உறங்கும் உண்மைகள் இப்போது உலக அரங்கில்!
உலக அரங்கில் பிரபாகரனின் திட்டமிடல்கள், பிரபாகரனின் நகர்வுகள் யாவும் அவருக்கு அருகே மிக நெருக்கமாக உள்ளோரால் கூட இலகுவில் அறிய முடியாது என்று கூறுவார்கள். ஆனால் இன்று ஈழப் போராட்டம் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ளும் அரசியல் அறிவு ஜீவிகள் அனைவரும் பிரபாகரனின் மன உறுதி பற்றி அளவிட முடியாதவர்களாக உள்ள நேரத்தில் 25 வருடங்களிற்கு மேலாக புலம் பெயர்ந்து வாழும் ஓர் அரசியல் புத்திஜீவி பிரபாகரனின் தோல்வி பற்றி புதியதோர் விளக்கம் கொடுக்கின்றார்.
முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தோற்றது எப்பூடி என்று அறியப் பலருக்கும் ஆவல் அதிகமாக உள்ள சமயத்தில் அரசியல் ரீதியாக பிரபாகரனின் நகர்வுகளை அளவிட முடியாதோர் பிரபாகரனின் தோல்வியினை அளவிடப் பல்வேறுபட்ட சொல்லாடல்களைக் கையாள்கிறார்கள். வாருங்கள் பதிவர்களே பிரபாகரனின் தோல்வியினை நாமும் அளவிட்டுப் பார்ப்போம்.
பிரபாகரனின் தோல்வியினை அளவிடத் தேவையான சொற்கள்:
*புலம்பெயர்ந்து 25 வருடங்களுக்கும் மேலாக ஐரோப்பாவில் வசிக்க வேண்டும்.
*புலிகளைப் பற்றி ஓர் கட்டுரை எழுதுவதாக இருந்தால் வரிக்கு வரி பாசிசப் புலிகள் எனும் சொல்லைச் சேர்க்க தெரிந்திருக்க வேண்டும்.
*பினாமிப் பிரபாகரன், பசுத் தோல் போர்த்திய புலிப் பிரபாகரன் என்றெல்லாம் புரியாத பாசைகளில், தாம் ஏன் இவ்வாறு வர்ணிக்கின்றோம் எனும் காரணம் ஏதும் அறியாதவர்களாக அடிக்கடி பிதற்ற வேண்டும்.
ஸோ...இத்தனை விடயங்களும் இருந்தால் நீங்கள் தான் பிரபாரனின் தோல்வியினை அளக்கத் தெரிந்த உலகின் முதல் நபராகுவீங்க. என்ன சந்தேகம் இருக்கா? இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் தான் உலக அரங்கில் பிரபாகரனின் தோல்வியினை நிரூபிக்க முடியும் எனச் சொல்றாங்கோ! பிரபாகரனுக்கு அருகே, அவர் கூட இருந்த போராளிகளால் கூட தலைவர் இறுதி யுத்தத்தில் தன் உயிரைப் பற்றி, தன் குடும்பத்தினரைப் பற்றி கவலைப்படாமல் நின்ற போது வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது உண்மை.
பிரபாகரனின் தோல்விக்குரிய அரசியல் ராஜதந்திர காரணங்களை இலகுவில் அறிய முடியாதோர் கிணற்றிலிருந்து பூதம் வந்த கதையாக பிரபாகரன் கூட இருந்த மூத்த தளபதிகள் பல வருடங்களுக்கு முன்னர் விலை போய் விட்டார்களாம் எனத் தூக்கத்தில் உளறுவது போல கட்டுரைகள் வரைகிறார்கள். தளபதிகள் விலை போய் விட்ட காரணத்தினால் தான் பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் தோற்றார் என வன்னியின் வாசமே அறியாதவர்கள் வரலாறு எழுத முனைகிறார்கள்.முப்பதாண்டுகளுக்கு முன்னர் முதுகில் ஒரு கீறல் கூட விழாதவர்களாக ஈழத்தை விட்டு ஓடி இராஜ யோக வாழ்க்கை வாழ்ந்தவாறு பிரபாகரனின் தோல்யிவினைச் சிலர் அளவீடு செய்வது தான் காமெடியிலும் காமெடியாக இருக்கிறது.
பதிவர்களே! இது தான் இன்றைய நவீன அரசியல்!
முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தோற்றது எப்படி என்று ஓர் அலசலை எழுத உங்களுக்கும் ஆவலா? இதோ தயாராகுங்கள். "அ" என்னும் எழுத்தில் ஆரம்பித்து அடிவருடி, அல்லக்கை, ஆப்படித்த தமிழன், இடதுசாரி, ஈனத் தமிழன், உபத்திரத் தமிழன், ஊதாரித் தமிழன், எட்டப்பன், ஏதிலித் தமிழன், ஒட்டுப் படைத் தமிழன் எனப் பலவகையான சொற்களை கோர்வையாக்கி ஓர் கட்டுரை எழுதினீங்க என்றால் பிரபாகரனின் தோல்வி அந்தக் கட்டுரைக்குள் அடங்குமாம்!
முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் தோற்றது எப்படி என்று ஓர் அலசலை எழுத உங்களுக்கும் ஆவலா? இதோ தயாராகுங்கள். "அ" என்னும் எழுத்தில் ஆரம்பித்து அடிவருடி, அல்லக்கை, ஆப்படித்த தமிழன், இடதுசாரி, ஈனத் தமிழன், உபத்திரத் தமிழன், ஊதாரித் தமிழன், எட்டப்பன், ஏதிலித் தமிழன், ஒட்டுப் படைத் தமிழன் எனப் பலவகையான சொற்களை கோர்வையாக்கி ஓர் கட்டுரை எழுதினீங்க என்றால் பிரபாகரனின் தோல்வி அந்தக் கட்டுரைக்குள் அடங்குமாம்!
அடே! நாராயணா! இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா!!
இப் பதிவிலுள்ள படங்கள் யாவும் புலிகளின் குரல் இணையத்திலிருந்து பெறப்பட்டவை.
|
26 Comments:
வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம் எண்டு சும்மாவா சொன்னார் அவர் ...
இப்போ இணையத்தில இந்த முற்ப்போக்குவாதிகள் தொல்லை தாங்க முடியலப்பா...கணணிப்பெட்டிக்கு முன்னுக்கு குந்திக்கொண்டு ஒலகத்த விமர்சிக்கிரத்தில அப்பிடி ஒரு இன்பம் காண்கீனம்...
@கந்தசாமி.
என்ன செய்வது கந்து?
கொடுமையிலும் கொடுமை இது அல்லவா?
சகோ நிரூபன்
வண்க்கம் .வரலாறு வெற்றி பெற்றவ்ரகளை எழுதப்படுகிறது.தமிழர் விடுதலைப் போராட்டத்தில் புலிகள் ஒரு கால கட்டம் .அவர்களை விமர்சிப்பது த்வறு இல்லை என்றாலும் அவர்களை எல்லவற்றுக்கும் காரணம் என்பதும் தவறே.
தமிழர்களுக்கு எந்த ஒரு தீர்வையுமே தர் விரும்பாத இராஜபக்சே அரசு,தன் அரசியல்,பொருளாதார இலாபங்களை மட்டுமே நினைக்கும் இத்ர தொடர்பு நாடுகள் என்ற சூழலில் புலிகள் சகல்[அல்லது பெரும்பாலான்] பிரச்சினைக்கும் காரணம் என்ற வாதம் வைப்பவர்களால் இருக்கும் பிரச்சினைகள் தமிழர்களுக்கு அதிகமாகிறது.
"தமிழீழம் தவிர எந்த தீர்வுக்கும் புலிகள் வரத் தாயாராக இருக்கவில்லை என்பது உண்மைதான்.பல குறைந்த பட்ச தீர்வுகள் தவிர்க்கப்பட்டது.[இது என் கருத்து மட்டுமே!]"
புலிகள் இல்லாத இந்த மூன்று வருடங்களில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது?
புலிகள் இல்லா கால கட்டத்தில் ஒன்று பட்ட இலங்கைக்குள் கூட தமிழர்களுக்கு ஒரு மாநிலம் கொடுத்து ஒரு சாதாரண குறைந்தபட்ச அதிகாரங்களுடன் கூடிய ஜன்நாயக அரசு போன்ற தீர்வுகள் கூட கிடைக்கவில்லை.
அப்போது அளிக்கத் தயாராக இருந்த ஒரு குறைந்த பட்சத் தீர்வு கூட இபோது தர மறுக்கிறது இராஜபக்சே அரசு?
இபோது தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடப்பது முக்கியமா? விமர்சனம் முக்கியமா?
நண்டுத் தமிழர்களப்பா சகோ
சாதி,மத, பிராந்தியம் பிரிவினை ,கொள்கை பேசியே அழிவோம்!!!
நன்றி நிரூபன்
இந்த முட்டாள்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எம் தலைவர் பிரபாகரன் தோற்கவும் இல்லை தோற்கவும் மாட்டார் என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை எமக்காய் வாழ்ந்தவர்கள் எமக்காய்வீழ்ந்த மறவர்கள் மீது உங்கள் அதிமேதாவித் தனத்தைக் காட்டாதீர்கள். ஒதுங்கிநில்லுங்கள். எலிக்குப் பயந்தோடிய அற்ப ஜீவிகள் இப்போது புலியாகப் பார்க்கின்றார்கள்.
நானும் இங்கிருந்து நிறைய பிரபாகரன் அவர்களை பற்றிய செய்திகளை படித்திருக்கேன்..பல விதமா சொல்லிருப்பாங்க.எது உண்மை என்றுக்கூட நம்ப முடியாது.நல்ல பதிவு நண்பரே..மிக்க நன்றி.
மீள் வணக்கம் நிரூபன்!பிரபாகரன் தோற்றது எப்படி என்று ஆய்வது(கீரை?)இருக்கட்டும்,இப்போது அவரின் தீர்க்கதரிசனம் மெல்ல,மெல்ல நிஜமாகி வருவதை யாராவது ஆய்ந்தால் பரவாயில்லை!
வணக்கம் நிரூபன்!
ஒரு கணணியும் நெற் கனைக்சனும் கிடைச்சா என்ன வேணும்னாலும் எழுதலாம் என்று ஒரு முடிவோடதான் திரியுறாங்க போல..!! :-(
@சார்வாகன்
மிக நீண்ட கருத்துரையை கொடுத்திருக்கிறீங்க. நன்றி சகோ.
தமிழர்களிடத்தே பிரிவினையைத் தூண்டனும் எனச் சிலர் எழுதுகின்றார்கள். அவர்களுக்கு கொஞ்சம் உறைக்கும் படி சொல்லுவோம் என நினைத்ததன் விளைவே இப் பதிவு.
இனித் தீர்வை நோக்கிய பாதையில் எம் படைப்புக்களை நகர்த்துவது தான் அரசியல் ரீதியான வலுவான சிந்தனை மக்களிடத்தே சென்று சேருவதற்கு ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன்.
@சத்தியா
நல்ல கருத்தினைச் சொல்லியிருக்கிறீங்க சத்தியா.
ரொம்ப நன்றி.
@Kumaran
குமரன் வருகைக்கும், உங்கள் உள உணர்வுகளைப் பகிர்ந்தளித்தமைக்கும் நன்றி.
@Yoga.S.FR
மீள் வணக்கம் நிரூபன்!பிரபாகரன் தோற்றது எப்படி என்று ஆய்வது(கீரை?)இருக்கட்டும்,இப்போது அவரின் தீர்க்கதரிசனம் மெல்ல,மெல்ல நிஜமாகி வருவதை யாராவது ஆய்ந்தால் பரவாயில்லை!
//
மீள் வணக்கம் ஐயா,
உண்மையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீங்க.
இம் மாதிரி ஆய்ந்து கொண்டிருப்பவர்களால் அடிக்கடி இம்சை தான் ஏற்படுகிறது.
@காட்டான்
வணக்கம் நிரூபன்!
ஒரு கணணியும் நெற் கனைக்சனும் கிடைச்சா என்ன வேணும்னாலும் எழுதலாம் என்று ஒரு முடிவோடதான் திரியுறாங்க போல..!! :-(
//
வணக்கம் அண்ணா..
இது செம கருத்துக் குத்தில்லே! கொர்ர்ர்ர்ர்ர்ர்
தோற்றாலும் ஸ்பார்டகஸ் வீரம் இன்றும் மதிக்கப்படுகிறது.இந்த நூற்றாண்டின் இணையற்ற மாவீரன் பிரபாகரன்.
சேகுவேரா போல் பிரபாகரனும் கொண்டாடப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.அது வரை காக்கைகளும்...வான் கோழிகளும் ஆட்சி செய்யட்டும்.
சகோ.நீரூபன்!நலமா?
எங்கே தவற விட்டோம் என்ற சுயபரிசோதனைக்கான விமர்சனம் அவசியமே.ஆனால் பதிவில் நீங்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்களின் தளத்திற்கு கருத்தாடல் செய்ய ஈ அல்ல கொசு கூட வாசம் செய்வதில்லையென்பதிலிருந்தே அவர்களது கருத்துரைகள் தோற்றுப் போய் விடுகின்றன.இவர்கள் போன்றோரின் குழப்பம் செய்யும் நிலையும்,பிரிந்து நிற்கும் சாதக நிலையுமே ராஜபக்சேக்களின் பக்க பலமாகிறது.இவர்கள் காரண,காரியங்களுக்காக மேளம் கொட்டினாலும் சரி,இல்லை கருத்துரிமை என்ற பெயரில் கூவினாலும் சரி இவ்ர்க்ள்து எழுத்தல்ல பிரபாகரன் என்ற சொல்லே எஞ்சி நிற்கும்.
சகோ.சார்வாகனின் விவேகமான பின்னூட்டத்திற்கு பாராட்டுக்கள்.
வணக்கம் நிரூபன் இது மிகவும் வேதனைக்குரிய விடயம். பெரும்பாலான விமர்சகர்களும் தீர்ப்பை எழுதிவைதித்துக்கொண்டுதான் விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆய்வுகளில் இருந்து முடிவுகள் எட்டப்படாமல் முடிவுகளை வைத்துக்கொண்டு அதற்கேற்ற ஆய்வுகள் - சட்டையை வைத்துக்கொண்டு அதற்கு அளவான பொம்மையை தேடுபவர்கள்தான் இவர்கள்.
நடந்து முடிந்தவற்றை காலம்பூராவும் விமர்சித்துக்கொண்டு இருப்பதைவிடுத்து இனி நடக்கவேண்டியவை பற்றிய விவாதங்களே இனி தேவை. விமர்சித்துக்கொண்டே இருப்பவர்கள் செயலில் எதை செய்கிறார்கள் எதுவும் இல்லை நிரூ.
அடிப்படையில் இந்திய பீரோகிரேசியே அனைத்திற்கும் மூல காரணங்கள் என்பேன்.
அணுகுண்டுகளை அடைகாப்பதை விட இந்தியாவும்,பாகிஸ்தானும் மதம் கடந்து பழைய இணைந்த பூமியென்ற பார்வையில் எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது மட்டுமே இரு நாடுகளுக்கும் நலன் தரும்.
அமீரின் குடும்பத்தின் துக்கங்களை பகிர்வோம்.
சகோ ஹைதர் அலிக்குப் போட்ட பின்னூட்டம் இங்கே எப்படி வந்தது?
யதார்த்தங்களை புரிந்துகொள்ளாமலும், வெறுமனே கோட்பாடுகளையும் தத்துவங்களை சொல்லிக்கொண்டும் இருப்பதாலேயே முற்போக்காளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்டு நிற்கிறார்கள்.
ராஜ நடராஜன் said... Best Blogger Tips [Reply To This Comment]
சகோ ஹைதர் அலிக்குப் போட்ட பின்னூட்டம் இங்கே எப்படி வந்தது?
////M..M..காக்கா தூக்கிக்கிட்டு வந்து போட்டிருக்கும்!
கையாலாகாமல் , வேடிக்கைப் பார்த்த எமக்கு கருத்து சொல்ல அருகதை இல்லை. சகோதரா.
களமாடிய வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி மட்டுமே எம்மால் முடிந்தது.
/* இனி நடக்கவேண்டியவை பற்றிய விவாதங்களே இனி தேவை. */
இது தான் இலங்கைத் தமிழர்களின் இன்றைய தேவை சகோஸ். அதற்க்கான சூழ்நிலையும், அதற்கேற்ற தலைவர்களும் அமைய இறைவனை
பிராத்திக்கிறேன்.
தலைப்பே பிழை......! அதிகம் எழுத நேரமில்லை!!
பாசிசம் என்றாலே இந்த ரயாகரன் ஞாபகம் தான் வந்து தொலைக்குது :-)
எது எப்படி இருந்தாலும்... யார் என்ன சொன்னாலும்... ”அது” அப்படித்தான் நடந்தது....
//அம்பலத்தார் said... Best Blogger Tips [Reply To This Comment]
யதார்த்தங்களை புரிந்துகொள்ளாமலும், வெறுமனே கோட்பாடுகளையும் தத்துவங்களை சொல்லிக்கொண்டும் இருப்பதாலேயே முற்போக்காளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்டு நிற்கிறார்கள்//
உண்மை இதுவே
Post a Comment