விளக்கப் படங்களுடன் விபரமாக கத்து கொடுக்கிறேன்! விடயம் அறிய குரு தட்சணையுடன் கெளம்பி வாங்கோவ்!
உலகில் மிகவும் பெறுமதி வாய்ந்த நாணயங்களுள் மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலிய டாலர் விளங்குகின்றது. பிரித்தானியர்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடி பெயர்ந்த பின்னர் பிரித்தானியர்களின் காலனியாக ஆஸ்திரேலியா இருந்தது. இந்தக் காலப் பகுதியில் ஆஸ்திரேலிய நாணயமாக லண்டன் ஸ்ரேலிங் பவுண்ட் விளங்கியது. பின்னர் ஆஸ்திரேலியா பிரித்தானியாவின் காலனித்துவப் பிடியிலிருந்து விடுதலை அடைந்த பின்னர் 1966ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் உத்தியோக பூர்வ நாணயமாக ஆஸ்திரேலிய டாலர் அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய நாணயக் குற்றிகளை அச்சிடும் நிறுவனம் ஆரம்ப காலத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்பேண் நகரில் அமைந்திருந்தது. ஆஸ்திரேலியாவின் தலை நகரினை நோக்கி அனைத்து அரச திணைக்களங்களும் இடம் பெயரத் தொடங்கிய போது Australian Mint எனப்படும் நாணயக் குற்றிகளை செய்யும் நிறுவனமும் கன்பரா நகரிற்கு இடம் பெயர்ந்தது. ஆஸ்திரேலியாவின் முதலாவது நாணயமாக விளங்குவது ஆஸ்திரேலிய பூர்வீக குடிகள் பாவித்த மரக் குற்றி வகை நாணயங்களாகும். இவையும் இன்று வரை ஆஸ்திரேலிய நாணயங்களை உருவாக்கும் நிறுவனத்தின் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.
வாருங்கள் Australian Mint இனுள் நுழைவோம்.
ஆஸ்திரேலியன் மின்ற் கன்பரா நகரின் மையப் பகுதியிலிருந்து அண்ணளவாக 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் பெயர் Australian Mint.
அமைவிடம்:Australian Mint, Canberra, Denison Street, Deakin, Australian Capital Territory
பார்வையாளர்களுக்கான அனுமதி: இலவசம்.
இனி நாணயக் குற்றிகளைச் செய்வது எப்படி என பார்ப்போமா?
*ஆஸ்திரேலிய நாணயக் குற்றிகளில் ஒரு டாலர், 2 டாலர் ஆகியவை கலப்பு தங்கத்தில் செய்ப்படுகின்றன. சில விசேட நிகழ்வுகளுக்காக, (Anniversary / Annual Events) மாத்திரம் செய்யப்படும் நாணயங்கள் சுத்த தங்கத்தில் கலப்படமற்று உருவாக்கப்படுகின்றன. இதனால் தங்க நாணயத்தினை உருக்கி தங்கம் ஏற்றுமதி இடம் பெறக் கூடும் என்பதால் ஆஸ்திரேலிய நாணயக் குற்றிகளை அதிகளவில் ஆஸ்திரேலியாவிற்கு அப்பால் காவிச் செல்வதற்கு ஆஸ்திரேலிய இமிக்கிரேசன் தடை விதித்திருக்கிறது. (சட்ட விரோதம்)
*ஆஸ்திரேலிய மின்ற் நிலையத்தில் நாளொன்றுக்கு ஒரு மில்லியன் நாணயக் குற்றிகள் உருவாக்கப்படுகின்றன.
முதலில் புழக்கத்தில் உள்ள நாணயக் குற்றியினை விடப் பெரிதாக ஒரு A4 தாளின் அளவில் உருவாக்கப்படும் நாணயத்தினை ஓவியமாக கை தேர்ந்த ஓவியக் கலைஞர்கள் கலந்தாலோசித்து வரைந்து கொடுப்பார்கள்.
*இந்த ஓவியம் மற்றும் டிசைனிங் அரசாங்கத்திற்கு பிடித்திருந்தால் அதனை நாணயமாக வெளியிட அரசு அனுமதியளிக்கும்.
*இதன் பின்னர் ஓவியத்தை ஸ்கேன் பண்ணி லேசர் தொழில் நுட்ப உதவியுடன் கணினியில் வரைந்து மரக் குற்றி போன்ற தக்கை ஒன்றில் அச்சுப் பதிப்பார்கள்.
*மரக்குற்றியில் தமது டிசைனிங் தரமாக வந்தால் நேரடியாக உருவாக்கப் போகும் நாணயத்தினை விட இரு மடங்கு பெரிதாக சில்வர் உருண்டையில் ஓர் சாம்பிள் நாணயத்தினைச் செய்வார்கள்.
*இந்தச் சில்வர் நாணயம் பல்வேறு நிபுணர்களின் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டு இறுதியில் ரோபோக்களின் உதவியுடன் நாணயக் குற்றிகளை உருவாக்குவதற்கு சாம்பிள் நாணயமாக யூஸ் பண்ணப்படும்.
*இந்த நிலையத்தில் இரண்டு ரோபோக்கள் மனித செயற்பாடு ஏதுமின்றி தானாக நாணயத்தினை கணினியில் வழங்கப்பட்டுள்ள புரோக்கிராமிற்கு அமைவாக இரவு பகல் பாராது ஓயாது உருவாக்குகின்றன.
*ரோபோக்கள் ஒவ்வோர் நிமிடமும் உருவாக்கும் நாணயத்தினை சரியாக கணக்கிட்டு கணியில் பதிவு செய்து கொள்ளும்.
*ரோபோக்கள் இருக்கும் இடத்தில் மனுசங்களுக்கு என்ன வேலை என்று நீங்க யோசிக்கலாம். ரோபோக்கள் தயாரித்த நாணயத்தின் தரம், நிறை, நாணயத்தில் உள்ள எழுத்துக்களின் ஸ்திரத் தன்மையினைப் பரிசோதிப்பது தான் இங்குள்ள ஊழியர்களின் வேலை.
*இவற்றை விட, தரமற்ற நாணய குற்றிகளை மீள் சுழற்சி முறையில் உள்ளீடாக மாற்றுவதும், பரிசோதனை, டிசைனிங் முதலிய தொழில்நுட்ப வேலைகளைச் செய்வதும் இங்குள்ள ஊழியர்களின் வேலையாகும்.
*இவற்றை விட, தரமற்ற நாணய குற்றிகளை மீள் சுழற்சி முறையில் உள்ளீடாக மாற்றுவதும், பரிசோதனை, டிசைனிங் முதலிய தொழில்நுட்ப வேலைகளைச் செய்வதும் இங்குள்ள ஊழியர்களின் வேலையாகும்.
*ஊழியர்களால் பரிசோதிக்கப்பட்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்ட நாணயங்கள் யாவும் ரோபோக்களின் உதவியுடன் நேரடியாக வாகனங்களில் ஏற்றப்படும்.
*அப்புறம் மனுசங்க நாணயத்தினை பரிசோதிக்கும் போது ஆட்டயப் போட மாட்டாங்களா என்று நீங்க யாரும் யோசிக்கலாம். இங்கு வேலை பார்க்கும் அனைவரும் கையிலும் இலத்திரனியல் கையுறை அணிந்து வேலை செய்யனும் என்பது அரச ஆடர். நீங்க காயினில் கை வைச்சு காயினை பாக்கட்டினுள் போட நினைச்சா....ரோபோ காட்டிக் கொடுத்திடுமாம்.
*ஆஸ்திரேலிய மின்றினைச் சுற்றிப் பார்க்க வரும் அனைவருக்கும் இலவச விளக்கங்களையும், பணம் தயாரிக்கும் முறையினையும் விளக்களிக்கும் வண்ணம் அங்குள்ள ஊழியர்கள் அருமையான சேவை செய்கின்றார்கள்.
*மூன்று ஒரு டாலர் குற்றிகளைப் ஓர் மெசினுள் போட்டால் நீங்க உங்களுக்கு விருப்பமான ஓர் காயினை விரும்பிய டிசைனில் உருவாக்க முடியுமுங்க.
இனி கண்களுக்கு விருந்தாக சில படங்களை இணைத்துள்ளேன்! பார்த்துப் பரவசமாகுங்கள்.
அப்புறமா இப் பதிவில் நல்ல நோட்டு செய்யும் முறையை தான் சொல்லியிருக்கேன். கள்ள நோட்டு, கொள்ளை நோட்டு செய்யும் முறை தெரிஞ்சா சொல்லாமலா போயிடப் போறேன்! அவ்வ்வ்வ்வ்வ்வ்
ஆஸ்திரேலிய பூர்வீக குடிகள் பயன்படுத்திய நாணயங்கள் |
|
14 Comments:
அரிய தகவல்கள் நிரூ! என்ன ஜாலியா ஒரு பயணம் போல......
ரோபோவா நாணயத்தை தயாரிக்கும்
தெரியாத விடயங்கள்
இரவு வணக்கம்,நிரூபன்!பத்திரம்,காட்டிக் கொடுத்து விடுவார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!
தெரியாத பல தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன் சகோ..
சரி பிரித்தானியர்கள்ன்னா யாரு நிரூபன்?
நாணயங்கள் தயாரிப்பு முறைகளும், பல நாணயங்களின் பாதுகாப்பு முறைகளும் நேர்த்தியா இருந்தது...
மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த் பதிவுக்கு....
@ரேவா
இலண்டன் காரங்க, / United Kingdom இல்லேன்னா British காரங்களைத் தான் பிரித்தானியர்கள் என்று சொல்லுவாங்க.
@வீடு சுரேஸ்குமார்
அரிய தகவல்கள் நிரூ! என்ன ஜாலியா ஒரு பயணம் போல......
//
ஆமா பாஸ்.... நன்றி.
@Vairai Sathish
ரோபோவா நாணயத்தை தயாரிக்கும்
தெரியாத விடயங்கள்
//
ஆமா பாஸ்.
@Yoga.S.FR
இரவு வணக்கம்,நிரூபன்!பத்திரம்,காட்டிக் கொடுத்து விடுவார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!
//
வணக்கம் ஐயா,
எதுக்கு காட்டி கொடுத்திடுவாங்க...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் தான் காசே அடிக்கலையே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அரிய தகவல்கள். படங்கள் அருமை .
த.ம 7.
சூப்பர் தகவல்கள். ட்ரிப் அடிச்சு நல்லா என்ஜாய் பண்றீங்க போல. அப்புறம் அந்த கள்ளநோட்டு பத்தி சொல்லவே இல்ல?
கொஞ்சம் அவுஸ்திரேலியா டாலர் ஸ்ரீலங்காவுக்கு அனுப்புங்களேன். பவுன் 50000 தாண்டிட்டு. உருக்கி எடுத்து ஒரு 5000 தேத்தினாலும் போதும்.
நல்ல பதிவு தந்த உங்களுக்கு ஒரு நல்ல நாணயக் கிழி!
nalla pathivu
Post a Comment