பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே;
மனித மனங்களில் உள்ள உணர்வுகளிற்கு நாம் கடிவாளம் போட்டு, அவ் உணர்வுகளைக் கட்டி வைக்க நினைக்கின்ற போது ஏற்படுகின்ற விளைவுகள் பற்றி நீங்கள் யாவரும் அறிவீர்கள். எம் உணர்வுகளை அடக்கி வாழப் பழகிக் கொள்ளும் போது, எம்மையறியாமலே நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றோம். மனிதனது உணர்வுகள் இயற்கையின் நியதிக்கமைவாகத் தூண்டப்பட்டாலும், ஒரு சில வேளைகளில் தவறான வழிகளும் மனித உணர்வுகளைத் தூண்டுகின்ற காரணிகளாக மாறி விடுகின்றன.