விவாத மேடை:
பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, உங்கள் அனைவரையும் மீண்டும் மற்றுமோர் விவாதமேடை பதிவினூடாகச் சந்திப்பதையிட்டு அகம் மகிழ்கின்றேன். ஈழத் தமிழர்களுள் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை நாம் பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்ளலாம்.
*உயர்கல்வி நோக்கிலும்,தமது கல்வித் தகமை அடிப்படையில் (Professional Qualification) புலம் பெயர்ந்தோர் (Skilled Migrants)
இம் மக்கள் எக் காலத்திலும் தாயகம் திரும்ப மாட்டார்கள். காரணம் இவர்கள் தாமாகவே வசதி வாய்ப்புக்களினைத் தேடிப் புலம் பெயர்ந்த மக்கள்.
*ஈழத்தின் உள் நாட்டுப் போர் காரணமாக அடைக்கலம் தேடி புலம் பெயர்ந்தோர் (Asylum Seekers)
*ஈழப் போரைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையில் வாழ முடியாது என்று பொய் சொல்லி, உண்மையாகவே ஈழத்தில் வாழ முடியாத அச்சம் கொண்ட மக்களைப் போலத் தாமும் போரினால் பாதிக்கப்பட்டோம் எனக் கூறி வெளி நாட்டில் அதிகளவான பணம் உழைக்கலாம் எனும் நோக்கில் புலம் பெயர்ந்தோர். இந்த இரு வகை மக்களில் தாம் வாழும் நாட்டின் குடியுரிமை வைத்திருப்போர் அவற்றையெல்லாம் விசிறி எறிந்து விட்டுத் தாயகம் திரும்ப மாட்டார்கள்.
இனி விவரணச் சுருக்கம்: ஈழத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1995ம் ஆண்டு வாழ்ந்த "X" எனும் நபர் தான் யாழில் இராணுவ முற்றுகைக்கு உள்ளாகி விடுவேன் எனக் கருதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் செல்கின்றார். அங்கே புலிகள் கட்டாய ஆட் சேர்ப்பினை நடை முறைப்படுத்தும் போது, வெறுப்படைந்து புலிகள் மீது கோபம் கொண்டவராய் புலிகளுக்குத் தெரியாது வவுனியாவிற்கு ரகசியமாகப் போகின்றார். பின்னர் வவுனியாவிலிருந்து தம் உறவினர்களின் உதவியுடன் வெளி நாட்டிற்குப் போகின்றார்.
புலம் பெயர்ந்த பின்னர் தனக்கு யாழில் இராணுவத்தால் அச்சம் என்றும் வன்னியில் புலிகள் பயங்கரவாதிகளாகச் செயற்பட்டார்கள் அதனால் அவர்களால் தனக்கு அச்சம் என்றும், இலங்கையின் ஏனைய பகுதிகளில் தன்னால் வாழ முடியாத படி துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் சொல்லி மூன்றாம் உலக நாடொன்றினுள் அடைக்கலம் கோரும் மேற்படி நபர் காலவோட்ட மாற்றத்தில் புலிக் கொடியினைக் கையிற் பிடித்தவாறு "We want Tamil Eelam, Tamil Tigers Freedom Fighters, Tamil Are LTTE, LTTE Are Tamils" எனக் கோஷமிட்டபடி ஐரோப்பிய நகர வீதிகளில் உலாவருகின்றார். இந் நபர் போல பல புதிய முகங்களிற்கு ஈழம் மீதான தீராத காதல் புலம் பெயர்ந்த பின்னர் தான் உருவாகின்றது. இந் நபர்கள் ஈழத்தில் இயல்பு நிலை தோன்றினால் ஈழத்திற்குத் திரும்பி வந்து வாழத் தயாராக இருப்பார்களா?
இனி பதிவின் மையக் கருத்து: நான் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகையான புலம் பெயர் மக்களில் பணமீட்டுவதற்காகப் புலம் பெயர்ந்தோரும், அகதி அந்தஸ்துக் கோரும் வகையில் புலம் பெயர்ந்தோரும் உண்மையில் மிக மிக கடுமையாக, இரவு பகல் உறக்கமின்றித் தம் சந்ததியினை கஷ்டமின்றி வாழ வைப்பதற்காகவும், தாம் படும் துன்பங்களை அவர்களும் எதிர் நோக்காமல் வாழ வேண்டும் எனும் நோக்கத்தில் அல்லும் பகலும் உழைக்கின்றார்கள். அதே வேளை இம் மக்களில் பெரும்பாலானவர்களின் கனவாக "We Want Tamil Eelam" என்பது தான் இருக்கின்றது.
தம் தாய் நிலத்திற்கு எக் காலத்திலும் திரும்பி வருகின்ற உணர்வினைப் பெற்றிருக்காதவர்களாக இம் மக்கள் வாழ்ந்தாலும்; தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும் எனும் கொள்கை கொண்டவர்களாவும், ஈழத்தில் வாழும் மக்களுக்காக நாம் குரல் கொடுத்து உலக நாடுகளின் ஆதரவினைப் பெற்று ஈழ மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனும் நோக்கம் உடையோராகவும்; கொட்டும் பனியிலும், குளிர் மழையின் மத்தியிலும் அணி திரண்டு எழுச்சிப் போராட்டங்களை மேற் கொண்டு ஈழ மக்கள் மீதான தம் பாசத்தினை வெளிப்படுத்திக் காட்டுகின்ற நல்ல மனப்பான்மை கொண்டோராகவும் இப் புலம் பெயர் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
"மனிதாபிமானமும், வசதி வாய்ப்புக்களும் மலிந்திருக்கும் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் இம் மக்கள் இலங்கையில் இயல்பு நிலை தோன்றினால் திரும்பி வருவார்களா?" அல்லது திரும்பி வரத் தயாராகுவார்களா? என்று வினா ஒன்றினை முன் வைக்கையில் இதற்கான விடையாக என்னால் முன் வைக்கக் கூடிய பதில் நிச்சயமாகப் புலம் பெயர் மக்களில் நூற்றிற்கு 95% வீதமான மக்கள் இலங்கை எனும் அபிவிருத்தி குறைந்த செம்மண் உடைகளில் ஒட்டிக் கொள்ளும் நாட்டிற்கு வந்து வாழத் தயாரில்லை.
இலங்கையில் வசதி வாய்ப்புக்கள் குறைவாக காணப்பட்டாலும், இலங்கை அபிவிருத்தி அடைந்த பின்னர் ஈழத்திற்கு இப் புலம் பெயர் உறவுகள் திரும்பி வருவார்கள் என்று யாராவது நினைத்தால் அதுவும் தவறு. தமது பிள்ளைகளை தாம் வாழும் நாட்டின் மொழியில் கல்வி கற்க வைத்து தமது எதிர் காலச் சந்ததிகள் வல்லவர்களாக உருவாக வேண்டும் எனும் நோக்கில் செயற்படும் புலம் பெயர் உறவுகளில் யாராவது தம் குடியுரிமைகளைத் தூக்கியெறிந்து விட்டு;
"செந் தமிழ் பேசித் தம் காலத்தைக் கடத்தும் ஈழத் தமிழர்கள் வாழும் வட கிழக்குப் பகுதியில் மீண்டும் வந்து குடியேறத் தயாராகுவார்களா?" இல்லைத் தானே!
அடுத்ததாக இலங்கையின் கடவுச் சீட்டினை விட மேற்குலக, கிழக்குப் பிராந்திய நாடுகளின் கடவுச் சீட்டிற்கு அனைத்துலக ரீதியில் உள்ள மதிப்பினை நன்கு உணர்ந்த புலம் பெயர் உறவுகள் இக் கடவுச் சீட்டினைத் தூக்கித் தூர வீசி விட்டுத் தாயகத்திற்குத் திரும்பத் தயாராகுவார்களா? அப்போ ஏன் இவர்கள் தமிழீழம் வேண்டும், தமிழர்களுக்குத் தாம் எப்போதும் ஆதரவு எனக் குரல் எழுப்புகின்றார்கள்? என்று யாராவது கேள்வியெழுப்பலாம். இச் செயல்களுக்கான காரணம், தொப்புள் கொடி மக்கள் மீதான பாசத்தின் வெளிப்பாடும், சிங்களவனைக் கொல்ல வேண்டும் என்கின்ற பழிக்குப் பழிவாங்கும் போர் வெறியின் மீதான எதிர்வினை ஆற்றலுமேயாகும்.
போர்க் காலத்தில் பல தரப்பட்ட பேருதவிகளைச் செய்த புலம் பெயர் தமிழர்கள் போரில் தமிழர் சேனை வெற்றி பெற்ற வேளைகளில் அகம் மகிழ்ந்தவர்களாகவும், ஈழத் தமிழினம் போரில் என்ன விலை கொடுத்தாவது வெற்றியீட்ட வேண்டும் என எண்ணம் கொண்டவர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். இதற்கு எடுத்துக் காட்டாக ஊர் போகும் மேகங்கள் எனும் விடுதலைப் புலிகளின் பாடல் இறு வட்டில் பின் வருமாறு ஒரு பாடலை வெளியிட்டிருந்தார்கள்.
"உலகத் தமிழர் ஒன்றாய் நின்று சபதம் எடுக்கின்றோம்
எங்கள் உடல் பொருள் ஆவி எதுவென்றாலும் உடனே கொடுக்கின்றோம்
உரிமைக்காக எரியும் தீயில் திரியாய் நாங்கள் எரிவோம்
எங்கள் தலை முறைக்காக சாவரும் போதில்
சந்தோசத்தில் சிரிப்போம்!
ஆயிரம் அர்த்தங்கள் இப் பாடலில் இருக்கு என்று சொல்லுகிறார்கள். என்னக்கென்னமோ புரியவில்லை.
"தாம் விரும்பிய போது விரும்பிய இடத்திற்குப் போய் வரக் கூடிய வசதி, அதி நவீன மருத்துவ வசதிகள், சலுகையுடன் கூடிய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள், சொகுசான மேற்குலகில் வாழ்கின்றோம் எனும் பெருமை நிறைந்த வாழ்க்கை முறை இவை எல்லாவற்றையும் தூசெனத் தூக்கி எறிந்து விட்டு ஈழத்தில் இயல்பு நிலை தோன்றினால் புலம் பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்களா?" உங்களின் காத்திரமான கருத்துக்களை இந்த விவாத மேடையில் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா.
முக்கிய குறிப்பு: இன்றைய விவாத மேடைப் பதிவு வித்தியாசமான விவாத மேடைப் பதிவாக வருகின்றது. இப் பதிவில் வழமையான விவாத மேடைப் பதிவுகளைப் போன்று நான் விவாதிக்க மாட்டேன். பதிவர்களான "திரு. யோகா ஐயா," "திரு காட்டான் அண்ணா" ஆகியோர் இந்த விவாத மேடையினை இன்றைய தினம் வழி நடத்துவார்கள். பதிவின் இறுதியில் நான் அனைவரின் கருத்துக்களையும் உள் வாங்கித் தொகுப்புரையாக விவாதத்தின் சாராம்சத்தினைத் தருகின்றேன். உங்களுக்கான விவாதக் களம் நாற்று வலைப் பதிவில் இப்போது திறந்திருக்கிறது. உங்களின் கருத்துக்களோடு உடனே களமிறங்கலாம் அல்லவா.
பதிவின் மையக் கருவினைத் தந்ததோடு, இந்த விவாத மேடைக்கான கருப் பொருளை மேற்படி தலைப்பின் கீழ் வைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியவர் "தனிமரம்" வலைப் பதிவின் சொந்தக் காரன் "தனிமரம்" அவர்கள்.
***************************************************************************************************
இன்றைய பதிவினூடாக நாம் செல்லவிருக்கும் வலைப் பூவின் பெயர் சகோதரி ஸாதிகா அவர்களின் "சாம்பிராணி" வலைப் பூவாகும். இவ் வலைப் பூவினூடாக கவிதை, சமையற் குறிப்புக்கள், குழந்தை வளர்ப்பு, அலங்கார - அழகு குறிப்புக்கள் எனப் பல தரப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து வருகின்றார் ஸாதிகா அவர்கள்.
"ஸாதிகா" அவர்களின் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" வலைப் பூவிற்குச் செல்ல:
*****************************************************************************************************
|
207 Comments:
«Oldest ‹Older 201 – 207 of 207 Newer› Newest»பாரதியாரின் வாய்ச்சொல்லில் வீரரடி என்ற வார்த்தைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்கள் எனக் கனவுகாணவேண்டாம். அவர்கள் இங்கிருந்துகொண்டு தாயக உறவுகளை உசுப்பிவிட்டு அவ்ர்களின் இழப்புக்களில் குளிர்காய்வார்களேயன்றி ஒருபோதும் தாயகம் திரும்பமாட்டார்கள். பிரச்சனை தீர்ந்துவிட்டது என்ரு இங்கிருந்துகொண்டே தாயகத்தில் சொத்துக்களை வாங்கிச் சேர்ப்பதிலும் அங்கு எதில் முதலிட்டால் அதிக லாபம் காணலாம் என்பதற்கும் செலுத்தும் அக்கறையில் 1 வீதமேனும் அங்கு பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்டத்தில் வாழும் வன்னிமக்களின் வாழ்வாதாரத்தி மாற்ற செலுத்துகிறார்களா?
புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்கள் எனக் கனவுகாணவேண்டாம். அவர்கள் இங்கிருந்துகொண்டு தாயக உறவுகளை உசுப்பிவிட்டு அவர்களின் இழப்புக்களில் குளிர்காய்வார்களேயன்றி ஒருபோதும் தாயகம் திரும்பமாட்டார்கள். பிரச்சனை தீர்ந்துவிட்டது என்ரு இங்கிருந்துகொண்டே தாயகத்தில் சொத்துக்களை வாங்கிச் சேர்ப்பதிலும் அங்கு எதில் முதலிட்டால் அதிக லாபம் காணலாம் என்பதற்கும் செலுத்தும் அக்கறையில் 1 வீதமேனும் அங்கு பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்டத்தில் வாழும் வன்னிமக்களின் வாழ்வாதாரத்தி மாற்ற செலுத்துகிறார்களா?
அன்புள்ள நிரூபன், நேசன் அண்ணா, யோகா ஐயா ஆகியோருக்கு!
நான் இப்பதிவின் மையக்கருத்தில் இருந்து விலகி விதண்டாவதம் செய்ததாக நீங்கள் சொல்கிறீர்கள்! புலம்பெயர் தமிழர்கள் இயல்புநிலை தோன்றின் மீண்டும், ஈழத்தில் வாழ வருவார்களா இல்லையா? என்பதே இப்பதிவின் மையக்கருத்து என்பதை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு நான் ஒன்றும் தமிழ் படிக்காதவன் அல்லன்!
மேலும், இக்கேள்விக்கான விடை மிகவும் சிம்ப்ளானது! அது என்னவென்றால் ஈழத்தில் இயல்பு நிலைதோன்றப் போவதுமில்லை! புலம்பெயர்மக்கள் அங்கு போகப் போவதும் இல்லை!
அதுபற்றி மேலும் சொல்வதற்கு எதுவுமே இல்லை!
இப்பதிவில், புலம்பெயர் மக்களை வகைப் பிரித்ததில் நிருபன் தவறுவிட்டிருப்பதை நீங்கள் யாருமே புரிந்துகொள்ளவில்லையா?
ஈழத்தில் போராட்டத்துக்குப் பங்களிக்காத ஒருவர், புலம்பெயர்ந்து வந்த பின்னர் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஒரு குற்றமா?
மேலும் ஈழத்தில் இருந்த போது, ஒருவருக்கு வராத போராட்ட உணர்வு வெளிநாட்டிற்கு வந்ததும் எப்படி உருவாகிறது? என்பதை உளவியல் ரீதியாக ஆராய்ந்து நான் ஒரு பதிவிட்டிருக்கிறேன்!
http://www.tamilaathi.com/2011/09/blog-post_15.html
மேற்படி லிங்கில், அந்த பதிவினைப் படிக்க முடியும்!
இன்று இன்னொரு பதிவு போடுகிறேன் பார்க்கவும்!
புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாவது, மூன்றாவது சந்ததிகளை எடுத்துக்கொண்டால் புலம்பெயநாடுகளே அவர்களது தாயகம்போன்று உள்ளதால் அவர்களை குறைசொல்லமுடியாது.
விவாத மேடை சூடு பறக்கிறது.. சாதிகாவுக்கு வாழ்த்துக்கள்
சரியான சூழ்நிலைகள் அமைந்தால் பலர் தாயகம் திரும்புவார்கள் என்றே கருதுகிறேன்.
Post a Comment