ஆர்வமுள்ளோருக்காக, பழைய அரட்டைகளை நீங்கள் இங்கே சென்று படிக்கலாம்.
கையில் இருந்த ஆப்பிள் ஐபோனின் உதவியுடன், தமிழகத்தின் முன்னணி நாளிதழின் பரபரப்பு மிகுந்த செய்திகளைத் தாங்கி வெளியாகிய வலைப் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தான் நிரூபன்...
திடீரென, மரத்தடிக்குப் பின்னாடி கேட்ட சவுண்டைத் தொடர்ந்து திரும்பிப் பார்க்கையில், கைகளில் அவல், கடலை சுண்டல் முதலிய கோயில் பிரசாதங்களோடு மணியண்ணை, இளையபிள்ளையாச்சி, குணத்தான் முதலியோர் ஆலமரத்தடிக்க்கு அரட்டைக்காக வருகிறார்கள்.
நிரூபன்: என்ன எல்லோரும் மாநாட்டுக்கு லேட்டா வாறீங்க.... எப்பூடி நம்ம வேலை, கோயிலுக்கு வந்தமா, பிரசாதத்தை அடிச்சு புடிச்சு வாங்கினமா, எஸ் ஆகினோமா என்றிருக்கனும்,. ஐயா இந்த வேலையிலை கில்லாடி.
மணியண்ணை: அடோய் நிரூபா, நீ ரொம்பத் ஓவராப் போய்க் கிட்டிருக்காய், கோயிலுக்கு போறது என்னாத்துக்கு? சாமி கும்பிடத் தானே. ஆனா, நீ மட்டும் கொஞ்சம் வித்தியாசமான ஆளா இருக்கியே, பிரசாதத்துக்கென்று மட்டும் கோயிலுக்குப் போறாய். நீயெல்லாம் எப்ப திருந்துறது!!
இளைய பிள்ளையாச்சி: அவன் திருந்துறதோ... அரசியல்வாதிகளைப் போல உவன் நிரூபனையும் திருத்த முடியாது. கேட்டியளோ சங்கதி! நம்மடை கலைஞரின் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு காரணம் உள் வீட்டுச் சதியாம் எல்லேய்.
குணத்தான்: என்ன கிழவி சும்மா பீலாவோ வுடுறாய், உண்மையைச் சொல்லு.
நிரூபன்: குணத்தான் உங்களுக்கும் வேற வேலை இல்லேய்....கிழவி சும்மா எங்கயாச்சும் சைட் கப்பில் நியூஸை சுட்டுக் கொண்டு வந்திருக்கும். நீங்க போய் நிஜமாவோ என்று கேட்கிறீங்க....ஹி....ஹி...
இளைய பிள்ளை: நானும் பார்க்கிறன். உனக்கு வால் நீண்டு போச்சு நிரூபன். கொஞ்ச நாளா ஒரு மாதிரியாத் தான் பேசுறாய். என்ரை வாயில் இருந்து எப்பவாச்சும் பொய் ஏதும் வந்திருக்குமே
நிரூபன்: நீ என்ன வாய்க்கு லிப்ஸ்டிக்கு பதிலா டாஸ்க்மாக்கே அடிக்கிறனீ? பொய் வாறதுக்கு?சும்மா ஓவராப் பிலிம் காட்டாமல் மேட்டருக்கு ஸ்ரைட்டா வா கிழவி.
இளைய பிள்ளை: கலைஞரின் உள் வீட்டுக்குள் இடம் பெற்ற ஊழலை முதன் முதலா, ஒட்டி இருந்து குட்டுப் போடுற ஆள் மாதிரி பக்கம் இருந்து கலைஞரின் மானத்தை கப்பலேற்றும் வகையில் உலகறியச் செய்தவர், வெளியாட்கள் இல்லையாம். அவரோடை மருமகன் தயாநிதி மாறன் தானாம்.
மணியண்ணை: நானும் உந்த நியூஸ் அறிஞ்சிருக்கேன். உவர் மாறன் மருமகன் குடும்பம் தானாம், அடிச்ச எமவுண்டிலை ஐயா கூட்டம் கருணை காட்டவில்லை என்ற கோபத்திலையும், தனக்குப் பெரிய பதவி கிடைக்கலை என்ற ஆத்திரத்திலயும் உலக நாடுகளுக்கும், இந்திய உளவுத் துறைக்கும் தகவல் கொடுத்தவர் என்று இப்போ விக்கிலீக்ஸ் புதிதாக ஒரு குண்டையெல்லே போட்டிருக்கு.
குணத்தான்: குண்டைப் போட்டிருகீனமோ.. உள் வீட்டிற்குள் இருந்து குழி பறிச்ச நரியையெல்லே கண்டு பிடிச்சிருக்கீனம், ஹி....ஹி.....
இளைய பிள்ளை: என்ன தான் நீங்க சொன்னாலும் கலைஞர் கொஞ்சமாச்சும் தன்ரை கடந்த ஆட்சியிலை மாறனுக்கும் கருணை காட்டி, தன் குடும்பத்திற்கும் கருணை காட்டியிருக்கலாம். கடந்த ஆட்சியிலை தன்ரை குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது ஒரு தடவையாச்சும் முதல்வர் கதிரையிலை உட்காரச் சந்தர்ப்பம் குடுத்திருக்காலாமில்லேய்,
குணத்தான்: அப்போ கலைஞர் ஒரு சபை குழப்பி என்று சொல்ல வாறீங்களோ?
மணியண்ணை: மெய் தான் பாருங்கோ, மனுசன் கடந்த ஆட்சியிலை, தன்ரை வம்சங்களில் யாராவது ஒருவருக்கு, அல்லது தன்னோட கட்சியில பொருத்தமான ஒருவருக்கு பதவியை விடுக் கொடுத்திருந்தா, நல்ல மேட்டரா இல்லே இருந்திருக்கும். இனித் திமுக ஆட்சிக்கு வர ஐந்தாண்டு ஏலேய் பொறுத்திருக்கனும்.
நிரூபன்: அடிங் கொய்யாலா....ஐயா எதுக்குப் பதவியைக் கொடுக்கனும்? நல்லாத் தான் பேசுறீங்க நீங்க. தங்கடை பரம் பரைக்கு பெரிய பாரத்தையெல்லேய் கொடுத்திருக்கிறார். அதுவும் 1.76 கோடி இலட்சம் என்றால் சும்மாவே....ஒரு பெரிய எமவுண்டெல்லே தன்னோட ஆட்சியில ராசா மூலமா பெற்றுக் கொடுத்திருக்கிறார். இதை விட ஐயாகிட்ட வேறை என்னத்தை அவங்களின் கட்சி, குடும்பம் எதிர்பார்க்கனும்?
குணத்தான்: ஐயா கொடுத்தது இருக்கட்டும், ஆனால் பாவம் கனி மொழி, நல்ல ஒரு கவிஞர்- அவரையும் இந்த விடயத்தோடு தொடர்புபடுத்தி ஐயா கட்சி ஆளுங்க திஹார் ஜெயிலுக்கெல்லே அனுப்பிட்டாங்க....இப்போ அவா
‘இலட்சங்களை எண்ண முடியாமல் அவதியுற்ற எனக்கு
இக் கட்டான நிலையில் எட்டுக் கம்பியை அல்லவா
எண்ண வைத்து விட்டாய் என் தந்தையே!’’
என்று கவிதை வேறு லேட்டஸ்ஸா எழுதியிருக்கிறா.
மணியண்ணை: இந்த நாடகங்களைப் பார்த்து, தினமும் நொந்து நொந்து சிரிக்கிற தமிழக மக்கள் நிலமை தான் பரிதாபம். ஐயா காலத்தில் நாட்டில் நன்மை கிடைக்கலை என்று, ஒரு சேஞ்சுக்கா அம்மாவை செலக்ட் பண்ணினால் அம்மா காலத்திலயும் இப்ப அதே நிலமை மாதிரி ஏலேய் இருக்கு.
இளைய பிள்ளை: என்ன மணியத்தார் சொல்றீங்க. ஏதோ புதுக் கதை பேசுற மாதிரி இருக்கே
நிரூபன்: கிழவி இது ஒன்றும் புதுக் கதை இல்லை.
பார்த்தியா எல்லா மேட்டரையும் முந்திக் கொண்டு அறிகிற உனக்கு இந்த மேட்டர் சிக்கலை...ஹி....நீ எப்பவுமே பழைய சிஸ்டம் தான்....போ...போய் உன் கம்பியூட்டரோடை ஸ்ப்பீட்டை கூட்டுற வழியைப் பாரு.
மணியண்ணை: நிரூபா, உன்ரை குழப்படிக் குணத்தைக் காட்டுறதை வுடுடா....
ஆச்சியை ஓவராத் தான் கிண்டல் பண்ணுறாய்.
அம்மா விடிவு தருவா. கலைஞர் கண் திறக்காத இடத்தில் எல்லாம் கண்ணைத் திறந்து மக்கள் வாழ்விற்கு ஒளியேற்றுவா என்று அம்மாவைத் தெரிவு செய்தால், அம்மாவும் ஐயா செய்த செயலைத் தான் மக்களுக்குப் பண்ணுவா போல இருக்கே. அவாவின் செயற்பாடுகள் அப்படி ஒரு நம்பிக்கையினைத் தானே நமக்குத் தருது...
குணத்தான்: பதவியேற்று கொஞ்ச நாள் ஆக முன்னாடியே, ஐயா கட்டின சட்ட மன்றம் நான் போக மாட்டேன் என்று ஒரு பிடிவாதம்,
சமச்சீர் கல்விக்கு இனிமே ஆப் என்று ஒரு ஆப்பு வைத்திட்டா.
அப்புறமா இனி வருங் காலத்தில் புதிதாக நடை பெற்றுக் கொண்டிருக்கிற மெட்ரோ ரயில் பணிகளை இடை நிறுத்தி, அதற்குப் பதிலாக மொனோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்திற ஐடியாவும் கைவசம் வைத்திருக்கிறா.
ஏழைப் பெண்கள் திருமண விடயத்தில்- வருடாந்த சம்பளம் அடிப்படையில் குழப்பங்கள் எனப் பல விடயங்களை இசகு பிசகா ஏலேய் அம்மாவும் பண்ணுறா.
இளையபிள்ளை: மெய் தான் குணத்தான். மக்களுக்கு நல்ல ஆட்சி வரும் என்று தானே அம்மாவை தெரிவு செய்தாங்க. அவாவும் பாதையினை மாற்றி, புதிய வழியில் போக மாட்டேன் என்று சொன்னால் மக்கள் என்ன தான் பண்ணுவது. இந்த நிலமையினைப் பார்த்தா, அடுத்த எலக்சனிலை விஜயகாந்த் முதல்வரா ஆகினாலும் ஆகிடுவார் போல இருக்கே....
நிரூபன்: என்ன தான் இருந்தாலும் நீங்க அம்மாவின் ஆட்சி தொடங்கிப் பல மாதங்கள் கடக்க முன்னாடியே அவாவின் ஆட்சி பற்றி விவாதித்து, விமர்சிப்பது எனக்கு சரியாகப் படலை. ஆகவே இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துப் பார்க்கிறது. அம்மா பாதை மாறி,புதிய பாதை காட்டலாமில்ல..இன்னும் ஐஞ்சு வருசம் இருக்குத் தானே!
குணத்தான்: டைம் ஆகுது. நேரமும் இருட்டுது. ஏலோய் எல்லோரும் கிளம்புவமோ.
எல்லோரும் வீடு செல்வதற்காக கிளம்புகிறார்கள். அப்போது நிரூபனின் ஆப்பிள் ஐபோன் Version 8 இல் இருந்து...
’உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
ஓட்டுப் போட்ட குற்றமிது
ஒன்னுமில்லை மிச்சமடி............... எனப் பாடல் ஒலிக்கிறது.
இளைய பிள்ளை: ஏலேய் பொடியா, இது என்ன ரீமேக் பாடலோ. பாட்டுப் புதுசா இருக்கு;
நிரூபன்: இல்லையாச்சி, இது என்னோடை ஆப்பிள் ஐ போன் வேர்சன் எட்டில் வாற சந்தர்ப்பத்திற்கேற்ற சிட்டுவேசன் சாங்ஸ்...
நாம மனசிலை நினைக்கிறதை அப்படியே பாடலா சொல்லுறது தான் இந்த ஐ போன் எட்டாம் வேர்சனின் ஸ்பெசாலிட்டி...
இது எப்பூடி..
டிஸ்கி: ஓடோடி வந்து பதிவினைப் படிக்காது, பதிவின் தலைப்பை மட்டும் பார்த்து விட்டு மைனஸ் ஓட்டுப் போடத் துடிக்கும் உள்ளங்களே! பதிவினைக் கொஞ்சம் படிக்கிறது, அப்புறமா முடிவெடுக்கலாமில்லே, அவசரம் வேணாம் கூட்டாளி,
இப் பதிவில் மைனஸ் ஓட்டுப் போடுமளவிற்கு எந்த விடயமும் இல்லேங்க மக்கள்ஸ். அப்புறம் எதுக்கு டைம்மை வேஸ்ட் ஆக்கிறீங்க...
ஹி......ஹி....
டிஸ்கி: ஓடோடி வந்து பதிவினைப் படிக்காது, பதிவின் தலைப்பை மட்டும் பார்த்து விட்டு மைனஸ் ஓட்டுப் போடத் துடிக்கும் உள்ளங்களே! பதிவினைக் கொஞ்சம் படிக்கிறது, அப்புறமா முடிவெடுக்கலாமில்லே, அவசரம் வேணாம் கூட்டாளி,
இப் பதிவில் மைனஸ் ஓட்டுப் போடுமளவிற்கு எந்த விடயமும் இல்லேங்க மக்கள்ஸ். அப்புறம் எதுக்கு டைம்மை வேஸ்ட் ஆக்கிறீங்க...
ஹி......ஹி....
|
66 Comments:
நான் தான் first ஆ !!!!!
அரட்டைங்கோ...
Nan second
Good aratdai
@angelin
நான் தான் first ஆ !!!!!//
அவ்....ஒன்னு இரண்டு சொல்லுறது அப்புறமா இருக்கட்டும்,
கஸ்டப்பட்டு பதிவெழுதியிருக்கேன், ஏதாச்சும் சொல்லாமில்லே
@"என் ராஜபாட்டை"- ராஜா
Nan second//
என்னங்க இங்க நான் கோயில் பிரசாதமா கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.
@"என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி சகோ.
வணக்கம் சார்!
வணக்கம் அண்ணே
வணக்கம் தம்பி!
டேய் வணக்கமடா
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வணக்கம் சார்!//
வணக்கம் குழந்தாய்,
அதென்ன பல உறவு முறை சொல்லி கூப்பிடுறீங்க...
மச்சி பதிவ பற்றி பிறகு கதைக்கிறன்! முதல்ல எனக்கொரு டவுட்!
வதன நூல் என்றால் என்ன?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மச்சி பதிவ பற்றி பிறகு கதைக்கிறன்! முதல்ல எனக்கொரு டவுட்!
வதன நூல் என்றால் என்ன?//
பன்னி, உனக்கு வதனம் என்றால் என்ன என்று தெரியாது,
அழகிற்கும் வதனம் என்று சொல்லுவாங்கள்,
அதே போல மூஞ்சியையும் வதனம் என்று சொல்லுவாங்க...
இன்னும் நிறைய விளக்கம் இருக்கு.
///அடோய் நிரூபா, நீ ரொம்பத் ஓவராப் போய்க் கிட்டிருக்காய், கோயிலுக்கு போறது என்னாத்துக்கு? சாமி கும்பிடத் தானே. ஆனா, நீ மட்டும் கொஞ்சம் வித்தியாசமான ஆளா இருக்கியே, பிரசாதத்துக்கென்று மட்டும் கோயிலுக்குப் போறாய். நீயெல்லாம் எப்ப திருந்துறது!!/// என்னை போலவா நீங்களும் ஹிஹிஹி
///அவரோடை மருமகன் தயாநிதி மாறன் தானாம்.// விக்கிலீக்ஸ்சிலையும் கப்பலேத்திட்டான்களே ... கலைஞர் உண்ணாவிரதம் இருந்தது நாடகம் என்று இவர் சொன்னதாக ...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மச்சி பதிவ பற்றி பிறகு கதைக்கிறன்! முதல்ல எனக்கொரு டவுட்!
வதன நூல் என்றால் என்ன?//
இன்னும் நிறைய விளக்கம் இருக்கு,
வேலையால் வந்து எல்லோருக்கும் பதில் தாறேன்.
ஆமா உனக்கெல்லாம் இது பற்றி டவுட் வரக் கூடாதே,
எப்பூடி வந்திச்சு,
பதவியேற்று கொஞ்ச நாள் ஆக முன்னாடியே, ஐயா கட்டின சட்ட மன்றம் நான் போக மாட்டேன் என்று ஒரு பிடிவாதம், // சின்னபுள்ள தனமாஎல்ல இருக்கு ..
எனக்கும் ஓ.வ இறுகுற டவுட்டு தான்?
என்னுடைய டேஷ்போர்டில் உங்கள் பதிவுகள் வருவதில்லையே ஏன்?
தமிழ் டென் ல என்னால ஓட்டு போட முடியல.. எதனால் தெரிந்தால் சொல்லவும்..
ஆம்!சபை குளம்பிதான்!நான் என்ன மாட மாளிகையா கட்டிவிட்டேன்.சபை குளம்பத்தானே 1000 கோடி செலவிட்டேன்!இது யார் குற்றம்?என்னை நம்பி ஓட்டுப்போட்டவர்கள் குற்றமா?நான் எது சொன்னாலும் தலைவா என்று கோசம் போடும் உடன் பிறப்புக்கள் குற்றமா?
ஓடினேன்....ஓடினேன் திகார் ஜெயுலுக்கே ஓடினேன்.எதற்காக?விமான டிக்கெட் எடுத்தேன்...எதற்காக?மனதே சரியில்லையென்றேன் எதற்காக?கூடா நட்பு துனபத்தை தரும் எனும் பொன்மொழியை உரக்க சொல்வதற்காக.
பணம் பணமென்று தமிழர்களை பிணமாக்க துணை போனேனே.அய்யகோ என் செய்வேன்!என் நாற்காலி கனவு வீண் போனதே!
கோமள வல்லிகளும்,கோசல குமாரிகளும் தேநீர் அருந்தினாலும் சபை குளம்பி ஒரு நாள் மீண்டும் ஒரு நாள் என் பெயர் சொல்லுமென்று சூழுரைக்கிறேன்.தமிழர்களே திரண்டு வாருங்கள்.உங்களை வஞ்சித்த தலைவன் அழைக்கிறேன்.வாரீர்...வந்து மீண்டும் ஆதரவு தாரீர்!
மணியண்ணை நல்லா பிடிச்சிருக்கு
இலட்சங்களை எண்ண முடியாமல் அவதியுற்ற எனக்கு
இக் கட்டான நிலையில் எட்டுக் கம்பியை அல்லவா
எண்ண வைத்து விட்டாய் என் தந்தையே!
heee...eeheee...
Aiooo aiooo
அதெல்லாம் சரி... தொடர்ந்து பதிவுபோடமாட்டேன் என்றுவிட்டு இப்படி திடீர் என்று போட்டால் அவசரமாக எல்லோ ஓடி வரவேண்டி கிடக்கு
இந்த அரட்டை வித்தியாசமா சுவையா இருக்கு
ம்..சூடான அரசியல் அலசல்
உங்க சகாக்களோட ஆலமரத்தடியில நீங்க செய்த அரட்டை நல்லாத்தான் இருக்கு சகோ
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி பதிவ பற்றி பிறகு கதைக்கிறன்! முதல்ல எனக்கொரு டவுட்!
வதன நூல் என்றால் என்ன?
இவர் அடுத்த பதிவில ஹன்சிகாட வதனத்த பற்றி விமர்சனம் எழுதப்போறார , ?
அடோய் நிரூபா, நீ ரொம்பத் ஓவராப் போய்க் கிட்டிருக்காய், கோயிலுக்கு போறது என்னாத்துக்கு? சாமி கும்பிடத் தானே. ஆனா, நீ மட்டும் கொஞ்சம் வித்தியாசமான ஆளா இருக்கியே, பிரசாதத்துக்கென்று மட்டும் கோயிலுக்குப் போறாய். நீயெல்லாம் எப்ப திருந்துறது!!
நிரூபன் அண்ணா கோயிலுக்கு போறதுக்கு முக்கியமான காரணம் சாமி தரிசனம் கிடைப்பதற்கு அப்படித்தானே
ஹிஹி கந்த சாமி கமென்ட் தூள்...
ஆலமரத்து கந்தசாமின்னு கூட ஒரு கதாபாத்திரம் வைக்கலாம் பாஸ்
ஹிஹி கந்த சாமி கமென்ட் தூள்...
ஆலமரத்து கந்தசாமின்னு கூட ஒரு கதாபாத்திரம் வைக்கலாம் பாஸ்
ஹிஹி கந்த சாமி கமென்ட் தூள்...
ஆலமரத்து கந்தசாமின்னு கூட ஒரு கதாபாத்திரம் வைக்கலாம் பாஸ்
//திருமண விடயத்தில்- வருடாந்த சம்பளம் அடிப்படையில் குழப்பங்கள் எனப் பல விடயங்களை இசகு பிசகா ஏலேய் அம்மாவும் பண்ணுறா.
//
குட்டை தானே பாஸ்
ஆமா என்ன சொல்ல வாறீங்க? ஒண்ணுமா விளங்கல
கலக்கறீங்க சகோ! நடத்துங்க!
, நீ மட்டும் கொஞ்சம் வித்தியாசமான ஆளா இருக்கியே,//
மணியண்ணைக்கு ஒண்ணுமே தெரியல.. உலகத்துல பாதி பேர் இதுக்காக தானே போறாங்கோ.. ஏன் நானே.!! சரி சரி பப்ளிக்..
அவரோடை மருமகன் தயாநிதி மாறன் தானாம்.//
எங்கோ ஒட்டு கேட்டுட்டு வந்திருக்கு.. ஹி ஹி..
176 இலட்சம் கோடி //
இது என்ன ராசா புது கணக்கு.?
ராசா மூலமா பெற்றுக் கொடுத்திருக்கிறார். //
ஸ்பெக்ட்ரம் பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டு பேசு மக்கா..
ஐயா கொடுத்தது இருக்கட்டும், ஆனால் பாவம் கனி மொழி, நல்ல ஒரு கவிஞர்- பேச்சாளர். //
யோவ்.. தமிழகத்த பத்தி ஒண்ணுமே தெரியாதா உனக்கு.? கனிமொழி ஒரு நல்ல பேச்சாளராம் மக்களே.!! மனசாட்சியே இல்லாம புளுகுறான்.. யோவ்.. கனிமொழிக்கு மேடை பேச்சுனா பயம் யா..
ஐயா கட்டின சட்ட மன்றம் நான் போக மாட்டேன் என்று ஒரு பிடிவாதம், //
அது இன்னும் முழுசா முடியலயா.. பாதியிலயே தொங்குது..
மக்களுக்கு நல்ல ஆட்சி வரும் என்று தானே அம்மாவை தெரிவு செய்தாங்க//
இந்த பதிவு ஃபுல்லா காமெடியா கிடக்கு.. அம்மா நல்லது செய்யமாட்டாங்கனு எங்களுக்கு அப்பவே தெரியும்.. எங்களுக்கு கலைஞர் வரகூடாது அவ்வளவு தான்..
இன்னும் ஐஞ்சு வருசம் இருக்குத் தானே!//
நீ நினைக்கிறத நடக்காதுடி.. வந்து முழுசா 1 மாசம் ஆகுறதுக்கு முன்னாடி அரசாங்க நஷ்டமான கணக்கு ஏறிகிட்டே ஓடுது.. அந்த ஆளு வெளிநாட்டுல கடன் வாங்கி கட்டடத்துல போட்டதெல்லாம் இந்த அம்மா ஒரே அடியா குப்பையில போடுறாங்க.. இது நல்லதுக்கா.? கட்டிடமா இருந்தாலே நல்லா இருந்திருக்கும்.. போங்க பாஸ்.. உங்க முடிவு எனக்கு பிடிக்கல.. நோ வோட்டு..
கனிமொழி கவிதைதான் சூப்பர்.
நிரூ...!
பாஸ் இது சுவையான அரட்டை அரங்கமா இருக்கே,
சூப்பர் சூப்பர்
பாஸ் உங்க அரட்டையில் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்
இனி உங்க அரட்டை எப்போ கூடும் எண்டு சொல்லுங்க இப்பவே நான் டிக்கெட் போட :)
/டிஸ்கி: ஓடோடி வந்து பதிவினைப் படிக்காது, பதிவின் தலைப்பை மட்டும் பார்த்து விட்டு மைனஸ் ஓட்டுப் போடத் துடிக்கும் உள்ளங்களே! பதிவினைக் கொஞ்சம் படிக்கிறது, அப்புறமா முடிவெடுக்கலாமில்லே, அவசரம் வேணாம் கூட்டாளி,
இப் பதிவில் மைனஸ் ஓட்டுப் போடுமளவிற்கு எந்த விடயமும் இல்லேங்க மக்கள்ஸ். அப்புறம் எதுக்கு டைம்மை வேஸ்ட் ஆக்கிறீங்க...
ஹி......ஹி....//
நிரூபன் அண்ணா சொல்லுறதையும் கொஞ்சம் கேளுங்கப்பா
மைனஸ் ஒட்டு பிரியர்களே
//நிரூபன்: என்ன தான் இருந்தாலும் நீங்க அம்மாவின் ஆட்சி தொடங்கிப் பல மாதங்கள் கடக்க முன்னாடியே அவாவின் ஆட்சி பற்றி விவாதித்து, விமர்சிப்பது எனக்கு சரியாகப் படலை. ஆகவே இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துப் பார்க்கிறது. அம்மா பாதை மாறி,புதிய பாதை காட்டலாமில்ல..இன்னும் ஐஞ்சு வருசம் இருக்குத் தானே!
///
அவசரப்பட்டு அம்மாவை விமர்சிபவர்களுக்கு இதுதான் என் பதிலும் அண்ணா
மாப்ளே! அரட்டை ரொம்ப ஹாட்... உங்கள் எழுத்து நடை அருமை.
மாப்ள நல்லா அலசி இருக்கய்யா!
அஞ்சு வருஷம் இருந்து பாக்கிறதுக்கு எதுவுமே இல்ல பாஸ்! எல்லாம் தெரிஞ்சதுதான்! :-)
haa haa ஹா ஹா துவைச்சு காயப்போட்டுட்டீங்க போல
சூப்பர் அரட்டை
என்னா ஒரு ரகளை! அரட்டை அச்சோ இந்த வெளாட்டுக்கு நாவரலப்பா..
ஒரு கவிதாயினி தன் புலமையை இழக்கின்ற வேதனை மட்டும் பதிவு செய்கிறன்!
ரொம்ப நல்ல விதமாய் நாட்டு நடப்பைச் சொல்லும் கலகலப்பான பதிவு , கார்டூன்கள் கலக்கல் சகோ அதிலும் கனி மொழியின் கவிதை அருமை , மனம் விட்டு ரசித்தேன்
பதிவுக்கேற்ப கார்ட்டூன்களும் பிரமாதம்!
தமிழக அரசியலில் திடீர் திருப்பம்- கலைஞர் ஒரு சபை குழப்பி!
ஏன் ரெண்டு சபையை குழப்ப மாட்டாரா?
கையில் இருந்த ஆப்பிள் ஐபோனின் உதவியுடன், தமிழகத்தின் முன்னணி நாளிதழின் பரபரப்பு மிகுந்த செய்திகளைத் தாங்கி வெளியாகிய வலைப் பதிவுகளைப் படித்துக் கொண்டிருந்தான் நிரூபன்...
ஹி ஹி ஹி யாருக்கு மச்சி கடிக்கிறாய்?
திடீரென, மரத்தடிக்குப் பின்னாடி கேட்ட சவுண்டைத் தொடர்ந்து திரும்பிப் பார்க்கையில், கைகளில் அவல், கடலை சுண்டல் முதலிய கோயில் பிரசாதங்களோடு
ஆஹா வாயூறுது! ஊர் ஞாபகங்கள் வருது!
என்ன எல்லோரும் மாநாட்டுக்கு லேட்டா வாறீங்க.... எப்பூடி நம்ம வேலை, கோயிலுக்கு வந்தமா, பிரசாதத்தை அடிச்சு புடிச்சு வாங்கினமா, எஸ் ஆகினோமா என்றிருக்கனும்,. ஐயா இந்த வேலையிலை கில்லாடி.
இது அந்தக்காலத்து நிருபன்! ஆனா இப்ப உள்ள நிருபன் அப்படி இல்லை! கோவிலுக்குப் போவார்! பயங்கர பக்தியா சாமி கும்பிடுவார்! ஆனால் பொங்கல் வாங்க கியூவில நிக்க மாட்டார்!
பிறகு விசுவமடு வெண்ணிலா தன்னை மதிக்க மாட்டாளாம்! என்ன கொடுமை இது?
மச்சி கனிமொழி கவிதை கலக்கல்! உன் கிரியேட்டிவிட்டி வாழ்க!
//‘இலட்சங்களை எண்ண முடியாமல் அவதியுற்ற எனக்கு
இக் கட்டான நிலையில் எட்டுக் கம்பியை அல்லவா
எண்ண வைத்து விட்டாய் என் தந்தையே!’’//
கவிதாயினியின் கவிதை சூப்பரு!
அருமை..இந்த மாதிரி பெயரெல்லாம் எங்கே இருந்து பிடித்தீர்கள்?சூப்பர்...
அருமையா இருக்கு, பல விஷயங்களை லாவகமா புகுத்தி இருக்கீங்க......!
Post a Comment