இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல!
இணையத்தினூடே, இப் புதிய தொடரைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் இந் நேர வணக்கம்;
உலகில் இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட வெள்ளையின மக்களால் ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து எனப் பல தேசங்கள் உருவாக்கப்பட்டன. அங்கிருந்த பூர்வீக குடிகள் பலர் வெள்ளையர்களின் அத்துமீறல்களினால் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் சில பகுதிகளில் வாழ்ந்ததற்கான எச்சங்களும் அழிக்கப்பட்டன. ஆனாலும் பிற்காலத்தில் ஜனநாயகப் பண்பாட்டிற்குள் தம்மை உட்புகுத்திக் கொண்ட வெள்ளையின மக்கள் திருடப்பட்ட சந்ததியின் வரலாறுகள் வருசக் கணக்கில் அழிவுறாது இருக்க வேண்டும் என்பதனை உணர்ந்து ஆவணப்படுத்தல்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சக மனிதர்களையும் மனித நேயம் கொண்டு மதித்தார்கள்!
இலங்கையில் வாழும் ஈனச் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களைத் தவிர்த்து, உலகில் வாழும் பல்லின மக்களிடம் ஓர் பண்பாடு உண்டு. எதிர் நாட்டுப் போர் வீரனாயினும் (தமக்கு எதிரி என்றாலும்), அவன் களத்தில் உயிர் துறந்தால், இராணுவ மரியாதையுடன் கல்லறையில் புதைக்கப்பட்டு, கல்லறை கட்டப்பட வேண்டும் எனும் உயர்ந்த மனிதாபிமானக் குணம் உலகில் வாழும் பல்லின மக்களிடம் உண்டு. ஆனால் எம் நாட்டில் வீரர்களை நினைவு கூரக் கட்டப்பட்ட கல்லறைகளை வேரோடு அழிக்கும் இனவாத இராணுவத்தின் இரக்கமற்ற பண்பாடு தான் இன்று எஞ்சியிருக்கிறது.
போர் வீரர்களின் கல்லறைகள் யாவும் வேரோடு அழிக்கப்பட்டிருக்கும் இடத்தில் போர் நிகழ்ந்த பகுதிகளில் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் எப்படி ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்? அவற்றைப் பற்றி வாய் திறந்து பேசத் தான் சிங்கள இராணுவம் அனுமதிக்குமா? உலக நாடுகளில் இடம் பெற்றிருக்காத இணையற்ற சித்திரவதைகள், துன்புறுத்தல்கள், கொடூரங்கள், பாலியல் கொடுமைகள் இலங்கையின் போர் சார்ந்த பிரதேசங்களிலும், தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. ஏன் தென்னிலங்கையின் சிறைக் கூடங்கள் பலவற்றிலும் தமிழன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக இப்படியான பல கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.
தமிழன் வாழ்ந்தான், இலங்கையில் வாழ்ந்து வருகின்றான் எனும் வரலாற்றுத் தடயங்களை அழித்து, எம்மை ஓர் இரண்டாந் தரக் குடிமக்களாக பிரகடனப்படுத்தி, சிங்களனின் கால்களைத் தொழுது நாம் அனைவரும் வாழ்வதனைத் தான் சிங்கள தேசம் விரும்புகின்றது. இந் நிலையில் ஈழத்தில் வாழும் மக்களால் போருக்குப் பின்னரான நிலமைகளை, போருக்கு முன்னரான கொடூரங்களை இலகுவில் தொகுத்து ஆவணப்படுத்திட முடியாத நரக நிலை சிங்கள ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சிங்களனின் சிறைக் கூடங்களின் யன்னல் கம்பிகளினுள்ளும், சுவர்களுக்கு இடையேயும், சிறையின் அடித்தளத்திலும் (நிலத்திற்கு கீழும்) எம் சந்ததிகளின் பல வரலாற்று எச்சங்கள் வெளிவராத உண்மைகளாகப் புதைந்து போயிருக்கின்றன.
சிங்களனின் சித்திரவதை முகாம்: "ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!" தொடரூடாக ஈழத் தமிழர்களின் பூர்வீக வரலாற்றினையும்,"ஈழப் போரியலில் இதுவரை வெளிவராத மர்மங்கள்!" தொடரூடாக இறுதி யுத்தத்தினைத் திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரோபாய நகர்வுகளையும் உங்களோடு என் வலைப் பதிவின் வாயிலாகப் பகிர்ந்திருக்கிறேன். தற்போது கொஞ்சம் வித்தியாசமாக சிங்களனின் சித்திரவதை முகாம் எனும் தொடரினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்க வருகின்றேன்.
இத் தொடரில் இடம் பெறும் சம்பவங்கள் யாவும் இதுவரை ஈழத்தில் சிங்களவர்களினால் இருண்ட சித்திரவதைக் கூடங்களிற்குள் தமிழினத் துரோகிகளின் துணையுடன் அரங்கேற்றப்பட்ட கொடூரங்களினை உள்ளடக்கிய உண்மைச் சம்பவங்களாகவே இருக்கும். தற்போது உயிரோடு வாழும் உறவுகளின் பெயர்களும், இச் சம்பவங்களோடு தொடர்புபட்ட உறவுகளின் பெயர்களும் பெயர் மாற்றம் பெற்று உங்களை நாடி வரும். சிங்களனின் சித்திரவதை முகாம் தொடரானது ஒவ்வோர் பகுதியிலும், வெவ்வேறுபட்ட கதைகளையும், சம்பவங்களையும் உள்ளடக்கியிருக்கும்.
அனைத்துச் சம்பவங்களையும் ஆண்டு ரீதியாகத் தொகுத்து தருவதைத் தவிர்த்து எழுமாற்றாக பல உண்மைச் சம்பவங்களை ஒவ்வோர் பாகங்களிலும் வெவ்வேறு பிரதேசங்களின் நிகழ்வுகளை உள்ளடக்கியதாக வழங்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன். இச் சம்பவங்கள் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும், பல்வேறுபட்ட நபர்களிடமிருந்தும், பத்திரிகைச் நிருபர்களிடமிருந்தும் திரட்டப்பட்ட தொகுப்பாக அமைந்து கொள்ளும். இன்றைய இலங்கையின் அரசியற் சூழ் நிலையினைக் கருத்திற் கொண்டு, இச் சம்பவங்களைத் தொகுத்து தருபவர்களின் பெயர்களை வெளியிடுவதனைத் தவிர்க்கின்றேன்.
ஒவ்வோர் பகுதியும் படிக்கும் வாசகரைக் கவரும் வண்ணம் அமைந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை. சில சம்பவங்களைப் படிக்கையில் உங்களால் நம்ப முடியாதிருக்கும். ஏதோ ஆங்கிலப் படத்தினைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து தான் ஈழத்தின் ஓர் சந்ததி இன்றும் தன் வாழ்வைச் சிறைக் கூடங்களில் கழித்து வருகின்றது என்பது மட்டும் யதார்த்தம்!
இனி எப்போது சிங்களனின் சித்திரவதை முகாம் தொடர் வரும் எனும் ஆவல் உங்களுக்கு இப்போது எழுந்திருக்கும் அல்லவா? இதனைத் தீர்மானிக்கப் போவது வாசகர்களாகிய நீங்கள் தான். அன்பு உறவுகளே! வாரத்தில் எத்தனை நாட்களுக்கு இந்தப் புதிய தொடரைப் பதிவாக எழுதலாம்? என்ன என்ன நாட்களில் இந்தத் தொடரைப் பிரசுரிக்கலாம் என்பதனை நீங்கள் பின்னூட்டங்கள் வாயிலாகத் தெரிவித்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் அன்பு நிறைந்த பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
நேசமுடன்,
செ.நிரூபன்.
நன்றி,
வணக்கம்!
இத் தொடருக்கான படங்களைத் தன் கணினி வரைகலைத் திறமையினால் வரைந்து கொடுப்பவர் நிகழ்வுகள் வலைப் பதிவின் சொந்தக்காரர் கந்தசாமி அவர்கள்.
|
23 Comments:
கண்டிப்பாய் மனம் காயம் கொண்டு போய்விடும்..படிப்பதற்கு மனமிருந்தாலும் வேதனை நெஞ்சை அடைத்து கனக்கச் செய்து விடும் எண்டு பயம் வருது ...நான் தொடர்வேனா எண்டு சந்தேகம் தான் ...
வாராத்தில் இரேண்டுப் போடாலாம் புதன் வெள்ளிக் கிழமை இரவுப் போடாலாம் ...
நாய்யிறு இரவோ திங்கள் காலையோ வேண்டாம் என்பது தான் எண்ட கருத்து
Valthukkal thodarunkal unkal pathivai
உண்மைகளை அறிவோம்
உண்மைகள் தொடர்ந்து வெளி வரட்டும்....
ரத்தம் கரைக்கும் உண்மைகளை அறிய தங்களது பதிவுகளை எண்ணி ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்..போடுங்கள் நண்பா.
சில நாட்கள் இணையப்பக்கம், வராததால் எதையும் படிக்க முடியவில்லை.பிறகு மன்னித்துவிடுங்கள்.
//ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து தான் ஈழத்தின் ஓர் சந்ததி இன்றும் தன் வாழ்வைச் சிறைக் கூடங்களில் கழித்து வருகின்றது என்பது மட்டும் யதார்த்தம்!//
மிகவும் உண்மை நிரூபன். எத்தனையோ சொந்தங்கள், சுற்றங்கள் கைது செய்யப்பட்டு காணாமல் போன, இன்னும் சிறையில் வாடும் கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் பதிவு மூலம் நிறைய உண்மைகள் வெளிவரும் என்பது நிச்சயம். காத்திருக்கிறேன்.
//இனி எப்போது சிங்களனின் சித்திரவதை முகாம் தொடர் வரும் எனும் ஆவல் உங்களுக்கு இப்போது எழுந்திருக்கும் அல்லவா? இதனைத் தீர்மானிக்கப் போவது வாசகர்களாகிய நீங்கள் தான். அன்பு உறவுகளே! வாரத்தில் எத்தனை நாட்களுக்கு இந்தப் புதிய தொடரைப் பதிவாக எழுதலாம்?//
தினமும் ஒரு கொடுமையை வாசிக்க மனதில் தெம்பில்லை. வெள்ளி அல்லது சனிக்கிழமை இரவு , அ.து வாரம் ஒன்று போட்டால் போதுமானது என்பது என் கருத்து.
வாசிப்பு கடினம் தான்...வாரம் ஒருமுறை சரியென்று நினைக்கிறேன் சகோதரம்..
இரவு வணக்கம் நிரூபன்!தொடரை எதிர்பார்த்திருக்கிறோம்!கலை சொன்னது போல் வாரம் இரு தடவை பதிவேற்றினால் எல்லோருக்கும் வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்!எல்லோர் வீட்டிலும் அடுப்பும் புகைய வேண்டுமல்லவா?உங்கள் வசதிப்படி தீர்மானியுங்கள்.நன்றி!
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று
போடலாம்.
தொடரத் தொடர்வேன்!
புலவர் சா இராமாநுசம்
@கலை
நன்றி சகோதரி,
புதன் கிழமை எழுதுவோம்!
@chanthruk
Valthukkal thodarunkal unkal pathivai
//
நன்றி சந்துரு.
@yathan Raj
உண்மைகளை அறிவோம்
//
நன்றி யாது.
@koodal bala
உண்மைகள் தொடர்ந்து வெளி வரட்டும்....
//
நன்றி பாலா அண்ணா.
@Kumaran
குமரா! ஏன் இந்த கொல வெறி!
நானே டைம் கிடைக்காம அலைகிறேன்!
அன்பிற்கு நன்றி நண்பா.
@ஹாலிவுட்ரசிகன்
என்னால் முடிந்த வரை சம்பவங்களைத் தொகுத்து தர நினைக்கிறேன்./
@ஹாலிவுட்ரசிகன்
தினமும் ஒரு கொடுமையை வாசிக்க மனதில் தெம்பில்லை. வெள்ளி அல்லது சனிக்கிழமை இரவு , அ.து வாரம் ஒன்று போட்டால் போதுமானது என்பது என் கருத்து.
//
புதன் கிழமையில் எழுதுவோமா?
@ரெவெரி
வாசிப்பு கடினம் தான்...வாரம் ஒருமுறை சரியென்று நினைக்கிறேன் சகோதரம்..
//
அப்படியே ஆக்கட்டும் அண்ணா!
@Yoga.S.FR
ஆரம்பத்தில் வாரம் ஒன்றினை எழுதுவோம்...
எல்லோருக்கும் தொடர்ந்து படிக்க்கும் ஆவல் இருந்தால்...வாரம் இரு பாகம் எழுதுவோம்.
@புலவர் சா இராமாநுசம்
வணக்கம் ஐயா,
ஆரம்பத்தில் ஒரு பாகத்தினை எழுதுவோம். தங்கள் அன்பிற்கு நன்றி.
அன்பு நண்பர்கள் அனைவரினதும் வேண்டுகோளுக்கு அமைவாக...வாரம் ஓர் பதிவினை ஆரம்பத்தில் பகிர்வோம்.
தொடரைப் படிக்கும் தெம்பிருந்தால்...வாரத்தில் இரு பாகம் எழுதுவோம்!
தொடரை உங்கள் விருப்பத்தில் விடுகின்றேன் நேரம் கிடைக்கும் போது தானே எழத முடியும் குருவே! நீங்க எழுதுங்க வாசிக்கக் காத்திருக்கின்றேன்!
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று
Post a Comment