அரசியல் என்பது மக்களுக்கான ஜனநாயகம் பேணும் பாதையென்று விளிக்கப்பட்டாலும், எம் இலங்கை- இந்திய நாடுகளில் நாட்டினது வளர்ச்சி- மக்களின் முன்னேற்றம் முதலிய செயற்பாடுகளைப் பற்றிய தூர நோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளால் இவ் அரசியலானது மாசுபடுத்தப்பட்டு வருகின்றது. மக்களுக்கான குரலையும், மக்களின் உரிமையினையும் உரத்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு ஒரு அரசியல்வாதிக்கு அல்லது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிக்கு இருக்க வேண்டும். ஆனால் எம் நாடுகளிலோ ஓட்டு வாங்கி, சட்ட சபை சென்ற பின்னர் தம் சுய ரூபத்தைக் காட்டி மக்களை மறக்கின்ற போலி அரசியல்வாதிகள் தான் அடக்கியும் வாசிக்கின்றார்கள். சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல அழுத்தியும் வாசிக்கின்றார்கள்.
|
|

