இயந்திர வேக உலகில் இணையத்தில் படைப்புக்களைப் பகிர்ந்து வரும் பதிவர்களிற்கு இதயங்களை வருடுகின்ற விமர்சனங்கள் இலகுவில் கிடைப்பதில்லை என்றே கூறலாம்.ஒவ்வோர் படைப்பாளியும் தன் படைப்புக்களை மெருகேற்ற எப்போதாவது ஓர் நாள் நல்ல விமர்சனங்கள் கிடைக்காதா எனும் ஏக்கத்தில் காத்திருப்பான்.அத்தி பூத்தாற் போல என்றேனும் ஓர் நாள் ஒரு நிறைவான விமர்சனம் தரமான படைப்பினை நோக்கி முன் வைக்கின்ற போது, படைப்பாளியின் மகிழ்சிக்கு எல்லையே இல்லை என்று கூறலாம். வாரந் தோறும் நாற்று வலைப் பதிவின் ஊடாக பதிவர்களின் படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்களை அம்பலத்தார் பக்கம் வலைப் பதிவின் சொந்தக்காரர் திரு பொன்னர் அம்பலத்தார் அவர்கள் எழுதி வருகின்றார். அவர் இந்த வாரம் தருகின்ற விமர்சனத்தைக் கொஞ்சம் படிப்போமா?
பதிவர் Reveryயும், மெல்லத் தமிழ் இனி வாழும் வலைப் பூவும்!
ரெவெரி என்ற பெயரில் ஒருவர் எனது பதிவு ஒன்றிற்கு சில காலங்களின் முன் பின்னூட்டம் இட்டிருந்தார். அப்பொழுது தான் முதன் முதலாக ரெவெரி என்ற பெயரை அறிந்து கொண்டதில், என்ன இது ஓர் வித்தியாசமான பெயராக இருக்கிறதே யாராக இருக்கும் என்ற ஆவலில் தேட ஆரம்பித்து; "மெல்ல தமிழ் இனி வாழும்!" வலைப் பூவில் போய் விழுந்தேன்.அதற்கப்புறமா; சில காலமாக தொடர்ந்து உலாவியதனூடாகப் பெற்ற அனுபவத்தின் பயனாக; மெல்ல தமிழ் இனி நிச்சயமாக புதிய மெருகுடன் வாழும் என்ற நம்பிக்கையுடன் உங்களிற்கு மெல்ல தமிழ் இனி வாழும் வலைப்பூவை அறிமுகப்படுத்துகிறேன்.
அம்மா பிள்ளை பாசத்திற்கு எத்தனையோ நல்ல சினிமாக்கள், கதைகள், கவிதைகள் என்று வந்திருக்கு அந்தவகையில் பதிவர் ரேவரியின் "அன்புள்ள அம்மா" எனும் ஆக்கமும் படிப்பவர் மனதில் இடம் பிடிக்கிறது. தந்தை மகன் உறவு பிணைப்பை சொல்லும் ஆக்கங்கள் எங்கும் எப்பொழுதும் மிகவும் குறைவாகவே படைக்கப்படுகின்றன.வாரணம் ஆயிரம் படத்தை பார்த்துவிட்டு நானும் எனது வாலிப வயது மகனும் கனத்த இதயங்களுடன் ஒருவர் கையை மற்றவர் இறுக பற்றிக் கொண்டு வெளியே வந்தோம். இப்பொழுது "அன்புள்ள அப்பாவுக்கு" எனும் ரேவரியின் படைப்பும் அதேபோன்ற ஒரு உணர்வை எனக்கு தந்தது. என்ன ஒரு வித்தியாசம் இன்று உணர்வை பகிர்ந்து கொள்ள பையன் பக்கத்தில் இல்லை கல்யாணமாகி தனிக்குடித்தனம் போய்விட்டான்.
ரெவெரி, நிச்சயமாக உங்க பொண்ணு இப்படி ஒரு அப்பா கிடைத்ததற்காக பின்னொரு காலத்தில் பெருமிதம் கொள்ளும் என்பதில் ஐயமேதுமில்லை. What a feeling, What a feeling! Tell my heart, Hats Off Revery.
இந்த தலைப்பை பார்த்துவிட்டு ஒகோ நம்ம ரெவெரி கூட கிளு கிளு கில்மா மாற்றர் எழுதியிருக்கிறாரே என்று அவசரம் அவசரமாக திறந்து பார்த்தால்.....
என்ன எழுதியிருப்பார் என்று அறிய உங்களுக்கும் ஆவல் வந்திவிட்டதா? என் மார்பகத்தின் மேலே ஒருதடவை உங்கட எலியாலை அட அதுதான் உங்க கம்பியூட்டர் மவுசாலை அமுக்கி பாருங்கோ.அதிலும் இந்த ரெவெரி வித்தியாசமாகத் தான் எழுதியிருக்கிறார். ரெவெரி உங்க ஆக்கங்கள் என்னை கவர்ந்த அளவிற்கு வலைப்பூவின் முகப்பு பக்கத்தில் விடயங்களை தொகுத்துள்ள அமைப்பு ஏனோ என்னை கவரவில்லை. இந்தவிடயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்களேன் Please.
மெர்ஸி ஹோம், மற்றும், அழியப்போகும் இந்திய சிறு வணிகர்கள், கூடங்குளம் குடிமக்களின் குரல்... என சிறப்பான சமுதாய விழிப்புணர்வு பதிவுகளின் பட்டியல் ரேவரியின் வலைப் பூவில் நீண்டு செல்கிறது. கவிப்பிரியர்களிற்கு சின்ன சின்ன வரிகளில் இளமை ததும்பும் கவிதைகளும் இங்கே நிறைந்து கிடக்கிறது. மொத்தத்தில் கில்மா, கிசுகிசு, அடுத்தவனை கிண்டல் பண்ணுவது என நிரூபன் பாணியில் பதிவுகளை எழுதாமலும் ஒரு வலைப்பூவினால் வாசகர்களை கவரமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு மெல்ல தமிழ் இனி வாழும் என்று கூறலாம்.
பதிவுகளின் தலைப்பில் உள்ள இணைப்பை கிளிக் செய்வதன் ஊடாக இவ் விமர்சனத்தில் சுட்டி கொடுக்கப்பட்டுள்ள ரேவரியின் பதிவுகளுக்கு நீங்கள் செல்ல முடியும்.
மீண்டும் மற்றுமோர் விமர்சனப் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றுக் கொள்வது,
நேசமுடன்,
பொ.அம்பலத்தார்.
நன்றி,
வணக்கம்!!
|
12 Comments:
ரெவரி பற்றிய பார்வை அருமை!ரெவரிக்கு வாழ்த்துக்கள்,கூடவே விமர்சித்த அம்பலத்தாருக்கும் காப்பி பேஸ்ட்?!செய்த நிரூபனுக்கும்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!
ரெவரி?????????
வாவ்
ஒரு பதிவு எழுதிமுடிச்சுட்டு சிலரோட கமென்ட்ஸ்க்காக ஆவலா வெயிட் பண்ணுவோம் இல்லையா? ரெவரி கமென்ட்ஸ் வந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஏன்னா கடமைக்குன்னு போடமாட்டார்...
நல்ல மனிதர்
வாழ்த்துக்கள் ரெவரி
நன்றி சகோ அம்பலத்தார்
முதலில் சகோதரம் நிரூபனை உரிமையோடு கிண்டல் செய்ததுக்கு என் கண்டனங்கள்..அம்பலத்தாருக்கு...
கூடவே வலையின் அமைப்பு பற்றி சொன்ன விசயங்களை திருத்திக்கொள்கிறேன் அய்யா...
என் எழுத்தை மதித்து..படித்து...விமர்சனம் செய்ததுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்...
உங்கள் ஊக்கம் அதை கண்டிப்பாய் மெருகூட்டும் என்று நம்புகிறேன்...
இந்த விமர்சனத்தை தாங்கிய சகோதரத்துக்கும் என் மனமார்ந்த நன்றி...
BTW,ரெவெரி (Reverie)ன்னா பகல் கனவுன்னு சின்ன வயசுல படிச்சேன்...பிடிச்சது...மனதில் நின்னுது...தொத்திக்கிச்சு அம்பலத்தாரே...
நிறைவான பதிவுகள் தரும் அன்புச் சகோதரன் ரெவரிக்கு என்னுடைய வாழ்த்துகளும் !
நல்ல ஒரு வலைப்பூவை எனக்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள் நிரூ. இப்போ தான் ஃபாலோ பண்ண ஆரம்பித்திருக்கேன். சீக்கிரமே பழைய பதிவுகளை வாசிக்கிறேன்.
ரெவரி - க்கு ஒவ்வொரு முறை பதில் எழுத தமிழில் டைப் அடித்தால் அது ரேவரி என்றுதான் வரும், ஒவ்வொரு முறையும் அதைச் சரியாக ரெவரி என்று தட்டச்சு செய்ய மீண்டும் திருத்த வேண்டி அந்தப் பெயர் நன்றாய்ப் பதிந்து போனது.
[உங்கள் தலைப்பில் கூட அது ரேவரி என்றே இருக்கிறது பாருங்கள்.]
அதனால் மட்டும் அல்ல - அவரது எழுத்துக்களின் வசிகரமும்தான்.
நிரூபனின் எழுத்தும்தான்.
ரெவரி - தனது கருத்துக்களால் தனது வலைப் பூ தடை செய்யப்பட்டு மீண்டும் வந்திருக்கிறார். இது குறிப்பிடப் பட வேண்டிய விஷயம்.
மிகவும் ரசித்து வாசிக்கக்கூடிய பதிவுகளைப்பதிவு செய்பவர் ரெவெரி அவரை மிகவும் நடுநிலமையோடு அலசிய அம்பலத்தாருக்கு வாழ்த்துக்கள்.
இந்தப்பகிர்வை பகிர்ந்து கொண்ட நிரூபனுக்கு நன்றிகள்.
@ரெவெரி
வணக்கம் ரெவெரி நிரூபன் உங்களிற்கு சகோதரம், எனக்கு என் பையன்போல அப்படியாயின் உரிமையுடன் கிண்டல்பண்ணலாம்தானே. எனது கருத்துக்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டது சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் சிறப்புடன் பதிவுலகில் வலம்வர வாழ்த்துக்கள். உங்கள் பெயர்பற்றிய விளக்கத்திற்கு நன்றிகள்.
வணக்கம் சகோ நிரூபன்,
நலமா?
சகோதரர் ரெவரி அவர்களின் எழுத்துக்களை இங்கே
விவாதித்தமை அருமை.
எனக்குப் பிடித்த அருமையான சமூக
பதிவர்களில் ஒருவர்.
உங்களுக்கும் அம்பலத்தார் அய்யாவுக்கும் நன்றிகள்.
சகோதரர் ரெவரி க்கு வாழ்த்துக்கள்.
கருத்துரை வழங்கிய அத்தனை உறவுகளுக்கும் நன்றி,
அம்பலத்தார் ஐயாவிற்கும் நன்றி,
அப்பு அண்ணரின் கருத்து என்னை மேலும் எழுத தூண்டுகிறது.
அனைவருக்கும் நன்றி.
ரெவரி,அம்பலத்தார் ,நிரூபன் மூவருக்கும் வாழ்த்துக்கள்!
ரேவரியின் படைப்புக்கள் எல்லாமே காத்திரமானதே . வாழ்த்துக்கள் சகோ .
Post a Comment