வலையுலக வங்குரோத்து அரசியலும், வன்மங்களும் - விவாதிப்போம் வாருங்கள்!
எல்லோருக்கும் வணக்கமுங்கோ, எல்லோரும் நல்லா இருக்கீங்களா?
தமிழ்ப் பதிவுலகம் ஆரோக்கியமான வழியில் செல்லுகின்றதா என்று எம்மை நாமே கேள்வி கேட்டு சுய பரிசோதனை செய்து கொள்வோம். கூகிள்காரன் ப்ரீயா வுடுறான் தானே! நாம என்ன வேண்ணாலும் எழுதுவோம் அப்படீன்னு எல்லோரும் கருத்துச் சொல்லிட்டு போகலாம். ஆனால் தோழமையுடன், உங்களில் ஒருவனாக என்னுடைய சில மன உணர்வுகளை, என் கேள்விகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். இப் பதிவில் தமிழ்ப் பதிவுலகை நாச வழியில் கொண்டு செல்லும் ஆபாசப் பதிவர் (அப்படித்தான் ஊரெல்லாம் பேசிக்கிறாங்க) அடியேனும் உள்ளடக்கம் என்பதால், உங்கள் தெளிவான கருத்துக்களைச் சொல்லுமாறு தாழ்மையாக கேட்கின்றேன்.
இணையத்தில் எம் தமிழ்ப் பதிவுலகில் ஆண் பதிவர்கள் சக பதிவர்களால் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட அளவிற்கு பல பெண் பதிவர்கள் அடையாளம் காணப்படவில்லை.வெளித் தெரியாத மின்னல்களாகவும், புயல்களாகவும், சமூகத்தினைச் சீர் செய்யும் நல் வழிக் கருத்துக்களை ஆண்களை விடத் திடமாகச் சொல்லக் கூடியவாறும் எழுதுகின்ற வல்லமை படைத்த பல தமிழ்ச் சகோதரிகள் இணையத்தில் எழுதி வருகின்றார்கள். நிரூபன் ஒரு நாளைக்கு ரெண்டு பதிவு எழுதி ஹிட்டுக்காக அலைந்தாலும், அந்த நிரூபனை விட மிகவும் காத்திரமாக தன் ஒத்தைப் பதிவினூடாக திடமான சேதி சொல்லக் கூடிய வகையில் எழுதுகின்ற பெண் சகோதரிகள் எம்மிடையே உள்ளார்கள்.ஆனால் நிரூபன் போன்ற பதிவர்களின் பதிவுகளுக்கு வரும் கூட்டம்,ஏனைய சகோதரிகளின் பதிவுகளுக்கு போவதில்லை!
என்னுடைய ப்ளாக்கிற்கு ட்ரேங் என்ற ஒன்று இல்லை! விரும்பினால் தேடிப் பார்க்கலாம். ஆனால் பல பெண் சகோதரிகளின் ப்ளாக்கிற்கு ட்ரேங் இருந்தும் வாராந்த தமிழ்மண தரப்படுத்தலில் டாப் 20 என்ற அந்தஸ்த்திற்குள் வராது காணாமற் போகின்றார்கள்.இதற்கான காரணங்கள் என்ன என்று அலசுவோமா? வாருங்கள். மனம் விட்டுப் பேசி மௌனச் சிறைகளை உடைத்தெறிவோம். ஒரு எளிய உதாரணம். சொல்கிறேன் கேளுங்கள். வலையுலகில் ஒரு பெண் பதிவர் நன்றாகவே கவிதை எழுதுவார். ஒரு கவிதையில்;
"முத்தம் கரிக்கும் எனச் சொன்னார்கள்.
நான் மூன்று வேளையும்
முத்தம் வேண்டும் என்கிறேன் - காரணம்
உன் முத்தம் இனிக்கிறது!"
அப்படீன்னு ஓர் கவிதை எழுதினாங்க. அந்தப் பெண் பதிவரின் பதிவிற்கு பதிவுலக சீர்திருத்த வாதிகள் எனத் தம்மைத் தாமே சொல்லிக் கொள்ளுகின்ற ஓர் குழுவினர் என்ன பண்ணினாங்க தெரியுமா?
"வாடி! நாம உனக்கு முத்தம் குடுத்து காண்பிக்கிறோம்! முத்தம் இனிக்குதா? கரிக்குதா?அப்படீன்னு ஆராய்ச்சி பண்ணுவோம் என அசிங்கமாக பின்னூட்டங்களை அனுப்பியதோடு அந்தப் பெண்ணை கூகிள் ப்ளஸ், பேஸ்புக் எனப் பல குழுமங்களில் அசிங்க அசிங்கமாக கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப் பெண்ணின் பர்சனல் டீட்டெயிலை பிஸ்ஸிங் முறையில் சுட்டு பர்சனலாக திருமணமாகி ஒரு குழந்தை உள்ள பதிவர் ஒருவர் இம்சித்திருக்கிறார். இப்போது வரை பிரச்சினை தொடர்பான ஆதாரங்கள் கை வைசம் இருக்கு. இதனை வைத்து கடந்த வருடத்தில் இரு பதிவுகளையும் எழுதிச் சம்பந்தப்பட்டவர்களை கண்டித்திருந்தேன். மேற்படி பிரச்சினை தொடர்பில் அடியேன் சம்பந்தப்பட்ட பதிவுலக அதி மேதாவிகளுடன் பேசினேன். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவதாக சொன்னார்கள். உறுதி மொழி வழங்கினார்கள். அப்புறமா பார்த்தா மறுபடியும் அந்தப் பெண் எழுத வந்த போது தமது குரங்கு குணத்தினை ஆரம்பித்து விட்டார்கள்.
இத்தனைக்கும் சம்பந்தப்பட்ட பதிவர்களில் சிலர் மேற்கு நாடுகளில் வாழ்வோர். ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் எனும் பாரதியின் கோட்பாட்டினை அறிந்தவர்கள். ஆனால் ஓர் பெண்ணால் வெளிப்படையாக தன் உணர்வுகளைப் பத்தி எழுதுவதை ஜீரணிக்க முடியாது எனும் ஆணாதிக்க மனப்பாங்கில் இருப்பவர்கள். இவர்களைப் போலப் பல பதிவர்கள் பெண்களின் எழுத்துக்களை அடக்க பதிவுலகில் உள்ளார்கள். ஆனால் இதே போல ஒரு கவிதையினை ஆண் எழுதியிருந்தால் ரசிக்கிறார்கள். பாராட்டுகிறார்கள். வாழ்த்து மழை பொழிகிறார்கள். கில்மாப் பட விமர்சனம் எழுதினால் ஓடோடிப் போய் கும்மியடித்து வரவேற்கிறார்கள். ஆண்கள் எது வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பெண்கள் எதுவுமே எழுதக் கூடாது என்பது தான் வலையுலக வங்குரோத்து அரசியலாக, படித்த, உயர் பதவிகளில் உள்ள சில புத்தி ஜீவிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.
நாற்று நிரூபன்
மேற்படி சம்பவம் ஓர் எளிய உதாரணம். இப்படி இன்னும் பல சம்பவங்கள் இருக்கிறது. அது பற்றி இப்போது விவாதிக்க வேண்டிய நேரம் இல்லை என்பதால் பதிவின் உள்ளடக்கத்தோடு உரையாடுவோம்."தேனம்மை லட்சுமணன்” என்கின்ற படைப்பாளியை பதிவராவதற்கு முன்பதாக அடியேன் ஈழத்தில் விகடன் வாயிலாக, அறிந்திருக்கிறேன். அவரின் படைப்புக்களிற்கு விகடனின் ஊடாக கிடைக்கும் வரவேற்பிற்கு சமனாக வலையுலகில் வரவேற்புக்கள் கிடைப்பதில்லை. இதனைப் பதிவர்கள் யாவரும் நன்கறிவோம். ஹேமா என்கின்ற பெண் பதிவர் பல வருடங்களாக எழுதி வருகின்றார். ஆனால் அவரது எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ரொம்ப கம்மி என்றே கூறலாம்.அதிரா என்கின்ற பெண் பதிவர் ரொம்பவும் நகைச்சுவையான பதிவுகளை + பின்னூட்டங்களை எழுதுகின்றார். நம்மில் எத்தனை பேருக்கு அதிராவை தெரியும்? ஷர்மி என்கிற பதிவர் சுவையாக + சூடான விடயங்களைத் தொட்டுச் செல்கின்றார். ஷர்மியை அறிந்தவர்கள் எத்தனை பேர்? ரேவா என்கிற பெண் பதிவர் கவிதைகளுள் வித்தியாசமான வடிவங்களை கையாண்டு தமிழ்க் கவிதைகளைப் படைக்கிறார். ஆனால் அவற்றுக்கான அங்கீகாரம் எந் நிலையில் கிடைக்கிறது? அடுத்ததாக என்றும் 16 எனும் பெயரில் எழுதும் சகோதரி, இவரது படைப்புக்களை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம் என்பது கேள்விக்குறியே!
தமிழ்மண டாப் 20 பட்டியலில் உள்ள பதிவர்களை நாம் அறிந்து கொண்ட அளவிற்கு நம்மில் பலர் அறியவில்லை மேற்படி பெண் பதிவர்களை அறிந்து கொள்ளவில்லை. ஆனால் வாய் ஓயா குறையாக எந் நேரமும், நாம் தான் வலை உலகின் வல்லவர்கள் என்று பேச்சு வேறு!! இப்போது புதிதாக களம் புகுந்திருக்கும் தேன் சிட்டு, தென்காசித் தமிழ்ப் பைங்கிளி, யசோதா காந்த் போன்ற பதிவர்களின் பதிவுகளுக்கு கிடைக்கும் அங்கீகாரமானது ரொம்ப கம்மியாகவே இருக்கிறது. ஆனால் அவர்களின் பின்னர் வலை உலகிற்கு வந்து எழுதும் ஆண் பதிவர்களின் பதிவுகள் பிரபலமாகுது.டாப் 20 பட்டியலினுள் வருகிறது. டாப் 20 பட்டியலில் உள்ளவர்களுடன் எனக்கு தனிப்பட்ட போட்டி எதுவும் இல்லை! மீண்டும் சொல்கிறேன் ட்ரேங் ஏதும் என் ப்ளாக்கிற்கு இல்லை எனும் நிலையில்; நடுநிலமையுடன் என் கருத்துக்களை உங்கள் முன் வைக்கின்றேன். சித்தர்களைப் பற்றிப் பதிவிடும் சகோதரி தோழியின் வலைக்குச் செல்லும் வருகையாளர்கள் நம்ம தமிழ்ப் பதிவர்களின் டெய்லி வருகையாளர்களை விட அதிகம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு அவரின் படைப்புக்களைத் தெரியும்?
பதிவுலகத் திரட்டிகளில் சில பெண் பதிவர்களின் பதிவுகளை காண முடியாது. ஆனால் தனிப்பட்ட ரீதியில் அவர்களின் படைப்புக்களிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இதே போன்று, சமையல் குறிப்புக்களை எழுதும் சில சகோதரிகள் திரட்டிகள் இன்றி அதிக வாசகர்களைப் பெறுகின்றார்கள். திரட்டிகளின் ஊடே ஆண்களின் படைப்புக்கள் மாத்திரம் பிரபலமாகின்றது. வலை உலகில் ஆண் பதிவர்கள் ஆபாசத்துடன், பரபரப்பு தலைப்புக்களை வைத்து எழுதும் அளவிற்கு பெண் பதிவர்களால் எழுத முடியாது. ஏன் ஓர் ஆண் பரபரப்பு தலைப்பு வைத்து பதிவின் உள்ளே காத்திரமான விடயமின்றி மொக்கைப் பதிவு எழுதுவதனை விட, ஓர் பெண் பதிவர் நல்ல தலைப்பில் மிக மிக சூப்பரான பயனுள்ள பதிவினை எழுதியிருப்பார். ஆனால் அந்தப் பதிவுகள் கண்டு கொள்ளப்படாதிருக்கும். ஆனால் என் போன்ற பதிவர்களின் மொக்கைப் பதிவுகள் பலரின் பார்வைக்கும் எட்டுது.
நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
இதற்கான காரணம் என்ன? ஹிட்டு மேனியாவில் பெண் பதிவர்களை நாம் ஓரங்கட்டுகின்றோமா? இல்லை சுதந்திர எழுத்துக்களைப் பெண்கள் பிரசவிகையில் ஆணாதிக்க மனப்பான்மையால் பல ஆண் பதிவர்கள் புறக்கணிக்கிறார்களா?பெண் பதிவர்களையும் எல்லோரும் அறியும் வண்ணம்,ஆண்களின் படைப்புக்களிற்கு வலை உலகில் இருக்கும் மரியாதையினைப் போன்று சம அந்தஸ்த்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? பெண்களுக்கென்று தனியான தரவரிசைப் பட்டியல் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யலாமா? அல்லது தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் ஈழம், அரசியல், மொக்கை எனப் பிரிவுகள் இருப்பது போன்று தனியாகப் பெண் பதிவர்களின் படைப்புக்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படும் வண்ணம் ஓர் லேபிளினை பெண்கள் எனும் பிரிவின் கீழ் அறிமுகப்படுத்துமாறு கோருவது சிறந்ததா?உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அனைத்து உள்ளங்களின் கருத்துக்களையும் பரிசீலித்து தமிழ்மணத்திற்கு ஓர் மடல் அனுப்புகின்றேன்.எம் சகோதரிகளின் கருத்துக்களையும் உலகறியச் செய்யும் வண்ணம் நாமும் சக மனிதர்களாக உழைப்போம்!
இப் பதிவில் யாரையுமே தாக்கி எழுதலைங்கோ! ஆபாசப் பதிவர், ஹிட்டுக்காக அலையும் பதிவர் என்று என்னை நானே சொல்லியிருக்கேன்! ஸோ...வேறு யாரும் தம்மையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருப்பதாக தனிப் பதிவு எழுதி மன்னிப்பெல்லாம் கேட்க சொல்ல வேணாம்! நானே இவ் இடத்தில், அப்படி உங்கள் மனம் கோணும் வண்ணம் நான் ஏதாவது சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க என்று சொல்லிடுறேன்! வேண்ணா காலில் கூட விழுந்துக்கிறேன்! ஹி...ஹி.. தனித் தனியாக ஒவ்வோர் ப்ளாக்கிற்கும் வந்து மன்னிப்பு கேட்க டைம் இல்லைங்கோ!
பதிவினை முழுமையாகப் படித்து உங்கள் பின்னூட்டங்களை முன் வைக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன். இப் பதிவிற்குரிய பின்னூட்டங்களுக்கான பதில்கள் இன்னும் ஐந்து மணி நேரம் கழித்து வழங்கப்படும். அது வரை நான் கொஞ்ச நேரம் பீச்சிற்கு போய் காத்து வாங்கிட்டு வாரேன். மொபைலில் உங்கள் பின்னூட்டங்களைப் படிச்சிட்டுத் தான் இருப்பேனுங்க. ஆனால் கமெண்ட் போடுமளவிற்கு மொபைலில் டைப் செய்ய முடியலைங்க.
இப் பதிவினை எழுதுமாறு என்னைத் தூண்டிய, சில கருத்துக்களை இப் பதிவு தொடர்பில் வழங்கிய குட்டிச் சுவர்க்கம் வலைப் பதிவின் சொந்தக்காரி, அன்பு அக்கா ஆமினாவிற்கு என் சார்பிலும், அனைத்துப் பதிவர்கள் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.
|
282 Comments:
«Oldest ‹Older 201 – 282 of 282 Newer› Newest»அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தலைப்பு மேல வந்திட்டுதோ? ஆரும் வராவிட்டாலும் பறவாயில்லை, தலைப்பு மேலயே இருக்கட்டும் okay?:).
//அடுத்த பொம்பிளைத் தாதா, //
karrrrrrrrrrrrrrrrrr உப்பூடியெல்லாம் கதைச்சால் காதைக் கடிச்சிடுவேன் ஜாக்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்தை சொல்லிட்டேன் பார்த்தால் பூஸ் பாய்ந்தால் சிங்ங்ங்ங்ங்ங்கம்... இது மீசை இல்லாததாக்கும்..க்கும்...க்கும்....
ஹையோ சிக்கின் கறி வைக்கோணும் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))
பெண் பதிவர்கள் பெரும்பாலும் ஆண்களினால் கண்டுக்காமல் விடப்படுவது உண்மைதான். இதற்கு கூடுதலான பெண்கள் எழுதும் விடயங்களும் ஒரு காரணம். நான் பல பெண்களின் பக்கங்களுக்கும் போறனான். ஆனால் பின்னூட்டம் போடுவது குறைவு. சிலர் எப்பவுமே சமையல் குறிப்புகளாக எழுதிட்டு இருப்பாங்க. அன்ஜெலின் காகிதப்பூக்களில் பெரும்பாலும் கைவினை பொருட்கள் செய்வது தொடர்பான பதிவுகள் எழுதுவா.அடிக்கடி போய் அவரது திறனை ரசிப்பன் ஆனால் ஒவ்வொரு தடவையும் இவங்களுக்கெல்லாம் "அசத்திட்டிங்க." "உங்க குறிப்பு பிரமாதம்" என்று எழுதவேண்டும் என்பதற்காக ஏதோ எழுதுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.சில சமயம் பின்னூட்டம் இடுவேன் பல சமயம் போடாமலே வந்திடுவன்.
ஜோசபின் சமூக பிரச்சனைகளை கையில் எடுத்து எழுதுவா அந்த விடயங்களுக்கு பின்னூட்டம் இடுவேன்.
ஹேமா ஆமினா போன்றவங்க நட்புடனும் உரிமையுடனும் என்னைய்யா உங்க வலைப்பூவில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்று சொல்லுறியள் எங்க இடம் என்னாச்சு என்று சண்டைபோட்டு இந்த கிழவனை மிரட்டியே சாதிச்சிடுவாங்க.
பெண்களிலும் பலவிதமான வித்தியாசமான பதிவர்கள் இருக்கினம் ஒட்டுமொத்த பெண்பதிவர்களையும் ஒரேமாதிரி எடைபோட முடியாது போடவும் கூடாது.
பதிவு எழுத வரும் பெண்பதிவர்கள் ஏற்கெனவே ஒரளவு வெற்றிகரமாக பதிவிடும் சக பெண்பதிவர்களை பார்த்தே பல விடயங்களையும் கற்றுக்கொள்ளலாம்.
//
அக்காச்சி! இந்த விடயத்தினை கொஞ்சம் பரிசீலனை செய்ய வேண்டும்//
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... அந்த விஷயத்தில் அந்த ஆண் பதிவர் செய்தது நல்லதாகினும் எடுத்துக்கொண்ட களம்/ எடுத்துச்சொன்ன விதம் தவறானது! சரி அந்த விஷயத்துக்கு போக வேண்டாம். திசை திரும்பிடும்....
அடுத்த கமென்ட்க்கு இன்னும் சில நிமிடங்களில் வரும் :-)
பெண் பதிவர்களே ஒருசில ஆண்கள் எதிர் வோட்டு போடுவதற்காகவும், தூற்றி பின்னூட்டம் இடுவதற்காகவும், வக்கிரமான செயல்களில் ஈடுபடுவதற்காகவும் எல்லா ஆண் பதிவர்களும் அப்படித்தான் இருப்பினம் என்று பயந்து ஒதுங்க வேண்டாம் உங்கள் எல்லைகளை உணர்ந்துகொண்டு நல்ல எண்ணமுடைய ஆண்பதிவர்களை இனங்கண்டு அவர்களுடன் இணைந்து செயற்படுங்ககோ. உங்களுக்கு மறைமுகமான அழுத்தங்கள் பிரச்சனைகள் நயவஞ்சகரிடமிருந்து வந்தால் தயங்காமல் வெளிப்படையாக கூறுங்கள். பெண்களை மதித்து புரிதலுடன் செயற்படுபவர்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவ வருவினம். தயக்கத்தினால் வெளியே சொல்லாமல் இருப்பது தவறு செய்பவர்களுக்கு உந்துசக்திகொடுக்கும் எதிர்விளைவையே தரும் என்பதை மறக்க வேண்டாம்.
எந்த பொருளை விற்பதற்கும் மக்களிடம் கொண்டு செல்வதற்கும் சிறந்த வியாபார யுக்திகளும் விளம்பரங்களும் தேவைதான். திரட்டிகளின் துணையும் உங்களுக்கென்ற ஒரு நல்ல நட்புவட்டமும் நிச்சயமாக பதிவுலகில் நிலைத்து நிற்க உங்களுக்கு உதவும். அதே நேரத்தில் மொய்யிற்கு மொய் வோட்டுக்கள் என்ற மாயையில் மயங்கி நிற்கவேண்டாம். நல்ல சுவாரசியமான பதிவுகளிற்கு உரிய அங்கீகாரம் எப்பொழுதும் உண்டு.
எந்த பொருளை விற்பதற்கும் மக்களிடம் கொண்டு செல்வதற்கும் சிறந்த வியாபார யுக்திகளும் விளம்பரங்களும் தேவைதான். திரட்டிகளின் துணையும் உங்களுக்கென்ற ஒரு நல்ல நட்புவட்டமும் நிச்சயமாக பதிவுலகில் நிலைத்து நிற்க உங்களுக்கு உதவும். அதே நேரத்தில் மொய்யிற்கு மொய் வோட்டுக்கள் என்ற மாயையில் மயங்கி நிற்கவேண்டாம். நல்ல சுவாரசியமான பதிவுகளிற்கு உரிய அங்கீகாரம் எப்பொழுதும் உண்டு. // ஐயா சொல்வதை நானும் வழிமொழிகின்றேன் இன்னும் பின்னூட்டம் போட முடியவில்லை வேலை நேரம் இது அம்பலத்தாருக்கு தெரியும் சமையல்காரன் எப்படி என்று !ஹீ ஹீ
//
யுவர் ஆனர்! நீங்க என் பதிவுக்கு வராட்டியும் நான் போயி பின்னூட்டம் போட்டிருக்கேன்!
இப்படிச் சொல்லுறவன் எவனா இருந்தாலும் அவன் வாயில பினாயில் ஊத்தனும்;-))))//
உன்னை சொல்லுவேனா? நா நிறைய பேரை கவனிச்சுட்டேன். பெண்பதிவர்களும் விதிவிலக்கல்ல...
//
சத்தியமா இந்தக் கமெண்ட் எனக்கில்லை என்பது உங்க மனச்சாட்சிக்கே வெளிச்சம்!///
ஹி...ஹி...ஹி... உங்களை தானே பயமில்லாமல் திட்ட முடியுது அவ்வ்வ்வ்வ்
//ஏதோ நம்மால முடிஞ்சது! //
நல்லா இருந்துடுவீங்க....
//ஏனெனில் புத்தி கம்மியான இனத்துக்கு நான் வக்காலத்து வாங்கும் வேலையைச் செய்யவில்லை. ///
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.... நிரூபன் உன்னை காமெடி பீஸாக்க பாக்குறாங்க. நீ வேற :-)
//உங்கள் பெயர் இப் பதிவெழுத முன்னாடியே ஞாபகத்தில் இருந்திச்சு.
ஆனால் நீங்கள் தந்த கருப் பொருளின் அடிப்படையில் எழுதப்பட்ட பதிவிற்கு எப்படி உங்கள் பெயரையும் சேர்ப்பது என்று நினைத்து பம்மிட்டேன்! //
மன்னிச்சுட்டேன் விடுங்கோ :-)
//
அப்படி நம்பர் வன் என்று இனிமே யாரும் சொல்லட்டும்! செம பேச்சு குடுக்கிறேன்!//
படுபாவிப்பயலே... நானும் நம்பர் ஒன் ஆகணும்னு ரொம்ப நாளா கனவு கண்டுட்டிருக்கேன். எக்குதப்பா நானும் நம்பர் ஒன்னா வந்துட்டா என்னையும் திட்டி பதிவு போடுவியா லே? அவ்வ்வ்வ்வ்
//
பெண் பதிவர்களுக்கென்று திரட்டிகளில் தனிப் பிரிவு இருந்தாலே அவர்களின் படைப்புக்கள் கண்டறியப்படும். வெகு விரைவில் இந்த முறையினைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறேன்! //
பல திரட்டிகள் நம் ஆலோசனையை எதிர்பார்த்து தான் இருக்கிறார்கள். தமிழ் 10 போன்ற திரட்டிகள் பல வகைகளில் நம் கருத்துக்களை உடனுக்குடன் பரிசீலிப்பவர்களாக இருக்கிறார்கள். எல்லாரிடமும் இந்த தகவலை கொண்டு செல்லவும் (உன் கண்ணுக்கு த.ம மட்டும் தான் தெரியும்னு எனக்கு தெரியும் ஹி...ஹி...ஹி...)
//
இந்தப் பட்டியலில் என்னோட பெயரைத் தவறவிட்டமை ஒரு வரலாற்றுப் பிழை என்பதனை கண்ணீருடன் அறிவிக்கிறேன்!//
உங்கள் பெயர் இக் கமென்ட் எழுதும் முன்னாடியே ஞாபகத்தில் இருந்திச்சு.
ஆனால் நீங்கள் எழுதிய பதிவிற்கு எப்படி உங்கள் பெயரையும் சேர்ப்பது என்று நினைத்து பம்மிட்டேன்! -நீ போட்ட கமென்டையே திருத்திட்டேன் ஹி...ஹி...ஹி...
//இன்றும் விட்டிருக்கலாமெல்லோ தலைப்பை.. சும்மா பின்னிப் பெடல் எடுத்திருப்போமெல்லோ... //
ஹி...ஹி...ஹி... அப்படி போடு :-)
______________
இறுதியாக
ஹிட்ஸ் மோகத்திலும் மொய்க்கு மொய் சிஸ்ட்டத்திலும் பெண்கள் ஓரங்கட்டப்படுவது உண்மை தான். பெண்கள் தானாக தம்மை சுருக்கிக்கொள்வதும் உண்மை தான். அம்பலத்தார் ஐயா சொல்வது போல் ஒரே கமென்டையே போட எனக்கும் சளிப்பா இருக்கும். ஏன் பெண்கள் தங்களை சுருக்கி கொள்கிறார்கள் என!
ஒரு பெண்பதிவர் கேட்டார் "நீங்கள் ஒரு பெண் தானே... ஆனால் எல்லா இடங்களிலும் உங்கள் கமென்ட் பாக்க முடியுதே. அதெல்லாம் பாக்கும் போது நீங்க ஆண்பதிவர் என சந்தேகம் இருந்துச்சு..."ன்னு! இப்படி தான் பெண்களின் நிலை இருக்கு. அவர்கள் இன்னும் அடிமைசமூகத்திலிருந்து மீளவில்லை என்பதை தான் காட்டுது :-( பெண்கள் தைரியமா பேச முடியாது என்று தாங்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள்
இன்னொன்று நாம் கொடுக்கும் தரவரிசை மற்றும் ஆலோசனைகள் மட்டும் ஒரு பெண்ணை அடையாளப்படுத்திட முடியாது. அவளின் குடும்பமும் அவளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். "நீ என்ன வேணும்னாலும் எழுது. நா பாத்துக்குறேன்" என சொல்லும் கணவர்கள் எத்தனை பேர்? "நீ தைரியமா விவாதத்தில் சரிக்கு நிகரா பேசு!" என சொல்லும் அண்ணன்கள் எத்தனை பேர்? சிலர் இந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம் என சொல்லி பதிவுக்கு சம்மந்தப்பட்ட விஷயங்களை சொல்வதுண்டு. தரமான கருத்தா இருக்கும். ஆனா வெளியிட பயம். அது அவர்களின் வாழ்க்கையை பாதித்துவிடும் என்பதால் (வரதட்சணை, ஈம காரியம், ஜாதிபிரச்சனை). ஒரு இடத்தில் தவறாய் யாரேனும் ஒரு வார்த்தை விட்டாலே அதை பூதாகரமாக்கி பெரிய பிரச்சனையை உண்டு பண்ண சொந்தக்காரர்களும் இணையத்தில் இருப்பதால் பெண்களால் சுதந்திரமாக தன் எண்ணங்களை,பதிலடிகளை கொடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை.
அடுத்ததாக பெண்களின் மனநிலையும் ஒரு காரணம். சட்டென உணர்ச்சிவசப்படுவது. ஒருவர் எதிர்மறை கருத்து சொன்னால் அதை ஏற்க மனம் ஒத்துக்காது. என்னை இப்படி திட்டிட்டானே என புலம்புபவர்கள் அதிகம். அந்த வகையில் ஹேமா,இந்திரா போன்றவர்கள் ரொம்ப திறமைசாலிகள் தான் (கமென்ட் மாடுரேஷன் இல்லை இவர்கள் தளத்தில்). ஒளிந்துக்கொண்டு விமர்சிக்கும் ஆட்களுக்காக ஏன் நாம் பயம் கொள்ள வேண்டும் என யாரும் நினைப்பதில்லை. அனானி தப்பா பேசிட்டா உடனே அழுதுவிடுவது. அதனாலேயே பதிவு போடாம ஒதுங்குவது என தங்களை தாங்களாகவே ஏமாற்றுக்கொள்கிறார்கள். முதலில் பெண்கள் தங்களை எடைபோட கற்றுக்கொள்ள வேண்டும் :-)
அப்பறம் ஆண் என்றாலே அவன் பெண்களை ஏமாற்ற பிறந்தவன் தான் என நம் மூதாதையர்கள் விட்டு சென்ற அடிமட்ட எண்ணத்தை கைவிட வேண்டும் :-)
ஆண்களும் கொஞ்சம் தரமான விஷயங்களை பற்றி பதிவு போட்டா பெண்கள் தைரியமா கமென்ட் போடுவாங்க :-) இதனால் இப்படி ஒரு பெண்பதிவர் இருப்பது பலருக்கும் தெரியவரும்.
ஆரோக்யமான சூழ்நிலைகளை உருவாக்கி பயணிக்க பெண்பதிவர்களை விட ஆண்பதிவர்கள் தான் அதிக அக்கறை கொள்ள வேண்டும். அதனாலேயே நிரூவிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தேன். மிக்க நன்றி. உன் பதிவால் புரட்சி ஏற்படவில்லை என்றாலும் கூட எல்லார் மனதிலும் சிறுதாக்கம் ஏற்படுத்தினாலே உனக்கு வெற்றி தான் நிரூ..
அவ்வளவுதாங்க...
பேசிமுடிச்சுட்டேன் :-)
ஹேமா ஆமினா போன்றவங்க நட்புடனும் உரிமையுடனும் என்னைய்யா உங்க வலைப்பூவில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு என்று சொல்லுறியள் எங்க இடம் என்னாச்சு என்று சண்டைபோட்டு இந்த கிழவனை மிரட்டியே சாதிச்சிடுவாங்க.//
அம்பலத்தார் ஐயா நீங்க சொல்வதில் ஹேமாவின் வலையில் நான் எப்போதும் பதிவிலகில் இருந்தாலும் இல்லாவிட்ட்டாலும் ஓடிப்போவது அவங்களின் சுவாரசியமான ஞாபகங்கள் பிடிக்கும் என்பதால் அதையும் தாண்டி இசை அவங்களுக்குப் பிடிக்கும் அரசியலில் அவங்க பார்வை என்னோடு முரன் பாடு சிரீமா பதிவில் இன்னும் பீன்னூட்டம் போடவில்லை ஆனாலும் அங்க பதிவு எப்பவரும் என்று வாசகனாக காத்திருப்பம் இந்த மொய்க்கு மொய் என்னையும் கெடுக்கின்றது என்பது உண்மைதான் ஐயா! நாளை வாரன் விபரமாக பேச!
ஐஐஐ... எல்லோரும் பேசி முடிச்சிட்டினம்... அப்போ இனி மங்கோலசி, சோடா எல்லாத்தையும் கொண்டுவாங்கோ.. ஆறுதலாக இருந்து குடிப்பம்.
நான் இன்னும் பேசவே இல்லையே அவ்வ்வ்வ்வ்வ்:)))..
Hello Sir,
Although I have been reading your posts, this is first comment. There are multiple things you discuss in your post about women's posts.
Here are my comments, As far as I know, many women don't go behind hits and many of us don't care about having hits. I know a lot of ladies, who write the blogs just for mental satisfaction. And even if one person comes to their blog and rEad it, thats enough for them.
Secondly we don't know blog politics, we don't promote our blogs in other media like Facebook, twitter, buzz etc. Many of us write blogs in the middle of house work, office work and personal work. So we dOnt get time to go and vote In others blogs, in return they get none.
@முகுந்த் அம்மா
Hello Sir,
Although I have been reading your posts, this is first comment. There are multiple things you discuss in your post about women's posts. //
வாருங்கள் முகுந் அம்மா,
பல தடவை வந்தாலும், இம் முறை பின்னூட்டத்துடன் வந்திருக்கிறீங்க.
நல்லதோர் பதிவில் உங்க பின்னூட்டத்தினை கைவிசேசமாக ஆரம்பிச்சிருக்கிறீங்க. நன்றி.
இந்தப் பதிவில் பல விடயங்களைப் பெண்களின் பதிவுகள் தொடர்பில் அலசியிருக்கேன் என்று சொல்றீங்க. சரி!
//
Here are my comments, As far as I know, many women don't go behind hits and many of us don't care about having hits. I know a lot of ladies, who write the blogs just for mental satisfaction. And even if one person comes to their blog and rEad it, thats enough for them.
//
பெண்கள் யாருமே ஹிட்டைப் பத்தி கவலைப்படுவதில்லை உண்மை தான்!
ஆனால் பெண்களின் படைப்புக்கள் ஓரமாக பலரும் அறியா வண்ணம் இருக்கலாமோ? இங்கேயும் ஹிட்டினைப் பத்தில் சொல்லவில்லை!
ஆண்களின் ஹிட் வேட்கையின் முன்னர், பெண்களின் பதிவுகள் சிறு தூசாக மறைந்து போகின்றன.
பல ஆண்களை விட, நல்ல திறமையான எழுத்துக்களை வழங்க கூடிய சகோதரிகளின் எழுத்துக்கள் பலரால் கண்டு கொள்ளப்படாது இருக்கின்றன.
மன அமைதிக்காக, சகோதரிகள் எழுதுகிறார்கள் என்பது ஓக்கே! அந்தப் பதிவுகளில் பல சமூக சீர்திருத்த கருத்துக்களை முன் வைக்கிறாங்க. அவர்களின் அக் கருத்துக்களானது பல பேரைச் சென்றடைந்தால் சிலர் நல்வழியில் நடக்க பெண்களின் பதிவுகளும் காரணமாக அமையலாம் அல்லவா?
பெண் - தாய் - சகோதரி - தோழி - ஆகிய நிலைகளில் வைத்து வலையுலகில் நோக்கப்படுகின்றாள். ஆகவே மன அமைதிக்காக பெண்கள் எழுதினாலும் ஓர் சிறிய நற் கருத்து தாய் சொல்வது போலவும், தோழி சொல்வது போலவும், சகோதரி சொல்வது போலவும் ஆண்களுக்கும், இச் சமூகத்திற்கும் சென்று சேர்ந்தால் அதுவே மிகப் பெரிய வெற்றி அல்லவா?
எம் மன அமைதிக்கு எழுதுவது, ஒருவர் படித்தால் சந்தோசமே என்றால் அப்புறம் எதற்கு இணையத்தில் எழுதனும் அம்மா?
வெறுமனே ஒரு நோட்டு புக்கில் எழுதி வீட்டினுள் பத்திரமாக பொத்தி வைக்கலாமே எம் எழுத்துக்களை.
//Secondly we don't know blog politics, we don't promote our blogs in other media like Facebook, twitter, buzz etc. Many of us write blogs in the middle of house work, office work and personal work. So we dOnt get time to go and vote In others blogs, in return they get none.
//
இதற்குத் தான் பதிவின் இறுதியில் ஓர் சிறந்த ஐடியாவினைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் உங்கள் ப்ளாக்குகளை பிரபலப்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேணாம். ஆனால் தானகவே திரட்டிகளில் மகளிர் எழுத்துக்களை அனைத்து வாசகர்களும் இனங்கண்டு கொள்வதற்கு தனியான ஓர் பக்கத்தினை மகளிர் என்ற தலைப்பின் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா? அது தொடர்பாக திரட்டிகளுடன் பேசவுள்ளேன்.
நீங்கள் சொல் கருத்து உண்மையானது தான்,.
பெண்கள் தமது வீட்டு வேலைகள் + இதர வேலைகளை முடித்த பின்னர் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தம் எழுத்துக்களை வலையேற்றுகிறார்கள் என்பது உண்மையே! ஆனால் அந்த எழுத்துக்களை பலரிடம் கொண்டு செல்வதற்கு சமூக வலைத்தளங்களூடாக அதிக நேரத்தினை அவர்கள் செலவளிக்க வேண்டிய தேவை இருக்காது!
தானாகவே பெண்களின் எழுத்துக்கள் திரட்டிக் கொள்வதற்கேற்ற வழி முறையினை உருவாக்குவது தொடர்பில் திரட்டிகளுடன் பேசவுள்ளோம். வெகு விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என நினைக்கிறேன்!
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நல்லதொரு பதிவு நிரூபன்.
எழுத்துக்களில் ஆண் பெண் என்ற பாகுபாடு தேவையில்லை. யார் எழுதியது என்றில்லாமல் என்ன எழுதுகிறார்கள் என்ற கண்ணோட்டம் வந்தாலே போதும்.
இந்த நிலை மாறிவிடும்.
இந்த அளவிற்கு வாக்குவாதங்கள் தேவையற்றது.
யதார்த்தத்தை மனதார ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்தாலே பிரச்சனையில்லை.
சில பின்னூட்டங்களைப் பார்த்தாலே புரியுது..
எவ்வளவு பேருக்குப் பொறாமை இருக்கிறதென்று.
பத்து ரூபாய் நோட்டுக்கு பத்து ரூபாய் மதிப்பைக் கொடுக்க முடியும், ஆனால் அதை ஆயிரம் ரூபாய் நோட்டாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் அது முடியாது. அவ்வாறு மறுத்தால் அது யதார்த்தம், உண்மை, பொறாமை அல்ல.
அட...
Jayadev Das சார்.. நலமா?
'fddffd'ல ஒண்ணையும் காணோமே??
அட, நலமெல்லாம் விசாரிக்கறீங்க. பரவாயில்லையே!!! நானும் Blog போடனும்தான் முயற்சி பண்ணினேன் எப்படின்னு தெரியலை அப்படியே விட்டுட்டேன்!! ஹா...ஹா...ஹா...
//Jayadev Das//
ஓ அப்படியா? ம்ம் சரிங்க.
பின்னூட்டமெல்லாம் பிச்சு உதருறீங்களே.. அதான் உங்க எழுத்துக்கள வாசிக்கலாம்னு ஒரு ஆர்வத்துல போனேன். "fddffd"ய தவிர ஒண்ணுமேயில்ல. அதான் கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு.
\\அட.. எங்க போச்சு?\\ என்னை கேட்கிறீர்களா? ஆம், என்றால் இன்னும் கொஞ்சம் specific-ஆக கேட்கவும், என்ன கேள்வி என்று புரியவில்லை.
\\பின்னூட்டமெல்லாம் பிச்சு உதருறீங்களே.\\ நான் உண்மையைத்தான் எழுதினேன். தவறு என்று உங்களுக்குப் பட்டால் சுட்டிக் காட்டலாம். உங்கள் கருத்தை பதிவு செய்யலாம்.
//இத்தனைக்கும் சம்பந்தப்பட்ட பதிவர்களில் சிலர் மேற்கு நாடுகளில் வாழ்வோர். ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் எனும் பாரதியின் கோட்பாட்டினை அறிந்தவர்கள். ஆனால் ஓர் பெண்ணால் வெளிப்படையாக தன் உணர்வுகளைப் பத்தி எழுதுவதை ஜீரணிக்க முடியாது எனும் ஆணாதிக்க மனப்பாங்கில் இருப்பவர்கள். இவர்களைப் போலப் பல பதிவர்கள் பெண்களின் எழுத்துக்களை அடக்க பதிவுலகில் உள்ளார்கள்.//
இன்னும் கொஞ்சம் விபரமா சொல்லவேண்டுமென்றால் இப்படி எழுதுபவர்கள் பெரும்பாலும் கல்யாணமாகி மனைவி பிள்ளைகளும் இருக்கும் 40 - 50 வயதை தாண்டியவர்களாகவே இருப்பது வேதனை தரும் உண்மை. தனது மனைவியிடமோ மகளிடமோ இப்படி தவறாக நடந்துகொண்டால் அதை ஏற்றுக்கொளாவார்களா?
எனக்குத் தெரிந்து இளம்வயது பதிவர்கள் இப்படி நடந்துகொள்வது மிகவும் குறைவு. எனக்கு தெரிந்த 20 - 25 வயசே நிரம்பிய இளவயது ஆண்பதிவர்கள் ரொம்ப நல்லவங்களாக இருக்கிறாங்க அவங்களை நம்பி மனைவிக்கோ மகளிற்கோ வழித்துணையாக தூர இடங்களிற்குக்குட அனுப்பிவைக்கலாம் ஏனென்றால் அவர்கள் காதலையும் காமத்தையும் அன்பையும் நட்பையும் உறவுகளையும் பண்பையும் சரிவர வேறுபடுத்தி தெரிந்துவைத்திருக்கிறார்கள்.
//Jayadev Das
நான் உண்மையைத்தான் எழுதினேன். தவறு என்று உங்களுக்குப் பட்டால் சுட்டிக் காட்டலாம். உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். //
தவறா? உங்க பேச்சுலயா? அத நாங்க சுட்டிக் காட்டணுமா?
அட போங்க சார்.. காமெடி பண்ணிகிட்டு...
உங்கள யாஆஆராஆஆவது குறை சொல்ல முடியுமா என்ன?
\\சில பின்னூட்டங்களைப் பார்த்தாலே புரியுது..
எவ்வளவு பேருக்குப் பொறாமை இருக்கிறதென்று.\\ அப்படின்னா இது காமடியா?
இறுதியாக ஒரு கருத்தை சொல்லவிரும்புகிறேன்.
இப்படி பெண்களை திட்டுபவர்கள், ரகசியமாக ஒழிந்துகொண்டு வக்கிரமாக பின்னூட்டம் இடுபவர்கள் உங்க தரப்பு நியாயங்களையும் எந்த பெயரிலையும் பெயரில்லாமலும் உருவங்களுடனும் உருவங்கள் இல்லாமலும் வந்து சொல்லுங்கோ காத்துக்கொண்டு இருக்கிறன் விவாதிக்கலாம்.
அதைவிட்டிட்டு பேடைத்தனமாக அப்பாவி பெண்களை சொறிந்துகொண்டு உங்களை நீங்களே கேவலப்படுத்திக்கொண்டு இருக்காதையுங்கோ.
நிரூ இப்படி நான் எழுதியது சங்கடம் தருவதாக இருந்தால் சொல்லுங்கோ என்ரை வலைப்பாக்கதுக்கு வரவழைத்து அங்கு அவர்களோட விவாதித்துகொள்கிறன்.
ஸ்ரீப்ரியா, சுகாசினி மணிரத்னம் டைரக்ட் செய்த படங்களைப் பார்த்த பின்னர் முடிவெடுத்தேன் பெண்கள் இயக்கும் படங்களை இனிமே பார்க்கக் கூடாதுன்னு. [நல்லாயிருந்த மணி ரத்னம் சுஹாசினியைக் கூப்பிட்டு ராவணன் படத்துக்கு வசனம் எழுதச் சொன்னான்... படம் எங்கேயோ........ போயிடுச்சு]. குஷ்பு நடத்திய ஜெயா டி.வி. டாக் ஷோ என்னை பெண்கள் நடத்தும் டாக் ஷோ எதையும் பார்க்க வேண்டாம் என்ற முடிவுக்குத் தள்ளியது. பெண்கள் டென்னிஸ் எல்லாம் கூட ஆடுறாங்க. கொஞ்ச நாள் பார்த்தேன் ஆனா இப்போ நான் பார்ப்பதில்லை. காரணம் இவங்க டென்னிஸ் ஆட்டம் அவ்வளவு நேர்த்தி. ஆண்கள் ஆடும்போது முழங்கால் வரையில் ஷார்ட்ஸ் அணிகிறார்கள், மேலே கழுத்திற்குக் கீழ் உடலை மறைக்கும் மேலாடை. ஆனால் பெண்கள் அணியும் உடை எப்படி இருக்கிறது? அவர்கள் டென்னிஸ் ஆட்டம் நன்றாக இருந்தால் ஆட்டத்தை பார்க்க கூட்டம் வரும், ஆனால் ஆட்டம் கேவலமாக இருந்தால்? வேறு எதையாவது காட்டித்தானே கூட்டத்தை கூட்ட வேண்டும்? இதே மாதிரி பெண்கள் எழுத்தும் பிளக்குகளையும் ஒன்றிரண்டு படித்தேன், அதில் நடக்கும் தில்லு முல்லுகளைப் பார்த்தேன். இப்போ படிப்பதில்லை. விட்டு விட்டேன். என்னை இந்த முடிவுக்கு தள்ளியவங்க முன்னால் பாரதப் பிரதமர் ஒருத்தரின் பெயர் கொண்டவங்க, அவங்க கிறுக்குவாங்க. இப்போ எங்கே இருக்காங்களோ, எப்படி இருக்காங்களோ தெரியலை. பார்த்து ரொம்ப நாளாச்சு....ம்ம்ம்.....
@இந்திரா
நானும் அவர் எழுத்தில் மயங்கிட்டேன்
அதான் ஒன்னும் பேச முடியல ஹி...ஹி..ஹி...
//Jeyadev das
\\சில பின்னூட்டங்களைப் பார்த்தாலே புரியுது..
எவ்வளவு பேருக்குப் பொறாமை இருக்கிறதென்று.\\ அப்படின்னா இது காமடியா? //
அட.. உங்களுக்குத் தமிழ் தெரியும் தானே.. நான் “சில பின்னுட்டங்களைப் பார்த்தால் எவ்வளவு பேருக்குப் பொறாமை இருக்குதுனு தெரியுது“னு சொன்னேன். குறிப்பிட்டு உங்களை சொல்லலேல. அப்புறம் எதுக்கு எங்கப்பன் குதிர்ல இல்லனு வரிஞ்சுகட்டிகிட்டு வறீங்க? நா திரும்பவும் சொல்றேன்.
சில தவளை.. அதாவது தன் வாயாலேயே மாட்டிக்கும்ல அந்த மாதிரி தவளைகளோட பின்னூட்டங்களைப் பார்க்கும்போது பொறாமை நல்லாவே தெரியுதுனு சொன்னேன். குறிப்பிட்டு உங்களைப் பற்றி சொல்லவேயில்ல.
:))
//ஆமினா said...
@இந்திரா
நானும் அவர் எழுத்தில் மயங்கிட்டேன்
அதான் ஒன்னும் பேச முடியல ஹி...ஹி..ஹி...//
உண்மை தான் ஆமினா.
சார் என்னமா எழுதுறாரு..
பெண்கள் ஆண்களுக்குச் சமம் என்று சொல்றீங்க, எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்றீங்க, இங்க நீங்க யார் மேலேயோ குற்றம் சுமத்துகிறீர்கள், அதை யார் என்று பெயரிட்டு சொல்ல முடியவில்லை. அந்த நபர் எழுதியதில் உங்களுக்கு ஆட்சேபனை என்ன வென்று சொல்ல தைரியமில்லை, அப்புறம் நீங்கள் எங்கே ஆணுக்கு நிகராக ஆவது?
தலைவர ஒன்னும் சொல்லிடாதீங்கோ...
நாங்களாம் அவருக்கு ரசிகர் மன்றம் வைக்கிறதா இருக்கோம்...
\\\அப்புறமா, நீங்க என்ன தான் பல சாலி என்றாலும், ஆண்களுக்குப் பெண்கள் அடங்கிப் போகனும் என்றாலும், நைட்டில நீங்க அவங்களுக்கு அடங்கிப் போகனுமே! இது எப்பூடி!
மூளை பலம், உடல் பலம் இருந்தாலும் நீங்க ஆண்மையுள்ளவங்க என்று நிரூபிக்க ஒரு பெண்ணோட சதை பலம் தேவையில்லே! \\ எனக்கு கூட இதைப் படிச்சதும் மயக்கம் வராத குறைதான். இப்படி எழுதற ஒருத்தர் பெண்கள் உரிமைகளை நிலைநாட்டப் போறாரு. இதை நம்பி மயங்கிகிட்டு கிடக்குற கூட்டம். விளங்குமா இது?
//அந்த நபர் எழுதியதில் உங்களுக்கு ஆட்சேபனை என்ன வென்று சொல்ல தைரியமில்லை, அப்புறம் நீங்கள் எங்கே ஆணுக்கு நிகராக ஆவது?//
நியாயமான கேள்வி
:-)
//இப்படி எழுதற ஒருத்தர் பெண்கள் உரிமைகளை நிலைநாட்டப் போறாரு. இதை நம்பி மயங்கிகிட்டு கிடக்குற கூட்டம். விளங்குமா இது? //
நீங்க தான் பாஸ் நல்ல தீர்ப்பா சொல்லணும்.. உங்கள நம்பி தான் நாங்களாம் விவாதிச்சுட்டிருக்கோம்
//பெண்கள் ஆண்களுக்குச் சமம் என்று சொல்றீங்க, எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்றீங்க, இங்க நீங்க யார் மேலேயோ குற்றம் சுமத்துகிறீர்கள், அதை யார் என்று பெயரிட்டு சொல்ல முடியவில்லை. அந்த நபர் எழுதியதில் உங்களுக்கு ஆட்சேபனை என்ன வென்று சொல்ல தைரியமில்லை, அப்புறம் நீங்கள் எங்கே ஆணுக்கு நிகராக ஆவது? //
ஆணாக இருந்தால் சொல்லிடலாம். அது சரியான சுட்டி டிவியாக அல்லவா இருக்கிறது.
விடுங்க பாஸ்.. அதையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு சுட்டிக் காட்டுறதே கேவலம்.
சரி அத விடுங்க. நீங்க நலமா? வேலையெல்லாம் எப்டி போகுது? இன்னைக்கு என்ன சாப்டீங்க?
//ஆமினா..
நீங்க தான் பாஸ் நல்ல தீர்ப்பா சொல்லணும்.. உங்கள நம்பி தான் நாங்களாம் விவாதிச்சுட்டிருக்கோம் //
ஆமான் ஆமினா.. நாட்டாமை என்ன சொல்றாருனு பார்ப்போம்.
\\நீங்க தான் பாஸ் நல்ல தீர்ப்பா சொல்லணும்.. உங்கள நம்பி தான் நாங்களாம் விவாதிச்சுட்டிருக்கோம்.\\ இந்த நக்கல் நையாண்டி கேலி கிண்டல் இதிலெல்லாம் நானும் இறங்க அதிக நேரம் பிடிக்காது, அம்மணிகளே! இங்கே பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுறேன் என்று கிளம்பிய ஒருத்தரின் வக்கிரமான வார்த்தைகள் உங்களுக்கு ஆட்சேபகரமாகத் தோன்றவில்லை. உங்கள் எதிர்ப்பை சிறிதும் காட்டவில்லை!! இது வியப்பாக இருக்கிறது. பெண்கள் இனம் உருப்படாமல் போனதற்கு அவர்கள் புத்தியைக் குறைவாகப் படைத்து இயற்க்கை ஒரு புறம் சதி செய்தாலும் இன்னொரு புறம் இருக்கும் அறிவை இப்படி தவறாகப் பயன்படுத்தியே அவர்கள் இன்னமும் கீழே போகிறார்கள். என்ன செய்ய?
எங்கே இந்திரா
நானும் 2 நாளாவே இப்ப சொல்லிடுவாரு, அப்ப சொல்லிடுவாருன்னு பாக்குறேன். அவர் இன்னும் சுகாசினியையே நெனச்சுட்டிருக்காரு...
//இங்கே பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுறேன் என்று கிளம்பிய ஒருத்தரின் வக்கிரமான வார்த்தைகள் உங்களுக்கு ஆட்சேபகரமாகத் தோன்றவில்லை.//
பெண்புத்தி பின் புத்தின்னு அதிராவே சொல்லியிருக்காங்க. நீங்க பேசுங்க சகோ
\\ஆணாக இருந்தால் சொல்லிடலாம். \\ சரியான பதிலைச் சொல்லவேண்டுமானால் நிரூபன் மாதிரியே நானும் எழுத வேண்டும். வேண்டாம்....
\\அது சரியான சுட்டி டிவியாக அல்லவா இருக்கிறது. விடுங்க பாஸ்.. அதையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு சுட்டிக் காட்டுறதே கேவலம். \\ தன்னுடைய பிளாக்கை எதிர்த்து தானே இன்னொரு பெயரில் பிளாக்கை ஆரம்பித்து ஊரைக் கூட்டி கும்மியடித்தவர்கள் எல்லாம் இருக்காங்க, அதை விட கேவலம் வேறு என்ன இருக்கும்!!
\\சரி அத விடுங்க. நீங்க நலமா? வேலையெல்லாம் எப்டி போகுது? இன்னைக்கு என்ன சாப்டீங்க?\\ ஏன் மேல நீங்க காட்டும் அக்கறைக்கு நான் எப்படி கைமாறு செய்யப் போறேன்னு தெரியலையே!!
\\அவர் இன்னும் சுகாசினியையே நெனச்சுட்டிருக்காரு...\\ இன்னும் பேரு வேண்டுமா...!! இந்தா பிடிங்க... ஜெயசித்ரா [இப்போ ஒரு படம் எடுத்துகிட்டு இருக்காங்க நிச்சயம் வெளிவராது வந்தாலும் ஊத்திக்கும்], ரஞ்சிதா [ஒண்ணுமே தெரியாத அப்பாவி ஆனால் சாமியாரைக் கவிழ்த்தவர்], ஜெயலலிதா [தமிழ் நாட்டை மாத்தி மாத்தி குடிச் சுவராக்கியவர்களில் ஒருத்தர்], இந்திரா காந்தி [இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே எழிதில் தீர்க்க வேண்டிய பிரச்சினையை சொந்த நலன்களுக்காக தீராத பிரச்சினையாக்கி விட்ட புன்னியவது, சோனியா காந்தி [தற்போது இந்தியாவை உருப்படாமல் செய்து கொண்டிருக்கும் அப்பாவி], பூலான் தேவி, மாதா அமிர்தானந்தாமாயி [ஆம்பிளை சாமியார்களுக்கு இணையாக பணம் பண்ணிக் கொண்டிருப்பவர்].... அப்புறம் எல்லாத்துக்கும் கடைசியா.... இவங்களையெல்லாம் மின்சக் கூடியவர், அவர் ஒரு பெண் பதிவர்.... அவர் பெயர் இங்கேயே ஒளிந்து கிடக்கிறது.... சொல்வதற்கு பயமாக இருக்கிறது..... முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.
ஹாவ்வ்வ்... ஒரே கொட்டாவியா வருது..
யாருமே இல்லாத கடைல யாருக்குயா டீ ஆத்துற?
எனக்குப் பொழுது போகல. யாராவது சண்டைக்கு வாங்க.. வாக்குவாத்துக்கு வாங்கனு இப்படி புலம்பலாமா?
யாரு? யாரோ.
நாம ஒன்னும் சும்மா இல்லீங்கோவ் ரெண்டு டெரர்களோடு உசிருக்கு போராடிகிட்டு இருக்கேனுங்கோவ் ....!!! அது சரி நீங்களும் நம்மள மாதிரியே வெட்டி ஆபிசர் தானுங்களா? பேசாம தொலைகாட்சி சீரியல் [அதுவும், ராதிகா அம்மா மாதிரி பெண்கள் எடுக்கும் சீரியல்கள்] எல்லாம் இருக்குமே, போய்ப் பார்க்கலாமே!!
//இன்னும் பேரு வேண்டுமா...!! இந்தா பிடிங்க...//
நீங்க வல்லாரைகீரை அதிகமா சாப்பிடுவீகன்னு எனக்கு தெரியாதுங்க அண்ணாச்சி
//அது சரி நீங்களும் நம்மள மாதிரியே வெட்டி ஆபிசர் தானுங்களா?//
நீங்களுமா?????????
அடடா... எங்களையாவது ராதிகா சீரியல்ல சேத்துக்குவாங்க.. உங்கள எந்த சீரியல்ல சிபாரிசு பண்ணுறது?? ம்
இருங்க யாராவது உங்களுக்கு வாய்ப்பு கொடுக்குறாங்களான்னு கேட்டுட்டு சொல்லுதேன்
\\நீங்க வல்லாரைகீரை அதிகமா சாப்பிடுவீகன்னு எனக்கு தெரியாதுங்க அண்ணாச்சி \\ நம்ம ஊரில இந்த கீரை கிடப்பதில்லீங்க, கிடைச்சா நிச்சயம் வாங்கி சாபிடுறேன். ஞாபக ஷக்தி அதிகரிக்கனும்னா எட்டு மணி நேரம் தொலைக் காட்சி சீரியல்கள் பார்ப்பதை நிறுத்தினாலே போதும், மனதும் சுத்தமா இருக்கும்.
\\அடடா... எங்களையாவது ராதிகா சீரியல்ல சேத்துக்குவாங்க.. உங்கள எந்த சீரியல்ல சிபாரிசு பண்ணுறது?? ம்\\ நான் உங்களை அதில் நடிக்கச் சொல்லவில்லைங்க, போரடிச்சா பாருங்கன்னு தான் சொன்னேன். ஏன்னா எல்லா பெண்களும் சாயுங்காலம் ஆறு மணியில் இருந்து பத்து மணி வரைக்கும் இதைத்தானே பண்றாங்க. நடுவுல நியூஸ் அது இதுன்னு வேற எதாச்சும் வகைச் சொல்லி புருஷன் கேட்டா, அவன் செத்தான். ஆனா அதில வரும் வில்லி மாதிரியே உங்க கேரக்டரும் மாறிப் போச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பல்ல. [இப்பவே நான் அப்படிதான்னு நீங்க சொல்வது ஏன் காதில் விழுகிறது. ஹி...ஹி...ஹி...ஹி...].
இவ்வளவு சம்ம்ம்ம்ம்ம்ம்மத்தா பேசுறீங்க? அட அட அட...
உங்க ரசிகையா இருக்குறதுக்கு நா என்னமோ புண்ணியம் பண்ணியிருக்கேனுங்க...
//எட்டு மணி நேரம் தொலைக் காட்சி சீரியல்கள் பார்ப்பதை நிறுத்தினாலே போதும், மனதும் சுத்தமா இருக்கும். //
நீங்க சொன்னா சரியாதேன் இருக்கும் அண்ணாச்சி
மனசு சுத்தமாகுறதுக்கு நீங்க சொன்ன காரணம் இருக்கே.... அம்ம்ம்ம்ம்ம்மாடி
எதாவது ஒரு வேர்ல்ட் ரெக்கார்ட்ல ஏத்திடணுங்க..
மறுபடியும் மறுபடியும் சொல்றேன்
உங்க ரசிகையா இருக்குறதுக்கு கொடுத்து வச்சுருக்கோணும்
//இப்பவே நான் அப்படிதான்னு நீங்க சொல்வது ஏன் காதில் விழுகிறது. ஹி...ஹி...ஹி...ஹி...]. //
நீங்க ஒரு பின்னூட்ட டாக்குட்டருங்கோ
\\உங்க ரசிகையா இருக்குறதுக்கு நா என்னமோ புண்ணியம் பண்ணியிருக்கேனுங்க...
\\ என்னது..!! என்னோட Fan ஆயிட்டீங்களா.... இது எப்போ நடந்துச்சு...!! Anyway, அதுக்கு நான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன், ஆனா அதுக்காக நீங்க எழுதற பதிவெல்லாம் படிக்கணும்னு மட்டும் சொல்லிடாதீங்க......
\\நீங்க சொன்னா சரியாதேன் இருக்கும் அண்ணாச்சி\\ இது திருநெல்வேலி/ காரைக்குடி பேச்சு.
\\கொடுத்து வச்சுருக்கோணும்\\ இது கோயம்புத்தூர் பேச்சு.
ஆஹா... குழப்புதே.....
//ஆனா அதுக்காக நீங்க எழுதற பதிவெல்லாம் படிக்கணும்னு மட்டும் சொல்லிடாதீங்க...... //
ஹி...ஹி....ஹி...
செம குசும்பு உங்களுக்கு
நீங்க வரலன்னு தான் நாங்க மெரினால விழுந்து தற்கொல பண்ணிக்க போறோமா என்ன?
அதுமட்டுமில்லாம நீங்களே பல வருஷங்களா பிசியா இருக்குறதுனால எம்டி ப்ளாக் வச்சுருக்கும் போது எப்படி உங்கள நா டிஸ்டர்ப் பண்ண முடியும் :-)
//\\நீங்க சொன்னா சரியாதேன் இருக்கும் அண்ணாச்சி\\ இது திருநெல்வேலி/ காரைக்குடி பேச்சு.
\\கொடுத்து வச்சுருக்கோணும்\\ இது கோயம்புத்தூர் பேச்சு.
ஆஹா... குழப்புதே..... ///
வாங்கண்ணே...
நல்லாக்கீகளா? சாப்டீயளா? புள்ளகுடிய்யெல்லாம் ச்சவ்க்கீயம்மா? எப்பவுமே மத்தவாளதான் கொழப்புவேள்.. இது என்ன புதுசா லோகத்துல நடக்காத புராணமா இர்க்குற்து.. என்னமோ போங்கோ
(ஒடனுக்கொடனே பதில் போடலன்னு வருத்தப்பட்டு அழுது கண்ணீர் வடிச்சு செவத்துல முட்டிக்காதீங்கோ... எப்பலாம் எனக்கு பொழுது போகலையோ அப்ப மட்டும் வருவேன். சரியோ?
//அதுக்கு நான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன், ஆனா அதுக்காக நீங்க எழுதற பதிவெல்லாம் படிக்கணும்னு மட்டும் சொல்லிடாதீங்க...... //
எந்த லூசாவது அப்படி சொல்லுமா?
கடன மட்டும் திருப்பி கொடுத்துடுங்க :-)
\\எந்த லூசாவது அப்படி சொல்லுமா?\\ ஆனா நீங்க சொல்லிடுவீங்க மேடம்.
இப்பதான் உங்க பிளாக் பக்கம் போனேன் மேடம், ஜாக்கிரதையா எதையும் படிக்காம ஒரே ஒரு suggestion மட்டும் feedback-ல் குடுத்தேன், அது இதுதான்: உங்க பிளாக் தலைப்பு 'குட்டி சுவர்க்கம்' அப்படிங்கிறதுல என்பதை நியூமராலஜிப் படி கடைசி மூணு எழுத்தை நீக்கிட்டீங்கன்னா பெயர் ரொம்ப பொருத்தமா இருக்கும், உங்க பிளாக் ஓஹோன்னு ஓடும், நீங்களும் எங்கியோ போயிடுவீங்க.
\\நீங்க வரலன்னு தான் நாங்க மெரினால விழுந்து தற்கொல பண்ணிக்க போறோமா என்ன?\\ தயவு பண்ணி அப்படியெல்லாம் விளையாட்டுக்கு கூட சொல்லாதீங்க மேடம், நீங்க அங்க போய் குதிச்சதுமே முப்பது கிலோ மீட்டர் சுத்தலவுக்கு இருக்குற மீனெல்லாம் செத்து போயிடும், தயவு செய்து அங்கே மீன் புடிச்சு வயிற்றைக் கழுவுரவங்க பொழப்புல மண்ணை வாரிப் போட்டுடாதீங்க.
\\ஒடனுக்கொடனே பதில் போடலன்னு வருத்தப்பட்டு அழுது கண்ணீர் வடிச்சு செவத்துல முட்டிக்காதீங்கோ... எப்பலாம் எனக்கு பொழுது போகலையோ அப்ப மட்டும் வருவேன். சரியோ?\\ அது சரி, நீங்க பின்னூட்டம் போடுவதை நிறுத்துவதும் பதிவர் கடையை மூடி பூட்டு போடுவதும் ஒரே சமயத்துல நடக்குது.... அவர் திரும்ப வந்து கடையைத் திறக்கும் போது உங்க பின்னூட்டமும் வருது...!! அது எப்படி.... விளங்கலையே!!
\\ஒடனுக்கொடனே பதில் போடலன்னு வருத்தப்பட்டு அழுது கண்ணீர் வடிச்சு செவத்துல முட்டிக்காதீங்கோ.\\ நீங்கள் பின்னூட்டம் போட்டாத்தான் நான் அழனும், போடலைன்னா நான் எதுக்குங்க அழப் போறேன்!! ஆனா, எந்த மாதிரி கேரக்டரை எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குன்னு நினைச்சா \\செவத்துல முட்டிக்\\ கொள்ளனும் போலத்தான் இருக்கு, என்ன செய்ய!!
//. அவர் திரும்ப வந்து கடையைத் திறக்கும் போது உங்க பின்னூட்டமும் வருது...!! அது எப்படி.... விளங்கலையே!! //
நிரூ
சார் ரொம்ப அறிவாளின்னு நா சொல்லல?? கேட்டீயா நீ?
//நியூமராலஜிப் படி கடைசி மூணு எழுத்தை நீக்கிட்டீங்கன்னா பெயர் ரொம்ப பொருத்தமா இருக்கும்,//
உங்கள மாதிரி ஆளுங்க வந்தா பேரு மாத்த வேண்டிய அவசியமே இல்ல... எண்ணி 4வது நாள் குட்டிசுவர்கூட இடிஞ்சுடும்
//நீங்கள் பின்னூட்டம் போட்டாத்தான் நான் அழனும், //
சரிங்க தல
நீங்க அழுவுறத இந்த ஒலகத்துல யாராலும் சகிச்சுக்க முடியாது. இத்துடன் stopபுகிறேன்.
\\நீங்க அழுவுறத இந்த ஒலகத்துல யாராலும் சகிச்சுக்க முடியாது. இத்துடன் stopபுகிறேன். \\ ம்ம்ம்..... ரெண்டு அதி புத்திசாலி பெண்கள் வந்தீங்க, ஏதாவது தலைப்பு சம்பந்தமா விவாதம் பண்ணுவீங்கன்னு நினைச்சேன், ஆனால் இழவு வீட்டுக்குப் போனாலும் அங்கே வந்திருப்பவர்கள் கட்டியிருக்கும் சேலையைப் பற்றியும், நகைகளைப் பற்றியும் விசாரித்துவிட்டுத்தான் பிணத்திடம் அழப் போவார்கள் பெண்கள் என்ற வரலாறு பொய்யாகாது என்பது நிரூபணம் ஆகிவிட்டது. நீங்கள் என்னென்னமோ பின்னூட்டம் போட்டீர்கள். உதாரணத்துக்கு..........
\\பின்னூட்டமெல்லாம் பிச்சு உதருறீங்களே.\\
\\உங்கள யாஆஆராஆஆவது குறை சொல்ல முடியுமா என்ன?\\
\\நானும் அவர் எழுத்தில் மயங்கிட்டேன் அதான் ஒன்னும் பேச முடியல ஹி...ஹி..ஹி..\\
\\சார் என்னமா எழுதுறாரு..\\
\\தலைவர ஒன்னும் சொல்லிடாதீங்கோ... நாங்களாம் அவருக்கு ரசிகர் மன்றம் வைக்கிறதா இருக்கோம்.\\
\\நீங்க வல்லாரைகீரை அதிகமா சாப்பிடுவீகன்னு எனக்கு தெரியாதுங்க அண்ணாச்சி \\
\\இவ்வளவு சம்ம்ம்ம்ம்ம்ம்மத்தா பேசுறீங்க? அட அட அட... உங்க ரசிகையா இருக்குறதுக்கு நா என்னமோ புண்ணியம் பண்ணியிருக்கேனுங்க.\\
\\நீங்க சொன்னா சரியாதேன் இருக்கும் அண்ணாச்சி மனசு சுத்தமாகுறதுக்கு நீங்க சொன்ன காரணம் இருக்கே.... அம்ம்ம்ம்ம்ம்மாடி எதாவது ஒரு வேர்ல்ட் ரெக்கார்ட்ல ஏத்திடணுங்க.. மறுபடியும் மறுபடியும் சொல்றேன் உங்க ரசிகையா இருக்குறதுக்கு கொடுத்து வச்சுருக்கோணும் \\
\\\\நீங்க ஒரு பின்னூட்ட டாக்குட்டருங்கோ \\
\\சார் ரொம்ப அறிவாளின்னு நா சொல்லல?? கேட்டீயா நீ? \\
இவை அத்தனையும் பார்த்தால் ஒன்று மட்டும் புரிகிறது. இந்தப் பின்னூட்டங்கள் எல்லாம் சொல்வது ஒன்றே ஒன்றுதான்........ உங்க கிட்ட நான் முன் வைத்த விவாதங்களுக்குப் பதில் இல்லை, சும்மா பசப்புவதர்க்காக இதையெல்லாம் எழுதியுள்ளீர்கள். இதெல்லாம் கூடப் பரவாயில்லை, ஒரு ஆண் தான் படுக்கையறை சங்கதிகளைப் பற்றி எழுதுகிறான், பெண்களைக் கேவலப் படுத்துகிறான் என்று பார்த்தால் பெண்களாகிய நீங்கள் இதைக் கண்டிக்காவிட்டாலும் இன்னொரு பெண்ணைக் கேவலப் படுத்தாமலாவது இருக்கலாமல்லவா? ஆனால் என்ன செய்தீர்கள்.
\\அவர் இன்னும் சுகாசினியையே நெனச்சுட்டிருக்காரு...\\ இதன் அர்த்தம் என்னவென்று ஊருக்கே தெரியும். கேட்டால் உன் புத்தி கேவலமாக இருக்கிறது, அதனால் தான் நீ இதற்க்கு தப்பான அர்த்தம் கற்ப்பிக்கிறாய் என்று பம்மாத்து பண்ணுவீர்கள். நீங்கள் எல்லாம் சேர்ந்து பெண்கள் உரிமையை நிலைநாட்டப் போகிறீர்களா? இதை விட கேலிக் கூத்து வேறென்ன இருக்கும்?
படைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஒரு பாக்ட்டீரியா ஆகவே ஆனாலும் உலகில் உயிரினம் வாழ அதனுடைய பங்களிப்பு இருக்கவே செய்கிறது. இப்படி இருக்கும் போது இயற்கையின் வளர்ச்சியின் எல்லையாக கருதப் படும் மனித இனத்தில் உள்ள பெண் இனம் எதுக்குமே லாயக்கற்றவர்கள் என்று சொல்வது அறியாமை. ஆனால், எல்லா விதத்திலும் ஆணும் பெண்ணும் சமமாகி விடுவார்களா...??? தோற்றத்தில் கூட சமாமாக இல்லையே...!! மற்றதைப் பற்றி சொல்லத் தேவையே இல்லை. சமமாக முடியாது. இயற்கையில் ஆண் மயிலுக்குத்தான் அழகான தோகை உள்ளது. பெண் மயிலுக்கு இல்லையே? செவளுக்குத்தானே கொண்டாய் உள்ளது? ஆண் சிங்கம் பிடரி முடியுடன் கம்பீரமாக உள்ளது பெண் சிங்கம் அப்படி இல்லையே? ஆக இயற்கையிலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது. ஆண் முக்கியமானவனா, பெண் முக்கியமானவளா என்ற பேச்சுக்கு இங்கே இடமேயில்லை. இருவருமே முக்கியம்தான். ஆனால், பெண்களால் சிலது முடியும், ஆண்களால் சிலது முடியும், இருசாராருக்கும் அவரவருக்கென்று ஒரு இடமுண்டு அதை மற்றவர் நிரப்ப முடியாது.
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...
நாமே பதிவு போட்டு, நாமே பேசிக்கொண்டிருப்பது முறையல்ல! இனி பெண்கள் பேசட்டும்!
நல்லதுதான்.ஆனால்,பொண்ணுங்க நாம பேச தொடங்கினோம்னா பசங்க நீங்க தாங்கமாட்டீங்க ....
//Your comment has been saved and will be visible after blog owner approval.//
ஹ ஹ ஹ ஹா...அண்ணாச்சி நான் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கல.எத்தனையோ விசயங்களை துணிவோட சுட்டிக் காட்டிற நீங்க இந்த இடத்தில பயப்படுறதா?
//இப் பதிவினை எழுதுமாறு என்னைத் தூண்டிய, சில கருத்துக்களை இப் பதிவு தொடர்பில் வழங்கிய குட்டிச் சுவர்க்கம் வலைப் பதிவின் சொந்தக்காரி, அன்பு அக்கா ஆமினாவிற்கு என் சார்பிலும், அனைத்துப் பதிவர்கள் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.//
பெண்களை மதிக்கிற உங்க குணம் பாராட்டப்பட வேண்டியதுதான் நிருபன் அண்ணாச்சி.இருந்தாலும் ஒரு பெண்ணோட துண்டுதலாலதானே இந்த பதிவு எழுதனும்னு தோணிச்சு.அதைதான் ஏற்றுக் கொள்ள முடியல.உங்கமேல எந்த விரோதமும் இல்லை.நான் தப்பா ஏதும் குறிப்பிட்டிருந்தால் மன்னிச்சிடுங்க.
அண்ணாச்சி உங்க பெரும்பாலான பதிவுகளுக்கு எங்களால் கருத்திட முடியாவிட்டாலும் நிச்சயம் அதில் எங்க வாக்கு மட்டும் இருக்கும்.அதில் நாம எப்பவும் குறை வச்சதில்லை.
@சித்தாரா
//பெண்களை மதிக்கிற உங்க குணம் பாராட்டப்பட வேண்டியதுதான் நிருபன் அண்ணாச்சி.இருந்தாலும் ஒரு பெண்ணோட துண்டுதலாலதானே இந்த பதிவு எழுதனும்னு தோணிச்சு.அதைதான் ஏற்றுக் கொள்ள முடியல.உங்கமேல எந்த விரோதமும் இல்லை.நான் தப்பா ஏதும் குறிப்பிட்டிருந்தால் மன்னிச்சிடுங்க.//
அப்படி இல்லை சித்தாரா
பதிவுலகம் பத்தி சுவாரசியமா பேசிட்டிருக்கும் போது காணாமல் போனவர்கள் பற்றி பேச போக பெண்களின் நிலை பற்றி பேச்சு போனது. திரட்டிகள் ஏதாவது செய்யணும்னு நாங்கள் முடிவெடுத்த போது விவாத மேடையில் வைக்கலாம் என நிரூபன் சொன்னார்.
பேச்சை ஆரம்பிச்சது நானாக இருப்பதால் என் பெயரை குறிப்பிட்டுள்ளார் அவ்வளவே...
:-)
அப்பறம் இதை ஒரு பெண் சொல்லி எழுதியதாகவே இருக்கட்டுமே.. அதில்ல் என்ன தவறு இருந்துவிட போகிறது ;-)
@சித்தாரா மகேஷ்.
//Your comment has been saved and will be visible after blog owner approval.//
ஹ ஹ ஹ ஹா...அண்ணாச்சி நான் உங்ககிட்ட இதை எதிர்பார்க்கல.எத்தனையோ விசயங்களை துணிவோட சுட்டிக் காட்டிற நீங்க இந்த இடத்தில பயப்படுறதா?
//
அவ்..
என் வலையில் பழைய பதிவுகளுக்கு யாராச்சும் கமெண்ட் போட்டால் மட்டுறுத்தலுக்குப் போகும் வண்ணம் மாத்தியிருக்கேன்.
காரணம் பழைய பதிவுகளுக்கு கமெண்ட் போட்டால், யார், யார் கமெண்ட் போடுறாங்க?
என்ன போஸ்ட்டுக்கு கமெண்ட் போடுறாங்க என்று தெரியாம போயிடும். ஆகவே தான் பழைய பதிவுகளுக்கு கமெண்ட் மடரேஷன்
பதிவு வெளியாகி ஒரு நாள் ஆகியதும் வரும் வண்ணம் எழுதி செய்து வைத்திருக்கிறேன்
@சித்தாரா மகேஷ்.
//இப் பதிவினை எழுதுமாறு என்னைத் தூண்டிய, சில கருத்துக்களை இப் பதிவு தொடர்பில் வழங்கிய குட்டிச் சுவர்க்கம் வலைப் பதிவின் சொந்தக்காரி, அன்பு அக்கா ஆமினாவிற்கு என் சார்பிலும், அனைத்துப் பதிவர்கள் சார்பிலும் உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.//
பெண்களை மதிக்கிற உங்க குணம் பாராட்டப்பட வேண்டியதுதான் நிருபன் அண்ணாச்சி.இருந்தாலும் ஒரு பெண்ணோட துண்டுதலாலதானே இந்த பதிவு எழுதனும்னு தோணிச்சு.அதைதான் ஏற்றுக் கொள்ள முடியல.உங்கமேல எந்த விரோதமும் இல்லை.நான் தப்பா ஏதும் குறிப்பிட்டிருந்தால் மன்னிச்சிடுங்க.
//
ஹே.ஹே....
சகோதரி, எல்லோருக்கும் எல்லா விதமான ஐடியாக்களும் வரும் என்று சொல்ல முடியாது. என்ன தான் நான் துணிந்து சில விடயங்களை எழுதினாலும், என்னை விட, மூளை சாலிகள் பலரின் சிந்தனையில் பற் பல விடயங்கள் பதிவுலகில் உதிக்கும்! ஆகவே ஆமினா அக்கா என் அக்கா,
அவாவின் சிந்தனையில் ஒரு பதிவினை எழுதியதை பெருமையாக கருதுகின்றேன்.
ஏலவே நாற்றில் சக தோழர்களின் சிந்தனையில் பல பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறேன்.
அண்ணாச்சி மறுபடியும் வந்தாரா??? ஏன் நிரு என்னிடம் சொல்லல :'(
அண்ணாச்சி எல்லாம் இப்ப சரியா பேசுறீங்க. இதையே முன்னாடி பேசியிருந்தா நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணியிருப்பேன்ல??
இறைவன் படைப்பில் சில விஷயங்களில் ஆணுக்கு பெண் சமமாக முடியாது என்பது உண்மை தான், அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்???
\\அண்ணாச்சி மறுபடியும் வந்தாரா??? ஏன் நிரு என்னிடம் சொல்லல :'(\\ உங்கள் பின்னூட்டத்திற்கு அடுத்த சில மணி நேரத்திலேயே எனது பின்னூட்டத்தை பதிவு செய்துள்ளேன்.
\\அண்ணாச்சி எல்லாம் இப்ப சரியா பேசுறீங்க. இதையே முன்னாடி பேசியிருந்தா நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்ணியிருப்பேன்ல??\\ கவலையே படாதீங்க அடுத்து நான் போடும் பதிலை படிங்க, இந்த முடிவை மாத்திக்குவீங்க!!
\\இறைவன் படைப்பில் சில விஷயங்களில் ஆணுக்கு பெண் சமமாக முடியாது என்பது உண்மை தான், அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்???\\ சில சமயம் எனக்கு சந்தேகம் வரும், பெண் பெயரில் எழுதும் பதிவர்கள் பெண்கள் தானா, இல்லை ஹிட்சுக்காக சில ஆண்களே பெண்கள் பெயரில் எழுதுகிறார்களா என்று. அவ்வளவு மட்டரகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். உங்க விஷயத்தில் அந்த சந்தேகம் தீர்ந்து போச்சு. நீங்கள் சத்தியமா ஒரு பெண்தான். நம்பிட்டேன்!! ஏன்னா, நான் எழுதிய அத்தனையையும் படிச்சிட்டு அதுக்கப்புறமும் \\அதுக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம்???\\ என்ற கேள்வியை கேட்கிறீர்களே!! பெண்விடுதலையாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் முன்வைக்கும் ஒரு முக்கியமான கருத்து பெண்கள் ஆணுக்கு நிகரானவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பது. நம்முடைய முதல் objection-னே இங்கதான் ஆரம்பிக்குது. இருவரும் நிகராக மாட்டார்கள். பல விதத்தில் ஆண் இனம் மேலோங்கி நிற்கிறது, அதில் மிக முக்கியமான ஒன்று மூளையைப் பயன்படுத்தி வியத்தகு காரியங்களைச் சாதித்துக் காட்டுதால். அறிவியலில் புரட்சியை ஏற்ப்படுத்திய கலிலியோ, நியூட்டன், மேக்ஸ்வெல், ஐன்ஸ்டீன் , கணிதத்தில் முக்கிய தத்துவங்களைக் கண்டுபிடித்த ஆயிலர், ஆக்லிட், வான் நியூமன், லெப்னிஸ், ஸ்ரீனிவாச ராமானுஜன், கண்டுபிடிப்புகள் என்று பார்த்தால், எடிசனில் இருந்து இன்று மின்னணு தொழில் நுட்பப் புரசியை ஏற்ப்படுத்திய ஜேக் கில்பி வரை [ஒரே ஒரு விதி விலக்கு மேரி கியூரி, அவருடையது பரிசோதனை அறிவியல், தத்துவ ரீதியான அறிவியல் அல்ல.] , இலக்கியம் என்று பார்த்தால் ஷேக்பியரில் இருந்து இன்று வைரமுத்து வரை, பிளாட்டோ, சாக்ரடிஸ், அரிஸ்டாட்டில் என்று தத்துவஞானிகள் என அத்தனை பெரும் பெரும் ஏன் ஆண்களாகவே இருக்கிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது சிந்துத்துப் பார்த்ததுண்டா? [அடடே..!! பெண்களைப் பார்த்து இந்தக் கேள்வியை கேட்கவே கூடாதே.. அவங்க எங்க சிந்திக்கப் போறாங்க!! ஹா... ஹா.. ஹா... ]. மேற்கண்ட வழியில் எல்லாம் பெண்களால் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு காரணம் ஒன்று இருக்குமல்லவா? அதே போலத்தான், எழுத்துலகிலும் அவர்களால் ஒன்றும் சாதிக்க முடியாது, ஆண் மயிலுக்கு மட்டும் தோகை இருப்பது போல அது இயற்க்கை, இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
சிந்திக்கும் திறனில் ஆண்களுக்கு பெண்கள் நிகராமாட்டார்கள் என்பது யதார்த்தம். இதற்க்கு பெண்ணிய வாதிகள் முன்வைக்கும் ஆட்சேபம், பெண்கள் இப்போது ராக்கெட்டில் போகிறார்கள், டென்னிஸ், கிரிக்கெட் ஆடுகிறார்கள், எழுதுகிறார்கள், சினிமாவில் நடிக்கிறார்கள், பெரிய நிறுவனங்களுக்கு தலைமைப் பொறுப்பில் உள்ளார்கள் ஏன் நாட்டையே ஆளும் பொறுப்பில் கூட இருக்கிறார்கள் என்பதுதான். இதை கொஞ்சம் உற்று நோக்கினால் ஒரு விஷயம் விளங்கும். ராக்கெட்டில் போவது ஒரு பெரிய விஷயமே இல்லை. காசு இருந்தால் நான் கூடத்தான் விமானத்தில் போவேன், அதனால் நான் என்ன விமானத்தை கண்டு பிடித்தவனுக்கு நிகராகிவிடுவேனா என்ன? உடல் தகுதி இருந்தால் போதும் எந்தப் பெண் வேண்டுமானாலும் ராக்கெட்டில் விண்வெளிக்குச் சென்று திரும்ப முடியும். [ஆனால் பாதுகாப்பிற்கு அரை டசன் ஆண்கள் கூட வரவேண்டும், ஆண்கள் குழு தனியாக போகும் போது, பெண்கள் குழுவை தனியாக ஏன் அனுப்புவதில்லை என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்!!] பெண்கள் கிரிக்கெட் ஆடலாம், அதை பெண்களே பார்க்க மாட்டார்கள், டென்னிஸ் ஆடலாம், அந்த ஆட்டத்தைப் பார்க்க யாரும் வருவதில்லை, அவர்கள் அணியும் உடைகளே இதற்க்கு அத்தாட்சி. சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம், ஆனால் இளையராஜாவைப் போல ஒரு பெண் இசையமைப்பாளர் பெயரளவில் கூட ஒருத்தரும் ஏன் வரவில்லை? பதில் சுலபம், வயிற்றில் பம்பரம் விட்டோ, ஆம்லேட் போட்டோ நடிக்கலாம், ஆனால் இதையெல்லாம் பண்ணி பாட்டுக்கு இசையை கம்போஸ் பண்ண முடியாது. பெண்கள் நாட்டை ஆளலாம், ஆனால் அது ஜெயலலிதா ஆட்சி மாதிரிதான் இருக்கும், தேவையா இது? இதே மாதிரிதான் பெண்கள் எழுதலாம், ஆனால் எவன் படிப்பான்? எழுத்துலகில் அவர்கள் பிரகாசிக்க முடியாமல் போனது இயற்க்கை, அதற்க்கு காரணம் கண்டுபுடிக்கப் போறேன், தீர்க்கப் போறேன் என்றால் போகலாம், ஆனால் பிரயோஜனம் இருக்காது!!
அண்ணாச்சி ஜெயதேவ்
பதிவுக்கு சம்மந்தமில்லாத கமென்ட் என்பதால் பப்ளீஸ் பண்ணாம விட்டிருக்கலாம். அல்லது கவனிக்காமல் விட்டிருக்கலாம். சரி விஷயத்துக்கு வரேன்
ஆண்களுக்கு பெண் சமமாக மாட்டார்கள் என்பது உங்கள் வாதமாக இருந்தால் இங்கே அதை பேச வேண்டாம். விருப்பமிருந்தால் சொல்லுங்க. என் ப்ளாக்கில் ஒருபதிவு போடுறேன் அதில் பேசலாம் (என் ப்ளாக்கிற்கு வர உங்களுக்கு விருப்பமில்லை என்றால் உங்கள் ப்ளாக்கில் கூட இது குறித்து விவாதிப்போம். )
எப்பவும் ஆண்பதிவர்களுக்கு சமமாக பெண்பதிவர் எழுத்து ரசிக்கப்பட முடியாது என்பது உங்கள் வாதமாக இருந்தால்
"அந்நிலையையை குறைந்தபட்சமேனும் மாற்ற எங்கள் பங்களிப்பை கொடுக்க நினைக்கிறோம். ஆதரவு கொடுக்க உங்களால் முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. எதிர்கருத்துக்களை சொல்லி எங்களை சோர்வடைய செய்ய வேண்டாமே :'( மேலும் ஒட்டுமொத்தமாக இப்பதிவுலகமே மாற வேண்டும் என்ற பேராசையில் நாங்கள் இந்த விவாதத்தினை முன் வைக்கவில்லை. அது பேராசையும் கூட. குறைந்த பட்சம் சிறு முயற்சியை எந்த திரட்டியாவது செயல்படுத்தினால் போதும். அதுவே எங்கள் வெற்றி என்ற நிலையில் தான் இருக்கோம். புரிந்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
இல்லையென்றாலும் சொல்லுங்க. மேலும் பேசலாம்
நன்றி ஜெயதேவ். உங்கள் பொன்னான நேரத்திலும் என்னுடன் பேச நேரம் ஒதுக்கியமைக்கு
எழுத்துலகில் அவர்கள் பிரகாசிக்க முடியாமல் போனது இயற்க்கை//
எழுத்துலகில் பெண்கள் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு காரணம் இயற்கையா? இந்த தலைப்பில் விவாதம் நடத்துலாமா ஜெயதேவ்:-)
\\எழுத்துலகில் பெண்கள் பிரகாசிக்க முடியாமல் போனதற்கு காரணம் இயற்கையா? இந்த தலைப்பில் விவாதம் நடத்துலாமா ஜெயதேவ்:-)\\ என்ன மேடம் காமடி பண்றீங்க!! இப்போ நடந்துகிட்டிருக்கிறது என்ன மேடம்?
\\ஆண்களுக்கு பெண் சமமாக மாட்டார்கள் என்பது உங்கள் வாதமாக இருந்தால் இங்கே அதை பேச வேண்டாம். விருப்பமிருந்தால் சொல்லுங்க. என் ப்ளாக்கில் ஒருபதிவு போடுறேன் அதில் பேசலாம் (என் ப்ளாக்கிற்கு வர உங்களுக்கு விருப்பமில்லை என்றால் உங்கள் ப்ளாக்கில் கூட இது குறித்து விவாதிப்போம். )\\ இங்கே தலைப்பு ஏன் பெண்கள் எழுதும் பிளாக்குகள் பிரபலமாவதில்லை, அதற்க்கான காரணங்களைத் தேடி ஏதாவது தீர்வு காணமுடியுமா என்பதுதான். அதற்க்கான காரணமாக நாம் எடுத்து வைப்பது, இயற்கையிலேயே பெண்களுக்கு புத்திசாலித்தனம் ஆண்களை ஒப்பிடயும் பொது ரொம்பவே குறைவு என்பது தான். இதற்க்கு பெண்கள் முட்டாள்கள் என்ற தப்பான அர்த்தத்தை கற்பிக்க முடியும் என்றாலும் உண்மை அதுவல்ல, பெண்கள் மூளையின் திறன் கொஞ்சம் குறைவு ஆனால் பூஜ்யம் அல்ல. இதற்க்கு உதாரணமாக நான் முன்வைத்த ஆதாரங்கள், பெண்களில் சிறந்த விஞ்ஞானியோ, தத்துவ ஞாநியோ, கண்டுபிடிப்பாளரோ இதுவரை வரவில்லை என்பதுதான். நியூட்டனின் விதிகள் மாதிரி பெண்ணின் பெயர் கொண்ட ஒரு அறிவியல் விதி வரலாற்றிலேயே ஒன்று கூட இல்லை. பெண்கள் ஆண்களை விட உடல் பலத்தில் குறைந்தவர்கள் என்று சொன்னால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் பொது, மூளை பலத்திலும் குறைந்தவர்கள் என்னும்போது, அது உண்மை என்று தெரிந்தாலும் ஏனோ ஒப்புக் கொள்ள பெண்கள் மனம் மறுக்கிறது. எங்கெங்கெல்லாம் மூளையைப் உபயோகப் படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் பெண் இனம் பின் தங்கியே இருக்கிறது. இந்த உண்மை எழுத்திலும் பிரதிபலிக்கிறது. இந்த உண்மை இந்த தலைப்புக்கு சம்பந்தமாக இருப்பதால் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது, மற்றபடி பெண்களின் இந்த ஏற்றத் தாழ்வை குறிப்பிட்டு அவர்களை நோகச் செய்வது எனது நோக்கமல்ல. "புத்தி கூர்மையிலும் பெண்கள் ஆடவருக்கு இணையானவர்கள்தான், ஏன் அவர்களை விடவும் மேம்பட்டவர்கள்தான்" என்று நீங்கள் எண்ணினால் அந்தத் தலைப்பில் ஒரு பதிவை வெளியிடலாம், முடிந்தால் அது குறித்து பின்னூட்டமிடுகிறேன். மற்றபடி, பெண்கள் எதற்குமே லாயக்கற்றவர்கள், எல்லா விதத்திலும் ஆண்களை விட மட்டமானவர்கள் என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன், அது எனது நோக்கமுமல்ல.
\\"அந்நிலையையை குறைந்தபட்சமேனும் மாற்ற எங்கள் பங்களிப்பை கொடுக்க நினைக்கிறோம். ஆதரவு கொடுக்க உங்களால் முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. எதிர்கருத்துக்களை சொல்லி எங்களை சோர்வடைய செய்ய வேண்டாமே :'(\\ பெண்கள் பதிவுகளே போடக் கூடாது என்று நான் சொல்லவில்லை, ஆனால் அது ஆண்கள் போடும் பதிவுகளைப் போல பிரபலமாகவில்லையே, ஒருவேளை இட ஒதுக்கீடு செய்தால் அதிகம் பேரால் படிக்கப் படும் என்றெல்லாம் இல்லாத தீர்வுகளை தேடி பின்னர் ஏமாந்து சோர்வடையாதீர்கள் என்றுதான் சொல்ல வருகிறேன். ஜாக்கி சேகர், உண்மைத் தமிழன், கேபிள் ஷங்கர் போன்றோர் பதிவுகள் இட ஒதுக்கீடுகள் மூலம் பிரபலமாகவில்லை, அவர்கள் எழுத்தால் பிரபலமானார்கள். பேருந்தில் உடல் ஊனமுற்றோருக்கு இட ஒதுக்கீடு இருக்கும், காரணம் அவர்கள் நார்மலாக உள்ள மற்றவர்களை விட ஏதோ ஒரு விதத்தில் இயலாதவர்கள் என்பதே. என்றைக்கு இட ஒதுக்கீடு என்று போய் விட்டீர்களோ அன்றைக்கே நீங்கள் தாழ்ந்தவர்கள் [inferior] என்று ஒப்புக் கொண்டுவிட்டீர்கள் என்று அர்த்தம். பெண்கள் பதிவுகளை படிக்கக் கூடாது என்று நானாக வலிந்து நினைப்பதில்லை, படிக்க முயன்றிருக்கிறேன், போகப் போக [வடிவேலு மாதிரி...!!] ..........முடியல!! என்று இப்போது விட்டு விட்டேன். சமுத்ரா, செங்கோவி, பிலாசபி பிரபாகரன், எப்பூடி.... என்று என்ன கவர்ந்த மாதிரி பெண் பதிவர்கள் யாரும் என்னைக் கவரவில்லை. என்ன செய்ய? [சற்று முன்னர் என் வீட்டுக்காரி உங்க பதிலைப் படித்தாள், "ஆஹா அமீனா எவ்வளவு அழகாக தமிழில் எழுதுகிறார்கள்...!!" என்று சொல்லி விட்டுப் போனாள். You have got one more fan, வாழ்த்துக்கள்!!]
இதில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. நம் சகோதரிகளுக்கு அங்கீகாரம் கிடைத்தால் அதுவே போதும்.
வணக்கம் சொந்தமே!!மிக மிக பிற்திய பின்னூட்டம் தான்.ஆனாலும் நானும் தங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்.
தாங்கள் அடையாளம் காட்டிய அனேக பதிவர்களை நானும் அறிந்திருப்பதால் மிக்க மகிழ்ச்சி.குற்ற உணர்வில்லை.இதுவும் ஒரு பெண்ணடிமையின் பரிமாணம் நண்பா.போதுமான சிறப்பாக தீர்வுகளும் கருத்துகளும் மேலே தரப்பட்டுள்ளன.
புறக்கணித்ல் என்பது கடினமானது.புறக்கணிக்கப்படலின் வலி ஆழமானது.இதை தான் சொல்ல வந்தேன்.வாழ்த்துக்கள் இந்த அவசிய படைப்பிற்காய்.
Post a Comment