Thursday, May 5, 2011

மணமகள் தேவை- முதலில் வருவோர்க்கு முன்னுரிமை!

வணக்கம் உறவுகளே, இன்றைய கால கட்டத்தில், புறோக்கர்மாரின் பிழைப்பில் நிறையப் பேர் மண் அளிப் போடுறாங்களாம். இதை நான் சொல்லவில்லை, நம்ம ஊர் விசுவலிங்க புறோக்கர் தான் சொல்லுறார்.  இன்டநெட், செல்போன், ஐபோன் என்று அடுக்கடுக்காக நவீன தொழில் நுட்ப சாதனங்கள் வந்த காரணத்தினால், வருமானம் தங்களுக்கு வரவில்லை என்று, ரேசன் கடை நிவாரணத்தில் பிழைப்பை ஓட்டும் பணக்கார வீட்டார் மாதிரி, நம்ம ஊர் புரோக்கர்களும், பஞ்சம் கொட்டத் தொடங்கிட்டாங்கள். யோ...தெரியாமத் தான் கேட்கிறன். அந்தப் புறோக்கரின் வாழ்வில் மண் அள்ளிப் போட்டது யாரு?

கோடையை குளிர்விக்கும், ஜிகு ஜிங்கா நக்கல்கள்!

நாற்றத்தை தடுக்கும் நல்ல மருந்து!


வாரத்தில் இரு தரம் குளித்தும்- உன்னில்
கெட்ட வாடையேன் வரவில்லை 
என் கண்ணே, 
காரணம் சொல்லடி என்றேன்;
’பாரின்’ பெஃர்பியூம் பாக்கட்டில் 
இருப்பதைப் பார்த்த பின் 
நீரும் கேட்பது தகுமோ என்றாள்!

*பாரின் பெஃர்பியூம்- வெளி நாட்டு வாசனை திரவியம்.


Tuesday, May 3, 2011

வாங்கய்யா, வக்கிள் எடுப்போம்!

வணக்கம் உறவுகளே, இன்று எல்லோரும் சைக்கிள் ஓடுவோமா?
 இன்றைய நவீன உலகில், கார், மோட்டார் சைக்கிள் என பல ஐயிட்டங்கள் வந்தாலும், நம்ம ஊர் சைக்கிளுக்கு ஈடாக எதுவும் வராதில்ல...(அவ்............)

சைக்கிள்களில் நம்ம ஊரில் பேமஸ் றல்லி (Ralli), லுமாலா (Lumala), இந்த இரண்டும் தான், இதற்கு அடுத்த படியாக ஹீரோ(Hero) சைக்கிள் இருந்திச்சு. றல்லி சைக்கிளை வயசான ஆளுங்க தான் அதிகமாக விரும்பி ஓடுவாங்க,(90'S_)
நம்மளை மாதிரி இளம் பசங்களுக்கு லுமாலா சைக்கிளில் ஏறி காலை மேலாலை தூக்கிப் போட்டு, சவாரி செய்வது என்றால் காணும். சொல்லவே தேவையில்லை.


உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க