எழுத்துலக மோதாவிகளின் மறு பக்கம் - தமக்கு தாமே விமர்சனம் செய்து மகிழும் வித்தகர்களின் சில்லறைக் குணம்!
வணக்கம் வாசக உள்ளங்களே.... இப் பதிவின் தலைப்பு “நடிகையை கற்பழித்த எழுத்தாளர் ஜெயமோகன்" என்பதாகும். எழுத்தாளர் ஜெயமோகன் ஓர் நடிகையினை கற்பழித்திருக்கார் என்று சொல்லும் போது அதனை நிரூபிக்கும் வகையில் என்னிடம் ஆதாரம் இருக்க வேண்டும். இல்லையேல் தொடர்புடைய செய்திகள் இருக்கனும். அது கூட இல்லாவிட்டால் ஜெயமோகனால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட நடிகையின் வாக்குமூலமாச்சும் இருக்கனும். இங்கே எடுகோளாக ஜெயமோகன் எனும் எழுத்துலக மனிதரை எடுத்து வைத்துக் கொண்டு, அவர் கோடம்பாக்க சினிமா வட்டாரத்துடன் தொடர்புடைய ஓர் பெண்மணியை வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டார் என்று கூறினால் அந்தச் செய்தி பொய்யான செய்தியாகும். லாஜிக் அடிப்படையில் எழுத்தாளர் கற்பழித்தார் என்று ஓர் செய்தியினை கூறுவது அப்பட்டமான பொய்யாகும்!
என்னுடைய தனிப்பட்ட வெறித்தனத்தை, தீர்த்து கொள்ளும் நோக்கில் நான் எழுதிய செய்தியாக இந்தச் செய்தி வாசக உள்ளங்களால் நோக்கப்படும். எழுத்துலகில், அதுவும் சிறப்பாக இலக்கியவியாதிகளுக்கு ஓர் தனித்துவமான பண்பு உண்டு. தம்மை தாமே புகழ்ந்து ஓதுவது, தமக்கு தாமே போலி வாசகர் பேரில் விமர்சக கடிதம் எழுதி தாமும் பலரால் விமர்சிக்கபடுகின்றோம் என்று சுய இன்பம் காண்பது, பத்திரிகை, வானொலி, மற்றும் இலத்திரனியல் ஊடக நேர்காணலின் போது தம்முடைய வித்துவச் சிறப்பினை அறிவிப்பாளர் - நிகழ்ச்சி தொகுப்பாளர் தவற விடாது புகழ்ந்து வாசிக்கனும் எனும் நோக்கில் எழுத்தில் சமர்ப்பிப்பது தான் சில சில்லறை வியாதிகளின் பண்பாகும். அதற்கு இந்த இன மானத்தை இலக்கியவியாதி ஜெயமோகனும் விதி விலக்கு அல்ல.
இந்திய அமைதிப் படை தமிழர் தாயகப் பகுதிகளில் நிகழ்த்திய, சொற்களில் அடங்காத வலிகளையும், வடுக்களையும் அறியாதவர் அல்ல இந்த அதிமேதாவி எழுத்தாளர் ஜெயமோகன். பேரும், புகழும் கண்ணை மறைக்கும் போது இப்படியான இன உணர்வற்ற, பிறரின் இன மானத்தை விற்று சுய சொறிதல் காணும் எழுத்தாளர்கள் தம் புகழை நிலை நாட்ட பின் நிற்க மாட்டார்கள் என்பது நாம் கண்டு, கடந்து வரும் எழுத்துலக யதார்த்தமாகும். இந்திய அமைதிப்படை 1987இன் பின்னர் இலங்கையில் நிலை கொண்டிருந்த போது நிகழ்த்திய அடாவடித்தனங்களை, அத்துமீறல்களை தன் சுய சொறிதலுக்கு ஏற்றாற் போல அப்படி ஏதும் நடக்கவில்லை என ஓர் இனத்தின் பேச்சாளர் போல் பதிலுரைத்திருக்கிறார் ஜெயமோகன். பாதிக்கப்பட்ட மக்களின் வலியையாச்சும் கேட்டு, படித்து அறிந்து கொள்ளும் பக்குவம் கூட இந்த நர மனிதர்களுக்கு இல்லையே என்பது வேடிக்கையாக இருக்கிறது.
தமிழ் மக்களுடைய வலியையும், வடுக்களையும் ஜெயமோகன் போன்ற சுய சொறிதல் வியாதிகள் மறந்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் வடுக்களை மறைத்து தன் கருத்து தான் தமிழ் மக்களின் கருத்து எனச் சொல்வதற்கு இந்த அற்ப ஜென்மங்களுக்கு உரிமையினை யார் கொடுத்தது? போலியாக தானே ஓர் வாசக பெயரினை உருவாக்கி எழுத்துலகில் அண்மையில் தான் பலராலும் கண்டு கொள்ளப்படவில்லையே எனும் மூத்த இலக்கியவியாதி அனுபவத்தின் அனுதாபத்தின் வெளிப்பாடாக, இப்படி ஓர் சர்ச்சையினை கிளப்பும் பதிலை வழங்கினால் தான் கண்டு கொள்ளப்படுவேன் என நினைத்தாரோ ஜெயமோகன்! ப்ளீஸ்...இலக்கிய வியாதிகளே! இனியும் தமிழர்களை உங்களின் இத்துப் போன பொன்னாடைகளுக்காகவும், புகழ் மாலைகளுக்காகவும் விலை பேச வேணாம்!
ஒரு படைப்பாளியின் எழுத்தாணி என்பது துப்பாக்கி குண்டினை விட வலிமையானது என்று கூறுவார்கள். ஆனால் பேருக்கும், புகழுக்கும், பொன்னாடை எனும் சுய இன்பச் சொறிதலுக்கும் ஆசை கொள்ளும் உங்களைப் போன்றோருக்கு இன மானம் கூட ஓர் சிறு தூசாக தெரிவது தான் வேடிக்கையாக இருக்கிறது. வதந்திகளையும், பொய்க் கருத்துக்களையும் பரப்பி எழுத்துலகில் நிலைக்க வேண்டும் என்றால் உங்கள் குடும்பத்தினையே வீதிக்கு இழுத்து வந்து விபச்சாரம் செய்ய வைத்து உங்கள் எழுத்து வெறியை தீர்த்து கொள்ளலாமே திருவாளர் ஜெயமோகன் அவர்களே!
எழுதிச் செல்லும் விதியின் கை
எழுதி எழுதி மேற் செல்லும்
அழுத கண்ணீர் ஆறெல்லாம்
அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
(ஆன்றோர் வாக்கு)
போர் இடம் பெறும் பிரதேசங்கள் எதுவாயினும், அங்கே உள்ள மனிதாபிமானமற்ற வீரர்கள் வல்லுறவு, வன்புணர்வு, மற்றும் கொடுஞ் செயல்களில் ஈடுபடுவது இயல்பு. இதற்கு ஆதி காலம் முதல் அண்மைய ஆப்கான், ஈராக் போர் அரங்கு, ஈழத்தின் இறுதிப் போர் முதலிய சம்பவங்களே சாட்சி பகர்கின்றன. அப்படி இருக்கையில் ஓர் எழுத்தாளன் நடு நிலமையாக, எழுத வேண்டும், உண்மையினை உரத்துச் சொல்ல வேண்டும், எனும் எழுத்தாளனுக்குரிய அடையாளங்களை எப்படி ஜெயமோகன் போன்ற சுய சொறிதல் மனிதர்களால் இலகுவில் மறந்து விட்டு இந்திய இராணுவம் ஈழப் போர் அரங்கில் வன்முறைகளை நிகழ்த்தவில்லை என்றோர் செய்தியினை முன் வைக்க முடியும்? மிகுதிக் கருத்துக்களை வாசகர்களாகிய உங்களின் பார்வைக்கு முன் வைக்கின்றேன்.
பிற் சேர்க்கை: இப்படி ஓர் பதிவினை எழுதுவதற்கு காரணமான இலக்கிய வியாதி, இனமானத்தை தன் சுய புகழுக்காக விற்கும் எழுத்து மேதாவி ஜெயமோகனின் பதிவினைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

|
13 Comments:
"அப்படி ஏதும் நடக்கவில்லை "
>>>>
கொடுமை!
தன்னை காப்பாற்றிக்கொள்ள தவித்து கொண்டிருந்தவர்களை...பெரிய படையய் இறக்கி....என்ன வேணாலும்(!) செய்ஞ்சிக்கங்க என்று விட்டு விட்டு... இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்வது எவ்வளவு கீழ்தரமானது!...இது எந்த வகை கீழ்தரமான விளம்பர நோக்கம் கொண்டது என்பது புரியவில்லை!
உண்மையிலேயெ அந்த பதிவை பார்த்தவுடம் எனக்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, நித்தி தான் ஒரு ஆணுமல்ல பெண்ணுமல்ல என்றூ சொன்னதை போல ராணுவ வீரர் ஒருத்தர் கருத்துக்கள் கூறீயிருந்தார் தங்கள் அனைவரினதும் ஜட்டிக்கு பூட்டு போட்டிருந்தோம் ( ஒழுக்கசீலர்கள் )திறக்கவே முடியாதே அப்புறம் எப்படி பாலியன் வன்முறை என்றூ .... எனது பெரியப்பாவின் குடும்பத்தினருக்கு நடந்த அவலம்,அடுத்த நாள் திருமணத்துக்காக காத்திருந்த அக்கா,பெரியம்மா அனைவருக்கும் நடந்தத்தை 12.10.1987 இல் பார்த்தேன், உடலங்கள் இறூதி கிரியைக்காக கிடத்தப்பட்டிருப்பதை பார்த்து 1 நாள் பூரா சாப்பிடாமல் அந்த 7 வயசிலும் அழுது கிடந்தேன்,இந்த நாய் வந்து ஒன்றுமெ நடக்கவில்லை என்றூ கூறூகிறது.. இன்னும் எமது கிராம பிரம்படி லேனுக்கு முன்னால் அந்த ஏரியா மக்களின் நினைவாக தூபி உள்ளது
மச்சி நானும் ஒரு ஆதார மடல் அவருக்கு அனுப்பப் போறன்..
இதுவும் ஒரு சுயவிளம்பரம்தான்.நானும் இருக்கேன் என்று பரபரப்பாக்குவது.
காந்தியம் எழுத்தில் சொல்லத்தெரிந்த இந்த எழுத்தாணிக்கு காந்தி தேசம் காவல் என்று போர்வையில் வந்து கழுத்தறுத்தும் களவு எடுத்ததும் எங்கள் குலப்பெண்களை எப்படி எல்லாம் புலி பிடிக்கின்ரேன் என்று புழுவைப்போல சீரலித்தார்கள் என்றும் தெரியாமல் போய் இருக்கும்! இவர் இருக்கவில்லையே ஈழத்தில் வடக்குகிழக்கில்!!அங்கே இருந்தவர்களுக்கு கூட அதிகம் வாய்ப்பூட்டுப்போட்ட இந்தியன் ஆமியின் மானம் கெட்ட செயல் பற்றி அவருக்கு தெரியாதுபோய் விட்டதே மனக்குமுறலும் துயரங்களும் இழப்பும் !!! இப்படி பேசினால் இனி இந்தியாவில் அட்சியாளர்கள் அடுத்த ஒரு பதவி கொடுப்பார்கள் போல! இவரும் ஒரு கொப்பச்சோவோ என் எண்ண வைத்துவிட்டாரே!
இதுவும் ஒரு சுயவிளம்பரம்தான்.நானும் இருக்கேன் என்று பரபரப்பாக்குவது.//உண்மைதான் விச்சு அண்ணா கேவலம் எப்படி எல்லாம் தரம் தாழ்த்துகின்றது இந்த எழுத்தாணியின் செயல்!
அன்புள்ள மயிலன்,
நான் அமைச்சர் எழுதுகிறேன்... எனக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை... நானும் தலைவரின் மகளும் ஓர் நாள் ஜலசா நிலையில் இருந்தபோது திடீரென்று வந்த இந்த செய்தியை கேட்டு அதிர்ந்தேன்.. நானோ, எங்கள் உடன்பிறப்புகளோ, அஞ்சா நெஞ்சரோ, சூரிய குடும்பமோ இதில் துளியும் சம்பந்த படாத போதும் தொடர்ந்து ட்விட்டர், பேஸ்புக், ப்ளாக் ஆகியவற்றில் எங்களை அவதூறாக பேசுவது மன உளைச்சலை தருகிறது...
இப்படிக்கு அமைச்சர்..
அன்புள்ள அமைச்சர்..
உங்கள் கடிதம் கொஞ்சநாளாகவே என்னை நிம்மதியிழக்கச் செய்கிறது. இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். மிக முக்கியமான சிலரிடம் நானும் இதைப்பற்றிக் கடிதம் மூலம் விசாரித்தேன். உங்க மூஞ்சிய பாத்தா நல்லவராத்தான் தெரியுது.. தவிர உங்கள் கழகத்தின் ஊழல்கள் அதிகார துஷ் பிரயோகங்கள் நான் கேள்விபட்டது மட்டுமே... நேரடி அனுபவம் இல்லை.. நீங்கள் குற்றமற்றவராகவே தெரிகிறீர்..தவிர நீங்கள் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தவர்.. நீங்கள் எப்புடி ஊழல் எல்லாம்... வாய்ப்பே இல்ல...
இப்படிக்கு மயிலன்...
இந்த குருட்டு செயமோகன் எழுதிருப்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்...?
இவர் தேசப்பற்றுக்காக மனசாட்சியை அடமானம் வைத்து விட்டதாகவே தோன்றுகிறது...
இவர் எழுதியதை உணர்ந்து மாற்றிக்கொள்வாரோ என்று பொறுத்திருந்து பார்ப்போம்...
ஏன் நல்ல படைப்பாளிகள் பல நேரம் இப்படி புத்தியின்றி பிதற்றுகிறார்களோ என்பது புதிராகத்தான் உள்ளது...
இது ஒரு படைப்பாளிக்கே உள்ள அகந்தையின் வெளிப்பாடு தான்..வேறெதுவும் இல்லை...
நுனாலும் தன வாயால் கெடும் என்பதுக்கு ஜெயா மோகன் நல உதாரணம் .. உலகிற்கே தெரிந்த விஷயத்தை நடக்கவே இல்லை என சொல்லி தன்தலையில் தானே மண்ணை அள்ளி கொட்டிகொண்டார்
/அன்புள்ள மயிலன்,
நான் அமைச்சர் எழுதுகிறேன்... எனக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை... நானும் தலைவரின் மகளும் ஓர் நாள் ஜலசா நிலையில் இருந்தபோது திடீரென்று வந்த இந்த செய்தியை கேட்டு அதிர்ந்தேன்.. நானோ, எங்கள் உடன்பிறப்புகளோ, அஞ்சா நெஞ்சரோ, சூரிய குடும்பமோ இதில் துளியும் சம்பந்த படாத போதும் தொடர்ந்து ட்விட்டர், பேஸ்புக், ப்ளாக் ஆகியவற்றில் எங்களை அவதூறாக பேசுவது மன உளைச்சலை தருகிறது...
இப்படிக்கு அமைச்சர்..
அன்புள்ள அமைச்சர்..
உங்கள் கடிதம் கொஞ்சநாளாகவே என்னை நிம்மதியிழக்கச் செய்கிறது. இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். மிக முக்கியமான சிலரிடம் நானும் இதைப்பற்றிக் கடிதம் மூலம் விசாரித்தேன். உங்க மூஞ்சிய பாத்தா நல்லவராத்தான் தெரியுது.. தவிர உங்கள் கழகத்தின் ஊழல்கள் அதிகார துஷ் பிரயோகங்கள் நான் கேள்விபட்டது மட்டுமே... நேரடி அனுபவம் இல்லை.. நீங்கள் குற்றமற்றவராகவே தெரிகிறீர்..தவிர நீங்கள் ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தவர்.. நீங்கள் எப்புடி ஊழல் எல்லாம்... வாய்ப்பே இல்ல...
இப்படிக்கு மயிலன்...
இந்த குருட்டு செயமோகன் எழுதிருப்பதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்...?
//
சொல்லமுடியாது அடுத்த கட்டுரை இதுவாக இருக்கலாம்
-இது தான் உண்மை..ஷோபா சக்தி சொல்லியிருப்பதை போல வரலாறு திறக்கப்பட தொடங்கிவிட்டது...அது ஜெயமோகன் போன்ற வெண்ணைகள் மூலமாகவும் நடைபெறுகின்றது என்பது தான் பரிதாபம்.
-ஒரு வன்புணர்வு கூட நடைபெறவில்லை என்று எழுதுமளவுக்கு இவரை தூண்டிய காரணி எது?
தன் நிலைமையை அறிந்து தான் எழுதுகிறாரா இல்ல பேதலித்துவிட்டதா!!
-இவை எல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிக்கும் இளசுகளுக்கு எங்கே தெரியப்போகிறது!!
இது தான் வரலாறோ என்று எண்ணி எங்களை ஏளனம் செய்யும் அளவுக்கு போகலாம்!
-இருபத்தைந்து வருடத்துக்குள்ளேயே வரலாற்றை இவ்வாறு திரித்து எழுதுபவர்கள்..வரும் காலங்களில் எதனை எல்லாம் எழுதுவார்கள் என்று கற்பனை பண்ணி பார்க்க முடியவில்லை.தான் ஒரு பெரிய எழுத்தாளன் என்று கூற இவனுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது?இதற்க்கு மேலும் "இவர்" போட்டு மரியாதை செய்ய மனம் வரவில்லை.
-நடந்ததை நேரில் பார்த்த பலர் இணையத்தில் இருக்கும் போது இவ்வாறான எழுத்துக்கள் வெளிவர இடமளிக்ககூடாது.எதிர்த்து பேசாவிடில் அவர் கூறுவது தான் சரியென்று ஆகிவிடும்.
இவை எல்லாம் பேஸ் புக்கில் பகிர்ந்தவை...
பரதேசி இவன்.
ஒரு படைப்பாளிக்கே உள்ள அகந்தையின் வெளிப்பாடு தான்..வேறெதுவும் இல்லை...
இது போன்ற புரிந்தும் புரியாத, விளங்கியும் விளங்காதவர்களுக்கு என்ன சொல்லி என்ன எழுதி என்ன பயன் சகோ...
எங்கள் சோகங்களும் எங்கள் வேதனைகளும் எம்முடனே..
Post a Comment