Friday, February 10, 2012

அசிங்கத்திற்கு ஆதரவளிக்கும் + அமைதியை கெடுக்கும் ஆலயங்கள்!

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஔவையாரின் முது மொழி. "ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். மனதில் அமைதியில்லாதவர்கள், மனதில் பல்வேறு குறைகள் உள்ளவர்கள் மன அமைதியை வேண்டி பிரார்த்தனை செய்யும் இடம், தங்களது உள்ளக் குமுறல்களை சொல்லி இறைவனுடன் உரையாடும் இடமாக இவ் ஆலயங்கள், மத நிறுவனங்கள் விளங்குகின்றன.
ஆனால் இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆலயங்களினால் அதிகாலை வேளையில் ஏற்படுத்தப்படும் அதீத ஒலிகளால் அதிகாலை அமைதிக்குப் பங்கம் ஏற்படுகின்றது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. ஊரில் நான்கு திசைகளுக்கும் ஒவ்வோர் ஆலயங்கள் இருக்கும். இந்தச் சூழலில் நான்கு திசைகளிலும் உள்ள கோயில்களுக்குள் எந்தக் கோயில் எழுப்பும் ஒலியின் சத்தம் அதிகமாக இருக்கும் என்பதில் போட்டி இருக்கும்!

திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் விஷேச நாட்கள் என்றால் போதும், அதி காலை நான்கு மணிக்கே ஒலி பெருக்கியில் பாடல் ஒலிக்க விடத் தொடங்கிவிடுவார்கள். வடக்குப் பக்கம் இருக்கிற அம்மன் கோயிலில் இருந்து ‘பிள்ளையார் சுழி போட்டு நல்லதை தொடங்கி விடு..’ என்று பாடல் ஒலிக்கத் தொடங்க, திடீரெனத் தூக்கம் கலைந்து எழும்பும் தெற்குத் திசைக்காரர், "உவன் எங்களை விடச் சத்தமா பாட்டுப் போடவோ? என்ற பாணியில் ‘உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்ட இடம்..’ என்று பாட்டுப் போடத் தொடங்குவார்.

என்னது, வடக்கிலையும் தெற்கிலையும் அதிகாலையிலே அதுவும் நாலு மணிக்கே பாட்டுப் போடத் தொடங்கி விட்டாங்களா என்ற கோபத்தில் இதர கிழக்கு, மேற்குத் திசைக் கோயில்கள் ஆளுக்கொரு பக்திப் பாட்டைப் போட்டு காலை ஏழு மணி வரை வானொலிகளில் இறையோசை ஒலிபரப்பாகுவது போல நடுவிலை உள்ள மக்களின்ரை காதைக் கிழித்து விடுவார்கள்.

இந்த வேதனையினை அனுபவிக்காத பதிவர்கள் கொஞ்சம் கற்பனையில் ஊகித்துப் பாருங்கள். நான்கு திசைகளினாலும் மிகுந்த சத்தமாக பாட்டுப் போடும் போது நடுவில் இருக்கும் மக்களின் நிலை என்னவாகும்? அதிகாலையிலே தூக்கம் கலைந்து விடும். அமைதியான சூழலில் தமது பாடங்களைப் படிக்கலாம் என எழும்பும் மாணவர்களின் மனனம் செய்யும் செயற்பாடுகள் பாதிப்படையும். ஏனைய வீட்டு விடயங்களில் மனதை ஒன்றிக்க முடியாதவாறு எரிச்சல் தான் வரும்.

இப்போதெல்லாம் ஊரில் இருக்கும் சிறிய கோயில் முதல் பெரிய கோயில்கள் வரை ஆளுக்கொரு ஒலி பெருக்கிகள் வைத்து ஆரோகண, அவரோகண, உச்சஸ்தாயியில் பாடல் போட்டு பாடாய்படுத்துறார்கள் தோழர்களே. தாங்க முடியவில்லை. நாங்களாகவே தூக்கம் கலைந்து எழுந்திருக்க வேண்டிய தேவை இருக்காது. அதிகாலை ஆனால் போதும், இந்த ஆலய ஸ்பீக்கர்களே எங்களைத் துயில் எழுப்பி விடும். இவை தான் இப்போது வட கிழக்கு மக்களின் அலாரம்.

1999ம் ஆண்டில் குடாநாட்டில் இருபத்தி நான்கு மணி நேர மின்சாரம் நடை முறைக்குக் கொண்டு வந்த போது ஆரம்பிக்கப்பட்டு எல்லா ஆலயங்களுக்கும் சடுதியாகத் தொற்றிய தொற்று நோய் தான் இந்த ஒலி பெருக்கியில் பாட்டுப் போட்டு அமைதியைக் குழப்பும் வேலை. அப்போது இந்துக் கலாசார அமைச்சராகவும், தன்னகத்தே ’வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகார, இந்து கலாச்சார, இந்து விவகார, சமுர்த்தி, சமூக சேவைகள் என ஒரு தொகை அமைச்சுப் பெயர்களை வைத்திருந்த டக்ளஸ் தேவானந்தா தான் ஊரில் உள்ள சிறிய கோயில் முதல் பெரிய கோயில்கள் வரை அனைத்திற்கும் ஒலி பெருக்கிகளை வழங்கிய கொடையாளி. இவரால் வழங்கப்பட்ட ஒலி பெருக்கிகள் எழுப்பும் அவல ஒலிகளை மன்னிக்கவும் பக்திப் பாடல்களை கேட்டுக் கேட்டே காதெல்லாம் கிழிகிறது என்பது உண்மை. இதனை உணரும் நிலையில் அமைசர் இருக்கிறாரா என்பது கேள்விக்குறி!

இற்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்னர் இவரின் இந்த நற்செயலைப் பாராட்டி பத்திரிகைகளில் சிறிய கோயில்கள் முதல், பெரிய கோயில்கள் வரை ஒலி பெருக்கி வழங்கியதற்காக நன்றி கூறுகிறோம் எனும் தலைப்பில் விளம்பரம் வேறை போட்டு நாறடித்திருக்கிறார்கள். காது கிழியிற கிழிவிற்கு இதெல்லாம் தேவையா? என்று அப்போது புலம்பியதுண்டு. பத்திரிகைகளில் இவற்றைச் சுட்டிக் காட்டினால் வீட்டிற்கு வாகனம் வரும் என்பதால் ஒதுங்கியே இருந்ததுண்டு (எனக்கு சிறப்புக் கட்டுரையாளர் விருது வழங்குவதற்காக ஆட்டோ அனுப்புவார்கள் ஹே ஹே) .

ஆனால் நாலு திசைகளிலிருந்தும் பாடல் ஒலிபரப்பி நொங்கு நொங்கு என்று காலையிலை நொங்கி விடுவார்கள் இந்த ஆலயங்களின் நிர்வாகத்தினர். அதுவும் வடிவேல் பாணியில் சொல்வதென்றால் ஒருத்தன் மட்டுமா அடிக்கிறான், ஒரு கூட்டமா எல்லே சேர்ந்து காதைக் கிழிக்கிறாங்கள் பாவிப் பய புள்ளகள்.

ஆலயங்களில் இறைவன் புகழ் பாடும் பாடல்களைப் போடுவதில் தவறில்லை. ஆனால் அந்தப் பாடல்களை ஏன் அதிக சத்தமாகப் போட்டு காலை வேளை அமைதியை/ தூக்கத்தைக் குழப்ப வேண்டும். இக் கருத்துப் பற்றி உங்கள் ஒவ்வோருவருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இருக்கும். அவற்றை அறிய ஆவல்.

இன்னோர் விடயம், ஆலயங்களிலை நீ முந்தி நான் முந்தி என முண்டியடித்துக் கொண்டு ஓடிப் போய் சாமி தூக்கும் இளைஞர்கள் பற்றியது. ஊரில் கோயில் திருவிழாவிற்கு தோரணம் கட்ட வாடா மச்சான் என்றால் ஓடி ஒளிக்கும் இளைஞர்கள், மச்சான் பின்னேரம் சிரமதானம் இருக்கு, வெளி வீதி துப்பரவாக்க வேணும் என்று கூறியதும் போனையும் ஓப் பண்ணி வைத்து விட்டு ஓடி ஒளிக்கும் இளைஞர்களிடம் மச்சான் சாமி தூக்குவம் வாறியாடா என்று கேட்டுப் பார்த்தால், குருவி வேகத்தில் ஓடி வருவார்கள்.

 சாமி தூக்க, சாமிக்கு குடை கொடி ஆலவட்டம் பிடிக்க என்றால் போட்டி போட்டுக் கொண்டு ஓடோடி வருவார்கள் நம் இளைஞர்கள். அதுவும் சும்மா இல்லை நண்பர்களே, வேட்டியைக் கட்டி நெஞ்சு தெரிய மேலங்கியும் இல்லாமல், பவுணோ பித்தளையோ என்று தெரியாத அளவிற்கு(உரசிப் பார்த்தால் தானே உண்மை தெரியும்) மொத்தச் செயின் ஒன்றை கழுத்தில் தொங்க விட்ட படி சாமி தூக்க வரும் இந்த அன்பர்களின் உள்ளமே பக்திப் பரவசத்தில் இருக்காது. சாமியை கைகளும்,தோள்களும் தாங்க, இவர்களின் கண் பார்வையோ அருகே பக்த வெள்ளத்தில் இருக்கும் பெண்களின் மேல் தான் இருக்கும். அட அட என்ன ஒரு பக்திப் பரவசம்.

இந்த மாதிரி இளைஞர்களின் செயற்பாடுகள் ஆலயத்திற்கும் அதன் பக்திச் செயற்பாடுகளுக்கும் நன்மையளிக்கின்றனவா? இல்லையே! ஆலயங்களில் ஐயர்மார் படுத்தும் பாடிருக்கே, ஒரு சில கோயில்களில் ஐயர் தான் பெண்களுக்கும் நெற்றியில் பொட்டு வைத்து விடுவார். நெற்றியில் பொட்டு வைக்கும் சந்தர்ப்பத்தில் காலால் உரசி அடிவாங்கிய ஐயர்களும் உண்டு. நெற்றியில் பொட்டு வைக்கும் சாக்கில் அதிகளவான ஐயர்கள் பெண்களின் மேலங்கியினூடாக ஏதாச்சும் தெரிகிறதா எனப் பார்ப்பதைத் தான் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள்.
கடந்த வருட நடுப் பகுதியில் ஊரில் இருக்கும் போது, அத்தியடியில் உரையாடி விட்டு நண்பர்களுடன் பூங்கனிச் சோலைப் பக்கம் போனேன். அங்கே இரு காதலன் காதலி உரையாடிக் கொண்டிருந்தார்கள். காதலி காதலனைப் பார்த்துச் சொல்லுறாங்க.
காதலி: இருளப் போகுதடா செல்லம், இனி இங்கே நிற்பது Safety இல்லைடா செல்லம்.
காதலன்: இப்போ கோயிலிலை ஆட்கள் இருக்க மாட்டாங்கள். நாங்கள் வீரமாகாளி அம்மன் கோயிலுக்குள் போய் ஒதுங்குவோமா?:-)))

டிசூக்கி: பதிவின் தலைப்பில் உள்ள கெடுக்கும் எனும் சொல் ஆபாச சொல் அல்ல. ஈழத்தினைப் பொறுத்த வரை கெடுத்தல், என்பது ஒன்று கெட்டுப் போவதனை, அல்லது கெட்டு குட்டிச் சுவராகுவதனை விளிக்க இந்தச் சொல்லை பயன்படுத்துவார்கள். 

86 Comments:

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

ஏதோ நம்ம ஊர் கோயில்ல இருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கிறனால நமக்கு 7மணி வரை தூங்குவதில் எந்தப் ப்ராப்ளமும் இல்லை. ஹி ஹி.

ஆனால் ஒருமுறை யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது இந்த இம்சையை அனுபவித்தேன். அவ்வ்வ்வ்

Riyas said...
Best Blogger Tips

//ஆலயங்களில் இறைவன் புகழ் பாடும் பாடல்களைப் போடுவதில் தவறில்லை. ஆனால் அந்தப் பாடல்களை ஏன் அதிக சத்தமாகப் போட்டு காலை வேளை அமைதியை/ தூக்கத்தைக் குழப்ப வேண்டும். இக் கருத்துப் பற்றி உங்கள் ஒவ்வோருவருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் இருக்கும். அவற்றை அறிய ஆவல்//

இங்கே கோயில்களில் எழுப்பபடும் சத்தம் குறித்து எனக்கு அனுபவமில்லை ஆனால் கொழும்பில் இருக்கும் போது,, சிங்கள விகாரைகளில் இடப்படும் சத்தத்தால் தூக்கம் கலைந்து கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டியதுண்டு.. தனிமையிலதான்!

Riyas said...
Best Blogger Tips

//டிசூக்கி: பதிவின் தலைப்பில் உள்ள கெடுக்கும் எனும் சொல் ஆபாச சொல் அல்ல. ஈழத்தினைப் பொறுத்த வரை கெடுத்தல், என்பது ஒன்று கெட்டுப் போவதனை, அல்லது கெட்டு குட்டிச் சுவராகுவதனை விளிக்க இந்தச் சொல்லை பயன்படுத்துவார்கள்.//

அவ்வ்வ்வ் ரொமபவே பாதிக்கப்பட்டிருக்கிங்க போல..

நிரூபன் said...
Best Blogger Tips

@Riyas

அவ்வ்வ்வ் ரொமபவே பாதிக்கப்பட்டிருக்கிங்க போல..
//

ஹே ஹே..
இல்ல பாஸ்
டைம்மை வேஸ்ட் ஆக்கிட்டாங்க
அதான் கடுப்பு!

உள்குத்து, ஊமக் குத்து நேர் குத்து எழுதும் பலருக்கு நேரே விவாதிக்கும் போது கருத்துக்களைச் சொல்ல தைரியம் இல்லை!

இதனால் என் நேரம் தான் வேஸ்ட்.

அது தான் விளக்கமா கொடுத்தால் இனிமே யாரும் அப்படி பண்ண மாட்டாங்களே என எழுதினேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹாலிவுட்ரசிகன்
ஏதோ நம்ம ஊர் கோயில்ல இருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கிறனால நமக்கு 7மணி வரை தூங்குவதில் எந்தப் ப்ராப்ளமும் இல்லை. ஹி ஹி.

ஆனால் ஒருமுறை யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது இந்த இம்சையை அனுபவித்தேன். அவ்வ்வ்வ்//

நீங்க கொடுத்து வைச்ச ஆள் மாப்பு!
நம்ம பக்கம் எல்லாம் அதிகாலை நாலு மணிக்கு மேல தூங்கவே முடியாது.
அவ்வ்வ்வ்வ்

சனிக்கிழமை என்றாலும், சரி ஞாயிறு என்றாலும் சரி
திருவெம்பாவை, கந்தசஷ்டி போன்ற நிகழ்வுகள் வந்தால் கொன்னுபுடுவாங்க

நிரூபன் said...
Best Blogger Tips

@Riyas

இங்கே கோயில்களில் எழுப்பபடும் சத்தம் குறித்து எனக்கு அனுபவமில்லை ஆனால் கொழும்பில் இருக்கும் போது,, சிங்கள விகாரைகளில் இடப்படும் சத்தத்தால் தூக்கம் கலைந்து கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டியதுண்டு.. தனிமையிலதான்!
//

அடப் பாவிங்களா? இப்படிப் செஞ்சுபுட்டாங்களே! ஒருவாட்டி வடக்கு இல்லேன்னா கிழக்கு மாகாணத்திற்கு விசிட் அடியுங்க பாஸ்.
அப்புறமா திட்டவே மாட்டீங்க.
கொல வெறியோடு கத்தியை தூக்கிட்டு கோயில் பக்கமா ஓடுவீங்க.
அவ்வ்வ்வ்

Riyas said...
Best Blogger Tips

//ஒருவாட்டி வடக்கு இல்லேன்னா கிழக்கு மாகாணத்திற்கு விசிட் அடியுங்க பாஸ்.//

ஆமாம் பாஸ்! நான் அந்தப்பக்கத்துக்கு வந்ததே இல்லை, வர வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை நிச்சயம் ஓர் நாள் யாழ்ப்பாம் வருவேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Riyas

ஆமாம் பாஸ்! நான் அந்தப்பக்கத்துக்கு வந்ததே இல்லை, வர வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை நிச்சயம் ஓர் நாள் யாழ்ப்பாம் வருவேன்.
//

சொந்த செலவில சூனியம் வைக்க ரெடியாகிட்டீங்களோ!
அவ்
வரும் போது earplug கொண்டு வாங்க பாஸ்.
இல்லேன்னா பஞ்சு கொண்டு வாங்க.

urumal said...
Best Blogger Tips

நிச்சயம் உன்மையான பதிவு தான் ஆலயம் என்ற பெயரில் வர்த்தக நிறுவனமாக இவை செயற்பட்டு வருபது வருத்த்திற்கு உரியது.
இன்று நாவலர் இருந்திருந்தால் இதைத்தான் கூறியிருப்பார்

தனிமரம் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் சார்.
வெள்ளிக்கிழமையிலே அம்மாவின் கோயிலே என்று பாடிக்கொண்டு வேலைக்குப் போவம் என்றால் நீங்க விடும்பாடாத் தெரியல!ஹீ
/ஆலயங்களில் இறைவன் புகழ் பாடும் பாடல்களைப் போடுவதில் தவறில்லை. ஆனால் அந்தப் பாடல்களை ஏன் அதிக சத்தமாகப் போட்டு காலை வேளை அமைதியை/ தூக்கத்தைக் குழப்ப வேண்டும். 
// இந்த பாடல்களை சத்தமாக ஒலிக்கவிடுவதை தவிர்க்கவேண்டியது அறங்காவல் சபையும் அதன் நிறுவாகிகளும் தான் ஏனோ அவர்களுக்கு  ஒழுங்கா புரியுது இல்லை அதற்கு அன்பளிப்புக் கொடுத்த அமைச்சர் என்ன செய்யமுடியும்.
அதே போல தலைநகரில் போயா தினங்களில் அதிகமாக புத்தவிகாரையில் இருந்தும் தர்ம உபதேசம்(பண) செய்யும் ஒலிபெருக்கி சத்தம் அதிகமாக வரும் இதை நானும் அனுபவித்திருக்கின்றேன் இதை தவிர்க்க வேண்டியது அறங்காவல் சபை என்ற அமைப்புத்தான் அவர்களுக்கு இதை பெட்டிசமாக(முறைப்பாடாக தெரிவித்தால் மாற்றம் வரலாம் என நான் நினைக்கின்றேன்!

தனிமரம் said...
Best Blogger Tips

! ஆலயங்களில் ஐயர்மார் படுத்தும் பாடிருக்கே, ஒரு சில கோயில்களில் ஐயர் தான் பெண்களுக்கும் நெற்றியில் பொட்டு வைத்து விடுவார். நெற்றியில் பொட்டு வைக்கும் சந்தர்ப்பத்தில் காலால் உரசி அடிவாங்கிய ஐயர்களும் உண்டு. நெற்றியில் பொட்டு வைக்கும் சாக்கில் அதிகளவான ஐயர்கள் பெண்களின் மேலங்கியினூடாக ஏதாச்சும் தெரிகிறதா எனப் பார்ப்பதைத் தான் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள்.// 

இந்த ஐயர்களிடம் வீபூதியை/பொட்டை வைத்துவிடும் படி இடையில் தான் இந்தப்பழக்கத்தை நம்மவர்கள் புகுத்தியதன் வெளிப்பாட்டால் தான் இப்படியான் அசிங்கள் ஐயர்மார் செய்ய காரணமாகின்றது கையில் வேண்டிப்பூச வேண்டிய கோயில் பிரசாதங்களை இப்படி வாங்கினால் கை ஊத்தையாகும் என்று என்னும் மாந்தர்களின் நிலைகெட்ட செயலில்தான் ஆன்மீக கூடம் காமக்களியாட்டம் ஆகின்றது இந்த விடயத்தை தெளிவு படுத்தி ஆன்மிகஉரை நிகழ்த்துவோரை இப்போது யார்தான் ஆதரிக்கின்றார்கள் எங்கும் சுருட்டல் தானே தூயவிளக்கங்களைப் பொழியும் பலரை சிலர் செய்யும் செயல்களால் அடையாளம் கானமுடியாத பக்தர்கள் விடும் தவறு அதிகம் நிரூபன் சார். இன்னும் சிலவிடயங்களுடன் சிறிது நேரத்தில் வாருவேன்.

தனிமரம் said...
Best Blogger Tips

இன்னோர் விடயம், ஆலயங்களிலை நீ முந்தி நான் முந்தி என முண்டியடித்துக் கொண்டு ஓடிப் போய் சாமி தூக்கும் இளைஞர்கள் பற்றியது. ஊரில் கோயில் திருவிழாவிற்கு தோரணம் கட்ட வாடா மச்சான் என்றால் ஓடி ஒளிக்கும் இளைஞர்கள், மச்சான் பின்னேரம் சிரமதானம் இருக்கு, வெளி வீதி துப்பரவாக்க வேணும் என்று கூறியதும் போனையும் ஓப் பண்ணி வைத்து விட்டு ஓடி ஒளிக்கும் இளைஞர்களிடம் மச்சான் சாமி தூக்குவம் வாறியாடா என்று கேட்டுப் பார்த்தால், குருவி வேகத்தில் ஓடி வருவார்கள்.// நிரூபன் சார் அது ஒரு காலத்தில் இன்று கூப்பிட்டுப் பாருங்கள் அடுத்த தெருவில் நல்ல நடிகர் படம் போகுது கோயிலாவது பக்தியாவது என்று ஓடும் சமுகம் ஆகிவிட்டது.

தனிமரம் said...
Best Blogger Tips

சாமியை கைகளும்,தோள்களும் தாங்க, இவர்களின் கண் பார்வையோ அருகே பக்த வெள்ளத்தில் இருக்கும் பெண்களின் மேல் தான் இருக்கும். அட அட என்ன ஒரு பக்திப் பரவசம்.// இதை நீங்கள் ஆத்திகவாதி இல்லை என்றாலும் நாத்திகவாதியாக இருந்த இன்னொரு கோணத்தில் பாருங்கள் அடைப்பட்டுக்கிடக்கும் நம் சமுக அமைப்பில் நமக்குப் பிடித்தவர்களை கண்டுபிடிக்கவும் பின் கைபிடிக்கவும் இசைவாக இருக்க அன்நாட்களில் இப்படியான பொதுத்தளத்தில் தானே அதிகம் ஒன்றுகூடமுடிந்தது இன்று மாறிப்போனாலும் (நவநாகரிகம்) அன்று இருந்த அமைதியான குதுகலமான அந்த நிலை  இன்று இல்லை. இந்த பக்தி என்பதும் ஒருவரை இணைக்கும் செயல்தானே சார் ?? 
இன்று பொங்கள் உங்க வீட்டில் கிடைக்கும் என்பதால் கோயில் மணியை அடிக்கப் போய் விட்டு  வந்துவிடுகின்றேன்(இது உள்குத்து இல்லை ராசா ஹீ ஹீ)

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!இன்று அருமையான ஓர் தலைப்பை தேர்வு செய்திருக்கிறீர்கள்.பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள்(உள்குத்து)ஏலவே வெளிவர ஆரம்பித்திருக்கின்றன!போகப் போக இன்னுமின்னும் எதிர்பார்க்கலாம்!(நானும் சாமி காவினனான் தான்,ஆனா கழுத்தில வடம் எல்லாம் இருக்கேல்ல!)கோவில்களில் காண்டா மணி அடிக்கப்படுவது,ஊர் மக்கள் இறைவனை அடிக்கடி நினைக்க வைப்பதற்கும்,பூசை நேரங்களை அறிவிப்பதற்குமே!ஆனால் குழாய்(ஸ்பீக்கர்)பூட்டி அதிகாலையில் தூக்கம் கெடுப்பது??????கடந்த ஆண்டில் கொழும்பில் கூட மசூதிகளில் பாங்கு ஒலிப்பதற்கு(ஸ்பீக்கரில்)தடை விதித்தார்கள்!நேரம் கெட்ட நேரத்தில் ஒலிபெருக்கியை அலற விடுவதற்கு தடை விதிக்கலாம் தான்!யார்??????????

K said...
Best Blogger Tips

மச்சி, நிரூ இப்பதிவுக்கு எனது கண்டனங்கள்!

K said...
Best Blogger Tips

மச்சி, நம் அனைவரையும் இறைவன் தானே படைத்தார்! இந்த பூமியில் நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எத்தனையோ அற்புதங்களை இறைவன் படைத்திருக்கிறார்! அப்படிப்பட்ட இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, சத்தமாக பாட்டுப் போடுவது எப்படித் தவறாகும்?

K said...
Best Blogger Tips

ஆனால் இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் உள்ள ஆலயங்களினால் அதிகாலை வேளையில் ஏற்படுத்தப்படும் அதீத ஒலிகளால் அதிகாலை அமைதிக்குப் பங்கம் ஏற்படுகின்றது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.//////

இல்லை எனக்கு மாற்றுக்கருத்து இருக்கு! அதிகாலையோ, அந்திமாலையோ, பகலோ, இரவோ அனைத்துமே இறைவன் எமக்குத் தந்த அருட்கொடைகளே!

இறவனுக்குச் சொந்தமான அதிகாலையில் தான் நாம் தூங்குகிறோம் என்பதை மறக்க வேண்டாம்! ஆகவே அதிகாலையில் கோவிலில் பாட்டுப் போடுவதில் தவறே இல்லை!

K said...
Best Blogger Tips

ஊரில் நான்கு திசைகளுக்கும் ஒவ்வோர் ஆலயங்கள் இருக்கும். இந்தச் சூழலில் நான்கு திசைகளிலும் உள்ள கோயில்களுக்குள் எந்தக் கோயில் எழுப்பும் ஒலியின் சத்தம் அதிகமாக இருக்கும் என்பதில் போட்டி இருக்கும்!//////

இதில் என்ன தவறு இருக்கிறது? இறைவன் தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்! அது போக “ ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே, உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே” என்று ஒரு தேவாரம் இருக்கும்!

ஆகவே நாலு பக்கம் இருந்து ஒலிவந்தாலும், அந்த நாலு பக்கம் இருந்தும் இறைவன் வருகிறார் என்றுதானே அர்த்தம்! நம்மை நாடி வரும் இறைவனை எதற்கு தடுக்கணும்?

K said...
Best Blogger Tips

திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் விஷேச நாட்கள் என்றால் போதும், அதி காலை நான்கு மணிக்கே ஒலி பெருக்கியில் பாடல் ஒலிக்க விடத் தொடங்கிவிடுவார்கள். வடக்குப் பக்கம் இருக்கிற அம்மன் கோயிலில் இருந்து ‘பிள்ளையார் சுழி போட்டு நல்லதை தொடங்கி விடு..’ என்று பாடல் ஒலிக்கத் தொடங்க, திடீரெனத் தூக்கம் கலைந்து எழும்பும் தெற்குத் திசைக்காரர், "உவன் எங்களை விடச் சத்தமா பாட்டுப் போடவோ? என்ற பாணியில் ‘உச்சிப் பிள்ளையார் கோயில் கொண்ட இடம்..’ என்று பாட்டுப் போடத் தொடங்குவார்.////////

இதில் என்ன தவறு இருக்கிறது? இறைவனுக்குச் சேவை செய்வதில் போட்டி இருப்பது நல்லதுதானே! அவர்கள் கொள்ளை அடிப்பதிலா போட்டி போடுகிறார்கள்? இல்லையே?

ஒரு வீட்டில் அம்மா அப்பாவுக்கு, உதவிசெய்வதில், அன்பு செலுத்துவதில் பிள்ளைகள் போட்டி போடுவது தப்பா?

K said...
Best Blogger Tips

என்னது, வடக்கிலையும் தெற்கிலையும் அதிகாலையிலே அதுவும் நாலு மணிக்கே பாட்டுப் போடத் தொடங்கி விட்டாங்களா என்ற கோபத்தில் இதர கிழக்கு, மேற்குத் திசைக் கோயில்கள் ஆளுக்கொரு பக்திப் பாட்டைப் போட்டு காலை ஏழு மணி வரை வானொலிகளில் இறையோசை ஒலிபரப்பாகுவது போல நடுவிலை உள்ள மக்களின்ரை காதைக் கிழித்து விடுவார்கள்./////

இக்கருத்துக்கு எனது வன்மையன கண்டனங்கள்! மக்களின் காதைக் கூட கடவுள் தானே படைத்தார்! உலகில் காது கேளாமல் எவ்வளவொ பேர் வாழ்கிறார்கள்!

எனவே எமக்கு காது கொடுத்த இறைவனுக்காக எமது செவிப்பறைகளைக் கிழித்துக் கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது?

ஏங்க, சாமிக்கு முடிய கொடுக்குறீங்க! செவி ய கொடுத்தா என்ன?

தனிமரம் said...
Best Blogger Tips

ஆலயங்களில் ஐயர்மார் படுத்தும் பாடிருக்கே, ஒரு சில கோயில்களில் ஐயர் தான் // இங்கே ஐயர் என்றால் யார் ?ஐயர் என்ற போர்வையில் இருக்கும் அரக்கர் ஆர் ?என்று இன்று அறிவதற்கு நாம் தயார் இல்லை. இதைக்கேட்டால் சாதியம் பேசுவார்கள் தூய வேதாகம் ஒதூம் வேதவிற்பனர்களை உருவாக்கி விடவேண்டிய சமுகம் அறநிலைத்துறை அமைச்சகம் ஆட்டோ வாங்கிக் கொடுக்கும்  இதை எடுத்துரைக்க வேண்டி ஊடக ஆசிரியர்கள் அவருக்கு அன்னக்காவடி தூக்குவார்கள் .முனால் அமைச்சர் ஒருவர் வேதாகம ஆசிரியர்களை (குருக்கல் ,சிகாமணி, சிரோன்மணி) உருவாக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட முன்வந்தார். பின்னால் வந்தவர் அந்த பையிலை கிடப்பில் போட்டார் இனி வரும் காலத்தில் இந்தியாவில் இருந்து குருக்கள் மார்களை இறக்குமதி செய்து குடமுழக்கு செய்யும் நிலை வரும் ராசா அப்போது சிலர் பதிவு போடுவார்கள் இப்படி ஏன் நடக்குது இந்த சமுகத்தில் உல்லாச விசாவில் வந்து சேவை புரிகின்றார் என்று என்னத் சொல்ல??

K said...
Best Blogger Tips

இந்த வேதனையினை அனுபவிக்காத பதிவர்கள் கொஞ்சம் கற்பனையில் ஊகித்துப் பாருங்கள். நான்கு திசைகளினாலும் மிகுந்த சத்தமாக பாட்டுப் போடும் போது நடுவில் இருக்கும் மக்களின் நிலை என்னவாகும்? அதிகாலையிலே தூக்கம் கலைந்து விடும். ///////

கலையட்டுமே! கலைந்தால் என்ன? இறைவனின் அனுக்கிரகம் இல்லாவிட்டால் உங்களால் நிம்மதியாகத் தூங்கியிருக்க முடியுமா?

உலகில் அவனவன் ராத்திரியில் தூக்கம் இல்லாமல், மன நிம்மதி இல்லாமல் அலையுறான்! நீங்கள் இறைவனின் அருளினால் தூங்குகிறீர்கள்!

பின்னர் அதிகாலையில் தூங்க முடியவில்லை என்று புலம்புகிறீர்கள்! இறைவன் உங்களுக்குப் பரிசாகத் தந்த தூக்கத்தில், ஒரு சிறுபகுதியை அந்த இறைவனுக்காவே விட்டுத்தந்தால், என்ன குறைந்தா போய்விடும்?

நீங்கள் ஆசையாக காதலிக்கும் ஒரு பெண், அதிகாலை 4 மணிக்கு ஃப்ளைட்டில் ஏறி வெளிநாட்டுக்குப் போகிறாள் என்று வைத்துக்கொள்வோம்! அப்போது நீங்கள் அதிகாலையில் எழுந்து சென்று ஏர்போர்ட் போக மாட்டீர்களா?

அதென்ன, காதலிக்காக தூக்கம் கலைந்தால், அதை நார்மலாக எடுக்கிறீர்கள்! இறைவனுக்காக தூக்கம் கலைந்தால், கூச்சல் போடுகிறீர்கள்!

K said...
Best Blogger Tips

அமைதியான சூழலில் தமது பாடங்களைப் படிக்கலாம் என எழும்பும் மாணவர்களின் மனனம் செய்யும் செயற்பாடுகள் பாதிப்படையும். ஏனைய வீட்டு விடயங்களில் மனதை ஒன்றிக்க முடியாதவாறு எரிச்சல் தான் வரும்.///////

என்ன கொடுமை இது? படிப்பு படிப்பு என்கிறீர்களே? அந்தப் படிப்பை உருவாக்கியது யார்? கடவுள் தானே?

இறைவனைப் படிப்பதை விடவுமா இந்த உலகில் பெரிய படிப்பொன்று இருந்துவிடப் போகிறது?

இப்போதெல்லாம் ஊரில் இருக்கும் சிறிய கோயில் முதல் பெரிய கோயில்கள் வரை ஆளுக்கொரு ஒலி பெருக்கிகள் வைத்து ஆரோகண, அவரோகண, உச்சஸ்தாயியில் பாடல் போட்டு பாடாய்படுத்துறார்கள் தோழர்களே./////

இதில் என்ன தப்பு இருக்கு? இசையிலே இறவனைக் காண்போம் என்று சொல்வதில்லையா? இறைவனே இசைவடிவினன் தானே! ஆரோகணமும் அவனே, அவரோகணமும் அவனே!
ஆக, இறைவனை இசைகொண்டு பாடுவது, அவனுக்கு நாம் செய்யும் சேவையாகும்!

இதில் என்ன தப்பு உண்டு?

K said...
Best Blogger Tips

நாங்களாகவே தூக்கம் கலைந்து எழுந்திருக்க வேண்டிய தேவை இருக்காது. அதிகாலை ஆனால் போதும், இந்த ஆலய ஸ்பீக்கர்களே எங்களைத் துயில் எழுப்பி விடும். இவை தான் இப்போது வட கிழக்கு மக்களின் அலாரம்.////////

நாட்டில் உல்ள ஒவ்வொரு மனிதனும் தூங்கிக்கொண்டிருந்தால், நாடே தூங்கிவிடு்ம்! நகரங்களில் பாருங்கள்! அதிகாலை 4 மணி 5 மணிக்கெல்லாம் எழுந்து சுறுசுறுப்பாக வேலைக்குப் போவார்கள்! உழைப்பார்கள்! அதனால் தான் நகரம் முன்னேறுகிறது

எங்கு இறைவனுக்காக தியாகங்கள் செய்யப் படுகிறதோ, அங்கு மகிழ்ச்சியும், அபிவிருத்தியும் பொங்கும்!

நீங்கள் கிராமத்தில் தூங்கிக்கொண்டு இருப்பதால் தான் கிராமங்கள் விடிவில்லாமல் உள்ளன!

K said...
Best Blogger Tips

மொத்தத்தில் இப்பதிவு, இறைவனைப் புரிந்து கொள்ளாமல், கொஞ்சம் கூட நன்ரியுணர்வு இல்லாமல் எழுதப்பட்ட ஒரு மோசமான பதிவாகும்! இப்பதிவுக்கு எனது கண்டனங்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

காதலி: இருளப் போகுதடா செல்லம், இனி இங்கே நிற்பது Safety இல்லைடா செல்லம்.
காதலன்: இப்போ கோயிலிலை ஆட்கள் இருக்க மாட்டாங்கள். நாங்கள் வீரமாகாளி அம்மன் கோயிலுக்குள் போய் ஒதுங்குவோமா?:-)))//

நிரூபன் சார் இந்த பகுதியில் நான் உங்களுடன் முரன்படுகின்றேன். பாதுகாப்பு இல்லை என்பது நீங்கள் அறியாதது அல்ல அந்தக்காதலன் கோணத்தில் இருந்து பாருங்கள் தப்புச் செய்யும் எண்ணத்திலா கோயிலுக்குல் ஒதுங்குவோம் என்றான் இல்லை  அங்கு போனால் இன்னும் காதலியுடன் தனிமையில் பேசலாம் என்று எண்ணுவான் என்பதை ஏன் உணரமுடியவில்லை ?வெளியில் இருந்து காமலைக்கண்ணோடு பார்த்தால் சிலையில் இருப்பவளும் சிங்காரி மாதிரித் தெரிவாள் என்று பெரியவா சொல்லுவா !

தனிமரம் said...
Best Blogger Tips

நிரூபன் சார் (இது கிண்டல் இல்லை நக்கல் இல்லை)ஒரு விடயம் இந்தக் கோயில் இருக்கும் இடம்.யாழில் என்றால்  வீரமாகாளி அம்மன் கோயிலுக்குள் போய் ஒதுங்குவோமா?:-)))////
இந்தக் கோயில் இருக்கும் புனிதமான சூழல் பற்றி மற்றவர்கள் எந்தளவு அறிந்தார்களோ நான் அறியேன். ஆனால் நான் பார்த்தது அந்திமாலையில் தான் அதிகமாக அம்மனின் பெருமை ஆலய தலப்புராணம் தெரியாதவர்கள்  சிலர் சிற்றிபத்திற்கு ஆசைப்பட்டு கீர்த்திமிக்க கோயிலின் புனித இடத்தை சீரலிக்கின்றார்கள் என்று விசமத்தனமாக ஒரு இணையம் செய்தி போடும் அதையே நீங்களும் உள்வாங்கி இப்படி எழுதலாமா??? கோயிலின் புனிதம் தெரியாதவனுக்கு அதன் அமைவிடம் திருவிழாக்காலக் காட்சிகளை படம் பிடித்தும், பிரதம சிவாச்சாரிகளின் சிறப்புரைகளை மக்களுக்கு கொடுத்தும் அங்கு நடக்கும் பூசைகள் சாதாரநாளில் ஆலயம் சிறப்பாக நடக்க முடியாத நிதிநிலை பற்றிப் பேச வேண்டியவர் தங்கள் ஊடகங்கள் மூலம் கேவலமாக அம்மன் கோயிலில் அன்புத்தழுவல் அடித்துவிரட்டினார்கள் அயலில் இருந்தோர் என்று செய்தி போடும் ஊடகப் பொறுக்கிகளை நீங்களும் வழிமொழிகின்றீர்களா???(மன்னிக்கவும் அநாகரிக வார்த்தையை அவையில் உரைபதற்கு இது நீங்கள் கோபப் பட்டால் தனிமரம் ஒன்றும் செய்யமுடியாது ) பொதுத்தளத்தில் ஆன்மீகப் பதிவைப் படிப்போருக்கு ஆலயத்தை சீர்செய்ய வழி சொல்லாமல் சீரலிக்க  (நிரூபன் அல்ல)வழி சொல்வோரை சீற்றமாக சபிப்பதில் தப்பில்லை தம்பிரானே அவன் எம்பிரான். ( நான் எப்போதும் மதவாதிதான் ஆனால் மதத்தை பின்பற்று என்று தினிக்கவில்லை  ராசா) கருத்து பிழை எனின் நீக்லிவிடுங்கள் .

ஒலி அதிகமாக எழுப்புவது தடைசெய்யப்படனும் தமிழக்துக் கோயில்களில் அதிகாலையில் ஒலிபெருக்கி ஓங்கி ஒலித்துக் கேட்டதில்லை .இந்த செயல் பாடு அதிகம் ஈழத்தில் தான் .மலேசியா,சிங்கப்பூர் ,புத்தவிகாரை அதிகம் இருக்கும் தாய்லாந்து தேசங்களிலும் இப்படி ஒலிபெருக்கி ஓங்கி ஒலித்து நாதம் இசைத்ததை நானும் கேட்கவில்லை இதை உரியவர்கள் கவனம் எடுத்தால் அசிங்கம் இல்லைத்தான் ஆர் சொல்வது ஆளுக்கொரு கோயில் வீதிக் கொரு சங்கம் போங்க சார் வேலை இல்லாதவன் சீர்திருத்த வந்திட்டான் என்று சீற்றம் ஆக்குவார்கள் எங்களை!

தனிமரம் said...
Best Blogger Tips

மொத்தத்தில் இப்பதிவு, இறைவனைப் புரிந்து கொள்ளாமல், கொஞ்சம் கூட நன்ரியுணர்வு இல்லாமல் எழுதப்பட்ட ஒரு மோசமான பதிவாகும்! இப்பதிவுக்கு எனது கண்டனங்கள்! 

// மணி சார் நிரூபன் சொல்லுறார் 
நாதத்துடன் பள்ளிகொண்டோரை சுப்ரபாதத்துடன் துயில் எழுப்புங்கள் தப்பில்லை துயில் கொள்வோர் துள்ளி ஏழுப்பும் கொலைவெறி வேண்டாம் என்று !ஹீ ஹீ (மணியோடு சபையில் இருந்து சாப்பிட்டுப்பலநாள் ஆச்சு )

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...
Best Blogger Tips

//ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

மொத்தத்தில் இப்பதிவு, இறைவனைப் புரிந்து கொள்ளாமல், கொஞ்சம் கூட நன்ரியுணர்வு இல்லாமல் எழுதப்பட்ட ஒரு மோசமான பதிவாகும்! இப்பதிவுக்கு எனது கண்டனங்கள்!//

நிரூபன், இவரைப் பிடிச்சு ஒரு சாக்கிலே கட்டிக்கொண்டுபோய், பூங்கனிச்சோலை ஊஞ்சலில் வைத்துவிடுங்கோ.. ஒருமாதம் அங்கேயே இருக்கட்டும்.. கோயில் மணியோசையைக் கடவுள் படைத்த காதுகளால் கேட்கட்டும்..

கடவுள் படைத்த உடம்பை கடவுளுக்காக ஒரு மாதம் அர்ப்பணிப்பதில் ஒன்றுமே குறைந்திடப்போறதில்லையே..

உடனே செய்யுங்க நிரூபன்..:)

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...
Best Blogger Tips

எல்லாம் இக்கரைக்கு அக்கரைப்பச்சை...

அதிகாலையில் துயிலெழுதல் நல்லதுதானே... யோகா செய்யலாம், தியானம் செய்யலாம்... இன்னும் என்னென்னமோ செய்யலாம்...

இல்லை எனக்குப் பிடிக்கேல்லை உது வேண்டாம் எனில்..

சவுண்ட் புரூஃப் கண்ணாடிகள் வாங்கீ வீட்டுக்குப் போடலாம்.. டபிள் கிளாஸிங் செய்யலாம்...இன்னும் ஏதும் ஆலோசனை வேணுமோ?:).

நான் அங்கிருந்த கொஞ்சக்காலத்தில் மணியோசை மட்டுமே இருந்துது, காலைப்பாட்டுக்கள் இல்லை, ஆனா திருவிளாக் காலத்தில் மட்டும் பாட்டுக்கள் போகும், அது இப்பவும் நினைக்க இனிமையைத்தான் கொடுக்கிறது எரிச்சல் வரவில்லை.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...
Best Blogger Tips

//பூங்கனிச் சோலைப் பக்கம் போனேன். அங்கே இரு காதலன் காதலி உரையாடிக் கொண்டிருந்தார்கள். காதலி காதலனைப் பார்த்துச் சொல்லுறாங்க.
காதலி: இருளப் போகுதடா செல்லம், இனி இங்கே நிற்பது Safety இல்லைடா செல்லம்.
காதலன்: இப்போ கோயிலிலை ஆட்கள் இருக்க மாட்டாங்கள். நாங்கள் வீரமாகாளி அம்மன் கோயிலுக்குள் போய் ஒதுங்குவோமா?:-)))//

நிரூபன் காதலியோடு போகாமையினாலேயே இப்பூடிப் புகைக்குது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

அதுசரி அந்தி மங்கும் வேளையில் பார்க்கிலே காதல் ஜோடிகள்தான் இருப்பார்கள், அங்கே உங்களுக்கு என்ன வேலை? ஏன் அந்த நேரம் போனனீங்க? ஆராவது ஜோடிகள் அகப்படுவார்கள் என்றுதானே? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

உந்தக் கோயில் மணியோசையை நிறுத்தும் ஐடியாவை விட்டுவிட்டு, காதலர்கள் சுகந்திரமாக உலாவர ஏதும் ஐடியாவை முன்வைக்கலாம்... வெளிநாட்டில் பக்கத்து வீட்டில் ஆரைக் கூட்டி வந்தாலும் யாரும் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை, ஆனா எமது நாட்டில்.. முகம் பார்த்துக் கதைக்கவே எவ்வளவு பதட்டம்... காதலிக்கக்கூடாது, ஆனா காதலில் இறங்கி விட்டால் காதலர்கள் பாவம்தானே... கதைப்பதற்கும் ஒரு பாதுகாப்பான இடம் தேவைதானே? எல்லோரிடமும் இன்ரநெட், ரெலிபோன் வசதி இருக்காதெல்லோ...

மாத்தி யோசியுங்க... எதுக்கும் அந்த ”சாக்கில்” கட்டுவதை கவனத்தில் கொள்ளுங்க... நான் இங்கில்லை, விண்வெளி ஆராட்சிக்குப் போய்விட்டேன், என்னை ஆரும் கொலவெறியோடு தேடவேண்டாம்:).

நிரூபன் said...
Best Blogger Tips

@Nivarsan Jeganathan

நிச்சயம் உன்மையான பதிவு தான் ஆலயம் என்ற பெயரில் வர்த்தக நிறுவனமாக இவை செயற்பட்டு வருபது வருத்த்திற்கு உரியது.
இன்று நாவலர் இருந்திருந்தால் இதைத்தான் கூறியிருப்பார்
//

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பா,
அநேக ஆலய அறங்காவலர் சபைகள் இன்று வியாபார நிலையங்களாகி விட்டன என்பது உண்மையே.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
// இந்த பாடல்களை சத்தமாக ஒலிக்கவிடுவதை தவிர்க்கவேண்டியது அறங்காவல் சபையும் அதன் நிறுவாகிகளும் தான் ஏனோ அவர்களுக்கு ஒழுங்கா புரியுது இல்லை அதற்கு அன்பளிப்புக் கொடுத்த அமைச்சர் என்ன செய்யமுடியும்.//

ஐயா பெரியவரே!!!

மேற்படி வரிகளில் அமைச்சர் ஒலிபெருக்கியினை அன்பளிப்பாக வழங்கி அனைத்து ஆலயங்களிலும் பாடல் ஒலிபரப்பும் வசதியினைச் செய்து கொடுத்தார் என்று தான் சொல்லியிருக்கேன்!
அமைச்சரால் எதுவும் செய்ய முடியாது!
அறங்காவலர் சபையாலும் ஒன்னுமே செய்ய முடியாது!

காலையில் எழுந்து கல்வி கற்கத் தொடங்கும் மாணவர்களுக்கு தான் இதனால் தொல்லை!

அறங்காவலர் சபையிடம் பலர் பல வருடங்களாக முறையிட்டிருப்பார்கள். ஆனால் யாருமே கேட்பதாக இல்லை!
இது இன்று நேற்று நடக்கும் விடயம் அல்ல.
இன்றைக்கு 15 வருடங்களாக நடக்கும் விடயம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
இதை பெட்டிசமாக(முறைப்பாடாக தெரிவித்தால் மாற்றம் வரலாம் என நான் நினைக்கின்றேன்!//

நம்ம ஊரில பெட்டிசம் போட்டு காரியம் ஆகும் என்றால்
இன்னைக்குப் பல காரியங்களைக் கடிதம் எழுதியே சாதிச்சிருக்கலாம் சார்!

இதெல்லாம் நடக்கிற காரியமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
நிரூபன் சார் அது ஒரு காலத்தில் இன்று கூப்பிட்டுப் பாருங்கள் அடுத்த தெருவில் நல்ல நடிகர் படம் போகுது கோயிலாவது பக்தியாவது என்று ஓடும் சமுகம் ஆகிவிட்டது.//

அவ்வ்வ்
இப்போதெல்லாம் அதிகளவான பக்தர்கள் சின்னத்திரை நாடகங்களிற்குள்ளும் மூழ்கி விட்டார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
இன்னொரு கோணத்தில் பாருங்கள் அடைப்பட்டுக்கிடக்கும் நம் சமுக அமைப்பில் நமக்குப் பிடித்தவர்களை கண்டுபிடிக்கவும் பின் கைபிடிக்கவும் இசைவாக இருக்க அன்நாட்களில் இப்படியான பொதுத்தளத்தில் தானே அதிகம் ஒன்றுகூடமுடிந்தது இன்று மாறிப்போனாலும் (நவநாகரிகம்) அன்று இருந்த அமைதியான குதுகலமான அந்த நிலை இன்று இல்லை. இந்த பக்தி என்பதும் ஒருவரை இணைக்கும் செயல்தானே சார் ?? //

அப்படீன்னா ஆலயத்தில் போய்,
சுயம்வரம் செய்யா குறையாக நமக்குப் பிடித்தவரை தெரிவு செய்வது நல்ல செயல் என்று சொல்லுறீங்களோ?
நமக்குப் பிடித்த பெண்களைப் பார்ப்பதற்காக ஆலயத்திற்கு எதுக்கைய்யா செல்லனும்?
ஆன்மீகத்தின் பெயரால் நாம் சுயம்வரமா செய்கிறோம்?

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.S.FR

வணக்கம் நிரூபன்!இன்று அருமையான ஓர் தலைப்பை தேர்வு செய்திருக்கிறீர்கள்.பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்கள்(உள்குத்து)ஏலவே வெளிவர ஆரம்பித்திருக்கின்றன!போகப் போக இன்னுமின்னும் எதிர்பார்க்கலாம்!(நானும் சாமி காவினனான் தான்,ஆனா கழுத்தில வடம் எல்லாம் இருக்கேல்ல!)கோவில்களில் காண்டா மணி அடிக்கப்படுவது,ஊர் மக்கள் இறைவனை அடிக்கடி நினைக்க வைப்பதற்கும்,பூசை நேரங்களை அறிவிப்பதற்குமே!ஆனால் குழாய்(ஸ்பீக்கர்)பூட்டி அதிகாலையில் தூக்கம் கெடுப்பது??????கடந்த ஆண்டில் கொழும்பில் கூட மசூதிகளில் பாங்கு ஒலிப்பதற்கு(ஸ்பீக்கரில்)தடை விதித்தார்கள்!நேரம் கெட்ட நேரத்தில் ஒலிபெருக்கியை அலற விடுவதற்கு தடை விதிக்கலாம் தான்!யார்??????????
//

ஆமாம் ஐயா,
இன்றைய காலத்தில் அதிகளவான ஆன்மீகச் செயல்கள் நவ நாகரிக மோகத்தின் கீழ் அழிக்கப்பட்டு விட்டன. அல்லது மருவி புதுப் புதி வழிகளில் பக்த கோடிகளுக்கு பரவசத்தை கொடுக்க ஆரம்பித்து விட்டன.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

சகோ.நிரூ!நீங்களும்,ஐடியாவும் என்னை மதில் மேல் பூனை மாதிரி உட்கார வச்சிட்டீங்களே!

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் தான் கேள்விப்பட்டிருக்கேன்.கோயில் மைக் இருக்கும் ஊரில் குடி இருக்க வேண்டாம் இப்பத்தான் கேள்விப்படறேன்:)

//ஏங்க, சாமிக்கு முடிய கொடுக்குறீங்க! செவி ய கொடுத்தா என்ன? //

ஐடியா!சிரிக்க வைத்தது:)

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி, நிரூ இப்பதிவுக்கு எனது கண்டனங்கள்!
//

யோவ் எருமை! இபப்டிக் கண்டனம் செய்ய முன்னாடி,
ஊர்ல பரீட்சைக்குப் படிக்கிறவன்,
ஊர்ல காலையில் எழுந்து படிக்கிறவன்,
காலையில் தூங்கிறவன் கிட்ட போய் கேட்டுப் பாரைய்யா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி, நம் அனைவரையும் இறைவன் தானே படைத்தார்! இந்த பூமியில் நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எத்தனையோ அற்புதங்களை இறைவன் படைத்திருக்கிறார்! அப்படிப்பட்ட இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, சத்தமாக பாட்டுப் போடுவது எப்படித் தவறாகும்?
//

இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பாடல் போடுவது தவறில்லை!
ஆனால் நான் இங்கே அப்படிச் சொல்லவில்லையே!

சம நேரத்தில் ஊருக்கு நாற் திசையும் இருந்து பாடல் காதைக் கிழிக்கும் வண்ணம் ஒலிப்பரப்பாகுவதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

பரீட்சைக்கு மாணவர்கள் படிக்கும் போது, இப்படி நாற்றிசையும் இருந்து பாடலை ஒலிக்கவிட்டால் உன்னால் அவர்களுடன் சேர்ந்து படிக்க முடியுமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
இல்லை எனக்கு மாற்றுக்கருத்து இருக்கு! அதிகாலையோ, அந்திமாலையோ, பகலோ, இரவோ அனைத்துமே இறைவன் எமக்குத் தந்த அருட்கொடைகளே!

இறவனுக்குச் சொந்தமான அதிகாலையில் தான் நாம் தூங்குகிறோம் என்பதை மறக்க வேண்டாம்! ஆகவே அதிகாலையில் கோவிலில் பாட்டுப் போடுவதில் தவறே இல்லை!//

என்னய்யா இங்கே நடக்குது?
இறைவன் எல்லாம் கொடுத்தார் என்பதற்காக துஷ்பிரயோகம் செய்வது சரியா?

ஆமா நீ என்ன ஆன்மீகவாதியா திடீரென்று மாறிட்டாய்?

இறைவன் தந்த அருட்கொடைகளை நாம் மாணவர்கள் பரீட்சைக்குப் படிக்கும் வேளையிலா பரிசீலித்துப் பார்க்கனும்?

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...
Best Blogger Tips

//நிரூபன் said...

@தனிமரம்
இன்னொரு கோணத்தில் பாருங்கள் அடைப்பட்டுக்கிடக்கும் நம் சமுக அமைப்பில் நமக்குப் பிடித்தவர்களை கண்டுபிடிக்கவும் பின் கைபிடிக்கவும் இசைவாக இருக்க அன்நாட்களில் இப்படியான பொதுத்தளத்தில் தானே அதிகம் ஒன்றுகூடமுடிந்தது இன்று மாறிப்போனாலும் (நவநாகரிகம்) அன்று இருந்த அமைதியான குதுகலமான அந்த நிலை இன்று இல்லை. இந்த பக்தி என்பதும் ஒருவரை இணைக்கும் செயல்தானே சார் ?? //

அப்படீன்னா ஆலயத்தில் போய்,
சுயம்வரம் செய்யா குறையாக நமக்குப் பிடித்தவரை தெரிவு செய்வது நல்ல செயல் என்று சொல்லுறீங்களோ?
நமக்குப் பிடித்த பெண்களைப் பார்ப்பதற்காக ஆலயத்திற்கு எதுக்கைய்யா செல்லனும்?
ஆன்மீகத்தின் பெயரால் நாம் சுயம்வரமா செய்கிறோம்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. பெண், மாப்பிள்ளை பார்த்தலில் 90 வீதமும் ஆலயத்தில்தானே நடக்கிறது, முக்கியமாக ஆலய திருவிளாக்கள் ஆதிகாலத்தில் உருவாக்கப்பட்டதே... பெண்ணையோ, அல்லது மாப்பிள்ளையையோ அங்கு பார்த்து தெரிவு செய்வதற்காகக் கூட இருக்கலாம்...

வெளிநாட்டில் “பப்” கள் இருப்பதைப்போல.. ஒன்றுகூட வைக்கிறார்கள்.

எதுவாயினும் மைக்கில் பாட்டுப் போடுவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான்....

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

இதில் என்ன தவறு இருக்கிறது? இறைவன் தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்! அது போக “ ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே, உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே” என்று ஒரு தேவாரம் இருக்கும்!

ஆகவே நாலு பக்கம் இருந்து ஒலிவந்தாலும், அந்த நாலு பக்கம் இருந்தும் இறைவன் வருகிறார் என்றுதானே அர்த்தம்! நம்மை நாடி வரும் இறைவனை எதற்கு தடுக்கணும்?
//

எம்மை நாடி வரும் இறைவனை தடுப்பது தப்பில்லைங்கோ! ஆனால் இறைவனே கருவறைக்குள் இருந்து எங்கடா போய் ஒதுங்கலாம் என உணரும் அளவிற்கு சத்தமாக பாடல் போடுவது தப்புத் தானேங்கோ!

மச்சி!
பதிவில நான்கு திசையிலிருந்தும் வெவ்வேறு ரிதம்களில், வாராந் தோறும்
இல்லே ஒவ்வோர் நாளும் பாடல்கள் உன் காதினை சம நேரத்தில் அடைந்தால் உன் செவிப்பறை எந்தப் பக்க இசையினை உள்வாங்கும்? உன்னால் நிம்மதியாக காலையில் எழுந்து படிக்க முடியுமா?

பத்து தேவாரங்களையும், பொழிப்புரையினையும் உன்னோட ரீச்சர் மனனம் செய்து வா மணி என்றால் உன்னால் மனனம் செய்ய முடியுமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
இதில் என்ன தவறு இருக்கிறது? இறைவனுக்குச் சேவை செய்வதில் போட்டி இருப்பது நல்லதுதானே! அவர்கள் கொள்ளை அடிப்பதிலா போட்டி போடுகிறார்கள்? இல்லையே?

ஒரு வீட்டில் அம்மா அப்பாவுக்கு, உதவிசெய்வதில், அன்பு செலுத்துவதில் பிள்ளைகள் போட்டி போடுவது தப்பா//

நமக்குள் போட்டி இருப்பது தப்பில்லைங்கோ!
ஆனால் இதே போட்டியினை இஸ்லாம் சகோதர்களும், பௌத்த மதத்தினரும் செய்தால் தங்களால் ஜீரணிக்க முடியுமா?
இப்போது யாழ்ப்பாணம் ஓர் பல்கலாச்சார பூமி தானே! எல்லோரும் அவரர் மதத்திற்கு தொண்டு செய்வது தடையல்ல என
யாழ் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகே உள்ள விகாரையில் இருந்து சத்தமாக பிரித் ஒலியினை ஒலிக்க விடுவதும்,
மத்திய கல்லூரிப் பக்கமாக உள்ள சேர்ச்சில் (தேவாலயத்தில்) இருந்து ஆராதனை ஒலியையும்
முனியப்பர் கோயில் பக்கமா இருந்து ஆன்மீக மணங் கமழும் பக்திப் பாடலையும் ஒலிக்க விட்டால் மத்திய கல்லூரி மாணவர்கள் நிலமை என்னாகும்?

எல்லோரும் எழுந்து நின்று பூசை செய்வார்களா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

இக்கருத்துக்கு எனது வன்மையன கண்டனங்கள்! மக்களின் காதைக் கூட கடவுள் தானே படைத்தார்! உலகில் காது கேளாமல் எவ்வளவொ பேர் வாழ்கிறார்கள்!

எனவே எமக்கு காது கொடுத்த இறைவனுக்காக எமது செவிப்பறைகளைக் கிழித்துக் கொள்வதில் என்ன தப்பு இருக்கிறது?

ஏங்க, சாமிக்கு முடிய கொடுக்குறீங்க! செவி ய கொடுத்தா என்ன?
//

யோவ் பன்னாடை!
நான் இங்கே சீரியஸ் விசயம் பேசுறேன்!
புரிஞ்சுக்கோ! காமெடி பண்ணாதே!

இங்கே இறைவன் எல்லாமே கொடுத்தார் என்பதற்கா காலையில் மனப்பாடம் செய்ய வேண்டிய படிப்பையும் மாணவர்கள் புறந் தள்ளி வைத்திட்டு போய் O/L பரீட்சை எழுதலாமா?

போடாங் கொய்யாலே!

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
இனி வரும் காலத்தில் இந்தியாவில் இருந்து குருக்கள் மார்களை இறக்குமதி செய்து குடமுழக்கு செய்யும் நிலை வரும் ராசா அப்போது சிலர் பதிவு போடுவார்கள் இப்படி ஏன் நடக்குது இந்த சமுகத்தில் உல்லாச விசாவில் வந்து சேவை புரிகின்றார் என்று என்னத் சொல்ல??//

மிஸ்டர் தனிமரம் சார்,
நாம் இப்போது ஐயர் வேதாகம் ஓதும் செயல் பற்றி பேசலை!
பாடல் ஒலிக்கும் செயல், மற்றும் ஆலயத்தினைச் சூழவுள்ள நடக்கும் செயல்களைத் தான் பேசுகிறோம்!

இன்றைய சூழலில் யார் யாரெல்லாம் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள் என்பது கேள்விக் குறியே!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

கலையட்டுமே! கலைந்தால் என்ன? இறைவனின் அனுக்கிரகம் இல்லாவிட்டால் உங்களால் நிம்மதியாகத் தூங்கியிருக்க முடியுமா?
//

ஹி...ஹி....நல்லாத் தான் சொல்லுறீங்க சார்,
இறைவன் அனுக்கிரகத்தை வைச்சிட்டு பாடல் போடென்று இறைவன் நேரே வந்து சொன்னாரா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
பின்னர் அதிகாலையில் தூங்க முடியவில்லை என்று புலம்புகிறீர்கள்! இறைவன் உங்களுக்குப் பரிசாகத் தந்த தூக்கத்தில், ஒரு சிறுபகுதியை அந்த இறைவனுக்காவே விட்டுத்தந்தால், என்ன குறைந்தா போய்விடும்?//

அதிகாலையில் தூக்கம் போவது ஒரு நாள் என்றால் பரவாயில்லை! அதிக நாட்களில் இது தானே நடக்குது மச்சி!

ஏன் பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு நாள் கற்றல் நடவடிக்கைகள் குழம்புது என்றால் பரவாயில்லை.
ஆனால் தொடர்ச்சியாக குழப்பு என்று இறைவனா சொல்லியிருக்கார்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

என்ன கொடுமை இது? படிப்பு படிப்பு என்கிறீர்களே? அந்தப் படிப்பை உருவாக்கியது யார்? கடவுள் தானே?

இறைவனைப் படிப்பதை விடவுமா இந்த உலகில் பெரிய படிப்பொன்று இருந்துவிடப் போகிறது?
//

யோவ்...உனக்கு என்னய்யா ஆச்சு!
எங்கே போனாலும் ஒவ்வோர் திசைக்கு எதிர் எதிரா கருத்தினை வைக்கிறாய்!

இறைவனை வைச்சு இவ் உலகில் எல்லோராலும் உழைக்க முடியுமா?

கற்றவர்க்குத் தானே சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லியிருக்காங்கோ!
கல்வி இல்லாமல் இன்றைய காலத்தில் வேலை தேட முடியுமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

இதில் என்ன தப்பு இருக்கு? இசையிலே இறவனைக் காண்போம் என்று சொல்வதில்லையா? இறைவனே இசைவடிவினன் தானே! ஆரோகணமும் அவனே, அவரோகணமும் அவனே!
ஆக, இறைவனை இசைகொண்டு பாடுவது, அவனுக்கு நாம் செய்யும் சேவையாகும்!

இதில் என்ன தப்பு உண்டு?
/

மணி! ஆரோகணமும், அவரோகணமும் ஒன்று தான்.
ஆனால் ஆறேழு ஒலியினை ஒரே நேரத்தில் கலந்து கட்டி காதினுள் ரீமிக்ஸ் போன்று நாற்றிசையிலிருந்தும் போட்டு கொல்லுங்கோ என்று இறைவனா சொல்லியிருக்கார்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

நாட்டில் உல்ள ஒவ்வொரு மனிதனும் தூங்கிக்கொண்டிருந்தால், நாடே தூங்கிவிடு்ம்! நகரங்களில் பாருங்கள்! அதிகாலை 4 மணி 5 மணிக்கெல்லாம் எழுந்து சுறுசுறுப்பாக வேலைக்குப் போவார்கள்! உழைப்பார்கள்! அதனால் தான் நகரம் முன்னேறுகிறது

எங்கு இறைவனுக்காக தியாகங்கள் செய்யப் படுகிறதோ, அங்கு மகிழ்ச்சியும், அபிவிருத்தியும் பொங்கும்!

நீங்கள் கிராமத்தில் தூங்கிக்கொண்டு இருப்பதால் தான் கிராமங்கள் விடிவில்லாமல் உள்ளன!
//

நல்லா வைக்கிறாய் மச்சி!

ஆனால் நாம தூங்குவதை ஒரு பக்கம் வைப்போம்!
அதிகாலை எழுந்து கல்வி கற்போர், மனனம் செய்யும் மாணவர்களின் நிலமை என்னாகும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மொத்தத்தில் இப்பதிவு, இறைவனைப் புரிந்து கொள்ளாமல், கொஞ்சம் கூட நன்ரியுணர்வு இல்லாமல் எழுதப்பட்ட ஒரு மோசமான பதிவாகும்! இப்பதிவுக்கு எனது கண்டனங்கள்!
//

ரொம்ப நன்றிங்கோ! இறைவனின் பெயரால் இடம் பெறும் இன்னல்களைச் சொல்லுவது எப்படிங்க மோசமான பதிவாகும்?

இறைவனுக்கு வாயிருந்தா விக்கிரகத்தை விட்டு எந்திருச்சு
அடோய் நிப்பாட்டுங்கடா இந்தப் பாட்டை! ஒருவன் ஒரு திசையில் இருந்து பாட்டு போடுங்கடா என்று சொல்லுவார்!!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

நிரூபன் சார் இந்த பகுதியில் நான் உங்களுடன் முரன்படுகின்றேன். பாதுகாப்பு இல்லை என்பது நீங்கள் அறியாதது அல்ல அந்தக்காதலன் கோணத்தில் இருந்து பாருங்கள் தப்புச் செய்யும் எண்ணத்திலா கோயிலுக்குல் ஒதுங்குவோம் என்றான் இல்லை அங்கு போனால் இன்னும் காதலியுடன் தனிமையில் பேசலாம் என்று எண்ணுவான் என்பதை ஏன் உணரமுடியவில்லை ?வெளியில் இருந்து காமலைக்கண்ணோடு பார்த்தால் சிலையில் இருப்பவளும் சிங்காரி மாதிரித் தெரிவாள் என்று பெரியவா சொல்லுவா !
//

ஹே..ஹே..
நான் போகாத கோயிலா? நான் பார்க்காத காதலா பாஸ்? ஒரு கதையில நேமிசா கூட நான் கோயிலில் சந்தித்தேன் என்று எழுதியிருந்தேன் படித்திருப்பீங்க தானே!
ஆலயத்தில் சந்திப்போம். அப்புறமா எங்கே ஒதுங்குவது என்று சிந்திப்போம்!

அதிகாலை எழுந்து, நீராடி அம்மனை வணங்கிறேன் என்று சொல்லிட்டு நானும் ஆர்த்திகாவை கொஞ்ச நாள் சந்திச்சிருக்கேன்! கை பிடித்துப் பார்த்திருக்கேன்! காலால் உரசியிருக்கேன்!

பல பக்த கேடிகள் பெண்களை உரசுவதனை பார்த்திருக்கிறேன்!

தனிமரம் சார்! ஊர்ல ஒன்று சொல்லுவாங்கள் தெரியுமா?
நல்லூர் திருவிழாவிற்கு போனால் கோழி பிடிக்கலாம் என்று? அந்த வார்த்தைக்குரிய அர்த்தம் அறிந்திருப்பீங்க என்று நினைக்கிறேன்!
அவ்வ்வ்

இந்த கோழி பிடித்தலுக்காகவே நல்லூருக்கு படையெடுக்கும் பக்த கேடிகளை,
கோவில் திருவிழாக் காலத்தில் ஐஸ்கீரீம் குடித்து விட்டு, பணம் செலுத்தாது அடுத்த வாங்கில் ஓடிப் போய் குந்தியிருந்து புதிதாக ஒரு ஆடர் செய்வோரையும் கண்டிருக்கிறேன்!
அவ்வ்வ்வ்வ்வ்

இன்னும் வேண்டுமா? இல்லே எடுத்து விடவா? சிவத்தமிழ்ச் செல்வி ஓர் கோயில் வைத்திருந்தா தெரியுமா?
அங்கே போனால் மணமாகத எல்லோருக்கும் மணமாகும் என்று சொல்லுவார்கள்! அந்த லொஜிக் எப்படி சக்ஸஸ் ஆகும் என்றால் ஊரில இருக்கும் மணமாகத ஆண்கள், பெண்கள் என எல்லோரும் வருவார்கள்! வேறு வழியின்றி தெல்லிப்பளை துர்க்கா தேவியே சரணகாதி என மங்கலம் பாடி பஜனையில் ஈடுபடுவார்கள்!

அங்கே கண்ணும் கண்ணும் சந்திக்கும்!
கந்தரனுபூதிக்கு பதிலாக காதல் அனுபூதி ஒலிக்கும்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
இந்தக் கோயில் இருக்கும் புனிதமான சூழல் பற்றி மற்றவர்கள் எந்தளவு அறிந்தார்களோ நான் அறியேன். ஆனால் நான் பார்த்தது அந்திமாலையில் தான் அதிகமாக அம்மனின் பெருமை ஆலய தலப்புராணம் தெரியாதவர்கள் சிலர் சிற்றிபத்திற்கு ஆசைப்பட்டு கீர்த்திமிக்க கோயிலின் புனித இடத்தை சீரலிக்கின்றார்கள் என்று விசமத்தனமாக ஒரு இணையம் செய்தி போடும் அதையே நீங்களும் உள்வாங்கி இப்படி எழுதலாமா??? /

ஐயோ...தனிமரம் சார்,
நான் எந்த இணையத் தளத்தினையும் முன் வைத்து எழுதலை! என் அனுபவத்தினை வைத்தே எழுதியிருக்கிறேன்.

பல கோயிலகளில் பலர் ஒதுங்குவதனை கண்டிருக்கிறேன்!

அதற்காக எல்லா ஆலயங்களும் புனிதமிழக்கின்றன என்று சொல்லவரவில்லை!

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
பூசைகள் சாதாரநாளில் ஆலயம் சிறப்பாக நடக்க முடியாத நிதிநிலை பற்றிப் பேச வேண்டியவர் தங்கள் ஊடகங்கள் மூலம் கேவலமாக அம்மன் கோயிலில் அன்புத்தழுவல் அடித்துவிரட்டினார்கள் அயலில் இருந்தோர் என்று செய்தி போடும் ஊடகப் பொறுக்கிகளை நீங்களும் வழிமொழிகின்றீர்களா???//

நான் இங்கே முன் வைத்திருக்கும் கருத்துக்களை உள்வாங்கிப் பேசுங்கள்!

இப் பதிவானது எந்த ஓர் ஊடகத்தினையும் முன் மாதிரியாகக் கொண்டு ஆதாரமாகக் கொண்டு எழுதப்படவில்லை!

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
ஆலயத்தை சீர்செய்ய வழி சொல்லாமல் சீரலிக்க (நிரூபன் அல்ல)வழி சொல்வோரை சீற்றமாக சபிப்பதில் தப்பில்லை தம்பிரானே அவன் எம்பிரான். ( நான் எப்போதும் மதவாதிதான் ஆனால் மதத்தை பின்பற்று என்று தினிக்கவில்லை ராசா) கருத்து பிழை எனின் நீக்லிவிடுங்கள் .//

ஆமா இந்தக் கருத்து பதிவிற்கு தொடர்பற்றது அல்லவா? நான் நீகக்வில்லை! இருக்கட்டு!

இங்கே ஆலயத்தினைச் சீர்படுத்தும் வழிகளைத் தான் கட்டுரையிலும் கேட்டிருக்கிறேன்!

இவ்வாறான சீரழிவுகள் இடம் பெறுகின்றன. இவற்றை எப்படி நீக்கலாம் என்று தானே கேட்கிறேன்!

ஒரேயொரு கேள்வி!
இறுதியாக தாங்கள் எப்போது யாழ்ப்பாணத்திற்கு, அல்லது வவுனியாவிற்கு சென்றீர்கள்?
இப்போது ஊரில் இருக்கும் உறவுகளுடன் இந்த ஆலயங்கள் தொடர்பில் தாங்கள் ஓர் கருத்துப் பரிமாறலை தொலைபேசி ஊடாக மேற்கொண்ட பின்னர், வந்து சொல்லுங்கள்! தொடர்ந்தும் பேசுவோம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
ஒலி அதிகமாக எழுப்புவது தடைசெய்யப்படனும் தமிழக்துக் கோயில்களில் அதிகாலையில் ஒலிபெருக்கி ஓங்கி ஒலித்துக் கேட்டதில்லை .இந்த செயல் பாடு அதிகம் ஈழத்தில் தான் .மலேசியா,சிங்கப்பூர் ,புத்தவிகாரை அதிகம் இருக்கும் தாய்லாந்து தேசங்களிலும் இப்படி ஒலிபெருக்கி ஓங்கி ஒலித்து நாதம் இசைத்ததை நானும் கேட்கவில்லை இதை உரியவர்கள் கவனம் எடுத்தால் அசிங்கம் இல்லைத்தான் ஆர் சொல்வது ஆளுக்கொரு கோயில் வீதிக் கொரு சங்கம் போங்க சார் வேலை இல்லாதவன் சீர்திருத்த வந்திட்டான் என்று சீற்றம் ஆக்குவார்கள் எங்களை!/

யோவ்...ரெண்டு பக்கத்திற்கும் கருத்தைச் சொல்ல வேணாம்!
ஒரு பக்கத்திற்கு பேசுங்கள்! அப்போது தானே விவாதிக்க நன்றாக இருக்கும்!

தமிழகத்தில் முழத்திற்கு முழம் கோயில் இல்லை! ஆனால் நம்ம ஊர் நிலமை வேறு அல்லவா?

சந்திக்கு சந்தி கோயில் அல்ல! இதனால் பாடல் ஒலிக்கும் சத்தத்தால் செவிப்பறை கிழிவது உணை ஐயா!

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

மொத்தத்தில் இப்பதிவு, இறைவனைப் புரிந்து கொள்ளாமல், கொஞ்சம் கூட நன்ரியுணர்வு இல்லாமல் எழுதப்பட்ட ஒரு மோசமான பதிவாகும்! இப்பதிவுக்கு எனது கண்டனங்கள்!

// மணி சார் நிரூபன் சொல்லுறார்
நாதத்துடன் பள்ளிகொண்டோரை சுப்ரபாதத்துடன் துயில் எழுப்புங்கள் தப்பில்லை துயில் கொள்வோர் துள்ளி ஏழுப்பும் கொலைவெறி வேண்டாம் என்று !ஹீ ஹீ (மணியோடு சபையில் இருந்து சாப்பிட்டுப்பலநாள் ஆச்சு )
//

ஐயா பெரியோரே!
நான் ஒலி எழுப்பி, அதிகாலையில் பக்திப் பரவசமூட்டுவது தவறெனச் சொல்லவில்லையே!
ஆனால் சுற்றுச் சூழல், கல்வி கற்கும் மாணவர்களை உணர்ந்து கொண்டு செயற்படுங்கள் என்று தானே சொல்லியிருக்கேன்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

/ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

மொத்தத்தில் இப்பதிவு, இறைவனைப் புரிந்து கொள்ளாமல், கொஞ்சம் கூட நன்ரியுணர்வு இல்லாமல் எழுதப்பட்ட ஒரு மோசமான பதிவாகும்! இப்பதிவுக்கு எனது கண்டனங்கள்!//
//

அதிரா அக்கா,
ஐடியா மணி நன்ரி உணர்வு என்று நக்கல் பண்றார்,
நீங்களும் எழுத்துப் பிழையை கவனிக்காம இருக்கிறீங்களே!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நிரூபன், இவரைப் பிடிச்சு ஒரு சாக்கிலே கட்டிக்கொண்டுபோய், பூங்கனிச்சோலை ஊஞ்சலில் வைத்துவிடுங்கோ.. ஒருமாதம் அங்கேயே இருக்கட்டும்.. கோயில் மணியோசையைக் கடவுள் படைத்த காதுகளால் கேட்கட்டும்..

கடவுள் படைத்த உடம்பை கடவுளுக்காக ஒரு மாதம் அர்ப்பணிப்பதில் ஒன்றுமே குறைந்திடப்போறதில்லையே..

உடனே செய்யுங்க நிரூபன்..:)
//

அதானே மணி!
என்னை என்ன தலையால நடந்து போய் இறைவனைப் பார்க்கச் சொல்லுறியா?
கொய்யாலே!

இந்தக் காலத்தில் பலர் கஷ்டம் வந்தால் தான் கடவுள் சன்னிதானத்திற்கே போகிறார்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நிரூபன், இவரைப் பிடிச்சு ஒரு சாக்கிலே கட்டிக்கொண்டுபோய், பூங்கனிச்சோலை ஊஞ்சலில் வைத்துவிடுங்கோ.. ஒருமாதம் அங்கேயே இருக்கட்டும்.. கோயில் மணியோசையைக் கடவுள் படைத்த காதுகளால் கேட்கட்டும்..

கடவுள் படைத்த உடம்பை கடவுளுக்காக ஒரு மாதம் அர்ப்பணிப்பதில் ஒன்றுமே குறைந்திடப்போறதில்லையே..

உடனே செய்யுங்க நிரூபன்..:)
//

அதானே மணி!
என்னை என்ன தலையால நடந்து போய் இறைவனைப் பார்க்கச் சொல்லுறியா?
கொய்யாலே!

இந்தக் காலத்தில் பலர் கஷ்டம் வந்தால் தான் கடவுள் சன்னிதானத்திற்கே போகிறார்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

எல்லாம் இக்கரைக்கு அக்கரைப்பச்சை...

அதிகாலையில் துயிலெழுதல் நல்லதுதானே... யோகா செய்யலாம், தியானம் செய்யலாம்... இன்னும் என்னென்னமோ செய்யலாம்...

இல்லை எனக்குப் பிடிக்கேல்லை உது வேண்டாம் எனில்..

சவுண்ட் புரூஃப் கண்ணாடிகள் வாங்கீ வீட்டுக்குப் போடலாம்.. டபிள் கிளாஸிங் செய்யலாம்...இன்னும் ஏதும் ஆலோசனை வேணுமோ?:).

நான் அங்கிருந்த கொஞ்சக்காலத்தில் மணியோசை மட்டுமே இருந்துது, காலைப்பாட்டுக்கள் இல்லை, ஆனா திருவிளாக் காலத்தில் மட்டும் பாட்டுக்கள் போகும், அது இப்பவும் நினைக்க இனிமையைத்தான் கொடுக்கிறது எரிச்சல் வரவில்லை.
//

அக்கா எல்லாமே இக்கரைக்கு அக்கரை பச்சை தான்!

ஆனால் இலங்கையின் வட கிழக்கில் வசிக்கும் சாதாரண மக்களால் வீட்டிற்கு கண்ணாடி பூட்டி சவுண்டை தடுக்கும் வசதிகள் ஏற்படுத்துமளவிற்கு பொருளாதாரம் இடங்கொடுக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்

இப்போது எரிச்சலூட்டும் வண்ணம் பாடல் போட்டல்லவா கொல்லுகிறார்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

அறங்காவலர் சபையிடம் பலர் பல வருடங்களாக முறையிட்டிருப்பார்கள். ஆனால் யாருமே கேட்பதாக இல்லை!
இது இன்று நேற்று நடக்கும் விடயம் அல்ல.
இன்றைக்கு 15 வருடங்களாக நடக்கும் விடயம். 
// இந்த அறங்காவல் சபையில் இருப்போர் சாதாரண ஆறுமுகசாமியும் அப்புகாமியும் தான் அவர்கள் கருணை காட்டம் அதிகாலையுல் பேரன் தூங்கிறான் பேத்தி படிக்கின்றாள் மருமகன் வேலைக்குப் போகும் போது ஏன் சத்தமாக பக்திப்பாடல் போடுவது என்று இப்படி இவர்கள் ஜோசிக்காட்டி எத்தனை பெட்டிசம் போட்டாலும் ஊதமுடியாத சங்குதான் நிரூபன் சார்!

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

நிரூபன் காதலியோடு போகாமையினாலேயே இப்பூடிப் புகைக்குது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

அதுசரி அந்தி மங்கும் வேளையில் பார்க்கிலே காதல் ஜோடிகள்தான் இருப்பார்கள், அங்கே உங்களுக்கு என்ன வேலை? ஏன் அந்த நேரம் போனனீங்க? ஆராவது ஜோடிகள் அகப்படுவார்கள் என்றுதானே? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
//

ஐடியா சொல்லுற ஆளைப் பாருங்க!
இன்னொருத்தன் சோடியை நான் எதுக்கு பார்க்கனும்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

உந்தக் கோயில் மணியோசையை நிறுத்தும் ஐடியாவை விட்டுவிட்டு, காதலர்கள் சுகந்திரமாக உலாவர ஏதும் ஐடியாவை முன்வைக்கலாம்... வெளிநாட்டில் பக்கத்து வீட்டில் ஆரைக் கூட்டி வந்தாலும் யாரும் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை, ஆனா எமது நாட்டில்.. முகம் பார்த்துக் கதைக்கவே எவ்வளவு பதட்டம்... காதலிக்கக்கூடாது, ஆனா காதலில் இறங்கி விட்டால் காதலர்கள் பாவம்தானே... கதைப்பதற்கும் ஒரு பாதுகாப்பான இடம் தேவைதானே? எல்லோரிடமும் இன்ரநெட், ரெலிபோன் வசதி இருக்காதெல்லோ...
//

நல்லதோர் விடயத்தினை முன் வைத்திருக்கிறீங்க.

கண்டிப்பாக இந்த விடயம் தொடர்பாக இன்னோர் பதிவினை எழுதுகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

சகோ.நிரூ!நீங்களும்,ஐடியாவும் என்னை மதில் மேல் பூனை மாதிரி உட்கார வச்சிட்டீங்களே!

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் தான் கேள்விப்பட்டிருக்கேன்.கோயில் மைக் இருக்கும் ஊரில் குடி இருக்க வேண்டாம் இப்பத்தான் கேள்விப்படறேன்:)
//

நம்ம ஊரில இந்த கொடுமை தானே நடக்குது!
அதை அனுபவித்தால் தான் அண்ணா வலி புரியும்.
அவ்வ்

தனிமரம் said...
Best Blogger Tips

யோவ்...ரெண்டு பக்கத்திற்கும் கருத்தைச் சொல்ல வேணாம்!
ஒரு பக்கத்திற்கு பேசுங்கள்! அப்போது தானே விவாதிக்க நன்றாக இருக்கும்!

தமிழகத்தில் முழத்திற்கு முழம் கோயில் இல்லை! ஆனால் நம்ம ஊர் நிலமை வேறு அல்லவா?

சந்திக்கு சந்தி கோயில் அல்ல! இதனால் பாடல் ஒலிக்கும் சத்தத்தால் செவிப்பறை கிழிவது உணை ஐயா! 
// முழத்துக்கு முழம் அங்கும் இருக்கு இது நான் தொடர்ந்து தருசனம் செய்வதால் சொல்கின்றேன் கருத்தைச் சொல்லும் போது இரண்டையும் ஒப்பீடு செய்யாமல் ஒரு பக்கம் பேசுவது கடினம் ஐயா!

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...யாரும் எழுத யோசிக்கிற ஒரு விஷயத்தை எழுதினதுக்குப் பாராட்டு.

ஆனால் எனக்கும் முழுதாகக் குற்றம் சொல்ல விருப்பமில்லை.லஞ்சம் குடுத்து சாமி கும்பிடமாட்டேன் என்று இன்றுவரை கோயில் உண்டியலுக்குள் காசு போட்டதில்லை.கையில் ஒரு நூல் கட்டினதில்லை.ஆனால் காலையில் மாலையில் அந்த மணியோசை,ஐயர் மந்திரம்,கோயில் வாசனை,கோயில் சாப்பாடு பிடிக்கும்.சாமி இருக்கிறாரோ இல்லையோ இருக்கு என்பவரின் நம்பிக்கை அப்படியே இருக்கட்டும்.ஆனால் இப்போ வியாபார நோக்கம்தான் கோயிலும் சாமியும்.அதனால்தான் சத்தம் கூடி அமைதி கலையுது.பல நூறு வருடங்களுக்கு முன்னம் இப்படி இருந்திருக்கச் சந்தர்ப்பமே இல்லை !

தனிமரம் said...
Best Blogger Tips

ஒரேயொரு கேள்வி!
இறுதியாக தாங்கள் எப்போது யாழ்ப்பாணத்திற்கு, அல்லது வவுனியாவிற்கு சென்றீர்கள்?
இப்போது ஊரில் இருக்கும் உறவுகளுடன் இந்த ஆலயங்கள் தொடர்பில் தாங்கள் ஓர் கருத்துப் பரிமாறலை தொலைபேசி ஊடாக மேற்கொண்ட பின்னர், வந்து சொல்லுங்கள்! தொடர்ந்தும் பேசுவோம்! 
// இந்தக் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது தனிப்பட்ட சூழ்நிலை என்பதால்  அதையும் தாண்டி நீங்களே சொல்லிவிட்டீர்கள் இது பதிவுக்கு சம்மந்தம் இல்லை என்று இதை இன்னொரு பதிவில் கண்டிப்பா பேசுவம் ஐயா!

தனிமரம் said...
Best Blogger Tips

ஐயா பெரியோரே!
நான் ஒலி எழுப்பி, அதிகாலையில் பக்திப் பரவசமூட்டுவது தவறெனச் சொல்லவில்லையே!
ஆனால் சுற்றுச் சூழல், கல்வி கற்கும் மாணவர்களை உணர்ந்து கொண்டு செயற்படுங்கள் என்று தானே சொல்லியிருக்கேன்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //
ஐயா நிரூ நானும் அதைத்தான் கொலைவெறி வேணாம் என்கிறார் என்றேன்.ஹீ ஹீ

தனிமரம் said...
Best Blogger Tips

ஆன்மீகத்தின் பெயரால் நாம் சுயம்வரமா செய்கிறோம்//
ஆன்மீகத்தில் கூட வள்ளி திருக்கல்யாணம்,பெருமாளுக்கு திருக்கல்யாணம் என்று இருக்கின்றது ஐயா ஆனால் ஆன்மிகத்தில் வழி தவறுவது அவர்களின் அறியாமை (இன்னொருவகையில் சொன்னால் சிற்றின்பம் பின் ஓடும் ஆன்மா) இதுக்கு விளக்கம் கொடுக்க முடியாது சார் ஆன்மீகம் உணரனும் உணர்த்தப்படமுடியாது இது தேவையற்றது இந்தப் பதிவுக்கு ஆனால் என் நிலைப்பாடு இது நன்றி பதிவுக்கும் சின்னவனின் கருத்துக்கு விளக்கம் கொடுத்தற்கும்!

கோகுல் said...
Best Blogger Tips

பலரும் இந்த விசயத்தை எதிர்க்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் சம்பந்த்தப்பட்டவர்கள் இந்த நாள் வரை புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
நான் முன்பு பணி புரிந்த நிறுவனத்தில் நைட் ஷிப்ட் உண்டு.இரவு முழுக்க கண் விழித்து பணி புரிந்து ரூமுக்கு வந்து தூங்கலாமென்று நினைத்தால் செல்லாத்தாக்களும்,மாரியாத்தாக்களும் பல நாள் தூக்கங்களை கெடுத்திருக்கிறார்கள்.இதனால் அடுத்தடுத்து இரவுப்பணியில் அதிக அளவில் சோர்வும்,மனஉளைச்சலும் வரும்.இன்னுமோர் விஷயம் எப்பவும் ஞாயிற்றுக்கிழமை லேட்டாக எழுந்திருப்பது பல பேருடைய வழக்கம்,இஷ்டமான தருணமும் கூட அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் நடக்கும் ஜெபக்கூட்ட சத்தத்தில் அந்த சந்தோசமான தருணங்கள் கரைந்து விடும்.மௌனத்தால் உருகி வழிபடுவதை விட இப்படி சத்தம் கூட்டி வணங்கினால் தான் சாமியின் அருள் கிடைக்குமென்றால்......................................

சார்வாகன் said...
Best Blogger Tips

சகோ நிரூபன்
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்றாலும் இது அனைத்து மதங்களுக்கும் ,பொருந்தும்.இன்னும் கூட வீட்டில் நடை பெறும் விழா,அரசியல் கூட்டங்கள்,மத விளம்ம்பர கூட்டங்கள் அனைத்திலேயுமே இக்கூச்சல் காது அடைக்கிறது.

என்ன இந்து மதம் பற்றி (மட்டும்) குறை சொன்னாதால் சண்டை சச்சரவு,எதிர் ஓட்டு இல்லாம்ல் ஆமாம் சகோதரா என்க்கும் எரிச்சல் வருது தூங்க முடியாமல் இப்படி சத்தம் போடராங்க என்று சொல்லிவிட்டு போகிறோம்.
சரி கொஞ்சம் சத்தம் குறைச்சு வைக்க வேண்டுகோள் விடுப்போம்.[இது பாட்டு சத்தத்தில் அவர்கள் காதில் விழுமா?!!!!!!!!!!!]
நன்றி

Anonymous said...
Best Blogger Tips

பதிவுலகுக்கு வந்த புதுசில நீங்கள் எழுதிய பதிவு தானே இது! மீள் பதிவா? பாருங்கோ யாரும் இன்னமும் கண்டுபுடிக்கல :)

நேசன் அண்ணாச்சி நாலஞ்சு பதிவுகளை இங்க கமெண்டாய் போட்டிருக்கார் போல .. ;)

Anonymous said...
Best Blogger Tips

இதுக்கு மிக சிறந்த தீர்வு, பேசாம இந்த பரிபால சபையில இருக்கிற அத்தன பயலுகளையும் பிடிச்சு உள்ள போடணும்..

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

பதிவுலகுக்கு வந்த புதுசில நீங்கள் எழுதிய பதிவு தானே இது! மீள் பதிவா? பாருங்கோ யாரும் இன்னமும் கண்டுபுடிக்கல :)

நேசன் அண்ணாச்சி நாலஞ்சு பதிவுகளை இங்க கமெண்டாய் போட்டிருக்கார் போல .. ;)
//

வணக்கம் கந்து,
அந்தப் பதிவினை சில திருத்தங்களுடன் வெளியிட்டிருக்கிறேன்.
ஆரம்பத்தில் எழுதிய பதிவு என்பதால் அப் பதிவு பலரின் பார்வைக்கு எட்டவில்லை,
பல வாசகர்களைச் சென்றடையவில்லை!
தற்போது இப் பதிவு நல்ல முறையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

நிரூபன் said...
Best Blogger Tips

கருத்துரை வழங்கி, விவாதத்தில் ஈடுபட்ட அத்தனை சொந்தங்களுக்கும் நன்றி
கோகுல்,
சார்வாகன் அனைவருக்கும் நன்றி

தனிமரம் said...
Best Blogger Tips

பதிவுலகுக்கு வந்த புதுசில நீங்கள் எழுதிய பதிவு தானே இது! மீள் பதிவா? பாருங்கோ யாரும் இன்னமும் கண்டுபுடிக்கல :)

நேசன் அண்ணாச்சி நாலஞ்சு பதிவுகளை இங்க கமெண்டாய் போட்டிருக்கார் போல .//
வாங்க கந்தசாமித்தாத்தா பதிவு எழுத நேரம் இல்லை இப்படி விவாதிக்கும் போது சரி  கொஞ்சம் வெளியில் வரலாம் இல்ல கருத்துக்களுடன், ஹீ ஹீ!

தனிமரம் said...
Best Blogger Tips

பதிவுலகுக்கு வந்த புதுசில நீங்கள் எழுதிய பதிவு தானே இது! மீள் பதிவா? பாருங்கோ யாரும் இன்னமும் கண்டுபுடிக்கல :)

நேசன் அண்ணாச்சி நாலஞ்சு பதிவுகளை இங்க கமெண்டாய் போட்டிருக்கார் போல .//
நாற்றில் விவாதம் என்றால் தனிமரம் தாவி வரும் இல்ல கந்தசாமித் தாத்தா.எப்படி அடித்தாலும் அசையமாட்டம் ஹீ ஹீ(நிரூபன்  கடையை மூடிவிட்டார்  வாங்க ராச்சிடம் போவம் ஹீ ஹீ)

suvanappiriyan said...
Best Blogger Tips

Bro Niruban!

பதிவுகளை சமூக அக்கறையோடு எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம். அதை சில காலம் கழிந்தாவது புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனது பதிவால் சில மாற்றங்களாவது உங்கள் பதிவுகளில் தெரிந்தால் சந்தோஷப்படுவேன். நன்றி!

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவனப்பிரியன்

Bro Niruban!

பதிவுகளை சமூக அக்கறையோடு எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம். அதை சில காலம் கழிந்தாவது புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. எனது பதிவால் சில மாற்றங்களாவது உங்கள் பதிவுகளில் தெரிந்தால் சந்தோஷப்படுவேன். நன்றி!
//

சகோ, என்ன சைட் கேப்பிங்கில் வித்துவத் திறமை காட்டுறீங்களா?
சார் இந்தப் பதிவிற்கு முன்னாடியே நான் பல சமூகப் பதிவுகளை எழுதியிருக்கேனுங்க.
நேத்தைக்கு மாலையும் ஓர் பதிவினை எழுதியிருக்கேன்!
நல்லா வைக்கிறீங்க வேட்டு!

Anonymous said...
Best Blogger Tips

இனறு தான உங்கள் பதிவுக்குமுதல்... நல்ல விசயம் சொன்னீர்கள்.
ஆலயங்கள் அலரவிடுவது நித்திரையை மட்டுமல்ல பிள்ளைகளின் படிப்பையும் பாதிக்குமல்லவா..? நாம் ஏலெவல் படிக்குப்போது முல்லைத்தீவு ஒரு ஆலய திருவிழா பத்திநாட்கள் - அப்படி அலரவிடுவார்கள் - பரீட்சை நடைபெறும் காலம் என்பதைக்கூட பொருட்படுத்தாமல் - என்தந்தை கோயில நடத்தினர்களிடம் சொன்னபோது ஒரு நாள் சத்தத்தைக் குறைத்தார்கள் மறுநால் பழையபடி... நாம் பரிடசைக்குப்படித்தோமோ இல்லையோ பல பிள்ளையார் பாடல்களைப்பாடமாக்கிவிட்டோம்.
திருகோணமலை காளிகோயிலுக்கு அண்மையில் இருக்கும் பாக்கியம் கிடைத்தது அங்கு திருவிழாக்காலங்களில் காலையில் மட்டும் ஒரு 4 மணிநேரம் ( நான்நினைக்கிறேன் காலை 3 மணியில் இருந்து 7 மணிவரை ) பாடல்கள் போடுவார்கள் அது தான் பக்தர்கள் அங்கப்பிரதற்சனை செய்யும் நேரம். சத்தம் அவ்வளவாக இருக்காது ஓரு 5 சுற்றுவட்டார வீடுகளுக்கு மட்டுமே கேட்கும் என்பேன். போடும் பாடல்கள் கூட அப்படி மென்மையான காலைக்கு உகந்த பாடல்கள் மென்மையாய் வருடி எழுப்பும்.... எனக்கு பக்தியை படிப்பித்த உலகம்.
இப்படி எல்லா ஆலயங்களும் இருந்தால் எவ்வளவு இனிமை

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails