ஈழத் தமிழர்கள், உலகத் தமிழர்கள் வாழ்வில் கறை படிந்த நாளாக முள்ளிவாய்க்கால் இறுதி நாளான மே 17 விளங்குகின்றது. கடந்த இரு வருடங்களுக்கு முன்பதாக முள்ளிவாய்க்காலில் தமிழர் சேனை இலங்கை, இந்திய, மற்றும் உலக நாடுகளின் துணையுடன் முடக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் வளமான எதிர்கால வாழ்விற்குரிய தீர்வினை எப்படியாவது ஏமாற்றி காலதி காலமாக முழு இலங்கையினையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கலாம் எனும் வழியில் மகிந்த ராஜபக்ஸ கூட்டத்தினர் தமது அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்கிறார்கள். இன்றளவில் இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு கொடுக்கின்ற நிலையில் இலங்கை அரசு இல்லை என்பதற்கான பல அணுகுமுறைகளை இலங்கை அரசின் செயற்பாடுகளினூடாக காண முடிகின்றது. நிரூபனின் நாற்று
புலம் பெயர் தமிழ் மக்களும்;விடுதலைப் புலிகளினது போரியல் கட்டமைப்பிற்குப் பின்னர் தற்போது ஈழத் தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் நாடு கடந்த தமீழ அரசாங்கமும் இல்லையேல் முழு இலங்கைத் தமிழர்களின் தலையிலும் மிளகாய் அரைத்து தாம் கொடுப்பதை ஈழத் தமிழர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனும் பணயக் கைதி நிலைக்கு இலங்கை வாழ் தமிழ் மக்களைக் கொண்டு வந்திருப்பார்கள் பக்ஸே சகோதர்கள். புலிகள் ஆயுதங்களுடன் நடமாடிப் போர் செய்த காலத்தில் புலிகளை ஓர் சாட்டாக கூறி, புலிகள் ஈழத்தில் இருப்பதால் தமிழர்களுக்கான தீர்வினைக் கொடுக்க முடியலையே என்று உலக நாடுகள் காதில் பூச் சுத்தியது இலங்கை அரசு.
அனுமதியின்றி நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு
இன்றளவில் ஈழத்தில் புலிகள் இல்லை என்றால், தமிழருக்கான தீர்வினை வழங்குவதில் ஏன் தாமதம் என்று இலங்கை அரச தரப்பினரை நோக்கி எதிர்க் கேள்வி கேட்கும் அளவிற்கு உலக நாடுகளின் பார்வை ஈழ மக்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. இலங்கை அரசிற்கும், இலங்கையில் தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் கடந்த மாதம் ஸ்தம்பித்த சூழலைத் தொடர்ந்து, சர்வதேச மத்தியஸ்த்தம் இன்றி (ஏமாற்றுக்காரர்களுடன்) இலங்கை அரசுடன் பேச முடியாது எனும் அறிவிப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் முன் வைத்திருக்கின்றது.
நாற்று
இலங்கையைப் பொறுத்த வரை, அரசியல், ராஜ தந்திர ரீதியில் வெளிப்படையாக தமிழருக்குச் சார்பாகவோ அல்லது நடுவு நிலமையாகவோ இன்னோர் தரப்பு அல்லது மூன்றாந் தரப்பு களமிறங்குவது விரும்பத்தகாத செயலாகவே காணப்படுகின்றது. உலக நாடுகளும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையானது இந்திய மத்தியஸ்த்தத்துடன் தீர்க்கப்பட வேண்டும் என்கின்ற அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது. இதன் பிரகாரம் இந்திய அரச தரப்பினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லுறவினைக் கட்டியெழுப்ப முனைகின்ற சம நேரத்தில் சிங்கள அரசும் தமது கால்களை இந்தியாவில் ஊன்றி இந்திய அரச தரப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க ஆரம்பித்துள்ளது.
இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இரண்டும் கெட்டான் நிலமை ஏற்பட்டுள்ளது. இதனால் சில நாட்களுக்கு முன்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான துணை அமெரிக்கச் செயலருடன் கலந்துரையாடி மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம் இன்றிப் பேச முடியாது என்கின்ற யதார்த்தத்தினைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். ஆனால் அமெரிக்கச் செயலரோ, கையை வடக்குப் பக்கம் காட்டி - இந்தியாவின் கைச் சின்னக்காரரிடம் சரணாகதி அடையுங்கள் எனச் சுட்டிக் காட்டாத குறையாக இந்திய அரசின் தலையீட்டினையே இலங்கை விடயத்தில் அமெரிக்கா விரும்புகின்றது எனச் சொல்லியுள்ளார்.
இந் நிலையில் ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு ஒப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலமையும் மாறியுள்ளது. இந்தியாவினை முழுமையாக நம்பி,இந்தியாவின் தலையீட்டினை இலங்கை விடயத்தில் பெற்றுக் கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்குள்ளும், விருப்பமின்மையே காணப்படுகின்றது. ஈழ மக்களும் இந்தியாவை நம்பிப் பல தடவைகள் நொந்து போனவர்கள் என்பதால், இப்போது இலங்கை அரச பிரதிநிதிகள் அடிக்கடி இந்தியாவிற்கு விஜயங்களை மேற்கொண்டு, இந்தியாவுடன் தம் பக்க ஆதரவினை வலுப்படுத்துகின்ற சூழலில்;பேச்சுவார்த்தையில் இந்திய மத்தியஸ்த்தம் எத்தகைய விளைவினைக் கொடுக்கும் என்பதனை நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளார்கள் ஈழத் தமிழர்கள்.
முள்ளிவாய்க்காலில் உலக நாடுகளும், இலங்கை அரசும், இந்திய அரசும் தமிழர் தரப்புடன் மோதிட போர்த் தந்திரோபாயங்கள் அடிப்படையில் ஒன்று கூடியிருந்தது. ஆனால் இன்று இந்திய அரசும், இலங்கை அரசும் இந்தியாவும் ராஜ தந்திர அடிப்படையில் தமிழர் விடயத்தில் ஒன்று கூடியிருக்கிறது. "ஈழத் தமிழர்களை இனிக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது" என தந்தை செல்வா முன்னோர் காலத்தில் சொல்லிய வரிகளை மீட்டிப் பார்ப்பதைத் தவிர திக்கற்று நிற்கும் ஈழத் தமிழர்களுக்கு வேறேதும் உண்டா?
|
22 Comments:
ஓட்டுப் போடுவதை விட பின்னூட்டங்களே எனது முன்னுரிமை எப்பொழுதும்.மாறுதலாக ஓட்டுப் போட்டிருக்கிறேன்.
எந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிப்பது என்று யோசிக்கிறேன்.
எந்த காயமும் காலம் மாற மாற ஆறிவிடும் என்பதற்கேற்ப இலங்கை அரசு காலம் கடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்பது தெளிவு.தற்போதைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பழையவற்றை மறந்து விட்டு யதார்த்தத்துடன் வாழக்கற்றுக்கொள்ளுங்கள் என்பது மாதிரியே அமெரிக்காவும் சைகை செய்கிறது.இந்தியாவுக்கு ஒரு புறம் சைனாவின் ஆளுமை இலங்கைக்குள் வந்து விடக்கூடாது என்ற வெளியுறவுக்கொள்கையும் அதே சமயத்தில் மன்மோகன் அரசு நொண்டி வாத்து நிலையில் இரண்டு வருடங்களை காலம் தள்ளி விடும் கட்டாயத்திலேயே நாட்களை நகர்த்துவதால் இலங்கை குறித்தான கிருஷ்ணாவின் வருகை தவிர்த்து தமிழர்களுக்கு எந்த பலனுமில்லை.இந்தியாவுக்கு நட்பும் அதே நேரத்தில் நம்பகத்தன்மையற்ற சீன சார்பு வெளிநாட்டு உறவுக்கொள்கையை இலங்கை கடை பிடிக்கிறது என்பது தொடர் ராஜப்கசேவின் சீனப் பயணம் உறுதிப்படுத்துகிறது.
பின்னூட்டம் நீளம் கருதி அடுத்து தொடர்கிறேன்...
பூகோள ரீதியாகவும்,மொழி,இன அடையாளத்தில் தமிழகம் இந்தியா,இலங்கையுடன் தொடர்பு கொண்ட வலுவான இன்னும் உறங்கும் சக்தி.எழும் குரல்கள் முந்தைய ஆட்சி காலத்தில் அடக்கப்பட்டும்,இப்போதைய ஆட்சியின் துவக்கத்தில் சட்டசபை தீர்மானஙகள் போன்றவை புதிய நம்பிக்கைகளைத் தந்தாலும் உள்நாட்டு அரசியல்,பிரச்சினைகளுக்குப் பின்பே இலங்கை குறித்து அக்கறைப்படும் சூழலும் தெரிகிறது.வை.கோ நீண்ட நாட்களாக ஈழப்பிரச்சினைக்கு குரல் கொடுப்பவராக இருந்தாலும் புதிதாய் பிறந்த இயக்கங்களோடு இணைந்து செல்லாத குறைகள் தென்படுகின்றன.ராமதாஸ்,திருமாவளவன்,சீமான்,வை.கோ.கம்யூனிஸ் கட்சி,தி.மு.க,அ.தி.மு.க இன்னும் இதர கட்சிகளுக்கும் ஈழம் குறித்த அக்கறை இருந்தாலும் அரசியல் சுயநல்ங்கள் முன்னிட்டு பிரச்சினைகளை தமிழகம் சார்ந்து தீர்க்கும் வலிமை இல்லாமல் போய் விடுகிறது.இந்த பிரிவினைகள் இந்தியாவின் தற்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ்க்கு அழுத்தம் கொடுக்க தவறி விடுவதும் இலங்கைக்கு சாதகமாகி விடுகிறது.
முந்தைய பின்னூட்டத்தை தொடர்ந்து...
புலம் பெயர் தமிழர்கள் பக்கம் திரும்பினால் பல நாடுகளில் இருக்கும் தமிழர்கள் வலுவான குரல் கொடுக்கும் சக்தியாக இருந்தாலும் கூட அங்கேயும் உட்பூசல்கள்,குழு மனப்பான்மை,கருத்து மாறுபாடுகள் இருப்பதை உணர முடிகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசு புலம்பெயர் தமிழர்களையும்,வடகிழக்கு தமிழர்கள்,தமிழ் தேசிய கூட்டமைப்பு,தமிழக்ம்,மலேசியா,சிங்கப்பூர்,மனித உரிமைக் குழுக்கள்,மேற்கத்திய நாடுகள் என அனைத்தையும் இணைக்கும் வலு இருந்தும் முன்நகர்வுகள் ஆமை வேகத்திலேயே தொடர்கின்றன.
காலம் காலமாக இந்தியாவினை நம்பித்தான் ஈழத்தமிழர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள் இனியும் இந்தியாவினை நம்பினால் தமிழர்கள் தலையில் மிளகாய் தான் . தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்களினை மேற்குலக நாடுகளுக்கு எடுத்து சென்று மேற்குலக நாடுகளின் உதவியினை பெறுவதே சாலச்சிறந்தது . இது சற்று கடினம் தான் .
இதோ கெமெர் ரூஜ் போர்க்குற்றவாளிகள் எத்தனை வருடம் கழித்து ட்ரிப்யூனல் தண்டனைக்கு இப்போதைக்கு உள்ளாகிகிறார்கள்.இங்கே போர்க்குற்றம் செய்த சவேந்திர சில்வா ஐ.நாவுக்கு தேர்வு செய்யப்பட்டால் மனித உரிமைக் குழுக்களின் குரல்கள் தவிர தமிழர்களின் குரலையே காணோம்.
மகான்.தமேஷ்!பூகோள ரீதியாக ஈழத்தமிழர்கள் பிரச்சினை இந்தியா சார்ந்தே தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.இந்தியாவின் தலையீடு இல்லாமல் மேலை நாடுகளின் துணையோடு பிரச்சினையை தீர்த்து விடலாம் என்பது பகல் கனவே.பொருளாதாரக் காரணங்களுக்காக அமெரிக்காவே இந்திய தலையசைவு இல்லாமல் எதுவும் செய்யாது.இப்போதைய சூழலில் சீன கடல் வர்த்தகம் தடைபடாமல் நிகழ்வதை அமெரிக்கா வரவேற்கவே செய்யும்.
தமிழர்களை எப்படி இணைப்பது என்பதில் மட்டுமே வெற்றியின் சூத்திரம் அடங்கியிருக்கிறது.
அல்லக்கை,நொள்ளக்கையெல்லாம் தேவையான ஒன்றா:)
விட்டா வேட்டி,துண்டு போட்டு தலைவர்,தொண்டரெல்லாம் சேர்த்துடுவீங்க போல தெரியுதே!
ஆப்பு ரெடியாகிறது!எல்லோரும் விழித்துக் கொள்ளுங்கள் என்று ஏலவே சிக்னல் கொடுத்து விட்டார்கள்.ஆனாலும்,சொல்ஹெய்ம் இந்தியா சென்றிருப்பது(அமேரிக்கா அனுப்பியது)சந்தேகத்தை வரவழைக்கிறது!இந்தியா எவ்வகையிலும் ஈழத் தமிழருக்கு சார்பாக நகராது.தீர்வில் மேற்குலகு அக்கறை காட்டாது!பலத்தை தக்க வைக்கவே அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கை மீது அழுத்தம் கொடுப்பது போன்று காட்டிக் கொள்ளும்.சில தினங்களில் எல்லாம் வெட்ட வெளிச்சமாகும்,பொறுத்திருப்போம்!
ஈழத் தமிழர்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் ...ஆர்யர்களிடம் இருந்து...
It is a deadly combination...
நம்பிக்கை இழக்காம கொஞ்ச நாளுக்கு காத்திருப்பது நலம் என்றே தோன்றுகிறது...
@ராஜ நடராஜன்
ஓட்டுப் போடுவதை விட பின்னூட்டங்களே எனது முன்னுரிமை எப்பொழுதும்.மாறுதலாக ஓட்டுப் போட்டிருக்கிறேன்.
எந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிப்பது என்று யோசிக்கிறேன்.
//
வணக்கம் & வாருங்கள் நடா அண்ணா,
நீண்ட நாட்களின் பின்னர் நீண்ட பின்னூட்டத்துடன் வந்திருக்கிறீங்க.
எந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிப்பதா? அதான் பென்னாம் பெரிய பின்னூட்டங்களில் இருந்து ஆரம்பித்து விட்டீங்களே.
@ராஜ நடராஜன்
தற்போதைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பழையவற்றை மறந்து விட்டு யதார்த்தத்துடன் வாழக்கற்றுக்கொள்ளுங்கள் என்பது மாதிரியே அமெரிக்காவும் சைகை செய்கிறது.//
இதனைப் புரிந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் காலில் விழுந்தது. ஆனால் சம நேரத்தில் பக்ஸே சகோதர்களும் இந்தியாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டதால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரிடம் போவது என்ற நிலையில் திண்டாடுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பதாக BBC தமிழ்ச் சேவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதியும் தமது பேச்சுக்களின் தற்போதைய நிலமை தொடர்பான விளக்கத்தினை முன் வைத்திருந்தார்.
@ராஜ நடராஜன்
இலங்கை குறித்தான கிருஷ்ணாவின் வருகை தவிர்த்து தமிழர்களுக்கு எந்த பலனுமில்லை.இந்தியாவுக்கு நட்பும் அதே நேரத்தில் நம்பகத்தன்மையற்ற சீன சார்பு வெளிநாட்டு உறவுக்கொள்கையை இலங்கை கடை பிடிக்கிறது என்பது தொடர் ராஜப்கசேவின் சீனப் பயணம் உறுதிப்படுத்துகிறது.
//
இலங்கை அரசானது இந்தியாவினை தம் கைக்குள் போட்டிருப்பது, இந்தியாவின் துணையுடன் தமிழர்களுக்கு தாம் விரும்பும் தீர்வினைத் திணிப்பதற்கே! ஆனால் ராஜ தந்திர அடிப்படையில் செல்லப் பிள்ளையாக சீனாவின் மடியில் தவழ்கிறது. இதனை இந்தியா புரிந்து கொண்டால் இலங்கைன் நிலமையினை உணர்ந்து தமிழர் பக்கம் தம் பார்வையினைத் திருப்புவதே சரியாகும்.
அது நடக்குமா என்பதே என் ஐயம்!
@ராஜ நடராஜன்
வை.கோ நீண்ட நாட்களாக ஈழப்பிரச்சினைக்கு குரல் கொடுப்பவராக இருந்தாலும் புதிதாய் பிறந்த இயக்கங்களோடு இணைந்து செல்லாத குறைகள் தென்படுகின்றன.ராமதாஸ்,திருமாவளவன்,சீமான்,வை.கோ.கம்யூனிஸ் கட்சி,தி.மு.க,அ.தி.மு.க இன்னும் இதர கட்சிகளுக்கும் ஈழம் குறித்த அக்கறை இருந்தாலும் அரசியல் சுயநல்ங்கள் முன்னிட்டு பிரச்சினைகளை//
தமிழகத்தின் ஈழ ஆதரவு யதார்த்த நிலையினை விளக்கமாகச் சொல்லியிருக்கிறீங்க. தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு சக்திகள் அனைவரும் ஓர் அணியின் கீழ் வருவதன் மூலம்
1) மக்கள் பலத்தினைப் பெருக்க முடியும்.
2)அரசிற்கு ஒருங்கு சேர்ந்த அழுத்தத்தினைக் கொடுக்க முடியும்.
இதனைத் தத் தமது சுய நல அரசியல் விடயங்களைத் தள்ளி வைத்து வைகோ, சீமான், ராமதாஸ் ஆகியோர் முன்னெடுப்பார்களா என்பது கேள்விக்குறியே!
ஆனால் எல்லோரும் ஓரணியில் திரள்வதன் ஊடாக ஈழ ஆதரவினையும், ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் தலையீட்டினையும் அதிகரிக்க முடியும் என்பது என் கருத்து.
@ராஜ நடராஜன்
புலம் பெயர் தமிழர்கள் பக்கம் திரும்பினால் பல நாடுகளில் இருக்கும் தமிழர்கள் வலுவான குரல் கொடுக்கும் சக்தியாக இருந்தாலும் கூட அங்கேயும் உட்பூசல்கள்,குழு மனப்பான்மை,கருத்து மாறுபாடுகள் இருப்பதை உணர முடிகிறது.
//
தமிழன் என்றாலே பிரிவினை தானே பொதுவான விடயம், தமிழன் எங்கே போனாலும் இந்தப் பிரிவினை கூட வருகிறதே. உட்பூசல்கள், போட்டிகள், பதவி ஆசைகள் ஆகிய விடயங்களை என்றைக்கு தமிழன் களைகிறானோ அன்று அவன் வாழ்வில் வசந்த ஒளி வீசும்!
@Mahan.Thamesh
காலம் காலமாக இந்தியாவினை நம்பித்தான் ஈழத்தமிழர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள் இனியும் இந்தியாவினை நம்பினால் தமிழர்கள் தலையில் மிளகாய் தான் . தமிழர்களுக்கு இந்தியா செய்த துரோகங்களினை மேற்குலக நாடுகளுக்கு எடுத்து சென்று மேற்குலக நாடுகளின் உதவியினை பெறுவதே சாலச்சிறந்தது . இது சற்று கடினம் தான் .
//
உண்மை தான், அண்டை நாட்டு உதவியினை விடுத்து, சர்வதேசத்தின் பக்கம் எம் பார்வையினைப் படச் செய்வதே சிறந்தது. ஆனால் சர்வதேசமோ தனது கையினை அண்டை நாட்டுப் பக்கம் காட்டி, அவர்கள் உதவுவார்கள் என்றல்லவா சொல்லுகிறது.
@ராஜ நடராஜன்
இதோ கெமெர் ரூஜ் போர்க்குற்றவாளிகள் எத்தனை வருடம் கழித்து ட்ரிப்யூனல் தண்டனைக்கு இப்போதைக்கு உள்ளாகிகிறார்கள்.இங்கே போர்க்குற்றம் செய்த சவேந்திர சில்வா ஐ.நாவுக்கு தேர்வு செய்யப்பட்டால் மனித உரிமைக் குழுக்களின் குரல்கள் தவிர தமிழர்களின் குரலையே காணோம்.
//
அண்ணர்,
தமிழன் ஒரு சுறணையற்ற ஜென்மம் ( நான் உட்பட)
ஏன்னா புதுசா வந்த படம் போல, கொஞ்ச நாளைக்கு சிங்களன் செய்த கொடுமைகள், குற்றங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோம். அப்புறமா,
தமது வேலைகளைப் பார்க்க புறப்பட்டு விட்டார்கள்.
இப்படி நாம் இருப்பது தான் இன்றைய எமது இழி நிலைக்கான பிரதான காரணம்.
@ராஜ நடராஜன்
மகான்.தமேஷ்!பூகோள ரீதியாக ஈழத்தமிழர்கள் பிரச்சினை இந்தியா சார்ந்தே தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.இந்தியாவின் தலையீடு இல்லாமல் மேலை நாடுகளின் துணையோடு //
இதனைத் தான் நானும் விளக்கமாக மகேனுக்குச் சொல்லியிருக்கேன்.
சர்வதேசம் தன்னிச்சையாக இலங்கை விடயத்தில் செயற்படாது.
இந்திய அரசின் அணுகுமுறையுடன் தான் செயற்படும். இதனை கட்டுரையிலும் சொல்லியிருக்கேன்.
@ராஜ நடராஜன்
அல்லக்கை,நொள்ளக்கையெல்லாம் தேவையான ஒன்றா:)
விட்டா வேட்டி,துண்டு போட்டு தலைவர்,தொண்டரெல்லாம் சேர்த்துடுவீங்க போல தெரியுதே!
//
ஹே...ஹே..
அண்ணே ஆளாளுக்கு தனி வலை ஆரம்பித்து அல்லக்கை என்று எழுதி இன்பம் காண்றாங்க.
அனானி பின்னூட்டம் போட்டு அல்லக்கை என்று கொல்லுறாங்க.
அவங்க டைம்மை ஏன் நாம வேஸ்ட் ஆக்கனும்!
நமக்கு நாமே அல்லக்கை என்று பேரை வைச்சிட்டா மத்தவங்க பணி குறையுமில்லே.
@Yoga.S.FR
இலங்கை மீது அழுத்தம் கொடுப்பது போன்று காட்டிக் கொள்ளும்.சில தினங்களில் எல்லாம் வெட்ட வெளிச்சமாகும்,பொறுத்திருப்போம்!//
நல்ல கருத்தினைச் சொல்லியிருக்கிறீங்க.
இன்னும் சில தினங்கள் பொறுத்திருப்போம்.
@ரெவெரி
ஈழத் தமிழர்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் ...ஆர்யர்களிடம் இருந்து...
It is a deadly combination...
நம்பிக்கை இழக்காம கொஞ்ச நாளுக்கு காத்திருப்பது நலம் என்றே தோன்றுகிறது...
//
பொறுத்திருந்து பார்ப்போம் நண்பா.
இன்றைய பதிவில் ஒரு வசனத்தில் சிறிய தவறு இருந்தது. யாருமே கண்டு பிடிக்கலை.
தந்தை செல்வா கூறியது தமிழ் மக்களை இனி கடவுள் தான் காப்பற்றனும் அப்படீன்னு பதிவில் எழுதிட்டு, ஆறு மணி நேரம் கழிச்சு தான் அந்த வசனம் பிழை என்று மீண்டும் படிக்கையில் தான் தெரிந்தது.
தமிழ் மக்களை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்பதே சரியான வசனம்.
அல்லக்கை நிரூபன் எப்போ இருந்து இந்த பெயர் மாற்றம் .? நீங்க சொன்னது ஏற்றுகொள்கிறேன் இந்தியாவின் துணையுடன் தான் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் ஆனால் இப்போ பிரச்சனையே இந்தியாதானே . தந்தை செல்வா சொன்ன மாதிரி கடவுளாலும் காப்பாற்ற முடியாது தமிழர்களை என்ற நிலையில் அல்லவா இருக்கிறோம் .
Post a Comment