வணக்கம் மக்கள்ஸ்,
எல்லோரும் சௌக்கியம் தானேங்க? எல்லோரும் நல்லா வயிறு நெரம்ப சாப்பிட்டு விட்டு, கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்திருப்பீங்க என்று நெனைச்சிட்டு எழுதுறேன். ஏன்னா நீங்க சாப்பிடும் போது புரையேறி, வாந்தி எடுக்க கூடாது பாருங்க. என்னா மேட்டருன்னா, நான் மறுபடியும் எக்ஸ்பிரஸ் வேகத்தில எழுதலாம் என்று கெளம்பியிருக்கேனுங்க.அட..பலருக்கு இருக்கிற சந்தோசமும் இப்போ இல்லாம போயிருக்குமே என்று நினைக்கையில் ரொம்ப வருத்தமா இருக்குங்க. "ப்ரீயா தானே கூகுள்காரன் வுடுறான்”அதான் நானும் புகுந்து வெளையாடலாம் என்று இறங்கியிருக்கேனுங்க.
இனிமே காலை ஒரு சந்தோசமான பதிவும், மதியத்தில ஒரு அரசியல், கில்மா, கிளு கிளுப்பு நிரம்பிய பதிவுகளில் ஏதாவது ஒரு பதிவினையும், நைட்டில ஒரு தொடர் கதையினையும் வலைப் பூவில நாளை முதல் எழுதலாம் என்று கெளம்பியிருக்கேனுங்க. ஸோ..நீங்க எல்லோரும் விரும்பின பதிவுக்கு விரும்பின நேரம் வந்து படிச்சிட்டு போகலாம் என்பதனை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறேனுங்க. வரும் போது பாப்கார்ன் கொண்டு வர மறந்துடாதீங்க. ஒண்ணு சொல்ல மறந்திட்டேனுங்க. இந்தப் பதிவோட தலைப்பு இருக்கே! அது என்னோட சொந்த தலைப்பு கிடையாதுங்க.
பதிவுலகில நாளுக்கு ஒரு கெட்டப்பில சுத்திட்டிருக்கிற நம்ம மாத்தியோசி மணியோட ப்ளாக்கில இருந்து சுட்ட தலைப்பு தானுங்க இந்தப் பதிவின் தலைப்பு. உங்கள் அனைவருக்கும் மட்டும் காதோட காது வைச்சாற் போல ரகசியமா சொல்லியிருக்கேனுங்க. அப்புறமா, ரெண்டு மூணு சப் ப்ளாக் உருவாக்கி அதுல ஒரு ப்ளாக்கில சினிமாத் தொடர்களையும், மத்த ப்ளாக்கில தொழில்நுட்பச் செய்திகளையும், இன்னோர் ப்ளாக்கில நடிகைங்க, சினிமா படங்களையும், மற்றுமோர் ப்ளாக்கில காப்பி பேஸ்ட் செஞ்சு சஞ்சிகைகள் கட்டுரைகளையும் போட்டு தாக்கலாம் என்று முடிவு செஞ்சிருக்கேன்.
விரும்பினவங்க, விரும்பின ப்ளாக்கிற்கு வந்து படிச்சுக்கலாம். குடியிருந்துக்கலாம். நோ டென்சன். அப்புறமா அடிக்கடி மொக்கப் பதிவுகளையும், காமெடிப் பதிவுகளையும் போட்டு கல கலப்பா ப்ளாக்குகளை வைச்சுக்கலாம் என்று இருக்கேன். சப் ப்ளாக்குகள் எல்லாத்தையும் எழுதும் பொறுப்பை என் முன் வீட்டு முனியம்மா, பின் வீட்டு பிரமிளா, அடுத்த வீட்டு அஜந்தன், பக்கத்து வூட்டு பரிமளாவிடம் கொடுக்கலாம் என்றிருக்கேன். ஸோ.. நீங்க அந்த ப்ளாக்குகளையும் பார்த்து, படிச்சு உங்க பேராதரவை கொடுப்பீங்க என்று பணிவன்போடு வேண்டிக் கொள்கின்றேன்.
அப்புறம் மக்கள்ஸ், யாரோ நாற்று குழுமம் அப்படீன்னு ஒரு பேஸ்புக் குழுமம் இருக்காமுங்க. அவங்க புரட்சி எப்.எம் அப்படீன்னு ஒன்னை உருவாக்கியிருக்காங்க. நேரம் இருக்கும் போது நீங்களும் புரட்சி எப்.எம் கேட்பதோடு, உங்க நண்பர்கள், உறவினர்கள் எல்லோரிடமும் இந்தப் புதிய வானொலி பத்தி அறிமுகஞ் செஞ்சு, அவங்களையும் கேட்கச் செய்வது தான் புதிய கலைஞர்களுக்கு நீங்கள் வழங்கும் பேராதரவாகும். இந்த வானொலியை உங்கள் கையடக்க தொலைபேசிகள் ஊடாகவும் நீங்கள் கேட்டு மகிழ முடியும் எனும் மகிழ்ச்சியான செய்தியினையும் இத்தால் அறியத் தருகின்றோம்.
நண்பர்களே..ஏலவே என் வலைப் பதிவிற்கு நீங்கள் பேராதரவு நல்கியது போல, புரட்சி இணைய வானொலிக்கும் உங்களின் பேராதரவினை வழங்குவீங்க என்று நம்புகின்றேன்.
அன்பு உறவுகளே,
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?
இப்பொழுது உங்கள் புரட்சி இணைய வானொலியில் நேரடியாக "இதயம் கேட்கும் பாடல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது" மின்னஞ்சல், பேஸ்புக் ஊடாக நீங்களும் இணைந்து உங்கள் விருப்பப் பாடல்களை விரும்பிக் கேட்க முடியும்.
இதயம் கேட்கும் பாடல் நிகழ்ச்சியோடு நீங்களும் இணைந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.
|
8 Comments:
வணக்கம் நிரூபன் மாமா! இருங்கோ படிச்சிட்டு வாறன் !
@மாத்தியோசி - மணி
வணக்கம் மாப்பிள,
நல்லா இருக்கிறீங்களா?
மணியம் கபே எப்படிப் போகுது?
சும்மா புலி வருது புலி வருதுன்னுட்டு ஆட்டம் காட்டீட்டு இருந்தா போதுமா?
நிரூபன்...வாங்க...வந்து ரவுண்டு கட்டி அடிங்க.
@பழனி.கந்தசாமி
வணக்கம் ஐயா,
நீண்ட நாளைக்கு அப்புறமா என்னைய அழ வைச்சிட்டீங்க..
கண்ணில கண்ணீர் கண்ணீரா வருது..
அவ்வ்வ்வ்வ்
@உலக சினிமா ரசிகன்
அன்பிற்கு நன்றி பாஸ்.
ம்ம்ம்ம்.... நல்லாத்தான் எழுதுறீங்க. அப்படியே ஆகட்டுமுங்க. நம்ம தளத்துக்கும் கொஞ்சம் வாங்க.
http://newsigaram.blogspot.com/2012/07/innumsolven-01.html#.UBjxKmEe7Nk
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்,
இலவசமாக வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் எழுத போகிறேன்.
"இது எப்படி சாத்தியம்...? வெளியில் அனைவரும் 5000 ரூபாய்க்கு மேல் வாங்குகிறார்களே.....! " என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்கள் வெப்சைட்டை ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் வெப்சைட்டை டிசைன் செய்து கொடுத்துவிடுவார்கள். நீங்கள் கேட்கும் விதத்தில் உங்கள் வெப்சைட் தயார்செய்து கொடுக்கப்படும்.
எதற்காக இவர்கள் இப்படி செய்து கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் எனக்கு புரிகிறது. நமது தமிழ் மக்கள் எங்கும் சென்று அவர்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து விடக்கூடாது என்பதற்காத்தான். ZHosting.in மூலம் வெப்ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வாங்கினால் டிசைன் சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வெப்டிசனிங் என்பது இவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை என்பதால்தான் இவர்களால் இலவசமாக வழங்க முடிகிறது. இன்னும் பல மதிப்புகூட்டப்பட்ட சேவைகளையும் இவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள்.
நீங்கள் ZHosting ன் இந்த இலவச வெப்டிசைனிங் சேவையை உபயோகித்து பார்த்துவிட்டு. உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இந்த சேவையை பற்றி எடுத்துரைப்பதே நீங்கள் செய்யும் கைமாறாகும். வேறு எங்கும் சென்று நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை விரயம் பண்ணாமல் நல்லவழியில் பயன்படுத்துங்கள்.
தொடர்புகொள்ள,
ZHosting,
Phone : 9486854880.
Post a Comment