Saturday, June 4, 2011

அவளுக்கு ஆட்டம் மெத்திப் போச்சு!

அன்பிற்கினிய உறவுகளே, வார்த்தைகளின் ஊடாக வர்ண ஜாலங்களைக் காட்டலாம், அதே போல வார்த்தைகளின் ஊடாக வசை பாடலினையும் செய்யாலம். அந்த வகையில் ஈழத்தில் வசை பாடலினைச் செய்யப் பயன்படுத்தும் சொற்கள் வரிசையில் பெண்களினைத் திட்டப் பயன்படுத்தும் ஒரு சில சொற்களினைப் பற்றி இப் பதிவினூடாகப் பார்ப்போம்.

வீட்டில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை ஒன்று , பெற்றோர் சொற் கேட்காது தன் வழியில் வீட்டை விட்டு வெளியேறி ஊர் சுற்றப் போகும் போது
’அவள் இனித் திருந்த மாட்டாள், அவளுக்கு ஆட்டம் மெத்திப் போச்சு’ என ஏசுவார்கள்.

Friday, June 3, 2011

தமிழகச் சந்தைகளில் இலவசப் பொருளாக ஈழம்! 

முன்னுரை: அன்பிற்கினிய உறவுகளே; இப் பதிவின் நோக்கம் தமிழக மக்கள் மத்தியில் உள்ள இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் மீதான தார் மீக ஆதரவைச் சீர் குலைப்பதோ அல்லது தமிழக உறவுகளின் இலங்கைத் தமிழர்கள் பற்றிய உணர்வுகளைத் துஷ்பிரயோகம் செய்வதோ அல்ல. 

ஈழம் எனும் சொல் இன்றைய கால கட்டத்தில் அகிலமெல்லாம் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாகி விட்டது. தமிழக மக்கள் மத்தியில் ஈழம் எனும் சொல்லிற்குரிய அர்த்தமோ, தலை கீழான நிலையில் நோக்கப்படுகிறது.

Thursday, June 2, 2011

ஈழ முஸ்லிம்களை அடக்கி வாழ நினைக்கும் இலங்கைத் தமிழர்கள்! 

இலங்கைத் தீவில் வாழும் மக்களுள் முஸ்லீம் மக்களும் தமக்கென்றோர் தனியான, நீண்ட பாரம்பரிய வரலாற்றினைக் கொண்டவர்களாக வாழ்கிறார்கள்.  இலங்கைத் தீவில்(ஈழத்தில்)  முதன் முதலாக வியாபார நோக்கோடு கி.பி 414ம் ஆண்டு தென் அரேபிய வர்த்தகர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனாலும் அவர்களது வருகையானது வியாபார நோக்கோடு இருந்தது.  இதன் பின்னர், கி.பி 628ம் ஆண்டளவில் 'வஹாப் இப்னு அபீ ஹப்ஸா' எனும் நபிகளின் தோழர் இலங்கைக்கு வருகை தந்து, ’’இலங்கையர்களை இஸ்லாமியர்களாகவும், இலங்கை மன்னனாக அக் காலத்திலிருந்தவனை இஸ்லாமிற்கு மதம் மாறும் படியும் கோரியிருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.


உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க