நிலவில் தமிழன் கால் வைக்கும் நாள் வெகு விரைவில் நிகழுமா?
உலகில் வெறும் இரு நூறு ஆண்டுகள் வரலாற்றினை உடைய ஆஸ்திரேலியா இன்று உலகமே வியந்து நோக்கும் வண்ணம் சகல துறைகளிலும் முன்னேறியிருக்கின்றது. அமெரிக்கப் பொருளாதாரத்துடன் போட்டி போடுமளவிற்கு, அமெரிக்க நாணயப் பெறுமதியினை அடிக்கடி முந்தும் அளவிற்கு வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நாடு தான் ஆஸ்திரேலியா. நம்ம தமிழர்களின் வரலாறு என்ன என்று கேட்டால் நாம் அனைவரும் வாய்ல இருந்து சீத்துவாய் ஊத்தா குறையா "கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி” அப்படீன்னு ஒரு வசனத்தை திரும்ப திரும்ப பேசி, மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இனம் தமிழினம் அப்படீன்னு சொல்லி எம் பெருமையை நாமே பீத்திக்குவோம்.
ஆனால் வெள்ளைக்காரங்க சொல்லை விட எப்போதும் செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. அதனால எல்லா துறைகளிலும் துரித கதியில் வளர்ச்சி காண்றாங்கோ. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான ஓர் இனத்தால மூனுக்குப் (நிலாவுக்கு) போக முடியலை எனும் போது வெட்கமா இல்லையா? எம்மை நாமே சுய பரிசோதனை செஞ்சுக்கனுமுங்க. தமிழர்களின் ஒரே பண்பு என்ன தெரியுமா? எதற்குமே ஓர் எல்லை வைப்பது. இத்துப் போன கலாச்சாரப் பண்பிலிருந்து விலக முடியாது இந்த வழியில் தான் நாம வாழ்வோம் என அடம் பிடிப்பது. இந்தப் பண்புகள் உள்ள வரை எந்த ஜென்மத்திலும் தமிழனால முன்னேறவே முடியாதுங்க.
முதல்ல இந்த கேவலமான குணங்களை தூக்கி குப்பையில போடனுமுங்க. எம்மில் நூற்றுக்கு 99 வீதமான தமிழர்கள் பெற்றோர் சொற்படி, எம் முன்னோர் சொற்படி எதற்குமே ஓர் எல்லை வைத்து வாழ்வதையே பழக்கமாக கொண்டிருக்கிறோம். கல்வி என்றாலும் சரி, வாழ்க்கை என்றாலும் சரி ஓர் கோடு கீறி அதன் மேலே வாழ்றோமுங்க. உதாரணமா ஒருத்தன் கம்பியூட்டர் டிகிரி படிக்கிறான் என்றால் அவன் டிகிரி முடிச்சதும் எப்படா வேலை கெடைக்கும் என்று தேடிக்கிட்டு இருப்பான். வேலை கிடைச்சதும் அந்த வேலையே கதி என்று கிடந்து காலத்தை ஓட்டிக்குவான். பொத்தாம் பொதுவா அநேக தமிழர்கள் இப்படித் தானுங்க.
டிகிரிக்கு அப்புறமா மாஸ்டர்ஸ், அப்புறம் PHD இருக்கே அதையும் படிச்சா ரொம்ப முன்னேற முடியுமே என உணர்ந்து படிக்கிறவங்க ஒரு வீதமான தமிழர்கள் தான். ஒருத்தர் ஆசிரியரா இருக்கார் என்றால் அவர் அந்தப் புள்ளியோடையே தன் வாழ்க்கையை நிறுத்திடுவார். இல்லேன்னா ஏதாச்சும் குறுக்கு வழியை கையாண்டு பதவி உயர்வு பெற்றிடுவாங்க. அதுவும் முடியலைன்னா மேலதிகாரி கால்ல விழுந்து, கையை புடிச்சு கெஞ்சி பதவி உயர்வு பெற்றிடுவாங்க. ஆனால் வெள்ளைக்காரங்க வழியில அப்படி எல்லாம் இல்லைங்க. ஒருத்தர் சாதாரண ஆசிரியரா இருக்கார் என்றாலே மிகவும் கஷ்டப்பட்டு மேற்படிப்பு படித்து பேராசியர் லெவல் வரைக்கும் போயிடுவாங்க.
இதனால தான் அதிகளவான விஞ்ஞானிகள் அவங்க சமுதாயத்தில இருந்து வாறாங்க. ஆனா நம்மாளுங்க ஓர் இத்துப் போன கல்வி முறையை வைச்சு இத்தோடு நிறுத்திக்கனும் அப்படீன்னு சொல்லி வட்டம் போட்டு வாழ்றாங்க. நம்ம பெற்றோர் விடும் மிகப் பெரிய தவறும் ஓர் வகையில் எம் சமூகத்தில் உள்ள கல்விமான்களை ஓர் எல்லைக்குள் தம் அறிவினைச் சுருக்கிக் கொள்ள காரணமாக அமைகின்றது. "அப்பனே! நீ இவ்வளவும் படிச்சதும் போதும், வேலைக்கு போயி வூட்ட பாத்துக்கும் வழியை பாரு" அப்படீன்னு சொல்லுவாங்க. அப்புறம் எங்கே நம்மாளுங்க மேல படிப்பாங்க. மேல் நாடுகளில் படித்துக் கொண்டே வேலை பார்க்கும் வசதியினை வழங்கியிருக்காங்க. ஆனால் நம்ம நாடுகளில் படித்து முடிய முன்னாடியே பெற்றோர் கடனை தீத்திடனும் அப்படீன்னு எழுதி வைச்சிருக்காங்கோ! தமிழேன்டா!
கடந்த வருடம் ஆஸ்திரேலியா வந்த காலத்திலிருந்து ஆஸ்திரேலியாவினைச் சுற்றிப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் எழும். ஆனால் நேரம் கிடைக்காதுங்க. இம் முறை ஈஸ்டர் விடுமுறையினை ஆஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் கழிக்கும் வாய்ப்பு கிட்டியது. கன்பராவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்குச் செல்லும் அரிய சந்தர்ப்பமும் கிட்டியதுங்க. கன்பரா நகரின் மையப் பகுதியிலிருந்து அண்ணளவாக 21.5 கிலோ மீட்டர் (27 நிமிட ட்ரைவிங்) தொலைவில் இந்த இடம் அமைந்திருக்குதுங்க. அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்குச் சொந்தமான மூன்று விண்வெளி ஆய்வு மையங்கள் (தரையில் இருந்து நிலவில் நடப்பவற்றை அவதானிக்கும் நிலையங்கள்) இருக்குங்க. அதில ஒண்ணு தான் ஆஸ்திரேலியவின் கண்காணிப்பில் அமெரிக்காவின் உறுப்புரிமையுடன் கன்பராவில் அமைந்திருக்கும் ஆய்வு மையம்.
இந் நிறுவனத்தினை அமெரிக்காவின் நாஸா நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நிர்வகிக்கின்றார்கள். இங்கே போயிருந்த வேளையில் நிலவிற்குச் சென்று வந்த ஓர் விஞ்ஞானியின் விளக்க உரையினை கேட்கும் சந்தர்ப்பமும் கிட்டியது. "நீ என்னா படிக்கிறே?அப்படீன்னு கேட்டார். நான் படிக்கும் பாடத்தின் பெயரை சொன்னேன். அவர் சொன்ன பதில், "இந்தப் பாடம் உனக்கு எல்லையா இருக்க கூடாது. நீ இதுக்கு மேலையும் படிக்கனும். இன்னும் அதிகமா படிக்கனும். ஏன் உங்களைப் போன்றோரால் ஏன் விண்வெளிக்கு / நிலவிற்கு போக முடியாது?" அப்படீன்னு ஓர் கேள்வி கேட்டாரு. நம் தமிழனின் பண்பாட்டினை நான் சொல்லி மானங் கெடவா முடியுமுங்க?
நம்ம ஆளுங்க, நமக்கு முன்னே பொறந்த விஞ்ஞானிங்க நிலவிற்கு போகும் வழி தெரியாது மிகுந்த சிரமப்பட்டு ஆராய்ச்சி பண்ணி நிலவிற்குப் போனாங்க. இப்போ வாழும் உங்களைப் போன்ற பசங்களுக்கு நிலவிற்குப் போவதற்கு வழி தெரியும். இப்போ இலகுவான வழி இருக்கு. இந் நிலையில் அடுத்து நிலவில் காலடி வைக்கும் விஞ்ஞானி உங்களில ஒருவரா இருக்க கூடாதென்று கேட்டாரு? நான் ஷாக் ஆகிட்டேனுங்க. காலம் பூரா ஓர் எல்லை வைச்சு வாழ்ந்து, கடுமையா உழைச்சு, மூனு வேளையும் மூக்கு நிரம்ப சாப்பிட்டு தூங்கிட்டு வாழ்க்கை பூரா அதே மாதிரி வேலையினை தொடர்ந்து செய்யும் தமிழன் மூனுக்குப் போவது பத்திச் சிந்திப்பானா என்று சொல்லவா முடியுமுங்க? ஸோ....அன்பு நிறை தமிழ் நெஞ்சங்களே! நிலவிற்குப் போகும் தமிழனாக உங்கள் பிள்ளை ஏன் இருக்க கூடாது? சிந்தியுங்கள்! செயற்படுங்கள்!
இனி நான் இந்த விண்வெளி ஆய்வு தொடர்பாடல் மையத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களை உங்கள் பார்வைக்காக இங்கே இணைத்திருக்கிறேன். பார்த்து மகிழ்வதோடு நின்று விடாது, விண்வெளிக்குப் பறக்கும் நபராக நீங்கள் மாற முயற்சி செய்யுங்கள் உறவுகளே!
பெயர்:Canberra Deep Space Communication Complex (Csiro)
அமைவிடம்:Discovery Drive, Paddys River, Australian Capital Territory
அனுமதி: இலவசம்
வாகன வசதி: பப்ளிக் ட்ரான்ஸ்போட் கிடையாதுங்க. மலை உச்சிக்குப் பயணிக்க வேண்டும் என்பதால் காரில் போகும் போது ஒரு எக்ஸ்ட்ரா டயரை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.
விண்கலம் ஒன்றின் உட்புறத் தோற்றம் |
விண்வெளியில் கால் பதிப்போர் அணியும் உபகரணங்கள். |
இரண்டு ராக்கெட்டுக்கள் சம நேரத்தில் செல்லும் போட்டோ. |
விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் (கல், மண், உப்பு) |
விண்வெளியிருந்து எடுக்கப்பட்ட கல் |
விண்வெளிக்கு செல்வோர் கொண்டு செல்லும் ஒளிப்பட கருவி (வீடியோ காமெரா) |
டிஸ்கவரி விண்கலத்தின் முன் பக்க மாதிரி தோற்றம் |
ராக்கெட்டினை வடிவமைக்கும் விஞ்ஞானிகள் போட்டோ |
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அணியும் ஆடை வகை |
விண்ணில் டிஸ்கவரி விண்கலத்தின் மாதிரி தோற்றம் |
விண்கலத்தினுள் விஞ்ஞானிகள் போட்டோ |
விண்கலத்தினுள் உறங்கும் விஞ்ஞானியின் போட்டோ. |
விண்வெளி வீரர்கள் எடுத்துச் செல்லும் உணவு வகை |
செவ்வாயில் நிற்கும் விண்கலத்தின் மாதிரி தோற்றம் |
படங்களைப் பெரிதாக்கி பார்க்க...படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள்.
|
33 Comments:
புகைப்படங்கள் சூப்பர்... ஹும் அங்கே ரெம்பத்தான் என்ஜாய் பண்ணுறேல் போல்......
உங்கே போகும் போது உங்களுடன் ஒரு நிலாவும் வந்தாக நாற்றில் நேற்று கிசு கிசுத்தார்களே..... நிலா போட்டோ போடவில்லையா??? அவ்வவ்....
@துஷ்யந்தன்
நல்லாத் தான் கேட்கிறாங்கோ கேள்வி...மவனே...பிச்சுப்புடுவேன் பிச்சு
மூணுக்கு போகேக்க அப்பிடியே நம்மளையும் கூப்பிடுங்க பாஸ் ..தனுஷ் நல்லா நடிச்சிருக்காராமே!
மூவாயிரம் ஆண்டுகள் பழமையான இனத்துக்கு இன்னும் மூனுக்கு போவத் தெரியல. ஆனால் டாஸ்மாக் சரக்கு அடிச்சுட்டு நல்லா ஒன்னுக்கு போவ தெரியும். வயிறு புடைக்க தின்னுட்டு ரெண்டுக்கும் போவ தெரியும். மூனுக்கெல்லாம் நமக்கு வராது சார்.
எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன காலுன்னு யோசிச்சி பதில் சொல்லவே திறமை பத்தாத நம்ம தமிழ் குலத்திடம் நீங்க இப்படி ஏடா கூடமா கேட்டா பாவம் அவங்க என்ன செய்வாங்க!
சிரிச்சது போதும். கொஞ்சம் சீரியசா யோசிப்போம்.
இதற்கு முதலில் நிறைய பணம் தேவைப்படும். மேலும், இந்தியாவில் நடுவன் அரசு மட்டுமதான் இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற முடியும். இனி வரும் காலங்களில் புதிதாக தமிழகத்தில் அல்லது ஈழத்தில் உருவாகப் போகும் இளைய தலைமுறைகளின் கைகளில்தான் இது போன்ற திட்டங்களுக்கு வழி பிறக்கும் என நம்ப வேண்டும்.
இருந்தாலும் உங்களது யோசனை சிறப்பானதும் வரவேற்கத்தக்கதும்தான். தமிழர்களிடையே இதைப்போன்று எண்ணமிடுபவர்களும் கனவு காண்பவர்களும் மிக மிக அரிதே. இதுவே ஒரு பெரிய ஆரம்பமதான். பொதுவாகவே, நம போன்றவர்கள் வெள்ளைக்காரனின் ஆற்றல் திறன் மிக்க செயல்களை திட்டங்களை பார்த்து பிரமித்து உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்து வீடு திரும்பிய பின் அதை சுத்தமாக மறந்தும்விடுவோம். ஆனல் நீங்கள் அப்படி இல்லாமல், இப்படி புதுமையாக துணிவாக உங்களின் பெருமை மிக்க கனவுத் திட்டத்தில் தமிழனை வைத்து பார்ப்பதே பெரிய ஆச்சரியமும் அதிசயமும்தான்.
பகிர்வுக்கு மிக்க நன்றி நிரூபன்.
விவசாயத்தில் தன்னிறைவு பெற வேண்டும்.
அதற்க்கான தொழில் நுட்பம் வளர வேண்டும்.
மண்ணும்....பயிரும்...காற்றும் மாசு படாத தொழிநுட்பம்தான் உடனடித்தேவை.
விண்ணுக்கு போவதில் போட்டி போட்ட்தால்தான் சோவியத் ரஷ்யா மண்ணுக்கு போனது.
விவசாயம் செய்ய வேண்டிய இடத்தில் தொழிற்சாலையும்...விமான நிலையமும் வந்தால்... சோறு திங்க முடியுமா?
விவசாயத்துக்கு பயன் படாத நிலங்களில் மட்டும்தான் குடியிருப்புகளும்...
தொழிற்சாலைகளும்...
உருவாக்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் உணவும்...வீடும்...அளித்து தன்னிறைவு பெற்ற நாடுகள் மட்டுமே விண்ணுக்கு போவதை பற்றி சிந்திக்கவோ...ஆராய்ச்சி செய்யவோ வேண்டும்.
திருப்பூரை தொழில் நகரமாக்கி...
சுற்றியுள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை மாசு படுத்தி நரகமாக்கிய...
கொடுமையை நேரில் பார்த்தால்தான் உணர முடியும்.
அந்த நிலங்களை மீட்டெடுக்க நமது தமிழ் விஞ்ஞானிகள் பிறக்க வேண்டும்.
அப்துல்கலாம்கள் தேவையில்லை.
வணக்கம் சகோ நிரூபன்,
அற்புதமான அறிவியல் பதிவு.
தமிழர்களாகிய நாம் கல்வி அறிவை சில
வரைமுறைகளுக்குள் கட்டுப்படுத்தி வருகிறோம் என்பது
மிகச் சரியானதே.. ஆனால் இன்றைய தலைமுறைகள் கொஞ்சம்
மாற்றங்களை கண்டு வருகின்றனர்...
என்ன செய்ய நிரூபன்,
நாம் வளர்ந்த முறை அப்படி..
பேசிப்பேசியே வளர்ந்து விட்டோம்..
ஆனாலும் பேச்சு பேச்சா இருந்தாலும் கட்டுப்பாடுகள்
என்பது நம்மினத்தில் தலைதூக்கி நிற்கும்..
தனிமனித கட்டுப்பாடுகள் மிகுந்திருக்கையில்
இதுபோன்ற சில விஷயங்கள்
விட்டுப்போகத்தான் செய்யும்.
ஆனாலும் எம்முடைய இளைய தலைமுறையை..
தமிழுக்கும் காவலாய் தொழில்நுட்பத்திற்கும்
ஊக்கமாய் வளர்த்திடுவோம்.
விண்வெளி கண் படங்கள் எல்லாம் பிரமிப்பூட்டுகிறது.
ஏவு தளம் சென்று பார்த்திருக்கிறேன்.. அங்கே இயங்கும்
எரிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணி புரிந்திருக்கிறேன்.
ஆனால்.. இதுபோன்று விண்கலங்களை கண்டதில்லை...
பயணிப்போம் ஓர் நாள்...
நல்ல கருத்துக்கள். இருப்பினும் நிலைவை பற்றி எண்ணம் கொள்ளும் அளவு இந்த அழகிய பூமியை பற்றி நினைத்து பார்க்கின்றோமா? இங்குள்ள நீர் நிலைகள் இயற்கையை பாதுகாக்காது நிலவை கணவு கண்டு என்ன செய்ய. நிலவு கனவு ஒரு ஏமாற்று அரசியல்!
@கந்தசாமி.
மூணுக்கு போகேக்க அப்பிடியே நம்மளையும் கூப்பிடுங்க பாஸ் ..தனுஷ் நல்லா நடிச்சிருக்காராமே!
//
இங்க பார்றா...சினிமா நினைப்பில ஒருத்தர் இருக்காரு.
வெளங்கிடும்.
@மாசிலா
வணக்கம் நண்பரே
மிகவும் நீண்ட கருத்துரையினை தந்திருக்கிறீங்க.
எம்மால் தான் முடியவில்லை.
ஆனால் எமக்குப் பின் வரும் இளையவர்கள் கண்டிப்பாக எம் நாடுகளிலும் இப்படியான செயற் திட்டத்தை செய்யனும் என்பதே எனது ஆவல்.
பொறுத்திருந்து பார்ப்போம். கண்டிப்பா ஓர் நாள் தமிழன் நிலவில் கால் வைப்பான்.
உங்கள் மிகப் பெரிய கருத்துரைக்கு நன்றி.
@உலக சினிமா ரசிகன்
அண்ணே...
சூழல் மாசுபடுது என்று சொல்லிட்டு இருந்தா நாம காலம் பூரா முன்னேற்றம் அடையாம தான் இருக்கனும்.
மேல் நாடுகளில் பல திட்டங்கள், பல கண்டு பிடிப்புக்கள் பண்றாங்கோ. ஆனால் அதே நேரத்தில சூழலையும் பாதுகாக்கும் கடுமையான திட்டங்களையும் செயற்படுத்துறாங்க.
இது போல ஏன் நம்ம நாட்டு நாட்டாமைகள் யோசிக்க கூடாது?
@மகேந்திரன்
நன்றி அண்ணா.
கல்வி முறையில் கண்டிப்பாக மாற்றம் கொண்டு வரனும்.
முயற்சிப்போம்.
@J.P Josephine Baba
நிலவிற்கு போவதிலும் அரசியல் இருக்கா?
நம்பவே முடியலைங்க.
இப்படியே சிந்தித்து சிந்தித்து தமிழன் தன் வாழ்க்கையை படு குழியினுள் ஓட்டுறான்.
சூழலை, சூழலில் வாழும் விலங்குகளை பாதுகாக்க கடுமையான திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தனும்.
அது பற்றியும் ஓர் பதிவு எழுதுகின்றேன்.
வணக்கம் நிரூபன்!நல்லாயிருக்கிறீர்களா?மூனுக்குப் போகலாம்,தப்பேயில்ல!அப்துல் கலாம் எவ்ளோ பெரிய விஞ்ஞானி?அவரைப் போல் ஆக வேண்டும் என்ற கனவு எங்கள் அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் வரவேண்டும்,வரும் என்ற நம்பிக்கை உண்டு!பா.உ க்களாக,மருத்துவர்களாக,பொறியியலாளர்களாக இன்றைய தலைமுறை வரும் போது,அவர்கள் பிள்ளைகள் மூனுக்குப் போக வேண்டும் என்ற லட்சியத்தை அடைய முடியாதா,என்ன?நடக்கும்!!!!
துஷ்யந்தன் said...
புகைப்படங்கள் சூப்பர்... ஹும் அங்கே ரெம்பத்தான் என்ஜாய் பண்ணுறேல் போல்......
உங்கே போகும் போது உங்களுடன் ஒரு நிலாவும் வந்தாக நாற்றில் நேற்று கிசு கிசுத்தார்களே..... நிலா போட்டோ போடவில்லையா??? அவ்வவ்...///இந்தப் போட்டோவெல்லாம் "நிலா"வுக்குப் போக முதல் எடுத்தது!இனிமேத்தான்(போனப்பிறகு)"நிலா"வில எடுக்கிற போட்டோக்கள் வரும்,ஹி!ஹி!ஹி!!!!!!
எமது சமுதாயத்தில் கல்வி என்பது வெறுமனே அதிக வருமானத்திற்கான ஒரு விடயமாகவும், கௌரவம் தேடும் விடயமாகவுமே இருக்கிறது.எத்தனை பெற்றோர் தமது பிள்ளைகள் டாக்டர், பொறியியலாளர், கம்பியூட்டர் வல்லுனர், கணக்காளர் என ஒரு மிகவும் குறுகிய துறைகளை தாண்டி ஏனைய துறைகளில் மேற்படிப்பு படிப்பதை விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர். முதலில் இன்னிலை மாறவேண்டும்
ம்... நிரூ விடுமுறையை ஜாலியாக கொண்டாடுறிங்கபோல.... இந்த சுற்றுலா எல்லாம் தனியவா இல்லை.... வானிலைமையத்தை பார்க்க எதாவது நிலாவையும் கையோட கூட்டிப்போனிங்களா?
இளைய சமுதாயத்தினருக்கும் போதிய வருமானம் தரும் ஒரு துறையில் கல்விகற்றோமா நல்லதொரு வாழ்க்கைத்துணையை தேடினோமா அப்படியே ஜாலியா வாழ்க்கையில் செற்றிலாயிடலாம் என்ற எண்ணம் மாறணும். சமுதாய விழிப்புணர்வு, சாதிக்கவேண்டுமென்ற வெறி இவை இரண்டும் உண்டாகணும். அப்பொழுதுதான் எமது சமுதாயத்தில் பாரிய மாற்றங்களை காணமுடியும். இன்றைய உலகம் இளைஞர்களது உலகம். இளையோரே எழுச்சிகொள்ளுங்கள். வாழ்க்கையில் எதையவது சாதிக்கவேண்டுமென்று உறுதிகொள்ளுங்கள்
மிக அருமையான பதிவு...!நம் குழந்தைகள் பிற்காலத்தில் விஞ்ஞானத்தில் சிறக்க அதற்கு உண்டான கல்வி முறை வேண்டும்....பதிவுக்கு மிக்க நன்றி நிரூபன்!
எங்கள் எதிர்கால இளைஞர்கள் இப்போதெல்லாம் தமக்கென்ற வட்டம் தாண்டி வாழ முயற்சிக்கிறார்கள்.அதற்கு நீங்களே உதாரணம் நிரூ.இப்போ பொருளாதாரத் தடையும் குறைவு.எனவே இன்னும் கூடிய முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.அருமையான படங்களை எங்களோடும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நிரூ !
அறிவியலுக்கும் நமக்கும் தூரம் அதிகம் பேசாமல் சந்திரனை பூமிக்கு வரச் சொல்லுங்கள் தமிழர்கள் காலடியில் வைத்துக் கொள்வோம் .
இது கொஞ்ச கொஞ்சமாய் அழிந்து போய்க்கொண்டிருக்கும் துறை சகோதரம்...நாசா ஏறக்குறைய இழுத்து மூடியாச்சு...
அடுத்தது ஒபேரா ஹவுஸ்...ரீப்..பாண்டை...படங்களை எதிர்பார்க்கலாமா?
நிரூ,நலமா? பல தெரியாத தகவல்களை பதிவாக அளித்திருக்கிறீர்கள்.இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
My two cents...இந்தியாவில் என்றைக்கு நாம் நம்ம பாத்ரூமில் ஒன்னுன்க்கும் இரண்டுக்கும் போகிறோமோ போகிறோமோ அன்றைக்கு மூனுக்கு போவதைப் பற்றி யோசிப்போம்!
அதுவரை நாம் "மூணு" படத்தை மட்டும் பாப்போம்!
படங்கள் சூப்பர்.. நல்லதொரு அனுபவம்.. எனக்கும் ஆசை. படங்களுக்கு மேலே கொட்டப்பட்டிருக்கும் ஆதங்கம் அப்படியே எனது ஆதங்கம் போலவே இருக்கிறது நிரூ.. நாம அதிகம் ஜோசிக்கவேண்டும் கலாச்சாரம், பண்பாட்டு வட்டங்களைத் தாண்டி..
காலை வணக்கம் நிரூபன்!இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்!!!!!!
அண்ணே இவ்வளவு படம் போட்டுருக்கீங்க.உங்க காமிரா-ல எடுத்ததா.....ஹா..
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இன்றைய பதிவு50 தேடுஇயந்திரங்களில் உங்கள் பதிவுகளை இனைக்கலாம்
நண்பா...
படங்கள் அருமையாக உள்ளது.அது மட்டுமா ஒவ்வொரு தழிழனுக்கும் உறைக்கும் வன்னம் நீர் சொல்லியிருக்கும் கருத்துக்கள் மிக அருமையாக உள்ளது.
உங்கள் பதிவைப் படித்து, ஃபோட்டோக்கள் பார்த்ததும் தமிழ் படிக்காமல் விஞ்ஞானம் படித்து, phd பண்ணி விஞ்ஞானி ஆகாமல் போனோமே என்ற ஏக்கம் வந்தது உண்மை.
என் பிள்ளைகளுக்கும் அந்த வாய்ப்பு அமையவில்லை.
பேரப்பிள்ளைகளை அவ்வாறு ஆக்குவதென ‘சபதம்’ எடுத்துள்ளேன்
நன்றி நண்பரே.
படங்களும் உங்க பதிவும் அருமை. தமிழனும் சாதிக்க முடியும்.
மச்சி அடுத்த முறை எனது விண்கலத்திற்கு இவற்றை உபயோகிக்கிறேனே..
நண்பா!
நீண்டகால இடைவேளையின் பின்னர் பதிவுலகிற்கு திரும்பியிருக்கின்றேன்.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் நண்பா...
என் பதிவர் வட்டத்தில் பலரது பதிவுகள் இன்னும் என் கண்ணோட்டத்தில் படாமல் இருக்கிறது அவற்றையெல்லாம் கண்கொண்டு பார்க்க ஆவலாய் உள்ளேன்...
தொடரட்டும் என் எழுத்தின் வேகம்... மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ... :)
Post a Comment