துன்னாலை சந்தி அருகே
தூங்காமல் விழித்திருந்தாள் சாந்தி
பின் வாசல் வழியே
பாய்ந்தது ஓர் சைக்கிள்
இன் நேரம் யாரங்கே,
இங்கிதமாய் உணர்ந்து கொண்டாள்
இளசுகளிற்கு ஈக்குவலாய்
இன் நாளில் ஆப் அடிப்பதிலோ அவர் வம்பர்
தன்னார்வ நிலை மறந்து, மெதுவாய்
தன்னார்வ நிலை மறந்து, மெதுவாய்
தள்ளாடி வந்தார் தம்பர்!
தம்பருக்கு மனசிற்குள் தனோர்
தமிழ் பட நாயகன் போல் நினைப்பு
வம்பிழுத்துப் பார்ப்பார், பெண்களினை, ரோட்டில்
வாஞ்சையுடன் பெயர் சொல்லி அழைப்பார்
தம் அடித்த வாறு பாட்டை
தலை கீழாய் மாற்றிப் பாடிடுவார்
அம்மனவள் சிலையோ, அழகில் நீ நமியோ
அன்பே என கவி தொடுப்பார்!
வேலருக்கு இப்போது புதிதாய்
வேட்கை தீர்க்கும் டாஸ்மாக் மீது காதல்
கால் நடுங்கும் வயதினிலும் ஊரிலுள்ள
கன்னியரின் மீது காம மோதல்
கோலமிடும் மகளிர், கொஞ்சுகின்ற குமரிகளை
கண்டதுமே பற்றி விடும் நெருப்பு
காலமது இன்னும் கையருகே இல்லையெனும்
காத்திருப்பால் கழிந்ததவர் தவிப்பு!
வேட்டியைத் தவிர வேறேதும் அறியாத புண்ணியவான்
வொட்கா அடித்தால் வேகம் எடுக்கும் என எண்ணியவர்
வீட்டில் பெட்டிப் பாம்பாய் இருக்கும் நல்ல மகான்
வேசம் போட்டு ஆசைய மறைக்கும் கள்ளனவன்
சாட்டில் ஒரு சுந்தரியை வேலர் சைட் கப்பில்
சற்றே கரக்ட் பண்ணி(ப்) பேச்சிழுத்தார்
ரோட்டில் அவளைச் சந்தித்து, தன்
ராக லீலையை மீட்டி விட நாட் குறித்தார்!
கப் பென்று பைக்கில் தொற்றி ஏறி
கன்னியினைச் சந்திக்க முன்னர்
மப்பொன்று அடித்தால், மனமும் இளகிவிடும்
மங்கையும் மடங்கிடுவாள், என;
பக் கென்று நினைத்தார் தம்பர், பரவசமாய்
பெக் ஒன்றை அடித்தார்
ஹிக் அன்று ஏறியதும், ஹியரை முறுக்கி
விக் மண்டை மயிராட ஓடினார்!
பட்டென குறுக்கே பாய்ந்ததோர் வெள்ளாடு
நட்டாற்று வீதியில் தம்பர் விழுந்தாட
கட்டிய வேட்டியோடோ கழன்றோட
கட்டிலில் கலக்கும் ஆசை அழிந்தோட
வெட்டியாய் ஆனார் தம்பர், இனி
வேட்டி கிளிந்த வெங்கியாய் வம்பர்!
|
6 Comments:
வணக்கம்,நிரூபன்!நலமா?அருமையாக இருந்தது!!!இருக்கிறது!!!!இருக்கும்!!!!!
இது நான் இல்லைத் தானே?ஹி!ஹி!ஹி!!!!!!!!!
ஹா... ஹா....
அருமை.... அருமை...
குடிமகன்களுக்கு
கொட்டைபாக்கு வெத்தலை போல நல்ல கவிதை நிரூபன்...
நல்லா இருக்குது...
புரட்சி எப் எம் கேட்டேன்
அருமையா இருக்குது...
வசைக்கவியா???அருமை
புரியவில்லை. ஆனால் எதோ விவகாரமான கவிதை என்பது மட்டும் தெரிகின்றது.
Post a Comment