எல்லோருக்கும் வணக்கமுங்க, எல்லோரும் நல்லா இருக்கீங்களா?
நம்மில் பலருக்கு ஓர் தீராத மன அழுத்தம் இருந்துக்கிட்டே இருக்குமுங்க. அது தான் உடல் எடை பற்றிய பிரச்சினையாகும். நம்ம ஆன்றோர்கள் "கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்" அப்படீன்னு ஓர் நன் மொழி சொல்லியிருக்காங்க. ஆனால் இன்றளவில் "கண்டதை தின்பவன் வண்டியனாவான் (தொப்பையனாவான்)" அப்படீன்னு நம்ம பசங்க அந்த வசனத்தையே மாத்திப்புட்டாங்க. இளைஞர்களில் கட்டிளம் பருவத்தை அடைந்ததும், நம் அழகை நாமே கண்ணாடியில் பார்த்து ரசிக்க ஆரம்பிப்போம்.
நான் அழகாக இருக்கிறேனா? என் உடல் ஸ்லிம்மாக இருக்கிறதா? உடற் கட்டமைப்பு சிக்ஸ்பேக் போல இருக்கா என்றெல்லாம் அடிக்கடி செக் பண்ணிக் கொள்வோம். ஆனால் இடை விடாது வாய்க்கு வஞ்சகம் பண்ணாத வம்சமாக எதையாச்சும் வாயினுள் போட்டு சப்பிக்கிட்டே இருப்போமுங்க. அட என் உடல் எடை அதிகரிக்குதே என ஆதங்கப்படும் சிலர் என்னா பண்ணுவாங்க என்றால் தினமும் தம் எடையை குறைக்கலாமே எனும் நம்பிக்கையில் பல எக்ஸசைஸ் எல்லாம் பண்ணுவாங்கோ. ஆனால் உடல் எடை கம்மியாகாதுங்க.
ஏன்னா ஒவ்வோர் நாளும் செய்யும் உடற் பயிற்சியை விட ரெண்டு மடங்கு அதிகமா "அட நாம உடற் பயிற்சி பண்றோம் தானே! உடல் மெலிந்திடும்!" அப்படீன்னு மில்லில் அரிசி அரைப்பது போன்று வாயினுள் எதையாச்சும் போட்டு அரைச்சுக்கிட்டே இருப்போமுங்க. பொண்ணுங்க பதின்ம வயதினை அடைந்ததும் என்னா பண்ணுவாங்க என்றால்; சிம்ரன் மாதிரி சிக்கென்று இருக்கனும்!
இலியானா போல என் இடுப்பு இசைவாக இருக்கனும்! அப்படீன்னு நெனைச்சு உணவினைக் குறைச்சுக்க ஆரம்பிப்பாங்க.
பொண்ணுங்களில் அதிகமானவங்க பண்ற வேலை தம் அழகு மெருகேறனும்! உடல் எடை கம்மியாகனும் என நினைத்து உணவினை குறைச்சுப்பாங்களே அன்றி, எந்த மாதிரியான உணவினை உண்டா உடல் எடை கம்மியாகும் என்று நெனைச்சுக் கூடப் பார்க்க மாட்டாங்க. இந்தப் பதிவோட முக்கிய நோக்கம், உடல் எடையினை சீரான வகையில் மெயின்டேன் பண்ணிக்க உண்ண வேண்டிய உணவு வகைகளைப் பற்றி ஆராய்வது தானுங்க. மூன்று வேளை சாப்பிடுவதோ, ஐஞ்சு வேளை சாப்பிடுவதோ ஒரு பிரச்சினையே கிடையாதுங்க. ஆனால் எத்தனை கலோரி உணவினை உண்ணுகிறோம் எனும் விடயம் தான் எம் எடையினைத் தீர்மானிக்கும் முக்கிய விடயமாகும். ஆதலால் ஒவ்வோர் வேளையும் சம அளவிலான உணவினை தினந் தோறும் எடுப்பது தான் நமது எடையினைப் பராமரிக்க ஏற்ற செயலாகும்.
இப்போதெல்லாம் நம்ம ஊர்களில Oats எனப்படும் வாற்கோதுமை தானியப் பொருட்கள் கிடைக்குதுங்க. ஸோ...அதை வாங்கி, காலையில கொஞ்சப் பாலும் சேர்த்து கொஞ்சூண்டு சீனியும் போட்டு உண்டா காலை உணவுடன் நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும். ஓட்ஸ் வாங்க முடியாதவங்க காலை உணவாக, ஆரேஞ்ச் யூசும், ஆப்பிள் பழமும் எடுத்துக்கலாம். இல்லே வாழைப் பழமும் பாணும் சாப்பிடுக்கலாம். ஆனால் ஒரு முக்கியமான கண்டிசன் என்னா தெரியுமா? ஒவ்வோர் நாளும் நேரந் தவறாது சம நேரத்திற்கு நம்ம உணவினை எடுக்கும் பழக்கத்தினை நாம கைக் கொள்ளப் பழகிக்கனும். நேரந் தவறி உணவினை உண்ணுவோராக நாம் இருந்தால் கண்டிப்பாக நமக்கு அதிகமாக பசியெடுக்கும். இதனால் பசிக்குது அப்படீன்னு நெனைச்சு அளவு கணக்கின்றி சாப்பிடுவோமுங்க.
மதிய உணவாக தமிழர்களின் பிரதான உணவான சோறுனை நீங்க எடுத்துக்கலாம். சோறுடன் முடிந்த வரை ஒரு கீரை வகை உணவினைக் கண்டிப்பாகச் சேர்க்கப் பழகிக்கனுமுங்க. கீரை வகையுடன், புரோட்டீன் சத்து நிரம்பிய உணவினையும், பச்சை காய்கறி வகைகளில் ஏதாச்சும் ஒண்ணையும் கண்டிப்பாக எடுத்துக்கனுமுங்க. இரவு உணவாக ரொட்டி அல்லது ஏதாச்சும் மென்மையான உணவினை எடுத்துக்கலாம். ஆனால் மதியமும் சோறு, நைட்டும் சோறும் அப்படீன்னு ஒரு நாளும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்ணாமுங்க. வெளிநாட்டவர்களில் அதிகம் பேர் எப்பவுமே இளமையுடனும், அழகுடனும் இருப்பாங்க.
அவங்க இளமைக்கும் அழகிற்கும் உணவுப் பழக்க வழக்கங்களும் ஒரு வகையில் காரணமாக இருக்குதுங்க. முடிந்த வரை கரட், ஆப்பிள், ஆரேஞ், வெள்ளரிக்காய், மற்றும் பச்சைக் காய்கறிகளை சமைக்காது உண்ணப் பழக்கப்படுத்திக் கொள்ளனுமுங்க. அது தான் நமது உடலில் நிறைவான ஊட்டச் சத்துக்களைப் பெறுவதற்கு துணையாகவும் இருக்குமுங்க. அப்புறமா கீரை வகைகளை பச்சையாக (சமைக்காது) பாணுடன் சாண்ட்விச் போன்று உண்பதையும் மெது மெதுவாக நாம பழக்கப்படுத்திக் கொள்ளலாம். காலையில் அல்லது மாலையில் நாம ஒரு பதினைந்து நிமிடம் நடப்பதையோ அல்லது ஓடுவதனையோ வழக்கப்படுத்திக் கொள்ளனுமுங்க.
அப்புறமா, ஒவ்வோர் நாளும் அதிக தண்ணீர் (குடி தண்ணீர்) குடிப்பதனையும் தவறாது கடைப்பிடிக்கனுமுங்க. இந்த முறையினை தவறாது செய்து பாருங்க. கண்டிப்பாக உங்கள் உடல் எடையினைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இன்னோர் முக்கியமான மேட்டர் சொல்ல மறந்திட்டேனுங்க. முடிந்த வரைக்கும் இயற்கையான (Organic Or Free Range Foods) உணவுகளையே உண்ணப் பழகிக் கொள்ளனுமுங்க. ஹார்மோன் உணவுகளை உண்ணுவோர் நம்மில் அதிகம் பேர் உள்ளார்கள்.
ஹார்மோன் உணவுகள் (வைற் லைற்கோர்ன் கோழி மற்றும் சில பழ வகைகள்) உண்ணும் வரைக்கும் உடல் எடையில் மாற்றம் தெரியாதுங்க. ஒரு ரெண்டு வருசத்திற்கு அப்புறமா உங்கள் எடை சிக்கென்று எகிறியிருப்பதை உணருவீங்க. அப்புறமா ஐயோ! நான் குண்டாகிட்டேனே! அப்படீன்னு வருத்தப்படுவதால் எந்த வித பலனுமில்லைங்க. ஆகவே நன்கு திட்டமிட்டு, வருமுன் காப்பதே உங்கள் வளமான உடல் அழகினை நிறைவாகப் பேண உதவும். மாசத்தில் ஒருவாட்டி என்றாலும், உங்கள் உடல் எடையினைச் செக் பண்ணி, எடையில் மாற்றம் இருந்தால் நான் இந்த மாதம் என்னா செஞ்சிருக்கேன் அப்படீன்னு உங்களை நீங்களே சுய பரிசோதனை செஞ்சுக்க மறந்திட வேணாம். சுவீட் அதிகமுள்ள உணவுகளை உட் கொள்ளுவதை மெது மெதுவாக குறைச்சிட்டு வரப் பழகிக்கனுமுங்க. இவை தான் ஊதிப் போன உடம்பை ஊசி போல மாத்த ஏத்த வழிகளாகும்.
மிகவும் முக்கிய குறிப்பு: ஒவ்வோர் உணவுப் பொருட்களையும், ரெடிமேட் உணவுகளையும் வாங்கும் போது, அந்த உணவுகளில் உள்ள கலோரி அளவினையும், கொழுப்பின் அளவினையும், மற்றும் இதர ஊட்டச் சத்துக்களின் அளவினையும் கவனித்து வாங்குவதை வ(ப)ழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
மிகவும் முக்கிய குறிப்பு: ஒவ்வோர் உணவுப் பொருட்களையும், ரெடிமேட் உணவுகளையும் வாங்கும் போது, அந்த உணவுகளில் உள்ள கலோரி அளவினையும், கொழுப்பின் அளவினையும், மற்றும் இதர ஊட்டச் சத்துக்களின் அளவினையும் கவனித்து வாங்குவதை வ(ப)ழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று இரவு உங்கள் நாற்று வலையில்.....
|
33 Comments:
பயனுள்ள பதிவு கண்டிப்பா நான் இத பின்பற்றுவேன் நன்றி
சுப்பர் பதிவு ...
ஹேமா அக்கா க்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் ...
அவவின் சார்பாக நன்றி ...
சிலர் என்னா பண்ணுவாங்க என்றால் தினமும் தம் எடையை குறைக்கலாமே எனும் நம்பிக்கையில் பல எக்ஸசைஸ் எல்லாம் பண்ணுவாங்கோ. ஆனால் உடல் எடை கம்மியாகாதுங்க. /////////////
அது ஏன்னா சிலர் ...நீங்கதானுங்க அந்த கருப்பு ஆடு ...
முட்டி மோதி எக்ஸசைஸ் செய்துப் பார்த்தினம் ...ஒண்டுமே பலன் அளிக்க வில்லை ..
சரி இம்புட்டு கஷ்டப்பதுக்கு பலனாய் ஒருப் பதிவாது போட்டு விடுவினம் எண்டு தான் நீங்கள் செய்தவை ...
ஓட்ஸ் வாங்க முடியாதவங்க காலை உணவாக, ஆரேஞ்ச் யூசும், ஆப்பிள் பழமும் எடுத்துக்கலாம்.///////////////
ஓட்ஸ் வாங்கவே வழி இல்லையாம்
எங்கடுக்கு...இதுல ஆரந்ஜீஈஈஈஈஈஈஈஈஈ ஆப்ப்பிலூஊஊஊஊஊஊஊஉ
ஏங்க அரஞ்சு ஆப்பிள் பழம் விக்குற விலை பார்த்தல் பட்டினியாவே இருந்து விடுவினம் நாங்கள் ...
முடிந்த வரை கரட், ஆப்பிள், ஆரேஞ், வெள்ளரிக்காய், மற்றும் பச்சைக் காய்கறிகளை சமைக்காது உண்ணப் பழக்கப்படுத்திக் கொள்ளனுமுங்க. //////
ஏங்க நீங்கலாம் ஆரஞ்சியையும் ஆபிளையும் சமச்சி தான் சாபிடுவீகளோ ...
எங்கட ஊரில் எல்லாம் பச்சையாகத்தான் உண்போம் ஆரஞ்சு அப்பிளை லாம் ...
யோகா மாமா நீங்களும் சமச்சிதான் சாப்பிடுவீங்களா ஆப்பிளை...
ஹ ஹா ஹா ...
உங்கட பதிவு உண்மையாகவே மிகப் பயனுள்ளப் பதிவு ஹேமா அக்காக்கும் ரீ ரீ அண்ணாக்கும் ....
அவர்கள் சார்பா மீண்டு நன்றி !
வணக்கம் நிரூபன்,
நலமா?
"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள்"
அதுபோல உடல் ஆரோக்கியம் மிக முக்கியம்.
இன்று பலர் ஊதிய உடம்பை குறைக்கும் வழிதேடி
அலையும் நிலையில் நல்ல ஒரு பதிவு.
பகிர்வுக்கு நன்றிகள்.
நல்லா இருக்கு. ஆப்பிள் என்ன வெலைன்னு தெரியுமா, நாற்று?
// ஓட்ஸ் வாங்க முடியாதவங்க காலை உணவாக, ஆரேஞ்ச் யூசும், ஆப்பிள் பழமும் எடுத்துக்கலாம்.//
மக்கள்:சோறு,கஞ்சி கூட இல்லாம கஷ்டப்படுறோம்...அம்மா...
ஜெ :சோறு இல்லன்னா...பிஸா,பர்கர் வாங்கி சாப்பிட வேண்டியதுதானே!
இந்தப் பதிவில் மைனஸ் போடும் அப்படி என்னா எழுதியிருக்கேன்? சொல்லிட்டுப் போடலாமில்லே!
@ajak
பயனுள்ள பதிவு கண்டிப்பா நான் இத பின்பற்றுவேன் நன்றி
//
உன் வார்த்தையை கேட்கவே சந்தோசமா இருக்கு சுஜி
@கலை
சுப்பர் பதிவு ...
ஹேமா அக்கா க்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் ...
அவவின் சார்பாக நன்றி ...//
அடடா! இது அநியாயம்! அக்கிரமம்!
ஒரு பொது இடத்தில் ஹேமா அக்காவைப் பத்தி இப்படிச் சொல்லிப்புட்டீங்களே!!
@கலை
அது ஏன்னா சிலர் ...நீங்கதானுங்க அந்த கருப்பு ஆடு ...
முட்டி மோதி எக்ஸசைஸ் செய்துப் பார்த்தினம் ...ஒண்டுமே பலன் அளிக்க வில்லை ..
சரி இம்புட்டு கஷ்டப்பதுக்கு பலனாய் ஒருப் பதிவாது போட்டு விடுவினம் எண்டு தான் நீங்கள் செய்தவை ...//
அவ்...
எப்படிப் பேசினாலும் கண்டு பிடிச்சிடுறீங்களே!
இனி என்ன பண்ண முடியும்! அது நான் தான் என்று உண்மையை ஒத்துக்க வேண்டியது தானே!
நிரூ உண்மையை ஒத்துக்கிட வேண்டியது தாண்டா!
உனக்கு வேற வழியே கிடையாது.
@கலை
எங்கடுக்கு...இதுல ஆரந்ஜீஈஈஈஈஈஈஈஈஈ ஆப்ப்பிலூஊஊஊஊஊஊஊஉ
ஏங்க அரஞ்சு ஆப்பிள் பழம் விக்குற விலை பார்த்தல் பட்டினியாவே இருந்து விடுவினம் நாங்கள் ...
//
ஹே...ஹே...
பரவாயில்லைங்க. ஆரஞ்சு கிடைக்கலை என்றால் ஆப்பிள்..
அதுவும் கிடைக்கலை என்றால் வாழைப் பழம் இருக்கு
@கலை
ஏங்க நீங்கலாம் ஆரஞ்சியையும் ஆபிளையும் சமச்சி தான் சாபிடுவீகளோ ...
எங்கட ஊரில் எல்லாம் பச்சையாகத்தான் உண்போம் ஆரஞ்சு அப்பிளை லாம் ...
//
ஹே...ஹே..
பதிவில சின்ன வசனப் பிழை! நீங்களே சரியாக சொல்லிட்டீங்க இல்லே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@கலை
யோகா மாமா நீங்களும் சமச்சிதான் சாப்பிடுவீங்களா ஆப்பிளை...
ஹ ஹா ஹா .....//
ஹையோ..ஹையோ..
@கலை
உங்கட பதிவு உண்மையாகவே மிகப் பயனுள்ளப் பதிவு ஹேமா அக்காக்கும் ரீ ரீ அண்ணாக்கும் ....
அவர்கள் சார்பா மீண்டு நன்றி !//
ஹேமா அக்கா யாருன்னு தெரியுதுங்க. அது யாருங்க ரீ ரீ அண்ணா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@மகேந்திரன்
வணக்கம் நிரூபன்,
நலமா?
"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள்"
அதுபோல உடல் ஆரோக்கியம் மிக முக்கியம்.
இன்று பலர் ஊதிய உடம்பை குறைக்கும் வழிதேடி
அலையும் நிலையில் நல்ல ஒரு பதிவு.//
நான் நல்லா இருக்கேன். நீங்க நலம் தானே?
உங்கள் அன்பிற்கும், ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் நன்றி அண்ணா.
@பழனி.கந்தசாமி
நல்லா இருக்கு. ஆப்பிள் என்ன வெலைன்னு தெரியுமா, நாற்று?
//
ஐயா...ஆப்பிளோட வெலையை நெனைச்சு பயந்தா ஆரோக்கியமா இருக்க முடியுமா?
@உலக சினிமா ரசிகன்
மக்கள்:சோறு,கஞ்சி கூட இல்லாம கஷ்டப்படுறோம்...அம்மா...
ஜெ :சோறு இல்லன்னா...பிஸா,பர்கர் வாங்கி சாப்பிட வேண்டியதுதானே!
//
அண்ணே, பீஸா பர்கருக்கு சோறை விட பணம் ஜாஸ்தியாகுமே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அட .... இன்னிக்கு தினக்குரலிலும் இதே டாபிக்கில் ஒரு கட்டுரை. ஆனா அதை விட இது நல்லாயிருக்கு.
இதைக் கடைபிடிச்சா குண்டானவங்க மெலியலாமா?
நல்ல ஆலோசனைகள்!
நல்ல பதிவு நிரூபன். பாராட்டுகளும், நன்றியும்.
காலை வணக்கம் நிரூபன்!என்னோட சார்பில ,என் மருமவப்புள்ள போட்டு வாங்கு,வாங்குன்னு வாங்கியிருக்கிறா!டிருப்தி,சா...இந்த.... திருப்தி தானே?சரி,உங்களுக்கும் சிக்ஸ் பேக்கா?சொல்லவேயில்ல????என்பையன்.............,ஐயகோ சொல்லவே வேணாம்!
தண்ணீர் அதிகமாக அருந்துவதும் நல்லதல்ல. ஏனெனில் இப்போதெல்லாம் நீரிலும் அதிக அளவு வேதிப்பொருள்கள் கலந்திருக்கிறது என்று இங்கே ஒருவர் சொல்கிறார். உங்கள் பதில் என்ன?
கலை said... Best Blogger Tips [Reply To This Comment]
யோகா மாமா நீங்களும் சமச்சிதான் சாப்பிடுவீங்களா ஆப்பிளை...
ஹ ஹா ஹா .////அடப்போம்மா!காட்டுல இருந்து வந்ததுங்க ஏதோ எழுதிச்சேன்னு நம்பள இந்த வாரு ,வாருறீங்களே நியாயமா?ஹ!ஹ!ஹா!!!!!!!
கலை said...
சுப்பர் பதிவு ...
ஹேமா அக்கா க்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும் ...
அவவின் சார்பாக நன்றி .////அக்கா இன்னும் எந்திரிச்சுக்க மாட்டாங்கிற தைரியத்துல தான????
கலை said..
உங்கட பதிவு உண்மையாகவே மிகப் பயனுள்ளப் பதிவு ஹேமா அக்காக்கும் ரீ ரீ அண்ணாக்கும் ....
அவர்கள் சார்பா மீண்டு நன்றி !//கருக்கு மட்டைக்கு வேலை வைக்காம விடுறதில்லைன்னு ஒரு தீர்மானத்தோட தான் இருக்கீங்கன்னு தெரியுது!ஒங்களோட விதிய யாரால மாத்த முடியும்?ஹும்..........!
நிரூபன் said...
ஹேமா அக்கா யாருன்னு தெரியுதுங்க. அது யாருங்க ரீ ரீ அண்ணா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////அது வந்து நிரூ,'ரெவரி' யத்தான் அவ ரீ ரீ அண்ணா என்று சொல்வா!
நிரூ..நல்லதொரு பதிவு.பச்சைக்காய்கறிகள் பழங்கள் உடம்புக்குப் பாரமும் இல்லை.சுகமாக உணர்ந்திருக்கிறேன் நான்.
கருவாச்சி என்னைக் கலாய்ச்சிருக்கு.நீங்களும் சேர்ந்துகொண்டு...கொலை வெறி கருவாச்சிக்கு !
கருவாச்சி...காக்கா...இப்பத்தான் நேசன் பதிவில இருந்து படுக்கப்போறன் எண்டு பறந்து போகுது வரட்டும் வரட்டும் !
யோகா அப்பா ரீரீ....எண்டா ஆங்கிலத்தில ரீ சொல்றாவாம் அவ !
@பாரத்... பாரதி...
தண்ணீர் அதிகமாக அருந்துவதும் நல்லதல்ல. ஏனெனில் இப்போதெல்லாம் நீரிலும் அதிக அளவு வேதிப்பொருள்கள் கலந்திருக்கிறது என்று இங்கே ஒருவர் சொல்கிறார். உங்கள் பதில் என்ன?
//
நண்பா..
தண்ணீரினை வடி கட்டி / பில்டர் பண்ணி அருந்தலாம். அல்லது சுத்தமான மினரல் வாட்டர் அருந்துவதும் தப்பில்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Post a Comment