுதுற விடயம் அவளுக்கு இன்னமும் தெரியாது, அதாலை நீங்கள் தைரியமாகப் பதில் சொல்லலாம்.
சரியான விடையளிக்கும் அன்பு உள்ளங்களுக்கு சகோதரன் ‘மாத்தியோசி ஓட்டை வரை நாரயணன்’ அன்பளிப்பாகத் தரும் பரிசினை ‘சகோதரன் ‘பன்னிக் குட்டி ராம்சாமி’ அவர்கள் தன் கையால் வழங்கிக் கௌரவிப்பார்.
எங்கே எல்லோரும் தயாரா? ஸ்ராட் த மியூசிக்..
|
24 Comments:
வணக்கம் நண்பர்களே, இப் பதிவுக்கான சரியான பதிலைச் சொல்லும் வாய்ப்பினை எல்லோருக்கும் வழங்க வேண்டும், என் காதல் வெற்றி பெற வேண்டும் எனும் நல்ல நோக்கத்திற்காக இந்தப் பதிவிற்கு வரும் மறு மொழிகளை மட்டுறுத்துகிறேன். ஒன்லி போ திஸ் போஸ்ட்..
நடத்துங்க... நடத்துங்க...
கார்த்திகா..?
Well done senthilkumar. நன்றிகள் சகோதரம் செந்தில்குமார். இப்போதைக்கு இவர் தான் அவள் பெயரைக் கண்டு பிடித்துள்ளார். அப்பாடா என் காதலைக் காப்பாற்றிட்டிங்க.
அட...நிரூபன்...இது பெரிய விண்ணானமாக்கும்.
உங்க கா..கா பேர் ”கார்த்திகா” !
கார்த்திகா?
தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்
பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/4.html
சகோதரம் அவர்களுக்கு என் வணக்கங்கள் ... ..‘""""""அடே நாயே, எருமையே, சனியனே, ஊரிலை போற பொட்டையளுக்குப் பின்னாலை திரியிற கவாலியே, தெருப் பொறுக்கியே........இன்னும்....இன்னும் பல வார்த்தைகளினால் தனது கோபத்தை அள்ளி வீசினாள் அவள். இவளவு பேசி முடித்த பிறகும் ‘""""""""சொக்கிப்போனேன் அவள் மேல் கொண்ட உங்கள் காதலை நினைத்து ..
ஆஹா..அப்படியா! செந்தில்க்குமார்
சொன்ன விடைதான் நான் சொல்வதும்.
நமக்கு இதெல்லாம் தெரியாது நடத்துங்க
நிரூபன்....பேப்பர் எல்லாம் எடுத்து யோசிக்க வச்சிட்டிங்களே...ஓகே..ஓகே...கார்த்திகா...தான் அந்த பெயர்..சரிதானே...:)))
நிரூபன்....பேப்பர் எல்லாம் எடுத்து யோசிக்க வச்சிட்டிங்களே...ஓகே..ஓகே...கார்த்திகா...தான் அந்த பெயர்..சரிதானே...:)))
Pari T Moorthy said...
தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்
பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/4.htm//
நிரூபன் said...
வணக்கம் சகோதரம், தாமதமான பின்னூட்டத்திற்கு I'm sorry.
தமிழ் வளர்க்க, தமிழால் தமிழை வாழவைக்க வலையுலகில் புறப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெரு மலைகள் நடுவே நான் ஒரு சிறு தூசி. என்னையும் உங்கள் அனைவரின் முன்னே அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள். நான் பதிவுலகிற்கு புதியவன். இன்னும் எழுத நிறைய விடயங்கள் இருக்கு. நான் பதிவுலகில் எதையும் எழுதிக் கிழித்ததாகவோ, இல்லை நிறையச் சாதித்ததாகவோ நினைக்கவில்லை. அப்படி இருக்கையில் உங்களின் அன்பு என்னை நெகிழச் செய்கிறது.
என்னை விட, என் இடத்திற்குப் பதிலாக நன்றாக எழுதும் வேறு யாராவது பதிவரினை அறிமுகப்படுத்தியிருந்தால் உங்கள் வலைச் சரத்திற்கு அழகாக இருக்கும். ஏன்னா நான் இப்போது பிறந்த கடைக்குட்டி.
நன்றிகள் சகோதரம்
வணக்கம் நண்பர்களே, முதலாவது பரிசு- நம்ம சிரிப்பு சரவெடி புகழ்- சி.பி செந்தில் குமார் அவர்களிற்கும்,
ஏனைய ஆறுதல் பரிசுகளான
அதாங்க இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது பரிசுகள்
முறையே
ஹேமா,
சித்திரா,
ஆனந்தி ஆகியோருக்கும் வழங்கப்படுகின்றது.
உங்களின் நல் முயற்சிக்கும், என் காதலைக் காப்பதற்காக நீங்கள் எடுத்த சிரமங்களிற்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்.
என்ன பரிசு என்று யோசிக்கிறீர்களா?
அதாங்க நம்ம மாத்தியோசி சார் கொஞ்சம் பிசி. அவர் என் அழைப்பை ஏற்று உங்களுக்கான பரிசினை வெகு விரைவில் வழங்குவார் என நம்புறேன்.
நன்றிகள், நன்றிகள், Thank you my dear friends.
இது உங்களுக்கு .. said...
சகோதரம் அவர்களுக்கு என் வணக்கங்கள் ... ..‘""""""அடே நாயே, எருமையே, சனியனே, ஊரிலை போற பொட்டையளுக்குப் பின்னாலை திரியிற கவாலியே, தெருப் பொறுக்கியே........இன்னும்....இன்னும் பல வார்த்தைகளினால் தனது கோபத்தை அள்ளி வீசினாள் அவள். இவளவு பேசி முடித்த பிறகும் ‘""""""""சொக்கிப்போனேன் அவள் மேல் கொண்ட உங்கள் காதலை நினைத்து .//
என்ன பண்ண சகோதரம், இவ்வளவு கஸ்டப்பட்டாவது, மனதிற்குப் பிடித்தவளை அடைய வேணும் எனும் ஓர்மம் நான். அட நீங்க வேறை, என் ஒரு நண்பன் இருக்கிறான். இதை விட கேவலமான அவஸ்தை எல்லாம் பட்டு தன் காதலைச் சொல்லியிருக்கிறான்.
இதெல்லாம் சும்மா ஒரு சோடணை, இந்தக் குறுங் கதையினை மெருகு படுத்தும் டெக்கிறேசன். நிஜ வாழ்க்கையிலை இன்னும் யாருமே மாட்டலை. நான் ஓப்பின் மைண்ட் பேர்சன்.
Jana said...
ஆஹா..அப்படியா! செந்தில்க்குமார்
சொன்ன விடைதான் நான் சொல்வதும்.//
என்ன இப்படிச் சொல்லி எஸ்கேப் ஆகும் பிளானா? அடுத்த தடவை உங்களுக்கு இருக்கு ஆப்பு.
ரொம்ப லேட்டா வந்திட்டேன்னு நினைக்கிறேன்...:) சரியா பதில் சொன்னவர்களுக்கு உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துறேன்!
//’வள்ளுவனின் முப்பாலிலுள்ள ஒரு பாலின் முதலெழுத்தும்
‘பிராயாணத்திற்குப் பயன்படும் ஊர்தியின் இரண்டாமெழுத்தையும்,
‘எட்டை ஏழுதரம் பெருக்கி வரும் விடையிலுள்ள
நடு இரண்டெழுத்தையும்,
ஊரிலை விரதமென்றால் நீங்கள் சோறு வைக்கிற
பறவையின்ரை முதலெழுத்தை இறுதியெழுத்தாகவும் போட்டால்
என் பெயர் வரும் என்று சொன்னாள்.’//
சந்தேகமே இல்லை.
கார்த்திகா.....
மரியாதையா எனக்குதான் முதல் பரிசு வரணும் நான் யாரையும் காப்பி அடிக்க வில்லை....
இல்லைனா பதிவர் கவுன்சில் போயி கம்ப்ளைன்ட் குடுத்துருவேன்...
சீக்கிரம் பரிசு தாங்கப்பா....
வருகைக்கு பிந்திவிட்டது நிருபன் மன்னிக்கவும்.... தயவு செய்த எனக்காக இப்படி ஒரு போட்டியை மீள ஒழங்கமையுங்கள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
Priya said...
ரொம்ப லேட்டா வந்திட்டேன்னு நினைக்கிறேன்...:) சரியா பதில் சொன்னவர்களுக்கு உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துறேன்//
வாங்கோ, வாங்கோ, வருக வருக என வரவேற்கிறேன்.
MANO நாஞ்சில் மனோ said...
மரியாதையா எனக்குதான் முதல் பரிசு வரணும் நான் யாரையும் காப்பி அடிக்க வில்லை....
இல்லைனா பதிவர் கவுன்சில் போயி கம்ப்ளைன்ட் குடுத்துருவேன்...
சீக்கிரம் பரிசு தாங்கப்பா....//
என்னது பதிவர் கவுன்சிலா? அது எங்கே இருக்கு சகோதரம். அப்புறம் நான் மாமூல் கொடுத்து கம்பிளைண்டை வாபஸ் வாங்க பண்ணிடுவேன். இது எப்புடி இருக்கு!
♔ம.தி.சுதா♔ said...
வருகைக்கு பிந்திவிட்டது நிருபன் மன்னிக்கவும்.... தயவு செய்த எனக்காக இப்படி ஒரு போட்டியை மீள ஒழங்கமையுங்கள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.//
சுதா சொல்லிட்டீங்க, எல்லோ. கலக்குறோம், ஜெயிக்கிறோம். வெகு விரைவிலை உங்களுக்காக ஒரு பதிவு.
இந்த மாதிரித் துண்டுகளுக்குப் பின்னால் போறதைவிட கொப்பி/புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு படிப்பது "ஈஸி" போலுள்ளது.
Post a Comment