இலங்கையில் அபிவிருத்திப் பணிகள் இடம் பெறுகின்றன. பெருந் தெருக்கள், புகையிரதப் பாதைகள் புனர் நிர்மாணம் செய்யப்படுகின்றன. உள்ளூர் வீதிகள் செப்பனிடப்படுகின்றன, புதிது புதிதாக வங்கிகள் முளைக்கின்றன இவற்றை யாரும் மறுத்துரைக்க முடியாது. ஆனால் ஒரு புறம் பசுமைப் புரட்சியை நோக்கிய பாதையில் நாடு சென்று கொண்டிருந்தாலும் பாராளுமன்றத்தில் பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகள் இடம் பெறுவதாலும் தெங்கு முக்கோண வலயம் எனச் சிறப்பிக்கப்படும் புத்தளம், குருநாகல், கொழும்பு ஆகிய பகுதிகளில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சியடைந்து இருப்பதோடு ஏனைய உணவு உற்பத்திகளும் பின் தங்கிய நிலையில் இருப்பதால் எமது இலங்கை இப்போது உலகின் அதிசய நாடுகள் வரிசையில் உள்ளது.
இன்றைய யாழ் நகரச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட தரவுகளின் படி பொருட்களின் விலைப் பட்டியல்:
அரிசி ஒரு கிலோ: 100.00 ரூபாவிற்கு மேல்
பச்சை மிளகாய்: கிலோ 700.00 ரூபாவிற்கு மேல்
வெங்காயம்: கிலோ 800.00
ஒரு அந்தர் வெங்காயம்: 15,000.00 ரூபாவிற்கு மேல்
விளை மீன், ஒட்டி கால் கிலோ 250.00 ரூபாவிற்கு மேல்(விலை உங்களின் மீன் வழங்கும் விநியோகிஸ்தரைப் பொறுத்து வேறுபடலாம்)
கோழி: ஒரு கிலோ 800.00 ரூபா.
தேங்காய்: குடாநாட்டில் கிடைப்பது அரிது, அப்படிக் கிடைத்தாலும் 80.00 ரூபாவை விட அதிகம்
உருளைக் கிழங்கு: கிலோ 60.00 ரூபாவிற்கு மேல்
பிஸ்கட்டுக்கள்- சொக்கிலேற் கிறீம், லெமன் பப்: 85.00
ஏனைய பிஸ்கற்றுக்கள் 85.00 ரூபாவை விட அதிகம்.
இது இன்றைய சந்தை நிலவரம். இதிலுள்ள விலை விபரங்கள் பிரதேசத்திற்குப் பிரதேசம், பொருட்களின் தரத்தினைப் பொறுத்து வேறுபடலாம்.
பாண் ஒரு இறாத்தல்: 45.00
வடை 18.00
இனிக் குடாநாட்டில் பவுண்/ தங்கத்தின் விலை
ஒரு பவுண்: 45,000.00 இது விற்கும் விலை
தங்கம் வாங்கும் விலை அண்ணளவாக 35,000.00 ரூபாக்கள்
இத் தங்கத்தை வாங்கும் விலை பிரதேசத்திற்குப் பிரதேசம், ஊர்களில் இடம் பெறும் திருட்டுக்களின் அடிப்படையில் வேறுபடும்.
*சமீபத்தில் ராஜா தியேட்டருக்கு அருகில் உள்ள நகைக் கடைக்கு வயதான பெண்மணி ஒரு சில நகைகளுடன் வந்தார். பவுண் எவ்வளவு என்றதும், நகைக் கடை முதலாளி முதலில் ‘நீங்கள் இருக்குமிடம் எங்கே எனக் கேட்டார். அவர் மானிப்பாய் இருக்கிடம் எனச் சொன்னது தான் தாமதம், உங்கடை ஊரிலை வைச்சால் ஒரு பிரயோசனமும் இல்லாமல் யாராவது களவு எடுத்துக் கொண்டு போடுவாங்கள். உங்களுக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம், அதாலை ஒரு 25,000.00 ரூபா பவுணிற்கு தாறன் உங்கடை நகையைத் தாருங்கோ என்று வாங்கி விட்டார். நகை விற்கும் நல்ல உள்ளங்களே! உஷார்...பவுண் 35,00.00 இற்கு மேல் என்றால் மட்டுமே விற்பனை செய்யுங்கள்.
குடநாட்டில் பெய்யத் தொடங்கிய மழை இன்னமும் சீராக நிற்கவில்லை, கடந்த வாரம் ஓரளவு வெய்யிலுடன் கூடிய காலநிலை நிலவியது. ஆனால் இன்றைய நாளில் மழை மீண்டும் தன் வேலையைத் தொடங்கி விட்டது. இதனால் அன்றாடம் வேலை செய்து பிழைக்கும் மக்களில் ஒரு சிலர் தமது உணவுப் பசியை அல்லது பொருட்களின் விலையினால் ஏற்பட்ட பஞ்சத்தை நீக்க வீடுகளில் புகுந்து ஆடுமாடு, கோழி திருடுவதும், தோட்டங்களில் புகுந்து மரக்கறிகளில் கைவரிசையைக் காட்டுவதும் வழமையாகி விட்டது.
இத்தகைய கொடும் வறுமை நிலை இன்னும் தொடருமாயின் உலகின் அதிசய நாடுகள் வரிசையில் இலங்கை இடம் பெறும் என்பது நிஜமாகுமோ?
பிற் குறிப்பு: நான் யாழ்ப்பாணத்தில் இருப்பதால் குடநாட்டுச் சந்தை விபரங்களை மாத்திரமே அறியக் கூடியதாக இருந்தது. இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள அன்பு உள்ளங்களும் உங்கள் ஊர்ச் சந்தை நிலவரங்களைப் பகிர்ந்து கொண்டால் அனைவரும் அறியக் கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
|
9 Comments:
எங்கள் ஊரின் நிலவரம் பார்த்துச் சிரிக்கிறதா அழுறதா...வருமானம் குறைந்தவர்கள் அல்லது வருமானமே இல்லாதவர்களின் நிலை...கடவுளே !
ஏதோ ஒரு வகையில் இலங்கை அதிசய நாடுதான்.பொய்யில்லை நிரூபன் !
நிரூபன்...போருக்கு பின் இவ்வளவு மோசமான நிலைமையா...விலை எல்லாம் கேட்டால் தலை சுத்துறது..அயோ..தமிழ் நாட்டில் 50 ரூபா வெங்காயம் ஒரு கிலோ வித்ததுக்கே தானாக முடியலையே ...ம்ம்...எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை...பட் ரொம்ப கஷ்டமா இருக்கு...
அடடா.. என்ன நிரூபன் நீங்க.. ரெய்லருக்கே..அலுத்தக்கிறிங்களே..மெயின் பிக்ஸர் இன்னும் ஓடலை. அவசர அவசரமாக 5000 ரூபா தாள்கள் அடிப்பது புரியலையா என்ன!
keep it up
எல்லா ஊர்லயும் வில ஏறிட்டுத்தான் இருக்கு போல....
முக்கா பவுன் தங்கம் வாங்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது.
வெங்காய விலையை நினைச்சா, கண்ணில ஆட்டோமேட்டிக்கா தண்ணி வருதுங்க.
ஹேமா, ஆனந்தி, ஜனா, யாதவன், ஆதவா உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்.
இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ தெரியல..
எப்படி வருமானம் குன்றியோர் வாழ்கிறார்கள்.
பவுண் வாங்கும் விற்கும் விலைக்கிடையில் ஏன் இவ்வளவு வித்தியாசம்?
இலங்கை அதிசய நாடுகளின் பட்டியலில் முதலில் தான் இருக்கவேணும்.... ஏனெனில் அந்த நாடுதானெ சொந்த குடிகளையே ராணுவம் வைத்து கொன்றது?
Post a Comment