Tuesday, October 11, 2011

HITMAN -ஹாலிவூட் பட விமர்சனம்- விறு விறுப் பூட்டும் திரிலிங் - விருந்தளிக்கும் கிளாமர்!

முற்று முழுதாகப் பொழுது போக்கினையும், சிறியளவில் சமூகத்திற்குச் சொல்ல வேண்டிய நற் கருத்துக்களையும் உள்ளடக்கி எடுக்கப்படுகின்ற திரைப்படங்களில் அதிகளவானவை பல தரப்பட்ட ரசனையுள்ள மக்கள் மனங்களைத் திருப்திப்படுத்துவதில்லை. ஆக்‌ஷன் பட விரும்பிகளையும், காதல் ரசனையுள்ளவர்களையும், கவர்ச்சிக் காட்சி விரும்பிகளையும் ஒருங்கு சேர்த்துத் திருப்திப்படுத்தும் தரமான கமர்சியல் படைப்பினை எல்லா நேரத்திலும் இயக்குனர்களால் வழங்க முடிவதில்லை. கமர்சியல் படைப்பாகப் பல தரப்பட்ட ரசனையுள்ளவர்களின் மன ஓட்டத்தினைப் புரிந்து கொண்டு ஒரு படத்தினை இயக்குனர் தருகின்ற போதும் படத்தினைப் பார்ப்பதற்கான வயதெல்லை என்பது அப் படத்திற்கு கிடைக்கும் சமூக அங்கீகாரத்தினை உடைத் தெறிந்து விடும்.
ஆனால் ஹாலிவூட் திரையுலகில் இயக்குனர் Xavier Gens (சேவியர் ஜென்ஸ்) அவர்களால் கமர்சியல் அந்தஸ்தினை நோக்கி எடுக்கப்பட்டு, வேண்டத்தகாத நிர்வாண - கிளாமர் கவர்ச்சி காட்சிகளால் அவரது கமர்சியல் கனவினை உடைத்தெறிந்து வயது வந்தோர் மாத்திரம் பார்க்க கூடிய வகையில் சார்ட்டிபிக்கேட் வழங்கப்பட்ட படம் தான் Hitman.
ஏஜெண்ட் 47 எனும் பெயரால் சிறப்பித்து அழைக்கப்படும் இப் படத்தின் கதாநாயகன் Timothy Olyphant அவர்கள் லண்டன், நையீரியா, ரஷ்யா, துருக்கி என மாறி மாறி "The Organization" என்று மாத்திரம் வெளித் சுட்டப்படும் அடையாளந் தெரியாத தீவிரவாத அமைப்பினரின் கூலிக்கு அமர்த்தப்பட்ட {Contract} திரிலிங் கொலையாளியாகச் செயற்படுகின்றார். 

ஏஜெண்ட் 47 அவர்கள்; நையிரீயாவில் உள்ள போராட்ட அமைப்பினர் மீது தன் கை வரிசையினை (பின்னணியில் இருந்து நெறிப்படுத்தி) காட்டி விட்டு, இறுதியில் ரஷ்யாவின் ஆட்சி பீடத்தினைச் சிதைக்கும் நோக்கில் ரஷ்ய பிரதமர் மீது குறி வைத்துக் கொலை செய்யத் தயாராகுவதனையும், அவரைப் பின் தொடர்ந்து பிரித்தானியாவிலிருந்து இன்டர்போல் உளவுத் துறையினர் கைது செய்யும் நோக்கில் சேஸிங்கில் திரிவதனையும் காட்சிகளாக கண் முன்னே விரிய வைக்கும் படம் தான் இந்த ஹிட்மேன். ரஷ்ய ஆட்சி பீடத்தினை ஏஜெண்ட் 47 அவர்கள் சிதைத்தாரா? யார் இந்த ஏஜெண்ட் 47? ஏன் ரஷ்யா அமைச்சர்கள், ஏஜெண்டுகள் மீது குறி வைக்கின்றார்? இறுதியில் இன்ரபோலிடம் அகப்பட்டாரா?இல்லை தப்பினாரா? போன்ற வினாக்களிற்கான விடைகளை நீங்கள் படத்தினைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

2006ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலும், பின்னர் ஏனைய உலக நாடுகளிலும் வெளியிடப்பட்ட Hitman படத்தினை பிரான்ஸினைச் சேர்ந்த இயக்குனர் சேவியர் ஜென்ஸ் அவர்கள் இயக்கியிருக்கின்றார்.  20th Century Fox  நிறுவன வெளியீட்டில், Timothy Olypahnt, Dougary Scoot, Robert Knepper, Olga Kurylengo, முதலிய ஹாலிவூட்,(அமெரிக்க), பிரித்தானிய, ரஷ்ய, உக்ரேன் நாட்டு நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இத் திரைப்படத்திற்கு Geoff Zanelli அவர்கள் இசை வழங்கியிருக்கிறார். ஹிட்மேன் எனப்படும் உலகப் புகழ் பெற்ற வீடியோ ஹேமினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப் படத்தினை Skip Woods அவர்கள் தன் எழுத்துருவாக்கத்தால் கதை வசனம் அமைத்துக் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறார். 

விறு விறுப்பூட்டும் சேஸிங், விழி நிமிர்த்தி ரசிக்க வைக்கும் திரிலிங் நிறைந்த அடுத்தது என்ன எனும் ஆவலைத் தூண்டும் சண்டைக் காட்சிகள் - அதன் பின்னே நடக்கும் கொலைக் காட்சிகள், நவீன லேசர் ஆயுதங்களின் உதவியுடன் நடாத்தப்படும் தாக்குதல்களை உள்ளடக்கிய அதிரடிக் காட்சிகள், இடையிடையே டூ பீஸ் ஆடையுடனும், ஆடையின்றியும் திரையில் தோன்றி கண்களுக்கு விருந்தளிக்கும்;
கொலை வெறியோடும் தேடற் சுவையோடும் அலைந்து திரியும் கதா நாயகனுக்கு வெறுப்பேற்றி உணர்ச்சியினைத் தூண்டும்; ரஷ்ய - உக்ரேன் நாட்டின் பனி விசிறல்களின் துகள் எடுத்து வெண் கோதுமையோடு கலந்து செய்யப்பட்ட கலவையாக வரும் Olga Kurylengo அவர்களின் மென்மையான கிளாமர் நடிப்பும் இத் திரைப்படத்திற்க் உயிரோட்டமளிக்கின்றது. 

படத்தின் காட்சி நகர்வுகளிற்கமைவாக ரசிகர்களின் மனங்களினைச் சுண்டியிழுத்து திரைப்படத்தோடு ரசிகர்களை ஒன்றிக்க வைக்கும் வகையில் இலாவகமாக விறு விறு கதை நகர்விற்கு ஏற்றாற் போல Geoff Zanelli அவர்கள் இசை வழங்கியிருக்கிறார். படத்தின் நகர்வுகளில் தொய்வின்றி அதிரடி ஆக்‌ஷன், கிளாமர் காட்சிகள் மூலம் விறு விறுப்புடன் கூடிய படத்தினைப் படைத்திருக்கிறார் இயக்குனர் சேவியர் ஜென்ஸ் அவர்கள். தவிப்பு, வெறுப்பு, கோபம், ஏமாற்றம் முதலிய உணர்வுகளைப் பிரித்துக் காட்டும் வகையிலான வசனங்களை ஸ்கிப் வூட் அவர்கள் சிறப்புற எழுதிப் படத்தின் கதை வசனப் போக்கிற்கு மேலும் சிறப்பினைக் கொடுத்திருக்கிறார்.

எடுத்துக் காட்டாக;
"you are in Fear. I'm Sorry. I can' t allow that". (நீங்க பயந்திருக்கிறீங்க, என்னால இதனை அனுமதிக்க முடியாது) என ஏஜெண்ட் 47 பேசுகையில் பேரழகி ஒல்காவை If you are looking for a reason not to kill me. I don't have one என கண்ணீரோடு வசனம் பேச வைத்து எம் விழிகளையும் நனைத்திருக்கிறார். ரஷ்யர்களின் அரச மாளிகையில் நிர்வாணப்படுத்தப்பட்டு உடம்பில் அடித்துத் துன்புறுத்தப்படுவதன் மூலம் பார்த்து ரசிக்கும் கொடூர குணம் கொண்டோருக்கு விருந்தளிக்கும் பெண்ணாக (Brutally Abusing Women) ஆக ஆரம்பத்தில் காட்சிகளில் தோன்றும் ஒல்காவை, தன் வசப்படுத்தி ரஷ்யர்களின் நகர்வுகளை அறிந்து கொள்ளும் ஏஜெண்ட் 47, ஒல்காவை ஓட்டலில் சந்திக்கும் போது, எம் சிந்தைக்கு விருந்தளிக்கும் வசனங்களையும் பேச வைத்திருக்கிறார் ஸ்கிப் வூட் அவர்கள்.

"You remember everything you see? The women Sitting to table behind you, What she is wearing? என ஒல்கா கேட்கையில்; Red hair And Silk dress, Facing you? That's not a women." என ஆச்சரியமூட்டும் வசனம் பேச வைக்கும் ஏஜெண்ட் 47 அவர்களிடம் அடுத்த கேள்வியினை "What colour  underwear   I'm wearing? என ஒல்கா கேட்கையில், "You are not wearing any - - - - - -" எனச் சொல்லி ரசிகர்களுக்கு மேலும் விருந்து கொடுத்திருக்கிறார் ஸ்கிப் வூட் அவர்கள். 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்த்து மகிழக் கூடிய 94 நிமிடங்கள் நேர அளவை கொண்ட இப் படத்தினை $24 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் 20TH Century Fox நிறுவனத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். திரிலிங் பிரியர்களுக்கும், பொழுது போக்கு எண்ணம் கொண்டோருக்கும் இப் படம் நல்லதோர் விருந்தாக அமையும்.
இப் படத்தின் ட்ரெயிலரினைப் பார்த்து மகிழ: 


படத்தினை ஆன்லைனில் கண்டு களிக்க: 


HITMAN: கிளாமர் கலந்த அதிரடி ஆக்சன் விருந்து. 
************************************************************************************************************
பதிவர் அறிமுகம் பகுதியினூடாக, பல சுவையான கவிதைகளைத் தன் வலைப் பதிவில் பகிர்ந்து வருகின்ற "அனீஷ்.ஜெ" அவர்களின் வலைப் பூவிற்குத் தான் இப் பதிவினூடாக நாம் செல்லவிருக்கின்றோம். 


"அனீஷ்.ஜெ" அவர்களின் "இப்படிக்கு அனீஷ்.ஜெ" வலைப் பதிவிற்குச் செல்ல:
http://poems.anishj.in/
*************************************************************************************************************************************************

44 Comments:

SURYAJEEVA said...
Best Blogger Tips

தொலைக்காட்சிகளில் பார்த்த நினைவு எந்த தொலைக்காட்சி என்று தான் நினைவில்லை...

maruthamooran said...
Best Blogger Tips

நிரூ...!

வேகமான திரைக்கதை கொண்ட படத்துக்கு அதே வேகமான எழுத்து நடையுடனான விமர்சனம். சூப்பர்.

தொடர்ந்தும் நல்ல ஆங்கிலப் படங்களை அறிமுகப்படுத்துங்கள். (எனக்கு அதிரடிப் படங்களின் மீது ஈர்ப்பு குறைவு. அதனால், எனைய வகையறாக்களையும் பகிருங்கள்)

மாய உலகம் said...
Best Blogger Tips

விமர்சண அலசல் அருமையான விளாசல்

மாய உலகம் said...
Best Blogger Tips

இன்று அறிமுகமாகிருக்கும் அனீஷ்.ஜெ" அவர்களுக்கு வாழ்த்துக்கள்

தனிமரம் said...
Best Blogger Tips

படம் பார்க்க ஆவலைத் தூண்டும் விமர்சனம் நேரம் கிடைக்கும் போது பார்ப்போம் !
சக பதிவாளர் அனீஸ் க்கு வாழ்த்துக்கள்!

மாய உலகம் said...
Best Blogger Tips

இயக்குனர் சேவியர் ஜென்ஸ் அவர்களை முதலில் பாராட்டிவிடுவோம்

மாய உலகம் said...
Best Blogger Tips

"you are in Fear. I'm Sorry. I can' t allow that". (நீங்க பயந்திருக்கிறீங்க, என்னால இதனை அனுமதிக்க முடியாது) என ஏஜெண்ட் 47 பேசுகையில் பேரழகி ஒல்காவை If you are looking for a reason not to kill me. I don't have one என கண்ணீரோடு வசனம் பேச வைத்து எம் விழிகளையும் நனைத்திருக்கிறார்.//

வசனத்தோடு கூடிய ஒரு காட்சிய சொல்லிட்டீங்க பார்க்க தூண்டுது நண்பா.. வாய்ப்பு அமையும் போது கண்டிப்பாக பார்ப்பேன்.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

ஆஹா, கில்மா படம் போல... போட்டுத்தாக்குங்கோவ்,,

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>Your comment has been saved and will be visible after blog owner approval.

ஓனர் காரு ஓனர் காரு.. ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

அறிமுகப்பதிவருக்கு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>ஆக்‌ஷன் பட விரும்பிகளையும், காதல் ரசனையுள்ளவர்களையும், கவர்ச்சிக் காட்சி விரும்பிகளையும் ஒருங்கு சேர்த்துத் திருப்திப்படுத்தும் தரமான கமர்சியல் படைப்பினை எல்லா நேரத்திலும் இயக்குனர்களால் வழங்க முடிவதில்லை. கமர்சியல் படைப்பாகப் பல தரப்பட்ட ரசனையுள்ளவர்களின் மன ஓட்டத்தினைப் புரிந்து கொண்டு ஒரு படத்தினை இயக்குனர் தருகின்ற போதும் படத்தினைப் பார்ப்பதற்கான வயதெல்லை என்பது அப் படத்திற்கு கிடைக்கும் சமூக அங்கீகாரத்தினை உடைத் தெறிந்து விடும்.

அழகிய அவதானிப்பு

Mathuran said...
Best Blogger Tips

அசத்தலான விமர்சனம் பாஸ்..

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>suryajeeva said...

தொலைக்காட்சிகளில் பார்த்த நினைவு எந்த தொலைக்காட்சி என்று தான் நினைவில்லை...

விஜய் டி வி லயும் , கலைஞர் டி வி லயும் போட்டுட்டாங்க

Mathuran said...
Best Blogger Tips

அனீஷுக்கு வாழ்த்துக்கள்

மாய உலகம் said...
Best Blogger Tips

திரிலிங் பிரியர்களுக்கும், பொழுது போக்கு எண்ணம் கொண்டோருக்கும் இப் படம் நல்லதோர் விருந்தாக அமையும்.//

அட நம்ம டேஸ்ட்

கோகுல் said...
Best Blogger Tips

பாஸ்.,கலக்குறிங்க போங்க!

Unknown said...
Best Blogger Tips

சுறு சுறு படம் விறு விறு விமர்சனம் அருமை நிரூ

நிரூபன் said...
Best Blogger Tips

இனிய காலை வணக்கம் யோகா ஐயா,

இன்று இரவு (உள்ளூர் நேரப் படி) என் வலையில் ஒரு விவாத மேடை

"ஈழத்தில் இயல்பு நிலை தோன்றினால் புலம் பெயர் உறவுகள் தாயகம் திரும்புவார்களா?

வித்தியாசமான முறையில் என் கருத்துக்களை மாத்திரம் பதிவாகத் தந்து விட்டு, உங்களை முதன்மை நடுவராகவும்,
இவ் விவாதத்தினை நெறிப்படுத்தும் நபராகவும் அறிவிக்கவுள்ளேன்.

நான் இறுதியாக தொகுப்புரையாக உங்கள் அனைவரினதும் கருத்துக்களைத் தொகுத்து வெளியிடலாம் என்று எண்ணியுள்ளேன்.

இதற்கு தங்களின் அனுமதி தேவை.
தாங்கள் ஓக்கே தானே?

rajamelaiyur said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம்

செங்கோவி said...
Best Blogger Tips

விமர்சனமும் விறுவிறுன்னு போகுதே...

செங்கோவி said...
Best Blogger Tips

//கமர்சியல் படைப்பாகப் பல தரப்பட்ட ரசனையுள்ளவர்களின் மன ஓட்டத்தினைப் புரிந்து கொண்டு ஒரு படத்தினை இயக்குனர் தருகின்ற போதும் படத்தினைப் பார்ப்பதற்கான வயதெல்லை என்பது அப் படத்திற்கு கிடைக்கும் சமூக அங்கீகாரத்தினை உடைத் தெறிந்து விடும்.//

கலக்கல் நிரூ..

செங்கோவி said...
Best Blogger Tips

நமக்கு த்ரில்லிங், பொழுதுபோகு ரெண்டுமே பிடிக்கும்..

Torrent இருக்கா?

Unknown said...
Best Blogger Tips

மாப்ள கலக்கலான விமர்சனம்...ஒல்கா என்பவங்க ஓட்கா மாதிரியோ...நன்றி!...அறிமுகப்பதிவருக்கு வாழ்த்துக்கள்!..அருமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

Unknown said...
Best Blogger Tips

நல்ல த்ரில்லிங்கா சொல்லிருக்கீங்க

விமர்சண அலசல் அசத்தல்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////
"ஈழத்தில் இயல்பு நிலை தோன்றினால் புலம் பெயர் உறவுகள் தாயகம் திரும்புவார்களா?
நான் இறுதியாக தொகுப்புரையாக உங்கள் அனைவரினதும் கருத்துக்களைத் தொகுத்து வெளியிடலாம் என்று எண்ணியுள்ளேன்.////

ஆகா இன்று ஒரு சூப்பர் மேட்டரை விவாதத்துக்கு எடுத்து இருக்கீங்க நான் இன்று இந்தவிவாத மேடையில் கலந்து கொள்ளப்போவது இல்லை.....அமைதியாக இருந்து கமண்டுகளை ரசிக்கப்போகின்றேன்..............

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அறிமுகப்படுத்திய பதிவருக்கு வாழ்த்துக்கள் பாஸ்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அப்பறம் நான் இந்தப்படம் ஏற்கனவே பார்த்துவிட்டேன் உங்கள் விமர்சனம் சூப்பர் பாஸ்..

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்..

அறிமுக பதிவருக்கு வாழ்த்துக்கள்..

M.R said...
Best Blogger Tips

பட விமர்சணம் அருமை நண்பரே

அறிமுகம் செய்துள்ள பதிவருக்கு வாழ்த்துக்கள்

காட்டான் said...
Best Blogger Tips

ஆகா இண்டைக்கு புலத்து தமிழர்களின் செம்பு நெளியபோகுதா??

மகேந்திரன் said...
Best Blogger Tips

அன்புநிறை நண்பரே...
கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
பொறுத்தருள்க...

விமர்சனம் விறுவிறுன்னு இருக்கு நண்பரே.

அறிமுகப் பதிவர் அனீஸ்.ஜெ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

திரைப்பட விமர்சனப் பகிர்வுக்கு நன்றி .இன்றைய அறிமுக பதிவருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் சகோ .....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அறிமுக பதிவருக்கு வாழ்த்துக்கள்....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அட்டகாசமான விமர்சனம் மக்கா தூள்....!!!!

Unknown said...
Best Blogger Tips

ஆல்ரெடி பார்த்தாலும்,உங்க விமர்சனம் வித்தியாசமா இருக்கு!

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மச்சி விமர்சனும் கலக்கலா போடுற..
கீப் இட் அப் ..

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

உங்கள் விமர்சனத்தில் இருக்கும் இருக்கும் கவர்ச்சியும்...காந்தமும்
ஹாலிவுட் மசாலா படங்களை வெறுக்கும் என்னையே புரட்டிப்போட்டு விட்டது.

கிடைத்தற்க்கு அரிய இந்த ஆற்றலை பயன்படுத்தி நல்லதொரு உலகசினிமாவுக்கு எழுத மாட்டீர்களா?சகோ...
பிரியத்தோடு காத்திருக்கிறேன்.

test said...
Best Blogger Tips

கலக்கல் பாஸ்! :-)

பிரணவன் said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை சகா. . .

கூடல் பாலா said...
Best Blogger Tips

நலமா மாப்ள ...

கூடல் பாலா said...
Best Blogger Tips

இன்னொரு தடவை தொலைகாட்சியில் ஒளிபரப்பினால் பார்க்கலாம்

vanathy said...
Best Blogger Tips

நிரூ, இங்கிலீஸூ படமா? சிறுவர்களுக்கான படம் தவிர்த்து வேறு படங்கள் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 6 வருடங்கள் முன்பு ஜேம்ஸ்பான்ட் படம் பார்த்தேன்.

Anonymous said...
Best Blogger Tips

விமர்சனம் தூள்...
அதான் நான் விமர்சனத்தை விட்டுவிட்டேன்...

அறிமுகப்பதிவருக்கு வாழ்த்துக்கள்...

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

சூப்பர் நண்பா.. வழமை போலவே விமர்சனம் கலக்கல்.. பார்க்க முயற்சிக்க வேண்டும்...

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails