சருகாகிப் போன காதல்!
உன் பார்வை அம்புகளால்
என் காதல் துளிர் விட்டது - இன்றோ
சந்தேகப் பார்வைகளால்
அது சருகாகி விட்டது!
போர்வையாய் நீ!
அன்பே! இப்பொழுதெல்லாம்
உறங்கையில் எனக்கு
போர்வை தேவைப்படுவதில்லை - காரணம்
தினமும் உன் நினைவுகள் வந்து
என்னைப் போர்த்திக் கொள்வதனால்!
ஒரே கல்லில் ரெண்டு மாங்கா அடிக்கலாமோ?
காதலிப்பவர்கள் எல்லோரும்
பொய் உரைப்பவர்கள் என்றவாறு
என்னை நீ பார்த்தாய் - ஏதுமறியாதவனாய்
உன்னைப் போல் இன்னோர் பிகரையும்
காதலிப்பதை மறைத்து
பொய் உரைத்தவாறு
உன்னை நான்பார்த்தேன் நான்!
முத்தமிடும் போது வெட்கத்தினால் முகம் சிவக்குமா?
அடிப் பாவி,
உன் வெட்கத்தை
இதழ்களினுள்ளா மூட்டை
கட்டி வைத்திருக்கிறாய்?
முத்தமிடும் போது உன் முகம்
இப்படிச் சிவக்கிறதே!
கழட்டி விட நினைத்தேன்! கட்டுடா தாலி என்று கழுத்தில் கை வைத்தாள்!
சொந்தத்தினுள் திருமணம் கூடாது
இது விஞ்ஞானம் விளக்கம் என்றேன்!
அத்த மவ சோலி முடிஞ்சதும்
கழட்டிவிடலாமா என நெனைக்கிறியே கஸ்மாலம்
ஆயுள் பூரா
நீ தாண்டா என் கணவன் என்றாய்!!
பேய் அறைந்த மாதிரி உன்னை
வைத்த கண் வாங்காது பார்த்து நின்றேன் நான்!
|
17 Comments:
அன்பே! இப்பொழுதெல்லாம்
உறங்கையில் எனக்கு
போர்வை தேவைப்படுவதில்லை - காரணம்
தினமும் உன் நினைவுகள் வந்து
என்னைப் போர்த்திக் கொள்வதனால்!
காலை வணக்கம் நிரூபன்... இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...
நினைவுகள் ஒன்றே போதும் அழகான காதலுக்கு
காதலிப்பவர்கள் எல்லோரும்
பொய் உரைப்பவர்கள் என்றவாறு
என்னை நீ பார்த்தாய் - ஏதுமறியாதவனாய்
உன்னைப் போல் இன்னோர் பிகரையும்
காதலிப்பதை மறைத்து
பொய் உரைத்தவாறு
உன்னை நான்பார்த்தேன் நான்!
இதெல்லாம் டூமச் திரிமச்...
அடிப் பாவி,
உன் வெட்கத்தை
இதழ்களினுள்ளா மூட்டை
கட்டி வைத்திருக்கிறாய்?
முத்தமிடும் போது உன் முகம்
இப்படிச் சிவக்கிறதே!
முத்தம் கேட்டால் வெட்கம் தருவாள் ரைட்டு...
இரண்டாவதும், மூன்றாவதும் ரசித்தேன் நிரூபன்... நாலாவது கவிதைக்கு அடிதான் கொடுக்கனும்...
முதல் புகைப்படம் அழகாய் இருக்கிறது நிரூபன், நானும் எடுத்துகொள்கிறேன் பிளீஸ் :)
@ரேவா
காலை வணக்கம் நிரூபன்... இந்த கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...
நினைவுகள் ஒன்றே போதும் அழகான காதலுக்கு
//
இனிய காலை வணக்கம் அக்கா,
நீயா...நீண்ட நாளுக்குப் பின்னர் நம்ம பக்கம் வந்திருக்கே! வருகே வருக என்று வரவேற்கிறேன்!
நம்ம முன்னோர்களில் பலரிடம் காதலின் வெற்றி எது என்று கேட்டால்...நினைவுகளில் வாழ்வது தான் என்று சொல்லுவாங்க. அதை வைச்சு எழுதினேன்.
@ரேவா
இதெல்லாம் டூமச் திரிமச்...
//
இப்போ அதிகமான காதல் இப்படித் தானே ஆயிருச்சு! அவ்வ்வ்வ்
@ரேவா
முத்தம் கேட்டால் வெட்கம் தருவாள் ரைட்டு...
//
தமிழ்ப் பெண்களின் பூர்வீக குணமே இது தானே! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@ரேவா
இரண்டாவதும், மூன்றாவதும் ரசித்தேன் நிரூபன்... நாலாவது கவிதைக்கு அடிதான் கொடுக்கனும்...
முதல் புகைப்படம் அழகாய் இருக்கிறது நிரூபன், நானும் எடுத்துகொள்கிறேன் பிளீஸ் :)
//
புகைப்படம் எடுப்பதில் ஆட்சேபனை இல்லை! புகைப்படத்திற்கு வாடகை கொடுக்கனும்! அவ்வ்வ்வ்வ்வ்;-)))
அப்புறமா..கொஞ்சம் நையாண்டி கலந்து எழுதனும் அப்படீன்னு நெனைச்சேன்! அதான் நாலாவது கவிதை அப்படி ஆச்சு!
புகைப்படத்திற்கு வாடகை கொடுக்கனும்! அவ்வ்வ்வ்வ்வ்;-)))
வாடகை கொடுக்கனுமா? அது சரி.... கட்டபொம்மன் வசனம் பேசனும் போலவே....ஹி ஹி
சந்தேகம் பல காதலை சருகாகிவிட்டுச் செல்கின்றது நிஜமான நிலை ..ரசித்த வரிகள் அத்தைமகள் சோலி முடிஞ்சுதோ????.
@@ நிரூபன் @@
ரசித்த வரிகள்..மனதை இனிக்க செய்த கவிதை..அருமை..நன்றிங்க நண்பா.
காலை வணக்கம் நிரூபன்!கவியில் காதல் சுவைவடித்த,செல்வத்தின் செல்வம் வாழ்க!!!!!!!!!!!!!!அத்தை மக?????!!!!
ஒவ்வொரு தலையங்கத்தோடு கவிதைகள் எல்லாமே நல்லயிருக்கு நிரூ.பழகமட்டும் அத்தைமகள்.வாழ வேற ஆரின்ரயின் மகளோ....ஆளைப்பாரு !
ஹேமா said... Best Blogger Tips [Reply To This Comment]
ஒவ்வொரு தலையங்கத்தோடு கவிதைகள் எல்லாமே நல்லயிருக்கு நிரூ.பழகமட்டும் அத்தைமகள்.வாழ வேற ஆரின்ரயின் மகளோ....ஆளைப்பாரு !////அது வந்து ஹேமா,யாவும் கற்பனையே என்று குறிப்பிட மறந்து விட்டாராம்!(அத்தை மகள விட்டா வேற ஆர் இவர நம்பி????ஹ!ஹ!ஹா!!!!!!!!
//யோவ்! கஸ்மாலம் என்னையா நீ காதலிக்கிறே? காரி துப்பினாள் கார்த்தி! //
எதுக்கு நண்பா இப்படி ஒரு தலைப்பு
அண்ணே எல்லாம் சூப்பரா இருக்கு
இன்றைய பதிவு நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்
ஹா ஹா கட்டிக்கொள்ள ஒன்ரு இடையில் கழட்டிவிட இன்னொன்று நல்ல கொள்கைதான் நிரூ. கருக்குமட்டையால் கொடுக்காமல் விட்டாளே.
Post a Comment