எல்லோருக்கும் இனிய காலை வணக்கம், எல்லோரும் இன்றைய பயிற்சிக்கு ரெடியோ? என்ன கடைசி வரிசையில ஒராள் குறைகிற மாதிரி இருக்கு. ஓ...செந்தோழன் இன்னும் ட்ரெயினிங்கிற்கு வரவில்லையே! ஓக்கே நீங்கள் எல்லோரும் ஒரு ஐஞ்சு நிமிசம் துள்ளத் தொடங்குங்கோ. நான் செந்தோழனைப் போய்க் கூட்டி வாரேன்" என்று சொல்லியவாறு ட்ரெயினிங் மாஸ்டர் புரட்சி வேகமாக தன் வேஸினுள்(போராளிகள் முகாம்) போய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த செந்தோழனைத் தட்டி எழுப்புகிறார்.
|
|


