Friday, July 8, 2011

கலைஞரின் கலர் டீவியில் ஜெயலலிதாவின் கருத்துப் படம்!

ஐம்பதாண்டு கால அரசியல்
முதிர்ச்சியின் சுயாதீன
குடும்ப நலன் எனும் 
ஆடையினை(த்) தமிழ்
அன்னைக்கு போர்த்தி
அவள் கண்களை
இலவசம் எனும்
பாசக் கயிற்றினால் கட்டி
அதன் மேல் 
பிறர் கண்பாடதவாறு 
மக்கள் சொத்தினை
வாரிச் சுருட்டி- தன் 
மக்கள் வாழ்வு மேம்பட வைத்து
இறுதியில்- கொடுத்தல்
வாங்குதல் எனும் 
தர்க்கமானது இலவசங்கள்
வாயிலாக இவரிடமிருந்து
வெளித்தெரிகின்றது 
எனும் ஜீரணிக்க 
முடியாத உண்மை
மக்கள் மனங்களிற்குத் தெரியவர
ஆசனப் பகுதியில் 
இறுக்கி ஒட்டியிருந்த
இலகுவில் கழற்றி எறிந்திட முடியாத
ஆட்சி எனும் கட்டிலிருந்து
தூக்கியெறியப்பட்டார் கலைஞர்! 


Saturday, July 2, 2011

ஈழப் போர் விட்டுச் சென்ற தடயங்கள்!


போர் ஒரு வரலாற்றை அழித்து, இன்னோர் வரலாற்றை நிலை நிறுத்தப் பயன்படுத்தும் உத்தியாக உலக நாடுகளில் எங்கோ ஓர் முலையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் ஓர் பரிணாமம் தான் ஈழ மக்கள் வாழ்வினையும் ஈழப் போர் எனும் வடிவில் திசை மாற்றியிருக்கிறது. இந்தப் போர் பல உயிர்களைத் தன் பசிக்கு இரையாக்கியிருக்கிறது.


மகிந்தவுக்கு செய்வினை வைக்க முடியுமா- ஒரு சவால்! 

இப் பதிவின் நோக்கம், ஒரு சில விடயங்களினைத் தெளிய வைப்பதாகும். இப் பதிவில் வரும் கருத்துக்கள் யாவும் தமிழ் ஊடகங்களின் செய்திகளை அடிப்படையாக வைத்தே தொகுக்கப்பட்டுள்ளன. இங்கே எழுதப்பட்டுள்ள என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை, ஊடகங்களில் வரும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு வினாக்களாக மாத்திரம் முன் வைக்கிறேன். 

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க