வேற்றுக் கிரக வாசியாய் நான்
வேலி போட்டு பிரித்து
தாலியோடு வா என
வாசலில் நின்று
விடை கொடுக்கிறாய் நீ!
ஐஸ்கீரிம் மூலம் அன்பை பரிமாறலாமோ?
எச்சங்களாக எச்சில்களை
உமிழ்ந்த படி
அன்றைய சந்திப்பு முடிந்தது
அப்போது தான் உணர்ந்தேன்
மிச்சமாக
நீ சாப்பிட்ட ஐஸ்கீரிமை கூட
விட்டு வைக்கவில்லை என்பதை!
உதட்டிற்கு மை எதற்கு? உண்மைக்கு சாட்சியல்லவா?
இதழோரம் மை பூச வேணாம் என்றேன்
இதெல்லாம் கலியாணத்திற்கு அப்புறம்
எனச் சொல்லி
கெஞ்சல் பேச வைக்கிறாய் நீ!
பின் தொடர்ந்தேன்! கண் கலங்க வைக்கிறாயே ஏன்?
அடுத்தவர் என்
அழகுப் பைங்கிளியை
கொத்திடுவாரோ என பயந்து
அடியேன்
அனுதினமும் பின் தொடர்ந்தேன்!
நீயோ
உலக அழகி எனும்
திமிர் கொண்டு
என்னை அலைய வைத்து
கண் கலங்க வைக்கிறாய்!
கலியாணம் கட்டனும் என்றேன்! சீ! போடா இது கலியுக காதல் என்றாள்!
ஆசையோடு பார்த்தோம் - பஸ்ஸினுள்
அருகருகே அமர்ந்தோம் மெஸ்ஸினுள்!
மீசை முளைக்கா வயசில்
மெல்ல மெல்ல லீலைகளைச் செய்தோம்
வாஞ்சையோடு வாணி எனக்கு
வாழ்க்கை பூரா நீ வேணும் என்றேன்!
யோ கஸ்மாலம்! என்னையா நீயி
காதலிக்கிறாய்- சோலியை முடிச்சிட்டு
சுருக்கா ஓடு என்றாள்!
காதலைச் சொல்லி கைப் புடிக்க
நினைக்கிறியே நாயே! நீயெல்லாம்
விபரம் அறியாத அப்பாவி என்றாள்!
அப்பாவை சொன்ன மொழி கேட்டு
அப்படியே பார்த்து நின்றேன் நான்!
|
6 Comments:
வணக்கம் நிரூபன்!(நிருபன்?)மொத்தத்துல அப்பாவிதான் நான் அப்படீன்னு புரூப் பண்ணாப் பாக்கிறீங்க!வுட மாட்டமே,ஹ!ஹ!ஹா!!!!
அவ்வளவு அப்பாவியா நீங்க...
போன பதிவில் கலாம் ரேஞ்சுக்கு ரயிலில் கனவு கண்ட ஆளாயிற்றே...
கலக்குங்க சகோதரம்...
அவ்வளவு அப்பாவியா நீங்க...
போன பதிவில் கலாம் ரேஞ்சுக்கு ரயிலில் கனவு கண்ட ஆளாயிற்றே...
கலக்குங்க சகோதரம்...
ஹி..ஹி...
கருத்துரை வழங்கி அத்தனை பேருக்கும் நன்றி.
தம்பி பீலிங்க்ஸ் புரியுது ... என்னவோ நடக்குது!!
Post a Comment